ஜனதா சலூன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2021
பார்வையிட்டோர்: 2,100 
 

அரவிந்த் மதுராந்தகம் வட்டத்தில் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து வந்தார்.அவர் மனைவி வேலைக்கு போகவில்லை.மகன் மணிவண்ணன், கல்லூரி மாணவர்மகள் பூர்ணா மதுராந்தகம் அரசு ப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கிறாள்.அரவிந்த் அவர் மகன் மற்றும் மகள் இருவரையும் சிறு குழந்தைகளாக இருந்த சமயத்தில் மதுராந்தகம் அரசு நூலகத்தில் செய்தித்தாள்கள் படிக்க ,வார் ,மாத இதழ்கள் படிக்க மற்றும் நூலகத்தில் உறுப்பினர் ஆக சேர்த்து புத்தகங்கள் படிக்கும் பழக்கம் ஏற்படுத்தினார்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் இலஞ்சம் பெறாமல் வேலை செய்யும் நபர்களில் அரவிந்த்தும் ஒரு வர்.அதனால் அலுவலகத்தில் அவரை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் குடும்பத்தை மதுராந்தகத்திலேயே தங்க வைத்து விட்டு அவர் மட்டும் வெளியூரில் பணி செய்ய போவார்.

கும்மிடிபூண்டியில் பணிபுரிந்த காலத்தில் அரசியல் கட்சிகள் தலையீட்டால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்தார்கள்.அங்கே உள்ள ஆற்றில் மணல் திருட்டை தடுக்கப்போன சமயத்தில் இரவு சுமார் 2/00 மணி இருக்கும்.சுமார் 10 நபர்கள் தடி, அறிவாள் சகிதம் வர, அரவிந்த், ஜீப் ஓட்டுநர், இரண்டு அலுவலக உத்தியாளர்கள் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் இருந்த சமயத்தில் திடீரென ஒரு கார் வந்தது.

அதில் வெளியூரைச்சேர்ந்த காவல் அதிகாரிகள்,இலஞ்ச ஒழிப்பு த்துறை அதிகாரிகள் இருந்தார்கள்.அடிக்க வந்த அடியாட்கள் ஒட முயற்சி செய்ய காவல் துறை அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அரவிந்த் கையூட்டு பெறுவதாக கிடைத்த தகவல் மூலம் அரவிந்தை கைது செய்ய வந்த இலஞ்ச ஒழிப்பு த்துறை அதிகாரிகள் அரவிந்தை காப்பாற்றினார்கள்.

பின்னர் அரசியல் கட்சிகள் தலையீட்டால் கும்மிடிப்பூண்டியிலிருந்து மதுராந்தகம் மாற்றம்.

அரவிந்தன் அவர்கள் தலைமைச்செயலகத்தில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள சென்னைக்கு செல்லும் போது ரெயிலில் செல்வது வழக்கம்.அரவிந்தன் உறவினர் மாம்பலத்தில் வசித்து வந்ததால் கூட்டம் முடிய தாமதமானால் மாம்பலம் வந்து தங்குவார் அல்லது சில நேரங்களில் இரண்டு நாட்கள் கூட்டம் இருக்கும் போது மாம்பலத்தில் தங்குவது வழக்கம்.

ஒரு முறை மதுராந்தகத்தில் இருந்து மாம்பலம் வரும் சமயத்தில் சைதாப்பேட்டை க்கும் மாமபலத்திற்கும் நடுவே உள்ள அரங்கநாதன் ஸப்வே அருகில் இருந்த ஒரு சலூனைப் பார்த்து மறுநாள் காலை முடி திருத்தம் செய்ய சென்றார்.அந்த சலூன் சற்றே வித்தியாசமாக இருந்தது.

வழக்கமாக சலூனில் இருக்கும் தினத்தந்தி நாளிதழ் தவிர வார்,மாத இதழ்கள் இருந்தது.

சலூன் முதலாளி இலக்கிய ஞானம் உள்ளவராக இருந்ததால் அரவிந்தனுக்கு ஒரே சந்தோஷம்.முடி திருத்தம் முடிந்தது எவ்வளவு பணம் என்று கேட்க ரூபாய் 1/00 மட்டுமே என்று தெரிவிக்க அரவிந்தனுக்கு பயங்கர ஷாக் எப்படி என்று கேட்க சார் நாட்டில் ஜனதா ஆட்சி நடக்கிறது ஒரு ரூபாய்க்கு சாப்பாடு போடும் போது ஒரு ரூபாய்க்கு முடி திருத்தம் செய்ய க்கூடாதே என்று கேட்டார்.

அரவிந்த் மாம்பலம் வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டுவிட்டு அலுவலக வேலை முடிந்ததும் நேராக பாண்டி பஜார் சென்று ரூபாய் 2,00/– க்கு நாவல்கள் வாங்கி நேராக ஜனதா சலூன் சென்று கடை முதலாளியிடம் புத்தகம் கொடுத்து விட்டு மதுராந்தகம் திரும்பினார்.

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)