செல்போனில் அழைப்புமணி ஒலிக்க,அதை எடுத்தால் சுவாதி,அப்போது மறுமுனையில், சுவாதி வேமா கிளம்பு, அப்புறம் என்னால வர முடியாதுன்னு எந்த காரணமும் சொல்ல கூடாது,ஏதாவது சொல்லி பிளான்னா கேன்சல் பண்ண, நா செம்ம டென்ஷன் ஆயிடுவேன்,ம்ம் நா கிளப்பிட்டு தான் இருக்கேன் தியா, நம்ம இன்னைக்கு காட்டுக்குள்ள பிக்னிக் போறோம் அது உறுதி,அப்புறம் மனோஜ்,சாந்தி,கரண், சந்துரு எல்லாரும் கிளம்பிட்டாங்களா கேளு,எல்லாரும் கிளம்பிடாங்கா,நீ உன் வீட்டு வாசல்ல கிளம்பி நில்லு நாங்க எல்லாரும் கார்ல வர்றோம்,ஆன் தி வே என்றால்.அனைவரும் ஒரே காரில் காட்டுக்குள் பிக்னிக் சென்றனர்,காட்டிற்கு வெளியே காரை நிறுத்தி விட்டு,ஆறு பேரும் ஒரே ஒரு பேக் மட்டும் தோழில் மாட்டி கொண்டு காட்டின் உள்ளே சென்றனர்,அப்போது மனோஜ்,நா இந்த காட்டுக்குள்ள நிறைய தடவ வந்து இருக்கேன், ஆன உங்க கூட இது தான் முதல் தடவை,செம்ம ஜாலியா இருக்கபோது இந்த பிக்னிக் என்றதும்,தியாவோ இந்த காட்டுக்கு உள்ள போற, வெளிய வர வழி,உனக்கு நல்லா தெரியும் போல, ஆமா தியா,கூகுள் மேப் கூட தப்பா வழி காட்டும்,ஆனா இந்த மனோஜ் எப்பவுமே சரியான வழி தான் காட்டுவேன்,உடனே சாந்தி ஓவரா சீன் போடாத என்று கூற,சரியா சொன்ன சாந்தி என்றால் சுவாதி.அப்பொழுது கரண்,வாவ் இந்த இடம் ரெம்ப அழகா இருக்கு என்றான்,உடனே சந்துரு,ஆமா அழகா இருக்கு, எல்லா இடத்தையும் என் கேமராலா கேட்ச் பண்ணுறேன் பாரு என்று கூற,அதற்கு தியா ஆமா இவர் பெரிய போட்டோ க்ராஃபெர் பாரு, எல்லா இடத்தையும் கேப்ச்சர் பண்ணாம இந்த இடத்தை விட்டு போக மாட்டாரு என்று கூறி சிரிந்தால்.உடனே சுவாதி,வாயை மூடு தியா,அவனை கிண்டல் பண்ணுறதே உன் வேலையா போச்சு என்றதும்,சாந்தி கால் தடுமாறி கீழே விழ,அப்போது கரண்,ஏ சோடாபுட்டி கண்ணாடி போட்டு கூட கண் தெரியலையா என்று நக்கலாக கூற,மனோஜ் சாந்தியை தூக்கிவிட்டு சரி எல்லாரையும் கலாய்க்கிறத விடுங்க ஃபிரண்ட்ஸ்,நம்ம நடந்து ஒரு லேக் கிட்ட வந்துட்டோம் அங்க பாருங்க என்றான்.அனைவரும் அந்த லேக்கில் விளையாடினர்.
பின் அந்த லேக் அருகில் சாப்பிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினர்.ஏ மனோஜ்,இங்க அணிமல்ஸ் அவ்வளவா காணோம் என்று சுவாதி கூற,அவனோ லூசு,,அது எல்லாம் காட்டுக்கு அந்த பக்கம் தான் இருக்கும்,நம்ம அந்த பக்கம் போக அனுமதி கிடையாது,ஏன் 6 அனிமல்ஸ் இங்க இருக்குறது பத்தாதா என்றதும்,அனைவரும் மனோஜை முறைத்து பாத்தனர், அப்போது கரண் ஹெலோ கூகுள்,அடுத்து நம்ம எங்க போறோம் என்றதும்,உடனே மனோஜ் அது சஸ்பென்ஸ் என்று சிரித்தான்,கால் வலிக்குது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போவோம் என்றால் சுவாதி,அதற்கு சந்துரு,அதான் நா அப்பவே சொன்னேன், வயசான காலத்துல நீ ஏன் வரணும்னு, உனக்கு எல்லாம் காட்டுக்குள்ள பிக்னிக் கேக்குதா பாட்டி என்று நக்கலாக பேசினான்,அனைவரும் சிரித்தனர், உடனே சுவாதி,நா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்,நீங்க போங்க என்று கோவமாக கூறி அமர்ந்தாள்,சரி சரி கோவப்படாத, எல்லாரும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று சாந்தி கூற அனைவரும் அமர்ந்தனர்,அப்போது கரண்,நம்ம கிட்டத்தட்ட 2 மணி நேரமா நடக்குறோம்,நீ சொன்ன இடம் எங்க டா? மனோஜ் காணம் என்றான்.மனோஜும் நானும் அதை தான்டா தேடுறேன்,லேக் தாண்டி ஒரு அழகான இடம் ஒன்னு இருந்துச்சு அதை காணோம் என்றதும்,அனைவரும் மனோஜை பார்த்தனர்.என்னடா சொல்லுற?அப்போ நம்ம தப்பான வழியில வந்துட்டோமா? என்று தியா கூறியதும்,அனைவரின் கண்களிலும் பயம் தெரிய ஆரம்பித்தது.
உடனே சந்துரு தனது மொபைலை எடுத்து பார்க்க அதில் சிக்னல் இல்ல, அப்ப தான் அனைவரும் நம்ம தப்பான ரூட்ல வத்துட்டோம்னு உணர்ந்தார்கள். அப்போ சாந்தி,இப்ப என்னடா பண்ணுறது? ஈவ்னிங்குள்ள நா வீட்டுக்கு போல எங்க அப்பா என்னை கொலை பண்ணிடுவாறு என்றால்,உடனே மனோஜ் யாரும் கவலைபடாத்திங்க, நம்ம சரியான வழிய கண்டுபுடிச்சு போயிரலாம் என்று கூற,அப்போது கரணோ, முதல்லையே சொல்ல வேண்டியது தானே நம்ம தப்பான ரூட்ல போறோம்னு இப்போ இவ்ளோ தூரம் வந்ததுக்கு அப்புறம் சொல்லுற என்று கோவமாக பேச,சத்தியமா எனக்கும் நம்ம தப்பான வழியில போறோம்னு தெரியல, அந்த லேக் பக்கத்துல கொஞ்ச தூரம் போனா ஒரு அழகான இடம் இருக்கு அங்க தான் போலாம்னு நினைச்சேன், ஆனா வழி மாரி வத்துட்டோம்னு இப்ப தான் தெரியுது என்றான் மனோஜ்,சரி விடு, இங்க இருந்து எப்பிடி தப்பிக்கிறது அதை மட்டும் எல்லாரும் யோசிங்க,மனோஜ் சொன்னபடி நம்ம வந்தது தப்பான வழினா,நம்ம இப்போ காட்டுக்குள்ள ரெஸ்ரிக்டட் பகுதியில் இருக்கோம், இருட்டுறதுக்குள்ள வழி தேடனும், இல்லனா,நம்ம தான் காட்டுகுள்ள இருக்குற அந்த அணிமல்ஸ்க்கு டின்னர் என்றால் தியா.அதனது கேட்ட அனைவரும் வேகமாக எழுந்து நடக்க தயாரானார்கள். அப்போது சந்துரு எல்லாரும் தனி தனியா போவோம்,அந்த லேக் யார் கண்ணுல பட்டாலும் திரும்ப இந்த இடத்துக்கு வாங்க,கண்டு புடிக்க முடியாளனாலும் சரியா 2 மணி நேரத்தில் இங்க இருக்கணும் இது தான் நம்ம மீட்டிங் ஸ்பாட்,, இருட்டுறதுக்குள்ள நம்ம வழிய கண்டுபிடிக்கணும் என்றான்,சுவாதியோ லூசா டா நீ?நம்ம பலமே நம்ம ஒற்றுமை தான்,எல்லாரும் தனி தனியா போயிட்டா யாருக்காவது ஏதாவது ஆயுடிச்சுனா?என்ன பண்ணுறது எல்லாரும் சேந்தே தேடுவோம், அந்த லேக் கண்டுபுடிச்சா மட்டும் போதும் சுலபமா நம்ம கார் இருக்குற இடத்துக்கு போயிடலாம்,சோ எல்லாரும் சேந்தே போவோம் என்று கூற,அனைவரும் ஒத்து கொண்டனர்.
சிறிது தூரம் சென்றதும் தண்ணீர் சத்தம்கேட்க அப்போது மனோஜ் நம்ம அந்த லேக்க கடுபிடிச்சுட்டோம் என்று கத்த,சாந்தி அவன் வாயை பொத்தினால்,என்ன ஆச்சு?சாந்தி என்று தியா கேட்க,அங்க தூரத்துல கொஞ்சம் நல்லா பாரு, அது நம்ம முதல்ல பாத்த லேக் கிடையாது,இது வேற, அங்க யானை கூட்டமே தண்ணி குடிக்குது என்று மெல்லமா கூற,அனைவரும் ஒளிந்து நின்று பார்த்தனர்,உடனே சுவாதி மயங்கி விழுந்தால்…..தண்ணீர் துளிகளை கரண் அவள் மீது தெளிக்க மயக்கம் தெளிந்து கண் விளித்தால் சுவாதி,அப்போது சந்துரு, பேச்சு மட்டும் நல்லா பேசு யானைய பாத்ததுக்கே மயங்கி விழு,ஒரு வேளை சிங்கம்,புலி பார்த்த ஹார்ட் அட்டாக் தான் போல என்றான்,சுவதியோ, ரெண்டு மூணு யானை நா பரவால, அங்க முப்பது நாப்பது யானை இருக்கு,நா இது வரை அந்த மாரி பாத்ததே இல்ல என்றதும்,உடனே சாந்தி,நா வண்டலூர் ஜூ டெய்லி போறேன் பாரு என்றால்.அதற்கு மனோஜ்,போதும் போதும் எல்லாரும் கிளம்புங்க, நம்ம முதல்ல சேவ் ஆனா இடத்துக்கு போனும் என்றான்,அப்போது தியா,டேய் கூகுள் மேப் உனக்கு இருக்கு டா வெளிய போன அப்புறம் என்று கூறினால்…. சிறிது தூரம் அனைவரும் நடந்தனர்……
அனைவரும் வழி தெரியாமல் குழம்பி நிற்க,சாந்தி அந்த காட்டுக்குள் ஏதோ ஒன்றை பார்த்து அப்பிடியே சிலையாய் நின்றாள்.சாந்தி அவ்வாறு நிற்பதை பார்த்த அவள் நண்பர்கள்,என்ன இவ பாக்குற என்று அந்த பக்கம் பார்த்தனர்,உடனே அவர்களும் சிலை போல அப்பிடியே நின்றனர்.அங்கு ஒரு சிங்கம் வேட்டையாடிய மானை சாப்பிட்டு கொண்டு இருந்தது…,பின் வேறு பக்கம் சென்றது,,,அதை கண்ட அவர்களுக்கு பயம் தலை முதல் கால் வரை தெரிந்தது.அந்த அதிர்ச்சியில் இருந்து கொஞ்ச நேரத்தில் வெளிய வந்தனர், அவர்களிடம் போதுமான அளவு தண்ணி,உணவு ஏதும் இல்லை,கொண்டு வந்த அனைத்தும் தீர்ந்தது,இனிமேல் நடக்க அவர்கள் உடம்பில் தெம்பும் இல்ல, ஆதலால் அவர்கள் எங்கும் செல்லாமல் இருக்கும் இடத்தில் அமர்ந்தனர்.
அப்பொழுது மனோஜ்,சாரி பா எல்லாத்துக்கும் காரணம் நா தான்,இப்ப என்ன பண்ணுறதுனு எனக்கே தெரியல என்றதும், தியாவோ லூசு விடு பாத்துக்கலாம்,உள்ள வற வழி இருக்கும்போது, வெளிய போக வழி இருக்கும் அத நம்ம கண்டுபுடிப்போம் என்று கூறும் போது தான் அவளுக்கு சந்துரு போட்டோ எடுத்தது நியாபகம் வர, அதை எடுத்து பார்த்தால்,அதில் அந்த லேக் பக்கத்துல ஒரு வகையான பூக்கள் பூத்து இருந்துச்சு,அது ரெம்ப வித்தியாசமான பூ,அதை கண்ட உடனே இந்த மாரி பூ நாமா வந்த இந்த வழில ஒரு இடத்துல கூட இல்ல என்று கூற, அப்போது மனோஜ் இந்த பூக்கள் கிழக்கு பக்கம் இருக்குற காட்டு பக்கம் தான் பூக்கும்,எனக்கு நல்லா தெரியும்,அப்போ நம்ம கிழக்கு பக்கம் போன அந்த பூக்கள் இருக்குற வழியில் போனாலே அந்த லேக் கண்டுபுடிச்சு சுலபமா நம்ம கார் கிட்ட போலாம் என்றான். அனைவருக்கும் அப்போது தான் ஒரு நம்பிக்கை வந்தது.காட்டுக்குள்ள ஏதோ சத்தம் கேட்க அனைவரும் சத்தம் வந்த பக்கம் போயி பார்த்தனர், அங்கு ஒரு பத்து பேரு கையில் கண் வைத்து நின்றனர்,அவர்கள் வேட்டையாட வந்தவர்கள்,உடனே சுவாதி இது சட்டபடி தப்பு என்று அவள் நண்பர்களிடம் கூற,கரணோ, இதை அவன் கிட்ட போய் சொல்லு கையில இருக்குற கண் வச்சு ஒரே போடு தான் நீ காலி என்றான்.இவர்கள் மறைந்து கொண்டு அந்த வேட்டை காரர்கள் எங்கு போறாங்கன்னு பாத்தார்கள்.பின் தொடர்ந்து சென்றார்கள். திடீரென்று சந்துரு,அவங்களை நம்ம பின்தொடர வேண்டாம் அது ரிஸ்க்னு எனக்கு தோணுது என்றான்,மனோஜூம் சிறிது யோசித்து விட்டு ஆமா அது தான் சரி என்று கூற,அனைவரும் அந்த இடத்தை விட்டு கிழக்கு பக்கம் நோக்கி சென்றனர்,அந்த பூக்கள் தெரிய ஆரம்பித்தனர், அப்போதுதான் அனைவருக்கும் உயிரே வர ஆரம்பித்தது,பின் சிறிது நேரத்தில் அந்த பழைய லேக் தெரிய ஆரம்பித்தது,அதன் மூலம் பழைய படி கார் இருக்கும் இடத்தை அடைவதர்க்குள் லேசாக இருட்ட ஆரம்பித்தது,கார் இதுக்கும் இடத்திற்கு அனைவரும் வந்தனர்,அப்போது தியா போனில் ஒரு வீடியோவை பார்த்தால், அதில் அந்த வேட்டைக்காரர்கள் மிருகங்களை வேட்டையாடியது இருந்தது,அதனை கண்ட சுவாதி, வேணாம் தியா இதை அழிச்சுடு என்றதும்,உடனே கரண் அதை வாங்கி கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போயி நடந்தது என்ன என்று விரிவாக கூற,போலீஸ் குற்றம் புரிந்தவர்களை கைது செய்தது,,போலீஸ் அந்த ஆறு பேருக்கும் பாராட்டுகள் தெரிவித்தனர். அப்போது மனோஜ் நா மட்டும் வழிய மாத்தி காட்டலன இந்த பாராட்டு எல்லாம் கிடச்சு இருக்குமா?என்று தன்னை பற்றி பெருமையாக பேச அவன் நண்பர்கள் அனைவரும் மனோஜை போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினர்.பின்னர் அனைவரும் சிரித்து பேசி,மகிழ்வாய் வீட்டிற்கு சென்றனர்.
பிஜி