கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 29, 2015
பார்வையிட்டோர்: 12,820 
 

ஜான் காலை தன் அலுவலகத்திற்கு வந்தான். ஷீலாவை அழைத்து அன்றைய நிகழ்சிகளை பற்றி கேட்டான். இன்னைக்கு எதுவும் முக்கிய சந்திப்புகள் இல்லை, என்றாள் அவள். ஜெம் motorக்கு- நம்ம அனுப்புன கொட்டேஷன் என்ன ஆச்சு? இப்பொது ஷீலா இவனை பார்த்து கேலியாக புன்னகைத்தாள். தெரியாத மாதிரி கேக்றீங்க. அந்த வேலை கே.கே. சாமிக்கு கேடச்சிடிச்சி. அந்த பதிலில் ஒரு அசட்டுத்தனம் தெரிந்தது.

ஜான் புதிய தொழில் முனைவோன். அவன் தன்னுடைய தொழிலை தொடங்கி சில வருடங்கள் ஆகின்றன. அவனுக்கு சிறுவயதில் இருந்தே சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை. யாரிடமும் அடிமை வேலை செய்யக்கூடாது என்பது அவன் எண்ணம். ஆனால் படித்த பின் ஓரிடத்தில் வேலைக்கு சேர்ந்து அந்த தொழிலின் நுணுக்கங்களையும், வியாபார உத்தியையும் கற்றுக்கொண்டான்.

இப்போது அவனுடைய தொழில் நல்ல நிலைமையில் இருந்தாலும் சிறியதாகவே இருந்தது. இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக விரும்பினான். அவனுடைய தொழிலை பெரிதாக்கி பங்கு சந்தை பட்டியலில் தன் நிறுவனமும் இடம்பெறவேண்டும் என்று விரும்பினான். தொழிலில் சில நுணுக்கங்கள் தொழில்நுட்பம் அல்லது தொழில் உத்தி சார்ந்ததாக இருக்காது. சிறிய நிறுவனங்களுக்கு வேலை கொடுக்கும் பெரிய நிறுவனங்களில் உயர்பதவியில் இருபபவர்களின் விருப்பங்களை சார்திருக்கும். சிலருக்கு பரிசு பொருட்கள், சிலருக்கு பணம். சிலருக்கு மது விருந்து. சிலருக்கு மாது.

ஜான் கூட சிலருக்கு பணம் கொடுப்பதுண்டு. இவனுடன் படித்த சில நண்பர்கள் பெரிய நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருந்தார்கள். அவர்களுக்கு மது விருந்து அளிப்பதுண்டு. ஆனால் மாது விருந்து கொடுப்பதில்லை.அதை மிக கேவலமாக நினைத்தான். கே.கே. சாமிக்கு அந்த வேலைக்கான ஒப்பந்தம் கிடைத்தது அப்படிதான். ஷீலா ஜானை இதற்காக பழிப்பாள்.

ஒரு கார் பந்தயத்துல கலந்துகிட்டா எல்லாரும் என்ன வழிய கடைபிடிச்சி ஜெய்கிறாங்கலோ அதை நாமளும் செய்ணும். இல்ல அதுக்கும் மேல செய்யணும். அது எதுவா இருந்தாலும். இல்ல நம்மால் அவங்களோட போட்டி போட முடியாது என்பாள்.

அவள் இவனுடைய காரியதரிசியானாலும் அவனுடன் சரிசமமாக பேசுவாள். அவளுக்கு தன அழகு மேல் ஒரு கர்வம் இருந்தது. அவளுக்கு உலகத்தில் உள்ள அத்தனையும் அனுபவிக்க வேண்டும் என்ற அவா இருந்தது. ஆனால் அவளுக்கு அந்தளவுக்கு வசதியில்லை. ஜான் அவளை உரிமையுடன் பேச அனுமதித்த போது அவனுக்கு தன் மேல் காதல் போன்ற எண்ணம் இருப்பதாக நினைத்தாள். ஆனால் தன் அழகுக்கு பெரும் செல்வந்தனை கணவனாக அடைய முடியும் என்ற எண்ணம் அவளுக்கிருந்தது.

சில விருந்து நிகழ்சிகளுக்கு ஷீலாவை ஜான் அழைத்து செல்வதுண்டு. அன்றும் அப்படியே அழைத்து சென்றான். ஆனால் அது பிரம்மானடமாக இருந்தது. இந்தியாவின் மிக முக்கிய நிறுவனங்களின் பட்டியலில் இருந்த அந்த நிறுவனம் இன்று தன்னுடைய ஒப்பந்ததாரர்களை மகிழ்விக்க இதை ஏற்பாடு செய்திருந்தது. ஜானின் நண்பன் ஒருவன் இதில் நல்ல பதவியில் இருந்ததால் இவனையும் அழைத்திருந்தான்.

விருந்திற்கிடையே ஜான் அறிமுகப்படுத்தப்பட்டான். குமார சங்கரன் அந்த நிறுவனத்தின் இயக்குனரின் மகன். அவருக்கு ஜானை மிகவும் பிடித்துவிட்டது. ஜான் ஷீலாவை குமார சங்கரனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

இப்போதெல்லாம் ஷீலா ஜானின் அலுவலகத்திற்கு அவவளவாக வருவதில்லை. ஆம் அவள் குமார சங்கரனின் அலுவலகத்திலேயே அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது. அந்த நிறுவனத்தின் பல தொழில் ஒப்பந்தங்கள் ஜானுக்கு கிடைத்தன. அதன் காரணமாக பல நேரம் அந்த பெரிய நிறுவனத்தின் அலுவலகத்தில் தான் ஷீலா இருந்தாள். அவளுக்கு அவ்வளவு வேலைகள். ஜானும் அதை அனுமதித்தான்.

இப்போது ஷீலாவும், குமார சங்கரனும் நெருங்கி பழகுவதாக செய்திகள் வர ஆரம்பித்தன.

ஒரு நாள் ஷீலா ஜானிடம் தான் வேலையை துறப்பதாக கூறினாள். ஜான் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.. ஷீலா தான் குமார சங்கரனின் நிறுவனத்தில் சேரவிருப்பதை தெரிவித்தாள். அங்கிருந்தாலும் ஜானுக்கு உதவுவதாக கூறினாள். ஜானும் அவளுக்கு வாழ்த்துக்கள் கூறி அனுப்பி வைத்தான்.

ஷீலா சென்ற பின் ஜான், அவள் சென்ற வழியையே பார்த்து கொண்டிருந்தான். அவன் பார்வையில் எதோ ரகசியம் மறைந்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *