சாமிநாதனை பேய் அடித்துவிட்டது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 28, 2017
பார்வையிட்டோர்: 3,777 
 

எங்கள் ஊரில் ஒரே பர பரப்பு,! சாமிநாதனை பேய் அடித்துவிட்டது.! எங்கே? எப்படி அடித்தது என்று ஒருத்தருக்கும் தெரியாது, ஆனால் அன்று காலை அவன் இருந்த கோலத்தை பார்த்தவர்கள் அப்படியே நம்பி விட்டனர். அப்படி இருந்த்து அவனது கோலம், முகமெல்லாம் கருத்துபோனதப்போலவும், முடி எல்லாம் கருகியும் இருந்தன.

ஏற்கனவே அந்தக்கலா¢ல் இருப்பவன் இப்பொபொழுது அட்டைக்கரியாக இருந்தான். மயக்கமாய் கீழே கிடந்தவனை ஊர் மக்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப அவன் நான் எங்கிருக்கிற்ன் என்று சினிமாவில் கேட்கும் கதாநாயகி போல கேட்கவும், ஊர் மக்கள் அவ்னை கண்டிப்பாக பேய்தான் இந்த அளவுக்கு அடித்திருக்க முடியும் என் முடிவு கட்டிவிட்டனர்.

ஊர் என்றவுடன் நீங்கள் பெரியதாக கற்பனை செய்து கொள்ள்வேண்டாம், நான்கைந்து தெருக்கள், அந்த தெருக்களில் பத்து இருபது வீடுகள், அவ்வளவுதான் எங்கள் ஊர், மற்றபடி ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், அனைத்திற்கும் வெளியூர்தான் சென்றாக வேண்டும். டவுன் பஸ் மட்டும் தினமும் காலை மாலை வந்து திரும்பி செல்லும்..ஊருக்குள் ஒன்றிரண்டு பேரிடம் மட்டும் சைக்கிள் இருக்கும், சீமைக்கார பால்பாண்டி வீட்டில் ஒரு பழைய அம்பாசிடர் ஒன்றும், ஒரு எக்ஸ்,எல்,ஸூப்பர் வண்டி ஒன்றும் உண்டு, மற்றபடி பெரும்பான்மையோர் “நடராசா சர்வீஸ்தாண்” அதிக பட்சம் எங்கள் ஊரில் வாரம் இரண்டு நாட்கள் ரேசன் கடை திறந்திருக்கும்.

சாமிநாதனை பேய் அடித்ததிலிருந்து மாலை ஆறு மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்துவிட்டது.மண்ணெண்னை விளக்கை ஏற்றிக்கொண்டு சுப்பண்ணன் வீட்டில் இரவு முழுக்க ஆடும் சீட்டாட்டம் மாலை ஆறு மணிக்கு மேல் மூட்டை கட்ட ஆரம்பித்து விட்டது. அதை விட சாமிநாதனை பேய் அடித்த நாளிலிருந்து எங்கள் ஊரில் தெருக்கு விளக்குகள் எரியாமல் நின்று விட்டன. மக்கள் ஆறு மணிக்கு மேல் நடமாட்டத்தை நிறுத்திவிட்டதால் அவ்வளவாக பாதிப்பு முதலில் தெரியவில்லை, இரண்டு மூன்று நாட்கள் ஆனவுடன் மக்கள் தெரு
விளக்குகளுக்கு ஏங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் கரண்ட் ஆபிசுக்கு போவதற்கும், மற்றபடி அவர்களை அங்கிருந்து கூட்டி வருவது எல்லாம் சாமிநாதந்தான் பார்த்துக்கொண்டிருந்தான். இப்பொழுது அவனை பேய் அடித்து விட்டதால் யார் கரண்ட் ஆபிசுக்கு போவது என்ற கேள்வி எழுந்த்து.

சாமிநாதனை பேய் அடித்து ஒரு வாரமாகிவிட்டது, அதற்குள் பலர் பேயை பார்த்தாக சொல்லிவிட்டார்கள், ஆனால் எப்படி இருந்த்து என்பது மட்டும் ஒருவருக்கும் சா¢யாக சொல்ல தெரியவில்லை, அவரவருக்கு வசதிப்படி சொல்லிக்கொண்டார்கள். கல் தடுக்கி விழுவது கூட பேயின் வேலையாக இருக்கும் என்ற அளவுக்கு பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஊர் மக்கள் இரவுக்காவலுக்கு தோட்டம் பக்கம் செல்வது நின்று விட்டது, இரவு நல்லதோ, கெட்டதோ, மாலைக்குள் முடித்துவிடுவது என்று அவர்களே முடிவு எடுத்துவிட்டார்கள்.ஆக மொத்தம் சாமிநாதனை பேய் அடித்த சோகத்தை விட ஊர் மக்கள் அடைந்த சோகத்தை சொல்லி மாளாது.இதற்கு ஒரு வழி காண வேண்டும் என்று அந்த ஊர் இளந்தாரிகள் முடிவு செய்ய, அந்த ஊர் பெரிசுகள் தம்பிகளா இது காத்து கருப்பு சமாச்சாரம் பார்த்து நடந்துக்குங்க என்று அவர்களின் பெற்றொர்களின் வயிற்றில் புளியைக்க் கரைக்க அவர்களும் தங்களுடைய இளந்தாரிகளை வெளியே விடாமல் பிடித்து வைத்துக்கொண்டனர்.

பக்கத்து ஊரிலிருந்து வந்த ரேசன் கடைக்காரர் அன்று வேலை முடிய இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டதால் அதற்கு பின் வீட்டுக்கு கிளம்ப சைக்கிளை எடுக்க,அந்த ஊர் மக்கள் தடுத்து சாமிநாதனை பேய் அடித்ததை சொல்லி காலையில் போய்க்கலாம் என்று அறிவுரை சொல்ல அவர் நக்கலாக ஏழு மணிக்கு எந்த பேய் வரும் என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு விர்ரென கிளம்பிவிட்டார்.

ஊர் எல்லை தாண்டியதும் வயிறு கடா புடா வென சத்தமிட சித்த ஒதுங்கலாம் என்று சைக்கிளை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு இருளில் உட்கார சற்று தொலவில் ஒரு உருவம் அசைவதை கண்டார், உள்ளத்தில் உதறல் எடுக்க, எழுந்து சைக்கிளை எடுக்கலாம் என போனவர் தூரத்தில் தெரிந்த மற்றொரு உருவத்தை பார்த்தவுடன் திகைத்து போய்விட்டார், அது பேய் அடித்த சாமிநாதனை போலவே இருந்த்து.

சத்தமில்லாமல் சைக்கிளை உருட்டிக்கொண்டு நடந்தார்.

காலையில நான்கைந்து பேரை கூட்டிக்கொண்டு அந்த இடத்துக்கு வந்து பார்க்க, கரண்ட் கம்பிகள் துண்டு துண்டு துண்டாய் ஏராளமாய் கிடந்தன. என்னடாவென மேலே பார்த்தால் அங்கு ஒரு கரண்ட் கம்பிகளையும் காணோம்.உடனே கரண்ட் ஆபிசுக்கு தகவல் தர அங்கிருந்து ஆட்கள் வந்து பார்த்த பின்தான் தெரிந்தது தெரு விளக்குகளுக்கு வரும் கரண்ட் கம்பிகள் அனைத்தும் காணாமல் போயிருந்தன.

சாமிநாதனை பிடித்து விசாரித்ததில் எப்பொழுது கரண்ட் வரும் எப்பொழுது வராது என்பது அவனுக்கு தெரியுமாதலால் கரண்ட் வராத சமயம் கரண்ட் கம்பம் மீது ஏறி ஓரளவு கரண்ட் கம்பிகளை துண்டு போட்டுவிட்டவன், திடீரென்று மின்சாரம் வந்த்து தெரியாமல் துண்டு செய்ய முயற்சிக்க அவன் முடி அதன் மீது பட மினசாரம் தாக்கி கீழே விழுந்திருக்கிறான். காலையில ஊர் ஆட்கள் வந்து அவனை பார்த்தவர்கள் சிறிது மேலே பார்த்திருந்தால் உண்மை விளங்கியிருக்கும், அதற்குள் இவர்களே பேய் அடித்ததாக முடிவு செய்ய சாமிநாதனுக்கு அதவே வசதியாகப்போய்விட்டது.

இப்படியாக ஒரு மினசாரப்பேய் வந்து சாமிநாதன் மூலமாக எங்கள் ஊரை ஆட்டுவித்துச்சென்றது.

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)