சைக்கிள் கிறுக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 2,182 
 

இரயிலை விட்டு இறங்கியதும் சொட்டரை கழற்றிவிட்டு சோம்பல் முறித்து கொண்டேன்..

கம்பெனி ஆள் வந்து சூட்கேசை வாங்கி கொண்டான்.

வழக்கமாய் நிற்கும் இடத்தில் இருந்து பிளாட்பாரம் மாறி நின்றது நெல்லை எக்ஸ்பிரஸ்.

கார் மெட்ரோ ஸ்டேஷன் கிட்ட விட்டிருகேன் சார் ..

மெட்ரோ ஸ்டேஷன் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

காரில் இருந்து இறங்கி வந்து கம்பெனி மேனேஜர் கைகுலுக்கினார்..

எப்டி இருந்து சார் டிராவல்?

கொஞ்சம் ஏ சி அதிகம் குளிர் தாங்க முடியல என்றவாரே முகத்தை கர்சீப்பால் துடைத்து கொண்டேன்.

இரண்டு பெண்களும் ஒரு இளஞனும் மெட்ரோ ஸ்டேஷன் முன்பு நின்று இருந்த சைக்கிளை டோக்கன் போட்டு வெளியில் எடுத்து வந்தனர்.

அந்த ஒல்லி பெண்ணின் டி சர்டில் Heart of Fire என எழுதி இருந்ததை கவனித்தேன்.

ஐடி கம்பெனி பணியின் பளபளப்பு அந்த இளஞன் சூவில் தெரிந்து.

சைக்கிள் பயணம் இப்போது பெரு நகரங்களில் ஒரு கவுரவ பயணம்…

சைக்கிளின் விலை பல ஆயிரங்கள். கியர் வண்டிகள். ஜிபிஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

பல ஆயிரம் மாத சம்பளகாரர்களின் ஒரு நாகரீக பயண ஊர்தி.

உடலுக்கு ஆரோக்கியம்.

என உயர் வகுப்பு என பெரு நகரங்களில்.

வாடகை வீடுகள் தர கூவி போற்றி அழைக்க படும் ஒரு வர்க்கமிவர்கள்….

சைக்கிளை பார்த்ததும் என்னுள் குவிந்து கொண்ட ஒரு சந்தோசங்கள், சங்கடங்கள் சாதனைகள் எல்லாம் வந்து போயிற்று.

அது ….

தொண்ணூறுகளின் பாதிகளுக்கு பிறகு என் வாழ்க்கையில் சைக்கிள் தான் எல்லாமாகி போன காலம்…

கல்லூரிக்கு செல்லும் போது சைக்கிளை ரயில்வே ஸ்டேஷனில், பேருந்து நிலையத்தில் வைத்து விட்டு ரயிலில், சில நாட்களில் பேருந்தில் சென்று வந்த நாட்கள்..

பின் கேரியரில் புத்தகம் வைத்து அவை மடங்கியோ கிளிந்தோ போனால் தவித்து போகும் மனது..

ஒருமுறை டிரைனை பிடிக்க வேகமாக சைக்கிள் மிதித்து போனதில் நடு ரோட்டில் சிதறி கிடந்த புத்தகங்கள்…

அவசரமாய் பொருக்கிய போது ஓடி வந்து உதவிய தங்கசாமி அண்ணன்.

“முன்னாடி ஒரு சின்ன கேரியல் வாங்கி வாசிக்க”

என்று சொன்ன பிறகு முன் பகுதில் ஒரு சிறிய கெரியல் வைத்த பிறகு என் சைக்கிளுக்கு ஒரு மவுசு கூடி போனதாய் நினைப்பேன்.

எத்தனை தூரபயணம்..

எத்தனை உபயோகம்..

பைக் வாங்கிடு மக்கா – நண்பர்கள் அறிவுரைகள்..

அந்த ஹெர்குலஸ் சைக்கிள் தான் நிரந்தரம் ஆகி போனது.

இயக்கங்கள் போராட்டங்கள் எல்லா இடமும் சைக்கிளில் தான் செல்வது.

கிராமத்துக்கும் நகர நண்பர்கள் சந்திப்புகும் இரண்டு கிலோமீட்டர்,

காலை சென்றால் இரவு திரும்ப பதினோரு மணி .

இருளிலும் ஒளிரும் டைனமோ…

டைனமோ எரியாத நாட்களில் போலீஸ் ஸ்டேசன் தாண்டும் போது இறங்கி சைக்கிளை உருட்டி வந்த நாட்கள்..

போராட்டங்களை நோக்கி செல்ல, எளிமையாக இருக்க உலகம் புரிய சைக்கிள் ஒரு காரணம்..

ஒருநாள் கீழூர் அண்ணனை போலீஸ் ஸ்டேஷனில் முட்டி போட வைத்து கைகளை தூக்கி கைகளின் இடைக்யில் லத்தியை குடுத்து பின்புறம் அடி விழுந்தது கொண்டு இருந்தது.

இரவு பத்து மணிக்கு சைக்கிளில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்த நான் போலீஸ் ஸ்டேஷன் ஜன்னல் வழியாக பார்த்த போது கொத்தித என் இரத்தம்,

வேமாக சைக்கிளை திரும்பி சென்று ஸ்டேஷன் முன்பு வேகமாக ஸ்டேண்டு போட்டதில் அது கீழே விழ..

அந்த சப்தம் கேட்டு திரும்பிய எஸ் ஐ என்னை பார்த்ததும் அந்த அண்ணனை எழுப்பி லுங்கியை உடுக்க செய்து எதுமே நடக்காது போல் ஆடிய நாடகம்…

மனம் கவர்ந்தவளை கல்லூரி பஸ் செல்லும் முன்பு வந்து பார்த்து சிரித்து யாருக்கும் அறியாமல் கை அசைத்து,காத்து நின்ற நாட்கள்…

சைக்கிளில் ஏற்றி செல்ல தைரியம் இல்லாத நாட்கள்..

ஒருவேளை பைக் இருந்தால் ஏறி இருப்பாளோ என பல ஆண்டு கழித்து தோன்றிய எதிர்மறை எண்ணங்கள்…

பீடி கடை மறித்து மறியல் செய்து எமாறிய தொழிலாளிகளுக்கு பணம் பெற்று கொடுத்த நாட்கள்..

தனி நபர் ஆலையில் நடந்த போலீஸ் பஞ்சாயத்துகள் தகர்த்து எறிந்த நாட்கள்..

பேருந்துகள் ஊரை புறக்கணிக்க அதை சரி செய்த உண்ணா விரதங்கள்…

உரிமை மறுத்த அதிகாரிகள் சிறை பிடித்த நாட்கள்..

சப் கலெக்டர் பேச்சு வார்த்தை..

எம் எல் ஏ ரமணி அவர்களோடு நடுரோட்டில் சமயல்..

போராட்ட வெற்றி..

எல்லா இடத்திலும் சைக்கிள்..

சைக்கிள் சைக்கிள்..

அது ஒரு கவுரவமாக தான் எனக்கு..

பைக் கார் என என் வயதவர்கள் சுற்றும் போது..

துளி கூட எழாத தாழ்ந்து போகா மனசு..

உன் ஆளு என்னடி..

சைக்கிள் டயர் வெடிச்சு புட்டா டியூப் வாங்கி போட காசு இல்லாத ஆளு..

எப்டிடி .. அவன நினச்சுடு இருக்க..

உசுப்பி விட்ட தோழிகள்..

சைக்கிள் சைக்கிள்..

காலம் கடந்து போயிற்று..

காலம் தான் எத்தனை வலிது..

எத்தனை மறக்க செய்கிறது..

போராளிக்கு வெற்றி முக்கியமல்ல..

என்ற நினைவும் சைக்கிளும் தான் உடன் இருந்தன..

அதனால் தான் அன்று அத்தனை வேகம்..

வேகமா விவேகமா சரியா தவறா என எண்ணாத நிலை..தைரியமா அறியாமையா…

லைப்ரரியில் தவம் கிடந்த நாட்கள்..

பாலகுமாரனும், ஜெயகாந்தனும் வாசிக்க..

பிரபஞ்சன் புத்தகங்கள் தேர்ந்தெடுக்க சைக்கிள் தான் உதவிற்று…

நண்பர்கள் பலர் ஏற்று கொண்டது எனது கொள்கை மட்டும் அல்ல சைக்கிளும் தான்

காந்தி பற்றி நண்பர்களுடன் மணிக்கணக்கில் பேச வைத்தது..

பட்டி மன்றமும்..

பாரதி கவிதைகளும்..

உரம் வளர்த்தன..

காலம் வலிது..

புராட்டியும் போடும்..

பாடம் புகட்டும்..

கவுரவ படிப்பு..

தொழில்..

அலுவலகம்..

அமைந்து போயிற்று..

சைக்கிள்..

கொஞ்சம் விலகி போன போது..

ஒருநாள்..

“உனக்கு சைக்கிள் தான் கம்பீரம்” – சொல்லி மெல்ல சிரித்தாள்..

அந்த கண்களில் ஈரம் இருந்தது..

காலம் முழுக்க துரத்தும் அந்த பார்வை…

சார் கிளம்பலாமா..

கார் அனுப்பி இருந்த கம்பனி மானேஜர் என் நினைவு கலைத்தார்..

இனோவா கார்..

பெர்பியூம் வாசனை..

சல்யூட்கள்..

கம்பெனிக்கு வக்கீலாக..

ஆனாலும் தடுமாற்றம்..

சைக்கிளில் சென்ற நாட்களில் இருந்த நம்பிக்கை..

போராளிக்கு வெற்றி முக்கியமல்ல வரிகள்..

நினைவுக்கு வர மறுக்கின்றன…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *