வேர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2019
பார்வையிட்டோர்: 5,565 
 
இருபது வருடங்களாக பாரீசில் வேலை பார்க்கும் எனது மைத்துனன் வருடா வருடம் மகர ஜோதிக்கு ஐயப்பன் மலைக்கு வருவான். வரும்போது கூடவே துணைக்கு ஒரு ஆளையும் இழுத்து வருவான்.

இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு வெள்ளைக்காரர்களை அழைத்து வந்தான். சென்ற வரும் ஒரு இலங்கைக்காரனை அழைத்து வந்தான். இந்த வருடமும் யாரோ ஒரு ஆளைக் கூட்டி வருவதாகத் தொலை பேசியில் சொன்னான். யார், என்ன, விபரம் தெரியவில்லை.

பாரீசிலேயே மாலை போட்டு, நாற்பது நாட்கள் விரதமிருந்து, நேராக சென்னைக்கு வந்து, அப்படியே சபரிமலை போய் சாமி தரிசனம் முடித்து விட்டு, அப்புறம்தான் அக்காள் குடும்பத்தைப் பார்க்க எங்கள் வீட்டிற்கு வருவான். வந்து நான்கு நாட்கள் தங்கி விட்டு அப்புறம் புறப்படுவான்.

இந்த வருடமும் இதோ வந்து விட்டான்.

வெள்ளை நிற அம்பாசிட்டர் வாடகைக்கார் ஒன்று வந்து வாசலில் நின்றது. காத்திருந்த நான், என் மனைவி, என் மகன்கள் இருவர் அனைவரும் வாசலுக்குச் சென்றோம்.

முதலில் இறங்கியவன் மைத்துனன். அடுத்துதான் அவன் கூட வந்த விருந்தாளி. முப்பது வயது. ஆறடிக்கும் அதிகமான நெடிய உருவம். நீள முகம். தடித்த உதடுகள். ஏறக்குறைய ஒட்ட கத்தரித்து விட்டது போல் தலை. அசப்பில் நீக்ரோ சாயல். உண்மையா பொய்யா தெரியவில்லை.

‘‘வாங்க… வாங்க….’’ என் மனைவிதான் அவர்களைப் போய் வரவேற்றாள்.

டிரைவர் டிக்கியைத் திறக்க…என் மகன்கள் இருவரும் அவர்கள் பெரிய பெட்டிகளை இழுத்து வந்தார்கள்.

வாடகைக்கார் போய் விட்டது. வழக்கமான விருந்து, உபசரிப்பு. வந்த விருந்தாளி ஒன்றும் பேசவில்லை. மொழி பிரச்சனை. ஆனால் நாங்கள் பேசும் தமிழைப் புரிந்து கொள்பவன் போல் முக உணர்ச்சி காட்டினான். தமிழிலும் இரண்டொரு வார்த்ததைகள் திக்கித் திக்கிப் பேசினான். உச்சரிப்பு வித்தியாசாமாக இருந்தது.

‘‘இலங்கை ஆளா ?’’ நான் மைத்துனனைப் பார்த்தேன்.

‘‘இல்லை. தமிழன் !’’ பதில் சொன்னான்.

எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனை வியப்பாய்ப் பார்த்தோம்.

‘‘நிசம்தான். இவுங்க பூர்வீகம். இங்கே.. பக்கத்துல கிராமம். கும்பிடுவதெல்லாம் மாரியம்மன், காளியம்மன், தமிழ்க்கடவுள்கள். வீட்டிலேயும் எல்லாரும் தமிழ் பேசுவாங்க. தன் சொந்த நாட்டைப் பார்க்கனும்ன்னு ஆசைப்பட்டான். மாலை போட்டு இழுத்து வந்தேன்.’’ – மைத்துனன் அவனை அழைத்து வந்த காரணத்தைச் சொன்னான்.

எங்களுக்கெல்லாம் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் வந்தது.

‘‘நான் உட்பட இன்னைக்கு உள்ளவங்கெல்லாம் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கனும் பெரிசா வாழனுமெல்லாம் கனவு கண்டு ஆளாய்ப் பறக்குறாங்க. இவுங்க முன்னோர்களெல்லாம்… இல்லை இல்லை நம்ம முன்னோர்களெல்லாம் வெளிநாட்டுக்குப் போனது வேற கதை.’’ நிறுத்தினான்.

வந்த விருந்தாளி. ‘நண்பன் தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறார்!’ என்பது புரிந்து தலை கவிழ்ந்தான்.

எல்லாரும் கதை கேட்கும் ஆவலில் மைத்துனன் முகத்தைப் பார்த்தோம்.

‘‘பேரெல்லாம் கற்பனையாய் வைச்சுக்கலாம்.’’ சொல்லி அவன் வாயைத் திறந்தான்.

1902ஆம் ஆண்டு. மொரீசியஸ் தீவு.

ஒரு குக்கிராமத்தின் களத்து மேட்டில் தியாகு, சோமு, அருணாசலம், இடும்பன், கறுப்பன், குப்பன், பாலு, ராமு, சாம்பசிவம், மலையாண்டி, மருதன், மலைப்பொருமாள்…. பன்னிரண்டு பேர்களும் ஒரு முடிவிற்கு வந்து தன் கையிலுள்ள கருக்கரிவாளைத் தொட்டு கூர் பார்த்தார்கள். தூசு பட்டாலே துண்டாக விழும் அளவிற்கு அதன் கூர்மை இருந்தது. முகத்தில் திருப்தியுடன் இடுப்பில் சொருகி மேல் சட்டையைப் போட்டு மறைத்துக் கொண்டு முதலாளி வீட்டை நோக்கி நடந்தார்கள்.

முகம், கண்களில் ஆசாத்திய இறுக்கம். எல்லாம் பன்னிரண்டு வருட தாக்கம்.

பன்னிரண்டு வருடங்களுக்கு முன் இவர்கள் அனைவரும் இருபத்தைந்து வயதை எட்டிப் பிடித்துஇ மனைவி மக்களோடு சந்தோசமாக காரைக்காலை அடுத்த கரிச்சான்குடியில் வாழ்ந்தார்கள். காவிரி தண்ணீர் பாசனத்தில் அந்த ஊரே விவசாயம். இவர்கள் உழைப்பின் அருமையில் அந்த கிராமம் அதிக செழிப்பாக இருந்தது. விவசாய வேலைகளில் இவர்களைத் தட்டிக்கொள்ள ஆள் கிடையாது. அந்த அளவிற்குச் செய் தொழிலில் நேர்த்திஇ திறமை.

அப்போது இந்தியா முழுதும் ஆங்கிலேயர் ஆட்சி. புதுச்சேரிஇ காரைக்கால்இ மாகேஇ ஏனாம்இ சந்திரநாகூரெல்லாம் பிரஞ்சுக்காரர்களின் ஆட்சி. விருந்தாளியாய் வந்து காரைக்காலில் தங்கி ஊரைச் சுற்றிப் பார்த்த ழேன் துரைக்கு கரிச்சான்குடியைப் பார்த்தும் வியப்பு.

தன் சொந்த கிராமத்தையும் இப்படி ஆக்க ஆசை. தன் விருப்பத்தைக் காரைக்காலை நிர்வகித்துவரும் பெரிய துரையிடம் சொன்னார்.

‘‘அவரும் அதுக்கென்ன ஏற்பாடு செய்யலாம் !‘‘ உத்திரவாதமளித்தார். உடனே செயலிலும் இறங்கினார். மறுநாள் கரிச்சான்குடி கிராமத்து தலையாரி பன்னீர்செல்வத்தை அழைத்து சேதி சொன்னார். அவரும் தலையாட்டிக்கெண்டு சென்று மேலே குறிப்பிட்ட பன்னிரண்டு பேர்களையும் தனியே அழைத்தார்.

‘‘உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிச்கிருக்குடா !‘‘ எடுத்த எடுப்பிலேயே உற்சாகமாக பேச்சைத் துவங்கினார்.

‘‘என்ன ?‘‘ தியாகு அவரை ஆவலாய்ப் பார்த்தான்.

‘‘பெரிய துரையோட விருந்தாளி ழேன் துரைக்கு மொரீசீயசு தீவுக்கு டெசன் ஆளுங்க விவசாயத்துக்கு வேணுமாம்.. ஊர்ல பொறுக்கி எடுத்து ஆள் கேட்கிறார்.‘‘

அப்போதெல்லாம் இப்படி வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் பன்னிரண்டு பன்னிரண்டு பேர்களாகத்தான் கப்பலில் ஏற்றி கொண்டு செல்வார்கள்.

சொந்த ஊர்இ நாடுஇ மனைவி மக்களைவிட்டு எவருக்குப் போக பிடிக்கும் ? மேலும் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.

‘‘நாங்க போகலை !‘‘ எல்லோரும் ஒட்டு மொத்தமாக தலையாட்டி மறுத்தார்கள்.

‘‘முன் பணம் தலைக்கு இருநூறு பகோடா. இது இனாம். இது இல்லாம அங்கே தினத்துக்கு எட்டு பகோடா கூலி. சாப்பாடுஇ தங்குற இடம்இ இலவசம். கப்பல்ல போக ஒரு மாசம். வர ஒரு மாசம் அங்கே இருக்கிறது ஆறு மாசம். திரும்பிப் பார்த்தா எட்டு மாசமும் காணாம போயிடும். ஆறுமாசத்துக்கொரு தடவை அந்த தீவுக்குக் கப்பல் வரும். இந்த கப்பல்ல போய் அடுத்த கப்பல்ல திரும்பிடலாம்.‘‘ சமாதானம் சொன்னார்.

‘‘முடியாது சாமி !‘‘ சோமு பலமாக தலையாட்டினான்.

‘‘அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்போது மாட்டேன்னு சொல்றது தப்பு. பொறந்ததிலேர்ந்து இந்த ஊர்லேயேகிடந்து உழல்ற நீங்க சும்மா ஒரு மாற்றத்துக்குக்காவாவது அங்கே போய் இருந்து பார்த்து திரும்பி வரனும். அங்கே வேலை தெரியாத ஆளுங்களுக்கு நம்ம திறமையைக் காட்டனும். அப்படியே காசுக்குக் காசு பெருமைக்குப் பெருமை.‘‘ மசித்தார்;.

அவர்களை கரைகிறாதாய்த் தெரியவில்லை. இவரும் அவர்களை விடவில்லை.

பேசாத பேச்செல்லாம் பேசிஇ ‘‘இதோ பாருங்கப்பா! உங்க பொண்டாட்டி புள்ளைங்க காபந்துக்கு நானாச்சு. கூடவே உங்க அம்மா அப்பா வேற இருக்காங்க. அப்புறம் என்ன கவலை ? குடும்பம் தடுத்தாக்கூட சாமாதானம் சொல்லிட்டுப் புறப்படுங்கப்பா.‘‘ சொல்லி அவர்கள் முகத்தை கூர்ந்து பார்த்தார். கொஞ்சம் இளகியது போல் தெரிந்தது.

‘‘ஊர்த்தலையாரி. வெள்ளைக்காரங்ககிட்ட நெருங்கிப் பழகுற முறையில நான் இன்னொரு சேதியும் சொல்றேன். இன்னைக்கு மறுத்து போகாம பிடிவாதம் பிடிச்சா நாளைக்கு ஏதாவது ஒரு கேசுல புடிச்சு உள்ளாற போட்டுடுவானுங்க. தேச குத்தம் செய்தீங்க அது இதுன்னு பொய் கேசு சோடிச்சு நாடு கடத்துறேன்னு சொல்லி உங்களைக் கொண்டு போக நெனைச்ச ஊருக்குக் கொண்டு போயிடுவானுங்க. அரசாங்கத்தோட மோதுறது நல்லதில்லே. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்!‘‘ கண்களைப் பார்த்தார். ஆட்கள் மிரண்டு விட்டார்கள்.
ஒரு சுபயோக சுபதினத்தில் ழேன் துரை காரைக்கால் துறைமுகத்திலேயே இவர்களுடன் கப்பல் ஏறினார். ஒரு மாதம் பயணப்பட்டு தங்கள் தீவில் கொண்டு இறக்கினார். அவர் கிராமத்தில் இவர்கள் நுழைந்தபோது நல்ல செழுமையாக இல்லை. அங்குள்ளவர்களெல்லாம் உழைக்க சோம்பேரிகளாய் இருந்தார்கள்.

ழேன்துரை சொன்னபடி இவர்களுக்கு தங்க நான்கு குடிசைகள் கட்டிக் கொடுத்தார். சமையலுக்குப் பாத்திரம் பண்டங்கள் வாங்கி கொடுத்ததோடு அல்லாமல் ஒரு ஆளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

இவர்களுக்கு உழைக்க வேண்டிய ஒரு வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. அந்த உழைப்பிலும் கண்டிப்பில்லை.

ழேன்துரை மனித மன நாடியைப் பிடித்துப் பார்த்தவர் போல. கண்டிப்பு கறாரெல்லாம் இவர்களிடம் எடுபடாது உணர்ந்து…முதல் நாளே இவர்களிடம் சொல்லி விட்டார்.

‘‘இந்த மண்ணை உங்க நாடுஇ ஊராய் நெனைச்சு உழைக்கனும். உங்க வேலைஇ கைத்திறமைல்லாம் காட்டி இந்த ஊர் மக்களை மூக்கு மேல விரலை வைக்கச் செய்து உங்க நாட்டுக்கும்இ மக்களுக்கும் நல்ல பேர் பெருமையை ஏற்படுத்திக் கொடுக்கனும். அதுக்காக மாடாய் உழைக்கனும்இ சாராய்ப்பிழியனுமெல்லாம் அவசியமில்லே. நீங்க நெனைச்ச நேரத்துக்கு உழைச்சு ஓய்வெடுக்கலாம். யாரும் ஏன் இப்படின்னு கேட்கமாட்டோம். உங்க சுதந்திரத்துல தலையிடமாட்டோம். அடுத்து உங்களுக்கு என்ன உதவி எப்போ வேணுமின்னாலும் என்கிட்ட கூச்சப்படாம கேட்கலாம்.‘‘ என்றார்.

இந்த அளவிற்குச் சுதந்திரம் கொடுக்கும் போது மனதில் உற்சாகம் வராமல் என்ன செய்யும் ? அது மட்டுமில்லாமல் தங்கள் வேலை கைத்திறனைக் காட்டி நாட்டுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்க சந்தர்ப்பம் நினைத்தார்கள். விளைவு ?…. அவர்களுக்குள் புது இரத்தம் பாய்ந்தது.

கரம்பாய்க்கிடந்த காடு இவர்கள் கைபட்டு செழித்தது. அதோடுமட்டுமில்லாமல் தென்னைஇ வாழைஇ பனை தோட்டங்களைச் கிக்கெடுத்து சிறக்க வைத்தார்கள். அடுத்த கப்பல் வரும்போது இவர்களால் புறப்பட முடியவில்லை

பயிர்களெல்லாம் பலன் கொடுக்கும் தருவாயில் இருந்தது. அடுத்து கப்பல் வரும்போது.. பயிர் மீண்டும் வைத்திருந்தார்கள். அதற்காக இவர்கள் கவலைப்படவில்லை. ஒன்றரை வருடங்கள் கழித்த வீட்டு நினைப்பு..

‘‘துரை ! நாங்க இந்த கப்பலுக்கு ஊருக்குப் புறப்படுறோம் !‘‘ நின்றார்கள்.

ழேன் மறுப்பேதும் சொல்லவில்லை. மாறாய்….

‘‘ஓ…நீங்க தாராளமாய்ப் போகலாம். எனக்கும் உங்களைக் கூட்டி வந்ததுபோல அனுப்ப ஆசை. கப்பல்ல போய்க் கேட்டேன் ஒரு துரும்பைக்கூட ஏத்த இடமில்லேன்னு சொல்லிட்டாங்க. அடுத்த கப்பலுக்குப் போகலாம்!‘‘ என்றார்.

‘முதலாளி பேச்சை யார் நம்பாமல் இருக்க முடியும் ?!‘ பின் வாங்கினார்கள்.

அடுத்து கப்பல் வரவில்லை. ஒரு வருடம் ஓடியது. ஆறுமாதம் கழித்து மீண்டும் கப்பல் வந்தது. பழையகுருடி கதவைத் திறடி நிலையாய் இடமில்லை. அடுத்த கப்பல் புயல்இ மழைஇ கடல் கொந்தளிப்பு காரணமாய் இல்லை. தட்டித்தட்டிப் போய் திரும்பிப் பார்க்கும் போது பன்னிரண்டு வருடங்கள் பஞ்சாய்ப் பறந்தது தெரியவில்லை.

‘‘துரை நம்பளை அதட்டாம உருட்டாம வந்து போற கப்பலுக்கெல்லாம் நம்பகமாய் ஒரு கதையைச் சொல்லி ஏமாத்திட்டான்ய்யா !‘‘ எல்லோருக்கும் புரிந்தது.

‘‘நயவஞ்சக்காரப்பயல் !‘‘ வெகுண்டார்கள்.

‘‘இந்த கப்பல்ல நம்மை அனுப்பலேன்னா வெட்டி பொலி சாய்ச்சுட்டு புறப்படுவோம் !‘‘ வீராவேசத்துடன் சூளுரைத்துக் கொண்டு ழேன் பங்களாவை நோக்கி படை எடுத்தார்கள். தூரத்தில் பார்க்கும் போதே… வாசலில் கூட்டம் தெரிந்தது. ஏதோ அசம்பாவிதம் புரிந்தது. நெருங்க….

ழேன் துரை இரவு மாரடைப்பாhல் மரணமடைந்திருந்தார்.

வாழ்க்கையே தொலைந்ததாய் இவர்கள் உறைந்தார்கள்.

இவர்கள் இடிதலை உணர்ந்த உள்ளுர் தொழிலாளிஇ ‘‘துக்கம் முடியட்டும். மொதலாளி மகன் சின்னதுரை அப்பனைப் போல் தோள்ல கைப்போட்டு கழுத்தை அறுக்கும் குணம் கிடையாது. நல்ல மாதிரி. இன்னும் இருபது நாள்ல சிறப்பு சரக்கு கப்பல் ஒன்னு நம்ம துறைமுகத்துக்கு வருது. அதுல உங்களை ஏத்தி விட ஏற்பாடு செய்யச் சொல்லலாம். அனுப்பிடுவார்.‘‘ தேற்றினான்.

அடம்பிடிக்க இது தருணம் அல்ல உணர்ந்த அவர்கள் துக்கத்தில் துக்கத்தோடு கலந்து கொண்;டார்கள். அதோடு விடாமல் அன்றிலிரவிலிருந்தே பேசிஇ ‘‘இவன் அனுப்பலேன்னு மறுத்தா கொலைதான் !‘‘ நேற்று இரவு முடிவெடுத்துவிட்டார்கள். இதோ ஆயத்தமாகவும் புறப்பட்டுவிட்டார்கள்.

லியோன் சே துரைக்கு வயது பதினெட்டு. எல்லாம் இவர்கள் பார்த்து வளர்ந்த பிள்ளைதான். தனது பங்காளா வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் கணக்கப்பிள்ளை பவ்வியமாக நின்றார்.

இந்த பன்னிரண்டு பேர்களும் அவர்கள் முன் நின்றார்கள்.

‘‘சின்னதுரை ! நாங்க இந்த கப்பல்ல சொந்த நாடு ஊரு போகனும் !‘‘ மலைப்பெருமாள் தாங்கள் வந்த விசயத்தைச் சொன்னான்.

லியோன் சே தலையைக் குனிந்து ஐந்து நிமிடங்கள் பேசாமல் சிந்தித்தான். பின் ஒரு முடிவிற்கு வந்துஇ ‘‘ஒரு நிமிசம் !‘‘ இவர்களிடம் சொல்லிவிட்டு உள்ளே போனான்.
திரும்பி வந்தவன் கையில் பழைய பைல் இருந்தது.

‘‘அப்பா செத்ததும் உங்களையெல்லாம் சொந்த நாட்டுக்கு அனுப்பனும்ன்னு எனக்கும் ஆசை. அதனால அவர் அலமாரியைக் குடைஞ்சு உங்க சம்பந்தப்பட்ட ஏதாவது இருக்கான்னு தேடினேன். இது கெடைச்சுது. கணக்கு ! படிச்சுப் பாருங்க.‘‘ அருகிலுள்ளவரிடம் நீட்டினான்.

வாங்கி புரட்டிவரின் கண்களில் மிரட்சி வந்தது,

‘‘என்ன விசயம் சொல்லுங்க ?‘‘ தியாகு லியோன் சேயைத் தைரியமாக ஏறிட்டான்.

‘‘அப்பா உங்களுக்குத் தலை ஒன்னுக்கு இருநூறு பகோடா கொடுத்து விலைக்கு வாங்கி அடிமைகளாய் இங்கே அழைச்சு வந்திருக்கார். மொழி தெரியாம நீங்களும் விசயம் புரியாம கையெழுத்துப் போட்டு வந்திருக்கீங்க.‘‘ நிறுத்தினான்.

‘‘அடிமைகளா ?!‘‘ எல்லோருக்கும் அதிர்வாய் இருந்தது. அலறினார்கள்.

‘‘ஆமாம்.! அடிமைகளைத் திருப்பி அனுப்ப இந்த நாட்டு சட்டத்துல இடமில்லே. அதனாலதான் ஏமாத்தி அழைச்சு வந்த அப்பா நீங்க போகாம இருக்க சாக்கு போக்கு சொல்லி தடுத்திருக்கார். உங்களை ஏமாத்திக்கூட்டி வந்த உறுத்தல் அவர் சீக்கிரம் போய் சேர்ந்ததுக்குக் காரணம்ங்குறது என் கணிப்பு.‘‘ வருத்தப்பட்டு தலைகவிழ்ந்தான்.

கேட்டவர்களுக்கு உலகம் இருண்டது. ஆத்திரம் அடைத்தது.

‘‘அப்படின்னா… நாங்க இந்த நாட்டை விட்டுப் போக முடியாதா ?!‘‘ சோமு ஓங்கி குரல் கொடுத்தான்.

‘‘முடியாது !‘‘ கணக்கப்பிள்ளை மெல்ல பதில் சொன்னார்.

‘‘அப்படின்னா.. எங்க முடிவைப் பாருங்க….‘‘ உறுமலாய்ச் சொன்ன இடும்பன் சடக்கென்று தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்தான்.

மற்றவர்களும் எடுத்துப் தயாராய்ப் பிடித்தார்கள்.

லியோன் சே மிரளவில்லை.

‘‘என் அப்பா செய்த துரோகத்துக்கு என்னை வெட்டி கூறு போடுங்க. அதுதான் நானும் நீங்களும் அவர் ஆத்மாவுக்குக் கொடுக்கவேண்டிய தண்டனை !‘‘ எழுந்து வந்து அவர்கள் முன் நின்று தலைகுனிந்தான்.

பன்னிரண்டு பேர்களும் ஒரு சேர அரிவாள்களைத் தூக்கிப் பிடித்தார்கள்.

கணக்கப்பிள்ளைக்கு வியர்த்தது. அடுத்த வினாடி பார்க்க சகிக்ககாவனாய்இ ‘‘ஐயோ….ஓஓ !‘‘ அலறினான்.

லியோன் சே நிமிர்ந்தான்.

அந்த பன்னிரண்டு பேர்களும் தங்கள் கழுத்திலேயே தங்கள் அரிவாளைப் பாய்ச்சிக்கொண்டு கழுத்தறுபட்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தார்கள்.

முடித்து நிறுத்திய மைத்துனன் எல்லோரையும் பார்த்தான்.

எல்லாருக்குள்ளும் நடுக்கம் இருப்பது முகத்தில் தெரிந்தது.

நான் அவன் அழைத்து வந்த ஆளைப் பார்த்தோன். அவன் முகத்தில் சோகம் கப்பி கண்கள் சிவந்திருந்தது.

‘‘கதை இன்னும் முடியலை கேளுங்க.‘‘ என்று தொடர்ந்த என் மைத்துனன்இ ‘‘அதுல பதினோரு பேர்கள் சரியா கழுத்தறுபட்டு அந்த இடத்துலேயே செத்துட்டாங்க. ஒருத்தர் மட்டும் அரிவாளைச் சரியாய்ப்பாய்ச்சுக்காம. குத்துயிரும் குலையுயிருமாய்க் கிடந்தார். லியோன் சேவும் கணக்கப்பிள்ளையும் அதிர்ச்சியிலேர்ந்து மீண்டு அவரை அள்ளிக்கிட்டு போய் மருத்துவமனையில சேர்த்து பொழைக்க வைச்சாங்க. அந்த ஆள் அப்புறம் பிரான்சுல குடியேறி இந்த நண்பன் நாலாவது தலைமுறை.‘‘ அருகிலுள்ள அவனைச் சுட்டிக்காட்டினான்.
எல்லோரும் அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள்.

எனக்கு மட்டும் இவன் நம் வேர் என்று நினைக்க….. சிலிர்த்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *