உயிர்களிடத்தில் அன்பு செய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,177 
 

2015 ஜூன் இருபதாம் தேதி, மும்பை

CNBC TV18 தொலைகாட்சி நிறுவனத்தின் சென்ற ஆண்டிற்கான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா. நாட்டின் பிரதமர் கையால் வெற்றி பெற்றவர்கள் விருது வாங்கி கொண்டு இருந்தனர்.
ஐ.டி பிரிவில் சிறந்த தொழில் முனைவோராக ராம் பெயர் அறிவிக்கப்பட்டது. I-apps எனப்படும் ஐ-போன் மற்றும் android பயன்பாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தான் இந்த ராம். ஆறடி உயரமும் வெள்ளை தோலும், மெல்லிய உடல் வாகும் கொண்ட அவன் கருப்பு நிற கோட் சூட் அணிந்து கொண்டு கம்பீரமாக மேடை ஏறினான். பார்வையாளர்களின் கரகோஷங்களோடு பிரதமரிடம் இருந்து விருதை பெற்ற பிறகு ஓர் இரு வார்த்தைகள் பேசுமாறு தொகுப்பாளினி ராமை அழைத்தாள்.

‘இந்த விருதை தெய்வம் ஆகி போன என் பெற்றோருக்கு சமர்ப்பிக்கின்றேன். இதை எனக்கு வழங்கிய பிரதமர் அவர்களுக்கும், மேலும் இதற்கு என்னை பரிந்துரை செய்த CNBC TV18 நிறுவனத்திற்கும் என் நன்றி. நான் தொழிலில் இறங்கும் போதில் இருந்து இன்று வரை ஆதரவு அளித்து வரும் என் நண்பர்களுக்கும் மற்றும் என்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோருக்கும் என் நன்றிகள்’ என்று சரளமாக ஆங்கிலத்தில் உரை ஆற்றிய பின் இறுதியாக ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று தமிழில் கூறி முடித்தான்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு அனைத்து ஊடகங்களுக்கும் ராமை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு கொண்டு இருந்தது. மும்பையில் இருந்து திரும்பிய உடன் ஹைதராபாத் மாதாப்பூரில் அவன் உள்ள தலைமை அலுவலகம் சென்றான். அவனது உதவியாளர் அவனுக்கு அடுத்த ஒரு மாதத்திற்கான அலுவல்களை குறித்து கூறினாள்.

தொடர்ச்சியாக பல்வேறு கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஊக்க உரை, வியாபார கூட்டமைபுகளில் விவாதங்கள், தொலைகாட்சி பேட்டிகள் என்று சென்று கொண்டே இருந்தான். ஒரு நிலையில் தாங்க முடியாத முதுகு வழியால் அவதி பட்டான். மருத்துவரிடம் காட்டி விட்டு வீட்டிற்கு திரும்பினான். ஜூப்ளி ஹில்ல்ஸ் பகுதியில் அமைந்த தனது பெரிய வீட்டில் இப்போது அவன் மட்டும். மாதத்தில் பல நாட்கள் தொழில் ரீதியான பயணங்கள் இருந்ததால் அவன் தனிமையை என்றும் உணர்ந்தது இல்லை. இப்போது அதை உணர துவங்கினான். மருத்துவர் கூறிய வார்த்தைகளை நினைத்து பார்த்தான். ‘உங்களுக்கு இரத்த அழுத்தம் உயர்ந்துள்ளது. மருந்து, உணவு பழக்கம் ஆகியவற்றோடு ஒரு பதினைந்து நாட்கள் எங்கு ஆவது சென்று ஓய்வு எடுத்து வாருங்கள் என்றார். மேலும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள், உங்கள் வேலை பளுவை தாங்குவதற்கு ஒரு ஆறுத¬¬லாக, ஆதரவாக அது அமையும்’. அவன் பெற்றோர் புகை படங்களை பார்த்தான். காலம் அவர்களை விரைவாக அழைத்து கொண்டது. இன்று எவ்வளவு முன்னேறினாலும் அதை பார்த்து மகிழ்வுற அவனக்கு யாரும் இல்லை. அதனால் தன் ஊழியர்களின் குடும்பங்களை தன் குடும்பமாக பார்த்தான். சரி மருத்துவர் சொன்னது போல் முதலில் ஓய்வு எடுக்க செல்லலாம், அந்த நாட்களில் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் நிர்வாக பொறுப்புகளை தன் பணியாளர்களிடம் கொடுத்து விட்டு, ஏதேனும் முக்கிய அலுவல்களுக்கு தன்னை போனில் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்தான். அடுத்த சில நிமிடங்களில் ராமின் உதவியாளர் கோவை செல்வதற்கான விமான டிக்கெட்டின் பிரிண்ட் ஐ ராமிடம் வழங்கினாள்.

அடுத்த நாள் மதியம் கோவை விமான நிலையத்தில் இருந்து உதகமண்டலம் அழைத்து செல்ல அவனது ஹோண்ட சிட்டி கார் தயராக இருந்தது. ஓட்டுனரிடம் தனது ஓய்வு இல்லங்கள் எப்படி செல்கிறது என்றும், மற்றும் ஓட்டுனர், அவர் குடும்பம், மற்றும் அங்கு பணி புரியும் ஊழியர்கள், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்தான்.

வளைந்து வளைந்து செல்லும் மலை பாதை எங்கும் சுற்றிலும் உள்ள கண்ணனுக்கு குளிர்ச்சி அளிக்கும் தேநீர் தோட்டங்களை ரசித்து கொண்ட அவன் மனதில் புது புது திட்டங்கள் உருவாகி கொண்டு இருந்தது. ஏற்கனவே இரண்டு பெரிய வீடுகள் வாங்கி படுக்கை மற்றும் காலை உணவு முறையில் வாடகைக்கு விட்டு இருந்தான். மேலும் ஓர் இரு வீடுகள் வாங்கி அவ்வாறு செய்யலாம் அதற்கு இந்த பயணத்தை படுத்தலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே அவன் வாகனம் ஊட்டியை நெருங்கியது. ராம் மென்பொருள் துறையில் சம்பாதித்த லாபத்தை மற்ற துறைகளில் முதலீடு செய்து வந்தான். அதில் ஒன்று தான் இந்த Bed & breakfast (படுக்கை மற்றும் காலை உணவு). ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு வீடு மற்றும் உணவு வாடகைக்கு விடும் முறை.
இது அவர்களுக்கு தங்கள் வீடுகளில் இருப்பது போன்ற சூழல் தர கூடிய அம்சம் ஆகும். மேலும் இது மட்டும் அல்லாது ரியல் எஸ்டேட், பங்கு சந்தை, என குறிப்பிட்ட தொழில்களில் ராம் முதலீடு செய்து வந்தான். மேலும் சில நிறுவனங்களை கையகப்படுத்துதல் செய்து தன் நிறுவனத்துடன் சேர்த்து இருந்தான்.

ஊட்டியில் பிரபலமான ரோஸ் கார்டன் அருகே அமைந்திருந்த அவன் வீட்டை அடைந்த போது அவனது ஊட்டி மேலாளர், மற்றும் ஊழியர்கள் தங்கள் முதலாளியை வரவேற்க காத்து கொண்டு இருந்தனர். அனைவரின் அன்பான வரவேற்பை பெற்ற பின்னர் வீட்டுக்குள் நுழைந்தான். அவனுடன் வந்த மேலாளர் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகளிடம் ‘இவர்தான் இந்த பங்களாவின் உரிமையாளர்’ என்று அறிமுகம் செய்து வைத்தார். அனைவருடன் பரிச்சயம் ஆனா பிறகு மாடியில் உள்ள தனது அறைக்கு ராம் சென்றான். அடுத்த இரண்டு நாட்களுக்கு முழு ஓய்வு கொண்டு இருந்தான். அவனக்கு உணவு அவன் அறைக்கே மேலாளர் மனைவி கொண்டு சென்று கொடுத்து வந்தாள்.

மூன்று நாட்களுக்கு பிறகு மாலை வேளையில் வெளியே கிளம்பினான். அங்கு ymca billiards க்ளப்பில் உறுப்பினராக இருந்தான். வணிக வீதி வழியாக அவன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையை கடக்க முயன்ற ஒரு சிறுவன் இவர்கள் வாகனடிற்கு குறுக்கே வந்து விழுந்தான். அச்சிறுவனை பார்த்து ராமின் ஓட்டுனர் வாகனத்தில் இருந்து வெளியே வந்து ‘ஏன்டா வீட்ல சொல்லிட்டு வந்தியா?’ என்று வினவினான். அவனை தடுத்து ராம் ‘பார்த்து வர மாட்டியா? உனக்கு அடி எதுவும் படலியே?’ என்று சிறுவனை பார்த்து கேட்டான். எழு அல்லது எட்டு வயது உள்ள அந்த சிறுவன் ‘தாரே சமீன் பர்’ படத்தின் தர்சீல் ஐ போல் இருந்தான். அதற்குள் அங்கு கூட்டம் கூடி விட்டது. நேர்சலை விலகி கொண்டு ‘சச்சின், சச்சின்’ என்று அழைத்து கொண்டே சுடிதார் அணிந்த ஒரு பெண் சிறுவனை நோக்கி சென்றாள். ‘உனக்கு எதுவும் ஆகலியே’ என்று அவனிடம் அக்கறையோடு வினவியிடை பார்த்த போது அவள் தான் அந்த சச்சினின் தாய் என்று தெரிந்தது. நடந்ததை ராமின் ஓட்டுனர் விவரித்த பிறகு, ‘சாரி சார்’ என்று கூறினாள். மேலும் சச்சினையும் மன்னிப்பு கேட்க சொன்னாள். சச்சினும் ‘சாரி அங்கிள்’ என்று ராமிடமும் அவன் ஒட்டுனரிடமும் சென்று சொன்னான். ‘சரி ரோடு கிராஸ் பண்ணும் போது பார்த்து பண்ணனும்’ என்று ராம் சச்சினுக்கு அறிவுரை சொன்னான். ‘பையன் தெரியாம பண்ணிட்டான். டேக் இட் ஈஸி’ என்று சச்சின் அம்மாவிடம் ராம் கூறினான். முப்பது வயது மதிக்க கூடிய மூக்குகண்ணாடி அணிந்து, ஒல்லியான உடல் வாகும், இடுப்பை தொடும் நீண்ட கூந்தலுடன் இருந்த அந்த சச்சினின் அம்மாவை பார்த்தவுடன் நன்கு பழகிய முகமாக தோன்றியது. அவள் முகத்தை பார்த்து மேற்கூறிய வார்த்தையை சொன்ன போது முடிவு செய்து விட்டான் இவள் அனிதா என்று. அவளுக்கும் இவனை பார்த்த உடன் அதிர்ச்சி. அவளும் தெரிந்து கொண்டாள் இவன் நிச்சயம் ராம் தான். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவடர்க்குள் இருவரும் அவரவர் பாதையில் சென்று விட்டனர்.

அன்று இரவு இருவருக்கும் தூக்கம் தொலைந்து போனது. இருவரும் கடந்த காலத்தை சற்று திரும்பி பார்த்து கொண்டு இருந்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னையின் பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படித்து கொண்டு இருந்தனர்.

நகர்ப்புற சுழலில் வளர்ந்த இருவரும் ஆரம்பம் முதலே நல்ல நண்பர்களாக இருந்தனர். இருவர் குடும்பமும் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்ததாக இருந்ததாலும், மேலும் வீட்டில் ஒரே பிள்ளைகளாக இருந்ததால் இவர்களுக்கு போதுமான சுதந்திரம் இருந்தது. கை பேசிகள் வளர தொடங்கிய காலம் அது. எல்லோரையும் போல தினமும் காலை, மாலை, இரவு வணக்கங்கள் என்று இவர்களும் குறுஞ்செய்தி அனுப்பி கொண்டு இருந்தனர். ராம் டென்னிஸ் விளையாட்டு வீரன். கல்லூரி சார்பில் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தான். நாகர்கோயிலில் நடந்த கல்லூரிகள் இடையிலான டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள சென்றான். பொதுவாக சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு அனிதா, மற்றும் அவன் நண்பர்கள் என்று ஒரு கோஷ்டியே அவனை உற்சாக படுத்த செல்லும். இம்முறை அவனது அணி மற்றும் பயிற்சியாளர் உடன் மட்டும் அவன் சென்றான். நண்பர்கள் அதரவு இம்முறை இல்லை என்றாலும் தன் திறமை மீது ராம் நம்பிக்கை கொண்டு இருந்தான். அங்கு சென்றதில் இருந்தே தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டான். போட்டிகளில் வெற்றி ஒன்றே அவன் குறிகோளாக இருந்துது. சிறப்பாக விளையாடி இறுதி போட்டியை அடைந்தான். அங்கு சென்றதில் இருந்து அவன் கை பேசியை பயன் படுத்தவில்லை. சென்றவுடன் தன் பெற்றோர்களுக்கும், அனிதாவுக்கு தகவல் சொன்னான். அதோடு சரி. போட்டிகளில் மூழ்கி விட்டான். இறுதி போட்டி துவங்க சிறிது நேரத்திற்கு முன் அனிதா ராமை சந்திக்க வந்தாள். ராமின் பயிற்சியாளர் அனிதாவை கண்டு கொண்டார். அவளிடம் ‘ராம் பிஸியா ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கான், அவங்க அப்பா, அம்மா கூட அவன் பேசல, என் கிட்ட தான் அவங்க அவனை பற்றி விசாரிக்காங்க. இந்த போட்டியில் வின் பண்றதை தவிர்த்து அவன் மைண்ட்ல வேற எதுவும் இல்ல. இப்போ நீ அவன பார்த்து பேசுனா அவன் கவனம் திசை திரும்பும். மேட்ச் முடிஞ்ச உடனே தாரளம பேசு, ப்ளீஸ் புரிஞ்சிக்கோ’ என்று ராமின் நிலைமையை எடுத்து கூறினார்.

இறுதி போட்டியில் திருச்சி கல்லூரி மாணவனை எதிர்த்து விளையாடினான் ராம். 6-3, 6-2 என்ற கணக்கில் ராம் வெற்றி வாகை சூடினான். பரிசு வாங்கிய பிறகு பயிற்சியாளர் ராமிடம் ‘அருமையாக விளையாடினாய். உன் ஹோட்டல் ரூமில் இன்னொரு பரிசு காத்திருக்கு, போ அது உனக்கு தான் உன்னை தேடி வந்திருக்கு ’ என்று கூறி அவன் முதுகில் தட்டி அனுப்பினார்.
அவன் அறையை அடைந்த போது அங்கு அனிதாவை கண்டு இன்ப அதிர்ச்சி கொண்டான். பேச வார்த்தை வர வில்லை. தனக்காக ஒருவள் 600 மைல் தொலைவில் இருந்து தேடி வந்தாள் என்பதை அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அதற்குள் அனிதா ஓடி வந்து, அவனை கட்டி அணைத்து ‘ஐ மிஸ் யு டா, ஐ லவ் யு எ லாட்’ என்று சொல்லி அவன் மார்பில் சாய்ந்து அழுதாள். இவன் கண்களில் இருந்தும் ஆனந்த கண்ணீர் பெருக ‘ஐ லவ் யு டூ’ என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கண்ணீரை துடைத்தான். சென்னை திரும்பிய பிறகு அவர்கள் காதல் கதை தொடர்ந்து நடந்தது. பூங்கா, கடற்கரை, சத்யம் சினிமாஸ் என்று எல்லா இடங்களிலும் எல்லா காதலர்கள் போல் இவர்களும் ஊரை சுற்றி வந்தனர். இறுதி தேர்வு முடிந்து முடிவுகள் வருகிறது. இவர்களும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுகின்றனர். ராமிற்கு வேளச்சேரியில் உள்ள பன்னாட்டு தொழில் நிகழ்முறை அயலாக்கம்(BPO) நிறுவனத்தில் வேலை கிடைத்தது. தன் பெற்றோரிடம் அனிதா உடனான காதலை தெரிவித்தான். மகன் காதலை புரிந்து கொண்ட அவன் பெற்றோர் அனிதா வீட்டிற்கு பெண் கேட்க சென்றனர். இரண்டு குடும்பமும் கூடி பேசிய போது சாதி, மதம் போன்ற விஷயங்கள் ஒத்து வராத காரணத்தினால் இவர்களின் காதல் கதையும் முடிவுக்கு வந்தது. அனிதா அதே கல்லூரியில் முதுகலை இயற்பியல் சேர்ந்தாள். ராமும் வேலையில் கவனம் செலுத்த துவங்கினான். அவனை பயிற்சி காலத்திற்கு பிறகு பங்களூருக்கு அவன் பணி புரியும் நிறுவனத்தில் மாற்றம் அளித்தது. இந்த பிரிவு இவர்கள் மனதில் ஆறாத ரணமாக இவர்கள் இன்று வரை இருந்து வருகிறது.

பத்து ஆண்டுகளுக்குள் இவர்கள் இருவரின் வாழ்விலும் எவ்வளவு மாற்றங்கள்? அடுத்த நாள் காலையிலே அனிதாவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவள் இங்கு எப்படி? அவள் கணவன் என்ன செய்கிறான்? சுற்றுல்லா வந்துள்ளா? என பல கேள்விகள் ராமின் மனதில் அலை பாய்ந்து கொண்டு இருந்தது. அவனது மேலாளர் ‘சார் அவலஞ்சே பகுதியில் ஒரு பங்களா விலைக்கு வருது நீங்க வந்தா பேசி முடிச்சிரலாம்.’ என்று கூறி ராமின் கவனத்தை நிகழ் காலத்திற்கு திருப்பினான். அவர்கள் சென்று பேசி முடித்து வர நேரம் மலை நான்கை தொட்டது. ‘சார் பெர்ன்ஹில்லில் உள்ள csi memorial ஸ்கூலில் என் பொண்ணு படிக்கிறா, தினமும் நான்தான் ஸ்கூல் கொண்டு பொய் கூப்பிடு வருவேன் நாம போற வழியில் தான் அது இருக்கு அவளை பிக் அப் பண்ணிக்கலாமா ?’ என்று மேலாளர் வினவினான். ‘இத கேட்கணுமா நேர ஸ்கூலுக்கு வண்டிய விடுங்க சாரதி’ என்று ராம் கூறினான். பள்ளி முடிந்த நேரம் அது பிள்ளைகள் ஓவவான்றும் வீட்டுக்கு செல்லும் குஷி யோடு வந்து கொண்டு இருந்தன. அங்கு தோளில் கை பையோடும், ஒரு கையில் சச்சினை கை பிடித்து கொண்டும் மற்ற கையில் மதிய உணவு பையும் அனிதா வந்து கொண்டு இருந்தாள். நேற்று போல் சுடிதார் அணியாமல் இன்று எளிமையாக பருத்தியால் நெய்த புடவையில் இருந்தாள். தன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து நின்று கொண்டு கை பேசியில் ஹைதராபாதில் உள்ள தன் நிறுவன பணியாளரிடம் தெலுகு மொழியில் பேசி கொண்டு இருந்த ராமை கண்டு கொண்ட அனிதா அவன் முன்னால் வந்து நின்றாள். அவளை பார்த்தவுடன் நினைத்தது நடந்தது என்பதை உணர்ந்தான். ‘எப்படி இருக்கே ராம்’ என்று அனிதா கேட்டாள்.
‘நல்ல இருக்கேன் நீ எப்படி இருக்கே அனிதா ? என்ன பையன கூப்பிட வந்தியா?’

‘இல்ல நான் இந்த ஸ்கூலில் டீச்சரா வொர்க் பண்றேன். என் பையன் சச்சின் இங்க தேர்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்; சச்சின் அங்கிள் ஞாபகம் இருக்கா குட் இவிநிங் சொல்லு’; குட் இவிநிங் அங்கிள்’

மேலும் அனிதா தொடர்ந்தாள் ’என்ன நீ இந்த பக்கம்’

‘ என் மேனேஜர் பொண்ணு இங்க படிக்கறாள் அவளை பிக் அப் பண்ணிட்டு போக வெயிட் பண்றேன்’ அவர் மகளை கூப்பிட உள்ள போய் இருக்கிறார்.’
‘நீ எப்படி போற? நான் உன்ன ட்ராப் பண்ணவா?’
‘வேண்டாம் எனக்கு பக்கம்தான். ஆமா நீ என்ன பண்ணிட்டு இருக்க? கல்யாணம் ஆய்டுச்சா?’

நான் பிசினஸ் மேன். சொந்தமா ஐ.டி கம்பெனி வச்சிருக்கேன். இங்க ஊட்டியில் ரெண்டு பங்களா இருக்கு, நான் இன்னும் கல்யாணம் பண்ணிகல’.
அதற்குள் மேலாளர் அவர் மகளை அழைத்து வந்தார். அனிதாவும் தன் வீடு பக்கத்தில் உள்ளது என்றும் அவசியம் வீட்டுக்கு வர வேண்டும் என்று அழைத்தாள்.

‘எனக்கு கொஞ்சம் கமிட்மென்ட்ஸ் இருக்கு நாளை கழித்து ஈவினிங் வரேன்’
ஓகே அங்கிள் க்கு பை என்று சொல்ல சொல்லி சச்சினின் கை பிடித்து மேலே ஆட்டினாள்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு புது பங்களா பத்திர பதிவு விஷயங்கள், அதற்கான பண ஏற்பாடு என்று பரபரப்பாக ராம் இருந்தான். அனைத்து அலுவல்ககளும் முடிந்த பிறகு அனிதாவை சந்திக்க சென்றான். பத்து ஆண்டு கதைகள் பேச அவள் வீட்டிற்கு சென்றான். அவளும் தன் கடந்த கால வாழ்வின் பதிவுகளை பகிர்ந்து கொள்ள ஒருவன் இருக்கிறான் என்று அவனுக்காக காத்து கொண்டு இருக்கிறாள்.

மாலை ஆறு மணி. பெர்ன் ஹில் பகுதியில் உள்ள புதிதாக கட்டப்பட்ட அந்த புது அடுக்கு மாடி குடியிருப்பிர்க்குள் ராமின் ஹோண்டா சிட்டி கார் நுழைந்தது. முதல் மாடியில் உள்ள பி3 பிளாட்டின் அழைப்பு மணியை அழுத்தியவுடன் கதவை திறந்து கொண்டு புன்னகையோடும், கனிவோடும் அவனை பார்த்து ‘வா ராம்’ என்று அனிதா வரவேற்றாள். இரண்டு நாட்களுக்கு முன் பார்த்ததை போல் எளிமையான பருத்தியால் நெய்த புடவையில் இருந்தாள். கண்ணாடி அணியவில்லை முகத்தில் அன்றைய களைப்பு மறைய நன்றாக முகம் கழுவி இருந்தாள். மிகவும் எளிமையாக இருந்தது அந்த ஒற்றை படுக்கை அறை வீடு. வரவேற்பு அறையில் வந்தவர்கள் அமர நான்கு நாற்காலிகள். படுக்கை அறையில் ஒரு பெரிய கட்டில் அதனுடன் இணைந்த குளியல் அறை. மேலும் சமையல் அறை, துணி காயபோட பால்கனி. இதை பார்த்த ராம் உரையாடலை துவங்கினான்.

‘எப்படி இருக்க அனிதா ? இது உன் சொந்த வீடா?

‘நான் நல்லா இருக்கேன். இது என் சொந்த வீடு தான் ராம். போன வருஷம் தான் பேங்க் லோன் போட்டு வாங்கினேன். நீ எப்படி இருக்கே? ஹொவ் அபௌட் எ டீ?’

‘ஐ அம் குட், கெட் எ ஸ்ட்ராங் டீ’ என்று ராம் கூறியவுடன் சமையல் அறைக்கு செல்ல அனிதா எழுந்தாள். இந்தா என்று தன் பாக்கெட்டில் இருந்து வெளிநாடு சாக்லேட் எடுத்து ‘இது சச்சினுக்கு என்று’ கொடுத்தான். ‘தேங்க்ஸ், சார் கிரிக்கெட் விளையாட போய் இருக்கார்’. என சொல்லி அதை வாங்கி கொண்டு உள்ளே சென்றாள். அந்த அறையில் இருந்த அலமாரியில் இயற்பியல் புத்தகங்கள், மேலும் விவிலியம், சில போது அறிவு நூல்கள் இருந்தது. அதை பார்த்து கொண்டு இருந்ததை கவனித்த அனிதா ‘போர் அடிசிடுனா புக்ஸ் எடுத்து படி, இல்ல இன்னைக்கு வந்த ஹிந்து, தினகரன் பேப்பர் இருக்கு படி, நான் டிவி பார்க்கறது இல்லைன்னு உனக்கு தெரியும்னு நினைக்கிறன்’.

ஆம் அவள் குடும்பம் மிகவும் ஆர்தோடாக்ஸ் சிறு வயது முதலே படிப்பு ஒன்று தான். பள்ளி, கல்லூரி கல்வி மட்டும் அல்லாது அனைத்து நூல்கள், செய்தி தாள்கள் என்று படித்து கொண்டே வளர்ந்தவள். அவள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மேலும் கிறிஸ்தவர்கள் என்பதால் தொலைக்காட்சி கூட கிடையாது. ஒரே பொழுது போக்கு மற்றும் வெளியே செல்லும் இடம் ஞாயிறு தோறும் சர்ச் மட்டும் தான். முதல் திரைப்படம் பார்த்ததே ராமுடன் தான். அது கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா. இவனுக்கு வாசிக்கும் பழக்கத்தை பரிந்துரை செய்ததே அனிதா தான். இன்று ராம் பெரிய தொழில் அதிபர் ஆக ஒரு காரணம் வாசிக்கும் பழக்கம்.

அந்த அறையில் மாட்டி இருந்த இயேசு படத்தை பார்த்தான். சற்று பக்கத்தில் மாட்டி இருந்த பார்த்து கொண்டு இருந்த போது ‘அது என் கணவர் பெர்னாண்டஸ்’ என்று குரல் கேட்டது. திரும்பினால் கையில் தேநீர் கோப்பையுடன் நின்று கொண்டு இருந்தாள் அனிதா.

ராம் அதை வாங்கி கொண்டு அமர்ந்த பிறகு அனிதா பேச துவங்கினாள். ‘அவர் இறந்து ஏழு வருஷம் ஆச்சு, ஒரு விபத்துல. எனக்கு சச்சின கொடுத்து போய்ட்டார். எனக்கு அவர் கூட வாழ்ந்த இடத்தில் இருக்க பிடிக்கலை. எங்க ஊட்டியில் ஸ்கூல் டீச்சர் ஒபெநிங் இருக்குன்னு வந்து அட்டென்ட் பண்ணேன். பிசிக்ஸ் டீச்சர் ஆகிட்டேன். இது போக 10, +2 பசங்களுக்கு டியூஷன் எடுக்கறேன். என்ன பண்ண பேங்க் லோன் கட்ட்னும்ல.
‘அப்போ அங்கிள், ஆன்டி, பெர்னாண்டஸ் பாரேன்ட்ஸ்?’

அவங்க எல்லாம் சென்னைல தான் இருக்காங்க சம்மர் லீவுக்கு சச்சின அங்க கூட்டிட்டு போவேன்.’ ‘சாரி உன்னை பீல் பண்ண வச்சிட்டேன்.’ போன மாசம் பி.எம் கிட்ட அவார்ட் வாங்கியதற்கு என் வாழ்த்துகள். ஹிந்துவில் உன்னை பற்றி படிச்சேன். வெரி குட். பி.பி.ஒ வில் தான வொர்க் பண்ண? தென் ஹொவ் யு கெட் இன் டு தி பிசினஸ்?

‘இரண்டு வருஷதிருக்கு அப்புறம் ஒரு பிசினஸ் ப்ரோபோசல் வந்தது. நெக்ஸ்ட் ஒன் இயர் டைமுக்குள் அவங்க கேட்ட ரிசல்ட் காண்பிச்சேன். அடுத்து அடுத்து ப்ரோஜெக்ட்ஸ் வர ஆரம்பிச்சது. கேட் எக்ஸாம் எழுதி ஐ.ஐ.எம் ட்ரை பண்ணேன். அங்க கிடைக்கல. அண்ணா யுனிவர்சிட்டியில் வீக் எண்டு கோர்ஸ் கிடைச்சது. தாம்பரம் பக்கத்தில் ஆபிஸ் ஓபன் பண்ணி ஏற்கனவே வொர்க் போயிட்டு இருந்தது. அஞ்சு நாள் உழைப்பு, இரண்டு நாள் படிப்பு இது தான் லைப் நு விரும்பி எத்துகிட்டேன். எம்.பி.ஏ. முடிச்ச பிறகு முழுக்க பிசினஸ் தான் எனக்கு எல்லாம். முதலில் சென்னையில் முன்று பிராஞ்ச ஆரம்பிச்சேன். அடுத்து ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், பாரிஸ், நியூ யார்க் எப்படி எல்லா கஸ்டமர் பேஸ் எக்ஸ்பாந்து பண்ணேன். அந்த இடங்களில் பிசினஸ் வளர்ச்சி இருந்ததால் அங்க ப்ரன்ச்ஸ் ஓபன் பண்ணேன். android வளர்ச்சி நல்ல இருந்ததால், நிறைய applications, புது மாடல் மொபைல் இதெல்லாம் செய்தோம். நல்ல லாபம் வந்துச்சு. ஹைதராபாதில் செட்டில் ஆயிட்டேன். இந்த பீல்ட் போக இங்க ரெண்டு பங்களா வாங்கி டூரிஸ்ட் ஹோம் ஆகா வாடகைக்கு விட்டுருக்கேன்.. வேற மூணு கம்பெனி acqusition பண்ணி இருக்கேன். லைப் இஸ் கோயிங் வெல்.

சோ கலாட் டு நொவ்

ஆமா அங்கிள், ஆன்டி எப்படி இருக்காங்க?

அவங்க ரெண்டு பேரும் கடவுள் ஆகிட்டாங்க.

ரியல்லி சாட்.

‘அம்மாவுக்கு தான் எனக்கு கல்யாணம் பண்ணி பார்கனுமு ஆசை பட்டாங்க. பட் அதுக்குள்ளே போய் சேர்ந்துதாங்க.’

அடுத்த சில நிமிடங்கள் மௌனமாக இருந்தனர். அந்த அமைதியை கலைக்க ராமின் ஐ போன் அலறியது. அழைப்பை பேசி முடித்த பின் ராம் ‘அனிதா ஐ நீத் டு கோ சம் இம்பர்டன்ட் வொர்க்., உன் மொபைல் நம்பர் கொடு, கேட்ச் யு லேட்டர். நான் மொபைல் யூஸ் பண்ணறது இல்லை. யாரையும் கான்டக்ட் பண்ண பி சி ஒ தான். என்னை யாரும் கான்டக்ட் பண்ண அந்த பி சி ஒ நம்பர் அண்ட் ஸ்கூல் நம்பர் குடுப்பேன்.’ என்று அனிதா கூறியதை கேட்டு விட்டு ‘சச்சின கேட்டதா சொல்லு’ கூறி விடை பெற்றான்.

தன் அலுவல்களை முடித்த பிறகு, அணிதாவுடன் நடந்த சம்பாஷணையை நினைத்து பார்த்தான். ஏன் அவளை திருமணம் செய்து கொள்ள கூடாது? அனிதாவை விட நல்ல துணை கிடைப்பது கஷ்டம் என்று தோன்றியது. மேலும் அவள் மகன் பெயர் சச்சின் இறந்து போன கணவனின் பெயர் பெர்னாண்டஸ். எங்கோயோ இடிப்பது போல் உணர்ந்தான். சரி எப்படி இருந்தால் என்ன, சச்சினை தன் மகனை வளர்க்கலாம் இன்று முடிவு செய்தான். மேலும் அவனுக்கு ஆச்சரியம் இத்தனை நாட்களாக கைபேசி கூட பயன்படுத்தாமல் இருக்கிறாள் மேலும் தனி மனுஷியாக ஒரு குழந்தையை வளர்த்து வருகிறாள் என்பது மிக பெரிய விஷயம்.

மறு நாள் காலையிலே அவள் பணி புரியம் பள்ளிக்கு அவளை சந்திக்க சென்று விட்டான். அவனை அந்த நேரத்தில் பார்த்ததும் அனிதாவிர்க்கு அவ்வளவு ஆச்சரியம். ‘என்ன ராம் என்ன விஷயம் ?’ என்று வினவி அவனை தனியாக அழைத்து சென்றாள். ராமிடம் இருந்து நேரடியாக அந்த கேள்வி வந்தது ‘வில் யு மாரி மீ?’ இதை கேட்ட அனிதா சத்தமாக சிரித்தாள். ‘நாளைக்கு காலை பதினோரு மணிக்கு போடநிகால் கார்டன் வா, என் முடிவை சொல்றேன்’. இதை கேட்ட ராம் மகிழ்ச்சி கொண்டான். நான் கண்டிப்பா வரேன் என்று கூறி விட்டு சென்றான்.

ஊட்டி தாவரவியல் பூங்கா. பல வகை செடிகளும், வண்ண வண்ண பூக்களும் பூத்து குலுங்கும் அழகிய இடம். அனிதா சொல்லும் முடிவுக்காக அன்று நன்கு உடை அணிந்து, அவள் கூறிய நேரடிற்க்கு முன்பாகவே அங்கு சென்று காத்து கொண்டு இருந்தான். சரியாக 10.55 மணிக்கு உள்ளே நுழைந்தாள் அனிதா. ‘ஹாய் ராம் என்ன சீக்கிரமா வந்துத போல் இருக்கு, இங்கே கொஞ்சம் சீட்ஸ், பூ செடிகள் வாங்க வந்தேன்.’

‘சச்சின் வரலியா?’

‘சார் வழக்கம் போல் கிரிக்கெட் விளையாட போய் இருக்கார், ஹி லவ் கிரிக்கெட். இன்னைக்கு சனிகிழமை காலையிலே பேட் தூக்கிட்டு கிளம்பிட்டான். இவிநிங் தான் வருவான். சோ ஐ அம் ப்ரீ அதான் இங்கே வந்தேன்.’

‘லெட் மீ பி பிரான்க் எனக்கு இன்னொரு கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லை. இது நிச்சயம் உனக்கு ஷாக் ஆக இருக்கலாம். கடந்த காலத்தை பற்றி முழுசா உன் கிட்ட சொல்லல. நான் எம்.எஸ் சி முடிச்ச உடனே பெர்னாண்டஸ் கூட திருமணம் நடந்துச்சு. பெர்னாண்டஸ் எம்.பி.ஏ படிச்சவர் ஒரு பெரிய கம்பெனியில் நல்ல பதவியில் இருந்தார். பழக நல்லவரா இருந்தார். அவருக்கு ச்மொகிங், ட்ரின்கிங் ஹபித்ஸ் உண்டு. அதை அவரே முதலில் சொல்லி இருந்தார். ஆனா அது எந்த அளவுக்கு அவர் சொல்லவே இல்லை.’

‘அவர் கூட வாழ ஆரம்பிச்ச பிறகு தான் அவர் போக்கு தெரிஞ்சது. தினமும் ஒரு பாக்கெட் சிகிரட் பிடிப்பார். நைட் எப்படியும் ட்ரின்க் பண்ணிடுவார். கிட்ட வந்தாலே புகை நாற்றம் அடிக்கும். தண்ணி அடிச்சா என்ன பண்றோம்னு அவருக்கே தெரியாது. மூட் இருந்தா கட்டி பிடிச்சி அன்பா பழகுவார். மூட் அவுட் நா பெல்ட்டால அடிப்பார். நானும் அவர மாத்திரலாம்னு ட்ரை பண்ணேன் பட் எதுவும் நடக்கலை.’

ஒரு நாலு அஞ்சு மாசம இப்படியே போச்சு. ஒரு வீக் எண்டு நைட் அளவுக்கு அதிகமாக குடிச்சிட்டு ராங் சைடு ல கார் ஓட்டி வந்துட்டு இருக்கும் போது எதிரில் வந்த லாரிக்கு வழி விட போய் அங்க பெவ்மேண்டில் படுத்து இருந்த சிலர் மீது கார் ஏத்தித் கொன்றுட்டார். அதோட கார நிறுத்தாம நேர அங்க இருந்த மின் கம்பம் மீது மோடிட்டார்.’

‘அடுத்த நாள் போலீஸ் என்ன அவர் பாடியை ஐதேண்டிபை பண்ண கூப்பிட்டாங்க. எனக்கு உலகமே இருட்டாகி போனது போல் இருந்துச்சு. இவர் பாடியை ஐதேண்டிபை பண்ண பிறகு எனக்கு அடக்க முடியாம அழுகை வந்துச்சு. அப்போ அங்க பவேமேன்ட்ல இறந்து கிடந்தவங்க பாடிஸ் இருந்திச்சு. இரண்டு பேர் உடல் மூடி வச்சிருந்தாங்க. அங்க ஒரு கை குழந்தை அழுதுட்டு இருந்துச்சு. அதை பற்றி கேட்டபோ அது அவங்க குழந்தைனும் அவங்க பக்கத்துக்கு பில்டிங்கில் கோத்த வேலை பார்கரவ்ங்க தெரிஞ்சது.’
‘என் மைண்டில் ஒரு ஐடியா வந்துச்சு. நான் இந்த குழந்தையை வளர்க்கலாம்னு. அப்போவே அந்த குழந்தையை கையில் எடுடுகிட்டேன். என்னோட பாரேன்ட்சும், பெர்னாண்டஸ் பாரேன்ட்சும் இத ஒத்துக்கல. அவர் போஸ்ட் மோர்டேம் ரிபோர்ட்ல அதிகமாக குடிச்சி இருந்ததா குறிப்பிட்டு இருந்தது. அவரோட தீய பழக்கத்தால் ஒரு குழந்தை அனாதை
ஆயுடுச்சி. இத காரணமா சொல்லி அதை தத்து எடுக்க முடிவு செஞ்சேன். செத்து போன இந்த குழந்தையோட பாரேன்ட்ஸ், அண்ட் பெர்னாண்டேசொட புநிரல் முடிஞ்ச பிறகு இந்த முடிவ சொன்னேன். எல்லாரும் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கோ இதை எதாவது ஆசிரமத்தில் விட்டுருனு சொன்னாங்க. நான் யார் பேச்சையும் கேட்க விருப்பம் இல்லை. கோயம்பேடு வந்தேன் எதோ ஒரு பஸ்சில் ஏறினேன். கையில் இந்த குழந்தை, கொஞ்சம் பெர்னாண்டஸ் வீட்டு செலவுக்கு என்கிட்டே கொடுத்த பணம், என் சர்டிபிகேட். அந்த பஸ் வந்து நின்ற இடம் தான் இந்த உதகமண்டலம். நான் தூக்கிட்டு வந்த குழந்தைதான் சச்சின்’

‘அதுக்கு அப்புறம் நான் சென்னை திரும்பவே இல்லை. என் ஹஸ்பண்ட் பண்ண தப்புக்கு பரிகாரமா இந்த சச்சின என் மகனாக வளர்க்றேன். அவன் நேம் கூட “எப்.சச்சின்” அப்படின்னு தான் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி இருக்கேன். பெர்னாண்டஸ் பாரேன்ட்ஸ் தங்களோட பையன் பண்ண தப்ப புரிஞ்சிகிட்டு என்ன எதுவும் சொல்லல. என்னோட பாரேன்ட்ச்க்கு தான் நான் எங்கே இருக்கேன்னு தெரிஞ்சிக்க பேப்பரில் விளம்பரம் கொடுத்தாங்க. அதனால அவங்கள கான்டக்ட் பண்ணி நான் ஊட்டியில் நல்ல இருக்கேன் நீங்க என்கிட்டே பேச பண்ண இந்த பி.சி.ஒ நம்பரில் கான்டக்ட் பண்ணுங்க, நான் எக்காரணம் கொண்டும் உங்கள தேடி வர மாட்டேனு சொல்லிட்டேன். எனக்கு பயங்கர கோபம் ஒரு குடிகாரனுக்கு கட்டி வச்சி என் வாழ்கையே நாசம் பண்ணிடாங்கனு அதான் யாரும் வேண்டாம்னு இங்க ஒதுங்கி வந்துட்டேன். இங்க நல்ல வேலை, சொந்த பிளாட், அன்பான சச்சின் இதுதான் என் உலகம். இது போடும் இந்த ஜென்மத்திற்கு.’

‘நீ என்ன செகண்ட் டைம் நேற்று ப்ரோபோஸ் பண்ணது பெரிய அதிர்ச்சி தரல. நீ இன்னைக்கு பெரிய பிசினஸ் மேன். உனக்கு ஒரு துணை அவசியம். ஆனா நான் ஏற்கனவே நரகத்தை பார்த்துட்டேன். நீ என்ன கல்யாணம் பண்ணிட்டு சொர்கத்த கொடுத்தாலும் அது எனக்கு வேண்டாம்.’

‘இத்தனை வருஷம் கழிச்சி உன்ன மீட் பண்ணது ரொம்ப சந்தோஷம். உன்னை ஹர்ட் பண்றேன்னு நினைக்காதே. திஸ் இஸ் மை லைப். எனக்கு எதாவது செய்யணும்னு தோணுச்சு என்றால் என் சச்சின் மேல் படிப்புகோ, வேலைக்கோ தேவை பட்டால் உன்னை கான்டக்ட் பண்றேன், அப்போ எதாவது பண்ணு.’

‘உன் வாழ்க்கையில் இவ்வளவு சோகம் இருக்கும்னு எதிர்பார்கல அனிதா. நீ உன் முடிவ மாற்ற மாட்டே, நான் அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்க ஆரம்பிக்கிறேன். பை.’ என்று சிரித்து கொண்டே கை குலுக்கி அவன் திரும்பினான்.

வெளியில் தான் சிரித்தான் என்றாலும் உள்ளே அவன் மனம் கனம் ஆகி தான் போய் இருந்தது. தன் காரை எடுத்து கொண்டு பங்களா திரும்பினான்.
தன் அறையை சாத்தி விட்டு அழ துவங்கினான். வாழ்வில் இரண்டாம் முறை தான் ஆசைப்பட்ட ஒன்று தன் கையை விட்டு போவதை அவனால் தாங்க முடியவில்லை. இன்று எது வேண்டுமானாலும் வாங்க அவனிடம் வசதி உள்ளது. ஆனால் விரும்பியதை அடைய முடியவில்லை என்கிற வலி அவன் மனதை வாட்டியது.

அடுத்த சில நிமிடங்களில் அலறிய அவன் ஐ போன் எடுத்து தெலுகில் பேச துவங்கினான். கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் நின்றது. புன்முறுவல் அவன் உதட்டில் பூத்தது.

சரியாக இரண்டு மணிக்கு அவன் பங்களாவை தேடி ஆட்டோவில் வந்து இறங்கினாள் அனிதா. ராமுக்கு ஏதும் தன்னால் மன உளைச்சல் ஏற்பட்டு இருக்க கூடாது, அவனக்கு ஆறுதல் கூறி தேற்றலாம் என்று அங்கு வந்து சேர்ந்தாள். அவளை பார்த்த மேலாளரின் மனைவி நீங்கள் யார் என்று அனிதாவை வினவினார்.
‘நான் அனிதா ராம் கூட படிச்சவ. ராம மீட் பண்ணனும்’
‘சார் அறை மணி நேரத்திற்கு முன்னால் தான் கிளம்பி போனார். எதோ முக்கியமான வேலையாம். திங்கட்கிழமை யார் கூடவோ ஹைதராபாத்தில் மீட்டிங் இருக்காம். அடுத்த வருஷம் தான் திரும்ப வருவேன்னு சொல்லிட்டு
போய்ட்டார். நீங்க எதாவது முக்கியமான விஷயம் பேசுனுமா’

‘அவர்ட்ட கொஞ்சம் பேசணும் அவர் போன் நம்பர் கிடைக்குமா?’
‘நீங்க உள்ள இருக்க லேன்ட் லைன் வேணா யூஸ் பண்ணிக்குங்க.’
அனிதாவை உள்ளே அழைத்து ராமின் எண்ணை தொலைபேசியில் டயல் செய்து கொடுத்தால் மேலாளர் மனைவி. குன்னூர் வழியாக சென்று காரில் சென்று கொண்டு இருந்த ராம் அந்த அழைப்பை எடுத்து பேசலானான்.

மறுமுனையில் இருந்து ‘நான் அனிதா பேசுறேன்’ என்று கேட்டவுடன், இவள் ஏதும் மனசு மாறி இருப்பாளோ என்று நினைத்தான். ‘சொல்லு அனிதா’ என்று சம்பாஷனை தொடர்ந்தான்.

‘ராம் இப்போ பெரிய ஆள். நான் உன்னை ரிஜெக்ட் பண்ணிடேனு வருத்த படாதே. உனக்கு நிச்சயம் நல்ல பெண் கிடைப்பா. சோ ப்ளீஸ் டோன்ட் பாதர் அபௌட் மீ’
‘சரி அனிதா நீ இவ்ளோ தூரம் வந்து ஆறுதல் சொல்லுவேன்னு நான் நினைக்கல. தேங்க்ஸ் பார் யுவர் கன்செர்ன். பை.’ அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அடுத்த நான்கு நாட்களில் ஊடகங்களுக்கான புது தீனி கிடைத்தது.
‘ஆந்திரா புட்ஸ் நிறுவனத்தை வாங்கியது i-apps’
‘I apps adds new concern to its list. This time its Andhra foods’

இந்த நிறுவனத்தை வாங்க சில மாதங்களுக்கே முன்னே திட்டமிட்டு இருந்தான் ராம். அதற்க்கான செயல்கள் பின்னணியில் நடந்து கொண்டு இருந்தது. ஆந்திரா புட்ஸ் நம்மூர் ஆச்சி, சக்தி மசாலா போன்ற ஒரு நிறுவனமாகும். ஐ.டி துறை மட்டும் அல்லாது மற்ற துறைகளிலும் சாதிக்க விரும்பும் ராமிற்கு கிடைத்த ஜாக் பாட் என்றே இதை சொல்லலாம். லாப கரமாக ஓடி கொண்ட அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட மேலாண்மை குழப்பங்களை தனக்கு சாதகமாக்கி அதை கை பற்றினான். மேலும் ‘அந்த நிறுவனத்தின் பெயர் மாற்ற படாது, அது தனக்கு கீழே இயங்கும் புது நிறுவனம். அதில் வேலை பார்ப்பவர்கள் நீக்க பட மாட்டார்கள். இதற்காக செய்ய பட்ட விலை பேச்சு வார்த்தை குறித்து எதுவும் சொல்ல முடியாது’ என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராம் கூறினான்.

அதில் இருந்து ஒரு மாதம் கழித்து ஹிந்து நாளிதழில் ராமின் திருமண புகைப்படம் வெளி வந்து இருந்தது. இதை பார்த்து மகிழ்ந்த அனிதா அந்த கதையை படிக்க துவங்கினாள்.

பிரபல i-apps நிறுவன உரிமையாளர் ராம் ஆந்திரா புட்ஸ் நிர்வாக இயக்குனர் சினேகா ரெட்டியை மணந்தார். சென்ற மாதம் ஆந்திரா புட்ஸ் நிறுவனத்தை தன் நிறுவனத்தை இணைத்து இருந்தார் ராம். இருவரின் திருமணம் நேற்று காலை திருப்பதியில் எளிமையாக நடந்தது. அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை ஹைதராபாதில் நடக்கிறது.

சச்சினை அழைத்து இந்த புகைப்படத்தை காட்டி இந்த அங்கிள் ஞாபகம் இருக்கா? என்று கேட்டாள். எஸ் மம்மி இவர் உங்க பிரெண்ட் தான. என்றான். ஆமா இவர் என் கூட படிச்சவர் இப்போ பெரிய பிசினஸ் மேனா இருக்கார். நீயும் நல்ல படிச்சி இவர மாதிரி பெரிய ஆளாக வரணும். ராமை பற்றிய கதையை சச்சினுக்கு மகிழ்ச்சியுடன் சொல்லி கொண்டு இருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *