கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,440 
 
 

வண்டி கவர்மெண்ட் சொத்துனாலும் அவன் அவன் உயிரு அவனுக்கு சொந்தமாச்சே..

சென்னையில் அதிக போக்குவரத்து நெருக்கடிக் கொண்டது அண்ணா சாலை. ஒவ்வொரு சிக்னலை தாண்டி செல்வதற்கு பலரும் பெரும் படாக இருக்கும். அண்ணா மேம்பாலாத்ததை நெருங்கிக் கொண்டு ஒரு பேரூந்து சென்றுக் கொண்டு இருந்தது. தமிழரசன் அவன் பெயருக்கு எற்றார் போல் அந்த பேரூந்துக்கு அவன் தான் அரசன். அந்த பேரூந்தில் வரும் எல்லோர் உயிரும் அவனை நம்பி தான் இருந்தது. இவன் கவனம் சிதராமல் வண்டி ஓட்டினால் தான் மற்றவர்கள் ஒழுங்காக வீடு சென்றடைய முடியும். எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று நினைத்தவன், இன்று டீசல் புகையில் தன் வாழ்க்கையை தள்ளிக் கொண்டு இருக்கிறான். படித்து விட்டு வேலையில்லாமல் திரிந்த தமிழரசன், அவன் தந்தை பேரூந்து ஓட்டும் போது விபத்தில் இறந்ததால், அவனுக்கு இந்த வேலை கிடைத்தது. முன்பே டிரைவிங் ஸ்கூலில் ஒரு வருடத்திற்கு டிரைவிங் வேலை செய்திருக்கிந்தான். அந்த வேலை பிடிக்கவில்லை என்று அதை விட்டு விட்டு வேறு வேலை தேடிக் கொண்டு இருந்தான். அவன் தந்தை இழப்பு மூலமாக அவனுக்கு மீண்டும் அதே போன்ற வேலை. அரசாங்க வேலை, தன் குடும்பத்தை பாதுக்காக்கும் பொறுப்பு இவை எல்லாம் தமிழரசனை மீண்டும் டிரைவிங் வேலைக்கே செல்ல வைத்தது.

தினமும் வண்டி ஓட்டும் போது ஒவ்வொரு விதமான வார்த்தைகளை தமிழரசன் கேட்கும் கட்டாயத்தில் இருக்கிறான்.

“டேய் பஸ் ஒட்டுரியா…. மாட்டு வண்டி ஒட்டுரியா…”

சிக்னலில் மாட்டிக் கொள்ளும் போது

“சிக்கிர வண்டி எடுடா…”

யாராவது முந்தி செல்ல தெரியாமல் முந்தி செல்லும் போது, அவசரத்தில் பிரேக் போட்டால்

“என்னடா வண்டிய ஓட்டுர…. இவனுக்கு எல்லாம் யாரு வேலைய கொடுத்தா….”

இப்படி தமிழரசன் காதுப்படவே பேசுவார்கள். எல்லாரும் உட்கார்ந்துக் கொண்டு எந்த டிரைவராக இருந்தாலும் அவர்களை பற்றி குறை சொல்வது வழக்கமாகி விட்டது. தினமும் பேரூந்தில் ஒவ்வொரு விதமாக சண்டைகளை சந்திக்கிறான். எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காத போல் இருந்தால் தான் அவன் வாழ்க்கை வண்டி ஓடும். அண்ணா நகர் பஸ் டிப்போவில் வண்டியை நிருத்தி விட்டு தன் கன்டைக்டர் நண்பனான சகாயத்துடன் டீ குடிக்க செல்கிறான். அரைமணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் பேரூந்து ஓட்ட செல்கிறான். பேரூந்துக்கு ஆயில் மாற்றாததால் வண்டி செல்லவில்லை.

“சகாயம் ! வண்டி ஸ்டாட் ஆகல…அயில் மாத்தனும் நினைக்கிறேன்… நம்ம ஏகாம்பம் ஷெட்ல தான் இருக்காரு… அவருக்கிட்ட சொல்லி ஆயில் வாங்கிட்டுவா….” என்றான்.

சகாயம் ஆயில் வாங்க ஷேட்டுக்கு செல்கிறான். சற்று நேரம் கலித்து தமிழரசன் சகாயமும், ஏகாம்பரமும் சேர்ந்து வருவதை பார்க்கிறான். இருவர் கையிலும் ஆயில் பாட்டிலோ டப்பாவோ இல்லை.

“தமிழு ஆயில் இல்லை… எப்படியோ அட்ஜஸட் பண்ணி ஓட்டிடு.. நாளைக்கு பார்த்துக்கலாம்..” என்றான் ஏகாம்பரம்

“என்ன அண்ணே இப்படி சொல்லிறீங்க வண்டியில் ஆயில் மாத்தி எவ்வளவு நாளாச்சி… எனக்கும் வண்டி ஓட்டுறதுக்கு கஷ்டமா இருக்கு… வண்டி ஓட்டும் போது பிரேக் பிடிக்கலேனா என்ன பண்ணறது…. பல உயிர் சமாச்சாரம் இது….”

“நீ சொல்லறது சரிதான் தமிழு.. ஆனா ஆயில் இல்லையே … கவர்மெண்ட் கொடுக்குற பணத்துல நம்மனால எவ்வளவு தான் ஆயில் வாங்க முடியும்…. இருக்குறத வச்சி ஓட்டு… வண்டி இன்ஜின் போனா… போகட்டும்… கவர்மெண்ட் சொத்து தானே…”

“வண்டி கவர்மெண்ட் சொத்துனாலும் அவன் அவன் உயிரு அவனுக்கு சொந்தமாச்சே” என்றான் தமிழரசன்.

ஏகாம்பரம் ஒன்றும் பேசவில்லை. இனி பேசி பயனில்லை என்பதால் தமிழரசன் வண்டியை ஓட்ட முயற்சித்தான். இந்த முறை வண்டி ஸ்டாட் ஆக வண்டியை ஓட்டினான்.

ஒவ்வொரு ஸ்டாபிங்லும் வண்டியை நிறுத்தும் போதும், வண்டியை எடுக்கும் போதும் தமிழரசன் கால் மிகவும் வலிக்கும். இளைஞனான இவனுக்கே இப்படி என்றால் நடுத்தர வயது ஓட்டுனர்களுக்கு எப்படி இருககும் என்று நினைத்துக் கொண்டு வண்டியை ஓட்டி செல்வான்.

பெரும் கூட்டங்களை ஏற்றிக் கொண்டு பஸ் நந்தனம் சிக்னல் அருகே நின்றது.

ஒரு சில இளைஞர்கள் அரசாங்க வண்டிகளை அடித்து நொருக்கிக் கொண்டு இருந்தார்கள். இரு சக்கர வாகனத்தில் இருப்பவர்கள் எப்படியோ தப்பித்து வண்டியை ஓட்டி சென்றுவிட்டார்கள். பல கார்கள் சேதமாகின. இறுதியாக அந்த இளைஞர் படைகள் தமிழரசன் இருக்கும் வண்டியை நெடுங்கிவந்தனர். பஸ்ஸில் இருக்கும் பயணிகள் உயிருக்கு பயந்து தப்பித்து ஒடினார்கள். தமிழரசனும், சகாயமும் வேறு வழியில்லாமல் பஸ்யை விட்டு தப்பித்து ஒடினார்கள்.

மாணவர்கள் போராட்டத்தில் அந்த பஸ் தவிடுப் பொடியானது. முன் பக்க கண்ணாடிகள் பொடிப் பொடியாய் சிதரியது. பல கீறல்கள் விழுந்த இருக்கைள் நெருப்புக்கு இரையானது. தமிழரசன் மனம் கேட்காமல் தடுக்க முயற்சித்தான்.

“எங்க ஸ்டுடன்ஸ் பவர் தெரியாமா வழி மறைக்கிற… தல்லுடா நாயே… என்றான் ஒரு மாணவன்.”

“வேண்டா தம்பி பஸ்ச விட்டுங்க …” கெஞ்சி பார்த்தான் தமிழரசன்

அதற்கு பரிசாக அந்த இளைஞர்கள் காயங்களை மட்டுமே கொடுத்தார்கள்.

அடி வாங்கிய தமிழரசன் மனதில் குமுறிக் கொண்டு இருந்தான். பேருந்து வண்டியை பராமரிக்க தெரியாத அரசாங்கத்தை நொந்துக் கொண்டு வண்டியை ஒட்டினான். இந்த சமயத்தில் மக்களுக்கு சேவை செய்யும் வண்டியை உடைக்கும் மாணவர்களை நினைத்து நொந்துக் கொள்கிறான். அரசாங்கமே நல்ல வண்டியை விட்டாலும் , எதோ ஒரு போராட்டதை கூறி முதலில் பஸ்யை தான் உடைக்கிறார்கள்.

காயத்தினால் ஏற்பட்ட வலியை விட மாணவர்கள் பஸ்ஸை எரித்தது அதிகம் வலித்தது.

– குகன் [tmguhan@yahoo.co.in] (மே 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *