புலம் பெயர்ந்த டாக்டர் ராஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2019
பார்வையிட்டோர்: 6,614 
 

யாழ்குடா நாட்டில் உள்ள அரியாலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து ,படித்து டாக்டராகி அரசில் இருபது வருடங்கள் வேலை செய்த, அதன் பின் ஓய்வு பெற்று சொந்தத்தில் தனது ஊரில் ஒரு கிளினிக் நடத்தியவர் டாக்டர் சுப்பிரமணிம். அவர் மகன் டாக்டர் ராஜா என்ற ராஜரத்தினம் , தன் தந்தை படித்த சில கி மீ தூரத்தில் உள்ள பரியோவான் கல்லூரியில் படித்து, கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகி, டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் முதலில் கொழும்பில் வேலை செய்து, அதன் பின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனை அரச வைத்தியசாலையில் இரு வருடங்கள் வேலை செய்த காலத்தில் அவரை அந்த ஊர் மக்கள் கைராசிக்கார டாக்டர் என்று அடைப்பெயர் வைத்து அழைத்தனர். அந்தப் பெயர் வரக் காரணம், ஒரு தடவை அவர் மருந்து கொடுத்தால் நோய் பஞ்சாய் பறந்து போய் விடும், கல்முனையில் வேலை செய்து, அதன் பின் காலி, களுத்துறை, பாணந்துறை ஆகிய சிங்கள ஊர்களில் வேலை செய்தார். அவர் எப்போதும் நேற்றியில் சிறு திருநீறு குறியோடு வேலைக்கு செல்வது வழக்கம். அதை டாக்டர் ராஜாவின் தாய் தேவி அவருக்குச் சொல்லிக் கொடுத்த பழக்கம். டாக்டர் ராஜாவின் தந்தையின் திடீர் மரணத்தின் பின் அவனுக்குத் தாய் தான் எல்லாம் .

டாக்டர் ராஜவோடு . கூடவே படித்த நெருங்கிய நண்பன் மாணிக்கம் .ஏ லெவலுக்கு பின் அவன் படிப்பைத் தொடரவில்லை. மாணிக்கதின் தந்தை அரியாலையில் கார் திருத்தும் கராஜ் வைத்திருந்தார். தந்தையிடம் மெக்கானிக் வேலை கற்றவன் மாணிக்கம் . அவனின் மாமன் பல வருடங்களுக்கு முன் கனடாவுக்கு புலம் பெயர்ந்த்வர். அவர் மாணிக்கத்தின் கைத் திறனைக் கண்டு அவனை கனடாவுக்கு புலம் பெயர உதவினார் புலம் பெயர்ந்த் சில மாதங்களில் ஆங்கிலம், அவ்வளவுக்கு பேச முடியாத மாணிக்கத்துகு ஜி எம் மோட்டாரில் மெச்கானிக் வேலை நல்ல சமபளத்தில் கிடைத்தது. தன் நண்பன்.டாக்டர் ராஜாவை கனடாவுக்கு புலம் பெயரும் படி மாணிக்கம் எவ்வளவோ வேண்டியும் ராஜா மறுத்து விட்டார். தான் படித்த நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரின் நோக்கம்.

கொழும்புக்கு தேற்கே கரையோரமாகச் சிங்களவர்கள் அதிகம் வாழும் ஊரான பாணதுறை வைத்தியசாலையில் வேலை செய்த டாக்டர் ராஜா சிங்களவர்களிடையே நல்ல மதிப்பை பெற்றார் ஆங்கிலம் சிங்களமும் சரளமாகப் டாக்டர் ராஜா பேசக் கூடியவர். . அதனால் பாணதுறை வாழ் சிங்களவரின் பாராட்டைப் பெற்றவர். எத்தனையோ டாக்டர்கள் அந்த அரச வைத்தியசாலையில் இருந்தும், இவர் ஒருவரே தமிழ் டாக்டர். அவரையே நோயாளிகள் நாடிச் செல்வார்கள் . டாக்டர் ராஜா எப்போதும் வெள்ளிக்கிழமைகளில் நெற்றியில் \திருநீற்றொடு பாணதுறை முருகன் கோவிலுக்கு தவறாது போய் வருவார் . சில வருடங்களுக்கு முன் அவரின் தந்தை இருதய பாதிப்பால் இறந்தார். அவர் இறக்க முன் அவரின் வெண்டுகோளின் படி ராஜாவுக்கு திருமணப் பேச்சு நடந்தது. அந்த சமயம் 1983 இனக் கலவரத்தில் டாக்டர் ராஜா பாதிக்கப் பட்டார் . அவர் இருந்த வீடு சிங்கள காடையர்களால். எரிக்கப்பட்டது தாயும் உயிர் இழந்தாள் , ராஜாவின் உயிர் தப்பியது கடவுள் புண்ணியம் அவர் வீட்டை தாக்கிய காடையர்கள் கூட்டத்தின் தலைவனை அவர் அடையாளம் கண்டார். டாக்டர் ராஜா அவனுக்கு நீண்ட காலம் இருந்த வியாதியை கண்டுபிடித்து சிகிச்சை செய்து அவனை குணப்படுத்தியது அவர் நினைவுக்கு வந்தது. இனக் கலவரத்தின் பின் அவருக்கு சிங்கள இனத்தின் மேல் வெறுப்பு ஏற்பட்டது . டாக்டர் ராஜா புலம் பெயர முடிவுக்கு வந்தார். மாணிக்கத்தோடு தொடர்பு கொண்டார் .’ கனேடிய உயர் தூதரகம் அவர் நிலை அறிந்து டாக்டர் என்ற படியால் அவருக்குப் புலம் பெயர அனுமதி கொடுத்தது .

****

டொரோண்டோ விமான நிலயத்தில் ஒரு புது வாழ்வை ஆரம்பிக்க வந்து இறங்கியபோது பனிமழை பெய்து கொண்டிருந்தது. டாக்டர் ராஜா கனடாவுக்கு வரமுன் அத்தேசத்துக் குளிரைப் பற்றி மாணிக்கம் எச்சரிக்கை செய்த படியால் அந்த கடும் குளிரை தாங்கத் தகுந்த ஆடை அணிந்திருந்தான் . அவனை வரவேற்க மாணிக்கமும் குங்குமப் பொட்டு வைத்த ஒரு சீனப் பெண்ணும். சிறுவனும வந்திருந்தார்கள்,

தன் மனைவி ஜேனையும் மகன் ரமேஷையும் டாக்டர் ராஜாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் மாணிக்கம்

மாணிக்கதின் மனைவி ஜேனைப் பார்த்து சற்று யோசித்த படியே நின்றான் ராஜா

“என்ன ராஜா யோசிக்கிறாய் ஜேன் ஒரு சீனப் பெண் ஆனால் டொராண்டோவில் பிறந்து வளர்ந்து படித்தவள். நான் இங்கு வந்த புதுதில் தங்கியது இவளின் பெற்றோர் வீட்டில். அப்போது ஒரு மாதம் சுகமில்லமல் நான் இருந்த போது என்னை கவனித்தவள் ஜேன் . அப்போது எங்கள் காதல் உதயமாயிற்று”

“நெற்றியில் கும்குமம் வைத்திருகிறாளே உன் மனைவி தமிழ் பேசுவாளா?

“இவளோடு படித்த தமிழ் சினேகிதி மாலினியின் பெற்றோர் கொழும்பைச் சேர்ந்தவர்கள். மாலினிக்கு இவள் சீனமொழியும். இவளுக்கு அவள் தமிழும் சொல்லிக் கொடுத்துக் கொண்டார்கள் . இவள் தமிழ்ப் படம் விரும்பிப் பார்பாள். இவள் கமலின் ரசிகை. அதுவும் தமிழ் ஓரளவுக்குப் பேசும் அவளை எனக்குப் பிடித்துக் கொண்டது. எனக்கு ஜேன் சீன மொழி கற்றுக் கொடுத்தாள் காதலுக்கு மொழி இனம் மதம் இல்லை ராஜ் . இவளின் தந்தை வைசாங் தைவானில் இருந்து கணனி பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரி. மார்க்கத்தில் பெரிய கடை அவருக்கு உண்டு. அதைக் கவனிப்பது ஜேன் அவளுக்குக் கீழ் மூவர் வேலை செய்கிறாள். அதில் ஒருத்தி மாதவி என்ற தமிழ் நாட்டுப் பெண். தன் கனடா வாழ்வு பற்றி மாணிக்கம் விபரம் சொன்னான்.

. ஜேன் சில வார்த்தைகள் தமிழும் ஆங்கிலத்திலும் ராஜாவோடு பேசினாள்.

ஜெனின் நெற்றியில் ஜொலித்த சிவப்புக் குங்குமத்தைக் காட்டி அவளிடம் ராஜா அவளிடம் கேடார் “: இந்த பொட்டை வைக்க யார் காட்டித் தந்தது “

“என் சினேகிதி மாலினியின் தாய் “

டாக்டர் ராஜாவின் பார்வைக்கு ஜேனின் வெள்ளை நிற நெற்றிக்கு அந்தச் சிகப்புக் குங்குமம் தனி அழகைக் கொடுத்தது. மாணிக்கம் தன் ஊர் கலாச்சாரத்துக்குப் பொருத்தமான ஜோடியைத் தான் தெரிந்தெடுத்திருக்கிறான். தலை மயிரை வடிவாகப் பின்னி இரட்டைப் பின்னல் கூட விட்டிருக்கிறாள். யார் இதெல்லாம் இவளுக்கு சொல்லிக் கொடுத்தது? கழுத்திலை தாலி, காதிலை முத்துத் தோடு வேறு. அசல் யாழ்ப்பாணத்து இந்துப் பெண்தான் முகம் தான் சற்று வித்தியாசம் ”. ராஜாவால் நம்ப முடியவில்லை..

ரமேஷ் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினான். அவன் காதில் தோடு அணிந்திருந்தான். தனக்கு பேஸ் போல்விளையாட விருப்பம் என்றான்

“ மாணிக்கம் நாம் வாழும் சமுதாயத்தோடு ஒத்துப்போக வேண்டும்” என்றான் ராஜ்.

அமாம் ராஜா எங்களோடு படித்த மகேசனும் , காந்தனும் ஒரு பாகிஸ்தானியப் பெண்ணையும்,கொரியா தேசத்து பெண்ணையும் முடித்திருக்கிறார்கள்

கார் பார்க்கை நோக்கி போகும் போது இரு பெண்கள் ஒருவரை ஒருவர் இரறக்க அணைத்து முத்தமிட்ட படியே இருந்ததை ராஜா கண்டான் . சற்று அதை நின்று பார்த்து விட்டு ஒன்டாறியோவில் ஒரே பால் சேர்கையை அனுமதிக்கிறார்களா”?

“ராஜ் அதை நீ கவனிக்காமல் நட ஒரே பால் காதல் ஒன்டாரியோவில் சகஜம். திருமணம் செய்தும் வாழ்கிறார்கள். ஒரே பால் சேர்கையாளர்கள் கூடுவதுக்கு கிளப்புகள் உண்டு அண்மையில் இரு இலங்கை தமிழ் வாலிபர்கள் கொலைசெய்யப் பட்டார்கள் . அவர்கள் ஒரே பால் சேர்க்கையாளர்கள் என்று பேசிக் கொள்கிறார்கள்”.

“அப்போ அவர்களுக்கு வாரிசு’

“அதுக்குத் தான் இப்போ வாடகைத் தாய், விந்து மாற்றவழி இருக்கிறதே அது உனக்குத் தெரியும் தானே ”என்றான் சிரித்தபடியே மாணிக்கம் .

“ என் இலங்கையில் கூட அது ஒரு பெரிய பிஸ்னஸ் . மருத்துவம் முன்னேறிக் கொண்டு செல்கிறது அதக்கு ஏற்றவாறு சமுதாயத்தில் கலாச்சாரமும் அரசியல் குற்றச்சாட்டுகளும் இடம் பெறுகிறது ”

“நீ என்ன சொல்லுகிறாய் ராஜ்”?

“என்னோடு கல்முனையில் வேலை செய்த ஒரு முஸ்லீம் டாக்டர் பல சிங்கள பெண்களை சிசீசிரியன் அறுவைசிகிச்சை போது கருச் சிதைவு செய்தார் என்று சில இனத் துவேசம் உள்ள அரசியல் வாதிகள் அவர்மேல் குற்றம் சாட்டி அவரை கைது செய்த ரிமாண்டில் வைத்தனர். அந்து பின்னர் பொய் என நிருபீக்கபட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கையில் சமுதாயம் பொய் வதந்திகளில் செயல் படுகிறது. . அதுவே இனக் கலவரங்களைத் தூண்டி விடுகிறது”

“உண்மை ராஜ். நீ இலங்கையில் பல வருடங்கள் டாக்டர் வேலை செய்து அனுபவப் பட்டவன் அங்கு டாக்டராக இருந்தாலும் இங்கு டாக்டராக வேலை செய்ய இன்னொரு சோதனை பாஸ் செய் வேண்டும் அது மட்டும் நீ என் மாமனின் கடையில் வேலை செய்யலாம் ஊனுக்கு கணனி பற்றி நன்கு தெரியும் தானே ”

“என்னோடு வேலை செய்த டாக்டர்கள் எனக்கு எச்சரித்து அனுப்பினார்கள். உடனே எனக்கு ஒன்டாறியோவில் டாக்டர் வேலை கிடைப்பது கடினம் என்று. நான் சோதனை பாஸ் செய்ய வேண்டுமாம். நான் எதுக்கும் தயார்.” என்றார் டாக்டர் ராஜ்.

“நீ சொல்வது உண்மை எனக்குத் தெரிந்த ஒருவர் தமிழ் நாட்டில் வைத்தியராக இருந்தவர் இங்கை சோதனை பாஸ் செய்யாமல் இன்சூரன்ஸ் ஏஜென்ட்வேலை செய்கிறார், எங்களோடு படித்து பல் வைத்தியரான சந்திரனை தெரியும் தானே உனக்கு ”

“ ஓம் தெரியும் என்னோடு மருத்துவ துறையில் படிக்க முயற்ச்சித்து பல் வைத்திய துறையில் படித்தவன்”

“ அவன் தான் ஆள். . எனக்கு வீடு விற்க ஒரு கிழமைக்கு முன் போன் செய்தவன்”

“ அப்ப ரியல் எஸ்டேட் ஏஜேண்ட்டுக்கு நல்ல கொமிஷன் கிடைக்குமே”? அது சரி ஸ்காபரோவில் இருக்கும் முதலியார் முருகேசுவின் மகன் சின்னத்தம்பி என்ன வேலை “?ராஜ கேட்டார்.

“ அதேன் கேட்கிறாய் கதையை என்னோடு வேலைசெய்கிற சங்ருக்கு கலியானம் பேசி நல்ல வடிவான கேரளப் பெட்டை ஒருத்தியை கலியாணத் தரகர் சின்த்தம்பி முடித்து வைத்தவன் .பாவம் அவன் சேகர் கலியாணம் முடித்து ஆறு மாதத்துக்குள் பெடிச்சி பேஸ்மண்டில் இருந்த ஒரு கறுவலோடு ஓடிப்போய்விட்டாள்.

:”இங்கை எப்படி கலியாணத் தரகு வேலை எனக்குச் சாதகப் பொருத்தம் கொஞ்சம் பார்க்கத் தெரியும். அம்மா சொல்லித் தந்தவ மாணிக்கம் “

“ அந்த வேலையைப் பற்றி இங்கை யோசிக்காதே . இப்ப பெடியங்களும் பெடிச்சியளும் இரண்டு ஒரு வருஷம் பேசி பழகி மனசுக்குள் ஒத்துப் போனால் தான் கலியாணம். அதை இளம் சமுதாயம் அதுக்கு கெமிஸ்ட்ரி என்பர் .அதுக்கு பிறகு பிசிக்ஸ் எக்கோனோமிக்ஸ் போலத் தெரியுது சில பெடிச்சியல் திருமணம் ஆகாமலே தனித் தாய் என்ற சிங்கிள் மதர் என்ற பெயரில் வாழுதுகள். எந்த சாதி, மதம் என்றாலும் சரி. படிக்கும் போதே சோடியை பிடித்திடுங்கள். எனக்கு ஜேன் போல் மனைவி கிடைத்தது என் அதிர்ஷ்டம் நான் என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எனக்குத் திருமணமான விபரம் அறிவிக்கவில்லை. ஏன் பிரச்சனை. அவர்கள் என்னை அம்மாவின் தம்பி மகள் சுமதிக்கு முடிச்சு வைக்க பிளான் போட்டுக் கொண்டு இருக்கினம் அவள் எனக்கு ஒரு வட்ஸ் அப் எடுத்து சொன்னாள் தன்னை பற்றி யோசிக்க வேண்டாம் என்று தான் லண்டனில் என்ஜினியாரக இருக்கும் தனது சினேகிதியின் அண்ணனைக் காதலித்து கலியாணம் செய்யப் போவதாக.. அது எனக்குச் சந்தோசம் “.

“செய்யும் தொழிலே தெய்வம் மாணிக்கம் நீ கொடுத்து வைத்தவன். எது மனதுக்கு பிடிச்சுதோ அது படி நடக்கட்டும்” ராஜ் சொன்னார்

***

மாணிக்கத்தின் கார் மார்க்கத்தில் இருக்கும் அவன் வீட்டின் முன் வந்து நின்றது

“தான் போட்டுக்கொண்டு வந்த சப்பாத்தை வாசலிலேயே கழட்டி விட்டு, வீட்டுக்குள் போகமுன் மகனிடம் தமிழில் “ரமேஷ்!… சப்பாத்தைக் கழட்டி வாசலில் வைத்துவிட்டு உள்ளே போ” என்று மகனை எச்சரித்தாள் ஜேன்

வீட்டுக்குள் சூட்கேசுடன் சென்ற ராஜாவுக்குச் சாம்பிராணி வாசனை வீசியது. ஹாலில சாய் பாபா படம் இருந்தது:

ஓரத்தில் மேசையில் சிவபெருமானின் நடனச் சிலை தோற்றமளித்தது. ராஜாவுக்கு எல்லாம் புரிந்து விட்டது . மாணிக்கம் கொடுத்து வைத்தவன் என்று தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான் ராஜா

( யாவும் புனைவு )

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *