கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 4,968 
 
 

(1982 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கங்கா ஸ்டீல் ஃபாக்டரியின் ‘மெயின் கேட்டை’ வாட்ச்மேன் ஓடிவந்து திறந்து சல்யூட் அடித்து நின்றான். ஒரு வெள்ளை நிற ஃபாரின் கார் அன்னம் போல் உள்ளே நுழைந்து ஃபாக்டரியின் ‘மானேஜிங் டைரக்டர்’ அறை வாசலில் ஒரு குலுங்குக் குலுங்கி நின்றது.

காரிலிருந்து கங்கா இறங்கினாள். வயது முப்பதிலிருந்து நாற்பதுவரை எடை போட முடியாத தோற்றம், முகத்திலே உணர்ச்சிகள் பிரதிபலிக்காத ஒரு இருக்கம். கங்கா ஸ்டீல் ஃபாக்டரியின் உரிமையாளர் என்ற அந்தஸ்துக்குப் பொருந்தாத சாதாரண உடை.

கங்கா மூக்குக் கண்ணாடியை ஒரு முறை விரல் நுனியில் சரி செய்து கொண்டாள். பார்வையில் கூர்மை இருந்தாலும் ஏதோ ஒரு சோகம் நிழலாக மறைந்திருந்தது. கங்காவின் பார்வை எதேச்சையாக பாக்டரியின் வெளிவராந்தாவில் ஒரு முறை சுழன்று சைக்கிள் ஸ்டாண்டில் ஒரு கணம் பதிந்தது.

அதன் காரணம் சைக்கிள் ஸ்டேண்ட் கீப்பருக்கு உடனடியாகப் புரிந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் ஸ்டேன்டில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. ஒரே ஒரு சைக்கிள் மட்டும் கான்டீனுக்குப் போகும் பாதையை அடைத்தபடி வரிசை மாறி நின்றது.

அடுத்த கணம் ஸ்டேன்ட் கீப்பர் ஓடோடி வந்து அந்த சைக்கிளை அலாக்காகத் தூக்கி ஐம்பது சைக்கிள்களைத் தாண்டி – வரிசையில் நிறுத்திவிட்டு அந்த இடத்திலேயே கைகட்டி நின்றான்.

கங்கா மௌனமாக பாக்டரிக்குள் நுழைந்தாள், ‘கங்கா’ உரக்கக் கத்தித் திட்டியதை யாரும் பார்த்ததில்லை. அவள் மௌனத்திற்கு பாக்டரி முழுவதும் பயம் கலந்த ஒரு மரியாதை இருந்தது.

கங்கா சேலைத் தலைப்பை இழுத்துப் போர்த்தியபடி மெஷின் ரூமுக்குள் நுழைந்தாள். அங்கே –

பாக்டரியின் இதயமான வி-1மெஷின் இரும்புப் பாளங்கள அல்வாத் துண்டுகளாக வெட்டி. மெல்லிய கம்பிகளை நூல் போல் நூற்றுக் கொண்டிருந்தது. மெஷின்மேன் ரங்கள் கன்ட்ரோல் போர்டில் சுவிட்ச்களை அமுக்கி மெஷினுக்குக் கட்டளைகளைத்தந்து கொண்டிருந்தான். கங்கா வந்ததைக் கூட ரங்கன் கவனிக்கவில்லை. கங்கா, புரொடக்ஷன் சார்ட்டில் அன்றைய உற்பத்தியைக் கவனித்துவிட்டு மெதுவாக அறையை விட்டு நகர்ந்தாள்.

அன்று மாலை 6 மணிக்கு எப்போதும் போல் ஃபாக்டரி சங்கு ஊதியது. மெஷின் மேன் ரங்கன் தன் பொறுப்பை நைட் ஷிப்ட் வேலுவிடம் ஒப்படைத்துவிட்டு சைக்கிளில் காலனியில் உள்ள தன் அறைக்குச் சென்று கொண்டிருந்தான்.

இலேசாக இருட்ட ஆரம்பித்தது. சைக்கிள் டைனமோவைத் தட்டி விட்டுக்கொண்டான். வெளிச்சம் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது.

தூரத்தில் பாக்டரியின் வி-1 மெஷின் வேலை செய்யும் ஒலி ஒரு ரிதமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று டைனமோ வெளிச்சத்தில் பாதை ஓரத்தில் ஓர் உருவம் சுருண்டு கிடப் பது தெரிந்தது. ரங்கன் சைக்கிள் பிரேக் போட்டு நின்றது.

பசி மயக்கமாக இருக்கலாம்…சுருண்டு படுத்திருந்தான். முகத்தில் வாரக் கணக்கான தாடி மீசை, வேட்டி சட்டை அழுக்கேறியிருந்தது.

ரங்கள் அவனைத் தொட்டுப் பார்த்தான், உடம்பில் குடு இருந்தது. ரங்கன் மனத்தில் பேசாமல் ஒதுங்கிப் போக முடியாத ஓர் இரக்கம் தலை காட்டியது.

தூரத்தில் வந்து கொண்டிருந்த ஓர் ஆட்டோவைக் கைதட்டி நிறுத்தினான். தொழிலாளர் குடியிருப்பின் மத்தியில் உள்ள ‘அன்னை மேரி’ ஹாஸ்பிடலின் வாசலில் ஆட்டோ நின்றது.

ரங்கன் தெருவில் கிடந்த அந்த அனாதையை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டுத் தன் அறைக்குத் திரும்பியபோது இரவு மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது, அதற்கு மேல் அந்தப் பிரம்மச்சாரியால் நன் சொந்தச் சமையல் அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியாமல் அப்படியே படுத்து அசத்து தூங்கிளிட்டான்.

***

அதிகாலை ஐந்து மணிக்குப் பால்காரன் சைக்கின் பெல் அலாரம் அடிக்க ரங்கன் பால் செம்போடு கதவைத் திறந்தான். பாலை வாங்கி ஸ்டவ் பற்றவைத்த போது ரங்கன் காதுகள் ஏதோ ஒரு குன்யத்தை உணர்ந்தது.

ரங்கனுக்குப் புரிந்தது.

இரவு பகல் இடையறாது அந்தப் பிராந்தியம் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கும் வி-1 மெஷினின் ஓசை கேட்கவில்யை,

ஒருவேளை க்ரண்ட் கட் ஆகியிருக்குமோ? அப்படி இருந்தாலும் உடனடியாக இரண்டு விநாடியில் ஜெனரேட்டர் வேலை செய்திருக்க வேண்டுமே…..

ஐந்து நிமிஷம்.. பத்து நிமிஷம்.

வி-1 மெஷினின் ஓசை கேட்கவே இல்லை!

ரங்கன் காப்பிகூட குடிக்கவில்லை. அவன் சைக்கிள் ஏறி பாக்டைரியை நோக்கிப் பறந்து கொண்டிருந்ததில் மெஷின் மேல் ரங்கனுக்கு இருந்த அக்கறை தெரிந்தது.

ரங்களின் அக்கறையில் காரணமும் இருந்தது, நியாயமும் இருந்தது. ஜப்பானில் இருந்து வந்த அந்த வி-1 மெஷினே ‘கங்கா’ பாக்ட்ரிக்குத்தருளித்ததிலிருந்துதான் தொழிலாளர்களின் கூரை வீடுகள் டரஸ் பில்டிங்கு களாக மாறி வருகின்றன.

ரங்கன் சைக்கின் ஸ்டான்ட் கூடப் போடாமல் மரத்தில் சாய்ந்துவிட்டு, வராந்தாவில் ஓடி மெஷின் ரூமில் நுழைந்தபோது…

நைட் ஷிப்டு வேலு கையெல்லாம் கிரீஸூம் கரியுமாக ஸீ-1 மெஷினின் தலைப்பாகத்து சிலிண்டர் நட்டுக்களைக் சுழற்றிக் கொண்டிருந்தான்.

இரும்புக் கம்பிகள் மெஷினின் வாய்ப் பாகத்தில் சிக்கல் விழுத்து கருண்டு கிடந்தன.

எப்போதும் 0 டிகிரியில் குளிர்ந்து கொண்டிருக்க வேண்டிய சிலிண்டர்கள் கொதித்து ஆவி பறந்து கொண்டிருந்தன. நைட் ஷிப்டு வேலுவின் கவனக் குறைவு ரங்கனுக்குப் புரித்தது.

அடுத்த நிமிஷம் ரங்கன் ஆவேசத்தோடு வேலுவை இழுத்துப் பின்னால் தள்ளினான். சிலிண்டர் வால்வுகளைத் திறந்துவிட்டான். எஸ்கலேட்டர் பெல்டில் இரும்புத்துண்டுகளை இறக்கினான். கண்ட்ரோல் போர்டில் எல்லா சுவிட்ச்சுசுளையும் நியூட்ரலுக்குக் கொண்டுவந்தான்

ஒரு நம்பிக்கையோடு அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின் மெஷின் பட்டனை மெதுவாக அழுத்தினான்.

அடிபட்ட ஒரு ராட்சத மிருகம் போல் மெஷின் ஈனமாக முனகியது. ரங்கள் மனம் உள்ளூற நடுங்க ஆரம்பித்தது.

பாக்டரித் தொழிலாளர்கள் எல்லோரும் கைகளைப் பிசைத்தபடி கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள்.

கங்கா எந்தச் சலனமும்இல்லாமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு ஒரு சேரில் சாய்ந்து கொண்டிருந்தாள்.

ரங்கன் யாரையும் கவனிக்கவில்லை. ஏதோ தீர்மானத்தோடு கண்ட்ரோல் போர்டுக்குச் சென்றான். ரிமோட் கண்ட்ரோல் பிளக்கைச் செருகினான். கடைசி முயற்சியாக எமர்ஜன்சி சுவிட்சை அழுத்தினான்.

வி-1 மெஷினின் சிவப்புக் கண்கள் ஒரு முறை மங்கலாக எரிந்து அணைந்தது, வாய் வழியாகக் கரும் புகை சீறியது. ரங்கன் உனடியாக மெயின் ஸ்விட்சைப் பதற்றத்தோடு ‘ஆஃப்’ செய்தான், அவனுக்கு புரிந்து விட்டது. விஷயம் தலைக்கு மேல் போய்விட்டது. ரங்கன் மனத்தில் என்ன எண்ணினானோ தெரியாது. மெஷின் மேல் படுத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

தவறு செய்துவிட்ட குற்ற உணர்வோடு நைட் ஷிப்ட் வேலு ஓடிவந்து கங்காவின் காலில் விழுந்தான்.

கங்கா மௌனமாக எழுந்து கைகளைப்பின்னால் கட்டியவாறு அறைக்கு வெளியே நடந்தாள். ரங்கன் கதறியதோ, வேலு காலில் விழுந்ததோ அவள் முகத்தில் எந்த உணர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.

***

‘கங்கா ஸ்டீல் பாக்டரி’ வேலை செய்ய முடியாமல் மூடப்பட்டு மூன்று தினங்கள் ஆகிவிட்டன. பம்பாயிலிருந்து வந்த மெக்கானிக்குகளும் பார்த்துக் கை விரித்து விட்டனர். ஜப்பானிலிருந்து என்ஜீனியர்கள் வந்தால்தான் இனி விடிவு. ஆனால்அதில் நிறையச் சிக்கல்கள் இருந்தன, இருக்கும் நிலவரத்தில் பாக்டரி வேலை நடக்க மாதக் கணக்காகும் என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

ரங்கன் சோர்வோடு தன் அறையில் படுத்துக் கொண்டிருந்தான்.

ஒரு ஆள் மெதுவாக அறை வாசலில் வந்து நின்றன், அவன் முகத்தை எங்கோ பார்த்த நினைவு ரங்கனுக்கு வந்தது. தெருவோரம் அனாதையாகக் கிடந்து அன்னை மேரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அதே நபர்தான் என்பதை ரங்கள் புரிந்து கொண்டான்..

“என்மேல் இரக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்ததற்கு ரொம்ப நன்றி….நான் உள்ளே வரலாமா?”

இப்படித்தான் அந்த அநாதை, ரங்கன் அறையில் நுழைந்தான். ஆனால் அவனது பிரவேசம் அந்தப் பிராந்தியத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தப் போவதை யாருமே உணரவில்லை.

“ஊரெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஏதோ மெஷின் ஓடவில்லையாம்…நான் அந்த மெஷினைப் பார்க்கலாமா?”

ரங்கன் வாய் விட்டுச் சிரித்தான்,

“உன் பெயர் என்னப்பா?”

“பாஸ்கரன்,”

”உனக்கு மெஷினைப் பற்றி என்ன தெரியும்”

“நான் ஒரு மெக்கானிக்!”

ரங்கள் விழுத்து விழுந்து சிரித்தான்.

“இத்தாப்பர் பாஸ்கர் நீ நெனைக்கிற மாதிரி வி-1 மெஷின் லேத்துப் பட்டரை யிலே இருக்கிற டப்பா மோட்டார் அல்ல. அது ஜப்பான்லே இருந்து வந்த கம்ப்யூட்டர் மெஷின்!”

“ஜப்பான் மோட்டார் கார் யூனிட்டில் சீப் செக்ரட்டரி நம்ம தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருத்தர்னு கொஞ்ச நாளைக்கு முன்னாலே பேப்பர்லே படிச்சதாக ஞாபகம்!”

பாஸ்கரனின் வார்த்தைகளில் ஓர் அசாதாரணமான அழுத்தம் இருந்தது. அந்த நம்பிக்கையில் – உறுதியில் ரங்கன் அசந்து விட்டான்.

அடுத்த சில மணி நேரத்தில் ரங்கள் ஓடோடிச் சென்று கங்காவிடம் ‘ஒரு மெக்கானிக் மெஷினைப் பார்க்க அனுமதி வேண்டும்’ என்று கூறி பாமிஷனும் வாங்கிவிட்டான்.

பாஸ்கரன் வெகு நேரம் வி-1 மெஷினைப் பரிசோதனை செய்தான். சம்பந்தமில்லாத பகுதிகளை யெல்லாம் வெகு நேரம் தேவை வில்லாமல் ஆராய்ச்சி செய்தான்.

சாதாரணமான சில நட்டுக்களைக் கழற்றக் கூட முடியாமல் தடுமாறினான்.

நேரம் ஆக ஆக பாஸ்சுரன் மேல் ரங்கனுக்கு குறைந்து கொண்டே நம்பிக்கை வந்தது.

”வாயால் சவடால் அடிப்பது சுலபம். காரியத்தில் இறங்கும்போதுதானே காலும் கையும் உதறுகிறது!”

பாஸ்கர் உதவிக்கு ஒரு ஃபிட்டரைக் கேட்டான், கோணல் மாணலாகப் பல் சக்கரங்களை லேத்தில் கொடுத்து ராவிக் கொண்டிருந்தான்.

ரங்கன் பொறுமை இழந்து விட்டான். இரவு 3 மணி இருக்கும். நம்பிக்கை சரிந்த நிலையில் அவன் மனத்தில் சோர்வும் தூக்கமும் கப்பியது.

பேசாமல் ஒரு மூலையில் சுருண்டு படுத்து விட்டான்.

எவ்வளவு நேரம் தூங்கியிருப்பான் என்பது ரங்கனுக்கே தெரியாது.

தடதடவென்று எல்லோரும் ஓடும் சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு ரங்கன் எழுந்தான். எழுந்த வினடியில் துல்லியமாக அந்த ஓசையை ரங்கனின் காதுகள் கேட்டுக் குளிர்ந்தன.

ஆம். வி-1 மெஷின் ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தது. அந்த இனிய நாதத்தைக் கேட்டுத்தான் தொழிலாளர்கள் ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.

பாக்டரி முதலாளியம்மாள் கங்காவின் வெள்ளை நிறக் கார்கூட நின்று போன மெஷின் ஓடும் ஓசை கேட்டுப் புழுதி பரக்க வந்து கொண்டிருந்தது.

பாஸ்கரன் எப்போதும்போல் தள்ளாடித் தடுமாறியபடி கண்ட்ரோல் போர்டில் பொத்தான்களை அழுத்தி மெஷினுக்கு ஆர்டர்கள் தந்து கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

ரங்கள் பார்வையில் பாஸ்கரன் ஓர் அவதாரமாகக் காட்சியளித்தான்.

தொழிலாளர்கனின் முகத்தில் பரவசம் தெரிந்தது. அவர்கள் நடுவே சிறியசலசலப்பு.

“முதலாளி அம்மா வர்ராங்க….ஒதுங்குங்க…. ஒதுங்குங்க.. ”

இப்போதும் கங்கா முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் கைகளைப் பின்புறம் கட்டியபடி கூட்டத்தின் நடுவிலிருந்து முன்னால் வந்து பாஸ்கரனைப் பார்த்த அடுத்த நொடி…அவள் முகத்தில் ஆயிரம் ஆயிரம் பாவங்கள் மாறி மாறிக் கோலமிட்டன. அவள் உதடுகள்….

“பாஸ்கர்….நீங்களா?” என்று இலேசாக முணு முணுத்தது.

காலச் சக்கரத்தின் ஆரக்கால்கள் பின்னால் நகர்ந்து சுற்ற ஆரம்பித்தது. இளமைக் காலத்தின் வசந்தப் பூக்கள் வண்ண வண்ணமாகப் பூத்துக் குலுங்கின அதில்.

***

கங்காவும் பாஸ்கரனும் கை கோத்து நடந்தனர். அப்போது இந்தக் கங்கா விஜயா ஸ்டீல் பாக்டரி முதலாளி அம்மா அல்ல. ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகள்.

பாஸ்கரன் அதே மில்லில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தான். அப்பாவுக்குச் சாப்பாடு கொண்டு வரும்போது பாஸ்கரன் கண்ணில் அவள் அரங்கேறினாள். கங்காவின் அப்பா வற்புறுத்த பாஸ்கர் ஒரு நாள் கங்கா சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டான்.

அந்த குசியான சாப்பாட்டைக் காலம் முழுதும் அவள் கையால் வாங்கிச் சாப்பிட மனம் விரும்பியது.

கங்காவும் பாஸ்கரனும் திருமணம் செய்து கொள்ளப் பெரிதாக –

அந்தஸ்து வித்தியாசங்களோ அப்பா அம்மா தடைகளோ ஏதும் இருக்கவில்லை. எனவே அவர்கள் காதல் பச்சைக் கொடி காட்டப்பெற்று வெகு விரைவில் வளர்ந்தது. அந்த நேரத்தில்தான்….

கங்காவின் ஒரே தம்பி சேகர் அந்தக் கொடிய நோயால் தாக்கப்பட்டான்…. ‘பிரெய்ன் ட்யூமர்’ என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

சேமித்த பணம் தண்ணீராக விரயமாகியது. எப்படியாவது மகனைக் காப்பாற்றக் கங்காவின் அப்பா எங்கெங்கோ கடன் வாங்கியும் அது போக்குவரத்துக்கே போதலில்வை.

பணம் நிறையச் செலவழித்தால் மகனை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று டாக்டர்கள் நம்பிக்கை ஊட்டினர். அந்தப் பணம் இல்லாததால் கண் முன்னால் பார்ப்பதற்கு எந்தக் குறையும் இல்லாமல் ஒரே வாரிசாசு இருக்கும் மகன் சாவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அப்பா துடி துடித்தார், மகன் உயிரைக் காப்பாற்ற ஆயிரக்கணக்கில் பணம் வேண்டும். வழி என்ன வழி என்ன…

அந்தக் குழப்பத்தின் சிக்கலுக்கு விடையாகக் கங்காவின் அப்பா வேயை செய்யும் மில் முதலாளி ஒரு நாள் கங்காவின் வீட்டுக்கே வந்து விட்டார்.

விஷயத்தை மிகப் பெருந்தன்மையோடு ரத்தினச் சுருக்கமாகக் கேட்டு விட்டார்.

“என்னேட் ஒரே மகனை லண்டனுக்கு பிசினஸ் விஷயமாப் படிக்க அனுப்பி இருந்தேன்…ஆனா அவன் அங்கே கட்டுப்பாட்டே இல்லாமல் சுதந்திரமா வாழணும்கிற கொள்கையோடு திரும்பி வந்தான்..

“அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பார்க்க எத்தனையோ முயற்சிகளை நான் எடுத்துப் பார்த்துட்டு அலுத்துட்டேன்… அவன் இப்போ தானே வந்து ‘கங்கா’வைப் பெண் கேட்டு நாள் கேட்டு வரச் சொல்லி அனுப்பி இருக்கான்..

“என் மகன் ஒரு நல்ல குடும்பப் பெண் கல்யாணம் செய்துக்கச் சம்மதிச்சதுலே நான் ரொம்பச் சந்தோசப்பட்டுட்டேன்…..

“இனி முடிவை நீங்கதான்சொல்லணும்.”

தம் மகன் உயிரைக் காப்பாற்ற ஆண்டவனாகக் காட்டிய வழி என்று கங்காவின் அப்பா ஆனத்தக் கண்ணீர் விட்டார்.

அந்தக் கண்ணீரின் நியாயங்களுக்கு முன்னால் தன் காதலைச் சொல்லக் கூட கங்கா முடியாமல் தடுமாறினாள்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் இந்த இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்துகொண்ட பாஸ்கர் –

‘மில் முதலாளியின் மகன் ராம்நாத்தை நீ திருமணம் செய்து கொள்வதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு கங்கா-ராம்நாத் திருமணம் நடக்கு முன்னே ஊரை விட்டுப் போய்விட்டான்.

அதற்குப் பிறகு பாஸ்கர் என்ன ஆனான் எங்கே இருக்கிறான் என்று கங்காவுக்கு இது வரை எந்த விவரமும் தெரியவே யில்லை.

***

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னால் கங்கா பாஸ்கரனை இப்போது பார்க்கிறாள்.

அவள் இமையோரம் நனைகிறது. காரணம் – கடந்த காலத்தின் காதல் தோல்வி அல்ல. பாஸ்கரன் கண்ணியமாக விலகி இதுவரை எந்த விதத்திலும் தன் வாழ்க்கையில் குறுக்கிடாது நின்ற பெருந்தன்மைக்காக.

இனிமேலும் கூட அந்த பாஸ்கரன் விரைவில் அந்தக் கங்காவின் பார்வையிலிருந்து தன்னை மறைத்துக் கொண்டு வெகு தூரம் விலகிப் போய்விடுவான் என்பதும் கங்காவுக்கு நன்றாகவே தெரிந்தது. ஆனால் அப்படி, பாஸ்கரன் உடனே அந்த இடத்தை விட்டுப் போக முடியவில்லை… தொழிலாளர்களின் – குறிப்பாக மெஷின் மேன் ரங்கனின் நன்றி கலந்த உபசரிப்பு பாஸ்கரை இரண்டு நாட்கள் அதே ஊரில் தங்க வைத்து விட்டது.

மூன்றாம் நாள் –

ஃபாக்டரி முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் வாழை மரம் கட்டி, தோரணங்களைத் தொங்க விட்டுக் கொண்டிருந்தனர். அன்று கங்காவுக்குப் பிறந்த நாள்.

கங்காவின் மேலுள்ள அன்பால் தொழிலாளர்கள் தாங்களாகவே அவள் பிறந்த தினத்தை விமரிசையாகக் கொண்டாடி வந்தனர். மெஷின்மேன் ரங்கன் வீட்டில் பாஸ்கர் விடை பெற்றுக் கொண்டிருந்த போது…

கங்காவின் கார் வீட்டு வாசலில் வந்து நின்றது. கார் டிரைவர் இறங்கி பாஸ்கரனிடம் வந்தான்.

“முதலாளி அம்மா உங்களைக் கையோடு கூட்டி வரச் சொன்னாங்க!” பாஸ்கரனால் உடனடியாக ஒன்றும் பதில் பேச முடியவில்லை. ரங்கன் அவனது கோணத்தில் பேசினான்.

“இதாங்க எங்க மொதலாளி அம்மாவோட பெருந்தன்மை. நம்மளைப் போல உள்ள தொழிலாளிகளுக்கு அவங்க காட்ற மதிப்பு… வேறே யாரும் காட்ட மாட்டாங்க!”

இந்த நிலையில் பாஸ்கர் கங்காவின் வீட்டுக்கு ‘வர முடியாது’ என்று சொல்லவும் முடியும்!….

ஆனால் அப்படி மறுப்பதிலிருந்து வீணாக மற்றவர்களுக்கு கங்கா – பாஸ்கரன் பற்றி ஒரு சிறு யூகம்கூட உண்டாக இடம் கொடுக்க பாஸ்கர் மனம் ஒப்பவில்லை.

ஊரெல்லாம் கங்காவைப் போற்றிப் பாராட்டுகிறது. அவள் குழந்தை குட்டிகளோடு குதூகலமாக வாழ்வதைப் பார்க்க பாஸ்கர் மனம் ஆசைப்பட்டது. பாஸ்கர் காரில் ஏறிவிட்டான்!

சுங்காவின் பங்களாவுக்குள் கார் நுழைந்தது. கங்கா வாசல் வரை வந்து பாஸ்கரைக் கைகூப்பி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

கூட்டம் வீடு நிறைத்திருந்தது.

அதில் மஞ்சள் பட்டுப் பாவாடை தாவணி உடுத்தியிருந்த ஒரு பெண்ணைக் கங்கா கைதட்டிக் சூப்பிட்டாள்.
பாஸ்கரனுக்கு அறிமுகம் செய்தாள்.

“இவள் என் கடைசிப் பெண் பானு. பி.யு.சி,படிக்கிறாள்”

கழுத்திலே தங்கச் செயின் டாலர் மின்ன ஒரு இருபத்தைந்து வயது இளைஞனைக் கூப்பிட்டாள்,

“இவன் என் மூத்த மகன்..ரமேஷ். சொந்தமாக பிஸின்ஸ் செய்கிறான்”

பாஸ்கரனுக்குப் பெருமிதமாக இருந்தது. கங்காவும் மற்றவர்களும் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தனர்,

பிறந்த நாள் கேக்கை இன்னும் வெட்டவில்லை. மற்றவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து கங்காவின் கணவன் ‘ராம்நாத்’துக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருப்பது பாஸ்கரனுக்குத் தெரிந்தது. வெகு நேரம் கழித்து ராம்நாத்தின் கார் வந்தது. காரை விட்டு இறங்கிய டிரைவர் முகத்தில் கலவரம் தெரிந்தது. ராம்நாத் ஏன் இன்னும் காரை விட்டு இறங்கவில்லை?

கங்கா, மகன் ரமேஷ் இருவரும் காருக்கு அருகில் சென்றனர். அவர்கள் முகமும் சுருங்கியது.

காருக்குள் கங்காவின் கணவன் ராம்நாத் சுருண்டு கிடந்தான். அலங்கோலமாக. விஸ்கியின் நெடி வீசக் காருக்கு அருகில் வந்த பலர் முகத்தைச் சுளித்தனர்.

கங்காவின் முகத்தில் அவமானமும் வேதனையும் இருளாகப் பரவியது பாஸ்கருக்கு நன்றாகத் தெரிந்தது. ஒரு முறை கங்கா பாஸ்கரை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தலை குனிந்து கொண்டாள்.

சூழ்நிலை மிகவும் தர்மசங்கடமாயிருந்தது. பாஸ்கர் மனத்தில் திடீரென்று ஒரு துணிச்சல்.

காரின் கதவைத் திறந்தான். மிகவும் அந்தியமாக அந்தச் சூழ்நிலையில் நின்றவன் யாரும் எதிர்பார்க்காத. விதத்தில் ராம்நாத்தைத் தோள் கொடுத்துத் தூக்கினான். அறைக்குள் அழைத்துச் சென்று படுக்கையில் சாயவைத்தபோது, ராம்நாத்தின் மகன் ஆக்ரோஷமாகக் கத்த ஆரம்பித்தான்,

“அந்த ஆளை ரூமுக்குள்ளே படுக்க வைக்காதீங்க இழுத்து வெளியே தளளுங்க, சொத்துப் பூராவையும் குடிச்சுக் கும்மாளம் அடிச்சே தீர்த்துட்டான்”

மகன் அப்பாவின் மேல் வைத்த மரியாதை தெரிந்தது. கங்காவின் கண்கள் இருண்டன. தலை சுற்ற ஆரம்பித்தது.

அடுத்த நாள்.கங்காவின் ஆபீஸ் அறையில் பாஸ்கானும் சங்காவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர், பேசுவதைக் காட்டிலும் அதிக நேரம் மௌனம் நிலவியது. அப்போது ஆபீஸ் பியூன் உள்ளே வந்தான்.

“நம்ம டாக்டர் உங்களை உடனே அவசரமாப் பார்க்கணும்னு வந்திருக்காரு.”

“வரச்சொல்!” என்றாள் கங்கா.

உள்ளே வந்த டாக்டர் பாஸ்கரனைத் தயக்கத்தோடு பார்த்தார்.

“உங்க கிட்டே, தனியா கொஞ்சம் உங்க குடும்ப விஷயத்தைப் பத்திப் பேசணும்”

டாக்டர் சொல்லி முடித்தபோது பாஸ்கரன் எழுந்து வெளியே செல்ல முயன்றான். கங்கா அதைத் தடுத்தாள்.

“பரவாயில்லை டாக்டர்… அவர் என் குடும்பத்தில் ஒருத்தர்… எதுவானாலும் சொல்லுங்க…” என்று கங்கா கூறிய போது பாஸ்கரனால் அதை மீறி வெளியே போக முடியவில்லை.

டாக்டர் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே பேச ஆரம்பித்தார்,

“உங்க மகள் பானு என்னோட நர்ஸிங் ஹோமுக்கு வந்திருந்தா… அபார்ஷனுக்கு மருந்து கேட்டா… நான் என்ன ஏதுன்னு கொஞ்சம் கோபப்பட்டுக் கேள்வி கேட்க…பானு என்னைக் கண்டபடி திட்டுவிட்டு….”

டாக்டர் தட்டுத் தடுமாறிச் சொன்ன அந்த உண்மையில் பாஸ்கர் வெல வெலத்துப் போளுன், தாவணி பாவாடையில் சிட்டுக் குருவி போல் ஓடித் திரிந்த அந்தச் சின்னப் பொண் பானுவா?… அபார்ஷனுக்கு மருந்து கேட்கிறாள்…

பானுவின் கார் வீட்டுக்குள் விரைந்தது. கங்கா அறைந்த அறையில் பானு ஒரு சுற்றுச் சுற்றிச் சோபாவில் விழுந்தாள், கங்கா கோபம் பொங்கக் குமுறி அழுதபடி கேட்ட கேள்விகளுக்குப் பானு வெகு நிதானமாகச் சொன்ன பதில்…

“இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படிக் கத்தறே.. அபார்ஷன் செஞ்சுக்காமே என்னோட பாய் பிரண்ட்ஸ் ஒவ்வொருத்தனையும் நான் மாரேஜ் செஞ்சுக்கணும்னு எங்கழுத்து நிறையத் தாளியாக் கட்டித் தொங்க விட வேண்டியதுதான்!”

பானு தன்னை ராம்நாத் மகள் என்பதை வெகு தெளிவாகக் கங்காவுக்குப் புரிய வைத்து விட்டாள்,

ஒரு எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் அந்தக் குடும்பத்தில் அடுத்து அடுத்துத் தோன்றியது.

கங்கா ஆபீஸில் உட்கார்த்து மாதக் கடைசி சம்பள பட்டுவாடாக்களைச் சரிபார்த்துக்கொண்டிருந்தபோது..

அந்த ரிஜிஸ்தர் தபால் வந்தது. மகன் ரமேஷ் வக்கில் நோட்டீஸ் விட்டிருந்தான்.

‘தந்தை ராம்நாத் குடும்பத்தின் சொத்தைத் தகாத வழிகளில் அழித்து வருவதால் கங்கா ஸ்டீல் பாக்டரியின் உரிமை முழுவதையும் உடனடியாகத் தன் பேருக்கு மாற்ற வேண்டும்….. இல்லையென்றால் கோர்ட்டில் கேஸ் தாக்கல் செய்யப்படும்.’

கங்காவில் முயற்சியால் உருவான ஸ்டீல் பாக்டரியை மகனுக்கு எழுதி வைப்பதில் கங்காவுக்கு ஆட்சேபனை இல்லை.

ஆனால் அப்பாவும் மகனும் உரிமைகொண்டாடி கோர்ட் வியாஜ்ஜியங்களில் சிக்கி நிச்சயம் பாக்டரியை இழுத்து மூடி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பட்டினி போட்டு விடுவார்கள் என்பது கங்காவுக்கு நன்றாகத் தெரிந்தது.

தன் குடும்பத்தின் குணாதிசயங்கள் – இதுவரை போராட்டம் ஸ்ட்ரைக் எதுவும் இன்றி ஒத்துழைப்புத் தந்து வந்த தொழிலாளர்களின் எதிர்காலம், கங்காவைத் தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது.

சிக்கலான குழப்பத்தில் கங்கா சிக்கி மூச்சுத் திணறுவதாக பாஸ்கரன் மனத்தில் பட்டது. சமுகமாகப் பேசிப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளலாம் என பாஸ்கரன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால் கங்கா வேறு விதமாக முடிவு செய்து விட்டாள்.

விஜயா ஸ்டீல் பாக்டரியைத் தொழிலாளர்களின் பொதுச் சொத்தாக்கி ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி வக்கீலைக் கூப்பிட்டு..டாக்குமெண்டுகள் தயாரித்து விட்டாள்.

‘எவ்ளவோ நடக்க போகிறது…’.

என்னவோ நடக்கப் போகிறது.. என்று ஒரு பூகம்பத்தின் உள் நடுக்கம் ஒவ்வொருவர் மனத்திலும் ஏற்பட்டது.

டாக்குமெண்டுகள் ரிஜிஸ்தர் ஆகும் நாள் புயல் வீசுவதற்கு முன் ஏற்படும் அசாதாரண அமைதி நிலவியது.

ஒரு வக்கீலின் கார் பாக்டரிக்குள் நுழைந்தது. காரை விட்டு இறங்கிய வக்கீல் அவசரமாகக் கங்கா அறைக்குள் நுழைந்தார். கங்காவும் பாஸ்கரனும் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். வக்கீல் வந்ததும் பேச்சுத் தடைப்பட்டது.

ரிஜிஸ்தர் சம்பந்தமாக வக்கீல் சட்ட நுணுக்கங்களை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது டெலிபோன் அலறியது. வக்கிலுக்கு ‘கால்’ வந்திருந்தது. வக்கீல் போனை எடுத்துப் பேசினார். பேசப் பேச அவர் முகம் பேயறைந்தது போல் மாறியது. பேசும் போது அடிக்கடி பாஸ்கரன் பக்கம் திரும்பித் திரும்பி பயத்துடன் பேசினார்.

போனில் பேசிவிட்டுத் திரும்பிய வக்கீலின் குரல் நடுங்கியது. “யாரோ மிரட்டுகிறார்கள். இந்த ரிஜிஸ்தர் விஷயத்தில் தலையிட்டால் உயிருக்கே ஆபத்து என்கிறார்கள்.”

இவர் வெளியே சொல்வதைக் காட்டிலும் அதிகம் மிரட்டியிருக்க வேண்டும். முகத்தில் அந்த அளவுக்குப் பயம் தெரிந்தது. வந்த விஷயத்தை வெகு சீக்கிரத்தில் சொல்லி முடித்துவிட்டு அவசர அவசரமாக க் கிளம்பி விட்டார்.

வக்கீல் போனவுடன் பாஸ்கரன் பேச ஆரம்பித்தான்.

“அண்ணன் தம்பி சொந்தத்துக்குள்ளே தான் ஜென்மப் பகை வரும்பாங்க. உங்க குடும்ப விவகாரத்தைக் கோர்ட்டிலே தீர்மானிக்கிறதாலே பிரச்னை பெரிசாகுமே தவீர சுமுகமான முடிவு கெடைக்காது… பேசி முடிவெடுக்கிறதுதான்…”

கங்காவின் முகத்தில் தீவிரம் தெரித்தது. பாஸ்கரன் பேச்சில் குறுக்கிட்டாள்.

“எங்க குடும்பத்திலே எவ்வளவு பெரிய நியாயஸ்தர் வந்து பேசினாலும் இந்தச் சொத்து விஷயத்திலே சுமூகமான முடிவு நிச்சயமா வராதுங்கறது எனக்கு நல்லாத் தெரியும். சட்டப்படியும் இந்த நல்லதை நான் செய்யலேன்னா…சொத்து அப்பன் மகனுக்குள்ளே சூறையாடிச் சேதமாகறது மட்டுமல்ல… குத்து வெட்டுக் கொலைக்குப் போகும்னு பயந்துதான் நான் கோர்ட் ஏற முடிவு செஞ்சேன்…..”

அவள் பேசி முடிக்கவில்லை. திடீரென்று எல்லா மின் விளக்குகளும் அணைத்தன…அணைந்ததா இல்லை. யாரோ அணைத்து விட்டார்களா?’

இரண்டு கார்கள் வெளிச்சத்தை வீசிய படி பாக்டரிக்குள் நுழைத்தன. அதிலிருந்து திமுதிமு வென்று ஆறு ஏழு ஆட்கள் இறங்கிக் கங்காவின் அறையை நோக்கி ஓடினார்கள்.

“எமர்ஜென்சி லைட் ஏன் எரியலே… ப்யூன்….ப்பூன்… எங்கே தொலைஞ்சிட்டான்..ராகவன்…ராகவன். பி.ஏ.வும் காணோமே… திருமூர்த்தி…திருமூர்த்தி… கேஷியர் கூட…”

திட்டமிட்ட சதி நடப்பது கங்காவுக்குத் தெரிந்தது. அடுத்த கணம். கங்காவின் அறைக்குள் திமுதிமுவென்று ஆட்கள் நுழைத் தனர், கங்காவை நோக்கி ஆபத்து அடி. எடுத்து வைப்பதைப் பாஸ்கரும் உணர்ந்தான்.

ஓர் உருவம் கங்காவை நெருங்கியது. கையில் ஏதோ ஒன்று பளபளத்தது. டார்ச்சா? இல்லை கத்தியா?

பாஸ்கருக்கு எங்கிருந்து அந்தத் துணிச்சல் வந்தது என்று தெரியாது, ஒரே தாவலில் அந்த உருவத்தை நெருங்கி அதன் பிடரியில் ஓங்கி அடித்தான். அடுத்த நிமிடம் பாஸ்கரின் தாவாயில் முதுகில்…மாறி மாறி அடிகள் விழுந்தன.

கங்கா வாய் விட்டு ‘ஓ’ வென்று அலறினாள்.

பாக்டரிக்குள் வேலை செய்ய வந்த தொழிலாளர்களுக்கு மெஷின்கள் ஓடாததால் கங்காவின் அலறல் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும்.

இரண்டு மூன்று டார்ச்சுகளுடன் மெஷின் ரூம்களை விட்டுத் தொழிலாளர்கள் கூட்டமாக ஓடி வந்தனர்.

ஆனால் டைம் ஆபீஸ் கதவோரம் இருந்த இரும்புக் கேட்டை ஓர் உருவம் ஓடிவந்து இழுத்து மூடித் தாளிட, தொழிலாளர்கள் கங்காவில் அறையை அடைய முடியாமல் தடுக்கப்பட்டனர்.

கங்காவின் அறையில் வாயில் துணியை அடைத்தபடி கங்காவை ஒரு சேரில் இருவர் அமுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர்,

”மரியாதையா இதுலே கையெழுத்துப் போடு…இல்லேன்ன… உன்னேட பழைய காதலனை வி-1 மெஷின் பெல்டிலே வெச்சு எலும்பு கூட மிஞ்சாம நகக்கிக் கொன்னுடுவோம்….”

டார்ச்சைப் பேப்பர் மேல் அடித்துக் கொண்டு பேனவும் கையுமாகப் பேசி கொண்டிருந்தான் கங்காவின் மகன்- ரமேஷ்.

சுங்காவின் அறைக்கு எதிரில் இருந்த வி-1 மெஷின் ரூமில் பாஸ்கரனை பெல்ட்டோடு கட்டி இருந்தார்கள்.

அதன் ஜெனரேட்டர் இயங்க, தலையில் ரத்தம் வழிய முனகியபடி பாஸ்கரை பெல்ட்டோடு கட்டியிருப்பதை ஒருவன் டார்ச் அடித்துக் காட்டினான்.

கங்காவுக்குத் தலை சுற்றியது. மயக்கம் வர ஆரம்பித்தது. அவள் விரும்பினால்கூட அப்போது கையெழுத்துப் போட முடியாது.

ரமேஷ் ஆத்திரத்தோடு கத்தினான்… “உன்னோட ஜாதகம் பூராத்தையும் ஆதியோட அந்தமா விசாரிச்சு முடிச்சிட்டேன். கட்டிய புஞ்சனுக்கும் பெத்த மகனுக்கும் துரோகம் செஞ்சு கள்ளக் காதவன் பேச்சைக் கேட்டு நீ சொத்து சுகத்தையெல்லாம் அன்னதானம் பண்ணப்பாக்கறே,

“மரியாதையா கையெழுத்துப் போடு… இல்லேன்னா கொலை செய்யவும் அஞ்ச மாட்டேன்…”

கங்காவுக்குக் கண்கள் இருண்டன… ரமேஷ் பேசுவது அதற்கு மேல் கேட்க வில்லை. அதே சமயம் ரமேஷின் கோபம் உச்சத்தை அடைந்தது. வி-1 மெஷின் சுவிட்சை அழுத்தச் சொல்லிக் கத்தினான். எஸ்கலேட்டர் பெல்ட் நகர ஆரம்பித்தது. பாஸ்கரன் பெல்டோடு மெஷின் வாய்ப் பாகத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஆக்சா பிளேடுகளை நெருங்கிக் கொண்டிருந்தான்.

கங்கா சுத்தமாக மயக்க நிலையை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

ஒரு பெரிய ஓசை கேட்டது. சாத்தப்பட்டிருந்த இரும்புக் கேட்டைத் தொழிலாளர்கள் தகர்த்து விட்டனர். திமுதிமுலென்று கூட்டம் கைகளில் சுத்தி கடப்பாறை ஸ்பேனர்களோடு கங்காவின் அறையை நோக்கி ஓடியது.

அணைக்கப்பட்டிருந்த மின்சார விளக்குகளின் மெயின் சுவிட்சு போடப்பட்டது. வி-1 மெஷினில் அதற்கு உயிர் கொடுத்த பாஸ்கர் பலியாகப் போவதை மெக்கானிக் ரங்கன் கடைசி நிமிஷத்தில் உணர்ந்தான். அடுத்த வினாடி அவன் கையில் இருந்த பெரிய சுத்தியலை மேலே ஓங்கி…

மெஷினின் இதய பாகமான கண்ட்ரோல் போர்டு தூள் தூளாகிப் புகை பறந்தது. அணு குண்டு வெடித்தது போல் பாக்டரி முழுதும் எதிரொலிக்க வெடியோசை கேட்டது.

கங்கா ஒரு முறை தன்னைச் சிலிர்த்துக் கொண்டு கண் விழித்தாள். கூலிக்குக் கொலை செய்ய வந்த அடியாட்கள் தொழிலாளர்களின் கூட்டத்தைப் பார்த்ததும் ஜன்னலேறி ஓடினர்.

அங்கே பயந்து ஓடாமல் இரண்டு பேர் மட்டும் நின்றனர். ஒன்று கங்காவின் மகன் ரமேஷ். அடுத்தது கங்காவின் கணவன் ராம்நாத்.

கங்காவின் கண்கள் எஸ்கலேட்டர் பெல்ட்டைப் பார்த்தது. பாஸ்கரளைத் தொழிலாளர்கள் கட்ட விழ்த்துக் கீழே இறக்கிப் படுக்க வைத்தனர். அடுத்த வினாடி கங்கா ஆவேசமாக பாஸ்கரனை நோக்கி ஓட ஆரம்பித்தான். ராம்நாத் குரல் கொலை வெறி தொளிக்க… “நில்லடி…” என்றது.

கங்காவில் கால்கள் விலங்கு போட்டது போல் தடுமாறி நின்றன.

“அந்த அனாதைப் பயல் பாஸ்கரனுக்கும். உணக்கும். என்னடி சம்பந்தம்?”

கங்கா பேசவில்லை, ஆனால் அவன் கண்களில் ஒரு ஜ்வாலை வீச ஆரம்பித்தது. மெதுவாக அவள் கால்கள் பாஸ்கரனை நோக்கி நகர ஆரம்பித்தன.

“தாலி கட்டின புருஷன் தான் கேக்க றேண்டீ… பதில் சொல்லிட்டு அப்புறம் நகரு!”

தொழிலாளர்களின் முகங்கள் மௌனத்தில் தலை குனிந்தன. ராம்நாத் கேட்ட கேள்விக்குக் கங்கா பதில் சொல்லத்தான் வேண்டும் என்பது போல் தொழிலாளர் முகங்கள் குனிந்தன. கங்கா எல்லோரையும் ஒரு முறை நிதானமாகப் பார்த்தாள், அவள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவளுக்குப் புரிந்தது. தாலி கட்டின புருஷன் கேட்கிறானே… பதில் சொல்லாமல் மேலே நகர்வது எப்படி?

கங்கா என்ற அந்தக் கங்கை நதி மெல்ல மெல்லச் சூடேற, பனி உருகிப் பாயும் அந்தக் குளிர்ந்த நதியில் தீயின் செம்மை படரத் தொடங்கியது.

தாவி கட்டின புருஷன்… சீ.. இவனா தாலி கட்டின புருஷன். கேவலம் இவன் கட்டியதற்குப் பெயரா… தாலி!. அடுத்த கணம் அந்த எரிமலை வெடித்து விட்டது.

கங்கா அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும் கடைசிப் பாலமாக இருந்த தன் தாலியை சுழற்றி ராம்நாத்தின் மேல் வீசினாள். அடுத்த நொடியில் அவள் விலங்குகள் தகர்ந்தன. கூண்டுகள் திறந்து சுதந்திரச் சிறகுகள் விரிந்தது போல் உணர்ந்தாள். பாஸ்கரளை நோக்கி ஒருதாய்ப் பாசத்தோடு ஓடினாள்.

ஆனால் ராம்நாத் பாக்கெட்டில் இருந்த ரிவால்வரைச் சரியாகக் குறிவைத்தான். அதே சமயம் கூட்டமான தொழிலாளர்கள் கங்காவுக்குப் பாதுகாப்பாக முன்னால் ஓடி வந்து சுவர்போல் நின்றனர். அத்தனை பேரின் நெஞ்சைத் துளைக்கும் அளவுக்கு ரிவால்வரில் குண்டுகள் இல்லை. ராம்நாத் மனத்தில் துணிவும் வரவில்லை.

நியாயத்தின் பக்கம் உயிருக்குத் துணிந்து நிற்கும் ஆலைத் தொழிலாளர்களின் முகத்தில் அடுத்து வரும் பிரச்னைகளை வெற்றியோடு சந்திக்கும் ஆற்றல் ஒளி வீசியது.

– 17-01-1982

2 thoughts on “கங்கையில் நெருப்பு

  1. அன்புடையீர்
    வணக்கம்
    நேற்று வரை எழுதியவர் பெயர் ‘கே பாக்யராஜ்’ என்று மட்டும் இருந்ததை, இன்று, இயக்குநர் கே. பாக்யராஜ் என்று தெளிவு படுத்திய ‘டாட்காம்’ ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
    ஜூனியர் தேஜ்

  2. சினிமாடிக் ஃப்ளாஷ்பாக்’கள் நிறைந்த மிகச் சிறந்த கதை.
    சினிமா இயக்குநர் கே பாக்கியராஜ் அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
    தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திருமிகு ஜெயகாந்தன் அவர்களின் அக்னிப் பிரவேசத்தில் வரும் கங்காவின் தலையில் நீரூற்றிப் புனிதப்படுத்தும் பெற்ற தாய், அதைத் தொடர்ந்து கங்கை எங்கே போகிறாள் நாவல்… இதையெல்லாம் படித்த நினைவி இந்த கங்கையில் நெருப்பு என்ற சிறுகதை மலரும் நினைவாகக் கொடுத்துவிட்டது.
    மிக மிக மிக மிகச் சிறந்த சிறுகதை.
    ஒரு நாவலுக்கான ப்ளாட்.
    சிறுகதையாக எழுதிவிட்டார் திருமிகு கே. பாக்கியராஜ் அவர்கள்.
    வாழ்த்த வயதில்லை.
    வணங்குகிறேன்
    இப்படிக்குத்
    தங்கள் பாசமுள்ள
    ரசிகன்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *