கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 22, 2024
பார்வையிட்டோர்: 2,044 
 
 

அது உகண்டாவின் தென் கிழக்கு பகுதியில விக்டோரியா ஏரிக்கு அருகில உள்ள ஊராகும். அது ஒரு தீவு அந்த தீவின் பெயர் தம்ப தீவு (Damba Island) அந்த ஊரிலுள்ள பள்ளிவாசலின் பெயர் கல்யாம்புதி பள்ளிவாசல். (Kalyambuzi Mosque)

இந்த ஊரின் பிரபல பள்ளிவாசலை இடி அமீன் வபாத்தாகின கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் நிர்வகிப்பது, இடி அமீனினால் உருவாக்கப்பட்ட உகண்டா முஸ்லிம் உயர் சபை உறுப்பினர்களுக்கு உயர்தரமான கோப்பியை கொடுத்து கைலபோட்டுக் கொண்டு அவர்களின் ஸபோர்ட்ல வாழும் ஊர் மக்களின் அங்கீகாரம் அற்ற சர்வாதிகார நிர்வாக அமைப்பொன்றாகும்.

அந்த பள்ளிவாசலுக்கு 3 வருட காலத்தை உடைய புதிய நிர்வாக சபையொன்றை உருவாக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஊர்மக்களுக்கு ஆசை. இனி அதற்கு கடந்த 6 வருடமாக முயற்சி செய்கிறார்கள். 6 பேரை தெரிவு செய்ய வேண்டும் என்று 12 பேரை களத்தில இறக்குகிறார்கள். இனித்தான் பார்க்க வேண்டும் அந்த ஊர் மக்களின் ஆசை நிறைவேறுமா என்று.

ஏனெனில் தேர்தல் வைக்க பார்த்த முதல் ஆண்டு அந்த தீவில் ஒரு தேவாலயத்தில குண்டு வெடிச்சி தடைப்பட்டது. ஓராண்டு கழிந்து மீண்டும் வைக்க பார்த்தால் கொரோனா என்ற காரணத்தில மூன்று ஆண்டு கழிகின்றது. ஐந்தாம் ஆண்டு வைக்க பார்த்தால் நாட்டில் தேர்தல் வைக்கும் போது பள்ளிவாசல்களில் தேர்தல் வைக்க வேண்டாம் என்று அரசாங்கம் தடை விதிக்கின்றது. இனி ஆறாம் ஆண்டு எதிர்வரும் மூன்றாம் வாரம் தேர்தல் நடப்பதாக பள்ளிவாசலில் அறிவித்தல் செய்கிறார்கள்.

அந்த அறிவித்தல் வந்ததும் வேட்பாளர் இருவர் ஓடொடி வந்து முஸ்தாக் அந்ரிஸியிடம் கடிதம் எழுதி கேட்கிறார்கள். ஒருவர் தன் தொழிலால் இந்த பணியை சரியாக செய்ய முடியாமல் போகும் என்று வாபஸ் கடிதம் கேட்கிறார். மற்றவர்

தன்னால் தவறுகள் நடக்கலாம் என இறை அச்சத்தில் வாபஸ் கடிதம் கேட்கிறார். கேட்டதும் எழுதிக் கொடுக்கிறார் பின் விளைவு பற்றி அறியாமல் பள்ளிவாசல் நிர்வாக சபையை மாற்றனும் என முனைப்பாக இருந்த முஸ்தாக் அந்ரிஸி.

இறுதியாக தேர்தல் நடக்க மூன்று நாள் இருக்கையில் கல்யாம்புதி பள்ளிவாசலில் இருந்து பகிரங்க அறிவித்தல்.

குறித்த தேர்தலில் வேட்பாளாராக களமிறங்கிய இருவர் வேட்பாளாரிலிருந்து வாபஸ் பெற்று விட்டனர். உகண்டா தேர்தல் சட்டப்படி தேர்தலுக்கு வேட்பாளாராக களமிறங்கிய ஒருவர் வாபஸ் பெறும் பட்சத்தில் குறித்த தேர்தலும் வேட்பாளார் பட்டியலும் ரத்தாகிவிடுகிறது. எனவே மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு விண்ணப்பம் கோரப்படும் அதுவரை இப்பள்ளிவாசலுக்கான தேர்தல் நடைபெறாது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *