அன்பின் வழியது உயிர்நிலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 11,337 
 
 

1

தமிழகத்திலிருந்து வந்த நாவாயிலிருந்து இறங்கிய வேலனிடத்தில் நசரேயனாகிய இயேசுவைக் காணும் ஆவல் அதிகமாய் இருந்தது. இயேசுவைக் குறித்து அவர் அதிகமாகக் கேள்விப் பட்டிருக்கிறார். இயேசு செய்த அநேக அற்புதங்களைப் பற்றிய செய்திகள் சேர நாட்டிலும் பேசப்படுகின்றது. அவர் கடவுளின் அவதாரம் என்று சிலரும் கடவுளால் அனுப்பப்பட்ட மகான் என்றும் சிலர் கடவுளின் மடியிலிருந்து இறங்கி வந்த இறை மைந்தன் என்றும் அவரால் குருடர்கள் பார்வையடைகிறார்கள் ; சப்பாணிகள் நடக்கிறார்கள் ; தொழுநோயாளிகள் குணமடைகிறார்கள்; மரித்தவர்கள் எழுந்திருக்கிறார்கள் என்று அங்கே வரும் யவனர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறார்.

வேலன் சேர நாட்டின் வடபகுதியான ஏழில் மலையினரான பெரு வணிகர்; ஏழிலிசைக் கருவியைப் போன்ற தோற்றமுடையதால் அம்மலை ஏழில் மலை எனப்பெயர் பெற்றது. அவர் ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தார். அவர் தமிழ் மொழி மட்டுமன்றி கிரேக்கம், எபிரேயம், அரபு மொழிகளும் கற்றறிந்தவர். அவர் கலிலேயாக் கடலோர ஊர்களில் விசாரித்த போது இயேசு எரிகோவிலிருப்பதாகக் கூறினார்கள். எரிகோ வந்து விசாரித்த போது அவர் எருசலேம் நோக்கிச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். அவர் தம் உடைமைகளை நம்பிக்கையான ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு வழிச்செலவுக்கான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு எருசலேம் நோக்கிப் பயணமானார். கடினமான திணை நிலப் பகுதி மீது ஏறிச் செல்ல வேண்டியிருந்தது.

அவர் எரிகோவிலிருந்து புறப்பட்ட போது சிலர் நீர் தனியாக இப்பாதையில் பயணிக்க வேண்டாம். கூட்டமாய் பயணிக்கும் வணிகர்களோடு சேர்ந்து கொள்ளுங்கள்; வழியில் ஆரலைக் கள்வர்கள் தனியே வருபவர்களைத் தாக்கி அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிப்பதுடன் அவர்களைக் குற்றுயிரும் குலையுயிருமாக விட்டுப் போவார்கள் என்றார்கள்.

அவரோடு சேர்ந்து நடந்து வந்த சிலர் அவரைக்குறித்து விசாரித்தார்கள். அவர் தாம் தமிழகத்திலிருந்து வருவதாகக் கூறினார். அவர்களில் செபுலோன் என்னும் யூத வணிகர், தமிழகத்தின் எப்பகுதியிலிருந்து வருகிறீர்? என்று வினவினார். வேலன் அவரிடம், நான் சேர நாட்டின் வடபகுதியான மாந்தையைத் தலைநகராகக் கொண்ட குட நாட்டின் ஏழில் மலையைச் சேர்ந்தவன் என்று கூறினார். அப்படியானால் நீங்கள் மூசிக மலையைச் சேர்ந்தவரா? என செபுலோன் வினவினார்.

தயவு செய்து இனி அப்படிக் கூறாதீர்கள். எங்கள் நாட்டில் ஏழில் என்று ஓர் இசைக் கருவி உண்டு. அவ்விசைக் கருவியின் வடிவில் இருப்பதால் அதற்கு ஏழில் மலை என்று பெயர். இப்பெயரைச் சரியாக உச்சரிக்க முடியாத வட நாட்டு ஆரியர்கள், இதனை எலி மலை என்று சொல்லத் தொடங்கிக் காலப் போக்கில் அதன் வட மொழிச் சொல்லான மூசிக மலை என்றே மாற்றிவிட்டார்கள் என்று கூறினார்.

மன்னிக்க வேண்டும்; எங்களுக்கு இந்த விவிகாரங்கள் தெரியாது. உங்கள் நாட்டைப் பற்றி மேலும் சொல்லுங்களேன் என்று செபுலோன் ஆர்வமுடன் வினவினார்.

வேலன் சேர நாட்டின் வட பகுதியான எங்கள் குட நாட்டினை மாந்தையைத் தலைநகராகக் கொண்டு இமயவரம்பன் பெருஞ்சரலாதன் ஆட்சி செய்து வருகிறார். இவர் வடக்கே படையெடுத்துச் சென்று இமைய மலையில் விற்கொடி நாட்டி வந்ததால் இப்பெயர் பெற்றார். தென் பகுதியான குட்ட நாட்டினை வஞ்சி மாநகரைத் தலைநகராகக் கொண்டு சேரன் பெருஞ் சோற்றுதியன் ஆட்சி செய்து வருகிறார் என்றார்.

பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதற்கென்று இஸ்ரவேல் மக்கள் திரள் திரளாய் எருசலேம் நகரை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். வேலன் இவ்வளவு திரளான மக்கள் எருசலேம் நகரை நோக்கி ஏன் செல்லுகின்றனர்? என்று வினவினார்.

இஸ்ரவேல் மக்களுக்கு இந்தப் பாஸ்கா பண்டிகை மிக முக்கியமானதாகும். எங்கள் மூதாதையர்கள் எகிப்தின் அடிமைப்பட்டிருந்தார்கள். மோசே என்னும் எங்கள் இறை வாக்கினரைக் கர்த்தர் பார்வோனிடத்தில் அனுப்பி என் மக்கள் வனாந்திரத்தில் எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி அவர்களை போகவிடவேண்டும் என்று சொல்லும்படி கூறினார்.

மோசே பார்வோனிடம் சென்று நாங்கள் வனாந்திரத்தில் எங்கள் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படி எங்களை அனுப்ப வேண்டும் என்று கூறினார். பார்வோன் உங்களை போகவிடும்படி எனக்கு கட்டளை இட உங்கள் கர்த்தர் யார்? அவரை யாரென்றே எனக்குத் தெரியாது. நான் உங்கள போகவிடமாட்டேன் என்றான். கர்த்தர் பார்வோனின் முரட்டாட்டத்த்தின் நிமித்தம் எகிப்தியரைப் பல்வேறு கொள்ளை நோய்களால் தண்டித்தார். கடைசியாகப் பார்வோனின் தலைப்பிள்ளை முதல் மாவரைக்கும் எகித்திய அடிமையின் தலைப் பிள்ளை வரையிலும் அவர்களின் விலங்குகளின் தலை ஈற்றுகளையும் கொன்று போட்டார். இஸ்ரவேலருக்கு இந்தத் துன்பம் நேரிடாதபடி அவர்கள் வீட்டிற்கொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொண்டு, அதனை அடித்து, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து அதனைப் புசிக்குமுன் வீட்டு வாசலின் நிலைக்கால்களிலும் நிலையின் மேல் சட்டத்த்திலும் தெளித்து அதனைப் புசிக்கும்படி கூறினார். நள்ளிரவில் கடவுளின் தூதர் தன் பட்டயத்தால் எகிப்தியரின் தலைப் பிள்ளைகளையும் தலையீறுகளையும் கொன்று போட்டார். இரத்தம் தெளிக்கப் பட்ட வீடுகளை அழிக்காமல் கடந்து போனார். ஆபீப் மாதத்தில் அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதால் இம்மாதத்தின் முதல் ஏழு நாட்கள் நாங்கள் இப்பண்டிகையை அனுசரிப்போம் என்றார்.

2

[பாலஸ்தீன நாட்டில், மேற்குக் கரை என்னும் பகுதியில் உள்ள “அல்-எய்சரியா என்னும் இன்றைய ஊரே முற்காலத்தில் பெத்தானியா என்று அழைக்கப்பட்ட இடம். பெத்தானியா என்பதன் பொருள் குறித்து அறிஞரிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கு “அத்திப்பழ வீடு” “அனியாவின் வீடு” அல்லது “அனனியாவின் வீடு” என்று பொருள். பெத்தானியா என்பது “துயர இல்லம்” அல்லது “துன்பத்தின் வீடு” எனப் பொருள்படும். இதை “ஏழையர் வீடு” அல்லது “ஏழைகளுக்கு உதவும் வீடு” எனவும் பொருள்படுவதாகக் கருதலாம். இந்த விளக்கத்தின்படி, பெத்தானியாவில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஓர் இல்லம் இருந்திருக்கலாம். ஏழை என்னும்

சொல், வறியவர்களை மட்டுமன்றி,நோயுற்றோர் எருசலேமுக்கு வந்த திருப்பயணிகள் போன்றோரையும் குறித்திருக்கலாம்.

எருசலேம் இயேசுவைப் பற்றி கருத்து வேறுபாடு கொண்ட உணர்ச்சி மிகுந்த இடமாக இருக்கிறது. அவரைப் பிடித்துக் கொலை செய்ய வேண்டும் என்று மதத் தலைவர்கள் விரும்புகின்றனர் என்பதை பொது மக்கள் எல்லாரும் நன்றாக அறிந்திருக்கின்றனர். உண்மையில், யாராவது அவர் இருக்கும் இடத்தைப் பற்றி அறிய வந்தால் அவர்கள் சென்று அவர்களிடம் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டிருந்தனர். சமீப மாதங்களில் மூன்று முறைகள் — கூடாரப் பண்டிகையின் போது, பிரதிஷ்டை பண்டிகையின் போது, அவர் லாசருவை உயிர்த்தெழுப்பியதற்குப் பின் — அவர்கள் அவரை கொலை செய்வதற்கு முயற்சி செய்திருக்கின்றனர்.

பிரதான ஆசாரியன் காய்பா தன் அரண்மனையில் ஆலோசனைச் சங்கத்தைக் கூட்டியிருந்தான். அப்போது அங்கே வந்திருந்த பரிசேயரில் சிலர் “இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே. என்ன செய்யலாம். இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது ரோமர் வந்து நம் பரிசுத்த இடத்தையும் நம் இனத்தையும் அழித்து விடுவார்களே,’ என்றனர். பிரதான ஆசாரியன் காய்பா இறுக்க்மான முகத்துடன் பேசத் தொடங்கினான்: “இனம் முழுதுவம் அழிந்து போவதை விட ஒரு மனிதன் இறப்பது நல்லது.”

யூத மதத்தின் படியும், சட்டத்தின் படியும் அவனுக்கு அதிக வல்லமையும் அதிக அதிகாரமும் இருந்தது]

இத்தகைய சூழலில் தான் இயேசு எரிகோவை விட்டுப் புறப்பட்டு, பஸ்காவுக்கு ஆறு நாட்களுக்கு முன்பே, அதாவது யூத நாட்காட்டியின்படி நிசான் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பெத்தானியா வந்திருந்தார். இயேசுவின் சீஷர்களில் சிலருக்கு இப்பயணம் பிடிக்கவில்லை. அவர்கள் அவரிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள். அதே நேரத்தில் தோமா மற்ற சீடர்களிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்று துணிவுடன் கூறிய வார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் மெளனமானார்கள்.

கடினமான திணை நிலப் பகுதி மீது ஏறிச் செல்ல வேண்டியிருந்ததால், இந்தப் பயணம் ஏறக்குறைய ஒரு நாள் முழுவதையும் எடுத்துவிட்டிருந்தது. அவர் எப்போதும் போலவே, லாசருவின் வீட்டுக்குச் சென்று இரவை அங்கு கழிக்கிறார். பெத்தானியாவில் குடியிருக்கும் மற்றொருவர் இயேசுவையும் அவருடைய கூட்டாளிகளையும் சனிக்கிழமை மாலை உணவுக்கு அழைத்திருக்கிறார். அந்த மனிதர் முன்பு குஷ்டரோகியாயிருந்து இயேசுவால் குணமாக்கப்பட்ட சீமோன். இயேசு அப்போது அங்கு இருப்பதைப் பற்றிய செய்தி எங்கும் பரவுகிறது. இயேசுவைக் காண்பதற்கு அநேகர் சீமோனின் வீட்டுக்கு வருகின்றனர். அவர்கள் அங்கு வந்திருந்த லாசருவையும் காண வருகின்றனர்.

லாசருவின் சகோதரியரில் ஒருத்தியான மார்த்தாள், தன்னுடைய கடுமையாக உழைக்கும் சுபாவத்துக்கு ஏற்றவாறு, விருந்தினர்களுக்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் சகோதரி மரியாள் அவளுடைய குணத்துக்குப் பொருத்தமாக இயேசுவை கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் இம்முறை அவள் வாதத்தை தூண்டும் விதத்தில் ஒரு காரியத்தை செய்கிறாள். ஒரு படிகச்சிமிழ் இலாமிச்சை தைலத்தை இயேசுவின் தலை மற்றும் பாதங்கள் மீது ஊற்றி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைக்கிறாள்.. இது அதிக விலைமதிப்புள்ளதாயிருக்கிறது. உண்மையிலேயே அதனுடைய மதிப்பு ஏறக்குறைய ஒரு வருட ஊதியத்துக்கு சமமாயிருக்கிறது. தைலத்தின் நறுமணம் வீடு முழுவதையும் நிரப்புகிறது.

அவருடைய பன்னிரண்டு சீஷர்களில் ஒருவரான யூதாஸ்காரியோத்து கோபமடைந்து “இந்த வீண்செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை முந்நூறு பண தெனாரித்துகளுக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன?” என்றான்.

யூதாஸ் இப்படியாக யோசித்தான்; இவள், அதை விற்று தரித்திரருக்கு உதவ இயேசுவிடத்தில் கொடுத்து இருந்தால், அந்த பணம் நம்மிடம் வந்திருக்கும், இயேசுவும் யாருக்காவது போய் உதவும் படி சொல்வார், நாமும் அதில் திருடி இருக்கலாமே ! என யோசித்தான்.

இயேசு “யூதாஸ்! இவளை விட்டுவிடு; என்னை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். தரித்திரர்கள் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள். நான்எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கமாட்டேன்”, என்றார்.

3

யூதாஸ் யூத மார்க்க வெறி கொண்டவன். அவன் ஒருநாள் யூத தீவிரவாதி பரபாஸை சந்திக்க நேர்ந்தது; யூத தீவிரவாதிகள் இஸ்ரேலை ஆண்டு வந்த ரோம ஆட்சியாளர்களிடம் இருந்து விடுதலைக்காகப் போராடிக் கொண்டு இருந்தார்கள். யூதாசும் அவர்களோடு சேர்ந்து கொண்டான். அவர்களோடு பழக ஆரம்பித்த போது “மேசியா என்கிற கிறிஸ்து வந்து இஸ்ரவேலை இரட்சிப்பார்” என்று அவர்கள் பேசி கொள்கிறதை அவர் கவனித்து கேட்டான். அவனுடைய உள்ளத்தில் “அப்படியானால் யார் அந்த மேசியா” என்ற எண்ணம் உருவானது. இதற்கிடையில் தான் இயேசு கிறிஸ்துவே மேசியா என்று அநேகர் சொன்னதைக். கேள்விபட நேர்ந்தது. நாமும் அவரோடு சேர்ந்து கொண்டால் நாமும் பிற்காலத்தில் இஸ்ரவேலை ஆளுகை செய்யலாம் என்று யூதாஸ் நினைத்தான். உடனடியாக போராட்ட இயக்கத்தை உதறி தள்ளி விட்டு, இயேசுவை நோக்கி தன்னுடைய வாழ்க்கையைத் திருப்பினான் யூதாஸ் காரியோத்து.

இயேசு அவரை தன்னுடைய பன்னிரண்டு சீஷர்களில் ஒருவராக மாற்றினார். பேய்களை விரட்டவும், நோய்களை குணமாக்கவும் அதிகாரம் தந்தார். யூதாஸ் நன்கு படித்தவனாக இருந்தான்; மேலும் இயேசுவுக்கு வரும் காணிக்கைகளை யூதாஸ் கவனித்து கொண்டும் வந்தான். ஏழைகளுக்கு பணத்தை கொடுக்கவும், விதவைகளுக்கு உதவவும், இன்னும் தான தர்மங்கள் செய்வதிலும் இயேசு அவனுக்குக் கட்டளை இடுவது வழக்கம். பணத்தில் கொஞ்சமும் சேமிக்காமல் இப்படி பிறருக்கு கொடுப்பது யூதாசுக்கு பிடிக்கவில்லை. ஏன் என்றால் யூதாஸ் அதைத் திருடியே வாழ்ந்தான்.

இயேசு விசுவாசத்தில் வாழவே அப்போஸ்தலருக்குக் கற்று கொடுத்து வந்தார். எப்படி தேவனை மட்டுமே நம்பி வாழ்வது? எப்படி போதுமென்ற மனத்தோடே தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுத்து வந்தார். யூதாஸ் இயேசுவோடு இருந்தும், நல்ல கல்விமானாக இருந்தும் இயேசுவை சரியாக புரிந்து கொள்ளாமல் போனான். இயேசுவின் மற்ற சீடர்கள் (அப்போஸ்தலர் அல்லாதவர்கள்) அவரை விசுவாசியாமல், முறுமுறுத்துப் பின்வாங்கினார்கள். யூதாசும் அவர்களோடு சேர்ந்து விசுவாசியாமல் பின்வாங்கினான்.

இந்த சமயத்தில் அவனுக்குத் தன் பழைய வாழ்க்கைக்கு மீண்டும் செல்ல வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது. அதற்கு அவன் தன் பழைய சிநேகிதர்களைத் தேடிச் செல்ல வேண்டும். அதற்கு அவனுக்கு ஒரு குதிரை வேண்டும். ஓர் அராபிய வியாபாரி தன்னிடத்தில் ஓர் உயர் ஜாதிக் குதிரை இருப்பதாவும் அதன் விலை முப்பது வெள்ளிக் காசுகள் என்றும் சொல்லியிருந்தான்

யூதாஸ் தன்னால் இந்த பணத்தைப் புரட்ட முடியவில்லையே என வெறி கொண்டான், அதே வேளையில் பிசாசு அவனிடத்தில் புகுந்தான். ஒரேயடியாக அதிகமான பணம் சம்பாதிக்க அவனுக்கு தோன்றிய ஒரே யோசனை “பரிசேயரிடம் இயேசுவை காட்டி கொடுப்பது” அவனது மனச்சாட்சி மரத்துப்போய் காணப்பட்டது. மூன்று ஆண்டு காலமாக, அவன் நண்பனைப் போல வெளியில் காணப்பட்டான். ஆனால் அவனுடைய இருதயம் இயேசுவிற்கு தூரமாய் இருந்தது. இப்போது அவன் இயேசுவைக் காட்டிக் கொடுக்க சரியான தருணத்திற்காக் காத்திருந்தான். ஆனால் இயேசு அனைத்தையும் அறிகின்றவர். அவர் ஒவ்வொரு நபரைக் குறித்தும் முழுமையாக அறிந்திருக்கிறார்.

இயேசு பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டு, எருசலேமிற்கு வருகின்ற செய்தி எங்கும் பரவுகிறது. ஆகையால், இயேசுவைக் காண்பதற்கு அநேகர் எருசலேமிற்கு வருகின்றனர். இயேசு எருசலேமிற்குள் நுழைந்த போது ஒரு கழுதைக் குட்டியின் மேலே அவரை உட்கார வைத்து வழியெல்லாம் மக்கள் தங்கள் ஆடைகளையும், இலைகளையும் தழைகளையும் பரப்பிக் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவரைத் தாவீதின் குமாரன்! தேவகுமாரன்! என்று புகழ்ந்தார்கள். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார். அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார்.

இயேசு அன்று மாலை நகரிலுள்ள ஒரு வீட்டின் பெரிய மேல் அறையில் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அளித்தார். அப்போது தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்; தம்மைச் சீடர்களில் ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று முன் கூறினார்; தம் உடலையும் இரத்தத்தையும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளிப்பதாகக் கூறினார். அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, சீடர்களுக்குக் கொடுத்து அது தம் உடலும் இரத்தமும் ஆகும் எனவும் தாம் செய்ததைச் சீடரும் தம் நினைவாகச் செய்யவேண்டும் என்றார். சீடர்களின் காலடிகளைக் கழுவி, தம் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி ஒருவர் மற்றவருக்குப் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தினார். பஸ்கா உணவு சாப்பிடும்போது, யூதாசை இயேசு வெளியே அனுப்பிவிட்டார்.

இயேசு இறுதி இரவுணவு வேளையில், தாம் விண்ணகத்திற்கு செல்வது குறித்து மறைபொருளாகப் பேசிக் கொண்டிருந்தபோது, தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்று கேட்க, அவரது கேள்விக்கு விடையாக, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” என்ற இயேசுவின் வார்த்தைகள் வெளிப்பட்டன.

யூதாஸ் மிக விரைவாக எருசலேமின் குறுகலான பாதையின் வழியே நடந்தான். கவலை நிறைந்தவனாக திரும்பிப் பார்த்தான். இறுதியில் பிரதான ஆசாரியனின் வீட்டை அடைந்தான் – ஒரு நண்பன் எதிரியிடம் சென்றான். பூட்டப்பட்ட கதவுகளின் பின்னே திட்டங்கள் தீட்டப்பட்டன. இவர்கள் இயேசுவைக் கொலை செய்யும் படி விரும்பினார்கள். ஒருவன் கதவைத் திறந்தான். வாசலில் இயேசுவின் சீடன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.

பரிசேயர்களால் பகலிலே இயேசுவை பிடிக்க கூடாமல் இருந்தது. அனேக மக்கள் இயேசுவே கிறிஸ்து(மேசியா) என நம்புகின்றனர். மேலும் அவரால் செய்யபட்ட அற்புதங்கள், அதிசயங்களை கண்ட ஜனங்கள், நோயில் இருந்தும், பிசாசின் பிடியில் இருந்தும் மீட்டு எடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இயேசுவைப் பகலிலே நம்மால் நெருங்குவது கூட சாத்தியம் இல்லை. மக்கள் மத்தியில் கலகம் ஏற்ப்படாமல், அமைதியாக இயேசுவை கைது செய்ய ஏற்ற வேளை இரவு மட்டுமே என்றான். ஆனால், இயேசு இரவிலே எங்கே இருப்பார் என சீஷர் தவிர யாருக்குமே தெரியாது! இந்த வேளையில் தான் யூதாஸ் பரிசேயர்களுக்கு உதவ முன்வந்தான்.

இயேசுவைக் கைது செய்யும்படி, அவர் இருக்கும் இடத்தைக் காண்பித்தால் எனக்கு என்ன தருவீர்கள்? ஒரு விதமான அமைதி அனைவரின் முகங்களிலும் காணப்பட்டது. நாங்கள் உனக்கு 30 வெள்ளிக் காசு தருவோம். அவர்கள் அவனுக்கு பணத்தை வாக்குத்தத்தம் செய்தார்கள். உடனடியாக பேச்சு வார்த்தை முடிந்தது.

சீடர்கள் உணவு அருந்திய பின் இயேசு ஒலிவ மலைக்குப் போய் அங்கே கெதரோன் ஆற்றுக்கு அப்புறம் இருக்கும் கெத்சமனித் தோட்டத்தில். தம் தந்தையாம் கடவுளை நோக்கி முதல் முறை இவ்விதம் வேண்டல் செய்கிறார்: “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்.”

அவ்வேளையில் அவர் மிக்க துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர் அதிகமான மன அழுத்த்தில் இருந்ததால் அவர் உடலிலிருந்த மற்றும் மூளையில் இருந்த சிறிய இரத்த நாளங்கள் வெடித்து, வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாக நிலத்தில் விழுந்தது.

அவர் தம்முடைய சீடர்கள் இருக்குமிடத்திற்கு வந்து பார்க்கும்போது, அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கின்றனர்.

அவர் பேதுருவை அழைத்து ஒரு மணி நேரமாவது எனக்காக விழித்திருக்க மாட்டீர்களா? என வினவினார். நீங்கள் சோதனைக்கு உட்டபடாமல் ஊக்கமாய் ஜெபியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்; இரண்டாம் முறை, இத்துன்பக் கிண்ணத்தில் நான் அருந்தினாலன்றி இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில் உம் விருப்பத்தின் படியே ஆகட்டும் என்றார்.

அவர் மீண்டும் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்குவதைக் கண்டு இம்முறை ஓன்றும் சொல்லாமல் மீண்டும் போய் அதே வார்த்தைகளைக் கொண்டு ஜெபிக்கலானார். மூன்றாம் முறை அவர்களிடம் வந்து, இப்போது விழித்தெழுங்கள் ; என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் இதோ வந்து விட்டான்; எழுந்திருங்கள் போவோம் என்றார். அப்போது இயேசு தேர்ந்தெடுத்திருந்த பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வருகிறான்.”ரபி வாழ்க” என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறான்.

இயேசுவைக் கைது செய்கிறார்கள்.

போர்வீரர்கள் இயேசுவை நெருங்கும்போதுதான், அங்கே என்ன நடக்கிறது என்பது சீடர்களுக்குப் புரிகிறது. உடனே, “, நாங்கள் வாளால் வெட்டலாமா?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

இயேசு பதில் சொல்வதற்கு முன்னால், அவர்களிடம் இருந்த வாள்களில் ஒன்றைப் பேதுரு எடுத்து, தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குசைத் தாக்குகிறார். அதில், மல்குசின் வலது காது அறுந்துபோகிறது. அப்போது இயேசு, மல்குசின் காதைத் தொட்டு அவனைக் குணமாக்குகிறார். பேதுருவைப் பார்த்து, “உன் வாளை உறையில் போடு” என்று கட்டளையிடுகிறார்.

வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்ற முக்கியமான பாடத்தை அப்போது கற்பிக்கிறார்.

கைது செய்யப்பட இயேசு தயாராக இருக்கிறார். அதனால்தான், “நான் என் தந்தையைக் கேட்டுக் கொண்டால், அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படிச் செய்தால், இதெல்லாம் நடக்க வேண்டுமென்று சொல்கிற வேதவசனங்கள் எப்படி நிறைவேறும்?” என்று கேட்கிறார்.

அதோடு, “என் தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிற கிண்ணத்திலிருந்து நான் குடித்தாக வேண்டும், இல்லையா?” என்றும் கேட்கிறார்.

உடனடியாகப் போர்ச் சேவகர்கள் சூழ்ந்து இயேசுவை சிறைபிடித்தார்கள். அவர்கள் இயேசுவை மிகக் கொடூரமாக நடத்தினார்கள். அவரை அடித்தார்கள்; வாரினால் அடித்தார்கள். அவர் முகத்தின் மீது துப்பினார்கள்.

4

பட பட வென்று கதவை யாரோ தட்டியதில் மலாக்கியின் தூக்கம் கலைந்து போனது. படுக்கையை விட்டு அலுப்போடு எழுந்து வந்தவன், “யாரப்பா அது இந்த நேரத்தில் வந்து இப்படி கதவைத் தட்டுவது?” என்று கோபமாகக் கேட்டான்.

மலாக்கி ஒரு திராட்சைத் தோட்டக் காரன். அவன் குத்தகை நிலத்திலே திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதனைப் பராமரித்து வந்தான். விளைச்சலில் நிலச் சொந்தக்காரனுக்கு உண்டான பாகத்தைச் சரியாகச் செலுத்தி விடுவான். இராயனுக்குச் செலுத்த வேண்டிய வரியையும் சரியாகச் செலுதிவிடுவான்.

இவ்வளவு இருந்தும் அவனிடத்தில் ஒரு குறை இருந்தது. அது அவனிடத்தில் இருந்த தாழ்வு மனப்பான்மை.

மலாக்கி திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவன். அவன் முகத்திலிருந்த ஒரு பெரிய தழும்பு அவனுக்கு அவமானமாய் இருந்தது. அவன் சிறுவனாய் இருக்கும்போது அவன் இருந்த வீடு தீப்பிடித்து எரிந்ததாம். வெளியில் வேலை யாய் இருந்த அவன் தாய் தன குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீட்டிற்குள் பாய்ந்து ஓடினாள்.

அவள் கேசம் முழுவதும் பொசுங்கியது. பலத்த தீக்காயம் அடைந்து விட்டவள், தன் குழந்தையைக் காப்பாற்றிய சந்தோஷத்துடன் உயிரை விட்டாள்.

அந்த விபத்தில் மலாக்கியின் முகத்தின் ஒரு பக்கம் தீயினால் பொசுங்கி விட்டது. அதன் காரணமாக ஒரு பெரிய தழும்பு முகத்தில் ஏற்பட்டு விட்டது. மலாக்கி தன் தாழ்வு மனப்பான்மையின் காரணமாக யாருடனும் அதிகமாகப் பழக மாட்டான். அவனுக்கு இருந்த ஒரே நண்பன், உயிர் நண்பன் மனாசே தான்.

“யாரப்பா அது?” என்று மலாக்கி மீண்டும் குரல் எழுப்பினான்.

“மலாக்கி, சீக்கிரம் கதவைத் திற. நான் தான் மனாசே”. குரலில் பதற்றம் தெரிந்தது.

கதவு கிறீசிட்டபடி திறந்தது.

“என்னப்பா இது மனாசே, இந்த நேரத்தில்… வாக்கியம் பாதியில் நின்று போனது. மனாசேயின் முகத்தில் பதட்டமும் கவலையும் சோர்வும் ஒரு சேரக் காணப்பட்டது.

“உள்ளே வா மனாசே!என்ன ஆயிற்று உனக்கு? ஏன் உன் முகம் இப்படி வெளிறிப் போய் இருக்கு?”

விஷயம் தெரியுமா உனக்கு? அந்த இயேசுவைப் பிரதான ஆசாரியருடைய வேலையாட்கள் கைது செய்துட்டாங்களாம் “.

“என்னது? இயேசுவைக் கைது செய்துட்டாங்களா? எங்கே? எப்போது? விவரமாகச் சொல்லேன்.”

“இன்று மாலை நகரிலுள்ள ஒரு வீட்டின் பெரிய மேல் அறையில் அவருடைய சீடர்களுக்குப் பாஸ்கா விருந்தளித்தாராம். அதற்குப் பிறகு ஒலிவ மலைக்குப் போய் அங்கே கெதரோன் ஆற்றுக்கு அப்புறம் இருக்கும் கெத்செமேனே தோட்டத்திலே தனியாக ஜெபம் பண்ணிக்கிட்டு இருந்தாராம். அப்போ அவரோடவே இருந்த யூதாஸ் பிரதான ஆசாரியரையும் தேவாலயத்துச் சேனைத் தலைவர்களையும் கனத்தின் மூப்பர்களையும் கூட்டிக்கிட்டுப் போய் அவரைப் பிடித்துக் கொடுதிட்டானம்.”

“அப்படியா? சமீபத்தில் அந்த மனுஷன் எருசலேமிற்குள் நுழைந்த போது என்ன அமர்க்களம் படுத்தினார்கள். ஒரு கழுதைக் குட்டியின் மேலே அவரை உட்கார வைத்து வழியெல்லாம் மக்கள் தங்கள் ஆடைகளையும், இலைகளையும் தழைகளையும் பரப்பிக் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு அவரைத் தாவீதின் குமாரன்! தேவகுமாரன்! அப்படி இப்படி என்று புகழ்ந்தார்களே!”

“ஆமாம்! மக்களெல்லாம் அவர் பின்னாடி போயிடராங்களேன்னு பிரதான ஆசாரியர்களுக்கெல்லாம் கோபம். மக்கள் நம்மை மதிக்க மாட்டாங்களேன்னு ஒரு பயம். அதனாலே தான் சூழ்ச்சி செய்து அவரைப் பிடிச்சிட்டாங்க”.

ஏன் மனாசே! அந்த மனுஷன் தான் தினமும் ஜனங்களுக்கு நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்திலே உபதேசம் பண்ணிக்கிட்டு இருப்பாரே. அப்பவே அவரைக் கைது பண்ணியிருக்கலாமே.”

முட்டாள்தனமாய்ப் பேசாதே மலாக்கி! அப்படி அவர்கள் செய்திருந்தால் ஜனங்களின் மத்தியில் பெரிய கலவரம் மூண்டிருக்கு. அதுவுமில்லாமல் அவரைக் குற்றப்படுத்த எந்த முகாந்திரமும் இல்லை”.

“ஆமாம்! ஆமாம்! பிரதான ஆசாரியரின் வேஷக்காரர்கள் அவரிடத்திலே குற்றம் கண்டுபிடிக்கவென்றே அவரிடம் போய் ‘ராயனுக்கு வரி செலுத்துகிறது நியாயமா? இல்லையா?’ என்று கேட்டார்களாம்.

அவர் ஒரு பணத்தை என்னிடம் காட்டுங்கள் என்று கேட்டு, அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கி அப்படியும் இப்படியுமாகத் திருப்பிப் பார்த்து விட்டு இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது? என்று கேட்டிருக்கிறார். அவர்கள் இராயனுடையது என்று சொல்ல, இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் அப்படின்னு சொல்லியிருக்கிறார், என்ன சாமர்த்தியமான பதில் பார்த்தாயா!

சரி! இப்போ மட்டும் எந்த முகாந்திரத்தினாலே அவரைக் கைது செய்தார்களாம்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை. அவரைப் பிராதான ஆசாரியன் காய்பாவின் அரண்மனைக்குத் தான் கொண்டு போய் இருக்கிறார்கள். நான் அங்கே போய் நடப்பதைப் பார்க்கப் போகிறேன். நீயம் வா மலாக்கி “.

மலாக்கிக்கு எப்பொழுதும் போல அவன் தாழ்வு மனப்பான்மை மேலோங்கியது. மனாசே ஒரு முறை அவனிடத்தில் “நீ போய் அந்த நசரேயனாகி இயேசுவைப் பாரேன்! அவர் உன்னைக் குணமாக்கலாம் அல்லவா? என்று கேட்டிருக்கிறான். ஆனால் மலாக்கி அதற்க்கு மறுப்பு தெரிவித்து விட்டான். அந்த இயேசு ஏதோ மந்திரவாதி போல செயல் படுகிறார். எனக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லை” என்று கூறிவிட்டான்.

இப்போதும் மலாக்கி வர மறுத்துவிடத்தான் நினைத்தான். இருப்பினும் மனாசேயின் பேச்சில் தொனித்த அந்த வருத்தமும் வேதனையும் அவனைக் கலக்கமுறச் செய்திருந்தன. சிறிது நேரம் யோசித்து விட்டு, “சரி வருகிறேன்” என்றான்.

வேலனும் செபுலோனும் எருசலேம் நகரை வந்தடைந்த போது, நள்ளிரவாகிவிட்டிருந்தது ; ஆயினும் அவ்வேளையில் அந்நகரம் மிகவும் பரபரப்பாய்க் காணப்பட்டது.

அவர்கள் விசாரித்த போது இயேசுவைக் கைது செய்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டனர். அவர்கள் ஒரு மனிதனிடம் விசாரித்த போது, கெத்செமெனே பூங்காவில் சீடர்களுடன் ஜெபித்துக் கொண்டிருந்த இயேசுவைப் பிரதான ஆசாரியரின் வேலைக்காரர்களும் மூப்பர்களும் வேறு சிலரும் திரளாகச் சென்று அவரைக் கைது செய்து, பிரதான ஆசாரியனிடம் கொண்டு சென்றிருப்பதாகவும் அம்மனிதன் கூறினான்.

அதனை கேட்ட வேலன் மிகவும் வேதனைப் பட்டார்.

இயேசு கைது செய்யப்பட்டவுடன் அன்னா என்பவன் வீட்டிற்க்கு கொண்டு செல்லப் பட்டிருப்பதாகக் கேள்விப்பட்ட அவர்கள் அவ்விடத்திற்கு விரைந்தபோது அவ்விடத்திலிருந்து பிரதான ஆசாரியன் காய்பாவின் வீட்டிற்கு அவரைக் கொண்டு சென்றிருப்பதாக அங்கிருந்தவர்கள் கூற, இருவரும் அங்கிருந்து காய்பாவின் வீடு நோக்கி நடந்தனர்.

இயேசுவைக் குறித்து வேலன் அதிக காரியங்களைக் கேட்ட்டிருக்கிறார். அவர் குருடர்கள் கண்களைத் திறந்துள்ளார் ; பல்வேறு நோய்களை போக்கியிருக்கிறார் ; குறிப்பாகத் தொழுநோயாளிகளைத் தொட்டு குணப்படுத்தியிருக்கிறார் ; பேய்களை விரட்டியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக பெத்தானியா ஊரில் அவருக்கு நண்பனாய் இருந்த லாசரு என்பவர் மறித்து அவருடைய

உடல் கல்லறை ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்கள் கடந்த பின்பு, அங்கு வந்த இயேசு விழி நீர் விட்டு அழுதார் என்றும், பின்னர் கல்லறையின் கல்லை புரட்டச் சொன்னதாகவும் அங்கிருந்தவர்கள் அவரை அடக்கம் செய்து நான்கு நாட்ட்கள் ஆகிவிட்டனவே; பிணம் அழுகி நாறுமே என்று முறுமுறுத்தவாரே கல்லை புரட்டியவர்கள், அவர் லாசுரவே எழுந்து வா என்று அழைக்க ஏளனமாய் நகைத்தார்களாம். ஆனால் எல்லாரும் அதிசயிக்கும் வண்ணம் சுற்றி வைக்கப் பட்ட சீலைகளுடனே கூட லாசரு உயிர் பெற்றுஎழுந்து வந்தார் என்பதையும் வேலன் கேள்விப்பட்டிருக்கிறார்.

லாசரு உயிர் பெற்று வந்தபோது, இயேசு நானே உயிர்த்தெழுதலும் உயர் வாழ்வும் ஆவேன். என்னைப் பின்பற்றிடும் எவனும் வாழ்வான்; அவன் இறந்து பட்டாலும் என்றும் வாழ்வான் என்றுரைத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறார். அவரை எந்த முகாந்திரத்தினாலே கைது செய்திருப்பார்கள்; அவர் மீது என்னக் குற்றம் சுமத்தமுடியும் எனக் குழப்பமடைந்தார்.

பின்பு அவர்கள் காய்பாவின் வீட்டினை அடைந்தபோது, சனகெரிப் சங்கத்தினர் முன்னிலையில் விசாரணை நடந்து கொண்டிருந்தது.

பிரதான ஆசாரியன், நீ உன் சீடர்களிடம் மறைவாகக் கூறியவை யாவை? என்றான். இயேசு, நான் உலகறிய வெளிப்படையாகவே பேசினேன். மக்கள் அனைவரும் கூடி வரும் தேவாலயங்களில் தான் எப்பொழுதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப் பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே, என்றார்.

அவர் இப்படிச் சொன்ன போது அங்கிருந்த காவலன் ஒருவன்,

பிரதான ஆசாரியனிடம் இப்படியா விடையளிப்பாய்? என்று கூறி அவர் கன்னத்தில் அறைந்தான்.

இயேசு அவனிடம் நான் தவறாகப் பேசியிருந்தால், தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசையிருந்தால் என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

அப்போது அவருக்கு எதிராக அநேகப் பொய் சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

அவர்கள் கூறியவைகளில் அநேகமானவை உண்மையே.

இவன் கை வேலையான இந்தத் தேவாசலையத்தை இடித்துப் போடவும் கை வேலையில்லாத வேறொரு ஆலயத்தைக் கட்டவும் என்னால் கூடும் என்று சொன்னார் என்பது ஒரு குற்றச்சாட்டு. அவர் தனது உடலைக் குறித்தே இவ்வாறு கூறினார் எண்டபத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அவர்களின் எந்தக் குற்றச்சாட்டுக்களும் ஒவ்வாமல் போனதை அறிந்து காய்பா, நீர் இறைவனின் திருமைந்தன் என்பது உண்மையா? என்றான்.

இயேசு ஆம் நீர் சொல்லுகிறபடி அவர் நான் தான், மனு மைந்தர் சர்வ வல்ல இறைவனின் வலப் பக்கத்தில் வீற்றிருப்பதையும் அவர் மேகங்களின் மேல் வருவதையும் இது முதல் காண்பீர்கள் என்றார்.

அப்போது அவன் தன் அங்கியைக் கிழித்துக்கொண்டு, இவன் இறைவனுக்கெதிராக அவதூறானவற்றைப் பேசியதை நீங்கள் எல்லாரும் கேட்டீர்களே. இனி நமக்கு வேறே சாட்சிகள் வேண்டியதென்ன? என்றான்.

இயேசுவைப் பிரதான ஆசாரியனின் அரண்மனைக்கு கொண்டு வந்த போதே சீமோன் பேதுருவும் இயேசுவின் இன்னொரு சீடரும் அவரைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர்.

பிரதான ஆசாரியனின் அரண்மனை வாசல் வரையில் வந்த சீமோன் பேதுரு அச்சத்தின் காரணமாக அங்கேயே நின்று விட்டார். ஆனால் அந்த இன்னொரு சீடர், தான் பிரதான ஆசாரியனுக்கு நன்கு அறிமுகமானவர் என்பதால் அரண்மனைக்குள்ளே நுழைந்தார்.

பிரதான ஆசாரியருக்கு அறிமுமாமான அந்த இன்னொரு சீடர் வெளியே வந்து வாசலிலேயே நின்றுவிட்ட பேதுருவை உள்ளே அழைத்துச் சென்றார்.

அங்கே பிரதான ஆச்சாரியாரின் ஊழியக்காரர்கள் மற்றும் சேவகர்களில் சிலர் அரண்மனையின் ஒரு பகுதியில் கரி நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர்.

பேதுரு அவர்களின் அருகே சென்று அமர்ந்தார். அங்கிருந்த சிலர் நீ அந்த இயேசுவின் சீடன் அல்லவா? என்றனர். பேதுரு இல்லையென்று மறுத்துக் கூறினார்.

பேதுருவல் காதறுபட்ட மல்குசின் உறவினன் ஒருவன் நான் உன்னைத் தோட்டத்திலே பார்த்தேன் என்றான். பேதுரு அது நான் அல்லேன் என்றார்.

அப்போது எங்கிருந்தோ சேவல் ஒன்று கூவியது. இயேசுவின் பார்வை அப்போது பேதுருவின் பக்கம் திரும்பியது. அந்தப் பார்வையின் பொருள் பேதுருவுக்குப் புரிந்ததால் அவரால் இயேசுவை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் இயேசு, தம் சீடர்களிடம், மக்கள் என்னை யார் என்று கூறுகிறார்கள் என்றார். அதற்க்கு அவர்கள் சிலர் உம்மை எலியா என்றும் எரேமியா என்றும் சிலர் உம்மைத் தீர்க்கர்களில் ஒருவர் என்றும் கூறுகிறார்கள் என்றார்கள். இயேசு நீங்கள் என்னை யார் என்று கூறுகிறீர்கள் என்றார்.

அப்போது பேதுரு நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றார்.

இயேசு அவரை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே நீ பேறு பெற்றவன்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை விண்ணரசிலுள்ள என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இப்போது நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். அதற்க்கு கற்பாறை என்று பொருள். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ காட்டுகிறது எதுவோ அது பரலோகத்தில் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்தில் நீ கட்டவிழ்க்கிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும். என்றார்.

இயேசு மேலவீட்டறையில் சீடர்களுக்கு இறுதி இரவு உணவு வழங்கிய பிறகு அவர்கள் ஸ்தோத்திரப் பாட்டைப் பாடின பின்பு அவர்களை நோக்கி, மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்தித்திரியில் நீங்கள் எல்லாரும் இடறலடைவீர்கள் என்றார்.

அதற்குப் பேதுரு உம் நிமித்தம் இவர்கள் எல்லாரும் இடறலலைந்தாலும் நான் இடறலடைய மாட்டேன், உம்மோடு கூட இறப்பதற்கும் சித்தமாய் இருக்கிறேன் என்றார்.

அதற்க்கு இயேசு, பேதுருவே நீயா எனக்காக உயிரைக் கொடுக்கப் போகிறாய், இன்றிரவில் நீ மூன்று முறை என்னை மறுதலிக்காமல் சேவல் கூவுவதில்லை என்றார்.

இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்த பேதுரு மனங்கசந்து அழுதார். பேதுரு நினைத்திருந்தால் துணிந்து ஒரு கலசம் தண்ணீரை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்திருக்க முடியும்.

விடிகிற வேளை நெருங்கி விட்டதே! இனி அவர்கள் அவரை என்ன செய்வார்கள்?” என்றான் மனாசே.

“அவரைத் தேசாதிபதி பிலாத்துவிடம் கொண்டு போகிறார்களாம்”, என்றான் அங்கிருந்த ஒருவன்.

“சரி! நாம் அங்கே போவோம் வா!”, என்றான் மனாசே. மலாக்கி மறுப்பேதும் சொல்லவில்லை. இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். வேலனும் செபுலோனும் கூட அக்கூட்டத்தினருடன் நடக்கத் தொடங்கினார்கள்

5

பிலாத்துவின் அரண்மனையின் முன்பும் கூட்டம் அதிகமாய் இருந்தது. அப்போது விடியற் காலமாய் இருந்தது. தீட்டுப் படாமல் பாஸ்கவைப் புசிக்கும் படியாகப் பிரதான ஆசாரியனும் அவனோடு வந்த கூட்டத்தினரும் பிலாத்துவின் அரண்மனைக்குள் நுழாயாமல் இருந்தார்கள்.

எனவே பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்தான். அவன் இந்த மனிதன் மேல் நீங்கள் என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்? என்றான். ஆங்காங்கே இருந்து பல குரல்கள் எழும்பின. இவன் தன்னைக் கிறிஸ்து என்னபட்ட ராஜா என்று சொல்லுகிறான். இவன் யூதருக்கும் ராஜாவாம்.” இராயனுக்கு வரி செலுத்தக்கூடாது என்கிறான்”.

பிலாத்து தன கைகளை உயர்த்தி அவர்களை அமைதிப் படுத்தினான். நீ யூதருக்கு ராஜாவா? என்று அவரைப் பார்த்துக் கேட்டான். நீர் சொல்லுகிறபடி தான் என்று அவர் பதிலுரைத்தார். பிலாத்து பிராதான ஆசாரியர்களைத் திரும்பிப் பார்த்தான். இந்த மனுஷனிடம் நான் எந்தக் குற்றமும் காணவில்லையே என்றான்.

பிரதான ஆசாரியன் காய்பா வேகமாய் முன்னேறி வந்து நின்றான். இவன் கலிலேயா நாடு தொடங்கி இவ்விடம் வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் பண்ணி ஜனங்களைக் கலகப்படுத்துகிறான்”, என்று உரக்கக் கூறினான். அக்குரல் வைராக்கியமாய்த் தொனித்தது.

பிலாத்து இதைக் கேட்டதும் “இந்ந்த மனுஷன் கலிலேயனா? என்றான்.

ஆம் என்று பதில் வந்தது. அப்படியானால் இவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர். இவரை அவனிடமே அழைத்துச் செல்லுங்கள்”, என்றான்.

“என்ன இது மலாக்கி! இவர்கள் ஏன் இவரை இப்படி அலைக்கழிக்கிறார்கள்?”

“பிலாத்து இவரைத் தண்டிக்கப் பயப்படுகிறான். ஒன்று கவனித்தாயா மனாசே! நேற்று வரைக்கும் ஒருவருக்கொருவர் பகைவராய் இருந்த பிலாத்துவும் ஏரோதும் இன்றைக்குச் சிநேகிதர்களாகிறார்கள்”.

“இப்போது என்ன செய்யலாம் மலாக்கி? ஏரோதின் அரண்மனைக்குச் செல்லலாமா?”

“இதற்க்கு மேலும் என்னைத் தொந்தரவு செய்யாதே மனாசே. இப்பவே ரொம்ப சோர்ந்து போய்விட்டேன். ஏரோது அவரைத் தண்டிக்க மாட்டன். எப்படியும் அவரைப் பிலாத்துவிடம் தான் அனுப்பி வைப்பான். நாம் இங்கேயே இருப்போம். நீயும் கூட சோர்ந்து தான் போய் இருக்கிறாய். உனக்கும் ஓய்வு தேவை”.

“ஆம் ஐயா! அவர் சொல்வதும் சரி தான். நானும் அதையே தான் நினைத்தேன்.”, என்று அருகிலிருந்த ஒருவன் கூறினான்.

மனாசேயால் மறுப்பேதும் கூற முடியவில்லை. மலாக்கி அதற்குள் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். வேலனும் செபுலோனும் நீண்ட பயணத்தின் களைப்பில் இருந்தபடியால் அவர்களும் அங்கேயே தங்கிவிட்டனர்.

விடிந்து நல்ல வெளிச்சம் வந்துவிட்டிருந்த வேளையில் திடீரெனப் பெருங்கூச்சல் எழும்பிற்று.

திடீரெனப் பெருங்கூச்சலைக் கேட்டு உறங்கிக்கொண்டிருந்த மலாக்கி விழித்துக்கொண்டான்.

“என்ன மனாசே! இங்கே என்ன நடக்கிறது? என்றான்.

“ஏரோது அவரிடம் எந்தக் குற்றமும் காணவில்லை என்று பிலாத்துவிடமே அனுப்பிவிட்டானாம்”.

“ஏரோது நினைத்திருந்தால் அவரை விடுதலை செய்திருக்க முடியும் என்றான் மலாக்கி. இது தந்தையாம் கடவுளின் திருச்சித்தம் ; இதனை மாற்ற முடியாது எண்டபத்தை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பிலாத்துவின் அரண்மனையின் முன்பு ஏற்கனவே மூன்று திருடர்கள் சிலுவைத்தண்டனைக்காக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் திருடனும் கொலைகாரனுமாகிய தீவிரவாதி பரபாசும் உண்டு.

அவனுக்கு வயது முப்பதிருக்கும். திடகாத்திரமான உடல் ; வெளிறிய மேனி ; சிவந்த தாடி; கறுத்த மயிர் அவன் கண்கள் குழி விழுந்து ஆழ்ந்து கிடந்தன. கண்ணுக்கு கீழ் இருந்த ஆழமான வடு தாடியில் சென்று மறைந்தது.

அப்போது பிலாத்துவின் குரல் ஓங்கி ஒலித்தது. ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டி விடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டு வந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது இவன் மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் இவனிடத்தில் காணவில்லை. இவனை ஏரோதின் இடத்திற்கும் அனுப்பினேன். அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை. மரணத்திற்கு எதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலையாக்குவேன்.”

பிலாத்து தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்றே கூறி வந்தான்.

கூக்குரல் அதிகரித்தது. கொலை செய்யும்! கொலை செய்யும்! என்று பல குரல்கள் ஒலித்தன. பிலாத்து சேவகர்களின் பக்கம் திரும்பினான். இவனை இழுத்துச் சென்று வாரினால் அடியுங்கள் என்றான்.

அவர் அணிந்திருந்த வஸ்திரத்தைக் கழற்றினார்கள். இரு கைகளையும் தூணில் வைத்துக் கட்டினார்கள். அவரின் வெற்று முதுகில் முப்பத்ததொன்பது கசையடிகள் விழுந்தன.

ரோமப் போர்ச்சேவகர்கள் ஒரு மனிதனை எப்படி அடித்தால் இரத்தம் அதிகமாய் வெளியேறும் என்பதை நன்கு அறிந்தவர்கள். தோலினால் ஆன வார்களின் ஒவ்வொரு முனையிலும் கூர்மையான முட்கம்பிகளும் இரும்புக் குண்டுகளும் கட்டபட்டிருந்தன. ஒவ்வொரு முறை அடிக்கப் படும் பொழுதும் அவர் சரீரத்தை முழுவதுமாகக் கிழித்து பிய்த்து எடுக்கும் வகையில் அவை இருந்ததால், அவர் சதைகள் கிழிபடுவதைக் காண முடித்தது.

இவ்வாறு அடிக்கப்படுவது அவரது நுரையீரலைச் சுற்றிலும் நீர் தேங்க ஏதுவாகிறது இவ்வாறு அடிக்கப்படுவது அவரது நுரையீரலைச் சுற்றிலும் நீர் தேங்க ஏதுவாகிறது.

மனாசே நிலத்தில் முகங்குப்புற விழுந்து அழுதுகொண்டிருந்தான். மலாக்கி முண்டியடித்துக்கொண்டு முன்னே சென்றான். இயேசுவின் சதைகள் கிழிபட்டு இரத்தம் பீறிட்டுப் பாய்ந்ததபோது மலாக்கி அவருக்கு மிகவும் அருகாமையில் இருந்தான்.

அவன் முகத்தில் ஏதோ தெறித்ததை உணர்ந்து முகத்தைத் துடைத்தான். தெறித்தது இரத்தம்! இயேசுவின் இரத்தம்!!

அவர் தலையில் பெரிய முட்களால் ஆன முள் முடியைப் பின்னி அவர் தலையில் வைத்து அடித்தார்கள். அந்த முட்கள் அவர் தலையில் இருந்த பெரிய நரம்புகளை அழுத்தி மிகுந்த வேதனையைக் கொடுத்தது.

இவ்வளவும் நடைபெறும்போது அவர் தன் சரீராத்திற்கென்று தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை. அவர் உடல் மிகவும் சோர்வுற்றிருத்தது.

மீண்டும் அவரைப் பிலாத்துவின் முன் நிறுத்தினார்கள். அவன் “இதோ உங்கள் ராஜா”, என்றான்.

பரபாஸ் அவரை உற்று பார்த்தான். அவரது துயரம் நிறைந்த கண்களைப் பார்த்தான்.

அவர் துயரம் கொள்வது அவரை கொல்லும் அந்த மனிதர்களை எண்ணி என அவன் உணர்கிறான்.

பண்டிகைதோறும் உங்களுக்கு ஒருவனை விடுதலையாக்குவது வழக்கமல்லவா? அவ்வாறு இவனை விடுதலை ஆக்குவேன்”, என்று பிலாத்து கூறினான்.

எல்லாப் பக்கங்களிலிருந்தும் “இவனை அகற்றும் சிலுவையில் அறையும்!” என்று குரல்கள் ஒலித்தன.

அப்போது பிலாத்து இயேசு, பரபாஸ் என்னும் இருவரில் நான் யாரை உங்களுக்கு விடுவிக்கட்டும் என்றன்.

அவர்கள் பரபாஸைத் தண்டிக்கும்படி கேட்பார்கள் என்று நினைத்திருந்தான். ஆனால் நடந்ததோ வேறு; அப்போது, “பரபாசை விடுதலை செய்யும்! இவனைச் சிலுவையில் அறையும்”, என்று பல குரல்கள் எழுந்தன.

பரபாஸ் அதிர்ச்சி அடைந்தான். அவன் மனதுக்கு தெரிகிறது இயேசு நீதிமான் என்று. இந்த நீதிமானை ஏன் கொல்ல வேண்டும்?

பிலாத்து “பரபாஸ் கலகக்காரன் அல்லவா?” என்றான். அப்போது ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.

இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்குச் சிநேகிதன் அல்ல. தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி.

குரல் வந்த திசையைப் பிலாத்து வெறித்துப் பார்த்தான். அவன் முக நாடி மாறியிருந்தது. அவன் முகத்தில் பயம் தெரிந்தது. மீண்டும் அவன் “உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா? என்றான்.

பிரதான ஆசாரியர்கள் இப்பொழுது முன்னே வந்தார்கள். இராயனே அன்றி எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். இராயனின் பெயரை அடிக்கடி உபயோகித்தது அவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கலகம் அதிமாவதை அவன் உணர்ந்து தண்ணீரை அள்ளி மக்களுக்கு முன்பாகத் தன் கைகளைக் கழுவினான்.

பிலாத்து “இந்த நீதிமானின் இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்”,, என்றான்.

“இவனுடைய இரத்தப் பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக”,,என்று கூட்டத்தில் இருந்து குரல்கள் எழுந்தன.

பிலாத்து அவசரமாய் மாளிகைக்குள் நுழைந்தான்; பரபாசை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கான உத்தரவுகளை எழுதினான். பின்னர் வெளியே வந்து, அதனைப் போர்ச்சேவகர்களுக்கு நேராக வீசியெறிந்தான்.

பரபாஸ் விடுதலையானான். போர்ச்சேவகர்கள் அவனைக் கட்டியிருந்த சங்கிலிகளை முறித்தார்கள். போர்ச்சேவகன் ஒருவன் அவனை நெருங்கினான். அவன் முதுகில் கை வைத்துத் தள்ளினான். உன்னை விடுதலை செய்து விட்டா ர்கள் ஓடு என்றான்.

தேசாதிபதியின் போர்ச்சேவகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவருடைய ஆடைகளைக் கழற்றி சிவாப்பான ஓர் அங்கியினை அவருக்கு உடுத்தினார்கள்.

அவர் மேல் பாரமான சிலுவையைச் சுமத்தினார்கள். அவர் அறையப் படவேண்டிய சிலுவையை அவரையே சுமக்கச் செய்தனர்.

ரோமானியர்களின் கொலைக்கருவிகளில் கொடூரமானது சிலுவை. திரளான மக்கள் அவருக்குப் பின்னாக நடந்து சென்றார்கள். பெண்களும் அழுது புலம்பியபடி அவர் பின்னே சென்றார்கள்.

பரபாஸ் அவரைப் பின் தொடர்ந்தான். சிலுவை சுமந்து சென்ற அவரைக் கண்ட மாத்திரத்தில் ஏன் என்றே தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்தான்

எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்… உங்களுக்காகவும்…உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். இதோ… மலடிகள் பாக்கியவதிகள் என்றும்… பிள்ளை பெறாத கர்ப்பங்களும்… பால் கொடாத முலைகளும் பாக்கியமுடையவைகள் என்றும்… சொல்லப்படும் நாட்கள் வரும்… அப்போது மலைகளை நோக்கி எங்கள் மேல் விழுங்கள் என்றும் குன்றுகளை நோக்கி எங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்றும் சொல்லத் தொடங்குவார்கள். பச்சை மரத்துக்கு இதை இவைகளைச் செய்தால்,… பட்ட மரத்துக்கு என்ன செய்ய மாட்டார்கள்”, என்று கூறியவைகளைக் கேட்டு இந்த நிலையிலும் எப்படி இவரால் இவ்வாறு பேச முடிகிறது? என்று ஆச்சரியப்பட்டான்,

6

அவர்கள் மனித மண்டையோட்டை ஒத்த வடிவத்தில் இருந்த கொல்கொதா என்கிற இடத்தை வந்தடைந்திருந்தார்கள். ரோமப் போர்ச்சேவகர்கள் அவரைச் சிலுவையின் மேல் கிடத்தி அவர் கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்தார்கள். அவர் கைகளில் மத்திய நரம்பில் ஆணிகள் அடிக்கப் பட்டதால் அவருடைய தண்டு வடம் முழுவதுமாக முழு சரீரத்திற்கும் வலியை அனுப்புகிறது. அவருடைய கால்களில் அடிக்கப்பட்ட ஆணியும் அதே போன்ற வேதனையை உடல் முழுவதற்கும் அனுப்புகிறது.

அவரோடு கூட மேலும் இருவர் அன்று சிலுவையில் அறையப்பட்டார்கள். கயிறுகளைக் கொண்டு அவருடைய சிலுவையை உயர எழுப்பி அதனைப் பள்ளத்தில் இறக்கியபோது அவர் உடல் குலுங்கியது. அவர் ஏற்றிருந்த அநேக காயங்களால் அவர் தசைகள் விரைப்படைந்திருந்தன. அவருடைய உடல் அசைகின்ற பொழுதும் ஏற்பட்ட வேதனை அவருக்கு ஒரு விதமான காய்ச்சலை ஏற்படுத்தி இருந்தது. அப்போது அங்கு வீசிய மெல்லிய தென்றல் காற்றும் கூட அவருக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் அளித்தது.

அப்படிப் பட்ட சூழ்நிலையிலும் இயேசு: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்வது இன்னெதென்று அறியாதிருக்கிறார்களே “, என்றார்.

பரபாஸ் பிரம்மித்துப்போய் நின்றான். இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா? என்று வியந்து நின்றான். வாரினாலே தன முதுகைக் கிழித்தவர்கள், முகத்திலே அறைந்தவர்கள், உமிழ்ந்தவர்கள், முள் முடி சூட்டியவர்கள் இன்னும் கைகளிலும் கால்களிலும் ஆணி அறைந்தவர்கள் இவர்களை எல்லாம் சபிக்காமல் மாறாக இவர்களுக்காக மன்னிப்பு கேட்கிறாரே!

அக்கூட்டத்தில் இரண்டு இளைஞர்கள் அவனைக் கவரும் விதத்தில் இருந்தனர். அவர்கள் தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டு சென்றனர். பரபாஸ் அவர்களை அணுகினான். இந்த மனிதர் யார்? எதற்காக இந்த மனிதருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார்கள்? என்று வினவினான். அந்த இளைஞர்கள் அவனை விநோதமாகப் பார்த்தனர். அவன் என் பெயர் பரபாஸ்; இது நாள் வரை நான் பாதாளச் சிறையில் இருந்து வந்தேன் ; இந்த மனிதரால் தான் இன்று நான் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறேன் என்றான்.

அந்த இளைஞர்கள் “என் பெயர் ஒத்னியேல் இவன் பெயர் ரபாயேல். இவர் யூத இனத்தில் பிறந்த இயேசு. ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்தார். இவர் ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபவர். இயேசு யோர்தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் தாமும் திருமுழுக்குப் பெற்றார். இயேசு திருமுழுக்குப் பெற வந்ததைக் கண்ட யோவான் இயேசுவைத் தடுத்து, “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?” என்று கூற, இயேசு அவரைப் பார்த்து, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை என்று பதிலளித்தார்; ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது தூய ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் “என் அன்பார்ந்த மகன் நீயே. உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று நாற்பது நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு “இறையரசு” பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார்.

தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார்.

கடவுள் தம்மை ஒரு சிறப்புப் பணி ஆற்றிட அனுப்பியுள்ளார். என்பதை உளமார உணர்ந்த இயேசு “கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கின்றது” என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார்.

கடவுளின் ஆட்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அவர்கள் தம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, புதியதொரு வாழ்க்கை முறையைத் தழுவ வேண்டும் என்று இயேசு போதிக்கலானார்.

இயேசு தம் பொதுப் பணியை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தொடங்கினார். எசாயா நூலில் வருகின்ற “ஒடுக்கப்பட்டோர்”, “உள்ளம் உடைந்தோர்”, “சிறைப்பட்டோர்”, “கட்டுண்டோர்” ஆகிய அனைவருமே “ஏழைகள்.” அவர்களுக்கும், எல்லாவித அடக்குமுறைகளால் துன்புறும் அனைவருக்கும் விடுதலையும் விடியலும் வழங்குபவர் இறைவன். அதுவே கடவுளடமிருந்து வருகின்ற “நற்செய்தி” இதுவே இயேசுவின் போதனைப் பணி. மக்களுக்கு வி்டுதலை வழங்க இயேசு கையாண்ட ஒரு வழியே அவரது போதனைப் பணி.

இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி. இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார். இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார்.

கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல புதுமைகள் மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார். இயேசு இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்ததார்.

இறையாட்சி என்பது கடவுளின் ஆளுகை இவ்வுலகில் வருவதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இசுரயேல் மக்கள் நடுவே கடவுளை அரசராகக் காணும் வழக்கம் நிலவியது.. இயேசு கடவுளின் ஆட்சி இவ்வுலக மக்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருக்கிறது என்று விளக்கம் தந்தார்.

பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொண்டார். மறைநூல் அறிஞரையும் கண்டித்தார்

ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். அவர்கள் இயேசுவின் சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு இயேசு: “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

எருசலேமில் இயேசு தன்னுடைய சீஷர்களின் காலை கழுவின அந்த இரவில் தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அளித்தார். சீடர்கள் உணவு அருந்திய பின் இயேசு ஒலிவ மலைக்குப் போய் அங்கே கெதரோன் ஆற்றுக்கு அப்புறம் இருக்கும் கெத்சமனித் தோட்டத்திற்குச் சென்றார்.

யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வந்தான்.”ரபி வாழ்க” என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்க அவர்கள் இயேசுவைக் கைது செய்து விட்டனர். சொன்னபடி அவனுக்கு பணம் கைக்கு வந்தது, தாடையோடு, தாடை ஒட்டியபடி கொடுக்கப்படுகிற இது மிகுந்த சகோதர அன்பை வெளிப்படுத்துறது ஆனால் யூதாசின் முத்தம் பொய்யான அன்பை வெளிப்படுத்தி துரோகம் செய்தலை காட்டுகிறது” என்று கூறி முடித்தான்.

அவர்களின் பேச்சைக் கேட்ட வேலன் செபுலோனை நோக்க, செபுலோனும் அவர்கள் கூறுவதனைத்தும் உண்மையே என்றான்.

அவர்கள் சற்று தொலைவில் போய் அமர்ந்தார்கள். ஒன்பதாம் மணிவேளை வரை அந்த இடத்தை இருள் சூழ்ந்தது. மக்கள் கூட்டத்தினர் அச்சத்தினால் சிதறி ஓடினார்கள். பரபாஸ், ரபாயேல், ஒத்னியேல், மலாக்கி, மனாசே இவர்களுடன் வேலனும் செபுலோனும் கூட செய்வதறியாது உட்கார்ந்தபடியே இருந்தனர்.

பரபாஸ் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெண்மணியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர் கண்களிலிருந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீர் மூக்கிலும் வாயிலும் வழிந்து கொண்டிருந்தது. அவர் அடிக்கடி தன் புறங்கையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்மணி அவரின் தாயாகத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். அங்கே அவருடைய சீடர்களிலேயே மிகவும் இளம் வயதுள்ள சீடரான யோவான் நின்று கொண்டிருந்தார்.

இயேசு தன் தாயாரைப் பார்த்து தாயே அதோ உன் மகன் என்றார். அசீடரைப் பார்த்து அதோ உன் தாய் என்றார்.

பரபாஸுக்குத் தாயார் கிடையாது; தந்தையார் யார் என்று தெரியாது ; உற்றார் உறவினர்கள் என்று யாரும் கிடையாது. அவனைச் சிலுவையில் அறைந்திருந்தால் அவனுக்காகக் கண்ணீர் சிந்த யாரும் கிடையாது; ஆனால் இவருக்காகப் பல பெண்கள் தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண்மணி சிலுவையோடு சேர்த்து அவர் பாதத்தைப் பற்றிக்கொண்டு கதறி அழுதுக்கொண்டிருந்தாள்..

மூன்று நாட்களுக்கு முன்னர் இயேசு சீமோன் என்னும் ஒரு பரிசேயனின் வீட்டில் விருந்துண்ண சென்றிருந்தபோது இந்தப் பெண்மணி இலாமிச்சைத் தைலத்தை அவர் பாதத்தில் ஊற்றி, தன்னுடைய கண்ணீரால் அவர் கால்களைக் கழுவித் தன் கூந்தலால் அவர் பாதங்களைத் துடைத்துவிட்டார். இப்போது அந்தப் பாதத்தில் ஊடுருவியுள்ள ஆணிகளிலிருந்து வழியும் இரத்தம் சிலுவையிலிருது வழிவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

யூதாஸ் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? என்று பரபாஸ் கேட்டான்.“இயேசுவை, அவர்கள் கைது செய்து, பின்னர் சிலுவையிலே அறைய ஒப்பு கொடுத்தார்கள். அப்பொழுது அதை கேட்ட யூதாஸுக்கு குற்ற உணர்வு உண்டானது.

பிசாசானவனின் தந்திரம் இதுவே. முதலாவது பாவம் செய், செய் என தொந்தரவு செய்வான். செய்து விட்டால் செய்து விட்டாய், செய்து விட்டாய் என நொந்து போக செய்வான். கடைசியாக அவன் நான்று கொண்டு, தலை கீழாக விழுந்து செத்துப் போனான் என்று கேள்விப் பட்டோம்.

இயேசு அவனை கடைசி வரை நேசித்தார்; கால்களை கழுவினார்; வரங்களை கொடுத்து இருந்தார்; அவன் தான் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை. இயேசு அவனை குறித்து சொன்ன ஒரு வார்த்தை: எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்ப டுகிறாரோ, அவனுக்கு ஐயோ! அவன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்.” யூதாஸ் தன்னையும் சூழ்ச்சி செய்து சிக்க வைத்தவன் என்றாலும் அவனுடைய முடிவை எண்ணி பரபாஸ் மனம் வருந்தினான்.

அவர் நீண்ட நேரமாக, அதாவது பாஸ்கா விருந்தினைத் தொடங்கும் முன்பிருந்தே தண்ணீர் அருந்தி இருக்கவில்லை. அவர் தன் சரீரத்திற்கு வேண்டிய தண்ணீரை எடுத்துக் கொள்ளாததால் மிகவும் தாகமடைந்திருந்தார். அதனால், அப்போது அவர் தாகமாய் இருக்கிறேன் என்றார். கசப்பான காடியை கடற்காளானில் நனைத்துக் கூர்மையான ஈட்டியில் செருகி அவருக்கு கொடுத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொண்டார். சிறிது நேரம் கடந்த பின் என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கை விட்டீர்கள் என்று மிகுந்த சத்தமிட்டுக் கதறினார். சிறிது நேர இடைவெளிக்குப் பின் முடிந்தது என்றார்.

பொதுவாகவே சிலுவையில் அறையப்படும் ஒருவரைச் சுய நினைவற்ற நிலைக்கு கொண்டு சென்று மரணத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். மேலும் சிலுவையில் அதிக நேரம் தொங்குவதாலும், இரத்தம் மற்றும் நீரின் இழப்பினாலும் மனதில் ஏற்படும் வேதனையினாலும் அவருடைய இருதயம் செயலிழந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கடைசி நிமிடம் வரை சுய நினைவோடிருந்தார்.

இறுதியாக இயேசு: பிதாவே… உம்முடைய கைகளில்…. என் ஆவியை… ஒப்புவிக்கிறேன்”, என்று மகா சத்தமிட்டுக் கூறியதை மலாக்கியும் மனாசேயும் கேட்டார்கள்; அவரருகே ஓடிவந்து பார்த்தார்கள்; அவர் தலை சரிந்திருந்தது; அவர் உயிர் பிரிந்திருந்தது.

அங்கிருந்த போர்சேவகன் ஒருவன் தன் ஈட்டியினால் விலாவில் குத்தினான். அப்போது இரத்தமும் தண்ணீரும் பீய்ச்சி அடித்தது..அதனைக் கண்ட லோங்கினூஸ் என்னும் நூற்றுவர்த் தலைவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தவராய். மெய்ய்யாகவே இவர் இறை மைந்தர் என்று முழங்காலில் நின்று அறிக்கையிட்டார்.

ஒத்னியேல், ரபாயேல் பரபாஸ் ஆகிய மூவரும் மிகுந்த துக்கத்தோடே அவர்கள் நடந்து வந்தார்கள்.

பரபாஸ்: “அவர் கடவுளின் மகன் என்று கூறினீர்கள்…அவர் கடவுளின் மகன் என்றால் கடவுளின் மகனுக்கு மரணம் உண்டா? “

ஒத்னியேல் அதற்கு பதிலளித்தான்: “அவர் தன்னுடைய பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமை குருக்கள் மறை நூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாட்களுக்குப் பின் உயிர்த்தெழவும் வேண்டும் என்று கற்பித்து வந்துள்ளார். இதை எல்லாம் அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். எனவே எனக்கு நம்பிக்கை உண்டு”.

“என்ன நம்பிக்கை?”

“இன்னும் மூன்று நாட்களில் அவர் உயிர்த்தெழுந்து விடுவார்”. இதைச் சொன்ன அந்த நேரத்தில் ஒத்னியேல் என்னும் அவன் முகத்தில் நம்பிக்கையின் ஒளி படர்ந்திருந்தது.

***

அதே வேளையில் இன்னும் சற்று தூரத்தில் மலாக்கியும் மனாசேயும் மிகுந்த துக்கத்தோடே அவர்கள் நடந்து வந்தார்கள். இருவருக்கும் நா வறண்டுபோய் இருந்தது. அருகே ஒரு குளம் இருக்கக் கண்டு நீர் அருந்த அதில் இறங்கினார்கள். மனாசே திடீரென்று மலாக்கியின் முகத்தைப்பிடித்துத் திருப்பினான்.

“மாக்கி! அந்த தழும்பு… உன் முகத்தழும்பு….”

“அதற்கென்ன இப்போது! அது தான் சிறுவயதில் இருந்தே என் முகத்தில் இருந்து வருகிறதே”, என்றான் வெறுப்பாக.

“அது இல்லை…”

“பின் வேறென்ன?”

“அது இல்லை… இப்போது உன் முகத்தில் அது இல்லை”.

“மனாசே! என்ன உளறுகிறாய்?, என்றவன் எதேச்சையாகத் தன பிம்பத்தைத் தண்ணீரில் பார்த்து அதிர்ந்து போனான். இயேசுவின் இரத்தத்துளிகள் அவன் முகத்தில் தெறித்தது அவன் நினைவுக்கு வந்தது. என்ன அதிசயம்! அப்படியானால் அவர் எவ்வளவு வல்லைமையுள்ளவர்! என்னே அவரின் குணமாக்கும் அன்பு!!

“மனாசே! ஒரு மனிதன் இயேசுவுக்கு விரோதமாய் சாட்சி சொன்னானே! நினைவிருக்கிறதா? இந்தத் தேவாலயத்தை இடித்துப் போடுங்கள். மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்ட என்னாலே ஆகும்”.

“ஆம் மலாக்கி! அதற்கென்ன?”

“அதன் பொருள் எனக்குப் புரிந்து விட்டது.அவர் குறிப்பிட்டது எருசலேம் தேவாலயத்தை அல்ல… அவர் சரீரத்தை… அப்படியானால்… ஆம் மனாசே! இன்னும் மூன்று நாட்களில் அவர் உயிர்த்தெழுந்து விடுவார்,” என்றான். இவர்களின் முகங்களிலும் அதே நம்பிக்கையின் ஒளி படர்ந்தது.

7

மாலை வேளையானதும் மிகப் பெரிய செல்வரும் அரிமத்தியா ஊராராகிய யோசேப்பு சிலுவையண்டையில் வந்தார். இவர் இயேசுவின் சீடர்களில் ஒருவர். தர்களுக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதவர். இளைஞர்கள் இருவர் அவருடன் வந்திருந்தனர். அவர் பிலாத்துவிடம் இயேசுவின் உடலை எடுத்துச் செல்ல அனுமதி பெற்றிருந்தார்.

இயேசுவின் உயிர் பிரிந்தததை அறிந்த பின்னர் செய்வதறியாமல் அங்கேயே அமர்ந்திருந்த வேலனும் செபுலோனும் இயேசுவின் உடலை இறக்குவதில் அவர்களுக்கு உதவினார்கள். மெல்லிய துணியில் அவர் இயேசுவின் உடலைச் சுற்றினார். செபுலோன், “இவரை எங்கே அடக்கம் செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார்.

அவர், “இவ்விடத்திற்கு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் எனக்கெனப் பாறையில் ஒரு புதிய கல்லறையை வெட்டி வைத்துள்ளேன். அதில் தான் இவர் உடலை வைக்கப் போகிறேன், “ என்றார்.

அவர்கள் இயேசுவின் உடலை அங்கே கொண்டு சென்ற போது, நிக்கொதேமு எனபவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் இப்போதுள்ள அளவின்படி ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் வெள்ளைப்போளமும் சந்தானமும் கலந்த கலவையைக் கொண்டு வந்திருந்தார்.

இவர் ஓர் இரவில் இயேசுவைச் சந்தித்த போது இறைவனின் அன்பையும் இறவா நிலைவாழ்வைக் குறித்தும் கேட்டறிந்தவர்.

அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து நறுமணப் பொருட்களுடன் துணிகளில் சுற்றிக் கட்டினார்கள். அப்போதுவேலன்தயக்கத்துடன், “நீங்கள்ஏன்இப்படிசெய்கிறீர்கள்.? என்றான். அதற்கு செபுலோன், “இது யூதர்களின் அடக்க முறை, “ என்றான். அவர் உடலைக் கல்லறைக்குள் வைத்ததும் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்தனர்.

இயேசுவின் தாயாகிய மரியாளும் மகதலேனா மரியாளும் கண்ணீர் சிந்தியபடி உட்கார்ந்திருக்க, அவருக்கு அன்பாயிருந்த சீடரான யோவான் துக்கம் நிறைந்த முகத்துடன் நின்றிருந்தார். அன்றைய தினம் பாஸ்கா விழாவுக்கு ஆயத்தநாளாய் இருந்நது. அப்போது யோசேப்பு, ஓய்வுநாள் நெருங்குகிறது. வாருங்கள் போவோம், என்றார்.

அப்பொழுது மகதலேனா மரியாள், அம்மா வாருங்கள்; நான் சலோமியுடனும் மற்ற பெண்களுடனும் சேர்ந்து நறுமணப் பொருள்களை வாங்க வேண்டும். அப்போது தான் ஓய்வுநாள் கழிந்து வாரத்தின் முதல் நாள் அதிகாலையிலேயே இங்கு வந்து அவருடைய உடலில் நறுமணப் பொருள்களைப் பூச முடியும், என்றார். அனைவரும் துயரம் நிறைந்தவர்களாககக் கலைந்து சென்றனர்.

ஓய்வுநாள் முடிந்து வாரத்தின் முதல் நாள் விடியற் காலை கதிரவன் எழும் வேளையில் மூன்று பெண்கள் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இயேசுவின் உடலில் பூசுவதற்கென்று நறுமணப் பொருள்களைக் கொண்டு சென்றனர்.

மகதலேனா மரியாள் செய்வதறியாமல் வெளியே நின்றுவிட, மற்ற இருவரும் உள்ளே நுழைந்தனர். அங்கே இன்னொரு அதிர்ச்சியாக இயேசுவின் உடலைக் காணவில்லை. அவர்கள் குழப்பமுற்றவர்களாக ஒருவரை யொருவர் பாரர்த்துக் கொண்டனர்.

அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அங்கே மின்னலைப் போன்று ஒளி வீசும்ஆடை அணிந்த இருவர் அவர்கள் முன்னே தோன்றினர்.

கல்லறைக்கு வெளியே மகதலேனா மரியாள் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். அப்போது, “ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?“ என்ற குரல் கேட்டுத் திரும்பினார். அங்கே ஒருவர் தலையை மூடிக்கொண்டவராய் நின்றிருந்தார்.

“ஐயா! என் ஆண்டவரை யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அவர்கள் அவரை எங்கே வைத்துள்ளன ரோதெரியவில்லை, “ என்றார்.

மேலும் அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்துக் கொண்டு, “ஐயா! நீர் அவர் உடலை எடுத்துக் கொண்டு போய் இருந்தால், அவரை வைத்த இடத்தைச் சொல்லிவிடும். நான் போய்எ டுத்துக்கொள்வேன்” என்றார்.

அப்போது அவர், “மரியாளே!“ என்றார். அக்குரலைக் கேட்ட மரியாள் திடுக்கிட்டார். இக்குரல்…. ஆண்டவரின் குரலல்லவா? மரியாள் சட்டென திரும்பி, “ரபூனி! “ என்றார். அந்த எபிரெயச் சொல்லுக்கு போதகரே! என்றுபொருள்.

இயேசு அவரிடம் என்னைத் தொடாதே. நான் இன்னும் என் தந்தையிடம் செல்லவில்லை. என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம் என் தந்தையும் உங்கள் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல இருக்கிறேன் எனச்சொல்,” என்றார்.

கல்லறையின் உள்ளே இருந்து வெளியே வந்த பெணகள், “நாங்கள் உள்ளே வெண்ணிற ஆடை அணிந்திருந்த இருவரைக் கண்டோம், என்று சொல்லத் தொடங்கியவர்கள், மரியாளின் முகம் ஒளிருவதைக் கண்டு அவர் நிச்சயம் ஒரு திருக்காட்சியைக் கண்டிருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டனர்.. அவர்களின் உள்ளங்களில் பெருமகிழ்ச்சிஉண்டாகியிருந்தது. இந்த நற்செய்தியை உடனே சீடர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று விரைவாக ஓடினார்கள்.

அன்று வாரத்தின் முதல் நாள்; அது மாலை வேளை. அவர்கள் யூதர்களுக்கு அஞ்சியதால் தாங்கள் இருந்த அந்த மேல் வீட்டறையின் கதவுகளை மூடி வைத்திருந்தனர். மகதலேனா மரியாள், “நான் இயேசுவைக் கண்டேன் என்றும், மற்ற பெண்கள், “நாங்கள் இறை தூதர்களைக் கண்டோம், “ என்றும் கூறியதை அங்கிருந்தவர்களால் நம்ப முடியவில்லை.

கல்லறைக்குச் சென்று திரும்பிய பேதுருவும் யோவானும் ஆண்டவரைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டதால் வியப்புற்றிருந்தனர். யோவான் மகதலேனா மரியாளைப் பற்றி நன்கு அறிந்தவர்; அவர் நிச்சயம் பொய்யுரைக்க மாட்டார் என்று நம்பினார். பேதுர்வோ, உயிர்த்தெழுந்த ஆண்டவர் தமக்குக் காட்சியளிக்கவில்லையே என்ற மனவருத்தத்தில் இருந்தார்.

அப்போது அவ்வறையில் பேரொளி தோன்றுயது. ஆண்டவர் இயேசு அவர்களக்கு நடுவில் நின்று கொண்டிருந்தார். அவர், “உங்களுக்கு அமைதி உரித்தாகுக, “ என்றார். அவர்களுக்குநம்பிக்கைஉண்டாகும்படிதம்கைகளையும்விலாவையும்காட்டினார். அவர் ஆண்டவர் தான் என்று நம்பிக்கை கொண்ட சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போலநானும் உங்களை அனுப்புகிறேன், என்றார்

இதைச் சொன்ன பிறகு அவர் அவர்கள் மே ல்ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா, “ என்றார். இவ்வாறு அவர் கூறிய பின்னர் அங்கிருந்து மறைந்துவிட்டார்.

ஆண்டவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு, திதிமு எனறழைக்கப்பட்ட தோமா மற்றவர்கள் அனைவரும் ஓர் அறைக்குள் அடைந்திருந்தது போலத் தாமும் அடைந்திருக்க விரும்பவில்லை. இயேசு தம் சீடர்களுக்குக் காட்சியளித்த போது தோமா அங்கே இல்லை. சீடர்கள் பரவசமாய் அந்தநிகழ்ச்சியை தோமாவிடம் சொன்ன போது அவர் நம்பவில்லை. எந்த ஒன்றின் உண்மை நிலையையும் கேள்வி கேட்டு, தெளிவுபடுத்திக் கொள்ளும் குணம் கொண்டவராக இருந்த இவர் “நான் நம்பமாட்டேன். அவருடைய கைகளில் ஆணிகள் அடித்த துளைகள் இருந்தனவா? அவற்றில் நான் விரலைப் போட்டுப் பார்க்க வேண்டும். அவரை ஈட்டியால குத்தின விலாவில் என் கையைப் போட்டுப் பார்க்கவேண்டும். அப்போது தான் நம்புவேன்” என்றார்

இயேசு லாசரை எழுப்பினார். இப்போது இயேசுவே இறந்திருக்கிறார். யார் அவரை எழுப்ப முடியும் என்பதே அவருடைய சந்தேகம்.

இயேசு லாசரின் கல்லறைக்கு அருகில் மார்த்தா விடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே இறக்க மாட்டார்.” என்று கூறியதை தோமா நினைவு கூரத் தவறி விட்டார்.

இயேசு மீண்டும் ஒரு முறை சீடர்களுக்குத் தோன்றினார். அப்போது தோமாவும் உடனிருந்தார். இயேசு தோமாவிடம் கைகளை நீட்டினார்.

“இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து ந‌ம்பிக்கை கொள்” என்றார்.

உடனே தோமா “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று த‌ன‌து ந‌ம்பிக்கையை வெளிப்ப‌டுத்தினார். இயேசு அவ‌ரிட‌ம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்” என்றார். நம்பிக்கை இழ‌ப்போருக்கு மிக‌வும் ஊக்க‌மூட்ட‌க் கூடிய ஒரு இறை வார்த்தை இது.

8

இயேசு துன்புற்று இறந்த பின்பு நாற்பது நாள்களாகஅவர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம் “நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள். தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றார்.

பின்னர் சீடர்கள் கலிலேயாவில் இயேசு தமக்கு குறித்திருந்த மலைக்குப் போனார்கள். இதனைக் கேள்வியுற்ற செபுலோனும் வேலனும் அங்கே சென்றனர். மலாக்கியும் மனாசேயும் கூட அவ்விடத்திற்கு வந்திருந்தனர். ஒலிவமலையில் அவர்கள் கண்கள் முன்பாக இயேசு மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து

மறைந்துவிட்டது.அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்ககள். அப்போது வெண்ணுடைஅணிந்த இருவர் தோன்றி, ” கலிலேயரே நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்.? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக்கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர்.

பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

இம்மலைஎருசலேமுக்கு அருகில் ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது.

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் கூடியிருந்தார்கள்.

திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ” இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்டனர்.

தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்து வந்திருந்த இறைப் பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர்.

அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம்சொந்தமொழிகளில்அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். வேலனும் தம் தாய் மொழியாகிய தமிழிலும் சிலர் பேசுவதைக் கேட்டு ஆச்சரியமுற்றார்.

எல்லோரும் மலைத்துப் போய் இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய் மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி? என வியந்தனர்.

பார்த்தரும் மேதியரும் எலாமியரும் மெசப்பொத்தாமியா யூதேயா கப்பதோக்கியா போந்து ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பி ரி கிகியா பம்பிலியா எகிப்து சிரேன் நகரை யடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும் யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும் அரேகியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே என்றனர். எல்லாரும் மலைத்துப் போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர். இவர்கள் இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று மற்றவர்கள் கிண்டல் செய்தனர்.

அப்பொழுதுபேதுருபதினொருவருடன்சேர்ந்துஎழுந்துநின்றுஉரத்தக்குரலில்அவர்களிடம்பின்வருமாறுகூறினார்யூதமக்களேஎருசலேமில்வாழும்மக்களேஇதைத்தெரிந்துக்கொள்ளுங்கள். எனதுசொற்களைக்கவனித்துக்கேளுங்கள்.

நீங்கள் நினைப்பது போல் இவர்கள் குடிவெறியில் இருப்பவர்களல்ல. இப்போது காலை ஒன்பது மணிதான் ஆகிறது. நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினன் யோவேல் கூறியநிகழ்ச்சியே.

அவர் மூலம் கடவுள் கூறியது. இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியை பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பீர். உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் உங்கள் முதியோர் கனவுகளைக் காண்பர்.

அந்நாள்களில் உங்கள் பணியாள் பணிப் பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். அவர்களும் இறைவாக்கு உரைப்பீர். இன்னும் மேலே வானத்தின் அருஞ்செயல்களையும் கீழே வையகத்தில் இரத்தம் நெருப்புபுகைப்படலம் ஆகிய அடையாளங்களையும் கொடுப்பேன்.

ஒளிமயமான பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்ளே கதிரவன் இருண்டு போகும். நிலவோ இரத்த நிறமாக மாறும். அப்பொழுதுஆண்டவரின்திருப்பெயரைச்சொல்லிவேண்டுவோர்யாவரும்தப்பிப்பிழைப்பீர்.

இஸ்ரயேல் மக்களே நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாங்களையும் செய்து அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இதனால் நீங்கள் அறிந்ததே.

கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும் தம் முன்னறிவிப்பின் படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாததன் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்.

கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன்பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக் குறித்துக் கூறியது: “ நான் ஆண்டவரை எப்போதும் என் கண் முன் வைத்துள்ளேன். அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன்.

இதனால் என் இதயம் பேறு வகை கொள்கின்றது. என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர் பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காண விடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.

சகோதர சகோதரிகளே நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள் வரை நம்மிடையே இருக்கிறது.

அவர் இறைவாக்கினர் என்பதால் தம் வழித் தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பீர் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார்.

அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர் என்று கூறியிருக்கிறார்.

கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.

அவர்கடவுளின்வலதுப்பக்கத்துக்குஉயர்த்தப்பட்டுவாக்களிக்கப்பட்டதூயஆவியைத்தம்தந்தையிடமிருந்துபெற்றுப்பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.

விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டவர் தாவீது அல்ல. ஏனெனில் ஆண்டவர் என் தலைவரிடம் நான் உம் பகைவரை உமக்குக் கால் மனையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்,” எனக் கூறினார் என்று அவரே சொல்கிறாரே. ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவை கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினர் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து சகோதரரேநாங்கள் என்னசெய்யவேண்டும்? என்று கேட்டார்கள்.

அதற்குப் பேதுரு அவர்களிடம் நீங்கள்மனம்மாறுங்கள். உங்கள்பாவங்களிலிருந்துமன்னிப்புபெறுவதற்காக. ஒவ்வொருவரும்இயேசுகிறிஸ்துவின்பெயரால்திருமுழுக்குப்பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது என்றார்.

மேலும் அவர் வேறு பல சான்றுகளை எடுத்துக் கூறி நெறிக் கெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.அவருடைய வார்த்தைகளை ஏற்றுக் கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள்.

வேலன் செபுலோனிடம் நானும் திருமுழுக்கு பெற முடியுமா? என்று கேட்டார். செபுலோன் நான் ஏற்கனவே திருமுழுக்குப் பெற்றவன். நீர் முழு இதயத்துடன் இயேசுவை நம்பினால் தடை இல்லை என்றார். அப்போது மலாக்கி மற்றும் மனாசேயுடன் வேலனும் திருமுழுக்கு பெற்றார்.

தழகத்திலிருந்து வந்த நாவாயிலிருந்து இறங்கிய அதே இடத்தில் வேலனும் செபுலோனும் நின்றிருந்தனர். வேலன் விடை பெரும் நேரம். அவர் செபுலோனிடம் நீர் தமிழகம் வரும்போது கண்டிப்பாக சேர நாட்டின் வடபகுதியான ஏழில் மலைக்கு வரவேண்டும். என்று அழைப்பு விடுத்தார். செபுலோன் வேலரே! இப்போது நீர் வெறும் வேலர் அல்லர். நீர் இப்போது இம்மானுவேலர் என்றார். இருவரும் கண்ணீர் மல்கப் பிரியாவிடை பெற்றுக் கொண்டதும் வேலன் என்கிற இம்மானுவேலர் நாவாயில் தமிழகத்திற்குப் பயணனப் படத் தொடங்கினார்.

– ஆகஸ்ட் 2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *