கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 3,711 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கார்த்திக்…கார்த்திக்…அப்பா கூப்புடுறாங்க!” குயிலி குயில் போலக் குரல் தந்ததும், “ஏன் என்னைத் தூங்க விடமாட்டேங்கிறீங்க? ஹாலிடேயைக் கூட நல்லா எஞ்சாய் பண்ண முடியல…ச்சே!” என்றபடி தன்னை மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டு எதிரேயிருந்த கண்ணாடியில் முகம் விழித்தவன், “ம்…நம்ம முகத்தைப் பார்க்கும்போது முனகக்கூடாது. நீ நினைப்பதுதான் நீ” என்று தனக்குள் கூறிக்கொண்டபடி படுக்கையறையை விட்டு வெளியே வந்தான்.

செய்தித்தாளில் முகம் புதைத்திருந்த அப்பாவிடம், “குட் மார்னிங் அப்பா!” என்றன், “குட் மார்னிங்!” என்ற அப்பாவின் பதிலை வாங்கிக் கொண்டு காலைக் கடன்களில் கவனம் காட்டினான். எல்லாம் முடிந்து, பஞ்சுப்பூவாகப் பூத்திருந்த அப்பத்திற்கு மஞ்சள் பூசுவதுபோல மஞ்சள் சீனியைத் தூவித் தேங்காய்ப் பாலால் நீராட்டுச் செய்து, ரசித்து ருசித்து உண்டான். “ம்… வெரி நைஸ்” என்பதை, “நைஸா?” என்று ஆங்கிலத்தில் கேட்ட குயிலிக்குப் பதிலாகத் தந்தான். ஏழாண்டுகளாக அவன் வீட்டில் பணிபுரியும் குயிலி, தான் கற்ற அச்சொல்லை அவனைக் குழந்தையாய்ப் பாவித்து, உணவு உண்ணும் போதெல்லாம் கேட்பதில் பெருமகிழ்வு கொள்வாள்.

அதற்குள் பணிக்குச் செல்லத் தயாரான அப்பா ரகு, “கார்த்திக்” என்று குரலுயர்த்தி அழைத்து, அருகில் மகன் வந்ததும், “இந்தாப்பா! இதுல இருக்கிறதை தனியான ஓரிடத்திலே படிச்சுப் பதில் படிச்சுப் பதில் தருவியா?” என்று உறை ஒன்றைத் தந்து, குரலை இறக்கிக் கேட்டதுடன் கட்டாயம் தரணும் என்று பொருள்படும்படி, கெஞ்சும் பார்வையுடன் பார்த்தார்.

தந்தையின் முகக்குறி மூலம் பலவற்றைப் புரிந்து கொண்ட கார்த்திக் கார்த்திக் அவற்றை இனம்பிரித்துப் இனம்பிரித்துப் பார்க்க அவகாசமின்றி, “சரிப்பா!” என்றான். அப்பா வேலைக்குச் சென்றார்.

அடுப்பங்கரையிலிருந்து குயிலி அவனை நோக்கிவர, காற்றாய்த் தன் அறைக்குள் சென்று அப்பா தந்த உறையைத் தன் பள்ளிப்பையில் வைத்துவிட்டு, செய்தித்தாளில் கவனம் செலுத்தினான். ஆனால், எண்ணமெல்லாம் அப்பா தந்த காகிதப் புதையல் பற்றியே ஆற்றுச்சுழல் போலச் சுற்றிச்சுற்றி வந்தது.

இத்தனை ஆண்டுகளாய் அவனுக்கு அன்புச் சகோதரியாய், தோழியாய், ஆசிரியையாய், தாயாய், ஆலோசகியாய் இருந்து வந்த குயிலியிடம் எதுவும் சொல்லவோ மெல்லவோ முடியாததால் கார்த்திக் பெருவிரைவு ரயிலில் போய்ப் படிக்க முடிவெடுத்தான்.

அவனுக்கென ஆறுதல், அக்கறை, ஊக்குவிப்புக் காட்டும் ஒரே இரத்த உறவு அப்பா என்றாலும் உயர்நிலை நான்கு விரைவில் படிக்கும் தான் முக்கியமான தேர்வை எழுதவிருக்கும் இந்த ஆண்டில் பலவித உணர்வுப் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதை அறியாது இருப்பதை எண்ணி மனம் கலங்கினான். என்ன செய்ய? இப்படிப்பட்ட அப்பா, போனவாரம் தஞ்சோங் பகாரில் அவரது பள்ளி நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தபோது, “ஹாய் ரகு? நௌ லிவிங் வித் நம்பர் வாட்?” என்று ஒருவன் கேட்க, மற்ற இருவர் தமக்குள் எதையோ பரிகசித்துப் பேசுவதைத் திரைப்படம் போல் தான் நேரில் பார்த்த விஷயம் பற்றிக் கடிதத்தில் எழுதியிருப்பாரோ? அல்லது ஏதேனும் சிறப்பாக வாங்கித் தருவதாக இருக்குமோ என்று பலவாறு யோசித்தான். யோசித்த யோசனை ஒரு முடிவுக்கு வருமுன்பு, அவன் தோ பாயோ பெருவிரைவு நிலையத்துக்கு வந்திருந்தான்.

கார்த்திக், முதலில் மெரினா பே நிலையத்துக்குச் சென்று கடிதத்தைப் பிரித்துப் பார்க்க எண்ணினான். அமைதியான அவ்விடத்தைப் போலவே தோ பாயோவில் ஏறியபோது, ரயிலின் உட்பகுதியும் இருந்ததால் ஓட்டுநரின் பின்னால் உள்ள இரட்டை இருக்கையொன்றில் அமர்ந்தான். அதே ரயிலின் மற்றொரு பகுதி, விடுமுறைக்கால மகிழ்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பள்ளி மாணவர்கள், குழந்தைகளுடன் கூடிய அன்னையர் ஆகியோரின் குரல்களால் சந்தோஷமான இளமைக்காலத்தை அனுபவிக்கும் இளைஞனின் மனப்பொலிவைக் கொண்டிருந்தது.

கடிதத்தைத் திறந்தவன் தன் கண்களுக்கு அதில் ஓட்டப்பந்தயம் விட்டான்.

“அன்பு கார்த்திக்,

அனேக வாழ்த்துகள். நான் இதை எழுத எண்ணியதன் இவ்விஷயத்தை காரணம், என்னால் நேரில் சொல்லமுடியாது என்பதுதான். ஏனெனில் நான் சில விஷயங்களைப் புரியவைத்து முடிவில் ஒரு விஷயத்துக்குப் பதில் காண விரும்புகிறேன்”.

‘எதையுமே மூடிமூடி மறைத்து, எத்தனை நாளுக்குத் தான் முக்காடு போடமுடியும்? என்று அப்பா நினைத்து விட்டாரா? என்று எண்ணியவன் கடிதத்தில் கண்களுக்குக் கவனம் தந்தான்.

“கார்த்திக், நான் தற்போது நற்பத்தொரு வயதில் நெட்டை மரமாய், ஒற்றையாய் நிற்கிறேன். என்னை என் வாழ்வின் வெறுமை வாட்டுகிறது. தவறு பல நேரங்களில் என்னால் செய்யப்பட்டிருந்தாலும் ஏனோ ஒருவித பயம் என்னை வாட்டுகிறது. ஒரு வேளை பெற்றவரின் குணம் போல் பிள்ளையும் வரும் என்பது உறுதியாகிவிடுமோ? நீயும் வாழ்வில் தவறுக்காளாகி வழுக்கி விழுந்து விடுவாயோ? என்ற குற்ற – பயவுணர்வுகளாக இருக்கலாம் என்றும் நீ கொள்ளலாம்!”

“சேச்சே! அது எப்படி? நான் எப்படிப்பட்டவர்க்குப் பிறந்தாலும் இன்றுவரை என் சுய அறிவால் படித்து, வளர்ந்து, என்னை நானே புரிந்து மேம்படுத்திக் கொண்டுள்ளேன். என் வாழ்வில் நான் பட்ட துன்பங்கள் என்னைத் தீவழியில் தள்ளவிடாமல் புடம் போட்ட தங்கமாக மாற்ற எனக்கு நான் உதவியாக இருந்துள்ளேன். என் அறிவு விழித்திருக்கும்வரை நான் வழி மாற மாட்டேன் அப்பா!” என்று சாட்டைச் சொடுக்காய் மனத்துள் பதில் தந்தவன், சுரங்கப்பாதையில் இருட்டைக் கிழித்துக் கொண்டு ஓடும் ரயிலும் என்னைப் போல் வேகமாக உள்ளதே என்று எண்ணவும் தவறவில்லை. தலையைக் கடிதத்தின் பக்கம் திருப்பினான்.

“என் தாயின் அறிவில்லா இஷ்டங்களுக்கு, அந்தக் காலத்தில் அந்தத்தாய் மிகுந்த அறிவாளியாகத் தெரிந்ததுடன் அவரது விருப்பங்கள் அறிவுப்பூர்வமாகவும் தெரிந்தனவே!) நான் இணங்கியதால் என் முதல் மனைவி ரஞ்சிதாவை, உன் தாயை உயிருடன் இழந்தேன். அவளை நாயாய் நடத்தி என் அதிகாரப் பேய்க்கு இரையாக்க விரும்பினேன். என் தாயின் மனநிலையைத் திருத்த முடியாது, அவரது கைப்பாவையாய் இருக்க முயன்றதன் விளைவு, குடும்பம் பிரிந்தது. ஏழைக் குடும்பத்திலிருந்து கரையேறலாம் என என்னிடம் வந்தும் பயனில்லை என்று நினைத்தாள் போலும், ரஞ்சிதம். தொண்டு நிறுவனத்தில் சேரப்போவதாய் எழுதிவைத்துவிட்டு, தான் வந்த இடமான மலேசியாவுக்கே சென்றுவிட்டாள். அந்த உத்தமி. அந்த உத்தமி, உன்னையும் எனக்காக விட்டுவிட்டுச் சென்றாள்!”

“ஓ…காட்….இந்த மனிதர்கள் எப்போதும் இப்படித்தானா? என் விவரம் புரியாத வயதில் தாயை, தெய்வத்தை இழந்து என்னைத் தவிக்க விட்டுவிட்டார்களே! இதிலே பாராட்டு வேறு? ஒருவர் போனபின்புதான் அவரை உலகம் பாராட்டும் போலும்!” ஒரு நிமிடம் ஒரு நிமிடம் கவலையில் மனம் கலங்கியவன், மூக்கை வேகமாக உறிஞ்சினான். அத்துடன் தன் தாயைப் படத்தில் மட்டுமே பார்க்க வைத்துவிட்டு, தனக்கு ஏழு வயதாக இருக்கும்போது உயிர்விட்ட பாட்டியை மனம்தீரச் சபித்தான்.

“ஆண்டுகள் சில ஓடின. விருந்தொன்றில் சந்தித்த பிரபாவை, அவள் அறிவில் மயங்கிய நான் மணக்க விரும்பினேன். இந்தியா சென்று சம்பிரதாயக் கல்யாணம் செய்தோம். சிங்கப்பூரில் வீடு மாறினோம். புது இடத்தில் “நீ எங்கள் மகன்!” என்று கூறினோம். பெயர், மதம் தவிர, நண்பர்களையும் உறவினர்களையும் நான் மாற்றிக் கொண்டேன். உன் பள்ளியும் மாறியது”.

“ஓ! அப்படியா! ஏன் நாம ஜூரோங்கிலிருந்து தோ பாயோ வந்தோம்னு இப்பப் புரியுதப்பா! நிமிர்ந்து, எதிர்த்த இருக்கையைப் பார்த்தவனுக்கு, “தி நெக்ஸ்ட் ஸ்டேஷன் ஈஸ் மெரினா பே. பேசஞ்சர்ஸ் ப்ளீஸ் கோ அவுட் ஆஃப் தி ட்ரெய்ன் அண்ட் கெட் இன்டு த நார்த் பவுண்ட் ட்ரெய்ன்” என்ற அறிவிப்பு, அவன் எங்கு செல்கிறான் என்ற திக்கை அவனுக்குக் காட்டியது.

சற்று நேரத்தில் மெரினா பே வந்ததும் பெருவிரைவு ரயில்வண்டியின் உட்புறம், அவனுக்கு மக்கள் நடமாட்டம் அறவே நின்றுவிட்ட நின்றுவிட்ட சந்தைப்பகுதியாய்த் சந்தைப்பகுதியாய்த் தோன்றியது. கார்த்திக் தொடர்ந்து கடிதத்தில் பார்வையைப் பரவவிட, ஓட்டுநர் தம் கையில் சாவிக்கொத்துச் சலசலக்க வண்டியின் மறுமுனையை நோக்கி நடைபோட்டார்.

“பிரபா அம்மாவை ‘அம்மா’ என்று அழைக்கச் சொன்ன எனக்காக நீ, அதே போல் அழைத்ததையும் அதை அவள் விரும்பாததையும் நான் முதல் முதல் நாளில் இருந்தே அறிவேன். ஒரு மனிதர் நூற்றுக்கு நூறு உத்தமராக இருக்க முடியாது என்பதால் நான் கண்டுங்காணாமல் இருந்துவிட்டேன்” அப்பா கடிதத்தில் பேசினார்.

“யேஸ் அப்பா! நோபடி ஈஸ் பெர்ஃபெக்ட்!” என்பதை ஆமோதித்தவன் தன் மவுன வாசிப்பைத் தொடர்ந்தான்.

பிரபா அம்மா உன்னுடன் ஷாப்பிங், பள்ளி எனப் பல இடங்களுக்கும் நல்ல துணையாக வருவாள் என நினைத்தேன். அவள் அதைப்போலச் செய்தாள். எல்லாம் ஓரிரு மாதங்களுக்குத்தான். அரசல்புரசலாகக் குயிலி சிலவற்றைக் கூறினாள். பதிலுக்கு நான் அவளிடம், “குயிலி நீ என் குடும்பத்தைப் பத்தி ரொம்ப தெரிஞ்ச பொண்ணு. எனக்காக நீ என் மகனை நல்லாப் பாத்துக்க. மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடி’ என்பது என்பது எனக்கு நூத்துக்கு நூறு பொருந்தும்” என்று கூறினேன். அவளும் அதே போலச் செய்தாள்”

குயிலியை மனத்திரைக்குள் ‘என்லார்ஜ்’ செய்து பார்த்த கார்த்திக், ‘குயிலி யூ ஆர் ரியலி வெரி கிரேட்! கீப் இட் அப். தாங்க் யூ!” என்று தன் அழகிய ஆங்கிலத்தில் வாழ்த்தினான்.

அப்போது பெருவிரைவு ரயில் வண்டி, ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையம் வர, மக்கள் கதவு திறந்ததும் மடை திறந்த வெள்ளமாக ஓடிவந்து உட்கார இடம் தேடினர். ‘பந்திக்கு முந்து’ என்பதை இடத்துக்கு முந்து’ என மாற்றலாம் என்பதுபோல், முந்திய சாமர்த்திய சாலிகள் வெற்றி பெற்றனர். எனினும் தன் பக்கத்து இருக்கையில் இருந்த, நான்கு வயது போலத் தெரிந்த சிறுவன் தன் கடிதத்தை எட்டிப் பார்த்ததைத் தான் புரிந்து கொண்டாலும், அவனுக்குப் படிக்கத் தெரியாது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தன் வேலையைச் செய்தான் கார்த்திக்.

“பிரபா ஒரு வேளை தனது எதிர்காலப் பிள்ளைக்கு நீ எதிரியாக இருக்கக்கூடும் என்பதோலோ என்னவோ அதிகமாக முகம் கொடுத்துப் பேசவில்லை” என்றிருந்ததைப் பார்த்து, ‘இருக்கலாம்” என்று தனக்குள் கூறிக்கொண்டவன், ”ஆனால் சித்திரம் மற்றும் தையல் வேலைகளில் தான் மிகுந்த திறமைசாலி என்பதை அவர் தைத்த திரைத்துணிகள், பின்னிய ‘ரேண்டா’ துணிகள் மூலம் அடித்துக்கூறலாம்” என்றும் மனதாரப் பாராட்டினான். ‘ஒவ்வொருவரும் ஓர் அற்புதப் படைப்பாளியே’ என்பதை ஆமோதித்தான்.

அப்பா தன்னை ஒரு முதிர்ந்த மனிதராக மதித்து நடக்கிறார் என்பதைக் கடிதத்தின் மூலம் உணர்ந்த கார்த்திக், “பிரபா உன்னை போர்டிங் பள்ளியில் அதாவது தங்கிப் படிக்கும் ஆஸ்திரேலியப் பள்ளிக்கு அனுப்பச் சொன்னாள். குடும்பமே அங்கு குடிபெயரலாம் என்றாள். நல்ல பணியில் உள்ள என்னால் அங்கும் நன்கு செலவு செய்ய முடியும் என்றாள். என்னால் நான் வளர உதவிய இந்நாட்டைப் பிரிய முடியவில்லை. இதன் காரணமாக ஒருவிதப் ‘பனிப்போர்’ உண்டானது. அது தொடர்ந்து, முடிவில் வீட்டை விற்றுப் பணம் தருமாறு அவள் என்னைக் கேட்கும் நிலை வந்தது. ஒரு நாள் சண்டை வரும் அளவுக்கு எங்களுக்குள் விவாதம் பெரிதானதால் அந்த ஐந்து வருட தாம்பத்தியம், வாசமில்லாத காட்டுப்பூ போல வாழ்விழந்தது” என்று எழுதியவர், ”இதுதான் விதியோ?” என்றும் கேட்டிருந்தார்.

கார்த்திக், தானும் அதையே தனக்குள் திருப்பிக் கேட்டபடி நிமிர்ந்தபோது, வண்டி இன்னும் பிஷானை அடையவில்லை என்பதை அது சுரங்கப்பாதையில் ஓடுவதையும் எதிரில் தன் முகம் தெளிவாகத் தெரிவதையும் வைத்து முடிவுசெய்தான். பிஷான் வந்தால் வெளிச்சம் தெரியுமல்லவா?

“சட்டப்படி விவாகரத்துப் பெற இரண்டாண்டுகள் தம்பதிகள் பிரிந்து இருப்பது ஒரு நிலை என்பதால் ஈராண்டுகள் முடியும் தருவாயில் எப்போது வேண்டுமானாலும் இறுதிக்கடிதம் எனக்கு வரக்கூடும். இதற்கிடையில் தஞ்சோங் பகார் ‘கோப்பி’க்கடை நிகழ்ச்சியும் உன் மனத்தில் பல கேள்விக்கணைகளை எழுப்பியிருக்கும். நான் எத்தனையாம் மனைவியுடன் வாழ்கிறேன் என்பதைக் கேட்டதும், அவர்கள் என் வாழ்வு பற்றித் தெரிந்து இருக்கின்றனர் என்றாலும் நான் பள்ளியில் ஒருமுறை திருடிவிட்டுப் பள்ளித்தலைவரால் பிடிபட்டு, வார ‘அசெம்பிளி’யில் மேடையில் நிற்கவைத்து அவமானப்பட்டதை நினைவில் வைத்திருந்து பரிகசித்ததை என்னால் மறக்கமுடியவில்லை”.

“வயிற்றுக்குச் சரியான உணவில்லாததால் நான் அப்படிச் செய்தேன் என்று கூற வெட்கப்பட்டு, ‘பிராண்ட்ட் குட்ஸ்’ வாங்குவதற்காகத் திருடினேன் என்று கூறினேன். நல்ல வேளை! பெரிய தண்டனை ஏதும் இல்லை. ஆனால் நான் திருந்தி, இன்று நல்ல வேலையில் இருப்பதை அறிந்தும் அவர்கள் அப்படிப் பேசி என்னை முள்ளால் குத்திக்காட்டுவது போல் உணர்ந்தேன். எனக்குப் பிறந்ததால் நல்லவனான அப்பாவி நீயும் அவமானப்பட்டதற்காக மன்னிப்புக் கேட்கிறேன்”.

ஒரு கணம் தன்னையறியாமல், “ச்சுச்சூ!” என்றவன் “எவ்ரிபடி ஹேஸ் ஹிஸ் ஆர் ஹெர் ஸெல்ஃப் ரெஸ்பெக்ட்!” என்று கட்டாயம் சுயமரியாதை ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்ற பொருள்படுமாறு ஆங்கிலத்தில் முனகியவன் கண்ணிமைக்கும் நேரத்தில் பக்கத்தில் பார்த்தான்; யாருமில்லை என்பதையறிந்து மகிழ்ந்தான்.

“கார்த்திக், இப்போது நீ என்னைப்பற்றி, என் கடந்தகாலம் பற்றி நன்கு தெரிந்திருப்பாய். எனக்கு ஓர் உதவி வேண்டும். நான் ஏனோ தனிமையால் அதிகம் அலைக்கழிக்கப்படுகிறேன். எனக்கு அன்புகாட்ட ஒரு துணை தேவைப்படுகிறது. நான் ஏதாவது ஏஜென்சி மூலம் துணை தேட தேட எண்ணுகிறேன். என் திமிர், பணபலம், படிப்பு எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒரு சராசரிக் கணவனாக இருந்து என் ஆத்ம உணர்வுக்காக ஒரு துணையுடன் வாழ விரும்புகிறேன். நீ அனுமதி தரமுடியுமா? உன்னை என் தெய்வமாய் நினைத்து வரம் கேட்கிறேன். நீ பெண்தோழி தேடும் வயதில் நான் இந்தக் கேள்வியைக் கேட்கலாமா எனக் கேட்காதே! தயவு செய்து என்னைப் புரிந்து கொள்! ப்ளீஸ்!

அன்பு அப்பா!”

கடிதம் முடிந்திருந்தது. நிமிர்ந்து பார்த்த கார்த்திக் பெருமூச்சு விட்டுத் தன் பெரிய பணியை, அதுதான் கடிதம் படிக்கும் பணியை முடித்ததாகச் சோம்பல் முறித்தான்.

வண்டி பிராடல் நிலையம் வந்ததும் முதியவர் ஒருவர் உள்ளே வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தார். அவரை அடுத்திருந்த இருக்கையில் கறுப்பாக ஏதோ கறை தென்பட, அங்கு நின்ற இளம்பெண் உட்ச காரலாமா வேண்டாமா எனத் தயங்க, தன் சட்டைப்பையிலிருந்த ‘டிஷ்யூ’ தாளில் ஒன்றை எடுத்துத் துடைத்துவிட்டு,

“நௌ இட்’ஸ் கிளீன். யூ கேன் ஸிட்” என்று கூறிய அந்தச் சீன முதியவரின் சமயோசித சமயோசித புத்தியும் உதவும் புத்தியும் கார்த்திக்கின் பதில் தரும் சிந்தனைக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டின. தாங்க் காட்டின. ‘தாங்க் யூ என்றபடி அந்த இளம்பெண்ணும் அங்கு உட்கார்ந்தாள்.

தன் வாழ்வில் தான் பல நேரங்களில் தாயில்லா ஒரே காரணத்துக்காகப் பலரிடம், பள்ளியில், வேறு இடங்களில் பட்ட பாட்டைப் பற்றி எண்ணிப் பற்றி எண்ணிப் பார்த்த கார்த்திக், தந்தை இரண்டாம் மனைவியை மணந்ததைப்பற்றிப் பிற்காலத்தில் புரிந்த நிலையில் பதின்மூன்று, பதினான்கு வயதுகளில் துடித்தது பற்றி, எனக்கொரு நல்ல ‘ரோல் மாடலா’க முன்மாதிரியாக இல்லாத அப்பா பற்றி எல்லாம் வருந்தி, கவலையும் கோபமும் பட்டாலும், “அவரும் மனிதர்தானே! என்னையும் ஒருவனாக மதித்துத் தன் பிழைகளை ஒப்புக்கொண்டு விட்டாரே! இந்த நிலையில் அவருக்கு அனுமதி மறுக்க நான் என்ன கடவுளா? அல்லது அவரை விடப் பெரியவரா? நாளை எனக்கு ஒரு வாழ்வை நான் அமைத்துக்கொள்ள அன்பான அப்பா, இளமை, அறிவு எல்லாம் எனக்கு இருக்கும்போது, அப்பாவுக்கு அவை எல்லாம் ஒருசேர இல்லையே! இந்த நிலையில் நான் ஏன் அவர் சுயமரியாதையைக் காக்க முயலக்கூடாது?” எனக் கேள்வி ஒன்றைத் தனக்குள் கேட்டான்.

“அடிக்கடி விவாகரத்துச் செய்பவர்கள் மீண்டும் மணம் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் தொட்டதற்கெல்லாம் விவாகரத்தே முடிவு என்று நீதிமன்றத்துக்கு ஓடிவிடுவார்கள்” என்று முன்பெல்லாம் மனத்தில் நினைத்தவன், தான் அப்படி எண்ணிடத் தன் அப்பாதான் முக்கியக் காரணம் என்றும் உணர்ந்தான். தன்னிடமிருந்த பேனாவால் அப்பாவின் கடித முடிவில் என்ன எழுதலாம்? இப்படியா? அப்படியா? என்று எண்ணிப் பதில் எழுத முனைந்தவன் நிமிர்ந்து பார்த்தபோது, வண்டி பிஷானை அடைந்து கிளம்புவது தெரிந்தது. பெருமழை பெய்து கொண்டிருந்ததால் அதன் மேலே விழுந்த மழைத்துளிகள் அடுத்த சில நிமிடங்களில் மூடியிருந்த சிறு ரயில்பாதையில் வண்டி நுழைந்தபோது உதிர்த்து விழுந்த கண்ணாடி மணிகளாக, ஜவ்வரிசிகளாகச் சன்னலில் ஓடிய ஒரு காட்சியைப் பார்த்தான்; மகிழ்ந்தான்.

காட்சி மாறியதும் அமைதியாக நிர்மலமான வெளிச்சத்தில் ஓடிக்கொண்டிருந்தது ரயில். அவன் மனமும் இப்போது அப்படித்தான். ‘சரி’ என்ற பதிலை அதுவும் ரயிலும் அமைதியாய்த் தெரிவித்தன.

– சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் தேசியக் கலைகள் மன்ற ஏற்பாட்டில் 1997-இல் நடைபெற்ற SPH-NAC சிறுகதை எழுதும் போட்டியில் தமிழ்ப் பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற கதை.

– தமிழ் முரசு 21.9.1997, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *