தண்ணீர் தாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 5,497 
 
 

மாத முதல் தேதி ஆனாவே எங்களுக்கு தலைவலி பிச்சுக்கும் ஏனா நாங்க பாக்கிற வேலை அப்படி டவர் மெய்ன்டேன் வேலை அதிலும் ராஜ் இருப்பது Customer rental issue வேலை பின் என்ன பிரச்சனை வரும் என்பதை நான் சொல்லியா உங்கு தெரிய வேண்டும்.

முன்று மாதத்திற்கு ஒரு முறை வாடகை தருவது வழக்கம் வீட்டின் உரிமையாளர்கள் அந்த வாடகை தேதி வந்ததுமே ராஜ்க்கு ஃபோன் கால் பறக்கும் அப்படி தான் அந்த வாடகை மாதம் வந்தது காலை 6மணி முதலே ராஜ்க்கு வாடகை பணம் எப்போ வரும் உங்க கம்பேனி காசுக்கொடுத்தா நீங்க இந்த பக்கமா வாங்க இல்லனா இங்க வராதிங்க நாங்க உங்களோட பியுஸ்கேரியேர புடிங்கி போட்றுவோம் என்ற கணத்த குரலோடு வீட்டின் முதலாலி சொல்போனில் சுப்பிரபாதம் பாடிவீட்டு வைத்தார.

பின் ராஜின் மேனேஜரிடமிருந்து கால் வந்தது தம்பி சிக்கிரமா கேளப்புடா இன்னிக்கி வாடகைலாம் தரனும் நம்ம நேரா அக்கவுண்டன்ட்ட பாத்து செக் வாங்கிட்டு போய் நம்ம கஸ்டமர்களுக்கு கொடுக்கனும்ப்பா என்றார்..

ராஜியும் உடனே சார் அல்ரெடி இப்போதா ஒருதர் ஃபோன்ல திட்டிட்டு வச்சாரு உடனே நீங்க கால் பண்றிங்க சரி நா 9மணிக்குல வந்துடுறேன் நீங்களும் வந்துடுங்க சார் என்றேன்..

மேனேஜர் ம்ம்ம்ம்ம்………!!!சரி தம்பி வா நேரில பேசிக்கலாம்ப்பா.

சரிங்க சார்னு சொல்லிட்டு ஷார்ப்பா 9மணிக்கேள்ளாம் போய்டேன் ராஜின் மேனேஜரூம் வந்தாச்சு.

ராஜியும் மேனேஜரும் அக்கவுண்டேன்ட்ட பாக்கா போனாங்க….

அங்க அக்கவுண்டேட்டு எல்லா செக்கையும் ரெடியா எடுத்து வச்சிக்கிட்டு இருந்தாரு எங்கள பாத்ததுமே வாங்க சார் எல்லாமே ரெடியா இருக்கு…

நீங்க நேர இந்த செக்க கஸ்டமர்கிட்ட தரவேண்டியது தான் பாக்கி என்றார்.

நாங்களும் செக் எல்லாத்தையும் வாங்கிக் கொண்டு எல்லாம் சரியாக உள்ளதா என்று சோதனை செய்துக்கொண்ட பின் கேளம்பினோம்.

சார் சென்னை புல்லா சுத்த வேண்டியதா இருக்கும் வண்டிக்கு பெட்ரோல் இருக்கா சார் என்று ராஜ் கேட்டான் இல்ல தம்பி வர சொல்லதான் 200ரூவாக்கி பெட்ரோல் போட்டேன் பாத்துக்கலாம்.

முதல்ல நமக்கு யாரல்லாம் பிரச்சினை பண்றாங்களோ அவங்களுக்கு செக்க கொடுத்துடலாம் அப்புறம் நம்ம மத்த கஸ்டமர்களுக்கு செக்க கொடுத்துடலாம் ஏனா நம்ம கையில காசு இல்லமா எங்கையும் அதிகமா சுத்முடியாது நம்ம கம்பேனியும் பெட்ரோலுக்கு காசு எதுவும் தரதில்லனு சொல்லிட்டே இருக்கும் போதே.. ராஜ்க்கு ஒரு கஸ்டமர்கிட்ட இருந்து கால் வந்தது.

சார் கொஞ்ச நேரம் இருங்க சார் ஒரு கஸ்டமர் கால் பண்றாருனு சொல்லிட்டு அந்த ராஜ் கால அட்டேன் பண்ணேன் அதுல அந்த கஸ்டமர் என்ன தம்பி நமக்கு வாடக பணம் வந்துடுமா என்றார் ராஜீம் ம்ம்ம்ம்ம்……. ஆமா சார் இன்னைக்கு வந்துடும் உங்கல பாக்கலாம்னு தான் உங்க வீட்டுக்கு வரோம் னு சொல்லி அந்த ஃபோன் கால் கட் பண்ணான்.

ராஜ் மேனேஜர் சரி டா தம்பி நாம அப்புறம் பேசிக்கலாம் முதல்ல இந்த வேலைய பாத்துக்கலாம் என்று சொல்லிட்டு வண்டிய முறுக்கிறார்.

கஸ்டமர்களுக்கு 1ஆம் தேதியை வாடகை பணத்தை தந்து விடுவார்கள் ஏன் என்றால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையே அவர்களுக்கு வாடகை போய்விட வேண்டும் இல்லை என்றால் அவ்வளவு தான் எங்க உயிரே போய்டும் அப்படி பேசுவார்கள்.

நாங்கள் அவர்களின் வீட்டுக்கு செக் எடுத்து செல்லும் போது மட்டும் தான் சகல மரியாதையும் கிடைக்கும் மற்ற நேரத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளில் எங்களை பேசிவிடுவார்கள்.

அப்போது ஏதுக்குடா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கும் அப்புறம் பல மனித குணம் அதில் ஒன்று இது என்ற நினைப்போடு அடுத்த கஸ்டமரை சந்திக்க சென்றுவிடுவோம்.

அன்று காலை முதல் கொஞ்ச கஸ்டமர் வீட்டுக்கு சென்று வாடகைக்கான செக் தொகையை கொடுத்துவிட்டு சுற்றி திரிந்துக்கொண்டு இருந்தோம் மத்தியம் 1மணி ஆச்சி.

ராஜ்க்கு தண்ணீர் தாகம் எடுத்தது சார் எதாச்சும் பெட்டிக் கடை வந்தா வண்டிய நிறுத்துங்க தண்ணீர் பாகேட் வாங்குறேன் தாகம் நாக்க வறட்டுது னு சொன்னான் அதுக்கு மேனேஜரும் ஆமாம் தம்பி எனக்கும் தான்.

கொஞ்சம் பொறுத்துக்கோ இப்போ ஒரு கஸ்டமர் வீட்டுக்கு போறோம்ல அங்க போய் அவங்க வீட்ல தண்ணி வாங்கி குடிச்சிக்கலாம் னு சொன்னாரு.

சரினு ராஜீம் அமைத்தியா இருந்துட்டான்.

வாடகை தொகைக்கான செக் தர போற கஸ்டமைர் வீடு கொஞ்சம் பிரபலமானவரின் மகன் வீட்டு சோ எப்படியும் தண்ணீர் தராமையா போய்டுவாங்கனு நெனைச்சிட்டே போனார்கள்.

அவரின் வீட்டு கேட் க்கு முன்னாடியே வண்டிய நிறுத்திட்டு போனார்கள் ஒரு காவலாளர் இருந்தாரு எங்க மேனேஜர் அந்த காவலாளர் கிட்ட டவர் ல இருந்து வரோம் கொஞ்சம் சார்ர பார்த்து இந்த வாடக தொகைக்கான செக்க தரனும் சார் உள்ள இருக்கிறாரு னு கேட்டார் அந்த காவலாளி சரி இருங்க இந்தா வரேனு… உள்ள போய் கேட்டுனு வந்து சார் நீங்க உள்ள போகலாம் னு சொல்லிட்டு கேட்ட திறத்துவிட்டார்.

ராஜீம் மேனேஜரும் உள்ள போனார்கள் வெளியே ஒரு அம்மா இருந்தாங்க உங்கள சார் அவரோட ஆப்பிஸ் ரூம்ல உக்காற சொன்னாரு நீங்க அங்க வேய்ட் பண்ணுங்க அவரே வந்துடுவாரு னுசொல்லிட்டு போய்ட்டாங்க.

சரினு ரெண்டு பேரும் அவரோட ஆப்பிஸ் ரூம்ம வேய்ட் பண்ணிட்டு இருந்தா ஒரு 10நிமிடம் கழித்து வந்தார்…

வாங்க வாங்க சார் உங்கள தான் எதிர் பார்த்துனே இருந்தேன் சரியான டைம்முக்கு வந்துட்டிங்களே என்றார்.

மேனேஜரோ ஆம் ஆம் சார் என்று தலையை ஆட்டிக்கொண்டே இந்தாங்க சார் வாடகை தொகைக்கான செக் என்று எடுத்து அவரிடம் கொடுத்தார்.

அவரும் சிரித்தப்படியே செக்கை வாங்கிக் கொண்டு தேங்ஸ் ப்பா எனக்கு செலவுக்கு இல்லையே என்ன பண்றதுனே தெரியமா முழிச்சிட்டு இருந்தேன் நல்லவேலையா நீங்க வந்து இந்த செக்க கொடுத்திட்டிங்கப்பா ரெம்ப தேங்ஸ் என்றார்.

ராஜ்க்கா தண்ணி தாகம் அடக்க முடியாம தவிச்சிட்டே என்னடா இது இவ்வளவு பெரிய மனுஷன் வீட்டு வந்து செக் தரோம் குடிக்க தண்ணிக்கூட தரல அட்லிஸ்ட்டு தண்ணியாச்சும் குடிக்கிறிங்கலானு கூட கேட்களையேனு மனசு அடிச்சிக்கிச்சி இத ராஜ் மனதில் என்ன இப்போ நினைக்கிறானு மேனேஜருக்கு தெரிந்துவிட்டது.

அப்புறம் மேனேஜரே

சார் கொஞ்சம் குடிக்க தண்ணி கிடைக்குமா ரெம்ப தாகமா இருக்கு என்றார் அவரும் ஓ ஸ் கொஞ்சம் இருங்க இதோ வரேனு சொல்லிட்டு உள்ள போனாரு.

ராஜீம் மேனேஜரும் அவரோட ஆப்பிஸ விட்டு வெளிய வந்து நின்னுன்னு இருந்தாங்க.

தண்ணிய கொடுத்தார்னா இப்படியே குடிச்சிட்டு போய்டலாம்னு ஆனால் போனவர் 10நிமிடம் கழித்து வந்து சார் இன்ன சார் இங்கையே இருக்கிங்க என்னாச்சி போகலையா என்று அவர்களை பார்த்து கேட்டார்… ஒரு நிமிடம் ரெண்டு பேருக்கும் கண் கலங்கிவிட்டது தண்ணீர் எடுத்து வருவார் என்று காத்துக்கொண்ணு இருந்தோம் ஆனால் அவர் அப்படி கேட்டதும் அப்படியே மனம் கலங்கிபோனது மேனேஜரின் முகமும் வாடியது உடனே மேனேஜர்
சாரி சார் ஒரு கஸ்டமர் கால் பண்ணாரு அப்படியே பேசிட்டு இருந்தேன் நாங்க வரோம் சார் என்றார்… அந்த பெரிய மனுஷன் இருவருக்கும் கைகொடுத்து வழி அனுப்பினார்.

பின் ரெண்டு பேரும் அந்த தண்ணீர் தாகத்தோடோடு கேட்டிற்கு வெளியே வந்தவுடன் சார் நாம வெளியவே தண்ணி பாக்கேட் வாங்கிக்கலாம் இப்பவாது நான் சொல்றத கேளுங்க சார்னு ராஜ் சொன்னான்.

மேனேஜர் தம்பி விடுடா அவங்களாம் பெரிய பணக்காரங்க எதையாதவது யோசிச்சிட்டே இருப்பாங்கடா அதான் நாம தண்ணி கேட்டதகூட மறந்துட்டு இருப்பாரு விடு வா நாம வெளியே போய் பாத்துக்கலாம் என்று ராஜ் மனதை தேற்றினார்.

அப்போது தான் நினைத்தேன் நம் முன்னோர் கள் முகம் தெரியாதவர்கள் யார் வந்தாலும் முதலில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்த பின்னே அவர்களிடம் பேச்சை தொடங்குவது ஏன் என்று புரிந்தது.

அவர் மறந்து போனது அவரிடம் கேட்ட தண்ணீர் மட்டடுமல்ல நமது பண்பும் பழக்கவழக்கமும் வாழ்க்கையின் நெறிமுறைகளையும் தான் என்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *