அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 15,042 
 
 

அர்ஜுனனை அதிரபாரதப் போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது… அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் இடையே நடந்த யுத்தத்தில், தேரிலிருந்த படியே அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து கர்ணனது தேர் மீது எய்தான்.

அந்த அம்பின் வீரியத்தால், கர்ணனது தேர் சற்று நிலைகுலைந்து, நான்கு அடி பின்னோக்கி நகர்ந்தது. இதனால், கோபமுற்றான் கர்ணன். மறு கணம் அவன் ஆக்ரோஷத்துடன் அம்பு ஒன்றை எடுத்து அர்ஜுனனின் தேர் மீது எய்தான். அதனால் அர்ஜுனனின் தேர் ஓர் அடி பின்வாங் கியது.

அப்போது அர்ஜுனன் அருகிலிருந்த கண்ணனிடம் பெருமிதம் பொங்க, ‘‘பார்த் தாயா கிருஷ்ணா… நான் எய்த ஒரே அம்பு, கர்ணனின் தேரை நான்கு அடி பின்னோக்கி நகர்த்தி விட்டது. ஆனால், பதிலுக்கு அவன் எய்த அம்பு, எனது தேரை ஒரே அடி மட்டுமே பின்னுக்கு நகர்த்தியது!’’ என்றான்.

அவசரமாக அவனை இடைமறித்த கண்ணபிரான், ‘‘அர்ஜுனா… இதை நீ பெருமைக்குரிய செயலாகக் கருதுகிறாயா?’’

கண்ணபிரானது குரலில் பொதிந் திருந்த ஏளனத்தைக் கவனித்தான் அர்ஜு னன்.

‘‘கண்டிப்பாக! அதி லென்ன சந்தேகம்?’’ _ சற்று உஷ்ணமாகவே கேட்டான் அவன்.

மறு கணம் வாய் விட்டுச் சிரித்தார் கண்ணபிரான். எரிச் சலுற்றான் அர்ஜுனன்.

‘‘கிருஷ்ணா, ஏன் சிரிக் கிறாய்?’’

‘‘உனது அறியாமையை எண்ணி…’’ _ கண்ண பிரான் அமைதியாகக் கூறினார்.

‘‘அறியாமையா?’’

‘‘ஆமாம்! விளக்குகிறேன். உனது இந்தத் தேரின் மேலே என்ன இருக்கிறதென்று தெரி யுமா? சகல வல்லமையும் பொருந்திய ஸ்ரீஆஞ்ச நேயரின் கொடி. அவரது பலம் என்ன… பராக் கிரமம் என்ன? அவர் இந்தத் தேரில் இறங்கி நம்மைக் காத்து வருகிறார். மேலும் உலகைக் காக்கும் பரந்தாமனான நான், வில் வித்தையில் நிகரற்றவனான நீ… இப்படி மூன்று பேர் இதில் உள்ளோம். ஆனால், இதையெல்லாம் மீறி ஓர் அம்பின் மூலம் தேரை ஓரடி நகர்த்தி விட்டான் கர்ணன். அதனால் உண்மையில் அவன்தான் பெருமைக்குரியவன்!’’

கண்ணனின் விளக்கம் கேட்டு அர்ஜுனனின் தலை வெட்கத்தால் கவிழ்ந்தது.

\

Print Friendly, PDF & Email

1 thought on “அர்ஜுனனை அதிர வைத்த கர்ணன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *