கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 2,939 
 
 

‘ஒரே பயிர்ச் செடியில், ஆண் பூக்கள் பூத்து, பெண் பூக்களும் பூக்கின்றன’ என்பது எத்தனைப் பேர்க்குத் தெரியும் ?. சிறிமாவின் காலத்தில், அதிசயமாக இலங்கையில் கல்வி முறையை மாற்றி இருக்கிறார்கள். அதில், விவசாயப் பாடமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அப்பாடத்திட்டத்தை இன்னும் சிர்படுத்தி இருக்க வேண்டும். அதிலேயும் இந்த எளிய கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படவில்லை. அசேதனபசளைப் பாவிப்பு இருந்தளவுக்கு சேதன…பாவிப்பும் சொல்லிக் கொடுக்கப் படவில்லை. அது, சீனக் கல்வி முறை. ஒருவேளை அங்கே இருந்த புத்தகத்தையே அப்படியே . …..தமிழ்படுத்தி, நடைப்படுத்தி இருப்பார்களோ?.

முதல் நிலவிய கல்வியிலும் …அப்படித்தான் நடைபெற்றிருந்தது. ஒரே காலனி சிந்தனை, மயக்கம். இலங்கையின் அறுபது வீத உணவை….வழங்கிற…தமிழர்களின் ஒத்துழைப்பையும் (தமிழர் விவசாய முறைகளை) கெளரவத்துடன் பெற்றிருக்க வேண்டாமா?. விவசாய அறிவு அவர்களை விட இவர்களிடமே அதிகமாகவே இருக்கிறது. எதிலும், இன அலட்சியம் தொடர்க்கிறது. தமிழர்பசளை முறைக்கு முற்றாகவே கல்தா! மொழிக்கு அவமரியாதை. நிலம் பறிப்பு. ஒற்றையாட்சி என்ற பம்மாத்துப் போர்வையிலே பயங்கரவாதச் சட்டங்கள், அந்த போலி நாட்டைக் காப்பாற்ற அவசரகாலச் சட்டங்கள் வேற. நச்சுக்களை உற்பத்தி செய்கிற பார்ளிமெண்ட் ….மிலேச்ச தனமாக ஆண்டு வருகிறது. காலனிக் (படுத்திய நாடுகளின் ) கூட்டம், இலங்கையையும் ஒரு இஸ்ரேலாக்கும் ஒரு முயற்சியில் எடுப்பார்கைப் பிள்ளையாக்கி விட்டிருக்கிறது. நேரு, இந்தியா வல்லரசாகி விடும் என …மனக்கணக்கு போட்டார். அதனால் ஏற்பட்ட தவறு தான் இலங்கையை ஒரு நாடாக இயங்க விட்டது. இன்று உக்ரேன் …ரஸ்யாவின் மார்பில் உதைக்கிற ஒன்றாக மாறியது போல இந்த நாடும் இந்தியாவிற்கு …மாறி விட்டிருக்கிறது. ஒரு வழி, வடக்கு, கிழக்கில் மறுபடியும் இந்தியனாமியை இறக்கினால் தான் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமோ ?.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இன்று வரையிலும் ஜேர்மனியிலும், யப்பானிலும்…அமெரிக்கா பெரிய இராணுவத்தளங்களைப் போட்டு (வெளியேறாமலே) தன் கைப்பாவையாகவே வைத்திருக்கின்றது. இவ்விருவருமே அவர்களது அமைப்பிலே இருக்கின்றன. நாகரீக அடிமை நிலைகள்.

இந்த கதை, இந்த முயற்சி…விடுதலைக் காலத்தில் நடக்கிறது.

மதிய நேரம் போல சிறு தோழர்களான வரதனும், மகியும் வியர்க்க, விறு, விறுக்க சைக்கிளில் வந்து போர்டிக்கோவில், நிறுத்தி விட்டு அவனுடைய கதவைத் திறந்து வந்தார்கள். அவ்வறை பெரிய திண்ணையுடன் கூடிய வீட்டில் வலது கோடியில் அமைந்திருக்கிறது. (20’x20′ இற்கு அளவுடையது) “அண்ணை அவசரம்” என்றார்கள். உள்ளே சென்று “அம்மா வெளியில் போயிட்டு வாரன்”என்று விட்டு சைக்கிளில் ஏறினான். அவர்களுடைய இயக்கத்தைச் சேர்ந்த மகளிர் பிரிவினர், அக்கிராமத்தின் மகளிர் தலைவியான சாந்தா அக்காவீட்டிற்கு, அவர் மூலமாக கிராமத்துப் பெண்கள் சிலருக்கு தையல் வகுப்புகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று சைக்கிளை விட்டு இறங்கிற போது எசகு, பிசகாக காலை ஊன்றியதில் கால்மொலி பிசகி விட்டது. அவர்களுக்கு பெண்கள் யாரையுமே தெரிந்திருக்கவில்லை. மகளிர் பிறிம்பாக இயங்கிற அமைப்பு. சென்ற போதே தெரிந்தது. காயப்பட்டவர் நாகுவின் அக்கா. பரியாரியார் வீடு அதிக தூரமில்லை. ஆனால், இயக்கச் சமாச்சாரம். அவர்களுடைய லேடீஸ் சைக்கிளில் ஏற்றி வருவது சிரமம் எனப் பட்டது. “டேய்,வரதன் , நீ இவரை ஏற்றி வா” என்று கூறி…ஏற்றிச் சென்றார்கள். பரியாரியார் நடுத்தர இளைஞர். “தங்கச்சி, பார்த்து இறங்கக் கூடாதா” என்று விட்டு நோ எண்ணெய் விட்டு, “அவரை அங்கால பார்க்க வையுங்கள்” என்று தோழியருக்கு கூறி விட்டு. .ஒரு ‘காலசைவு’ படுத்தினார். அவர் மனைவி, பெண்பிள்ளைகள் என பார்த்த இரக்கத்தில் எல்லாருக்கும் தேனீர் கொண்டு வந்து கொடுத்தார். வலியைக் குறைக்க மாத்திரைகளையும் கொடுத்தார். “3..4 நாளிலே குணமாகி விடும் நிதானம் தவறுற பட்சத்தில் இப்படி நடந்து விடுகிறது. கவனம்” என்று சொல்லி…விடை கொடுத்தார். விடுதலைக்கு இலவசச் சேவை. மற்றவர் கூட்டிச் சென்றால்….குறைந்த பட்சக் கட்டணமாவது கட்ட வேண்டும். இது நடந்து இரண்டு மாசம் ஓடி விட்டன.

கடந்த மாதம் நடந்த பிரதேச (எ.ஜி.எ) கூட்டத்திலே, தொழிற்சங்கத்தோழர் இளங்கோ “நம் வயல்களில் நிறைய குளங்கள் வாய்க்கால்கள் மண் நிரம்பிக் கிடக்கின்றன. வயல்கள் தோறும் ஒரு போகச் செய்கை மட்டுமே நடை பெறுகின்றன. பிறகு சிலர் எள்ளு, கொள்ளு, சணல்…போடுகிறார்கள். ஆஹா…முந்திய காலத்தில் பருத்தியும் கூட போட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது. அன்று…நீர் நிலைகளை பராமறிக்காமல் விட்டால் குற்றம். அரசர்கள் அதில் பருந்துப் பார்வையுடனே இருந்திருக்கிறார்கள். இலங்கை தன்னிறைவான நாடாகவே திகழ்ந்திருக்கிறது. போர்கள் நடந்தாலும் குளம் குட்டைகளை அழியாது பேணி இருக்கிறார்கள். இன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களே மோசமான நிலையை எய்தி இருக்கின்றன. மற்றைய மாகாணங்களில் இங்கே இருக்கிற போன்ற வெய்யிலும் இல்லை. வறட்சியும் இல்லை. இருந்த போதிலும் இங்குள்ள விவசாயிகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். காலனி ஆட்சிக்குப் பிறகு தான் இந்த இனவாதம் உயர்ந்து இம்மாகாணங்களும் மக்களும் புறக்கணிப்புகுள்ளாகி இருக்கின்றனர். இன்று ஆட்சியுள்ளவர்கள்…இனப்படுகொலைகளைக் கூட நிகழ்த்துபவர்களாக மாறிப் போய் விட்டிருக்கிறார்கள்”.

“வீணே கிடக்கும் நிலங்களை கேட்டுப் பெற்று. 3- 3 அரை மாதங்களில் நாம் ஏதாவது பயிர்களைப் போட்டுப் பார்க்கலாம். எள்ளு, சணல். .இவற்றைக் கூட செய்கை பண்ணலாம். தொழிற்சங்களூடாக அவற்றை பயன்படுத்தி தொழில் முயற்சிகளிலும் கூட இறங்கலாம்” என்ற கருத்தை சேகர் தோழர் முன் வைத்தார். மகளிர் அமைப்புத் தலைவி “நாங்கள் செய்து பார்க்கிறோம்” என்றனர். அரசியல் அமைப்புத் தோழர்கள் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள் என தெரிவிக்கப் பட்டது. ராமனோடு கூட வந்திருந்த சாந்தன் “எங்கட ஒரு பரப்பு வயல் துண்டை தருகிறேன். விரும்பினால்…முயற்சித்துப் பார்க்கலாம்” என்றான். அராலி ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. லேடிஸ் சைக்கிளில் ஓடித்திரிகிறவர்கள் “எங்களால் வர முடியும்” என்றார்கள். இப்ப வந்து கஸ்டப்படுகிறார்கள். சிலர் அவரையும் சுழற்சியாக பயிரிடுகிறார்கள் என்றார்கள். இவர்கள் அவரைப்பயிரைத் தெரிந்து விட்டிருக்கிறார்கள்.

காலில் காயப்பட்ட சாந்திக்கு கால் குணமாகி விட்டிருந்தது. நிலத்தை பார்வை இட வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு கிராமத்திற்கு முந்தி வந்திருந்த, தெரிந்த நாகு, படையின் தேடுதல் வேட்டையின் போது வீதியில் சுடுபட்டு இறந்து போனவன். அந்த துக்கம் நெஞ்சிலே எல்லோருக்கும் இருக்கிறது. அந்த தோழரின் அக்கா சாந்தியும் தோழியர்…என்பதால் …பெடியள்கள் விழுந்து விழுந்து உதவுகிறார்கள். ட்ராக்டர் கார கண்ணனுக்கு டீசலுக்கு காசைக் கொடுத்து உழுது விட்டிருந்தனர். புரட்டப்பட்ட மண்ணில் இருக்கிற கல்லு, களைவேர்களை…என பலதைப் பொறுக்கி பெடியள் கொடுத்த சிறிய கடகத்தில் சேர்க்க, பெடியள் எடுத்துச் சென்று வேலி ஓரம் கொட்டி விட்டு திரும்ப சேர்க்க கொடுத்தார்கள். பெடியளும்…இருந்து பொறுக்கினார்கள். தோழியரும் “அக்கா…, அக்கா…” என்று கேட்கிற பெடியள்களுக்கு அன்புடன் பொறுமையாக கூறிக் கொண்டிருந்தார்கள். ராமன், ரமேஸ் போன்ற பெரிய தோழர்கள் பாத்தி கீறி நீர் செல்லுறதுக்கான வாய்க்காலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். உச்சி வெய்யில் தலையைப் பிளந்தது. வேலி நிழலில் ஓரளவான மண் பானையில் நீரும் செம்பும், இரண்டு, மூன்று தகரப் பேணிகளும் வேற இருந்தன. அன்று தண்ணீரை போத்தலில் அடைக்கிற பாவனை தொடங்கி இருக்கவில்லை. பதினொரு மணி போல சாந்தன் வீட்டிலே இருந்து அலுமினியப் பானையில் தேனீரை அவனுடைய சின்னத் தங்கச்சியும், குட்டி மச்சான் குலமும் எடுத்து வந்தார்கள். காய்ந்து கறுத்திருந்த போது…குடிக்க இதமாக இருந்தது. காத்து வீச …சுகமாக இருந்தது. நிழலில் இருந்து வேலியோரம் தத்திக் கொத்திக் கொண்டிருந்த புளுனிக் குருவிகளை வேடிக்கை பார்த்தார்கள். “7 சகோதரிகள்” என்கிறார்கள். வீட்டிலே பெண்கள் என்றால்…செல்லம் தான். அந்தப் பார்வை …இதிலேயும் படிந்திருக்க வேண்டும்.

இந்த ஒரு பரப்பிலே பெரிய நீள்சதுரப் பாத்திகளாக்கி வரப்பு வாய்க்காலையும் கட்டி பக்கப்பாடாக ஒரு பெரிய வாய்க்காலை ஓட விட்டாலே நீரை ஓரளவுக்கு முழுப்பயிருக்கும் வழங்க முடியும்” என்று சந்திரன் சொல்ல ராமன் சிரித்தான். “இஞ்ஜினியராக ரோடு போடுகிறோம்” என்றான். தோழியர்களுக்கும் எப்படி போடுறது என்று தெரிந்திருக்கவில்லை. “வித்துவானைக் கேட்டு தான் சொல்கிறேன்” என்றான். வித்துவான் (பட்டப்பேர்) இயற்கை விவசாயி ஆசிரியரின் இடைப்பட்ட மகன். அவன் சொன்னால் சரியாய் தான் இருக்கும். பிறகென்ன!. அந்த நிலத்தில் மட்டுமே கிணறு இருந்தது. சாந்தனின் வீட்டு வளவாக இருந்த துண்டு நிலத்தை பிறகு வயலாக்கி விட்டார்கள் போல இருக்கிறது. ஒரு காலத்தில் பனை மரங்கள் நின்றிருக்கலாம். மரங்களை தறித்த பிறகு…இப்படியும் ஆகி இருக்கலாம். மரத்தை விற்றுவிட்டால் அவர்களே வந்து வெட்டி துப்பரவுபடுத்தி விட்டும் போய் விடுவார்கள். அராலியும் பனங்காட்டை அழித்து உருப்பெற்ற கிராமங்களில் ஒன்று தான். இன்னமும் சில இடங்களில் பனை மரம் செறிவாகவே காணப்படுகின்றன.

கிணறு வந்ததை அறிய அன்று கூகுளும் இல்லை விக்கிமீடியாவும் இல்லை. அந்தக் கிணறு ஓரளவு மட்டம் வரையில் நீரைக் கொண்டிருக்கிறது. குளங்களும், வாய்க்கால்களும் நீருடன் உயிர்ப்பாக இருந்திருந்தால் நீர் மட்டமும் கூடவாக இருந்திருக்கலாம். இலங்கை அரசு மட்டுமில்லை, மக்களும் தான் புத்திசாலிகளாக இருக்கவில்லை. மழை நீரை நம்பியே ஒரு போக நெற்செய்கையே வயல்களில் நடை பெறுகின்றன. சாந்தன் அந்த கிணறை வைத்து தான் “எங்கட ஒரு பரப்பு நெற்காணியிலே முயற்சித்துப் பாருங்களன்” என்று அழைத்திருக்கிறான். எப்படியோ காலை வைத்து விட்டார்கள். இனி என்ன! “கடமையைச் செய். பலனை எல்லாம் எதிர் பார்த்துக் கொண்டு நிற்க முடியாது.” “லெவ்ட், ரைட் !, லெவ்ட் ரைட்”.

அவரைப் பயிருக்கு பெண் பூக்கள் பூக்க ஒரளவு வளர கெட்டுகளின் நுனிகளைக் கிள்ளி விட வேண்டுமாம். அதை”ஜி ஒன்று”எனப்படுகிறது. அப்படி செறிவாக வளர, வளர இரண்டு ஜி, மூன்று ஜி…என கிள்ளி , கிள்ளுறதை நிறுத்த வேண்டும். ஜி என்பது சந்ததி. இந்த நுள்ளி, கிள்ளிச் சமாச்சாரம் மிக , மிக முக்கியமானது. பிறகு செடி ஒவ்வொன்றுமே சடைக்கும். பொலிவாகி நிலத்திலும் வேர்களை உரமாக ஊன்றும். இந்த விசயம் ஒன்றும் எமக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. போதிய நேரமும் இருந்தது. ஆட்களும் இருந்தார்கள். அறிந்திருந்தால் அன்றைக்கு சாதனை படைத்திருக்கலாம். பத்தாக்குறை நீரை தோழர்கள் வேளாவேளைக்கு இறைத்துக் கொண்டு தான் வந்தார்கள். எரிபொருள் செலவுக்காக. …மானியத்தில் கிராமத்து வீட்டு எல்லாம் இறைத்து தள்ளினார்கள். ஓரிறைப்புக்கு இருபது ரூபா மாத்திரமே வாங்கப்பட்டது. சேறு அள்ளி, தூர் வாறி. ..ஊற்று நீரையே பாத்திரத்தில் பிடித்துக் குடுத்த போது வீட்டுக்காரர் மகிழ்ச்சியுற்றனர். கிராமத்து தண்ணீர் எல்லாம் பல்வேறு சுவையுடயவை. ராமன் வீடு. ..பாசி மணம். பக்கத்து வீட்டில். ..சிறிது கசப்பு. ஒருவர் வீட்டில் சிறிது எரிபொருள் மணம். கழிவிடத்தில் எழுகிற மெதனோல் எப்படியோ சேர்ந்து விட்டிருக்கிறதோ?, அன்று அவன் கீழே பெற்றோல். ..ஏதும் கிடக்கிறதோ என்று தான் நினைத்தான். ஆனால் முதல் ஊற்றில் ஒரு இனிமை கிடக்கிறது. ‘நம்ம நீர் ஜூஸாகவும் இருக்கிறதே’ என்ற நகைச்சுவை உணர்வும் இருக்கிறதே. பல்வேறு தேவைகளிற்குப் பாவிக்கிற நீரை அன்று…அவர்கள் ஆசை தீரக் குடித்தார்கள். கங்கா அமுதம். போங்கள். நீரிறைப்பு அப்படிக் கலகலைப்பையும் ஏற்படுத்தியது. வீட்டாரும் தேனீர், தின்பண்ட பலகாரம் என கொடுத்து உபசரிக்கவும் தவறவில்லை. உழைப்பை எப்படி எல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் வழங்கிச் சிந்தினார்கள் . இயக்கத்துக்கு முதல் ராமன் கிராமத்துப் பெடியளுடன் சேர்ந்து நல்ல தண்ணீக் கிணறை இறைத்திருந்தான். அச்சமயம், வளர்ந்த ஒரே ஒரு சிங்க இறால் பலவித நிறங்களில் பிளிச்சிட இவர்களிடம் அகப்பட்டிருந்தது. அந்த அழகில் சொக்கிப் போனார்கள். அதைக் குறித்து ஒவ்வொருவரும்…தெரிந்ததைக் கூறியதும் அட்டகாசம் தான். சுட்டு சாப்பிட்டதை இன்னும் மறக்க முடியவில்லை. இறங்கி கலக்கிறவர்களுடன் இவனும் இறங்கி விடுவான். அதனாலே அழுத்தமாக பதியிறது நிகழ்ந்திருக்கிறது. இன்று இவன் குட்டித் தலைவன். கண்ணனைப் போல மேய்ப்பவன். இருந்தாலும் ஒரிரண்டில் இறங்கித்தான் இருக்கிறான். பெடியளுடன் சேர்ந்து வேலை செய்கிற போது அவர்களுடைய சந்தோசம் தாறுமாறாக பிய்த்துக் கொண்டு போய் விடும். இவனும் கூட அப்படி தானே இயக்க விசயங்களை புரிந்து கொள்கிறான்.

அவன் 9 மணிக்கு மேலேயே தோட்டப்பக்கம் செல்வான். அனேகமாக 10 ம் ஆகி விடும். சிறு தோழர்கள் வேளைக்கே வந்து உதவத் தொடங்கி இருப்பார்கள். ‘ சிறு போகப்பயிர் விளைச்சலைத் தரும் ‘ என்ற நம்பிக்கையில் தான் கால் வைத்திருக்கிறார்கள். காலத்தை போகம் என்றது விளைச்சலைத் தந்து சந்தோசப்படுத்தும் என்ற அர்த்தத்திலேயே இருக்கிறது. தமிழில் ஒரு சொல்லையே நல்லவிதமாகவும் சொல்ல பாவிக்கிறார் . அதன் செறிவைக் கூட்டி அதே சொல்லை இன்னொரு விதமாக சொல்லவும் பாவிக்கிறார்கள். இருச் சொல் பாவிப்பு முறை . போகம் என்பதன் நேரடி அர்த்தம் மகிழ்ச்சி, களிப்பு. நெற் செய்கையோ…காலமோ அல்ல . ஆனால் , அமோகமாக விளைந்து பயனை அளிக்கனும்…என்ற பிரார்த்தனையுடன், ஒருவித வணக்கத்துடன் தெரிவிப்பதுற்கு , இந்த இரவல் சொல்லை எடுத்து கையாளுகிறார்கள். இதே போல முதலில் படிக்கட்டுக்களை மேலே ஏறுவதுக்காகவே கட்டினார்கள் . கற்கிறதும் ஏறுறதாகவே இருக்க வேண்டும்…என்று இரவல் சொல்லிலே”படி, படி”என்று சொல்லப்படுகிறது. இப்படி அர்த்தமில்லாத…ஒன்றுக்கும் கூட பயன்படுதுறதும் இருக்கிறது.

இது எழுத்துத் தமிழ் அல்ல , மக்களின் பாவிப்பு தமிழ். எழுத்து முறை என்பது வேற . அது அன்று செய்யுளில் தான் இருந்தது. அதில், நேரடி அர்த்தத்தில் என்ன இருக்கிறதோ அதில் உள்ள. ..நல்லது , அற்றது. ..என்ற கவலையின்றி அந்தச் சொல் கையாளப் பட்டிருக்கிறது . செய்யுள் தான் சொற்களின் முதல் அரங்கேற்ற மேடையாக இருந்தது. செய்யுளை விளங்கிக் கொள்ள பண்டித தமிழ் (தெரிந்திருக்க ) திறமை இருக்க வேண்டும். தமிழை முறையாகவும் கற்க வேண்டும். அரசர்கள் அனைவருமே சபையிலே நிகழ்த்தி அசர வைத்திருக்கிறார்கள். மக்களையும் தமிழை கற்கத் தள்ளி இருக்கிறார்கள் . கற்றவருக்கு மதிப்பு. புலவர்களுக்கு பொன் முடிச்சு . ஒவ்வொரு சொற்களுமே பட்டை தீட்டி செழுமைப்படுத்தியே வருகின்றது. சங்கம் வைத்த தமிழ் என்பது அதைத் தான். …போல இருக்கிறது. தமக்குள் மோசமாக அடித்துக் கொண்டார்கள். பழி தீர்த்துக் கொண்டார்கள். ஆனால், செழுமைப்படுத்துறதை. ..கை விடவில்லை. வென்றவர்,தோற்றவர் பாகுபாடின்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. தொடர்ந்து கொண்டே இருந்தார்கள். எளிமையாகவும் பல்வேறு விதமாகப் பயன்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிமிருந்திருகிறது. பழம் தமிழ் அழியாது செழுமையுற்று வளமை பெறறிருக்கிறது

சாண்டில்யனின் நாவலில் வரும் அரச வம்சத்தவர் அனைவருமே பர்ணசாலையிலே தமிழைக் கற்று புலமையுடனே திரிகிறார்கள் . கல்கியை விட சண்டில்யனின் நாவல்களில் சங்க இலக்கியங்களை அதிகமாகவும் அறியலாம். ‘ காமம் ‘ மனித விஞ்ஞானம் தான் என்று எழுத்தாளர் வேறு கூறுவதையும் அறிகிறோம். பெண்கள் இவர் புத்தகங்கள் வாசிப்பை . … வாசிப்பதில் தவிர்க்கிறார்கள். ராமன் ஒவ்வொரு தடவையும் வாசிக்கிற போதும் அந்தந்த சரித்திர காலத்திற்கே போய் விடுகிறான். “நீ சரித்திரக்கதைகளையே எழுது”என அவரைப் பிடித்து தள்ளியவரே, கல்கி . …என்றும் கூறப்படுகிறது. இருவரிடமும் தமிழனின் சிறப்பைக் கூற வேண்டும் என்ற ஓர்மம் ஓங்கிக் கிடக்கிறது. சிங்களம் வெறும் இரவல் மொழியே. மொழிகளுக்கிருக்கிற வளமை இருக்கிறது தவிர, இதைப் போல விரிந்த பார்வை பரந்த வளமை கிடையாது. இலங்கையில் சிங்களவர்களை பெரும்பான்மையாக்கியவர்கள் ஐரோப்பிய நாட்டினர் தாமோ? என்று அவன் சந்தேகப் படுகிறான். அவர்களுள்ளும் அந்த விதையை , பயத்தையும் ஊன்றி விட்டிருக்கிறார்கள். இன்று இனப்படுகொலை நிகழ்த்துவதற்கு அன்றே பிளான் போடப்பட்டு விட்டது. இவர்கள் புத்தரின், தேரர்களின் காலடிகளில் அல்ல, காலனியரின் கால்களிலே விழுந்து கிடக்கிறார்கள். எல்லா மதவாதிகளிகளும் ஒரு விதத்தில் அடிப்படைவாதிகள் தாம். அவர்களால் வேற மாதிரி குரைக்க முடியாது. “என்னருமைத் தாயகமே, தமிழீழ அன்னையே உன்னை விலங்குகளிலிருந்து விடுவிக்க முடியாத கையறுநிலையில் இருக்கிறேனே”. ..ராமனுக்கும் மனக்குரலை அகற்றும் வழி தெரியவில்லை.

இரவல் போரிலே, இரவல் இனப்படுகொலையிலே …போரை வென்று, இன்று வெட்கமில்லாது இறுமார்ப்பு கொள்கிறார்கள். அற முறைகளில் கிடைக்காத வெற்றி, வெற்றியே இல்லை. இந்த மாதிரியே ‘ இரவல் புரட்சி ‘ என்று சொல்லியே கழுகும், முல்லை இயக்கத்தை அடித்து படுகொலையும் செய்து விட்டது. செய்ய வைத்து விட்டார்கள். ஒரே மூலம்.

வளமை தமிழில் மற்றயவையை (மொழிகளை ) விட அதிகமாகவே இருக்கிறதால் , 6ம் நூற்றாண்டில் உருப் பெறத் தொடங்கிய சிங்கள மொழிக்கும் தமிழ் மேல் பொறாமையும் கூட வளர்திருக்கிறது. காலனிக் கூட்டமும் , பலஸ்தீனர்களை ஒழிப்பது போலவே தமிழர்களையும் அடக்குகுமுறைக்குள்ளாக்கி இலங்கையையும் இஸ்ரேலாக்கும் திட்டத்தை தொடர்கிறது. இரவல் புரட்சி கடைசியில், இவர்களுக்கே தீமையையும் கொண்டு வரப் போகிறது. காலனிக் கூட்டத்தால், வழங்கப்பட்ட ஆயுதங்களால் ( தடை செய்யப்பட்டவற்றை வழங்கியவை இவையே ) இரண்டு முறைகள் இனப்படுகொலைகளை வேற நிகழ்த்தி தமிழரை கதற அடித்து விட்டிருக்கிறார்கள். சிங்கள இளைஞர்களிலும் பகுதறிவு இயக்கம் இல்லாததால். ..தமிழ் இனம் பாதிக்கப்பட்டுக் கொண்டே செல்கிறது. இலங்கையில் ஒரு வகை நாஜிய ஆட்சியே நிலவி வருகிறது.

பொய்மைகளை கூறி, கூறி உண்மையாக்கிற காலனிகள், இந்த நாட்டையும் ஜனநாயக நாடு எனச் செப்புகின்றன. (சப்புகின்றன).

காலனிக் கூட்டம், என்றுமே ஜனநாயக உரிமைகளில் ஆர்வம் கொண்டவை கிடையாது . நாஜிய அரசாங்களைக் கட்டி எழுப்புவதிலே நாட்டம் கொண்டவை. பிறகொர் சந்தர்ப்பம் வாய்க்கிற போது , கனடா போன்ற கூட்டிலே கிடக்கிற ஒன்றை “ஜனநாயகம் இல்லை”என்று கத்த வைத்து அடித்து தரை மட்டமாக்கவும் செய்பவை . முடியுமல்லவா. “ஈராக் “எல்லோரும் நேரடியாகப் பார்க்கிற நல்ல உதாரணம். உண்மையான ஜனநாயகம் சிறுநாடுகளில் உண்மையாக மலர்ந்து காலனிக் கூட்டத்திற்கு தடைகள் சிறுக விதிக்கிற போது சில மாற்றங்களைக் காணலாம். தென் அமெரிக்காவின் (இவர்களின் ) கடன் பொறிகள் பற்றிய பாடங்கள் அவசியம் படிக்க வேண்டியவை. படியாத போது எந்த தெளிவும் அடையப் போவதில்லை தாம். அன்று நாம். ..வெறித்தாஸ் தமிழ் வானொலி மூலமாகத் தான் செய்திகளை கேள்வியுற்றோம். மற்றையவை (செய்தி நிறுவனங்கள் ) தூர தேசத்திலேயே கிடந்தன.

பயிர்ச் செய்கையில் இருக்கிற சில நுட்பங்களையுமே கையாளாததால்” போகம்” ஆக பரிமளிக்காது போய் விட்டது. மனம் சோர்ந்து போனார்கள். தோல்வியை சுமப்பது என்பதும் மன அழுத்தம் தான். செயல்களில் அறியாமையுடன் இறங்கக் கூடாது என்பதற்காக தான் கால் வைத்து அனுபவப் பட்டவர்களது புத்தகங்களை வாசிக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள் . ஒவ்வொருவரையும் எழுதச் சொல்லியும் கூறுகிறார்கள். பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் ஏதோ எழுதி சமர்பித்து வாரதும் இருக்கவே செய்கிறது. புத்தகமாக்கிறதை அரசாங்கமே செய்ய வேண்டும். மானிய வழிகளிலும் உதவி செய்ய வேண்டும். எமக்கு அரசாங்கமே இல்லாததால் எல்லாமே தணங்கிணத்தோம் . சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட எந்த அமைப்புமே எமக்கு எஜமானாக முடியாது. எனவே, எந்தக் காலத்திலும் சிங்கள அரசாங்கம் எம்முடைய அரசாங்கமே இல்லை. படுதோல்வியாக இராது சராசரி தோல்வியாக நிலவுற போது. ..அழுத்தம் என்ற நிலைக்குச் செல்லாது. அப்படி இல்லாததால் பாதிக்கப் பட்டார்கள். கடைசியில் , வாங்கிய கடனை திருப்பி அளிக்க முடியவில்லை. இயல்பானவர்ற்கு நேர்ந்திருந்தால் வட்டியுடன் செலுத்த வேண்டிருந்திருக்கும். வர்த்தகரின் கொடை மனம். “பரவாயில்லை , திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை”என்று தெரிவித்தார். தோழர் செந்தில் தான் தூதராக இருக்கிறாரே. கிராமத்தில் சாதனைகளைப் புரிந்த “யமகா நீர்ப்பம்பி” யை மானிப்பாய் முகாமிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். வெற்றி அடைந்திருந்தால். அராலியிலே இன்னொரு காணித்துண்டில் இன்னொரு பயிரைச் செய்கை பண்ணி வீறு கொண்டு எழுந்திருப்பார்கள். விடுதலைக் குழுக்களின் அரசியலில் பிரச்சனைப் பூக்கள் வேறு பூக்கத் தொடங்கி இருந்தன. நல்லது நடக்க புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும். அதிலேயும் இருக்க தவறி விட்டு விட்டார்கள். கெட்டதன் அறுவடையை வெட்டி தானே ஆக வேண்டும். சகோதரச் சண்டித்தனம் வளர்ந்து…தோழர்களையே சந்தேகிக்கும் அளவுற்கு இயக்கங்களில் குழம்பி, சகோதர படுகொலைகளுமே பிறகு நடந்து போய் விட்டிருந்தன. இதற்கு ரஸ்யப் படைப்புக்களை மாஸ்கோ பதிப்பகம் அந்நன்நாடுகளின் தாய் மொழியில் பதிப்பதை நிறுத்தி விட்டதும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம். புரட்சியில் புடம் போட்ட அவர்களது அனுபவங்கள். பிரச்சனைகளிற்கு தீர்வுகளையும் கூறிக் கொண்டிருந்தன. நம்மவர்களுக்கு பட்டி மன்றம் நடத்தத் தான் திறமை இருந்தது தவிர, அடிப்படை அரசியல் அறிவு இருக்கவில்லை. அவ் எழுத்தாளர்களின் தொடர்புகளும் நேரடியாகவும் நிலவி இருந்திருந்தால் . ..நம்மாலும் வெளியே வந்திருக்க முடியும் அல்லவா. வாய்ப்பில்லா விட்டால் என்ன ?, வாய்ப்புகளை”நாமும் கட்டிக் கொள்ளலாமே” என்ற சிந்தனை நமக்கிருக்கவில்லை. காலனி நாகரீகத்தில். ..சீரழிந்தும் போய் கொத்தடிமைகளாக வேறு இருக்கிறோம். நமது சமூக சிந்தனைகளும் இவர்களது சட்டவேலிகளுக்குள்ளேயே…வளர்க்கப் பட்டிருக்கிறது.

ரஸ்யா , புரட்சிக் கருத்துக்களை கொண்டு செல்வதற்காக 90 வீதமானவர்களையே படிப்பறிவுள்ளவராக்கி இருந்தார்கள். முதியோர் கல்வித் திட்டம் எல்லாம் ரஸ்யர்களாலே ஏற்படுத்தப் பட்டவை. வறிய மக்களுக்கான கல்வித்திட்டங்கள் அங்கேயிருந்தே விரிவாக பூத்திருக்கின்றன. மலையகக்கல்வியும், தமிழ்க்கல்விக்கு எதிரான சிங்களச் சட்டங்களும் , உரிமைகள் அற்ற போக்குகளும் காலனி நாடுகளின் கல்வியும் எத்தகைய நிலையில் இருந்தன என்பதைக் கூறுகின்றன. அவர்களின் சாதாரண தோழர் கூட”வீரம் விளைந்தது”என நூலை சிறப்பாக எழுதுகிறார். நம்மவர்க்கோ இங்கே வாசிப்பறிவு இரண்டு வீதமாகவே பாதாளத்தை தொட்டு இருக்கிறது . நாம் தோற்கவில்லை. நம் செயற்பாடுகள் போதியதாக இருக்கவில்லை என்பதே உண்மை. நம் அருமைத் தலைவர்கள் வேறு சீன வழி , ரஸ்ய வழி என பிரிந்து திக்குத் திசை தெரியாமல் காட்டில் அலைகிறார்கள். தமிழர் மத்தியில் ரஸ்ய மொழி எழுதப் பேசத் தெரிந்தவர்கள் சிறிய வீதத்தில் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைக்க வேண்டாமா ?. மீண்டும் சோவியத் அமைப்பு வீரூ கொண்டு எழ (வே ) வேண்டும். ரஸ்யா, இன்று ஒரு சமரச அரசியலுக்கு வந்திருந்தாலும் , அங்கே புரட்சி 2. ..எழ முடியாத ஒன்றல்ல. மாறவே முடியாதவை என்று உலகில் ஒன்றுமே இல்லை . அன்றைய யாழ்ப்பாணத்தில் ( மாகாணத்தில் ) விடுதலைச் சூழலில் தற்போதைய கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் சிலர் யாழ்த் தோழர்களுடன் அங்கே திரிந்து அவர்கள் நம்பிக்கைகளையும் விதைத்து கொண்டுமிருந்திருக்கிறார்கள். இன்று, அவையே நம்பிக்கைக் கீற்றுக்களாக ஊடுருவியும் இருக்கின்றன.

“நம் சிங்கள இனத்தில்”பகுத்தறிவு இயக்கம்” இல்லை. எழ வில்லை. நாம் நிச்சியமாக அதைக்கட்டிக் கொள்வோம்” என்கிறார்கள்.அவர்களுடைய குழுவில்…கூட இன்னமும் கட்டிக் கொள்ளப்படவில்லை தான் , தவிர, சில தோழர்கள் தங்களுக்குள் கட்டிக் கொண்டு விட்டிருக்கிறார்கள். “வடக்கு, கிழக்கை பிரிக்க வழக்கைப் போட்டது முட்டாள் தனம், அது பூர்ஸ்வா சிந்தனை” என்று கருத்தையும் தெரிவிக்கிறார்கள். நாடு கடத்தப்பட்ட அவர்கள். .. தற்போது செயலற்றிருக்கலாம். ஒருநாள்….செயல் படுவார். மாற்றுவார். எல்லாத்தையுமே மாற்றுவார்கள்.

இன்றைய நாளில், ராமனுக்கு தீடீரென ஒரிரவு கனவும் ஏற்பட்டது. அதில், அவன்,சுனில், காமினி, சந்திரன் கோபு தோழர்கள் ஒரே அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். காலை விடிய முதல் கண் விழிக்கிறான். கட்டில் இருந்த இடத்தில் பாட்டா ஒரு சோடி செறுப்பு …கிடக்க கட்டிலைக் காணவில்லை. அதிலே கோபி படுத்திருந்தவன். நிலத்தில் காய்ந்த கறுப்பு ஒயில் சிந்திய அடையாளம். என்ன நடந்தது ?. காமினியைக் காணவில்லை. திகைப்பாக இருக்கிறது. அவசரப்பட்டு முடிவுக்கு வரக் கூடாது. ஆனால், அடையாளம் ? …சிங்கள இளைஞர்கள் திருந்துற ஜென்மங்கள் இல்லையா ? எங்களுடன் சேர்ந்து பழகிறதும் நடிப்பா..? சுனில் இருக்கிறான். ஒரிருவரால், உண்மையானவனும் சந்தேகிக்க நேரிட்டு விடுமோ ?. கோபி காணாமல் ஆக்கப் பட்டவன் தானோ ?. நிதானமில்லாது ஓடும் மனம். இருவரும் சேர்ந்துகட்டிலைத் தூக்கிச் சென்றிருப்பார்களோ, திரும்பி வாரதுக்குள் தவறுகள் நிகழ்ந்து விடுமோ ?”…. கனவும் குழப்புகிறது. தலையே குப்பைக் கூடையாகிப் போய் விட்டது.

நம்மாலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கை விடப்பட்டு இருக்கிற குளங்கள் வாய்க்கால்களை திருத்தவா முடியாது ? கூட்டுக் கைகளை (களாகச் சேர்ந்தால் …) சேர்த்தால் இலங்கை அரசு, பிச்சை கேட்டு கடனைப் பெற்று …கடன்பொறியில் சிக்கி செய்ய வேண்டியும் இருக்காது. நம்மாலே செப்பனிட்டு விட முடியும். அங்காலே, …பகுதறிவு இயக்கம் செயற்பட வேண்டும். செயல்பட்டு…புத்தர் சிலைகளை நடாமலும், நிலவுறுகிற அமைதியை குழப்பாமலும் …இருந்தாலே போதுமே. பிரார்த்திப்போம். காலனிக் கூட்டம், அதைச் செய்ய அனுமதிக்காது என்பதும் தெரியும். பகுத்தறிவு இயக்கம் சிங்களப் பகுதியில் வீறு கொண்டு எழுவது, எழுப்பப்படுவது தான் ஒரே வழி. கடைசி வழி. அது நிகழ்கிற போது பதர்களை ஊதி எறிந்து விடும். தமிழருக்கு பிரஜா உரிமை ‘ அளிக்கும் ‘ உரிமை வேறு சுயமாகவும் இருக்க வேண்டும். நாம் கேட்கும் ஒவ்வொரு உரிமைகளும்…தவறானவையல்ல என்பது. .மாறிய பிறகு அவர்களுக்கு நன்கு புரியும். கற்றாரைக் கற்றாரே காமுறுவார், கலவரங்களில் கொலைகளைச் செய்தகாடையரை அல்ல.

13ம் திருத்தச் சட்டம் என்று தான் இலங்கையின் சமாதான ஒப்பந்தத்தைச் சொல்கிறார்கள். 13 என…ஏற்கனவே இருந்ததில் தான் சமாதானத்திற்காக சில திருத்தங்களைச் சேர்த்திருக்கிறார்களா ? சிங்களவர் எதை எதிர்த்துப் பேசுகிறார்கள். இந்தியா சேர்த்ததையா, அல்லது ஏற்கனவே இருந்ததையா ?. இந்த சொல்லாடல் (பிரிப்பு) ஒரு குழப்பத்தை விளைவிக்கவில்லையா?. சிந்திக்க வேண்டிய விசயம்.

இவற்றை எல்லாம் நமக்கும் தெளிவுப் படுத்த எமக்கு அச்சகங்களும், பிரசுரங்களும், புத்தககங்களும். .. வேற நிறைய அளவில் வெளியாக வேண்டியும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *