பந்தாடப்பட்ட பெற்றோர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 12,425 
 
 

ஒரு தனியார் கம்பனியிலே கீழ் நிலை கணக்காரக இருந்தார் பரமசிவம் பிள்ளை.அவர் உத்யோகம் நிரந்தரம் ஆனவுடனே அவர் அம்மா அப்பா சொன்னபடி அவங்க உறவிலெ இருந்த அவரது அத்தை மகளான பார்வதியை கைப் பிடித்தார்.

ரெண்டு வருஷம் சந்தோஷமாக இருந்து விட்டு அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்கள்.அவர்கள் கடவுளை வேண்டி வந்தார்கள்.அவர்கள் வேண்டுதல் வீண் போக வில்லை.அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு ரமா என்று பேர் வைத்து மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள்.

ரமாவுக்கு மூனு வயசு ஆனவுடனேயே அவளை ஒரு நல்ல பள்ளிக் கூடத்திலெ சேர்த்து படிக்க வைத்தார்கள்.

ரமா படிப்பிலெ ரொம்ப சுட்டியாக இருந்து வந்தாள்.அவளை பள்ளி கூடத்துக்கு அனுப்பும் போதெல்லாம் ‘நமக்கு ஆசைக்கு ஒரு பொண்ணு பொறந்து விட்டா,ஆசைக்கு ஒரு பையன் வேணுமே’ என்று ஆதங்கப் பட்டு வந்தாள்.இதை அவளுடைய கணவரின் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டாள்.அவளுக்கு பரமசிவம் பிள்ளை ஆறுதல் சொல்லி “கவலை படாதே பார்வதி.நாம வேண்டி வரும் முருகப் பெருமான் நமக்கு சீக்கிரத்திலேயெ ஒரு பிள்ளை குழந்தையை அனுக்கிரகம் பண்ணு வார்.நீ நிம்மதியா இருந்து வா” என்று சொல்வாரே ஒழிய அவர் மனசிலும் அந்த ஆசை இருந்து வந்தது.

ரமாவுக்கு பத்து வயது ஆகும் போது அவர்கள் வேண்டிக் கொண்டபடி அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்தது.அந்த குழந்தைக்கு ராஜன் என்று பேர் வைத்து மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள்.ரமாவும் ராஜனும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் ஆசையாக இருந்து வந்தார்கள்.

ராஜனுக்கு மூனு வயசு ஆனவுடனே பரமசிவம் தம்பதிகள் ராஜவை ரமா படித்து வந்த பள்ளி கூடத்திலெயெ சேர்த்து படிக்க வைத்தார்கள்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரமா ராஜனுடன் விளை யாடி வந்துக் கொண்டு இருந்து,அவனுக்கு படிப்பிலேயும் உதவி வந்தாள்.ரமா மாதிரி ராஜன் அவ்வ ளவு புத்திசாலியாக இல்லை.இதை நினைக்கும் போதெல்லாம் பரமசிவம் தம்பதிகளுக்கு சற்று வருத் தமாக இருந்தது.அந்த மாதிரிநேரங்களிலும் பரமசிவம் பிள்ளை தன் மனைவி பார்வதிக்கு ஆறுதல் சொல்லி “கவலைப் படாதே பார்வதி, நம்ப ராஜன் கொஞ்சம் வயசு ஆனவுடம் அவன் நிச்சியமா நல்லா படிச்சு வருவான்” என்று சொல்லி வந்தாரே அவர் மனசிலும் அந்த ‘உறுத்தல்’ இருந்து வந்தது.

ரமா ‘ப்ளஸ் டூவில்’ ரொம்ப நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணி இருந்தாள்.அவ ரொம்ப ஆசை பட்டதால் பரமசிவம் தன் குடும்ப பண வசதி இடம் கொடுக்குமா என்று கூட பார்க்காமல் அவளை ‘இஞ்சினியரிங்க்’ கல்லூரியில் ஒரு B.E.’கோர்சில்’ சேர்த்து படிக்க வைத்து வந்தார்.அவர் தனியாக இருக்கும் போது பார்வதி அவா¢டம் “ஏங்க ரமாவை இவ்வாளவு பெரிய படிப்பிலே சேர்த்து இருக்கீங்க. அவ B.E.’கோர்ஸ்’ பாஸ் பண்ணபிறவு, அந்த படிப்போ, இல்லே அதுக்கு மேலெ படிச்சு இருகிற ஒரு பையனுக்கு தானேங்க அவளை கல்யாணம் கட்டி குடுக்கணும்.அதுக்கு ரொம்ப செலவு ஆவுமேங்க. இத நீங்க யோஜனை பண்ணிங்களாங்க” என்று கேட்டு கவலைப் பட்டு வந்தாள்அதற்கு பரமசிவம் பிள்ளை “பாக்கலாம் பார்வதி,அவ ரொம்ப ஆசைப் பட்டா,நான் சேத்து இருக்கேன்” என்று சொல்லி வந்தாரே அவருக்கும் இந்த கவலை அவர் மனசிலெ இருந்து வந்தது.அப்போதெல்லாம் அவர் தன மனசுக்குள் அவர் தினமும் வேண்டி வரும் முருகப் பெருமான் ‘எல்லாம் நீ தான் நல்லபடியா முடிச்சு தரணும்ப்பா.எங்களுக்கு ஒரு கஷ்டமும் தாராதேப்பா” வேண்டி வந்தார்.

ராஜன் சின்ன வயசிலெ இருந்தா மாதி¡¢ தான் ரொம்ப சுமாராகப் படித்து வந்தான்.அவன் நல்லா படிச்சு முன்னுக்கு வரணுமே என்று பரமசிவம் பிள்ளை அவன் படிப்புக்கு ஒரு ‘ட்யூஷன்’ வாத்தியாரை வைத்து படிக்க வைத்து கொண்டு வந்தார்.மாசா மாசம் டியூஷன் வாத்தியார் அவர் ‘டியூஷனுக்கு’ பணம் வாங்கிக் கொண்டு போய் கிட்டு இருந்தாரே ஒழிய ராஜன் படிப்பிலெ எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது.

ரமா B.E.கோர்ஸ் பாஸ் பண்ணி முடிச்சவுடனேஅவளுக்கு ஒரு நல்ல I.T.கம்பனியிலெ ஒரு நல்ல வேலை கிடைத்தது.ரமா சந்தோஷமாக வேலைக்கு போய் கொண்டு வந்து கொண்டு இருந் தாள்.அவளுடன் கூட வேலை செஞ்சு வந்த பையன் சேகர் ரமாவை காதலித்து வந்தான்.இருவரும் ஒருவருக்கு ஒருவர் நிறைய பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் நன்றாக பு¡¢ந்து கொண்டார்கள்.

ஒரு குடும்பத்தாரும் பரஸ்பரம் பேசி வந்து கல்யாணத்தை நிச்சியம் பண்ணினார்கள். பையன் வீட்டார் கொஞ்ச அதிகமாகவே சீர் கேட்டார்கள்.பரமசிவம் தம்பதிகள் வசதிக்கு அது அதிகமாக பட்டதால் முதலில் இந்த கல்யாணத்திற்கு சம்மதம் கொடுக்கவில்லை.இருந்தாலும் ரமா பிடிவாதமாக ‘நான் அந்த பையனைத் தான் கல்யாணம் கட்டிக்குவேன்’ ன்னு சொன்னதாலெ வேறே வழி இல்லா மல் பரமசிவம் தம்பதிகள் அங்கே இங்கே எல்லாம் கடன் வாங்கி ரமா கல்யாணத்தை செய்ய முடிவு பண்ணினார்கள்.

நண்பர்கள் கொடுத்த பணம்,தன்னிடம் இருந்த பண சேமிப்பு,,தான் வேலை செஞ்சு வந்த ஆ·பீஸில் கொஞ்சம் ‘லோனும்’ போட்டு பணத்தை திரட்டினார் பரமசிவம்.பார்வதியும் தன்னிடம் இருந்த நகைகளில் சிலவற்றைப் போட்டு, ரமாவுக்கு புது டிஸைனில் நகைகள் செய்தாள்.குறிப்பிட்ட தினத்தில் பரமசிவம் தம்பதிகள் ரமா கல்யாணத்தை நல்ல விதமாக செய்து முடித்தார்கள்.பரமசிவம் போட்ட ‘பட்ஜெட்டுக்கு’ மேலெயே கல்யாண செலவு ஆயிற்று.ரமா தன் அம்மா அப்பாவிடம் “ நீங்க என்னை இவ்வளவு செலவு பண்ணி படிக்க வச்சு இவ்வளவு செலவும் பண்ணி கல்யாணத்தை பண்ணி வச்சு இருக்கிங்க” என்று சொல்லி அவர்கள் காலில் விழப் போனாள்.உடனே பரமசிவம் ரமா தோளை தொட்டு எழுப்பி “இது எங்க கடமைம்மா. அதைத்தான் நானும் அம்மாவும் செஞ்சோம்” என்று சொல்லி ரமாவுக்கு தேத்தறவு சொன்னார்.

பார்வதிக்கு தன் கணவன் கல்யாணத்திற்கு இவ்வளவு செலவு செய்தது துளி கூட பிடிக்க வில்லை.கல்யாணம் முடிந்து ரமா அவங்க வீட்டுக்கு போனவுடனே இதை சொல்லி வருத்தப்பட்டாள். பரமசிவமும் “ஆமா பார்வதி,கல்யாண செலவு ரொம்பதான் ஆயிடுச்சி. பையன் வீட்டிலே இருந்து இத்தனை பேர் எல்லா வேளைக்கும் சாப்பிட வருவாங்கன்னு நான் எதிர் பார்கலே. என்ன செய்யறது சொல்லு.கல்யாணத்துக்கு வந்தவங்களை எப்படி பார்வதி இத்தனை பேர் எல்லா வேளைக்கும் சாப்பிட வராதீங்கன்னு சொல்றது சொல்லு பாக்கலாம்” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

ரமா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசம் கூட ஆகி இருக்காது.ரமாவையும் சேகரையும் கம்பனி வேலை விஷயமாக அமெரிக்காவுக்கு அனுப்பினார்கள். இருவரும் மிகவும் சந்தோஷமாக சென்னையை விட்டு அமொ¢க்காவுக்கு போனார்கள்.பரமசிவமும் பார்வதியும் ராஜனும் ‘ஏர் போர்ட்’டுக்கு போய் அவர்களை வழி அனுப்பி விட்டு வந்தார்கள.

ராஜன் ‘ப்லஸ் டூவில்’ பெயில் ஆனான்.பரமசிவத்திற்கும் பார்வதிக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது.தங்கள் வருத்ததை ராஜனிடம் சொல்லி மறுபடியும் நல்லா படிச்சி வரும்படி சொல்லி மறுபடியும் ‘ப்ளச் டூ’ வில் சேர்த்தார்கள். ராஜனும் மிகவும் கஷ்டப் பட்டு இந்த தடவை பத்தாவது பாஸ் பண்ணினான்.அவன் மிகவும் சுமாராக வாங்கி இருந்ததால் பரமசிவம் ராஜனை B.A.படிப்பில் சேர்த்தார்.ரெண்டு வருஷம் கழித்து ராஜன் ‘மூணாம் க்லாஸில்’ ரொம்ப சுமாராக மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீனான்.

அமெரிக்கா போன ரமாவும் சேகரும் அவர்கள் வேலை செஞ்சு வந்த கமபனியிலெ மிகவும் நல்ல பேர் வாங்கினதால் அந்த கம்பனி அவர்களை அவர்கள் கம்பனியிலே அமெரிக்காவில் நிரந்தரம் ஆகி விட்டார்கள்

ராஜனுக்கு எங்கேயும் வேலை கிடைக்கவில்லை.பரமசிவமும் பார்வதியும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.அவர்களுக்கு என்ன செய்வது என்றே பு¡¢யவில்லை. பரமசிவம் ரொம்ப யோஜனை பண் ணினார்.பார்வதியை கலந்து ஆலோசனை பண்ணி விட்டு,அவர் மானேஜா¢டம் ‘தன் பையன் B.A. வில் மூணாம் க்ளாஸில் பாஸ் பண்ணி இருக்கும் விஷயத்தை சொல்லி,தான் வேலையில் இருந்து அவராகவே ஓய்வு வாங்கிக் கொள்வதாயும்,அந்த வேலையை அவர் மகனுக்கு சிபா¡¢சு பண்ணிக் கொடுக்கும் படி’ மென்னே முழுகினே என்று கெஞ்சினார்.அவர் கண்களின் ஓரத்தில் நீர் கசிந்தது. தன் கண்களை துடைத்துக் கொண்டார் பரமசிவம்.மானேஜர் வரதராஜன் இதை கவனிக்க தவறவி ல்லை.மானேஜர் வரதராஜனும் முதலில் மறுத்தாலும், பிறகு பரமசிவத்தின் போ¢ல் இருக்கும் அபா¢ மிதமான அன்பினால்,தன் உத்தியோக பலத்தை உபயோகப் படுத்தி, ‘மானேஜ்மெண்ட்டிடம்’ நல்ல சிபாரிசு பண்ணி ராஜனுக்கு ஒரு கடை நிலை கணக்கர் வேலையை வாங்கிக் கொடுத்தார். பரமசிவம் தன் மேனஜரின் காலைத் தொட்டு, தன் மனமார்ந்த நன்றியை சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்து பார்வதியிடமும், ராஜனிடமும் சந்தோஷமாக சொன்னார்.
அடுத்த நாள் ராஜன் அந்த கம்பனியிலே வேலைக்கு சேர புறப்படும் முன்,“அப்பா B.A.யில் நான் மூணாம் ‘க்ளாஸில்’ பாஸ் பண்ணி எனக்கு எங்கேயும் வேலை கிடைக்காம இருந்து வந்தேன். நீங்க பெரிய மனசு பண்ணி உங்க கம்பனியிலே எனக்கு ஒரு வேலை வாங்கி குடுத்து இருக்கீங்க” என்று சொல்லி அப்பா அம்மா காலில் விழுந்து அவர்கள் ஆசீர்வாதம் கேட்டான்.”இந்த உதவி நானும் உங்க அம்மாவும் ரொம்ப மாசமா யோஜனைப் பண்ணி தாம்பா பண்ணி இருக்கோம்.இது எங்க கடமை இல்லையா சொல்லு ராஜா”என்று சொல்லி அவர் கண்களைத் துடைத்து கொண்டார்.பார்வதிக்கு மனசிலே முதலில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும்.பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டு ராஜனை ஆசீர்வாதம் பண்ணினாள்.

தனக்கு வந்த பணத்தை பாங்கில் போட்டு விட்டு, பரமசிவம் வீட்டிலெயே தன் பொழுதை கழித்து வந்தார்.

இதற்கிடையிலே ரமாவும் சேகரும் அமெரிக்கா பிரஜைகள் ஆகி அவர்கள் ஒரு பொ¢ய வீட்டை வாங்கிக் கொண்டு வந்தோஷமாக இருந்து வந்தார்கள்.அவர்கள் அமொ¢க்கா போய் ஐஞ்சு வருஷம் ஆனதும் அவர்களின் மூனு வயது பையனுடன் இந்தியா வந்தார்கள்.ரமா வீட்டுக்கு வந்ததும் வராத தும் மருமகன் சேகர் மாமனார் மாமியார் இருவரையும் பார்த்து ‘நீங்க எல்லாம் எப்படி இருகீங்க’ன்னு கூட விசாரிக்காம “இந்த வீடு எனக்கும் என் பையனுக்கும் சா¢பட்டு வராது. எங்களுக்கு எப்போதும் ஏ.ஸி, வேணும்.தவிர இங்கே ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ வேறே இல்லே.குளிக்க ‘ஷவரும்’ இல்லே” என்று சொல்லி விட்டு பையன் அஷோக்கை அழைத்துக் கொண்டு சேகர் அவன் அப்பா வீட்டுக்குப் போய் விட்டான்.ரமாவுக்கு சேகர் சொன்னது மிகவும் கஷ்டமாக இருந்தது.நிலைமையை சமாளிக்க உடனே ரமா ”அவங்க எல்லாம் போகட்டும்ப்பா. நான் உங்களோடு இருக்கேன்” என்று சொல்லி விட்டு அவள் கொண்டு வந்த பொ¢ய பெட்டிகள் ரெண்டையும் உள்ளே வைத்தாள்.பரமசிவத்திற்கும் பார்வதிக்கும் சேகர் சொல்லி விட்டு போனது அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு பத்து நிமிஷம் கழித்து ரமா தன் பெட்டையைத் திறந்து அப்பா அம்மாவுகும் ராஜனுக்கும் அவள் வாங்கி வந்த சாக்லெட்,டிரஸ். ·பா¡¢ன் பிஸ்கெட் எல்லாம் கொடுத்தாள்.ராஜனை பற்றி விசா¡¢ த்து விட்டு அப்பா அம்மா சௌக்கியத்தையும் விசா¡¢த்தாள்.அவள் வந்த போது நல்ல வெய்யில் நாட் கள் ஆனதால் ரமாவுக்கு வேர்த்து,வேர்த்து கொட்டியது.அவள் போட்டுக் கொண்டு வந்த ‘டாப்’ பூரா வும் தொப்பமாக நனைத்து போய் விட்டது.ஹாலில் ‘·பேன்’ சுற்றி கொண்டு இருந்தாலும் அவளுக்கு சென்னை வெப்பம் தாங்கவில்லை.அம்மா கொடுத்த கா·பியை குடித்து விட்டு,கொஞ்ச நேரம் ஆனதும் அவளும்”அம்மா, அப்பா, எனக்கும் இந்த வெய்யில் ஒத்துக்கலே. எனக்கும் ஏ.ஸி. வேணும்.தவிர இந்த இடம் ரொம்ப சின்னது.எனக்கும் ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ வேணும், குளிக்க ‘ஷவர்’ வேணும்” என்று சொல்லி விட்டு அவள் மாமியார் வீட்டுக்கு போய் விட்டாள்.ரமா போவ தையே வெறுப்புடன் பார்த்து கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள் பரமசிவமும் பார்வதியும்.

ரமா சேகர் லீவு முடிந்து அவர்கள் மறுபடியும் அமெரிக்கா கிளம்பும் முன் ரமா ஒரு மணி நேரத்திற்கு அம்மா அப்பா வீட்டுக்கு வந்து விசா¡¢த்து விட்டு மறுபடியும் அவள் கணவன் பைய னுடன் அமொ¢க்கா கிளம்பிப் போய் விட்டாள்.

ராஜன் வேலைக்கு சேர்ந்து ஆறு வருஷம் ஆனதும் பரமசிவம் தம்பதிகள் ராஜனுக்கு அவர்கள் உறவிலே ரொம்ப சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒரு கமலாவை கல்யாணம் செய்து வைத்தார்கள் அப்போது தங்களுக்கும்,பையன் பெண்ணுக்கும் லீவு கிடைக்கலே என்கிற சாக்கை சொல்லி விட்டு ரமாவும் அவள் கணவரும் ராஜன் கல்யாணத்திற்கு வரவில்லை.ரமா இப்படி தன் ஒரெ தம்பி கல்யாண திற்கு வராம இருந்து விட்டாங்களே ரமாவும் மருமகனும் என்று நினைத்து பரமசிவமும் பார்வதியும் மிகவும் வருத்தப் பட்டர்கள்.

ராஜனுக்கு அடுத்து அடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.அவர்கள் எல்லோரும் ஒரே வீட்டிலே இருந்து வருவது சிரமமாக இருந்து வந்தது.பரமசிவமும் பார்வதியும் தங்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் ஒன்னும் சொல்லாமல் பொறுத்துக் கொண்டு இருந்து வந்தார்கள்.

ரமா அப்பா அம்மாவை அமொ¢க்க அழைச்சு போகணும்ன்னு ஆசைப் பட்டு அவர்களுக்கு அவள் வாழும் இடத்திற்கு விமான டிக்கட்டை அனுப்பி வைத்தாள்.மிகவும் சந்தோஷப் பட்டு கொண்டு பரமசிவமும்,பார்வதியும் அந்த டிக்கட்டை எடுத்து கொண்டு சென்னை விமான நிலை யத்திற்கு போய் அமொ¢க்கா போனார்கள்.விமான நிலையதிற்கு ரமா மட்டும் அவள் காரை எடுத்துக் கொண்டு ‘ஏர் போர்ட்டுக்கு’ வந்து அம்மா அப்பாவை அவள் வீட்டுக்கு அழைத்து போனாள்.

வீட்டுக்குள் நுழைத்ததும் பரமசிவத்திற்கும் பார்வதிக்கும் ஒரு ‘·பி¡¢ட்ஜுக்குள்’ நுழைஞ்சது போல இருந்தது.அவர்கள் வீ£ட்டு ஏ.ஸீ அவர்கள் உடம்பு பூராவும் நடுங்க வைத்தது.உடனே பரம சிவம் “ரமா ஏம்மா இப்படி குளிறுது. இந்த குளிர் எங்களாலே தாங்க முடியலேம்மா” என்று சொன் னதும் ரமா உடனே”ஆமாப்பா இங்கெ எல்லாம் இப்படி தான் எல்லா இடத்திலேயும் இந்த மாதி¡¢ ஏ.ஸி இருக்கும்” என்று சொல்லி விட்டு அம்மா அப்பாவுக்கு’ டீ’ போட போனாள்.ரமா கொடுத்த ‘டீயை’ குடிச்ச பிறகு தான் ரெண்டு பேருக்கும் கொஞ்சம் உயிர் வந்தது.சாயங்காலம் வீட்டுக்கு வந்த சேகர் பரமசிவத்தையும் பார்வதியையும் பார்த்து வெறுமனே “வாங்க” என்று சொல்லி விட்டு மாடிக்குப் போய் விட்டான்.அன்று இரவு பூராவும் பரமசிவமும் பார்வதியும் தூங்கவே இல்லை.அவர்கள் வீட்டில் இருந்த ஏ.ஸி குளிர் காற்று அவர்களுக்கு தாங்கவில்லை.

காலையிலே எழுந்து குளித்து விட்டு நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ரமாவும் சேகரும் பையன் அஷோக்கும், பெண் ஷைலாவும், மாடியில் இருந்து கீழெ இறங்கி வந்தார்கள்.ரமா தன் அம்மாவைப் பார்த்து “அம்மா,வீட்டிலே எல்லா சாமாங்களும் நிறைய இருக்கு.“·பி¡¢ட்ஜ்ஜில்’ நிறைய காய் கறி எல்லாம் இருக்கு.உங்களுக்கு வேண்டியதை நீங்க சமைச்சு சாப்பிடுங்க.நாங்க வேளியிலே ‘டி·பன்’ சாப்பிட்டு விட்டு சாயங்காலமா தான் வருவோம்” என்று சொல்லி விட்டு தன் கணவன் பையன், பெண்ணுடன், கா¡¢ல் ஏறி போய் விட்டாள்.அவர்கள் கிளம்பிப் போனவுடன் பார்வதி அலமா¡¢யில் ஒவ்வொரு டப்பாவாக எடுத்து பார்த்து முதலில் தன் கணவருக்கு கா·பி போட்டு குடித்தாள். பிறகு அவளும் கா·பி குடித்தாள். குளித்து வந்து விட்டு மதிய சமையலை செய்து முடித்தாள்.பிறகு இருவரும் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்து கொண்டார்கள்.

காலை அவர்கள் கிளம்பிப் போன பிறகு பரமசிவமும் பார்வதியும் சிறைக் கைதிகள் போல அந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள்.

சனி ஞாயிற்று கிழமைகளில் ரமாவும் சேகரும் பரமசிவத்தையும் பார்வதியையும் அந்த ஊர் ஹோட்டல்களுக்கு அழைத்து போய் சாப்பிட வாங்கிக் கொடுத்தார்கள்.அந்த சாப்பாடு பரமசிவத் திற்கும் பார்வதிக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.ஒன்னும் சொல்லாமல் பிடித்தவரை சாப்பீட்டார் கள்.ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.பார்வதிக்கும் பரமசிவத்திற்கும் குளிர் ஜுரம் வந்து விட்டது.ரமா தன் கையிலெ இருந்த மருந்தை கொடுத்தாள்.இதைப் பார்த்த சேகர் பட்டென்று “நான் சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்தாதீங்க.இந்த ஊர் சாப்பாடு,வீட்டிலும் ஏ.ஸி குளீர் ,வெளியிலெயும் ஏ.ஸி குளிர் உங்களால் தாங்கிக்க முடியலே.இந்த ஊர்லெ டாகடரை பார்ப்பது ரொம்ப கஷ்டம்.அதனால் நீங்க கிளம்பி ஊருக்கு போய் விடுங்க.அது தான் எல்லாருக்கும் நல்லது. நான் இன்னைகே உங்களுக்கு ஊர் திரும்பி போக டிக்கட் வாங்கி விடரேன்” என்று சொல்லி விட்டு டிக்கட் வாங்கி அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டான்.

பரமசிவமும் பார்வதியும் வீட்டுக்குள் நுழைந்த்ததும் நுழையாததும் மருமக கமலா “இங்கே தான் இத்தனை பேருங்க இருக்க இடம் பத்தலையே.நீங்க அமொ¢க்காவிலே இன்னும் ஒரு ஆறு மாசம் இருந்து விட்டு வந்து இருக்கக் கூடாதா”என்று கேட்டாள்.கமலா பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த ராஜன் ஒன்னும் பதில் சொல்லாமல் சும்மா இருந்தான்.” ஏண்டா ராஜா,கமலா இப்படி சொல் றா,நீ ஒன்னும் சொல்லாம நிக்கறே. நாங்க யாரோவாடா” என்று பார்வதி கேட்டவுடன் ராஜன் “அம்மா கமலா சொல்றது சா¢யா தானே இருக்கு.நம்ம எல்லாருக்கும் இந்த வீடு பத்தலையே ம்மா. நீங்க அமெ ¡¢க்காவிலேயே இன்னும் ஆறு மாசம் இருந்து விட்டு வறது தானே” என்று சொன்னவுடன் பரமசி வமும் பார்வதியும் அசந்து போய் விட்டார்கள்.இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள்.கொஞ்ச நேரம் ஆனதும் அவர்கள் கொண்டு போன பெட்டிகளை உள்ளே வைத்தார்கள்.ரெண்டு நிமிஷம் கூட ஆகி இருக்காது கமலா “அமெரிக்கா போய் வந்து இருக்கீங்க. உங்க பையனுக்கும்,எனக்கும்,பேத்திகளுக்கும் ஏதாச்சும் வாங்கி கிட்டு ஏதாச்சும் வாங்கி வந்து இருக் கீங்களா” என்று கேட்டாள்.பரமசிவம் பொறுமையாக “ நாங்க ஒன்னும் வாங்கியாரலே.அந்த ஊர் குளிர் எங்களுக்கு தாங்கலே.எங்களுக்கு ஜுரம் வந்திடுச்சி.நாங்க திரும்பி வந்துட்டோம்” என்று சொல்லி விட்டு பாத் ரூமுக்கு போனார்.விடாம கமலா “அந்த பணக்கார ஊருக்கு போனீங்க. எங்களுக்கு ஏதா ச்சும் வாங்கியாரணும்ன்னு உங்களுக்கு தோணலையா.இல்லெ உங்க பணக்கார பொண்ணுக்கும், மருமகனுக்கும், மச்சான் மேலேயும் மச்சான் குழந்தைங்க பேர்லேயும் கொஞ்சம் கூட ஆசை இல்லை யா.நீங்க கூட அவங்களை உங்க மகனுக்கும்,எனக்கும் பேத்திகளுக்கும் அமொ¢க்கா சாமான் வாங்கி குடுங்கன்னு கேக்கலையா.வெறுங்கையோடு திரும்பி வந்து இருக்கீங்களே” என்று முகத்தை கோவ மாக வைத்துக் கொண்டு சொல்லி விட்டு, அவள் வேலையை கவனிக்க போனாள். கமலா பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த ராஜன் “எங்களுக்கு அமொ¢க்காவில் இருந்து நீங்க ஏம்ப்பா ஒன்னுமே வாங்கியாரலை” என்று சற்று கோவமாகவே கேட்டான்.

மனம் உடைந்து போனார்கள் பரமசிவமும் பார்வதியும்.அடுத்த வேளைஅந்த வீட்டிலெ சாப்பி டவே அவர்களுக்கு பிடிக்கவில்லை.மெல்ல ஐஞ்சு அடிக்கும் வரை வீட்டிலெயே இருந்து விட்டு பரமசிவம் “நாங்க கொஞ்சம் காலார வெளீயே போயிட்டு வறோம்” என்று சொல்லி விட்டு பார்வதியை அழைத்துக் கொண்டு பீச்சுக்குப் போய் அங்கெ இருந்த ஒரு ‘சிமெண்ட் பென்ச்சில்’ இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.

காரை பார்க் பண்ணி விட்டு காரை பூட்ட போன வரதராஜன் எதிரே இருக்கும் ‘சிமெண்ட் பென்ச்சை’ப் பார்த்தார்.அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.’நம்ப பழைய ‘ஹெட் க்ளார்க்’ பரமசிவம் போல இருக்கே.இங்கே சம்சாரத்தோட குந்திக் கிட்டு ஏதோ பேசிக் கிட்டு இருக்காரே .அவரை சௌக்கியமான்னு விசாரிச்சுட்டு வருவோம்’ என்று யோஜனை பண்ணிக் கொண்டே தன் காரை பூட்டி விட்டு பரமசிவமும் பார்வதியும் உட்கார்ந்து கொண்டு இருந்த ‘சிமெண்ட் பென்ச்சுக்கு’ வந்தார்.

பரமசிவம் “பாத்தியா பார்வதி,நாம பெத்த பொண்ணு ரமா ரொம்ப ஆசைப் பட்டான்னு நிறைய செலவு பண்ணி அவளை நல்லா படிக்க வச்சோம்.என் கிட்டே இருந்த பணத்தையும்,நண்பர்கள் செய்த பணத்தையும் வச்சு,நீ போட்டு கிட்டு இருந்த நகைகளை எல்லாம் அழிச்சு அவளுக்கு புதுசா நகை பண்ணிப் போட்டு,அவளுக்கு போட்டு கல்யாணம் கட்டி வச்சோம்.அவ இப்போ அமொ¢க்கா விலே ஒரு பணக்கார வாழ்க்கை வாழ்ந்து வறா.நாம அமொ¢க்கா போனா, நமப மருமகன் நம்மை பாரம்ன்னு சொல்லி ஒரு வாரத்துக்கு எல்லாம் ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டாரு.அதுக்கு நம்ப பொண்ணு ஒன்னும் சொல்லாம சும்மா நின்னு கிட்டு இருந்தா.இங்கெ என்னடான்னா நம்ம மருமக நம்மைப் பாத்து ‘ஏன் இவ்வளவு நீங்க சீக்கிரமா திரும்பி வந்து விட்டீங்கன்னு.அங்கெயே இன்னும் ஆறு மாசம் இருக்கிறது தானே’ ன்னு கேட்டதுக்கு நம்ம பையனும் ‘ஆமா கமலா சொன்னது சரின்னு’ சொல்றான்.போதாத குறைக்கு மருமக விடாம ‘அமொ¢க்காவில் இருந்து எங்களுக்கு ஒன்னும் வாங்கி யாரலையா,உங்க பொண்ணுக்கும் மருமகனுக்கும் எங்க பேர்லே கொஞ்சம் கூட ஆசை இல்லை யா’ன்னு கேக்கறா.இவங்களுக்கு ஏதாச்சும் வாங்கியாந்தா தான் நமப மாமனார் மாமியாரா.நமக்கு அந்த ஊர் கடையோ,அவங்க பணமோ,அவங்க பேசற இங்கிலீஷ் பாஷையோ பு¡¢யுமா. அவங்க தானே நம்மை அழைச்சு கிட்டு போய் ஏதாச்சும் வாங்கி குடுக்கணும்.அவங்க அதை பண்னாததுக்கு நம்மை திட்டறா மருமக.மொத்தத்லே நம்ம மருமகனுக்கும் நம்பளே பிடிக்கலே. பொண்ணும் பிடிக்க லே.எங்கேயும் வேலை கிடைக்கலேன்னு தானே நான் என் வேலையை நம்ப பையன் ராஜனுக்கு வாங்கி கொடுத்து,ஓய்வு வாங்கி கிட்டேன்.பாவம் ஏழை பொண்ணு கமலான்னு நினைச்சு தான் நம செலவிலெ கல்யாணம் பண்ணி வச்சி,அவளை மருமக ஆக்கி கிட்டோம்.இவ என்னடான்னா நம் மைப் பாத்து கேள்வி மேலே கேள்வி கேக்கறா.அமொ¢ல்லாவிலே மருமகன் வேணாம்னு நம்மை வேணாம்ன்னு பிடிச்சு தள்றான்,இங்கே மருமக ‘ஏன் இவ்வளவு சிக்கிரமா வந்திட்டீங்க.அங்கெயே இன்னும் ஆறு மாசம் இருக்கிறது தானே’ன்னு சொல்லி மூஞ்சியெ காட்டறா.அதுக்கு நம்ப பையன் ‘ கமலா சொல்றது சா¢ தான்’ன்னு சொல்லிட்டு ஒன்னும் சொல்லாம நிக்கறான் அவனுக்கும் நம்மே பிடிக்கலே. நாம ஆசையா வளத்து ஆளாக்கின பெத்த பொண்ணும், பையனும் இப்படி நம்மை ஒத்தருக்கு ஒருத்தர் ‘எங்களுக்கு வேணாம்’ ‘எங்களுக்கு வேனாம்’ன்னு சொல்லி நம்மை பந்தாடு றாங்க.எனக்கு என்ன செயயறதுன்னே தொ¢யலே.எனக்கு அந்த வூட்டுக்கே போக பிடிக்கலே பார்வதி” என்று சொல்லி விக்கி விக்கி அழுதுக் கொண்டு இருந்தார். ‘சிமெண்ட் பென்ச் ’ பின்னால் நின்றுக் கொண்டு பரமசிவம் வருத்தப் பட்டு அழுவதை கேட்டு வரதராஜன் கண்களில் கண்ணீர் முட்டியது..

‘இவ்வளவு நல்ல பரமசிவத்திற்கும் அவர் மணைவிக்கும் வாழக்கையிலெ இவ்வளவு கஷ்டங் களா.எவ்வளவு நல்ல மனிதர் இந்த பரசிவம்.வேலையிலே எவ்வளவு உண்மையாக கஷ்டப்பட்டு வேலை செஞ்சு வந்தார்’ என்று நினைத்தார்.பிறகு தன் கண்களை’ கர்ச்சி·பால்’ துடைத்து கொண்டே முன் பக்கமாக வந்து ”பரமசிவம், நீங்க சொன்ன உங்க குடும்ப கஷ்டத்தை நான் உங்க பின்னாலெ நின்னு கிட்டு கேட்டு கிட்டு இருந்தேன்.எனக்கு துக்கம் தாங்கலே.என் கண்லேயும் கண்ணிர் வர ஆரம்பிச்சுடுச்சி” என்று சொல்லி கொண்டு இருக்கும் போது பரமசிவம் “சார், நீங்களா சார்.இத்தனை வருஷம் ஆகியும் என்னை இன்னும் மறக்காம இருக்கீங்களே சார்” என்று சொல்லி அவர் காலை தொடப் போனார் பரமசிவம்.
”எழுந்தரிங்க பரமசிவம் என் கிட்டெ நீங்க எத்த்னை வருஷமா விசுவசமா வேலை செஞ்சு வந்து இருக்கிங்க.நான் இன்னும் அதை மறக்கலெ பரமசிவம்.இந்த காலத்திலே உங்க மாதிரி நல்ல மனுஷங்களே பாக்கிறதே ரொம்ப கஷ்டம்” என்று சொல்லி விட்டு பரமசிவம் பக்கத்திலே உட்கார போனார் வரதராஜன்.உடனெ எழுந்து நின்று கொண்டார் பரமசிவம். ஆனால் வரதராஜன் “உக்கா ருங்க பராசிவம்.இந்த மா¢யாதை எல்லாம் நான் மானேஜர் ஆக இருந்த போது தான்.இப்போ நானும் உங்க மாதி¡¢ ஒரு சாதாரண மனுஷன் தான்” என்று சொல்லி விட்டு “பரமசிவம்,நான் சொல்றேன்னு என்னை தப்பா பு¡¢ஞ்சுக்காதீங்க. என் நண்பர் ஒருத்தர் மடிப்பாக்கத்திலே ஒரு முதியோர் இல்லம் நடத்தி கிட்டு வறார்.உங்களுக்கு ஆ§க்ஷபனை இல்லேன்னா சொல்லுங்க.நான் உங்க ரெண்டு பேரை யும்,நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் மாசா மாசம் என் பணத்தை கட்டி, அவர் கிட்டெ சேத்து விடறேன்.அப்படி எனக்கு ஏதாவது “ஒன்னு” ஆனா,நான் அவங்களுக்கு தரும் “டொனேஷன்” பணத்திலே உங்க ரெண்டு பேருடைய காலம் முடியும் வரை அந்த முதியோர் இல்லமே கவனிச்சு கிட்டு வரும்.நீங்க கவலைப் படவே வேணாம்.என் பையனும் பொண்ணும் வெளி ஊர்லே ரொம்ப வசதியா வாழ்ந்து கார் பங்களாவோடு வாழ்ந்து கிட்டு வறாங்க.அவங்களுக்கு என் பணமே அவசியம் இல்லே.நானே ரொம்ப நாளகவே என் சொத்தை எல்லாம் ஒரு முதியோர் இல்லத்துக்கு “டொனே ஷனாக” கொடுக்கலாம்ன்னு யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தேன்.இப்போ அதுக்கு நேரம் வந்திடுச்சி” என்று சொன்னவுடன் பார்வதியும் பரமசிவமும் வரதராஜன் கால்களில் விழப் போனார்கள்.

அவர்கள் இருவரையும் மெல்ல எழுப்பி தன் கா¡¢ல் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அன்று இரவு அவருடன் தங்க வைத்துக் கொண்டு,அடுத்த நாள்ளே வரதராஜன் பரமசிவத்தையும், பார்வதியையும்,தன் செலவிலே அவர் நண்பர் நடத்தி வந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து அவர் ஆசைப்பட்ட படி “டொனேஷன்” பணத்தையும் கட்டி விட்டு கா¡¢ல் திரும்பி தன் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.வரும் வழியில் ’என் கிட்டே ரொம்ப விசுவாசமாக வேலை செஞ்சு வந்த ஒருத்த ருக்கும், அவர் மணைவிக்கும் தக்க சமயத்தில் அவங்க போக விரும்பாத இடத்துக்கு போக விடாம, இந்த உதவி பண்ணினோமே’ என்கிற சந்தோஷப்பட்டுக் கொண்டே வந்துக் கொண்டு இருந்தார்.

வாழ் நாள் பூராவும் தங்களை வருத்திக் கொண்டு தங்களுக்கு பிறந்த பொண்ணையும், பையனையும் மிகவும் ஆசையாக வளர்த்து ஆளாக்கின பெற்றோர்களை ‘நீங்க எனக்கு வேணம்,நீங்க எனக்கு வேணாம் ன்னு’ சொல்லி பந்தாடின போது,மனம் உடைந்த பார்வதி பரமசிவத்திற்கு ஆண்டவன் உதவி யார் மூலமாகவோ கிடைத்தது.

“”கடவுள் இருக்கிறார்,அவர் எல்லா ஜீவ ராசிகளையும் நிச்சியமாக காப்பாத்துவார்”” என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை””.

இல்லையா சொல்லுங்க!!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *