(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நல்லவர் என்பதில் தடை இல்லே. ஆனாலும்…” அவன் மேலே சொல்லாமல் இழுத்தான்.
“ஆனாலும் என்ன?’ என்று புலவர் கேட்டார்.
“அவர் யார்? விளக்கமாகச் சொல்’ என்ருர் அரிசில்கிழார்.
“பேகன், பெரிய வள்ளல் என்ற புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருக்கிறது. புலவர்களிடத்தில் எவ்வளவோ பிரியமாக இருக்கிருர், குடிமக்களிடத்தில் அன்பு உடையவரே. ஆனால் இங்கே அவரைப் பிரிந்து, தனியே வாழுகிறாள் அவருடைய மனைவி கண்ணகி. அந்த அம்மாளுக்கு எத்தனை துயரம் இருக்கும்!”
“ஏன் பிரிந்து வாழுகிறாள்?”
“அந்த அம்மாள் பிரியவில்லை. பேகனாரே பிரிந்து வாழ்கிறார்”.
“என்ன காரணம்?”
“ஒரு காரணமும் இல்லை. இல்வாழ்வில் சிறிய மனத்தாங்கல் நேர்வது இயல்புதான். அதைப் பெரிதாகக் கொள்ளலாமா? தங்களைப்போன்ற புலவர்கள் எங்கள் அரசருக்கு அறிவுரை கூறினால் மறுபடியும் அந்தப் பெண்மணி நல்ல வாழ்வைப் பெறலாம்.”
இவ்வாறு சொன்னவன் அரண்மனையைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவன். அரிசில் என்ற ஊரிலே பிறந்த அரிசில்கிழார் என்னும் புலவரிடந்தான் அவன் பேசினான்.
“நல்ல யோசனை. அப்படியே செய்யலாம்” என்றார் புலவர்.
அப்போது அங்கே வந்திருந்த கபிலர். பரணர், பெருங் குன்றுார்கிழார் என்பவர்களிடமும் இந்தச் செய்தியைச் சொன்னார். ஒவ்வொருவரும் வள்ளல் பேகனிடம் சொல்வோம். அவன் தன் மனைவியோடு ஒன்றுபட்டு வாழவேண்டுமென்று பாட்டிலே வைத்துச் சொல்வோம்” என்றார். அவர்களும் அதற்கு இசைந்தார்கள்.
பழனியாண்டவன் கோயில் கொண்டிருக்கும் பழனிக்குப் பழங்காலத்தில் ஆவினன் குடி என்று பேர். அங்கே பேகன் என்ற சிற்றரசன் வாழ்ந்திருந்தான். பேகன், வேளிர்களில் ஒருவன். ஏழு பெரு வள்ளல்களில் இவனும் ஒருவன்.
தமிழ்ப் புலவர்களிடத்தில் அவன் அதிகமான மதிப்பு வைத்துப் பழகினான். கடவுளிடத்தில் பக்தி நிறைந்தவன். ஏதோ சிறு சச்சரவு காரணமாக அவன் தன் மனைவி கண்ணகி என்பவளை விலக்கி வைத்திருந்தான். இந்த நிலையை மாற்ற அரிசில் கிழார் மற்றப் புலவர்களையும் சேர்த்துக்கொண்டார்.
எல்லோரும் பேகனிடம் சென்று பாடினார்கள். அவன் அவற்றைக் கேட்டு, மகிழ்ந்து, பரிசில் கொடுக்க வந்தான். “இந்தப் பரிசில் வேண்டாம்” என்று புலவர்கள் சொன்னர்கள். “என்னுல் இயன்ற வேறு பரிசில் எது கேட்டாலும் தருகிறேன்’ என்றான் அவன். “அப்படியானால் நீ உன் மனைவியுடன் சேர்க்து வாழவேண்டும்” என்று புலவர்கள் சொல்லி, ஆளுக்கு ஒரு கவி பாடினர்கள்.
“நீ கொடுக்கும் நகைகளும் பொன்னும் எனக்கு வேண்டாம். எனக்கு விருப்பமான பரிசிலே அளிக்க வேண்டும் என்று உனக்கு எண்ணம் இருந்தால், நீ உடனே ஒன்று செய்ய வேண்டும். உன்னுடைய அன்பைப் பெருமல், அலங்காரங்களேச் செய்துகொள்ளாமல், தன் கூந்தலில் மலரைச் சூடிக்கொள்ளாமல் இருக்கிறாள் உன் மனைவி. அவள் மறுபடியும் மலரைச் குடிக்கொள்ள வேண்டும். உடனே தேரில் குதிரையைப் பூட்டிப் புறப்படு” என்று அரிசில் கிழாரும் பாடினார்.
தமிழ் நாடு அறிந்த பெரும் புலவர்கள் சொல்வதைத் தட்டும் துணிவு பேகனுக்கு இல்லை. உடனே தன் மனைவியை அழைத்துக்கொண்டு பழையபடி வாழத் தொடங்கினான்.
***
சேர நாட்டை அந்தக் காலத்தில் பெருஞ்சேரல் இரும் பொறை என்ற சேர அரசன் ஆண்டு வந்தான். அவனைப். பார்க்கும்பொருட்டு அரிசில்கிழார் வஞ்சிமாநகருக்குச் சென்றார். சேரன் அவரை வரவேற்று உபசரித்தான். “என்னுடனே தங்கி என்னுடைய அவைக்களத்தைச் சிறப்பிக்க வேண்டும்” என்று அன்புடன் கேட்டுக்கொண்டான். அவனுடன் சில காலம் இருந்த புலவர், அவ்வரசனுடைய நல்ல குணங்களில் ஈடுபட்டார். நாளுக்கு நாள் அவனுடைய அன்பு ஓங்கி வந்தது: அவன் செய்த உபகாரமும் அதிகமாயிற்று. அவனைப்பற்றிக் கவிபாட எண்ணினர் அரிசில்கிழார். அவனுடைய வீரத்தையும் பகைவரோடு போர் செய்து வெற்றி பெற்றதையும் பத்துப் பாடல்களில் பாடினர்.
அந்தப் பாடல்களைக் கேட்ட சேரன் உள்ளத்தில் நன்றி அறிவு பொங்கியது. எழுத்துக்கு ஆயிரம் பொன் தருவதற்கு ஏற்ற பாடல்கள் அவை என்று தோன்றியது. என்ன பரிசில் தருவது?
அரசன் ஒரு பை நிறையப் பொன்னைக் கொண்டு வரச் செய்தான். அதைப் பரிசாக அளிக்கப் போகிறான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அரசன் தன் பட்ட மகிஷியை அழைத்துக் கொண்டு வரச் செய்தான். தன் மனைவியின் கையிலிருந்து வெற்றிலே பாக்கை வாங்கினான். அரிசில்கிழாரிடம் கொடுத்தான். பொன் நிறைந்த பையையும் அளித்துவிட்டுப் பேசலானான்: “புலவர் பெருமானே, தாங்கள் என்னிடம் பூண்டுள்ள கருணையை என்னென்று சொல்வேன்! இந்தச் சிறியேனத் தங்களுடைய கவிதையால் இறவாதவன் ஆக்கிவிட்டீர்கள். தங்களுக்கு யான் என்ன பரிசிலைக் கொடுப்பேன்? இந்தக் கிழியில் ஒன்பதினுயிரம் பொன் இருக்கிறது. இதுவும் ஒரு பரிசிலா? கடைசியில் ஓர் எண்ணம் எனக்குத் தோன்றியது. இதோ இந்த அரண்மனையையே தங்களுக்கு வழங்கிவிட்டேன்”.
உடன் இருந்தவர்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது! அரிசில் கிழாரும் பிரமித்துப்போனார்.
“அரண்மனே மாத்திரம் அன்று. சிங்காசனமே தங்களுடையதுதான். அரசாட்சியும் தங்களேச் சார்ந்ததே. என்னைப் போன்ற அகங்காரிகள் அரசாட்சி செய்வதனால் போர்தான் மிகுதியாகிறது. அதனால் மக்களுக்குத் துன்பம் உண்டாகிறது. தாங்கள் அரசாண்டால் நாடு முழுவதும் அமைதி உண்டாகும். தங்களுக்குப் பகைவரே உண்டாக மாட்டார்கள்” என்று சொல்லி அவரை வணங்கினான்.
அரிசில்கிழார் சிறிது நேரம் பேச முடியாமல் திணறினர். பிறகு புன்முறுவல் பூத்தார். “எத்தனையோ அரிய பொருள்களேப் பற்றி நான் கேள்வியுற்றிருக்கிறேன். யானையைக் கொடுத்தவர்கள் உண்டு. நாட்டின் ஒரு பகுதியை அளித்தவர்கள் உண்டு. ஆனால் அரண்மனையையும் அரசாட்சியையும் புலவனுக்கு வழங்கியதாகக் கதையிலும் கேட்டதில்லை. நீ எல்லாக் கொடையாளிகளிலும் உயர்ந்தவன்.”
அரசன். இந்தக் கொடையை ஏற்றுக்கொண்டு என்னைப் பெருமைப்படுத்த வேண்டும்.
அரிசில்கிழார்: ஏற்றுக்கொண்டேன்.
உடன் இருந்தவர்களுக்கு இரண்டாவது முறையாகப் பிரமிப்புத் தட்டியது. “நான் இப்போது அரசனைப்போல இருந்து, கொடுக்க ஆசைப்படுகிறேன். இந்த நாட்டை உனக்கே வழங்குகிறேன்” என்றார் புலவர்.
“கொடுத்ததை மீட்டும் வாங்குவது நியாயம் அல்லவே!”
“நான் இன்னும் சரியானபடி வாங்கிக்கொள்ள வில்லையே! வாங்கியதாக வைத்துக்கொண்டாலும் என்னுடைய பிரதிநிதியாக இருந்து, இந்த நாட்டை ஆளும்படி வேண்டிக்கொள்கிறேன்.”
ஒர் இனிய நாடகக் காட்சியைக் காண்பதுபோல இருந்தது மற்றவர்களுக்கு.
அரிசில்கிழார் வற்புறுத்தினர். அரசன் அவர் வார்த்தையை மறுக்க முடியவில்லை. ஆனால் ஒரு வரம் அருள வேண்டும். அரசராக இருந்து ஆட்சி புரியாவிட்டாலும் அமைச்சராக இருந்து, எனக்குத் துணை புரியவேண்டும். அப்படி இருந்தால், தங்களுடைய அறிவுரையால் நான் திருந்தி, நல்ல செயல்களைச் செய்ய முடியும்” என்று அரசன் பணிந்து, கெஞ்சிக் கேட்டான்.
அதைப் புறக்கணிக்க அரிசில்கிழார் விரும்பவில்லை. அன்று முதல் அரிசில்கிழார் சேர அரசனுடைய அமைச்சராக இருந்து விளங்கினர். அரசனுக்கு அடங்கிய அமைச்சராக அல்ல: அரசனே அடக்கி அறிவுரை கூறும் நல்லமைச்சராக வாழ்ந்தார்.
– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு