கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 13,163 
 
 

இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்தக் கடற்கரைச் சாலை வேறு மாதிரியானது. அரசலாற்றங்கரையிருந்து கிழக்காக இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்காக நீளும். இடதுபக்கம் நெடுக அருகருகே அடப்ப மரங்கள் அணிவகுந்து நிற்கும். கண்ணாடிக் கவசத்தின் அடிப்பகுதிக்குள் கருப்பாக அழுக்கு மண்டி கிடக்கும் நகராட்சிக்குழல் விளக்குத் தூண்கள். கப்பிக்கற்கள் துருத்திக் கொண்டு நிற்கும் சமனற்ற தார்ச்சாலை. வலைகளுடன் நடமாடும் மீனவர்கள்
தவிர கடற்கரைக்கு வந்துபோவவோர் எண்ணிக்கையும் குறைவுதான். பட்டம் விடுவதும் கடலில் விளையாடுவதுமாடீநு திரியும் எங்களைப் போன்ற சின்னப் பையன்களே அதிகமாக தென்படுவர்.

இப்போதைய சாலை முற்றிலும் முகம் மாறிவிட்டது. அரசலாற்று மதகடி முகப்பில் பெரிதாக ஒரு ரிஃப்ளெக்டர் பெயர்ப் பலகை வளைவு. ‘காரைக்கால் கடற்கரை உங்களை வரவேற்கிறது’ என பச்சைநிறத்தில் அமர்க்களமாடீநு வரவேற்கிறது. கருப்பு பெயிண்டை கொட்டியது போன்ற வழுவழு தார்ச்சாலை. பூக்களின் உருவங்கள் பொறித்த நவீன சதுரக் கற்கள் பதிக்கப்பட்ட அழகான
ஃபிளாட்பாரம். நெருக்கமான இடைவெளியில் ஆரஞ்சு வெளிச்சம் பாடீநுச்சும் நியான் விளக்குத் தூண்கள். அடப்ப மரங்களைச் சுற்றி வட்டவடிவ சிமிண்ட் மேடைகள். ஃபிளாட்பாரத்தில் வீற்றிருக்கும் விசாலாமான ஸ்டீல் பெஞ்சுகள். கட்டுமரங்களையும் படகுகளையும் சுமந்தபடி கடலில் சென்று கலக்கும் அரசலாறு. ஆறும், சாலையும் கடலை நோக்கி கை கோர்த்து போவதுபோல் தோன்றும் அந்த அழகு மட்டும் பழமை மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது.

வாசுவுடன் நான் உட்கார்ந்து இருக்கும் இந்த முதிய அடப்ப மரத்தடி சாலையை விட்டு சற்றே உள்ளடங்கியது. எங்கள் நட்பு வட்டம் எப்போதும் இங்கேதான் கூடும். வாடிநவு இழுத்த திசைகளில் சிதறிய நண்பர்கள் போக, வாசு மட்டும் மண்ணின் மைந்தனாக இங்கேயே வசிக்கிறான். நான் சென்னையில்.

கடலின் அலை ஓசை ஒரு ராட்சச தம்புரா இசைபோல் வழிந்து கொண்டிருந்தது. கடற்கரைக்கு குடும்ப சகிதம் வந்தவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கடல் பார்த்து அலைகளில் கால் நனைத்து விளையாடிய, குழந்தைகளின் குதூகலக் குரல்கள் காற்றில் மிதந்து வந்தன. எத்தனை ஆண்டுகளாக குழந்தைகள் கடலை ரசித்துக் கொண்டிருக்கின்றன. கடல், குழந்தைகளை ரசித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் சந்தோஷக் குரல்களையும் பெரியவர்களின் துயரமான முகங்களையும் எண்ணிக்கையற்ற காற்றின் பக்கங்களில் கடற்கரைகள் பதிவு செடீநுது கொண்டே இருக்குமோ? ஒருவகையில் இது அலைகளின் அலகிலா விளையாட்டுதானோ?

தூரத்து நியான் விளக்கின் மங்கிய வெளிச்சம் மட்டுமே எங்களை சூடிநந்திருந்தது. பாட்டிலில் பாதி அளவு இருந்த விஸ்கியை வாசு கிளாஸ்களில் ஊற்றி சோடாவை நிரப்பினான். இருவரும் அருந்தினோம். நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் விஸ்கியைப் பின்தொடர்ந்தன. வாசு ஒரு சிகரெட்டை எடுத்தான். சுழன்று வீசி அடிக்கும் கடற்காற்றில் ஒரே தீக்குச்சியில், கைகளைச் சட்டென குவித்து அனாயசமாக பற்ற வைத்தான். அந்த லாவகம் அன்று போலவே இன்றும் எனக்கு வியப்பாகவே
இருக்கிறது. புகையை ஆசுவாசமாக உள்ளிழுத்து மெல்லமெல்ல வெளியேற்றினான்.

சிகரெட்டை உள்ளிழுக்கும்போது சற்றே கூடும் நெருப்பின் வெளிச்சத்தில் அவனுடைய அடர்ந்த மீசையும் காதோர கிருதாவும் தெரிந்தன. வெள்ளை முடிகளாக அவற்றில் ஊருடுவி இருந்த சிறு நரையும் நன்றாகவே தெரிந்தது. புகை மூட்டத்தில் தெரிந்த அவன் முகத்தையும் அடப்ப மரத்தையும் சற்று நேரம் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களின் பதின்பருவம் தொடங்கி,
இருபதாண்டுகால நட்பின் சாட்சியாக நிற்கிறது இந்த மரம். இடங்களின் மீதும் மனிதர்கள் மீதும் காலமாற்றம் தீட்டும் மௌனச் சித்திரங்களை அசை போடத் தொடங்கியது மனசு.

‘‘என்னடா, காரைக்கால் இப்படி முகம் மாறிடிச்சி. . . அடையாளமே தெரியலையே!’’ என்றேன்.

சிறிது நேரம் வாசு பேசவில்லை. அதன்பிறகு அவன் இதடிநகளிலிருந்து ஒரு புன்னகை வெளிவந்தது.

‘‘நம்ம முகம் மாறிகிட்டே இருக்கும்போது இடங்கள் மட்டும் அப்படியேவா இருக்கும்’’ என்றான்.

‘‘மதகடி மூலையில அப்ப ஒரு பாட்டி ரால் வடை சுடுமே ஞாபகம் இருக்கா?’’

‘‘ம்ஹும், பாட்டியோட ரால் வடையும் போடீநு சேந்திடுச்சி. நான்கூட வீட்டுல ஒரு தடவை செஞ்சி பாத்தேன். அந்த டேஸ்ட் வரல. அதுதான் கைப் பக்குவம்.!’’

‘‘நம்ம இளமைக் காலத்து லேண்ட்மார்க் எதுவுமே இப்ப காரைக்கால்ல இல்லியே!’’

‘‘ம், ஜனதா கஃபே, நெடீநு ரவா தோசை, துளசி டீக் கடை பூரி, கோர்ணமால் நன்னாரி சர்பத், நீலக்கிடங்கு தெரு பொன்னுசாமி பார், டைமண்ட் தியேட்டர், ரெக்ஸ் தியேட்டர், தஞ்சாவூரான் ஹோட்டல் முட்டை பரோட்டா, எப்பவும் இளையராஜா பாட்டு பாடும் ஆறுமுகம் ஸ்வீட் ஸ்டால் எல்லாம் போயே போடீநுச்சுடா!’’ – அவனுடைய கரகரப்பான குரலில் இழையோடியது ஒரு நெடிய இழப்பின் வலி.

தஞ்சாவூர் மிலிட்டரி ஹோட்டல் பழைய பஸ் ஸ்டாண்டின் தெற்கு பக்க வாசலில் இருந்தது. ஒரு பெரிய கூரை கொட்டகை வேடீநுந்த கடையில் எப்போதும் எண்ணைப் பிசுக்கு நீங்காத மரபெஞ்சுகள் ஏbழுட்டு கிடக்கும். ஆம்லெட், ஆஃப்பாயில், ரீஃப்பாயில், வீச்சு பரோட்டா, முட்டை பரோட்டா, முட்டை லாப்பை
என சுவையான அசைவ உணவுகளுக்கு பெயர் பெற்ற இடம். என் பிறப்பின் சைவத்தை பலி கொண்ட அசைவக் களமும் அதுதான். எட்டாம் வகுப்பு என்.சி.சி. பணத்தில் செட்டியார் வீட்டு பாலுதான் முதன்முதலில் முட்டை பரோட்டாவை பழக்கப்படுத்தினான். முள் எடுத்து முதன்முதலாக மீன் சாப்பிட கற்று தந்தவன் வாசு. ‘டக டக டக் கட் டக டக’ வென பஸ் ஸ்டாண்டையே அதிர வைக்கும் தஞ்சாவூர் ஹோட்டலின் முட்டை பரோட்டா சத்தம் இப்போதுகூட என் காதுகளில் ஒலிக்கிறது.

ஒரு பழைய நினைவின் பக்கம் புரட்டப்படும்போது அதன் தொடர்புடைய எண்ணிடலங்கா பல பக்கங்களும் சடசடவெனப் புரள்வதை தவிர்க்க முடியவில்லை. ‘மனித வாடிநவின் அதிகபட்சமான சந்தோஷம் என்பது கடந்த காலத்தை அசை போடுவதுதான்!’ என்று எங்கோ எப்போதோ படித்தது,
நினைவுக்கு வருகிறது.

பஸ் ஸ்டாண்டின் தெற்குவாசல் முழுவதும் பரோட்டா அடிக்கும் சத்தத்தின் ஆக்கிரமிப்பு என்றால் வடக்கு வாசலோ வேறு மாதிரி. அங்கு எப்போதும் பெருக்கெடுத்தபடி ஓடிக்கொண்டே இருக்கும் இளையராஜாவின் இசைநதி! வடக்கு வாசலில் வண்ண விளக்குகளால் களைகட்டும் ஆறுமுகம் ஸ்வீட் ஸ்டாலின் இரண்டு பக்க முகப்பிலும் ஆள் உயர ஸ்பீக்கர்கள் நிற்கும். அவைகளில் எப்போதும்
இளையராஜாவின் பாடல்கள் பீறிட்டபடியே இருக்கும். சூடிநந்து நின்று பாடல்களை ரசித்தபடி, சுடச்சுட அல்வாவும் வெங்காய பகோடாவும் தின்று கொண்டே இருப்பார்கள். இளையராஜாவின் பாடல்களால் அந்தக் கடையின் பட்சணங்கள் சுவை கூடியதோ என்ற சந்தேகம் கூட எழுந்ததுண்டு.

அன்னகிளி, பதினாறு வயதினிலே, சிட்டுக்குருவி, கிழக்கே போகும் ரயில், முள்ளும்மலரும், ஜானி, அழியாத கோலங்கள் போன்ற படங்களின் பாடல்களை எங்கு கேட்டாலும், இப்போதும் மனசுக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறது ஆறுமுகம் ஸ்வீட் ஸ்டால் அல்லது மனசு ஓட்டமாடீநு ஓடிப்போடீநு நிற்கிறது
காரைக்காலின் பழைய பஸ் ஸ்டாண்ட்டில். ஒருவகையில் எங்களின் இளமைப்பிராயம் முழுவதும் சந்தோஷமான அல்லது துயரமான எல்லா தருணங்களிலும் இளையராஜாவின் பாடல்கள் நிழல்போலவே தொடர்ந்து வந்திருக்கிறது.

‘‘நீ பழைய விஷயங்களைப் பத்தி பேசுனதும், எனக்கு ஒரு முக்கியமான விஷயம் ஞாபகத்துக்கு வருதுடா! . . .’’ என்று என் எண்ணங்களைக் கலைத்தான் வாசு.

‘‘என்ன?’’ என்றேன்.

‘‘இப்ப, நாம ஒரு நபர பாக்கப் போறோம். அவர் நம்ம பள்ளிக்கூட வாடிநக்கையில ஒரு முக்கியமான மனிதர். வேற எதுவும் கேக்காத. மற்றவை நேரில்!’’

வாசு குறிப்பிட்ட பள்ளி வாடிநக்கை என்பது இரண்டு பள்ளிக்கூடங்களைக் குறிக்கும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்ற தளத்தெரு ஆரம்பப் பள்ளி, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்ற கோவில்பத்து உயர்நிலைப்பள்ளி. இவைகளில் எத்தனையோ ஆசிரியர்கள். எத்தனையோ மாணவர்கள். எவ்வளவோ அனுபவங்கள். இவற்றில் வாசு குறிப்பிடும் அந்த மனிதரை நான் எப்படி தேடுவேன்?

தூரத்து கடல் அலைகளின் சத்தம் மட்டும் எங்களைச் சூடிநந்திருந்தது. அதற்குமேல் இருவருமே பேசவில்லை. நீலநிற கால்சட்டையும் வெள்ளை மேல் சட்டையும் போட்டுக் கொண்டு தளத்தெருவின் தொடக்கப் பள்ளிக்கு போகத் தொடங்கினேன் எனக்குள். . .

புளிய மரங்கள் வாதா மரங்களுக்கிடையே இருந்தது தொடக்கப்பள்ளி. மஞ்சள் வண்ண பழைய கட்டிடத்தில் இரண்டு வகுப்பறைகளும் தலைமை ஆசிரியர் அலுவலகமும் இருந்தன. தென்னை ஓலை வேடீநுந்த கூரைக் கொட்டகைகளில் மற்ற மூன்று வகுப்புகள். அந்த வகுப்பறைகளில் குறுக்கு நெடுக்காக எக்ஸ் வடிவத்தில் அடிக்கப்பட்ட மூங்கில் பிளாச்சுகளே சுவர்கள். வாத்தியார் நடத்தும்
பாடத்தை விட பெரும்பான்மை நேரம், அந்த மூங்கில் பிளாச்சுத் தடுப்பு வழியே நாங்கள் வெளியேதான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம்.

சிசேல் ஃபெர்ணான்டஸ்தான் ஹெட்மாஸ்டர். அந்தப் பேரைச் சொல்லி ஆசிரியர், மாணவர்கள் யாரும் அவரை அழைத்ததே இல்லை. பெரிய மிஸே அல்லது மூணாங்கிளாஸ் மிஸே என்றுதான், எல்லோரும் சொல்வார்கள். (மிஸே என்றால் பிரெஞ்ச் மொழியில் சார் என அர்த்தம் என்பதை அப்பள்ளியிலிருந்து வெளியேறிய பின்தான் நான் அறிந்தேன்!) தலைமையாசிரியராகவும் மூன்றாம் வகுப்புக்கு
ஆசிரியராகவும் இருந்ததால் மூணாங்கிளாஸ் மிஸே. ஐந்தாம் வகுப்பை எட்டியபோது அவருக்கு ‘தொளதொளா பேண்டு!’ என நாங்கள் பட்டப்பெயர் வைத்தோம். வெளிர் நீலநிறத்தில் தொளதொளவென்று பைஜாமா அதே நிறத்தில் முழுக்கை சட்டை. சட்டையின் கைப்பகுதி, கைகளுக்கு வெளியே கோயில் பந்தல் தொம்பைகள் போலத் தொங்கும். குள்ளமான உருவத்தில், அந்த டிரேட்மார்க் ஆடையில் அவர் கொடி வணக்கம் செடீநுது சல்யூட் அடிப்பது என் கண்ணிலேயே
நிற்கிறது. கடவுள் நம்மோடு, காக்கைப் பள்ளிக்கூடம் என்ற நூல்களை நூலகத்திலிருந்து எடுத்துப் படிக்க வற்புறுத்திக் கொண்டே இருப்பார். அவருக்கு அப்போதே ஐம்பது வயதிருக்கும். எனவே இன்று சந்திக்கப் போகும் நபர், அவராக இருக்க வாடீநுப்பில்லை.

ஒன்றாம் வகுப்பில் எனது முதல் ஆசிரியர் ‘வெத்தலபாக்கு மிஸே’ என எல்லோரும் செல்லமாக அழைக்கும் பாலசுப்ரமணியம் சார். மாடு அசைபோடுவது போல் எப்போதும் அவர் வாடீநுக்குள் செவசெவ என்று வெற்றிலைப்பாக்கு அரைபட்டுக் கொண்டே இருக்கும். மேஜையிலேயே வாடீநு கொப்பளிக்க தண்ணீர் செம்பு வைத்திருப்பார். பள்ளிக்கூடத்துக்குப் போன புதிதில், ஒரு சமயம்
வகுப்பில் நான் ஏதோ பேசிக் கொண்டிருக்க, பிரம்பால் அடித்தார். அடி பொறுக்க முடியாமல் நான் கோபமாகி ‘ஓ’வில் தொடங்கி ‘ழி’யில் முடியும் எங்கள் வட்டாரத்தின் பிரபலமான கெட்டவார்த்தையைப் பிரயோகித்தபடி அவரைக் கை நீட்டி திட்டிவிட்டு வேகமாக வகுப்பிலிருந்து வெளியேறி வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன். மறுநாள் என்னை தாத்தா சமாதானம் செடீநுது,
பள்ளிக்கூடம் அழைத்துப் போடீநு அவரிடம் பக்குவமாக மன்னிப்புக் கேட்க வைத்தது. ஏழெட்டு வருடங்களுக்குப்பின் வெத்தலப் பாக்கு மிஸே தவறிவிட்டார். யதேச்சையாக ஊருக்கு வந்த நான் அவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அதனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சந்திக்கப் போகும் நபர் அவராகவும் இருக்க முடியாது.

அந்நாளில் ‘சீக்கிரம் மீசை முளைக்க வேண்டும். பெரிய பையன் ஆகவேண்டும் ’ என்ற ஆசையை எனக்குள் வீரியமாக விதைக்கச் செடீநுதது பன்னீர்செல்வம் சாரின் மீசைதான். உயரமாக சிவப்பாக, அடர்ந்த மீசையில் நடிகர் முத்துராமன் மாதிரி இருப்பார். அளவான உடலில் டைட்டான முழுக்கை சட்டையை இன்சர்ட் செடீநுதிருப்பார். அவருடைய ஆளுமையின் கம்பீரம், சிரித்த முகத்துடன் மிளிரும்.
தமிடிநப்பாடத்துடன் சினிமா பாட்டுக்களைப் பாடச் சொல்லுவார். ஒருமுறை, ‘நேற்று இன்று நாளை’ திரைப்படத்தின் ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ பாடல் யாருக்குத் தெரியும் எனக் கேட்டபோது முந்திக் கொண்டு கைதூக்கியவன் காசாக்குடி நாராயணசாமி. சாரும் அவனைப் பாடச் சொன்னார். நாங்கள் எல்லோரு ம் பொறாமைப் படும்படியாக அவ்வளவு அருமையாக அவன் பாடி முடித்தான்.

பன்னீர்செல்வம் சார் மிக மென்மையாக அவனிடம் கேட்டார்: ‘‘உனக்கு பாடம் படிக்கும்போது மட்டும் வாடீநு திக்குது. பாட்டு பாடும்போது எந்த தங்குதடையும் இல்லியே, அது எப்படிடா?’’ பரிதாபமாக அவன் ‘‘தெரீல சார்!’’ என்றான். அந்தக்கேள்விக்கு இன்றுவரைகூட விடை தெரியவில்லை.

அடுத்தவர் ‘ஏலக்கா பாயசம்’ என்று எங்களால் பட்டப்பெயர் சூட்டப்பட்ட கைலாசநாதன் சார். சரித்திர பூகோளத்தை அதிகபட்சமாக எவ்வளவு அறுக்க முடியுமோ அவ்வளவு அறுப்பார். அவர் வகுப்பு என்றால் முக்கால்வாசிப் பேருக்கு தூக்கம் வரம் கொடுத்தது போல் வரும். ராஜசேகர் சார் மிக அமைதியான சுபாவம். மாணவர்களை அடிப்பது இல்லை. மிக மெதுவாக சிரித்த முகத்துடன் பேசுவார்.
இன்று நான் சந்திக்கப் போகும் மனிதர் இவர்களில் யாராக இருக்கும்.?

அப்புறம் ஆரம்பித்தது கோவில்பத்து பள்ளி வாடிநக்கை. இரண்டு கிலோ மீட்டர் மெயின்ரோட்டில் நடக்க வேண்டும். ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய விசாலமான பள்ளி வளாகம். புதிய கட்டிடங்கள். நடுவாந்தரமாக பெரிய விளையாட்டு மைதானம்.

ஆறாம் வகுப்பு ‘சி’ பிரிவில் நான் சேர்க்கப்பட்டேன். வகுப்பாசிரியர் கிரிஜா டீச்சர். நடுத்தரமான உயரம். சற்று பூசினாற் போன்ற உடல்வாகு. சிவப்பு நிறம். வார்த்தைகளும் சிரிப்பும் இழைந்து வெளிவருவது அழகாக இருக்கும். தும்பைப் பூக்களை அள்ளி இரைத்து போல வசீகரமான முகம். நீண்ட கூந்தலில் எப்போதும் மணக்கும் அடர்ந்த மல்லிகைச் சரம். சிறு வெள்ளிக் கீற்று மாதிரி இலேசாக இடப்பட்டிருக்கும் விபூதி, அந்த அழகை மேலும் கூட்டுவது போலிருக்கும். பெண் என்ற ஆகிருதி ஒரு தேவதையோ என எனக்குள் தோன்றிய எண்ணம் அநேகமாக கிரிஜா டீச்சரிடமிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். ‘‘செல்லங்களா! செல்லங்களா!’’ என மாணவர்களை அன்புடன் அழைக்கும் வாஞ்சை வேறு எந்த ஆசிரியரிடத்திலும் நான் காணாதது. டீச்சர் என் பெயர் சொல்லி அழைக்கும் ஒவ்வொரு தடவையும் ஏதோ இனம்புரியாத சந்தோஷத்தில் என் மனசு புரளும். கோவில்பத்து பள்ளிக்கூடம் எனக்கு அதனாலேயே மிகவும் பிடித்துப் போனது.

இன்று நான் சந்திக்கப் போவது கிரிஜா டீச்சராக இருக்குமோ? இருந்தால் அதைவிட சந்தோஷம் இருக்க முடியுமா? ஆனால், அவருடைய தோற்றத்தில் முதுமை முகாமிட்டிருக்குமோ? தலைநரையும் முகச்சுருக்கமும் கூடியிருக்குமோ? ‘அன்று பார்த்ததைப் போலவே இன்றும் கிரிஜா டீச்சர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்ற ஆதங்கம் எனக்குள் எழுந்தது.

கிரிஜா டீ ச்சருக்கு நேர்எதிராக ஒரு ஆசிரியர் என் வகுப்புக்கு வரப்போகிறார் என்பதை நான் நினைக்கவே இல்லை. அவர் கணக்கு வாத்தியார் ஜோசப் செல்வராஜ். குள்ளமான பருமனான உருவம். நன்கு புடைத்த விரல்களைக் கொண்ட கைகளில் எப்போதும் பிரம்பிருக்கும். மைதானத்தில் அவர் நடந்து போனாலே, ம hணவர்கள் ஒதுங்கிப் போவார்கள். அந்தளவுக்கு ஒட்டு மொத்தப்
பள்ளிக்குமே அவர்மேல் பயம். காரணம் கணக்குப் பாடத்தில் பலஹீனமான மாணவர்களுக்கு அவர் தரும் கடும் தண்டனை. நீள்சதுர பெரிய சைஸ் மேஜையில் ஃபெயிலாகும் மாணவர்களை வரிசையாகக் குப்புறப் படுக்கச் செடீநுவார். பாஸான மாணவர்கள் நான்கு பேர், கைகளையும் கால்களையும் பிடித்துக் கொள்வார்கள். குதிகாலில் தொடங்கி ‘‘இனிமே ஃபெயிலாவியா?’’ என்று பலவித மாடுலேஷன்களில் உரக்க உச்சரித்தபடி கெண்டைக்கால், தொடை, புட்டம், முதுகு என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவார். கூடிக்கொண்டே போகும் பிரம்படியின் கனத்தில் வலி தாங்காமல் துடிக்கும் மாணவன் ‘‘இல்ல சார்!’’ ‘‘ஐடீநுயோ!’’ என்ற வார்த்தைகளில் சித்திரவதைப்படுவதை பார்க்கச் சகிக்காது.

அந்தக் கூக்குரல் பாம்பின் வாயில் மாட்டிக் கொண்ட தவளையுடையது போலிருக்கும். பி.எஸ்.வீரப்பாவும் நம்பியாரும் ஒன்றிணைந்து ஜோசப் சாருக்குள் புகுந்து விட்டார்களோ என்று தோன்றும். நானும் ஓரிருமுறை அந்த சித்திரவதையில் சிக்கியிருக்கிறேன். அதனாலேயே கணக்குப் பாடத்தின்மேல் இன்றளவும் எனக்கு ஒரு காரணமற்ற வெறுப்பு மேலோங்கி இ ருக்கிறது போலும்.
குழந்தைக் கதைகளில் வரும் பனைமர உயர, பயங்கரப் பல்முளைத்த, ராட்சசப் பூதத்தின் முகத்துடன் ஜோப் சார் வருவார். என்னை ஒரு கையால் தூக்கி முகத்துக்கு நேரே வைத்துக் கொண்டு பெருங்குரலில் சிரிப்பார். இப்படிப்பட்ட கனவுகள் பல காலம் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன. அவருடைய பருத்த கைகளில் சுழன்று சுழன்று விளையாடும் பிரம்பு க்ளோஸ்-அப் காட்சித் துணுக்குகளாக தோன்றுவதும் தொடர்ந்தது.

தமிழடீநுயா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட சுப்பையா, தவறி விட்டதாக இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாசுதான் தெரிவித்தான். ‘‘அறிவியல் இல்லேன்னா இன்னைக்கு நாம் லைட் வெளிச்சத்துல படிக்க முடியாது. ரேடியோவுல பாட்டு கேக்க முடியாது. ஃபேன்ல காத்து வாங்க முடியாது!’’ என எளிமையாக விஞ்ஞானப்பாடம் எடுத்த டோரிக்கண்ணு சார் என்ற பட்டப் பெயர்
கொண்ட ராதாகிருஷ்ணன் சார் ரொம்ப சாது. அவர் வகுப்பு என்றால் கண்ணாடி டீச்சர் நிச்சயம் எங்கள் வகுப்புக்கு வந்துவிடுவார். வகுப்புக்கு வெளியே அவர்கள் நீண்ட நேரம் சிரித்துப் பேசிக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் சர்வ சுதந்திரமாக வகுப்பில் கொட்டமடிப்போம். ‘கணபதி பீட்டி’ என்றழைக்கப்பட்ட உடற்கூறு ஆசிரியர் கணபதி தங்கப் பதக்கம் சிவாஜியை நினைவு படுத்துவார். நோஞ்சான் மாணவர்களை நையப் புடைக்கும் அவரையும் எனக்குப் பிடிக்காது. இவர்கள்தான்
சட்டென எனக்கு நினைவில் வரும் ஆசிரியப் பெருந்தகைகள். இவர்களில் யாரை இன்று சந்திக்கப் போகிறேன்? ஆவலை என்னால் அடக்கவே முடியவில்லை. . .

பைக்கை பிரேக் போட்டு நிறுத்திய போதுதான் நாங்கள் கடற்கரையிலிருந்து வெளியேறி விட்டோம் என்பது உறைத்தது. அது எந்த இடம் என்பதை இருட்டில் என்னால் யூகிக்க முடியவில்லை. அது வயல்கரை வீதி என்பதை சற்றுநேரத்தில் உணர்ந்தேன். அந்த இடம் குறித்த வேறெந்த பிரக்ஞையும் எனக்கு எழவில்லை.

நான் பைக்கிலிருந்து இறங்கிக் கொண்டேன். ‘உள்ளே வா!’ என்றபடி வாசு ஒரு வீட்டுக்குள் நுழைந்தான்.

அது, ஃபிரெஞ்சு கால கட்டிட பாணியிலிருந்த ஒரு பழைய மாடி வீடு. வாசுவைப் பின்தொடர்ந்தேன்.

வீட்டுக்குள் மங்கிய விளக்கொளியே இருந்தது. ‘‘சார் வணக்கம், வாசு வந்திருக்கேன்! என்றான் வாசு. ‘‘வாடா!’’ என்று பதிலிறுத்த குரலை எங்கோ கேட்டதுபோல் இருந்தது. ஆனால் சட்டென அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த உருவம் ஒரு ஈ.ஸி. சேரில் சாடீநுந்திருந்தது.

‘‘சார். . . சிக்ஸ்த் ‘சி’ல படிச்சானே செல்வமுத்து. . . உங்களப் பாக்க வந்திருக்கான்!’’

‘‘அடடே தளத்தெருவுல இருந்து வருவானே அவனா? செவப்பா ஒல்லியா. . . கணக்குல ரொம்ப வீக்காச்சே. . .!’’ என்று அவர் சொன்னதை வைத்து யாரென கண்டு பிடித்தேன்.

ஜோசப் சார்!

கூர்ந்து கவனித்தேன். அவருக்கு பார்வை மங்கியிருக்க வேண்டும். அந்த பருத்த சரீரம் ஒல்லியாக சுருங்கிப் போயிருந்தது. பழைய பிரம்படி பூதம் எனக்குள் ஒருமுறை வந்து போனது!

‘‘நல்லாயிருக்கியாப்பா?’’

‘‘இருக்கேன் சார்!’’

‘‘எனக்கு கண்ணு போச்சி. கையி போச்சி. வயசாயிட்டுடா!’’ என்றவரின் கைகளை அப்போதுதான் கவனித்தேன். வலது கை பக்கவாதத்தால் சூம்பித் தளர்ந்திருந்தது. அந்தக் கையைப் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகி விட்டது!

ஆறாம் வகுப்பு ‘சி’ யில் முதல் நாள் கணக்குப் பாடம் எடுக்க வந்த ஜோசப் சார், பாடும் தொனியில், கணக்கு பற்றி ஒரு பொன்மொழி சொன்னார்.

‘‘கடவுள் போடுற கணக்கு
மனுஷன்!
மனுஷன் போடுற கணக்கு
வாடிநக்கை!
வாடிநக்கை போடுற கணக்கு
வயசு!
இதுக்குள்ளாறவே கூட்டல்
கழித்தல், பெருக்கல், வகுத்தல்
எல்லாம் இருக்கு. அவ்வளவுதாண்டா!’’

அப்போது, கணக்கு குறித்து அவர் சொன்ன அந்தச் சூத்திரம் எனக்குப் புரியவே இல்லை.

இப்போது லேசாக புரிவதுபோல் இருந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *