கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 16,237 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தூலம் முறிந்து-

அம்மா மட்டும் நெடு நாட்களாகச் சொல்லிக்கொண்டி ருந்தாள்; அடே, உளுத்துப் போச்சுடா. செல்லுப் புழு தாராளமா புகுந்து புறப்படறதடா. கவனிங்கோடா.

அப்பா வீடு வாங்கின் சமத்தை மெச்சிக்கோ. (வெளி யில் சொல்லவில்லை) என்னை என்ன பண்ணச் சொல்றே நானும் விசாரிச்சாச்சு. இரண்டு தூலங்கள்ை யும் மாற்ற, கூலி உட்பட 450 ரூபாய் ஆகுமாம். எதுக்கும் 500 ரூபாய் தயார் பண்ணி வெச்சுக்கிட்டு என்னைக் கூப்பி டுங்க. தச்சன் சிரிக்கிறான், துாலத்தைப் பார்த்து.

தூலம் முறிந்து –

ஆனால் அப்பாவின் அவசரத்துக்குக் காரணம் உண்டு. அவருடைய காரணம்-காரணங்களில் எப்பவுமே போது கிடையாது.அவரவர்க்கு அவரவர் காரணம்-தனித்தனிக் காரணம்.

பாட்டி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். ‘அம்பி, இதுவரை வாடகையாக் கொடுத்தே, ஒரு ஆயுசுக்கு சேர்த்த சொத்து அழிஞ்சிருக்கும். நமக்குன்னு ஒரு வீடு. எலிவளையானாலும் தனிவளை பார்த்துட்டுக் கண் மூடுவேனா?

பாட்டி ஏங்கிண்டு இருந்த மாதிரி, அவள் காலத்தி லேயே அவள் சொந்த வீடு காணமுடியவில்லை. அதற்காக அவள் காத்திருந்ததில் குறைச்சலில்லை, மூடுகையில் 74, எங்கள் குடும்பத்துக்கே கார்ட் ப்ரேக்,

பாட்டி காக்கில் என்ன கிரகம் ஏறிக்கொண்டிருக் ததோ, இது அசலாவே வளைதான்-வயல் எலிப்பொந்து,

இந்த ஊரே தள்ளியிருக்கிறதென்றால், இந்த ஊருக் கும் ஒதுக்கு இந்த வீடு.

அந்தப் பாட்டியையே அவளுடைய அந்திம கால உடல் சிலையில் கட்டிலோடு தூக்கிக்கொண்டு வந்து காண்பித் திருந்தால், சம்மதித்திருக்க மாட்டாள். ஆனால் பாட்டி யின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதில் அப்பா முனைஞ் சாச்சே!

பார்வதி விலாஸ் (விலாஸ் ஹகு! 10×12 ஒரு அறையை ஒட்டி, 12×20 ஒரு கூடம்) சுவர்களில் வெடிப்பு சுற்றி கிரவுண்டு இருக்கிறது. அதைச்சுற்றி முள்வேலி. பூவரசமரம், ஒதிகை மரம், சதா கருகு உதிர்ந்தபடிதான் பெருக்கி மாளவில்லை. ஒரு கறிவேப்பிலைக் கொத்துக்குக் ஒட்க் கடைக்கு மேட்டுக்கு ஒரு கி.மீ. சைக்கிளில் மிதித் தாகனும். ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது நாளுக்கு இரண்டு பங்க்ச்சர்.

அம்மாவுக்கும் கறிவேப்பிலை இல்லாமல் சமைக்க வராது.

மழைக்காலத்தில் ரோழி மண்டபம். மழை ஓய்ந்தாலும் சேறு காய இரண்டு மாதம்.

தபால்காரன் வரமாட்டான்.

பால்காரன் வரமாட்டான்.

காஸ் காரன் வரமாட்டான்.

(ஐயோ! அம்மா!)

அரிசிக்காரன் வரமாட்டான்.

மளிகைக்காரன் வரமாட்டான்.

மின்சாரம் அவுட்.

ஆனால் ஆபீஸ் போகிறவன் ஆபீஸ் போயாக வேண்டும்.

காலேஜ் போகிறவன் காலேஜ் போயாகவேண்டும்.

அப்பாவுக்கென்ன, ரிடையர் ஆகியாச்சு. ஈளிசேரில் சாய்ந்தபடி- மடியில் கவிழ்ந்த ஒர் புத்தகம். மண்டோப நிஷத், கடோபநிஷத், கீதை, அரபிந்தோவின் சாவித்திரி அல்லது பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் – அத்தனையும் நம் மண்டைக்கு அப்பாற்பட்ட சமாச்சாரம்-எதிரே சுவரில் பாட்டி படம் அந்தப் பெரிசு இப்போ அப்பாவைப் பண்ண இயலாது-அதைப் பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்து விடுவார்.

எதுபற்றி? பாட்டியைப் பற்றித்தானிருக்கும்.

ஒரே பிள்ளை. இருக்கும்வரை இவரைப்பற்றி அவள் அவளைப்பற்றி இவர். அவள் போனபின் அவளைப் பற்றியே இவர்.

தூலம் முறிந்து-

“இதோ பார் பெண்ணரசி, (அம்மா பெயர் அது வல்ல) துாலத்தைப் பார், கதவைப் பார் என்று என்னைக் கொத்திப் பிடுங்காதே. பிள்ளைகளைக் கேள். அவர்கள் தலையெடுத்தாச்சு. அவர்கள் போகிற தோரணையை, செலவு, ஆடம்பரம் எல்லாவிதத்திலும் பார்த்தால், அவர் கள் காலையும் பூமியிலிருந்து எடுத்தாச்சு என் காலம் ஒய்ஞ்சுபோயாச்சு, இனி என்னால் முடிந்தது பிறத்தியா ருக்கு என்னால் செலவையும் அசெளகரியத்தையும் எவ்வளவு தாரம் குறைத்துக் கொள்ள முடியுமோ…’

வாக்கியம் முடிவு பெறாது, படிப்படியாக அடங்கும் மூச்சுப் போல் ஒய்ந்துவிடும். அப்படி ஒரு சமயத்தில் பாணி.

அப்பா சொன்னபடியே அவருடைய தேவைகள், தாமாகவோ, அவர் முயற்சியிலோ வெகுவாய்க் குறைந்து விட்டன. சாதத்தைப் பருக்கையாக எண்ணினாற்போல், உணவு ஒரு அளவுதான். அதுவும் ஒரு வேளை. ஒற்றைக் கட்டை வேட்டி. மேல் துண்டு அக்கறையில்லை. அவசிய மில்லாமல் படிதாண்டுவதில்லை. பேச்சும் மட்டுக்கட்டித் தான். வீட்டு சன்யாசி.

சன்னியாசிக்கு வீட்டுள் என்ன வேலை? வெளியில் விரட்டவேண்டும். யார் சொன்னது? நான் சொல்கிறேன். பின்னே என்ன-குடும்பத்துடன் ஒட்டாமல், ஒட்ட முடியா மல் அப்பாவாயிராமல்…

ஆனால் அப்படியும் சொல்வதற்கில்லை. ஒரு நாள் ஒரே கலகலப்பு. கும்மாளம். முதுகையறைந்து (pais) பேச்சு.மறுநாள் வெளியே கக்காமல் உள்குமுறும்எரிமலை, பொறி பறக்கும் கண்கள். ஏன்? ஏன்? ஏன்? யாரறிவார்? அண்டமுடியாத அனல் வெம்மை. உள்ளேயே தளைக்கும் பிழம்பு முகத்தில் டால் அடிக்கும். பயமாயிருக்கும் பவழ வண்ணன். ரூத்ரமூர்த்தி.

பாட்டி செத்த கையோடுதான் அப்பா மோச மாயிட்டார். சிதையில் கடைசி வரளி பாட்டி முகத்தை மூடும் வரை, மூடியபின்னரும் அப்பா அந்த இடத்தையே விறைத்துக்கொண்டிருந்த பார்வை பயமாயிருந்தது. எரிச்சலும் வந்தது.

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் மனுஷன்? இவருக்காகப் பாட்டி சதமாக இருந்து கொண்டேயிருக்க வேனுமா? இருக்கலாமா? பின்னால் அதனுடைய சிக்கல் களை அறியாரா?

அப்பா, பாட்டியிடமிருந்து அவளுடைய அம்சத்தை வாங்கிக்கொண்டுவிட்டாரோ? இருவருக்கும் முக ஒற்றுமை கூடத் தெளிந்து காட்டுவது போல் தோன்றிற்று. என் பிரமையோ கடை, பாவனைகள்கூட…

அந்த நீண்ட மெளனங்கள். மணமில்லாத புன்னகை யில், தாடைகளின் லேசான இளக்கம், உள்ளடக்கிய உணர்ச்சியில் முஷ்டித்துத் திறந்து மூடும் கைகள்…அப்பா, வாயைத் திறந்து கத்திவிடுங்கள் அப்பா! எங்களை இரண்டு. அடிகூட அடித்துவிடுங்கள்.

ரிஷிகேஷில் இமயச் சாரலுச்சியில் சூரியோதயத்தில் பசும் பொன் காட்டும் புற்றரைமேல், பாட்டியும் அவரும் கடமாட மற்றவரெல்லாம் மலையடிவாரத்தில் கின்று கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பர். அல்லது பார்த்துக்கொண்டிருத்தல் வேணும். அப்பாவின் எண்ணம் எங்களைப்பற்றிய அபிப்பிராயம் அதுதான் என்று என் கணிப்பு.

காலத்தின்மேல் பழியைப் போடாமல் போக்குகள் மாறி விட்டன என்பதைப் பெரியவர்கள் எப்போது ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்? ஆனால் எதையும் அப்பா காட்டிக்கொள்ள மாட்டார்.

நெஞ்சுக்கனம்… அப்பா! அப்பாவின் கழுத்து, நாயனக்காரன் கழுத்துப் பலம். கரம்புகள் புடைத்துக் விண்டு…

ஒரு நாள் மாலை, கானும் ராஜூவும் வெளியே போய்த் திரும்பி வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பா எங்களை விரலைக் கொக்கி காட்டி விளித்தார். காங்கள் தற்செயலில் அவருக்கு இருபக்கத்திலும் கின்றோம். அப்பா, எங்கள் தோளில் கை போட்டுத் தாங்கிக்கொண்டு எழுந்தார். அம்மாடி! கைலாய மலைக்கடியில் ராவணன் நசுங்கிப்போனானாமே! அண்ணனும் தம்பியும் நசுங்கி னோமோ இல்லையோ, ஏதோ ஒரு தினுசில் குன்றிப் போனோம். அப்படி எங்களை அழுத்தியது அப்பாவின் வெறும் உடல் வலிமை மட்டும் அல்ல; அப்பா தோள்களில் ரத்தம் சுண்ட ஆரம்பித்துவிட்டது. வயது!

இந்தச் சைகை எச்சரிக்கையா? ஆசீர்வாதமா? இது என் வயதின் அதிகாரம். எச்சரிக்கை, ஆனால் நீங்கள் என் விழுதுகள்; ஆசி.

அப்பா வாய் திறந்து பேசாவிட்டால் என்ன? அவ ருடைய பேசாத வார்த்தைகள் எங்கள் கெஞ்சில் பிம்பம் அடிக்கின்றனவே!

எங்கே போயிருந்தாய்?

எங்கே போனாலும் நேரத்தில் என் கூட்டுள் அடங்க வில்லை? .

இருப்பது ஐந்து பேர். ஆனால் பந்தி எட்டு.

உங்கள் அம்மாவை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? அவள் உங்கள் சமையல்காரியா வண்ணாத்தியா?

டி.வி. உடம்புக்குக் கெடுதல்: குணத்துக்கும் கேடு. வாரத்துக்கு ஒரு தமிழ், ஒரு இந்தி, இரண்டு சினிமாவுக்கு ஈடில்லையா? இது, நீங்கள் உருப்படுவதற்கு அடை யாளமா?

தன் காரியங்களைத் தானே கவனித்துக்கொள்வது தான் சுயகெளரவம்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. வாழ்வு மானத்தோடு மணக்க இதைவிட அழகிய சூத்திரம் இல்லை.

அத்தனையும் எங்களுக்கு ஒவ்வாத வார்த்தைகள், நாங்கள் என் செய்வோம்?

அப்பா நாளடைவில் பேச்சடங்கிப்போய், எங்களுக் குப் பயம் தரும் மோனத்தில் மூழ்கிப்போனதற்குக் காரணம் நாங்கள்தான்.

எங்கள் இரைச்சல், நாங்கள் எங்கள் நண்பர்களை அழைத்து வந்து அடிக்கும் அரட்டை இரைச்சல், எடை போட்டுப் பார்த்தால், உப்புசப்பு இல்லாத எங்கள் பேச்சின் சின்னத்தனம், ரேடியோவின் ஓயாத அலறல். அவருடைய சுபாவத்துக்குவிரோதம். அது ஒரு பக்கம் இருக் கட்டும்.அப்பா ஒரு முறை சொன்னதற்கு உடனே பதிலோ சம்மதமோ, கீழ்ப்படிதலோ இல்லாவிடின், அப்பா அதே வார்த்தை மட்டில் உறவை யாராயிருப்பினும் சரி துண்டித் துக்கொண்டு விடுவார். தன்னைத் தன் பத்திரத்தில் இழுத் துக்கொண்டு விடுவார்.

அப்பா, உங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இல்லை.

நான் எதற்கு, யாருக்கு, வளைந்து கொடுக்க வேண்டும்?

வாய் வார்த்தையாக கடக்காத சம்பாஷணை. ஆனால் அதனினும் கனமானது. அங்குதான் அப்பாவின் மோனத் சக்தி.

கேள்வி எங்களுடையது, அதற்கு அவருடைய பதிலும் எங்களினின்று-இது என்ன மாஜிக்?

குற்றம் சாட்டப்படவில்லை. உணர்த்தப்படுகிறது? இல்லை, நாங்களே உணருகிறோம்.

உணர்ந்து என்ன பயன்? நாங்கள் மாறுபவர்கள் இல்லை. விதி என்பது இதுதானா?

கடவுள் இருக்கிறாரோ இல்லையோசைத்தான் நிச்சயமாக இருக்கிறது. அவனுடைய ஆட்சி பூரணமாக எங்களிடம் தெரிகிறதே!

தூலம் முறிந்து –

தூலத்தை நான் கவனித்திருக்க முடியும், கவனித் திருக்கவேண்டும்.

ரூ. 560?

என் பஞ்சைபாட்டு பொய் என்று உணர்கிறேள்.

போனஸ்ஸை பிளாக் அவுட் பண்ணியிருக்க வேண்டாம்.

போனஸ் வந்தது அப்பாவுக்குத் தெரியாது என்று நினைத்துக்கொள்வதில் என்னை தான் ஏமாற்றிக்கொள்கிறேன். .

குட்சம அறிவின் சக்தி எத்தகையதென அப்பாவின் மோனம் காட்டிற்று.

எல்லா நதிகளும் கடலில் விழுகின்றன.

அறிவுகள் யாவும் மோனத்தில் கலந்து விடுகின்றன.

தனியாக ஒளிய இடம் தேடலில் தன்னையே இழந்து விடும் அந்த மோன கர்ப்ப இருள் ஏன் அச்சம் தராது?

மறைத்தேனே ஒழிய அந்த போனஸ் தும்பாய்ப் பறந்துபோனவிதம் இன்னும் திகைப்பாயிருக்கிறது. உருப்படியாக ஒரு செலவும் ஆகவில்லை. Gone with the wind.

தோசைக்கல் கணக்கில் இப்போது மணிக்கட்டைக் கனக்கும் இந்த ஃபேவர் லுபாவுக்கு அவசரம் என்ன?

அதேபோல் தான் சுகுமார் டெயிலரிங்கில் மாதத் தவணையில் வாங்கின ஸ்-சட்டிங். கொடியில் ஐந்தோடு ஆறாக லாலியிலி.

இரண்டு தவணைகள் பாக்கி. ஆபீசிலிருந்து திரும்பி வருகையில் அவன் கடையைச் சுற்றிக்கொண்டு போகிறேன். என்றைக்கு வீட்டுக்குச் சீட்டு வருகிறதோ?

கண்டதே காட்சி கொண்டதே கோலம். இதைத்தான் வேண்டாம் என்று அப்பாவின் மோனம் ஆட்சேபிக்கிறது. இதுதான் வாழ்க்கை என்று காங்கள் சாதிக்கிறோம். இன்று கைப் பிடி மூழ்க வாழ், நாளை தன்னைப் பார்த்துக் கொள்ளும். ஆபீஸில் என் பக்கத்து மேஜைப் பெண் விதம் விதமாக உடுத்தி வருகிறாள். அவளுக்கு நான் சளைக்கக் கூடாது எனும் ஃப்ளர்ட்டிங்குக்காகவன்றி இந்த ஆறாவது ஷூட்டிங் உண்மையில் தேவையா?

ஒ, மனசாட்சி என்பது இதுதானோ?

அப்பாவுக்கு எதுவும் தெரியாமல் இருக்க முடியாது, அவருடைய மோனம் எங்களுக்கு இருட்டு. அவருக்குக் கைப் பையில் விளக்கு. அதன் வெளிச்சத்தில் எத்தனையோ அக்தரங்கங்களை ஏடு புரட்ட அவரால் முடியும்.

இதை ஞானதிருஷ்டி என்று சொல்வதற்கில்லை, எங்களையே நாங்கள் ஏமாற்றிக் கொள்வதில், எங்களை நாங்களே காட்டிக்கொடுத்துக் கொள்கிறோம்.

அப்பாவுக்கு எங்கள்மேல் உள்ள கோபம் மட்டுமல்ல, அத்துடன் எதோ துயரமும் கலந்திருந்தது. குடும்பத் துயரம் அல்ல. அதனினும் பெரிது. மகத்தானது.

பட்டணத்தில் ஜனங்கள் தண்ணிருக்காகப் படும் தவிப்பு-அப்பா வாய்விட்டு அதுபற்றிப் பேசவில்லை. அன்றொரு காள்மெனக்கெட்டு கிணற்றடிக்கு வந்து கிணற்றுள் பார்த்துக்கொண்டு கின்றார். பிறகு தண்ணிரை இழுத்து ஆசமனம் செய்து கண்களில் ஒற்றிக்கொண்டு தன் இடத் துக்குத் திரும்பிப் போய்விட்டார். முகம் கைகளில் புதைந்து தோள்கள் குலுங்கின. அப்பா அன்று பூரா சாப்பிட வில்லை. ஜன்னல் வழி வானத்தில் மாறிமாறி விளையாடும் சாயங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். முகம் ஜெவ ஜெவ… அப்பா அன்று முதல் அருந்தும் ஐலம் வெகுவாய்க் குறைந்து போயிற்று. ஒரொரு நாள் அற்றே போயிற்று.

“அப்பா நாடகம் பண்றார். சிறிசுகள் தோள்களை இடித்துக்கொண்டு கிசுகிசுத்தாலும் அப்பா டோன்ட் கேர். என்றுமே அவர் செயல்களும் சொல்லும் பிறர் வழக்குக்கு அடங்கினவை அல்ல.

மரத்தினின்று ஒரு இலை உதிர்ந்தால் மாரைப் பிடித்துக்கொள்வார்.

அம்மா அவளுடைய பூஜைக்கு கந்தியாவட்டையைப் பறித்துக்கொண்டிருக்கையில் அவர் முகம் உள்வலியில் இறுகும். ஏன் பறிக்கிறாய்? கேட்க மாட்டார். மோனத்தின் சுங்கம் கடுமையானதுதான். ஆனால் அப்பா வின் நோக்குப்படி நடப்பதாக இருந்தால் கோவில். கல்யாணம், நல்லது பொல்லாது, காள், கிழமை எல்லா வற்றிலிருந்தும் பூவை பகிஷ்கரிக்கவேண்டியதுதான். பூவிலிருந்தமல்லியோ, மதுரை மல்லியோ, காஷ்மீர் ரோஜாவோ ஏரோப்பிளேனில் இடம் மாற வேண்டிய தில்லை. பூக்கடையை இழுத்து மூடு. அப்பா தத்துவம் நடக்கிற காரியமா?

அப்பாவின் உள் புழுக்கத்தில் ஏதோ ஒரு செருக்கும் இருக்கும். உங்களிடம் சொல்லி என்னவாகவேண்டும். சொன்னால் உங்களுககு என்ன புரியப் போகிறது; அதுவும் வாஸ்தவம்தான்.

அபூர்வமாக ஒரு நாள் மாலை அப்பா உலாவப் போய் சுருக்கவே திரும்பிவிட்டார். நெற்றிப் பொட்டிலிருந்து ரத்தம் கொட்டியவண்ணமிருந்தது. கன்னம் வழி, தோளில் சொட்டி மார்பில் கிளை பிரிந்து- என்னவாச்சு? எங்கள் பதறலுக்கு மன்னன் வாய்திறந்தால்தானே! மார்பில் வழியும் குருதிமேல் குனிந்த கண்களில் ஏதோ திகைப்பு. சிக்தனை. லேசான புன்முறுவல்.

இது என் ஜீவநதி!

பார்த்தவர்கள் பின்னர் சொன்னார்கள், அப்பா நடந்து சென்ற வழியில் நாலு பையன்கள் பாம்பை அடித்துக் கொண்டிருந்தார்களாம். பாம்பு தலை குதறிப்போயும், பையன்கள் அடிப்பதை விடவில்லை. அப்பாவுக்குப் பொறுக்கவில்லை. துரத்திக் கொண்டு போயிருக்கிறார். மூன்று பேர்கள் ஓடி விட்டனர். ஒருவன் மட்டும் மாட்டிக் கொண்டான். அவன் பற்கள் கடகடக்க அப்பா அவன் தோள்களைப் பற்றிக் குலுக்கியதும் அவன் திமீறித் தப்பித்து ஓடிப்போய் வாயில் வந்தபடி வைது கொண்டு ஒரு கல்லைப் பொறுக்கி அப்பாமேல் விசியிருக்கிறான்.

அப்பாவுக்கு வரவர எந்த வலியும், வலிதரும் பிறரின் பிறரின் செயலுமே பொறுக்கவில்லை. புறவலியெல்லாம் அவருடைய அகவலியாக மாறின. இப்படியும் உண்டோ?

அப்பா மகான் ஆகிக்கொண்டிருந்தாரா? உலகத்தையே மகா மயானமாகக் கண்டாரா? அல்லது வயதாகி விட்டாலே இப்படி ஒரு கட்டம் வருமா? அல்லது அப்பா புத்தி கழுவல்ஸ்? அப்பாவோடு வாழ்வது சுலபமில்லை.

தூலம் முறிந்து ஃபேன் அப்பா மேல் விழுந்து-அந்த சப்தமே போதும் எல்லோரையும் எழுப்பிவிட-சுற்றிக் கொண்டிருக்கும் ப்ளேடுகள் அப்பாவின் வலதுதோளை க்ளினாகத் துண்டித்து…

ஐயோ! ஐயோ! அப்பா! அப்பா!

யாருக்குச் சட்டென விளக்கைப் போடத் தெரிந்தது? ஃபேன் ஸ்வீட்சை “ஆஃப்’ பண்ணத் தெரிந்தது:

ஐயோ! அம்மா! அம்மா!

டாக்டர்-இந்த நள்ளிரவில் எவ்வளவு தூரம்: “கன்வேயன்ஸ்’ வரவழைக்கவும் முடியாது. அப்பாவைக் கொண்டுபோகவும் முடியாது. எதுவும் விடிந்தால் தான்.

இதுதான் பார்வதி விலாஸ்’!

துண்டிக்கப்பட்ட கை, பட்டாசுத்திரிபோல், கூடத்தில் எங்களைச் சுற்றிக் குதித்துத் துடித்த காட்சி-ஜன்மத்துக் கும் மறக்க முடியாதது.

அதனினும் மறக்க முடியாதது, கண்கள் செருகி, அதில் கண்ணாடி ஏறிக் கொண்டிருக்கையிலேயே அப்பாவின் கடைசி வார்த்தை,

‘அரைத்துணி கலைஞ்சுபோச்சா?”

இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அப்பா, உங்கள் வார்த்தைகளில் வாழ்வுக்கே ஒரு சேதி அடைக் திருக்கிறதோ?

அப்பா! உங்களால் என்னை மன்னிக்க முடியுமா? மன்னிப்பு கேட்கக்கூட எனக்கு அருகதையில்லை.

அப்பா! அப்பா! எல்லாம் முடிந்தபின் அன்றிரவு என் கனவில் வந்தீர் கள். உங்கள் உடம்பு முழுமையாக இருந்தது. அப்பா முகம் என்ன காந்தி! கண் கூசுகிறது. உங்கள் கண்களில் என்ன கருணை! தொண்டை அடைக்கிறது.

“அம்பி! எல்லோரும் சிருஷ்டி வழிப்படி, சுபாவத்தில் கல்லவர்கள் தான். அந்த சுபாவத்தின் வெளிப்பாடில்தான் வெவ்வேறு தன்மைகள். அந்தத் தன்மைகளின் மேடு அடிப்பின் கீழ் அந்த சுபாவமே புதைந்து போய், அதனால் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது சிரமமாகிவிடுகிறது.’

அப்பா! அப்பா! எனக்குக் கேட்கப் பயமாயிருக்கு. அப்படியானால் என்னை மன்னித்துவிட்டீர்களா?

வானம் இடிந்து விழாமல், நீங்கள் எங்களுக்குத் துாலம்!

– புற்று (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1989, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *