வல்லவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,727 
 
 

செல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான் ஹரி. அவனது மேலதிகாரி.

“சார், சொல்லுங்க சார்!”

“ஹரி, என்னன்னு தெரியலே, திடீர்னு என் சிஸ்டம் ஹேங் ஆயிருச்சு. என்ன பண்றது?”

‘ஹ¨ம்… இவருக்கெல்லாம் ஒரு கம்ப்யூட்டர்’ என்று மனசுக்குள் முனகிக்கொண்டு, “சார், கன்ட்ரோல் ஆல்ட் டெலிட் கீஸை பிரஸ் பண்ணுங்க. ஷட்டவுன் பண்ணிட்டு மறுபடியும் ஆன் பண்ணுங்க, சரியாயிடும்!” என்றான் ஹரி.

தனது ஸ்கூட்டரில் அமர்ந்து, ஸ்டார்ட் பட்டனை அமுக்கினான். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. மறுபடி மறுபடி முயற்சி செய்தான். பலனில்லை.

தூரத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டு இருந்த வாட்ச்மேன், ‘ஹ¨ம்… இவருக்கெல்லாம் ஒரு ஸ்கூட்டர்!’ என்று முனகிக்கொண்டு, “சோக் போட்டு ஸ்டார்ட் பண்ணுங்க, சார்!” என்றான்.

– 15th ஆகஸ்ட் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *