“எனக்கு ஒரு ஆசடா ” –குமரன்.
“சொல்லுடா நெரவேத்திருவோம்”- தேவ்.
குமரன், “நான், ரெண்டு தடவ சாகனும் ”.
வழக்கமான அதிர்ச்சியுடன் தேவ், “ஏன்டா நல்லாதானே பேசிகிட்டிருந்தோம் ஏன் தீடிர்னு இப்டி? சரி, ஓகே.. நீ ரைட்டர்-ங்கிறதால அப்டி கேட்டியா? இல்ல நான் டாக்டர்-ங்கிறதால கேட்டியா?”
குமரன், “ரெண்டும் இல்ல, நாம ப்ரிண்ட்ஸ்-ங்கிறதால கேட்டேன்”.
தேவ், “நீ நார்மலா இருக்கவே மாட்டியாடா?”
குமரன், “எல்லாமே நார்மலா இருந்துட்டா உனக்கும் வேல இல்ல, எனக்கும் வேல இல்ல”
சிறு கடுப்புடன் தேவ், “யப்பா! டேய்… உன்கிட்ட விவாதம் பண்ண நான் வரல, சொல்ல வர்றத கொஞ்சம் தெளிவா சுருக்கமா சொல்லுங்க கதாசிரியர் அவர்களே?”
குமரன், “புதுசுன்னு சொல்ல மாட்டேன் ஆனா நாம எல்லார்க்குமே, நாம செத்த பிறகு என்ன நடக்குது?, குடும்பம், சமூகம் எப்டி எதிர்வினை ஆற்றுது? இல்ல எப்டி வரவேற்குது? இல்ல எத்துகுது? னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் இருக்கும்?, (தேவ் ஒருமாதிரியாக பார்க்க), உனக்கும் இருக்கும், அத, அஸ் எ ரைட்டரா நான் எக்ஸ்பிரியன்ஸ் பண்ணனும்”.
தேவ், “ஆனா அதுக்கு இப்போ என்ன அவசியம்?”
குமரன், “இல்லடா..! அடுத்ததா நான் உயிர் னு ஒரு தொடர் நாவல் எழுத போறேன்”.
தேவ் “ஓ..! நீ உயிர் எழுத, என் உயிர வாங்க போர…(குமரன் லேசாக தலையசைக்கிறான்). அது சரி… நீயும் இவ்ளோ நாவல் எழுதிட்டே.., நீ மட்டுமில்ல பொதுவா எல்லா ரைட்டருமே, ஏன்டா பாசிடிவாவே ஒரு விசியத்த அணுக மாட்றீங்க?”
முறைத்துவிட்டு குமரன் நக்கல் புன்னகையுடன் , நீங்க இப்போ எத பாசிடிவ், நெகடிவ்னு பிரிக்கிறீங்க சார்?
தேவ், “நீ நக்கல் பண்ணாலும்சரி… உன் கதையில பூரா தோல்வி, சோகம், போராட்டம், துரோகம், ஏமாற்றம்னு எப்ப பாத்தாலும் நெகடிவ் தானடா?” என கடுப்புடன் முடிக்கிறான்.
குமரன் விளக்கமாக “நண்பா!. பாசிடிவ், நெகடிவ் வேற வேற இல்ல, இப்போ உதாரணமா, நான் சாவ அனுபவிச்சு பாக்கனும்னு நினைக்கிறத, நீ நெகடிவா பாக்குற நான் அந்த அனுபவத்த பாசிடிவா பாக்குறேன். அதாவது ….
தேவ் இடைமறித்து “போதும்டா சாமி, அஸ் எ டாக்டரா., சாவ, பாசிடிவால்லாம் என்னால பாக்க முடியாது” ..
குமரன் ஏதோ சொல்ல முயல., தேவ் கை எடுத்து கும்பிட்டு, “டேய், உன்ன ரைட்டராதான் பிடிக்கும், ஸ்பீக்கரா இல்ல” குமரன் மௌனமாகிறான்.
“ஆனா நண்பனா உயிரே கொடுக்கலாம்” னு முடித்து தோள்மீது கை போட்டு நடக்கிறார்கள்.
விபத்து., சிகிச்சை.. இறப்பு.. என செய்தி, மெல்ல மெல்ல தெரியபடுத்தி படிப்படியாக தங்களது திட்டத்தை செயல்படுத்தினான் தேவ். அதனால் நெருக்கமானவர்களுக்கு சில அசம்பாவிதங்கள் கணிக்கப்பட்டு தடுக்கப்பட்டது. இருப்பினும் ஊரேகூட, பலவித முன்னேற்பாடுகளுடன் குமரன் வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ்-ல் இருந்து குமரன் உடல் குளிர்சாதனப்பெட்டியுடன் இறக்கபட்டதும், அவனது குடும்பம் இயங்க மறுத்து, கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது. உறவுகளின் ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதனை செய்துகொண்டான் தேவ்.
பிளாஷ்-நியூஸ்-ல் இடம் பெறாவிட்டாலும் குமரனின் இறப்பு செய்தி சோசியல் மீடியாவில் பிறந்து வளர்ந்து பரவியது.
குமரன் வீட்டில் விளையாடும் குழந்தைகள் முதல் கண்ணீர் வடிக்கும் நாய் வரை அனைத்தும் கேமராவில் பதியப்பட்டது, குமரனின் மூலையிலும்தான். மனசுதான் இல்லையே. தாயின் கதறல், தந்தையின் பொறுப்பு சகோதர சகோதரிகளின் புதிய சில, அதுவரை பார்த்திரா சில குணநலன்களை குமரனை வியக்கத்தான் செய்தன. அனுபவித்தான்.
ஏறத்தாழ குமரன் நினைத்ததை தேவ் மூலம் நிகழ்த்தியே விட்டான். அதை சமநிலையாக்க இருவரும் தினறிக்கொண்டுதான் இருந்தனர். ஏற்கனவே சூழ்நிலைமீறி போய்விட்டது என்றாலும் எல்லைமீறி போவதற்குள் உண்மையை சொல்ல தேவ் முயன்று “யாரும் பதறாதீங்க குமரன் சாகல” ங்கிறான்.
குடும்பத்தாரும் கூட்டமும் ஒரு நொடி அதிர்ந்து பின் ஒருவர், “நண்பன் தீடிர்னு இறந்ததால ஒரு டாக்டரா இருந்தாலும்கூட, அவர் மனம் பாதித்து எப்டி பைத்தியம்மாறி பேசுறார் பாரு”
இன்னொருவன் “ இதான் நட்புங்கிறது” தேவ் கடுப்பகிறான். குமரன் மனதுக்குள் சிரித்துவிட்டு , ஒரு வழியாக அவர்கள் திட்டப்படி எதேச்சையாக உயிர் மீண்டதுபோல் நாடகம் நடத்தி பல சர்ச்சை பொய்களுடன் PHYSICAL CHEMICAL MEDICAL MIRACAL லாக முடித்தனர்.
தேவும் குமரனும் ஏதோ சாதித்த பெருமையோடு, பல்வேறு விமர்சனங்களை கடந்து, பதிலுரைத்து சமாளித்து, கூட்டம் கலைத்து இருவரும் கிட்டத்தட்ட ஆசுவாசம் படுத்திகொண்டு நிதானமானபோது, தேவ்-க்கு போன் வந்தது, அதன் எதிர்முனை செய்தியை குமரன் ஆர்வமாக கேட்க முயல போன் ஸ்பீக்கர் ஆணாகி “தேவின் காதல் மனைவி, குமரனின் இறப்பு செய்தி கேட்டு மாரடைப்பில் மரணமடைந்ததாக ” ஒலித்தது. ஒரு நீண்ட மௌன குமுறல், கோபம், குற்றவுணர்வு ஆட்கொண்டது.
தேவின் மனைவியால் தேவ்க்கும், தேவால் குமரனுக்கும் பாதி உயிர் பிரிந்து உடை பிணம் ஆயினர். இருப்பினும் குமரனின் காதில் ”அண்ணா உங்க தத்ரூபமான சிந்தனைக்கு உங்களுக்கு கண்டிப்பா ஒருநாள் ஆஸ்கர் விருதே கிடைக்கும் ணா” என தேவின் மனைவி கூறி இருந்தது அசரீரியாக கேட்டது, தேவின் பார்வையில் உயிர் நின்றது குமரனுக்கும்.
“பாதித்த பாதிப்பின் பாதிப்பைவிட,
பாதிக்காத பாதிப்பின் பாதிப்பு பலமடங்கு”
-தேவா