“சீனிவாசன்… சீனிவாசன்…”
“நான்தான் சீனிவாசன். நீங்க யாரு?”
“ஹாய் சீனி! என்னைத் தெரியலே? நான்தான் கிருஷ்ணசாமி!”
“எந்தக் கிருஷ்ணசாமி?”
“கரூர் பாரதி வித்யாவிலே நாலு வருஷம் ஒண்ணா படிச்சோமே… கிட்டுடா!”
“ஸாரி, ஞாபகம் இல்லே!”
“என்னடா, நாம ரெண்டு பேரும் ஒருநாள் கிளாஸ் கட் அடிச்சுட்டு சினிமா போய் வாத்தியார்கிட்டே மாட்டிக்கிட்டு, மறுநாள் அவர் பீரியட்ல நூறு தோப்புக்கரணம் போட்டோமே..?”
“மன்னிக்கணும்… நீங்க வேற யாரையோ நினைச்சுத் தப்பா என்கிட்டே பேசிட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்!”
“கரூர் வக்கீல் ராமநாதன் சன்தானே நீங்க?”
“ஆமாம்…”
“ஸ்கூல்ல எல்லாரும் ஒண்ணா டூர் போனோமே! எனக்காக உங்க அப்பாதானே அன்னிக்கு 500 ரூபா கட்டினார். உன்னைப் பார்த்துட்டு, அந்தப் பணத்தையும் திருப்பிக் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்…”
“அடேடே! அந்தத் தடிப்பயல் கிட்டுவாடா நீ… வா வா, உள்ளே வாடா!”
– 15th ஆகஸ்ட் 2007