கொடுத்தல்-வாங்கல்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 9,698 
 

மீராவுக்கு,அதென்னவோ அந்த குடை மேல அப்படி ஒரு தனி ஈர்ப்பு. அது அவளுக்கு அவளோட சின்ன வயசுல அவளோட சித்தி வாங்கி கொடுத்ததாமா ! அப்போ இருந்து அதை பத்திரமா வெச்சுக்குவா.அந்த குடை மேல குட்டி குட்டியா பூக்கள் வரையபட்டிருக்கும், மஞ்சளும் சிகப்பும் கலந்த ஒரு நிறத்தில பாக்க நல்ல அழகா இருக்கும். வெயிலோ மழையோ அந்த குடை எப்பவுமே மீரா கைப்பையில இருக்கும். யார் கேட்டாலும் தர மாட்டா.

ஆனா ஒரு நாள் திடீர்னு அந்த குடையை காணோம். மீராவுக்கு என்னவோ மாதிரி ஆய்டுச்சு. office canteen , friend வீடு, library ன்னு எல்லா இடத்திலேயும் தேடியாச்சு.ம்ஹும், கிடைக்கல, பஸ் ஸ்டாப் வந்தா மீராவுக்கு ஒரு ஆச்சர்யமா இருந்தது.

அவளோட குடையை யாரோ அங்கே நிமித்தி வெச்சிருந்தாங்க. “அப்பாடா, குடை கிடைச்சுடுச்சே ” ன்னு வேகமா போய் அந்த குடையை எடுத்தா “எடுக்காதீங்க க்கா” அப்படின்னு 2 குட்டீஸ் ஓடி வராங்க.

“ஏன், இது என் குடை…எடுத்தா என்ன?” ன்னு கேட்டதுக்கு “கொஞ்சம் குடைக்குள்ள பாருங்கக்கா” ன்னு சொன்னாங்க. குனிஞ்சு பாத்தா உள்ளே 2 நாய் குட்டிங்க, மெதுவா சிணுங்கிட்டு கதகதன்னு ஒண்ணோட ஒண்ணு ஒட்டி படுத்திட்டு இருந்துதுங்க. ஒண்ணு பாதாம் நிறம், இன்னொண்ணு கருப்பு-வெள்ளை நிறம். கொள்ளை அழகு, தூக்கி கொஞ்சணும் போல இருந்தது மீராவுக்கு.

” அக்கா, இந்த குடை உங்களுது ன்னு தெரியாது க்கா, பஸ் ஸ்டாப் ல யாரோ விட்டுட்டு போய்டாங்க ன்னு நினைச்சோம். இந்த நாய் குட்டிங்களுக்கு இந்த குடை தான் க்கா இப்போ வீடு. கொஞ்சம் பெரிசானா குடை தேவை படாது. எங்களுக்கு தான் வீடு இல்ல, ரோட்லயே படுத்துக்கறோம் , இந்த நாய் குட்டிங்களாவது குடையை வீடா வெச்சுகிட்டுமே க்கா?” ன்னு கெஞ்சலா சொன்னாங்க.

அவங்க பார்வையில இன்னும் நிறைய கேள்விகள் தெரிஞ்சுது. ஆனா மீராவுக்கு தான் பதில் தெரியலை.

எனக்கு பிடிச்ச பொருள்ங்கறதை விட, இன்னொருத்தர்க்கு தேவை படற பொருள் அப்படிங்கறது தானே முக்கியம்? கொடுக்கறதுல தான் எவ்ளோ சந்தோஷம், ன்னு நினைச்சபடி சிரிச்சிட்டே அந்த குட்டீஸ் கிட்டே “எடுத்துக்கோ” ன்னு சொல்லிட்டு, லேசா பெய்த சாரல் மழைல நனைஞ்சுட்டே போனா மீரா!

Print Friendly, PDF & Email

1 thought on “கொடுத்தல்-வாங்கல்

  1. அருமை. வாழ்வில் எல்லாருக்கும் இருக்க வேண்டிய பண்பு இது. மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *