புரோட்டா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 963 
 
 

சிதம்பர விலாஸ் ஹோட்டல் 1980ல் புரோட்டாவுக்கு பெயர் போன ஹோட்டல். முதல்  முறை சாப்பிடுவோர்க்கு சுவை நினைவில் தங்கி விடும். எப்ப இந்த ஊருக்கு வந்தாலும், சிதமபர விலாஸ் புரோட்டா நினைவுக்குள் வருவதை தடுத்திட முடியாது. கல்லாவில் நிற்கும் ஓனரின் முகத்தை மறந்திட முடியாது. காலையில் இருந்து  இரவு  ஒரு மணி வரைக்கும், கல்லில் புரோட்டா சுட்டு கொண்டே இருக்கும். பாவம் அப்பொழுது இருந்த தோசை கல். காலை முதல் இரவு வரை வெந்து கொண்டே இருக்க வேண்டும்.

புரோட்ட மாஸ்டரகளின்  நிலைமை அதை விட மோசம், காலையில் பினையப்படும் மாவை மாலை வரை சுட்டு, மாலை பினையப்படும் மாவு  இரவு ஒருமணி வரை மாவை துணி துவைப்பது போல வீசிக் கொண்டு, சுட்ட புரோட்டாவை கையில் ஓங்கி ஓங்கி அடித்து அடிக்கி வைக்க வேண்டும். பாடி பில்டர்கள்  போல்தான் புரோட்டா மாஸ்டர்கள்  இருந்தார்கள்.

சிதம்பர விலாஸ் ஹோட்டல் எப்பொதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் பயணம் செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் அப்ப அப்ப ஊர்வாசிகளும் வந்துக் கொண்டுயிருப்பார்கள். பழைய மண் சுவரில் கட்டியது. மேற்கூரை கீற்றில் போடப்பட்டு இருக்கும். லைட்களின் புகைகள் படர்ந்து மங்கலாகவும், மின்விசிறிகளில் முக்காலத்து ஓட்டடைகள் அடைந்தும். கற்றாலையின் விசிறி போல மின் விசிறி மெல்ல சுற்றிக் கொண்டும். சில சேர்கள் நொடித்து கொண்டும்,தோசை கல்லை தண்ணிர் உற்றி தேய்க்கும் இக்கிமாரு எண்ணெய் படித்து கருத்த நிறத்திலும், சமைக்கும், பாத்திரம் கழுவும் இடம் நகராட்சி பொது கழிப்பிடம் போல சொத சொதனு இருக்கும். மக்கள் பார்த்து விடாமல் இருக்க, இது பொது வழி இல்லை என்று சுவரில் கரி கோட்டையில் எழுதி இருக்கும். வேலை செய்பவர்களுக்கு  இதையை பார்த்து பார்த்து பழகிவிட்டது. எது எப்படி இருந்தாலும் சுவையில் குறையே இருக்காது. குருமாவை குடிப்பதற்கே ஒரு கூட்டம் வரும்.

 தொழிலுக்கு புதியதாக வரும் புரோட்டா மாஸ்டர்கள், புரோட்டா சாப்பிடுபவர்களின் அழகை ரசித்து சிலித்து போவார்கள். புரோட்டாவையும் ஆர்வமாக சுட்டுக் தள்ளிக் கொண்டு இருப்பார்கள். நாட்கள் கடந்து செல்ல செல்ல புரோட்டா சாப்பிடுபவர்களை பார்த்தாலே எரிச்சல் ஏற்ப்படும், சாப்பிடுவோர் முக நெழிவை பார்த்து முகசுளித்து அருவருக்க செய்வார்கள். எப்ப பார்த்தலும் கூட்ட கூட்டமாக நேரம் காலம் தெரியாமல் தின்னுக் கொண்டே இருப்பதா? சலித்து கொள்வார்கள்.

அன்று சிதம்பர விலாஸ் ஹோட்டலில் காலையில் புரோட்டாவை மாஸ்டர் சுட்டுக் கொண்டு இருந்தார். மக்களின் சத்தம் நிறைந்தே இருந்தது. வருவார்கள் சாப்பிடுவார்கள் போவார்கள் இது ஒரு தொடர். இலையை போடுவது தண்ணிர் வைப்பது சாப்பிட்ட இலையை எடுப்பது துடைப்பது இயந்திர வேலை நடந்து கொண்டே இருக்கும். இது இந்த வேலையின் தலையெழுத்து. மாஸ்டர் அன்று இரவில் இருந்து ஒவ்வொரு முறையும் புரோட்டா வீசி கல்லில் சுடும் போதும் முன்று புரோட்டாகளை தனக்குனு ஒதுக்கி வைத்தார். மற்றதை  அடுக்கி வைத்தார். சப்ளையர் வந்து எடுத்து  சாப்பிடுவோர்க்கு பரிமாறுவான். மாஸ்டர் ஒதுக்கிய முன்று புரோட்டாவை மறைத்தும் வைத்துயிருந்தார். மாவை வீசி கல்லில் புரோட்டா சுட்டுக் கொண்டும் இருந்தார்.

சப்ளையர் சாப்பிட ஆளு உட்கார்ந்து இருக்கு புரோட்டா இருக்க என்று கேட்டான்.

வெத்து கொண்டு இருக்கு ஐந்து நிமிசம் ஆகும் காத்துயிருக்க சொன்னான்.

சப்ளையர் கண்கள் எலிகளை போன்றது. நோட்டம் விட்டான் மறைத்து வைத்து இருந்த முன்று புரோட்டா கண்ணில் பட்டது. லபக்கு என்று எடுத்து ஏளனமாக பார்த்துவிட்டு புரோட்டாவை சப்ளை செய்தான். மாஸ்டர் கோபத்தை சுட்ட புரோட்ட மீது அடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டார். ஓனர் முகத்தில் பெருத்த முறுக்கு மீசையும்,வெள்ளை சட்டை வேட்டியும் காலையில் அடித்த பவுடர் நெற்றியில் வைத்த பொட்டு கலையாமல் கோயில் யானை போல கல்லாவில் இருந்தார். வருவோரை பார்த்து,

வாங்க ஐயா…

வாங்க அம்மா…

வாங்க தம்பிகலா…

வாங்க அண்ணே… 

சாப்பிட எல்லாம் இருக்கு,

வயதுக்கு தகுந்தார் போல் தனது மொழியை இழுத்து தான் பேசுவார். அது அவருடைய அன்றாட பஜனை பாடல்.

வருபவர்களை பார்த்து ரெடிமேட் சிரிப்புடன் வரவேற்பார்.வருபவர்களும் புரோட்ட இருக்க என கேட்டு கொண்டே  உள்ளே வருவார்கள். கல்லின் சுட்டில் இருக்கும் மாஸ்டர்க்கு  எரிச்சலை ஏற்படுத்தும்.அன்று இரவு மணி பனிரெண்டுக்கு மேல் ஆகிவிட்டது.எந்த நேரத்திலும் கோவில் யானை  வாயில் இருந்து சாப்பிட எதுவும் இல்லை என்ற சொல்லே வராது.கல்லில் புரோட்டாகளை ஏற்றி இருந்தான் கல்லில் வெத்துக் கொண்டு இருந்தது. தோசை பிரட்டியில் எண்ணெய் பாத்திரதில் விட்டு புரோட்டா மீது தெளித்துக் கொண்டு இருந்தான். கடையில் கூட்டம்படி படியாக குறைய ஆரமித்து விட்டது.புரோட்டா தனக்கு மீஞ்சும் இருக்கும் என்ற நிறைவில் இருந்தான். வேலையும் கொஞ்சம் முன்னே முடிய போகுது என்ற மனநிறைவிலும் இருந்தான். கூட்டம் இல்ல மாவை கல்லுக்கு ஏற்றாத ஓனர் சொல்லிக் கொண்டு அடுப்படிக்கு வந்தார், அதிர்ச்சி அடைந்தார். புரோட்டா கல்லுல ஏற்றாதனு சொன்னே ஏற்றி வச்சிருக்க.இல்ல முதலாளி ஆளு வரும்னு ஏத்துனேன். ஓனர் முரைத்து பார்த்து விட்டு கல்லாவுக்கு சென்றான்.முரைத்தாலும் மாஸ்டர் மனதுக்குள் ஒரு ஆனந்தம். புரோட்டாவை புரட்டி போட்டுக் கொண்டு இருந்தான்,அதில் தனக்குனு ஐந்து புரோட்டாவை எண்ணி வைத்து கொண்டான் அதன் மீது கூடுதல் கவனம் சொலுத்தினான்.அதன் மீது அதிக எண்ணெய் ஊற்றுவது,அனல் போதுமான அளவு இருக்கும் இடத்திற்கு நகர்த்தி புரோட்டாவை வென்நிறத்தில் வேக வைத்தார்.ஒனர் வழக்கம் போல கல்லா இருக்கும் இடத்தில் கோயில் யானை போல சாலையை பார்த்துக் கொண்டுயிருந்தார்.யாராவது வருவார்கலா எதிர்பார்த்தார்.என்னதான் துடைத்தாலும் தன்மை மாறாத டெபிளை அழுக்கு துணி வைத்து துடைத்து கொண்டு இருந்தான் எலி.சாப்பாட புரோட்டா  மீதி நிறையா இருக்கு ஒரு புடி புடித்து விடலாம் எண்ணம் ஓடிக் கொண்டு  வேலையை செய்து கொண்டு இருந்தான்.இந்த முறை எலி கண்ணுக்கு தெரியாமல் ஐந்து புரோட்டாவை எப்படி மறைப்பது என் யோசித்தார் மாஸ்டர். இந்த எலி எலியை விட மோசமானது, எங்கு மறைத்து வைத்தாலும் தன் வைத்தது போல சரியாக வந்து எடுத்துவிடும். ஒனரிடம் போட்டுக் கொடுக்கும் தன்மை கொண்டது. ஓனரை விட அறிவு அதிகம். கணக்கில் புலி,எலி படித்து இருந்தால் உயர்ந்த பதவிக்கு போயிருக்கும்.கல்லில் இருந்த புரோட்டாவை எடுத்து ஓங்கி ஓங்கி கையில் அடித்து கொண்டுயிருந்தான். கோவில் யானை முணுமுணுப்பது காதில் கேட்டது.எலி டெபிளை துடைத்து கொண்டுக் என்னை பார்த்தான். ஒரு சின்ன மாற்றும் நிகழ்ந்தாலும் எலிக்கு சரியாக கண்டு பிடித்து விடும்.எலிக்கு தெரியாமல் ஒரு வேலையும் செய்ய முடியாது. அதித மொப்ப சக்தி மெற்றது.எலி அந்த காலத்து சி சி டி வி கேமிரா (cctv camera). அந்த ஐந்து புரோட்டாவையும் மெல்ல அடித்து எலிக்கு தெரியாமல் ஒரு இலையில் சுற்றி கண்டுபிடிக்காத முடியாதபடி மறைத்து வைத்தார். முதாலாளி வாயை திறந்து பஜனை பாடும் சத்தம் கேட்டது.வழி போக்கர்கள் நான்கு பேர் வந்து சாப்பிட எதும் இருக்க என்று கேட்டனர்.இருக்குயா… சூடா புரோட்டா இருக்கு ஐயா… வந்து உட்காருங்க. டேய் எலி இலையை போடு டா என்ற குறல் கேட்டது.துடைத்து கொண்டியிருந்த அழுக்கு துணியை கடுப்பில் தூக்கி போட்டு விட்டு கையை கழுவி விட்டு டம்ளரில் தண்ணிர் எடுத்து  வந்து டம் டெபிளில் வைத்தான். தண்ணிர் செய்வது அறியாது அதிர்ச்சியில் குலுங்கியது.முதாலாளி வழக்கம் போல எட்டி பார்த்தார். மாஸ்டரும் பார்த்தார், மனதிற்க்குள் நல்ல வேலையாக மறைத்து வைத்து விட்டேன்.இலையை போட்டு விட்டு தட்டில் புரோட்டாவை எடுத்துக்  சப்ளை செய்தான். புரோட்டா மாஸ்டர் சாப்பிடுவோர் மென்னு முழுங்குவதை சினிமாவில் வரும் slow motion காட்சி போல அறுவருப்பாக பார்த்து கொண்டுயிருந்தார்.சாப்பிட்டு முடித்தவரகளிடம், முதலாளி கால்லாவில் காசை வாங்கி போட்டுக் கொண்டு அன்றைய தினத்தை ரெடிமேட் சிரிப்புடன் நிறைவு செய்தார்.எலி வழக்கம் போல சுத்தம் படுத்தும் வேலைகளை முடித்துவிட்டு தன் பொந்துக்குள் போக தயாராக இருந்தது.மாஸ்டர் காலையில் சிக்கிரம் வர வேண்டும் என்பதற்காக ஓனர் பழடைந்த சைக்கிளை கொடுத்துயிருந்தார்.மறைத்து வைத்த புரோட்டாவை எடுத்து  ஒரு பாக்கெட்டில் குருமா கட்டிக் கொண்டு தேடி ஒரு நைந்து போன மஞ்ச பையில் போட்டுக் கொண்டு எப்பொழுதும் என்ன வேணாலும் ஆகலாம் என ஐசியூ வில இருக்கும் சைக்கிளில் பையை மாட்டிவிட்டு சைக்கிளை கிளப்பினார்.

வீட்டுக்கும் சொல்லும் பாதை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழிகலும் நிறைந்த பாதை.கடைசியாக சாலை எப்பொழுது போட்டது என்றால் பதில் சொல்ல இரண்டு நாட்கள் யோசிக்க தோன்றும் எளிதில் ஞாபகத்திற்க்கு வராது.சைக்கிளை மீதித்து கொண்டுயிருந்தான்.முன்றாவது படிக்கும் தனது மகன் காலையில் 

அப்பா வேலைக்கு போயிட்டு வரும்போது புரோட்டா எடுத்துட்டு வா அப்பா…

  சரி எடுத்துட்டு வரேன்,

அதுவரைக்கும் நீயும் தூங்காம  இருக்கனும்

மகன் சாப்பிடாமல்  புரோட்டாக்கு காத்துக்கிட்டு இருந்துவிட்டு  தூங்கி இருப்பான் என நினைத்தான்.

குடிசையின் வாசலில்  வயதான நாய் இரவு முழுவதும் தூங்காமல் காவல் காத்துக் கொண்டு இருக்கும் அதற்க்கு வேகமாக ஓட முடியாத வயது.தளர்ந்த உடல்,குரைப்பது மட்டும் அடி வயிற்றில் இருந்து சத்ததை வரவழைத்து கடும் கோபத்தில் உக்கிரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.குடிசையில் உள்ளே திருடி செல்வதற்கு ஒன்னும் இல்லை என்று அந்த நாய்க்கு தெரியாது. அவர்கள் கூலியாக இவர்கள் சாப்பிட்டு முடித்து எஞ்சி இருப்பது மட்டுமே.அவன் வீட்டுக்கு வரும் போது மணி இரவு 1 இருக்கும்.சைக்கிள் சத்தம் கேட்டதும் தூக்கத்தில் இருந்த மனைவி எழுந்து கதவு என்று சொல்லி கொள்ளும் பழைய துணிகலான கதவை நகர்த்தி கொண்டு வெளியே வந்தாள்.அரை தூக்கத்தில் இருந்தாள்.

செத்த நில்லுங்க ஒண்ணுக்கு அடித்துவிட்டு வரேன் சொல்லிவிட்டு பத்து அடி தூரம் நடந்து ஒரு பொட்டலில் உட்கார்ந்தாள் .வயது ஆன நாய் மெல்ல எழுந்து நடந்து அவள் பின்னாலே சென்று அவள் அருகில் நின்று கொண்டு இருந்தது.அவள் திரும்பி வந்ததும் அவள் பின்னாடியே வந்து அது படுத்து இருந்த இடத்தில் படுத்துக் கொண்டது.இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர்.புரோட்டா பை சைக்கிளில் தொங்கி கொண்டுயிருந்தது.பையன் தூங்கிடான கேட்டான்,அவள் நீங்க புரோட்டா எடுத்துட்டு வருவிங்கனு பார்த்துகிட்டு இருந்துட்டு கொஞ்ச முன்னாடிதான் தூங்குனான்.

அன்று வெள்ளி கிழமை என்பதால் பையன் பள்ளி விட்டு வந்து சிருடையை கழட்டாமல் ஐஸ்பாய்,நொண்டி பாப்பா, கிட்டுபில் விளையாடிட்டு பொழுது சாய்ந்ததும் கை கால கூட கழுவாமல் சட்டையில் அழுக்குவுடனும் கை கால்களில் மண்ணுடனும் தூங்கி கொண்டு இருந்தான்.அவனை தட்டி எழுப்பி கொண்டுயிந்தான்.

தம்பி தம்பி…

அப்பா. புரோட்டா எடுத்துட்டு வந்து இருக்கேன் டா எழுந்துயிருடா அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்

தம்பி தம்பி….என

இறந்த குழந்தையை எதையாவது செய்து உயிர் கொடுத்து விட வேண்டும் என்பது போல  போராடி எழுப்பி கொண்டு இருந்தான்.

தூங்கட்டும் விடுங்கலே என்றால் அரை தூக்கத்தில் படுத்து இருந்த மனைவி.அவன் விடுவதாக தெரியவில்லை அவன் தவிப்பை அவளும் புரிந்துயிருக்க கூடும்.உயிர் வரவழைக்க போராடி கொண்டு இருந்தான்.சிறிய முருவலுடன் கண் திறந்து அப்பாவை பார்த்தான்.உயிர் பெற்ற மகனை பார்த்து மகிழ்ச்சி அடைந்து.

அப்பா புரோட்டா எடுத்து வந்து இருக்கேன் டா சாப்பிடு.

அவனும் தலையாட்டி விட்டு அரை தூக்கத்தில் உட்கார்ந்து இருந்தான்.உடனே வெளியே போய்  சைக்கிளில் மாட்டியிருந்த மஞ்சள் பையை எடுத்தான்.தக்கையாக இருந்தது  பையின் உள்ளே பார்த்தான் அடியில் கிழிந்து இருந்தது.காதுகள் அடைத்து கொண்டது. தூக்கு மேடையில் தூக்குக்கு காத்தியிருக்கும் கைதியை போல  அந்த நொடியை உணர்ந்தான்.நாய் இவனை பார்த்துக் கொண்டு இருந்தது.சங்கடத்தில் உள்ளே போனான்.பையன் சிலுவையில் அரைந்த இயேசுவை போல படுத்து தூங்கிட்டுயிருந்தான்.அமைதியாக அவன் முகத்தை பார்த்தான் இரக்கமான முகம்.குடிசையின் கூரை ஓட்டையில்  வந்த நிலவின் ஓளி பையன் மீது படர்ந்து அது இதயத்தின் வடிவில் இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *