(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
அத்தியாயம் பதின்மூன்று
பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் முதலாவது உத்தியோகபூர்வமான செயலவைக் கூட்டம் அமரதாசவின் ல்லத்தில், திறந்த வெளி மண்டபத்தில் கூடியது. அங்கு ரார்ப்பண கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரிலிருந்துசில விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
மிக முக்கியமான குளக்காட்டுப் பிரதேச மாய்மை தொடர் பாக முன்பு சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் அனைத்திற்கும் உறுதுணையாக சங்கத்தின் முத்திரை பதியப்பட்டது.
இரு கிராமங்களும் முழுமனதுடன் இணைந்துதான் குளக் காட்டுப் பிரதேசத்தைப் பகிர்ந்து காடு வெட்டி விவசாயம் செய்ய முன்வந்தது. அதை சுமுகமான முறையில் தீர்ப்பதில் எந்தவிதத் தடையும் இல்லை. வேண்டுமென்றே குழப்பியடிக்க விசமிகள் போட்ட ‘பெட்டிசன்’ செல்லாக் காசாகிவிட்டது.
ஒரு தனி நபரோ சில கிராமவாசிகளோ, சில கிராமங்களே T என்றில்லாமல் ஒரு மாவட்டத்தின் அல்லது ஒரு பெரும் பிர தேசத்தின் முழு விவசாயக் கிராமங்களுமே ஒன்றிணைந்து முன்வைக்கும் கோரிக்கையே, நியாயமான கோரிக்கையே இந்தக் குளக்காட்டு எல்லைப் பிரச்சினை என்றாகி விட்டது.
மிகப் பழைய காலகட்டங்களில் ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங் கள் சொந்தமாக இருந்தன என்பது உண்மைதான். ஆனால் சனத்தொகை பெருகப் பெருக நிலம் பெருகவில்லையே. விவசாயத்திற்கேற்ற நிலத்தட்டுப்பாடும் வளர்ந்துகொண்டே வரு கிறது. எதிர்காலம் எப்படி அமையப் போகுதோ…?
வயது வந்த எல்லா விவசாயிகளுக்கும் நிலம் உண்டு என்று சொல்வதற்கில்லை. பிழைப்புக்காக அவன் நிறைய வசதியுள்ள வர்கள், வயற்காணியுள்ளவர்களுக்கு கூலி வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வருகிறது. இதனால் போதி 4 வருமானமின்றித் தவிக்கிறான். அதே நேரத்தில் விவசாயப் பணக்காரர்கள் ஏராளமான வயல்களையும் காணிகளையும் வாங்கி… வாங்கி மென்மேலும் சொத்து சேர்த்து அனுபவிக் கிறார்கள். அவர்களது வயல் சேனைகளில் கூலியாட்களே பெரும்பாலான விவசாயப் பெருமக்கள்.
நித்தியமாக நிலத்தைக் கொத்திக் கொண்டிருப்பவர்களுக்கு சொந்தமான நிலம் இல்லை.
உழைப்பு இருந்தும், திறமை இருந்தும் மண்ணைப் பொன் னாக்கும் கலை தெரிந்தும் எல்லாம் வசதியுள்ளவனின் வயல் களுக்கே பிரயோசனமாகிறது. மிகச் சொற்ப அளவு காணி வைத்துக் கொண்டிருப்பவனும் காலத்தோடும் காலநிலை யோடும் போராடினாலும் அவ்வருடத்திற்குத் தேவையான நெல்லை மூட்டை கட்டிப் பத்திரப்படுத்த அவனால் முடியாது. அதே நேரத்தில் வசதியுள்ளவன் வீட்டில் ஒரு களஞ்சியமே கிடக்கும்.
ஒரு சாதாரண கமக்காரனின் முழுவருட வேட்டையும் கால் வருடகஞ்சிக்கேனும் கை கொடுப்பதில்லை. நாளாந்த உணவை உற்பத்தி செய்யும் உழவனின் பாடு இதுதான்.
“நாச்சியாதுவ’அம்மையார் போல் காணிகளை வாரிவழங்க இன்று எவரும் இல்லை. எங்கள் மாமேதை ஷேக் அப்துல் காதிர் ஜீலானி கூறியது ஞாபகம். “இந்த உலகமே எனது கரங்களில் வந்துவிட வேண்டும். அனைத்தையுமே பசித்தோருக்காக உணவாய் அளித்திட வேண்டும் என நான் ஆவல் கொள்கிறேன்…” என்னும் பொன்னான சிந்தனை இன்று யாருக்கு வரும்?
கிராமங்களில் அளவுக்கு அதிகமாக விவசாயக் காணி வைத் திருப்பவர்கள் அறவே காணி இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும். அவர்கள் இன்னும் இன்னும் காணிகள் வாங்குவதை தடை செய்ய வேண்டும்.
சேனை கொத்தி, மிளகாய், குரக்கன், இறுங்கு, மரவள்ளி போன்றவை பயிரிடுவது அவனுக்கு சிலவேளைகளில் கைகொடுக் கும். கிராமவாசி அல்லாதவர் கண்களுக்கும் மனத்துக்கும் இவை புலப்படுவதில்லை. அவர்களுக்கு வன்னிப் பிரதேசம் என்று மட் டுந்தான் தெரியும். அடர்ந்த காடுகளில் ஆங்காங்கே அபிவிருத்தி யடையாத குக்கிராமங்கள் நிறைய உள்ளன. ஆண்டாண்டு காலமாக அவை பிரச்சினைகளுக்கு மத்தியில் அல்லலுறுகின்றன.
அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் அடர்ந்த காடுகளால் மூடப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் ஆக்கபூர்வமாக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டது.
எல்லாமே காடும் காடுசார்ந்த நிலத்தின் மைந்தர்களுக்காகத்தான்.
அறுவடைக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை இனி மேலும் அறுத்து சூடு மிதித்து துண்டித்துவிட முடியாதவாறு அடித்தளம் ஆணித்தரமாக அமைக்கப்பட்டு வருகின்றது. சுருக்க மாகச் சொல்லப் போனால் பி.வி.மு.ச மிக்க நிதானமாக வெற் றிப் பாதையில் செல்லத் தொடங்கி விட்டது.
இக் கட்டத்தில் பஹார்டீன் மாஸ்டர் ஹலீம்தீனுக்கு எப் பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஓர் ஆலோசனையை சொல்லிவிட்டுப் போயிருந்தார். அவன் அதை அமரதாசவுக்கும் காதுகளில் போட்டு வைத்தான்.
“சகல விவசாயிகளினதும் உள்ளங்களில் பி.வி.மு.ச பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை வளர்ந்து மென்மேலும் அங்கத்துவம் பெருகி, வளரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எக்கட்டத்திலும் அதன் இலட்சியப் பாதையில் தடைக்கற்கள் தோன்றிவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும். பி.வி.மு.சவுக்கு ஒரு மானுட நேயக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கு. அது எப்பொழுதும் அரசியல், கட்சிகள், இனம், மதம், மொழி, அந்தஸ்து, பாராது பிரதேச விவசாயிகளுக்காகவே போராடும். ஆனால் தீவிரம் துளி கூட இருக்கக்கூடாது. அது எவ்வளவுதான் நியாயம் நம்பக்கம் இருந்தாலும்,எம் போக்கு நிதானப் போக்கு, எடுத்ததற்கெல்லாம் ஆக்ரோஷமாகவும் அழுத்தமாகவும் கோரிக்கைகள் விடுத்துக் கொண்டு, வளர்ந்து வரும் நம் சங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ளாமல் விடயங்களை மிக நிதானமாக ஆற, அமர பரிசீலிக் கப்பட்டு, அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.நமக்குத் தேவையில்லாத விடயங்களுக்கு மௌனம் சாதிப்பது சங்கத்தின் பெயருக்கு நல்லது… ”ஓ… இது மிகவும் அநீதியான செயல்… எமது சங்கம் இதற்கு முன்னின்று போரா டும்” என்று அவசரப்படுவதை விட ஏதோ… பி.வி.மு.ச. முயற்சி செய்து பார்க்கும்… என்று மிகவும் நிதானமாக செயற் பட வேண்டும். எப்போதும் இதையே ஒரு தாரக மந்திரமாக வைத்துக் கொண்டால்… பக்குவப்பட்ட தலைவர்களாய் ஆகி விடுவீர்கள்… ஒரு காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் களுக்கும் ‘கல்வி’ மறுக்கப்பட்டது. ஓரளவு படித்து கையொப் பம் போடத் தெரிந்தால் போதும் என்ற போக்கு இன்று இல்லை. எமது கிராமங்களுக்கும் ‘கல்வி’ வந்துவிட்டது. கண் திறந்து, சிந்தனை வளர்ந்து வருகிறது… அதன் ஒரு வளர்ச்சிக் கட் டம்தான் பி.வி.மு.ச. வின் தோற்றம். நான் போய் பக்குவப்பட்ட மலையகத் தொழிற்சங்க வாதிகளைச் சந்தித்து, ஒரு சங்கத்தின் விரிவான நடைமுறைகளை வரைந்து கொண்டு வருவதோடு, சில பெரியார்களின் நூல்களையும் நூலகத்திற்குக் கொண்டு வருவேன். அவையும் எமக்கு வழிகாட்டும்”
பஹார்டீன் மாஸ்டரின் நீண்ட அறிவுரை இளம் தலைவர் களான ஹலீம்தீனுக்கும் அமரதாசவுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அவர்கள் சில வேளைகளில் ஆவேசமாக கருத்துக்கள் தெரி வித்தாலும் அவற்றை எழுத்தில் வடித்து சமர்ப்பிக்கும் போது, மிக்க பணிவுடன் எளிமையாகத்தான் சமர்ப்பிப்பார்கள்.
பண்டார கிராமசேவகரின் வேண்டுதலுக்கு ஏற்ப ‘குளக் காட்டு மாய்மை’ தொடர்பாக வலியுறுத்தி கடிதம் போட்ட போதும், நன்கு சிந்தித்து சொற்பிரயோகத்தில் கவனமாக இருந்தார்கள்.
செயலவைக் கூட்டம் தேநீருக்குப் பின் மீண்டும் செயற்பட் டது. சற்று நேரத்தில் நிர்வாக உத்தியோகத்தர்கள் எல்லாம் கலைந்த பின்னர், நந்தாவும், யசவத்தியும் “பிரதேச விவசாயிகள் முன்னேற்றச்சங்கம்” என்று சாம்பல் நிறத்தில் அழகாக அச்சிடப் பட்ட ‘லெட்டர்ஹெட்’ தாள்களில் சிங்கள மொழி மூலம் ‘ரைப் செய்தார்கள். அமரதாசவுக்கும் உறவு முறை இல்லாத நந்தாவும், யசவத்தியும் சம்பள அடிப்படையில் சங்கத்தின் எழுதுவினை ஞர்களாக தெரிவு செய்யப்பட்டது திருப்தியாக இருந்தது.
பஹார்டீன் மாஸ்டர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தபின் நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.
ஹலீம்தீன் அக்கடிதத்தின் சாராம்சத்தை மிகச் சுருக்கமாக அமரதாசவுக்கு மொழிபெயர்த்து மகிழ்ந்தான்.
‘ஒரு விவசாயியின் பிரச்சினைகள், விவசாயியின் பிள்ளை களுக்குத்தான் நன்கு புரியும். அதுவும் விவசாயியின் பிள்ளைகள் நன்கு கல்வி கற்றிருந்தால், அதைவிட அதிர்ஷ்டம் வேறு எதுவும் இருக்காது.
கற்றபிள்ளைகள் தான் நல்ல வழிகாட்டிகளாக இருக்க முடி யும். அந்த வகையில் நீங்களும் அமரவும் வழிகாட்டிகள் மட்டு மல்ல தலைமைத்துவத்துக்கும் பொருத்தமானவர்கள். கல்வித் துறையில் நாளைய பட்டதாரிகள். என்னைப் போன்று நியமனம் கிடைத்ததும் சொந்த ஊரையும் மாவட்டத்தையும் மறந்து வெளி மாவட்டங்களிலேயே சதாகாலமும் இருந்து விடாமல், ஊருக்கும் பிரதேசத்திற்கும் சேவை செய்யும் வாய்ப்பும் கிடைத்தால் அதை மகத்தான தியாகம் என்றுதான் சொல்ல வேண்டும்…” என்று பாராட்டியிருந்தார் பஹார்டீன் மாஸ்டர்.
மணி மணியான பொன் மொழிகளை வாரி வழங்குவதில் அவர் முன் நிற்பவர். அமரதாசவும் ஹலீம்தீனும் கூட்டாக கடிதம் எழுதினார்கள். “பார்த்த அளவில் எத்தனையோ சங்கங் களுக்கு ஆலோசகர்கள், அல்லது போசகர்கள் என்று போடு கிறார்கள். ஆனால் அவர்களிடமிருந்து எந்த ஒத்துழைப்பும், ஆலோசனையும் கிடைப்பதில்லை. எல்லாம் வெறும் பெயரள வில் தான். அவர்களைக் காண்பதே அபூர்வம்.
உங்களுக்கே தெரியும் சேர். எத்தனையோ சங்கங்கள் தோன்றி யுள்ளன. செயலாளர்கள், பொருளாளர்கள் பெருந்தொகையான பணத்தை சேர்க்கிறார்கள். செயற்குழுக் கூட்டம். என்று எல்லா ரையும் அழைத்து, ஏதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பிடுவார்கள். உணர்ச்சிவசப்பட்டு வாக்குவாதப்படுவார்கள். “சங்கமும் வேண்டாம்… ஒன்றும் வேண்டாம்…..’ என்று உரக்கக்கத்திவிட்டு வெளிநடப்பு செய்துவிடுவார்கள்….. சேர்ந்த தொகைக்கு கணக்கு வழக்கு ஒன்றும் இல்லை. செயலாளர், பொருளாளரின் நோக்கம் நிறைவேறிவிடும்….. இப்படி எத்தனையோ…. எத்தனையோ….
இந்த நிலையில் நாம் பி.வி.மு.ச. வை தொடங்கி மக்களின் பூரண நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். மிகப் பொருத்தமாக உங்களை தெரிவு செய்துவிட்டோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனையும், சேவையும், பங்களிப்பும் தேவை. நீண்ட காலமாக நீங்கள் எங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கிய மாணவர்கள் பலர் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். சொல் லப்போனால் பி.வி.மு.ச.வின் அத்திவாரமே நீங்கள்தான். நீங்கள் மட்டும் மீண்டும் எங்கள் பிரதேசத்திற்கு வந்துவிட்டால் தலைமைப்பீடம் உங்களுக்காகவே திறந்திருக்கும்.
இதை வாசித்து, ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் பஹார்டீன் மாஸ்டர் மறுமொழி எழுதியிருந்தார்.
பி.வி.மு.ச.வுக்கு பங்களிப்பு என்றும் கிடைக்கும். ஆனால் தலைமைப் பதவிக்கு நான் பொருத்தமில்லை. அதனால் பிரச் சினைகள் தோன்ற இடமுண்டு. அந்த மண்ணில் பிறந்த ஒருவ ருக்குத் தான் அந்த மண்ணின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியும். கொடுக்கவும் வேண்டும். நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. தலைமைத்துவத்துக்கு வேண்டிய தனித் தன்மையும், சிறப்பியல்புகளும், உங்களிடமும், அமரவிடமும் உண்டு. கல்வியும், செயல்திறமையும் நேர்மையும், பெருந் தன்மைகளும் உங்கள் இருவரிடமும் உண்டு. இந்த நேரத்தில் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. எமது மிக அயல் நாட்டின் பழம் பெரும் தலைவர்களில் ஒருவர் பிரச்சினைக்குரிய விடயங் களுக்கு, நடவடிக்கை அல்லது பங்களிப்பு செய்யாமல் பிற் போட்டு விடுவார். ஒருவிடயத்தை மீண்டும், மீண்டும் பிற் போட்டு, ‘நடுநிலை’யைப் பின்பற்றி காலம் தாழ்த்தியதால், பின்னர் நாடு பெரும் பிரச்சினைகளில் முட்டிமோதிக் கொள்ளா மல் தப்பியது. ஆழ்ந்த ஞானமும், விவேகமும், சாணக்கியமும் இருந்தால்தான் இது சாத்தியமாகும்…… அதற்காக வேண்டி எல்லா விடயங்களையும் பிற்போடுங்கள் என்று நான் கூற வில்லை. காலப் போக்கில் தூரதிருஷ்டிப் பார்வையில் எல்லாம் வெளிச்சமாகும். அறிவோடு அனுபவமும் சேர வேண்டும்.
கடந்த காலங்களில் ஆவேசப்பட்டு கிளர்ந்து எழுந்ததனால் தான் பிரச்சினைகள் முற்றி வெடித்தன…… ‘குளக்காட்டுப் பிரதேச மாய்மை விடயத்தில் அவசரப்படாதீர்கள். எனக்கு பண்டார் கிராம சேவகரிடம் நம்பிக்கை இருக்கிறது. எல்லாம் வெற்றியாக முடியும் என்றும் துணிந்து கூறுவேன்…
இது பஹார்டீன் மாஸ்டர் இறுதியாக எழுதிய கடிதத்தின் ஒரு முக்கிய பகுதி.
“அவசரப்படக்கூடாது”
“சிக்கலான விடயங்களைப் பிற்போட வேண்டும்”
“ஏதோ… பி.வி.மு.ச. முயற்சி செய்து பார்க்கும்…… போன்ற வாசகங்களை உள்வாங்கிக் கொண்டு, சிரமப்பட்டால் நிச்சயம் தமது முயற்சிகளில் வெற்றியடையலாம் என்று அவர்களால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக எந்த ஒரு பிரேரணை யையும், முன்வைத்தாலும் அதற்குப் பின்னால், சிங்கள முஸ் லிம் இணைப்புடன் ஒரு சக்தி வாய்ந்த சங்கம் பின்னின்று குரல் கொடுக்கிறதே….. என்ற உணர்வு நியாயமான கோரிக்கைகளை தட்டிக் கழிப்பதற்கு பின்வாங்கும்.
ஒட்டுமொத்தமாக, அதிகாரமுள்ளவர்களுக்கு, ஒரு விடயத் தில், உடனடியாக இல்லாவிட்டாலும் சற்று பொறுத்து, ‘கவனித்து ஆவன செய்ய வேண்டும்’ என்று ஒரு பிரக்ஞை தோன்றிவிடும்.
மூத்த தலைவர்களான கிரிபண்டாவும் அப்துல் மஜீதும் கூட்டாக ஒரு கருத்தைச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதுவும் நிதிவிடயமாகத்தான். எல்லா கணக்குப் பதிவுகளும் ஒழுங்காக இருப்பதுடன் கணக்குப் பரிசோதனையும் அறிக்கையும் இருக்க வேண்டும். எமது பி.வி.மு.ச.வைப் பொறுத்தவரையில் கிரா மங்களில் அங்கத்தவர்களாகச் சேர்பவர்கள் தமது சந்தாப் பணத்தை பிரதிநிதிகளிடம் சேர்ப்பார்கள். அவர் பொருளாள ரிடம் ஒப்படைத்த பின்னர் அவர் வங்கிக் கணக்கில் போட்டு விடுவார்… மூன்று இடங்களில் பரிசீலிக்கப்படுவதால் பிரச் சினைகள் எழாது. எனினும் எமது கிராமங்களில் சங்கங்கள் விலாசமற்றுப் போனதற்கு நிதி வசூல் காரணமாய் இருந் துள்ளதை நாம் கண்டிருக்கிறோம் என்பதனாலேயே நாம் குறிப்பிடுகிறோம்.
சங்கத்தின் வளர்ச்சிக்கும் அதன் நற்பெயருக்கும் நிதியின் கணக்குப் பதிவுகள் மிக முக்கியம் என்பதையே அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று மாலை ஹலீம்தீனும் நண்பர்களும் முக்கிய அலுவலாய் அனுராதபுரம் போய் திரும்பி யதும், ஹலீம்தீனுக்கு சில முக்கிய கடிதங்கள் எழுத வேண்டி யிருந்தது. வழக்கம் போல் மஃறிபுக்குப் பின் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர். சமது விதானையும், சவாலும் இரவு ஏழுமணிக்கெல்லாம் இராச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்தார்கள். சேகுவின் வீட்டில் அனைவரும் ‘நிக்க வெவ’ கிராமத்திற்கு ‘விருந்துக்கு’ போயிருந்தார்கள். ஆகவே ஹலீம் சேகுவை இராச் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான். சமதுவிதானை, சவால், யாசீன், அன்சார்டீன், முபாறக் ஆகிய ஐவரும் வெளியில் அலுவலக அறையில் உள்ள நாற்காலிகளை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, பளிச்சென மின்னும் அந்த சிவப்பு நிற சிமென்ட் தரையில் அமர்ந்து அரசியல் பேசிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் சேகுவும் ஹலீம்தீனும் சாப்பிட்டு விட்டு வந்து சேர்ந்து கொண்டார்கள்.
சமதுவிதானை ஒரு முக்கிய பிரச்சினையை முன் வைத்தான். “குளக்காட்டுப் பிரதேசத்தில் துப்பரவாக காடுவெட்டி வெளிசாக்கியதோட, வேலைகள் நின்டு போனதால, மறுகவும் பத்தைகள் தழைக்க தொடங்கிக் கிடக்கு….. இந்த வருஷம் குளத்த திருத்தி விவசாயம் செய்யாட்டா பத்தைகள் காடாகி டும்…. பொறகு பத்தைக்காடு வெட்ட பெரிய செலவாகும்…..
“அதப்பத்தி நான் பண்டார ஜீ. எஸ் கிட்ட கதைச்சபோது… ஒன்டுக்கும் கவலைப்படத் தேவையில்ல என்றார். இந்தச் சிக்கல் ஒரு முடிவுக்கு வந்ததும் காடு வெட்டின செலவும்… கிடைக் குமாம். குளமும் திருத்தப்படுமாம். இன்னும் காலம் கிடக்கு. அடுத்த பருவ மழைக்கு விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு…” என்றான் ஹலீம்தீன்.
“அப்படி ஒரு உறுதிப்பாடு இருந்தா சரி…. இல்லாட்டா பங்குதாரர்களுக்கு நாம பதில் சொல்லியாக வேணும்.
“பங்குதாரர்கள் என்றா யார்? அவர்களும் கிராமவாசிகள் தானே. எப்படியும் நஷ்டம் வரப்போரதில்லையே” என்றான். சேகு.
“ஓம்… அவகளுக்கு உண்மை நிலை தெரியீந் தானே” என்றான் முபாறக்.
“டீ.வியில் சிங்கள நாடகம் தொடங்கப்போகுது…. பாக்கப் போறீங்களா…..? என்று ஹலீம்தீன் கேட்டான்.
“…இன்றக்கி பார்க்க இல்ல….” என்று சேகுவும் யாசீனும் ஏக காலத்தில் சொன்னார்கள்.
ஜெஸ்மினின் அக்கம் பக்கத்து தோழிகளும், வேறு பெண்க ளும் வீட்டின் உள் அறையில் குழுமியிருக்கிறார்கள். அடுத்தாற் போல் வீட்டின் நடு அறைக்குப் போவதாயிருந்தால், நிச்சயம் பெண்கள் வெளியேறிவிடுவார்கள். அவர்களுடைய ரசனையை நாம் ஏன் கெடுப்பான்…..? என்பதை ஊகித்துத்தான் சேகுவும் யாசீனும் டீ.வி. பார்க்க மறுத்திருப்பார்கள்.
“ஹலீம் எனக்கொரு விருப்பம். சில நல்ல தரமான தமிழ் மலையாள கெசற் பீஸ்களைக் கொண்டுவந்து பள்ளிக்கூட மண்டபத்தில் ஒரு டீ.வி.யை போட்டுக்காட்ட வேணும்…” என்றான் சேகு.
“நல்ல யோசனைதான். நீயே பொறுப்பெடுத்து செய்ய லாம்…. மாதத்திற்கு ஒரு நல்ல சினிமா…”
“உயர்தரமான படங்களைக் காட்டும் போது எங்கட ஆக்க ளின்ற ரசனையை திசை திருப்பி உயர்த்திடலாம். ஊரிலயும் ஐந்தாறு டீ.வி.செற்கள் தாம் கிடக்கு…. அப்படி பள்ளிக்கூட மண்டபத்தில காட்ற போது ஐம்பது பேர்களாவது கூடுவாங்க” என்று விளக்கம் கூறினான் சேகு.
“… சரி கலை இலக்கிய முயற்சிகளின் வளர்ச்சிக்கு நீ அடிக்கடி திட்டங்கள் சமர்ப்பிக்கலாமே… ஆரம்பத்தில சமதுவிதானை எழுப்பிய கேள்விக்கு இன்னொரு யோசனையும் இருக்கு…. இரண்டு மாசத்துக்கு ஒருமுறை எமது ஊரவர்கள பள்ளிக்கூட மண்டபத்துக்கு அழைச்சி சங்கத்திட முயற்சிகள, பெறுபேறுகள், எமது நெலைப்பாட்ட விளக்கினா என்ன? இந்த முறை குளக்காட் டுப் பிரதேச மாய்மை விஷயம், காடு வெட்டியது பங்குதாரர்கள பாதிக்காது என்கிற பண்டாரகிராமசேவகரின் உறுதிப்பாடு ஊரவர் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கிறது… போன்ற விடயங் கள் இடம் பெறலாந்தானே” என்று கேட்டான் ஹலீம்தீன்.
“அப்படிச் செய்வது நல்லது. அவ்வப்போது ஊர்மக்களுக்கு எமது நடவடிக்கைகளில் ஒரு தெளிவு பொறக்கும்… இதை எங்கட கிராமத்தில மட்டும் இல்லாம, ஒவ்வொரு கிராமத்திலும் பிரதிநிதிகளும் செய்யலாம். பிரதேசம் முழுக்கவும் சங்கத்தின் முயற்சிகளயும் நிலைப்பாட்டயும் உறுப்பினர்கள் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்புதானே…” என்று அந்த யோசனையை வலியுறுத்திப் பேசினான் சவால்.
எல்லாருமே அதற்கு உடன்பட்டனர். அடுத்த செயலவைக் கூட்டத்தில் இதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்ற அவர்கள் முடிவெடுத்தனர்.
அத்தோடு சேகுவுக்கு மற்றுமொன்றும் சுமத்தப்பட்டது. விரும்பியவர்களை தெரிவு செய்து ஓர் இலக்கிய குழுவை அமைத்து, எமது மாவட்டத்தில் அல்லது பிரதேசத்தில் கலை இலக்கிய முயற்சிகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கும் பாரிய பொறுப்பு அது!
“எமது தேடல் முஸ்லிம் கிராமங்களில் மட்டுந்தானே….?”
“ஆமாம்… பிரதேசத்தில் முஸ்லிம்களின் தமிழ் இலக்கிய முயற்சிகள். நாம் மூத்தவர்களை வயது அடிப்படையில் இனங் காண வேணும். அவர்கள கெளரவிக்க வேணும். முக்கியமான வர்கள விட்டுட்டு மேலெழுந்தவாரியா இருக்கக்கூடாது.
இலக்கியப் போட்டிகள் நடாத்தி பரிசளித்து புதியவர்கள ஊக்குவிக்க வேணும். எவ்வளவு காலம் போனாலும் பரவா யில்ல, கிராமம் கிராமமாக ஊடுருவிச் சென்று இலைமறை காயாக இருப்பவர்கள இனங்கண்டு கொள்ள ஏலும். தமிழ்த்தின போட்டிகளில் எமது பிரதேச மாணவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியீட்டுறாங்க என்றது உங்களுக்கு தெரியுமா….?
“…”
“இப்ப இப்ப எங்கட பிரதேச எளந்தாரிமாரும் புதுக்கவிதை யில நல்ல ஆர்வம் காட்டி வாராங்க” என்றான் யாசீன்.
“…அப்ப எங்கட பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கத் திலே இலக்கியத்துக்கும் இடம் கிடைச்சிட்டதே…” என்றான்…சமதுவிதானை.
“அன்சார்தீன், ஒனக்கும் புதுக்கவிதையில் ஆர்வம் இருக்கு தானே? நான் ஒன்னட்டே ஒரு கேள்வி கேட்கட்டுமா…?”
“கேளுங்க…… தெரிஞ்சா சொல்றன்”
”சேகுவோ வேறு யாரோ சொல்லக்கூடாது…. அதாவது….. ஒரு பிரபல கவிஞர் எங்களப்போல விவசாயிகள ரெண்டு வரீல உச்சத்துக்கே உயர்த்திட்டார். அந்த ரெண்டு வரிகளயிம் சொல்லேலுமா?
”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழு துண்டு பின் செல்பவர்” என்று. நான் திருக்குறளப் பற்றிக் கேட்கல்ல. புதுக்கவிதையில…?
“…”
“இப்ப…… சேகு…?”
“யாசீன்…….?”
“வேறு யாராவது……”
“என்னப்பா எல்லா கவிஞர்களும் மௌனமாயிட்டீங்க…. அப்ப நானே சொல்லட்டா…..?
“சொல்லலாம்…….” என்றான் சேகு.
“நாங்கள் சேற்றிலே கால்வைத்தால் தான் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியும்”
“அடேயப்பா… எங்க மண்ணுக்கு எவ்வளவு பொருத்தமான வரிகள நீ அப்படியே நினைவில் வைத்திருக்கிறியே…. நான் நெனச்சேன் உனக்கு வரலாறு மட்டுந்தான் தெரியுமென்று…”
“நான் கவிஞன் அல்ல.. கவிதையை ரசிப்பவன்… அவ்வளவு தான்…” என்றான் ஹலீம்தீன்.
எல்லாருமே ஒரு கணம் பிரமித்துப் போய் நின்றார்கள்.
வழக்கத்திற்கு மாறாக அன்று நண்பர்கள் கலைய இரவு பத்துமணிக்கு மேலாகி விட்டது.
அத்தியாயம் பதின்நான்கு
கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் பத்துப்பேர் களைக் கொண்ட ஒரு முஸ்லிம் கோஷ்டியினர் வேட்டைக்குச் சென்றார்கள். அவர்கள்தான் முதன் முதலில் அந்தப் பயங்கர காட்டுப் பகுதியில் உட்பிரவேசித்து இந்தக் குளத்தை தரிசித்த வர்கள். அது இயற்கையான ஒரு நீர் நிலை.
சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட அந்த வனத்திற் குள் யாரும் பிரவேசித்திருக்க மாட்டார்கள். குளமும் குளத்தைச் சார்ந்த அந்தப் பென்னம் பெரிய பரப்பும் யார் கண்ணிலும் படாதிருந்தது பெரும் ஆச்சரியம். அந்த நேரம் மாய்மையை எப்படி நிர்ணயித்தார்களோ அவர்களும் அதனுட் பிரவேசித் திருக்க மாட்டார்கள்.
அந்த நீர்நிலையில் தண்ணீர் குடிப்பதற்கு மிருகங்கள் நட மாடும் தடயங்கள் மட்டும் கிடந்தன. ஒருவேளை தண்ணீர் குடிக்க வரும் மிருகங்கள் ஓய்வெடுக்கும் ‘வசந்த மாளிகை’ யாக இருக்குமோ! மிக அற்புதமான அந்தக் காட்டுப் பகுதி மனிதனின் கண்களுக்கு புலப்படாமல் போனது ஏனோ?
வேட்டைக்காரர்கள் சும்மா இருப்பார்களா? அந்த மண்ணைத் தோண்டி ஆய்ந்து பார்த்தார்கள். அவர்கள் அடைந்த அந்த மகிழ்ச் சியை என்னவென்று சொல்வது? அது விவசாயத்திற்கு மிகவும் அற்புதமான மண் என்று தீர்மானித்தார்கள். அந்த மண்ணுக்குப் பொருத்தமான விதை நெல்லையும் தீர்மானித்து விட்டார்கள்.
கடலில் கண்டெடுக்கும் முத்தைப்போல் வனத்திலும் இப் படியான முத்துக்கள் கிடைக்கின்றன.
ஊருக்குத் திரும்பியதும் இச்செய்தி காட்டுத் தீயைப் போல் பரவி அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியான பரபரப்பை ஏற்படுத்தியது. அக்கம்பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது அது”
பலரும் பல முறை சென்று பரிசோதனைகளை நடத்திப் பார்த்தார்கள். பெரும் வெற்றி. முன்னோர்கள் விவசாயம் செய்திருப்பார்கள் என்று கூறுவதற்கு நீண்ட ஆய்வு செய்ய வேண்டும். அந்த நிலப்பரப்பை குளக்காட்டுப் பிரதேசம் என்று அழைத்தார்கள். நாளடைவில் அது அதற்குப் பெயராகி விட்டது.
ஆனால் சிங்கள கிராமவாசிகள் வேட்டைக்குப் போய் பார்த்துவிட்டு வந்த பிறகுதான் பிரச்சினை கிளம்பியது.
அந்த நிலப்பரப்பு அவர்களது மாய்மைக்கு உட்பட்டதென்று சில முதியவர்கள் உரிமை கோரினர். ஆனால் முப்பது வருடங் களுக்கு முன் வேட்டைக்குப் போய் வந்து உரிமைகோரிய அந்த முதியவர் எவரும் இன்று உயிரோடில்லை. ஆனால் அவர்கள் கிளப்பிவிட்ட பிரச்சினை மெள்ள மெள்ள வளர்ந்து இரண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களும் பிளவுபட்டு, அடிதடி மோதலில் முடிந்து அந்தப் பகுதிக்கு எவரும் போக முடியாதவாறு நிலை மைகள் உருவாகியிருந்தன.
காலப்போக்கில் இரு கிராமத்தவர்களும் தாம் உண்டு, தமது வயற்காணிகள் உண்டு என்று நட்பும் இல்லாமல் பகையுமில்லா மல் தங்கள் தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொண்டு மெளன மாகவே வாழ்ந்து விட்டனர். ஆனால் இரு கிராமங்களிலிருந்தும் புதிய வாரிசுகள் நகர்ப்புறங்களில் கல்வி கற்கச் சென்றதால் சந்திப்புகளும், நட்புறவும் மெள்ள வேரூன்ற ஆரம்பித்தன. தத்தமது கிராமங்களின் நிர்வாக சபைகளிலும் இளைஞர்கள் ஈடுபட அவர்களிடையே ஓர் ஒன்றிணைப்பு அரும்பி ஓர் இலட்சி யப் பாதைக்கு அவர்களை இட்டுச் சென்றது. கிராமத்தின் பொது விடயங்களில் தனித்து ஒதுங்கி இயங்குவதைவிட கூட்டு முய ற்சிகளினால் சாதிக்கலாம் என்ற உண்மையை இரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் உணர்ந்து கொண்டனர்.
அமரதாசவும் ஹலீம்தீனும் தடைக்கற்களைத் தாண்டிவந்த புதிய நட்சத்திரங்கள்.
அமரதாச நண்பர்களும், ஹலீம்தீன் நண்பர்களும் ஒரு நாள் அனுராதபுர நகரின் பிரதான ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் சந்தித்து விரிவாக ஆராய்ந்தனர். முக்கியமாக பஹார்டீன் மாஸ்டர் வரவழைக்கப்பட்டிருந்தார்.
இரு கிராமங்களுக்கும் தெரியாமல் நடந்த ஓர் இரகசிய மகாநாடு என்றுதான் அதனைச் சொல்லவேண்டும். அன்று சுமார் நான்கு மணித்தியாலங்கள் கலந்துரையாடி, பல அடிப் படையான தீர்மானங்களை எடுத்தனர்.
புதிய நம்பிக்கை அலைகளை பரவச் செய்து இரு கிராமங் களையும் பிரித்த பகைமையை மூலவேருடனே பிடுங்கி எறிய முடிவு கட்டிவிட்டிருந்தனர்.
‘குளக்காட்டுப் பிரதேசம்… ‘காட்டுப் பேய். நீண்டகாலமாக நட்புறவுடன் வாழ்ந்து வந்த இரு கிராமங்களையும் இரண்டாகப் பிளந்து, விழுங்கப் பார்க்கின்றது. அது வெற்றி கொள்வதற்கு முன், நாம் அதனை இரண்டாகப் பிளந்துவிட்டால், எல்லாப் பிரச்சினைகளும் அதற்குள் சங்கமமாகி விடும். மீண்டும் எமது உறவுகள் தழைத்தோங்கும். இளைஞர்கள், குளக்காட்டுப் பிரதேசத்தை மையமாக வைத்து செயற்படத் தொடங்கினர்,
சிங்களகிராமத்திலிருந்து, அமரதாச. கிரிபண்டனின் முயற்சி யால் முதல் விருந்தோம்பலே பெரும் வெற்றியளித்திருந்தது.
ஹலீம்தீனும் சேகுவும் இரண்டுமணியோடு வெறிச்சோடிப் போயிருந்த பாடசாலையின் திண்ணையில் உட்கார்ந்து உரை யாடிக் கொண்டிருந்தனர். ஹலீம்தீன் யாசீனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
“அந்தப் பயங்கர காட்டுப் பேயை வசப்படுத்துவது என்பது இலகுவான காரியமல்ல…. அதற்குப் பல மந்திரங்களைக் கற்று மிகவும் நிதான சிந்தனையுடன் அணுகவேணும்.
நமது மந்திரங்கள் சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டால் நாம் அந்தக் குளத்தில் வீழ்ந்து மூழ்கி விடுவோம்…..” என்றான் ஹலீம்தீன்
அமரதாசவைச் சந்திக்கச் சென்ற யாசீன் வந்து சேர்ந்தான்.
சிங்கள கிராமத்தில் அமரதாசவின் தகப்பன் கிரிபண்டனுக் கும், ஒரு சின்ன விசயத்திற்காக, பரம்பரை பரம்பரையாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த இருகிராமத்தவர்களுக்குமிடையில் கீறல் விழுந்து போனது, மனத்திற்குப் பெரும் கவலையாகத்தான் இருந்தது. எப்படி இதைத் தீர்த்து வைக்கலாம் என்று அவர் தனித்து யோசித்துக் கொண்டிருந்த கட்டத்தில்தான் மகன் அமர தாசவுக்கும் அந்தப்புனிதமான ஒருமைப்பாட்டு எண்ணத்தின் சாயல் இருப்பதைக் கண்டு, கிரிபண்டன் தனக்கு ஒரு துரும்பு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்து போனார். தந்தையும் மகனும் கிராமத்திற்குள் மெள்ள மெள்ள இயங்கினர்.
முஸ்லிம் கிராமத்தின் தலைவர் அப்துல் மஜீதுக்கு கிராமங் கள் ஒருமைப்படும் என்ற எண்ணம் முதலில் இருக்கவில்லை. ஏனெனில் ‘குளக்காட்டுப் பிரதேசம் ஒரு தேவையில்லாத பிரச்சினை. முன்பு இருந்த கிராமசேவகர்கள் மூலம் பலமுறை முயன்று கைவிடப்பட்ட ஒரு விடயம். இருந்தாலும் ஹலீம் தீனின் முயற்சிகளுக்கு அவர் குறுக்கே நிற்கவில்லை.
ஹலீம்தீனின் நண்பர்கள் அவனுக்கு உறுதுணையாக நின்றனர். சேகு கடைசியாக, “ஹலீம்தீன் தலைவர் வாழ்க!…..” என்று ஒரு ‘ஜோக் அடித்து’ விட்டுச் சொன்னான்.
“நீ… மட்டும் அந்தக் குளக்காட்டுப் பேயை, அடக்கிவிட்டியோ அதற்குப் பொற்கு மற்ற எல்லாப் பேய்களும் சக்தியில்லாம உன் காலடியில தான் சுருண்டு கிடக்கும்… பொறகு நூறு வருஷத்துக்கு நீ தான் எங்கட ஒரே தலைவர்…’
யாசீன் வந்ததும் சிரித்துவிட்டு
“கவிஞர் சேகு என்ன சொல்கிறார்?”
நடந்தவற்றை ஹலீம்தீன் சுருக்கமாகச் சொன்னான்….
“குளக்காட்டுப் பேயை அடக்குவது சுலபமான விஷயம் அல்ல. காடுவெட்டி விவசாயம் செய்வதாயிருந்தாலும், அது எவ்வளவு பெரிய பிரச்சினைகளை கொண்டிருக்கிறது…. என்பதனை குளக்காட்டுப் பிரதேசம் இப்ப நிரூபித்து இருக்குது தானே…” என்றான் யாசீன் சேகுவைப் பார்த்து.
“இந்த மட்டுக்கும் பண்டார கிராம சேவகர் முஸ்லிம் பகுதியின் மாய்மைகள ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்திருப்பார்…. எண்டு நம்பலாம்…” என்றான் ஹலீம்.
“இப்படியான சிக்கல்கள் இருந்ததால் தான் மூத்தவங்க குளக்காட்டுப் பிரதேசத்த கைவிட்டிருப்பாங்க…..” என்று தன் அபிப்பிராயத்தைக் கூறினான் சேகு.
அன்சார்டீனும் நண்பர்களும் வந்தனர்.
“இந்த எருமைகளுக்கு வேலையில்ல, நாங்க எவ்வளவோ முயன்று, கைவிட்ட விசயத்த, இதுகள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்குதுகள்…” என்று கூறி இன்று ‘கப்சிப்’ ஆகிவிட்ட கிழடுகளு க்கு ஒன்று சொல்ல வேண்டும்.
“நாங்கள் சேற்றுக்குள் படுக்கும்
எருமைகளல்ல
நாங்கள் சேற்றில் முளைத்த
செந்தாமரைகள்…”
என்று கூறி இளைய தலைமுறையினரின் முயற்சிகள இழிவு படுத்தக் கூடாது என்பதை உணர்த்த வேண்டும்” – சேகு சற்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான். ‘
”சேகு….. உணர்ச்சி வசப்படாதே. நாங்க அதை நிரூபிச்சி காட்டுவோம்” என்றான் ஹலீம்தீன்.
“ஒரு கவிஞனைப் பார்த்து உணர்ச்சிவசப்படாதீங்க என்று சொல்ல முடியாது….உணர்ச்சி வசப்பட்டால் தான் கவிதை பிறக்கும்” என்றான் யாசீன்.
“எப்படியெண்டாலும் தலைவர் ஹலீம்தீனுக்கு பொறுமை தேவதான். இன்று பி.வி.மு.ச.வின் தலைவர் நாளைக்கு மாகாண சபை அல்லது பாராளுமன்ற உறுப்பினர்…” ஹலீம்தீன் பட் டென்று இடைமறித்தான்.
“எங்கள் மாவட்டத்தில, நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம் கிராமங்கள் கிடக்கு. அது போலவே சிங்கள கிராமங்களுக்கும்… பி.வி.மு.ச. இன்னும் தவழும் பருவம்தான்….. முழுமையாக மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தவில்லை. கிராமங்களின் பிரதிநிதிகள் மூலம் மெள்ள மெள்ளத்தான் விஸ்தரிப்பு வேலை களைச் செய்ய வேணும். அடுத்து சேகு, பி.வி.மு.ச.வின் யாப்பை அவ்வளவு விரைவில் மறந்து விடாதே…. நாங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியலில் புகுந்து விடக் கூடாது. எங்கள் இலட்சியமே கிராமங்களின் அபிவிருத்திதான். எங்கள் ஆலோசகர்களுள் ஒருவரான கரீம் மாஸ்டர் அனுபவ ரீதியில் கண்ட உண்மையைத்தான், வலியுறுத்தி, பி.வி,மு.ச. அரசியலில் மூழ்கிவிடக் கூடாது அதாவது அரசியலில் கட்சி சார்பற்ற நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருக்கார்.”
“நான் சங்கத்தின் சட்டதிட்டங்களை மறக்கவில்லை. பி.வி. மு.ச. தேர்தலில் போட்டியிட்டு விவசாய பெருமக்களின் அபி மானத்துடன் மாகாண சபைக்குச்சென்றால் கிராமங்களுக்கு நிறைய பங்களிப்பு செய்யலாமே என்று மனதில் ஓர் அபிப் பிராயம் தோன்றியது அதுதான்…” என்றான் சேகு.
“நீ அபிப்பிராயப்படுவதிலும் உண்மை இல்லாம இல்லை… ஆனால் நமது சங்கம் இன்னும் படிப்படியாக வளர்ச்சியடைய வேணும்…… அப்படி வளர்ச்சியடைய நாம கிராம மக்களுக்காக சாதிக்க வேணும். நீ சொல்வது போல மிக நீண்ட காலமாக இருந்து வரும் நம்மட குளக்காட்டு பிரச்சினைய ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துட்டா நாம ஓரளவுக்கு முன்னுக்குப் போகலாம். அதுவும்…… ரெண்டு கிராமங்களின்…… அதாவது நம்மட சிங்கள முஸ்லிம் கிராமங்களின் நல்லமதிப்பை மட்டுந்தான் பெற முடியும்.ஆனால் நம்மட மாகாணத்தில அல்லது பிர தேசத்தில உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குறிப் பிடத்தகுந்த சேவைசெய்து நல்ல பெயரும் செல்வாக்கும் பெறவேணும்….. சேவைமூலம் ‘யானைப் பலம்…. மிக்க ஒரு சங்கமாகத் தோற்ற வேண்டும். இதற்கெல்லாம் கால அவகாசம் தேவையில்லையா….?” இப்படியாக ஹலீம்தீன் ஒரு நீண்ட விளக்கத்தை அளித்தபின் சேகுவுக்கு ஒரு தெளிவு பிறந்தது.
நண்பர்கள் எல்லாரும் வந்து சேர்ந்து விட்டார்கள். ஹலீம்தீன் கேட்டான்.
“நாளைய பொதுக்கூட்டம் பற்றி ஊர்மக்களுக்கு சொல்லியாச்சு தானே?”
“காவின் எழுத அழைக்கிற மாதிரி, வீடு வீடாபோய் அழைச் சிட்டோம். வெத்தில மட்டும் தான் வைக்கல்ல…” என்றான் யாசீன்…”
எல்லாரும் சிரித்தனர்.
”அப்ப நாங்க இந்த மண்டபத்த நாளைய கூட்டத்துக்கு ஒழுங்கு செய்து விட்டுப் போவம்… நானும் சேகுவும் வந்த ஒடனே குவார்ட்டஸுக்குப் போய் அதிபர்கிட்ட அனுமதி எடுத்துட்டோம்….. பள்ளிவாசலில் மஃறிப் தொழுகைக்குப் பொறகும் ஒரு பொது அறிவித்தல் கொடுத்தாகரியம் எல்லா ருக்கும் திரும்ப ஞாபகப்படுத்துவது போல இருக்கும்.”
மண்டபத்தைப் பெருக்கி, கதிரைகளை வரிசை வரிசையாக ஒழுங்குபடுத்தி விட்டு தலைமை தாங்குவதற்கு ஒரு மேசையும் கதிரையும் போட்டனர். “நாளை காலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் மேசை விரிப்பும் பூவாசும் போடலாம், என்று யாசீன் கூறினான்.
சமதுவும், சவாலும் விடைபெற்றுச் சென்றனர். மஃறிப் தொழு கைக்குப் பின் கூட்டத்தைப் பற்றி அறிவிக்கும் பொறுப்பை சிரமேற் கொண்டு சேகுவும் பள்ளிவாசலை நோக்கி நடந்தான்.
ஹலீம்தீனும் யாசீனும், அன்சார்டீனும் நாளைய நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கு முன் சில விடயங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர். நாளைய கூட்டம் முழுக்க பி.வி.மு.ச.வின் கொள்கை விளக்கம், அது எடுத்த ஆரம்ப முயற்சிகளும் தற்போ தைய நிலைப்பாடும் முக்கியமாக குளக்காட்டுப் பிரதேசத்தின் நிலை… இவை பற்றிய கலந்துரையாடல் தான் இடம் பெற வேண்டும்… என்றெல்லாம் நிகழ்ச்சி நிரலை ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
“அன்சார்… மண்டபத்த பூட்டு, திறப்புக்கொத்தை அதிபர் கிட்ட குடுத்திட்டு, அம்முக்குட்டி கடையில கிரிகஹட்ட குடிச் சிட்டு…. அப்படியே ஒபிசுல இருந்து கதைப்பம்… என்ன தேநீருக்குப் பின் அலுவலகத்திற்குச் சென்று இருக்கைகளில் ஆற அமர இருந்து கொண்டனர்.
ஹலீம்தீனின் தாயார் வந்து அலுவலகத்தை எட்டிப் பார்த்தாள்.
“…ம்மா… எங்களுக்கு தேத்தண்ணி வாணாம்… அம்முக் குட்டியில குடிச்சிட்டம்…”
“…ஓ… ஓகளுக்கு ‘அம்முக்குட்டி’கடையில குடிக்காட்டி பத்தியமில்லதானே.”
“அப்ப… ம்மா… சொணங்கி தாங்க….”
“மகனின் வார்த்தைகளை செவிமடுத்த ஆயிஷா நாச்சி தன் வேலைகளுக்காக வீட்டின் உள்ளே செல்ல, யாசீன் பக்கம் திரும்பிய ஹலீம்,
“இனி… யாசீன் போன விசயம் எப்படி……?”
“இப்ப சொல்லத்தான் ஈந்த….. வூட்ட போன நேரம் அமர இருக்க இல்ல… பியசீலி ஒன்ன எதிர்பார்த்துக் கொண்டிருக்கா… நா அவளோட பேசிக்கிட்டு இருந்தப்பதான் அமர வந்த…
ஞாயிற்றுக்கிழம சிங்கள கிராமத்தில ஒரு விஷேட ‘பன தேசனா’ இருக்காம்.
கஹட்டகஸ்திகிலியா பிரதான வீதியில அரசியல் மீட்டிங். இது அந்தக் கூட்டத்தின் நோட்டீஸ்…..” யாசீன்.
பொக்கட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தான்.
“எல்லா பக்கங்களில் இருந்தும் விவசாய பெருமக்களயே எதிர்பார்ப்பாங்க. இது பொருத்தமான நாள் என்று நினைக்கிறன்…” என்றான் யாசீன்.
“ஒரு பெரிய இடத்து கல்யாண கந்தூரி வீடும் அன்றக்கி இருந்திருந்தாக்கா சொல்லி வேலல்ல….. சரி…… சரி எல்லாம் பொருந்தி வாரதாயிருந்தா…. அது நடக்கவே நடக்காது…. அப்ப சரி யாசீன், இந்த இரண்டு வைபங்களும் நடைபெறுகிற ஞாயிற்றுக்கிழமையில தான் எங்கட சங்கத்தின் ‘ஒரு நாள் அடையாள ஆர்ப்பாட்டத்தை’ நடாத்த, சொல்லி வைத்தாற் போல மிகப் பொருத்தமான நாள்….. நாளக்கி எங்கட ஊர் மக்கள் கூட்டம் முடிந்தவுடனே நாம் அமரதாசவ சந்திச்சி வேகமாக இயங்க வேண்டும்… எமது சகல முஸ்லிம் கிராமங் களின் பிரதிநிதிகளுக்கும் அறிவித்து விட வேண்டும். முதல் வேலையாக ‘“எமது பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சக்தி வாய்ந்தது. அந்தப் புனிதமான ஒருமைப்பாட்ட, ஒரு அடையாளமாக பகிரங்கப்படுத்துவதற்காகத்தான் இந்த அடை யாள ஆர்ப்பாட்டம். ஞாயிற்றுக்கிழமை எல்லா கிராமவாசி களும் முடிந்த வரையில வெள்ளை உடுப்பு உடுத்தி அந்தந்த கிராமத்து பள்ளிக்கூடத்தில அல்லாட்டி ஒரு பொது எடத்தில அணி வகுத்து அமைதியான முறையில் உரத்து கோஷமிட வேண்டும்.” என்று விளக்கிக் கூறினான் ஹலீம்தீன்.
“கையில் ஏந்தும் போஸ்றர்களில என்ன எழுத வேணும்…?” என்று யாசீன் வினவினான்.
“வசனங்களை நாம் தயாரித்து அனுப்பவேணும்… எல்லா விவசாயிகளும் இதில கலந்து கொள்வது கட்டாயம்….. அந்த ஞாயிற்றுக்கிழமைய சகல கிராமவாசிகளும் இந்த ஆர்ப்பாட்டத் துக்காக ஒதுக்கி வைப்பது தவிர்க்க முடியாததொன்று. அவர்கள் வேறு எந்த தொழிலிலோ வைபவங்களிலோ கலந்து கொள்ள விடக்கூடாது. அத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் எவருக்கும் ஒரு துன்புறுத்தலாக அமைந்து விடவும் கூடாது. முற்றிலும் சாத்வீக மாக அமைய வேணும். கிராமத்துப் பிரதிநிதிகள் மிகவும் விழிப்போட கண்காணிக்க வேணும்…”
“காலையில எத்தனை மணிக்குத் தொடங்கி, எத்தனை மணிக்கு முடிக்க வேணும்…?” அன்சார்டீன் கேட்டான்.
“…ஓ… அது முக்கியமானது… காலையில் ஒன்பது மணிக் குத் தொடங்கி மாலை நான்கு மணிக்கு முடிக்க வேணும்…… ஆறுமணித்தியால ஆர்ப்பாட்டம் ……. மாலை மூன்று மணிக்கு முடித்து, நான்கு மணிக்குள் வூடுகளுக்கு போக வேணும்.
“அப்ப சாப்பாட்டுப் பிரச்சினை?” – யாசீன் கேட்டான். அதற்கு அன்சார்டீன் ஒரு அபிப்பிராயம் தெரிவித்தான்.
“இது உண்ணாவிரதம் அல்ல……?
விவசாயிகள் வயலுக்குப் போனாலும் பெண்கள் பிள்ளை குட்டிகள் வயலுக்கு தீன் தண்ணி கொண்டு போறது போல… இங்கயும் கொண்டு வந்து கொடுக்கலாந்தானே…. ஒரு பொது நன்மைக்கு பெண்களும் பிள்ளைகளும் பங்களிப்பு செய்த மாதிரியும் இருக்ககுமே…”
“அது மிக… மிக நல்ல யோசனை இதுக்குதான் கலந்துரையாடல் வேணும் எண்டு நான் அடிக்கடி சொல்றது…” என்றான் ஹலீம்தீன் மிக்க மகிழ்ச்சிப் பெருக்குடன்.
“நான் முதல்ல யோசிச்சது என்னெண்டா பள்ளிக்கூடத்தி லேயே பகலுணவை சமைப்பதற்கு… ஆனா அதைவிட அன் சாரின் ஐடியா வெரி குட்…..”
“அப்ப நாளக்கி நம்மட பொதுக் கூட்டத்திலயும் எங்கட ஆக்களுக்கு விரிவாக அறிவிச்சா நல்லதுதானே.” என்று கேட் டான் யாசீன்.
“இல்ல யாசீன் அது ஒரு சம்பிரதாயமில்ல… நாம் அமர தாசவுடன் கலந்து ஒரு முடிவ எடுப்பதுதான் முறை… பைக்கில் போய் வருவமா…? மெய்தான் திரும்பி வர எப்படியும் பத்து மணி பிந்தும்……”
அன்சார்டீன் பள்ளி வாசலுக்குப் போக வெளிக்கிட்டான். யாசீனும், ஹலீம்தீனும் தலையில் ‘ஹெல்மட்டுகளை’ சுமத்திய போது-
கிரிபண்டாவின் ‘டொயோட்டா’ வந்து நின்றது.
அமரதாசவும் பியசேனவும் வந்திறங்கினர்.
“அமர என்ன திடீரென்று……? நாங்க அங்க வரத்தான் இது….. ‘பைக்கை’ வெளியே எடுக்க……”
“வார ஞாயிற்றுக்கிழம எங்கட ஒரு நாள் அடையாள ஆர்ப் பாட்டத்திற்கு பொருத்தமாயிருக்கு….. அதுபற்றி பேசத்தான் வந்தோம்…..” என்றான் அமர.
“நல்ல பொருத்தம்…… இவ்வளவு நேரம் இதுபற்றி நானும், யாசீனும் அன்சாரும் கலந்துரையாடித்தான் அங்கு உன்னட்டவர இப்ப தயாரானோம்……
தாங்கள் கலந்துரையாடி எடுத்த முடிவுகளை அப்படியே ஹலீமும், யாசீனும் சிங்கள மொழியில் எடுத்துரைத்தார்கள்.
“எப்படியும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் அந்த இரு பொது வைபவங்களுக்கும் நம்ம கிராமவாசிகள் இல்லாமல் வெறிச்சோடிப் போக வேண்டும். சகல விவசாயிகளும் நாம் நடத்தப் போகும் ஆர்ப்பாட்டத்தில் தான் முழுக்க முழுக்க கவனம் செலுத்தியாக வேணும். அப்பதான் நம்மட பி.வி.மு.ச. வின்சக்தி இனங்காண வழி பொறக்கும்….” என்றான் அமரதாச.
“அதுக்காகத்தான் நாம ஆர்ப்பாட்டத்தை ஆறு மணித்தி யாலமாக வைக்க விரும்புறம்…. ஞாயிற்றுக்கிழமை என்ற படியினால்… நம்மட ஆக்கள் காலையில ஆறு மணி பஸ்ஸுக்கே அனுராதபுரத்துக்கு புறப்பட்டாங்க எண்டா மாலை கஹட்ட கஸ்திகிலியா வந்து அந்த வைபவத்தில கலந்து கொண்டு தான் ஊர்களுக்கு வரக்கூடும். அதுக்கு வாய்ப்பளிக்காம தான் நாங்கள் ஆர்ப்பாட்ட நேரத்தை நிர்ணயிக்க வேணும்….” என்று விளக்கம் கூறினான் ஹலீம்தீன்.
“அப்ப சரி….. நான் முதல்ல யோசிச்சன் ஆறு மணித்தியாலம் கூடிப் போச்சுதோ என்று…. பரவாயில்ல. காலை ஒன்பது மணியிலிருந்து ஆறு மணித்தியாலம் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு எப்படியும் நான்கு மணிக்குள்ள கலைந்து விட வேண்டும். இனிமேலும் விவசாய பெருமக்களை ஏமாற்றக் கூடாது.ஏமாற்ற முடியாது அவர்களது நியாயமான பிரச்சினை களை ஆராய்ந்து ஏதாவது செய்யாவிட்டால் அவர்களது உள்ளங் களிலிருந்து எம்மை தூக்கிக் தூர எறிந்து விடுவார்கள்….. என்று அரசியல்வாதிகளுக்கு உணர்த்த வேண்டும்.
வணக்கஸ்தலங்களுக்கு பக்தர்களும் குறைந்துவிடுவார்கள்… என்றும் கூறி வைக்க வேண்டும்” என்று அமரதாச சற்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான்.
“அமரே ஆவேசப்படக் கூடாது”
பஹார்டீன் மாஸ்டர் உனக்காகத்தான் அந்தப் பொன்மொழி களை எழுதினாரோ என்னவோ…..?”
“கோபம்… ஆவேசம் வராவிட்டா அவன் மனிசன் இல்லையே…?”
“கட்டாயம் வரவேணும்… ஆனா பொறுமையைக் கடைப் பிடித்து அடக்கப் பழகிக் கொள்ள வேணும்…”
“அதுவும் சரிதான்… ஐ எம்… சொரி…”
அதற்குப் பிறகு அவர்கள் போஸ்ரரில் இடம் பெற வேண்டிய வசனங்களைத் தீர்மானித்தார்கள்.
எல்லாகிராமங்களிலும் ஒன்று போலவே இருக்க வேண்டும்.
சிங்களத்திலும் தமிழிலும் எழுதினால் போதும்.
வசனங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டான் யாசீன்.
“விவசாயிகளை வாழ விடு”
“விவசாயிகளின் பிரச்சினைகளை உடன் தீர்த்துவை…”
“பிரதான சாலைகளிலிருந்து கிராமங்களுக்குப் பிரியும் பாதைகளை செப்பனிடு”
“குளக்காட்டுப் பிரதேச மாய்மைக்கு உடன் ஒரு முடிவைக் காண வேண்டும்”
இப்படியாக சுமார் முப்பது கோரிக்கைகள் போஸ்ரர்களில் இடம் பெற வேண்டும்.
அவற்றை வெள்ளை அல்லது மஞ்சள் நிற பிரிஸ்டல் போர்டு களில், கறுப்பு நிறமையினால் பெரிய எழுத்துக்களில் எழுதி, தடிகளில் பொருத்தி, உயர்த்திப் பிடித்துக் கொண்டு அடிக்கடி ஆட்கள் மாறி மாறி கோஷமிட வேண்டும். இதர நேரங்களில் அவர்கள் வரிசை வரிசையாக உட்கார்ந்து இருக்க வேண்டும்….. வட்டம் வட்டமாக இருந்தும் அமைதியாக பேசிக் கொண்டி ருக்கலாம். வெள்ளை உடை மிக முக்கியம். அடிக்கடி அவர் களுக்கு கோப்பி தேநீர்களை பி.வி.மு.ச. வழங்கும். மாலை நான்கு மணிக்குள்…. அதாவது ஆர்ப்பாட்டம் மூன்று மணிக்கு முடிந்ததும்….. நான்கு மணிக்குள் தத்தமது இல்லங்களுக்குச் சென்றிட வேண்டும். கலைந்து விட்டதும் வேறு வைபவங் களுக்குச் செல்லக்கூடாது.
“பொது மக்களுக்கு எப்ப அறிவிக்க வேணும்?” பியசேன இடைமறித்தான்.
“அது முக்கியம், அமரே. உன்ட அபிப்பிராயம் என்ன….?’
“வார ஞாயிற்றுக்கிழமைதானே அடையாள ஆர்ப்பாட் டம்… சனிக்கிழமை வரைக்கும் நாம எல்லா ஏற்பாடுகளையும் இரகசியமாகவே வைத்துக் கொள்ள வேணும்…. தப்பித் தவறி அந்தக் கூட்டங்கள ஒழுங்கு செய்யும் அமைப்பாளர்களின் செவிகளுக்கு எட்டிவிட்டால் நாம நடத்தும் அடையாள ஆர்ப் பாட்டத்துக்கு ஒரு கனதி இருக்காது.
“ஏன் அப்படி……?”
“அவங்க உடனே தங்கட கூட்டங்கள ரத்து செஞ்சி பிற்போடக் கூடும். கிராமவாசிகளின் பிரசன்னம் இல்லாட்டா அவர்களது கூட்டம் சோபை இழந்துவிடுமே என்பதற்காகத்தான்…..”
“அப்படியாயிருந்தா சனிக்கிழமை மாலை நான்கு மணிக்குப் பின் எமது கிராமங்களின் பிரதிநிதிகள் ஊர் விவசாயிகளுக்கு அறிவித்து வேண்டிய ஏற்பாடுகள் செய்யலாந்தானே?”
“அப்படித்தான் செய்ய வேணும். வேறு வழி இல்ல…. மெய்தான் வெள்ளை உடைகள் பிரச்சினையைக் கிளப்பலாம்… அதைப் பிரதிநிதிகளே சமாளித்துக் கொள்ளட்டுக்கும்…”
“அப்ப பிரதிநிதிகளுக்கு ஒரு கருத்தரங்கு வைக்க வேணுமா…?” “தேவையில்ல… அதற்கு நேரமும் இல்ல….. விஷயம் அம்பலமாக இடம் கிடக்கு…..” அங்கத்தவர்கள் அணிதிரண்டு வர பிரதிநிதிகளே யுக்திகளை கையாள்வது தான் முறை.
அமரதாசவின் கண்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்து விட்டன. அவன் புறப்படமுன் சொன்னான்.
“நான் எல்லா விஷயங்களையும் சிங்களத்தில் ‘ரைப் செய்து சுற்றுநிருபமாக பிரதிநிதிகளுக்கு அனுப்பவென்று தயாரிக் கிறேன். நாளைக்கு உங்கட பொதுக்கூட்டம் முடிந்ததும் வர முடியுமா…? நாம் வேனில் சென்று பிரதிநிதிகளை சந்திப் போம்… நாளை தவறினால் நாளை மறுநாள் போவோம்….. எப்படி……?”.
“முடிந்தவரை முயற்சி செய்வோம் என்றான் ஹலீம். பின் யாசீனைப் பார்த்து “யாசீன், நாளை காலையில பஹார்டீன் மாஸ்டருக்கு, புறப்பட்டு வருமாறு ஒரு தந்தி கொடுத்து விடு வோம். என்ன?”
“சரி நாங்க சென்று வருகிறோம்…..” குட்நைட்’ ‘குட்நைட்’
‘புழுதியைக் கிளப்பிக் கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்றது அமரவின் வேன்.
அத்தியாயம் பதினைந்து
சிங்கள கிராமத்தைப் பொறுத்தவரையில் அமரதாசவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
பெட்டிசன்காரர்களுக்கு வால் அறுந்து விட்டது. மௌனம் சாதிக்கிறார்கள்.
இப்பொழுது முழுக்க முழுக்க அமரதாசவின் கிராம முன் னேற்றத் திட்டங்களுக்கு ஒத்துழைத்து வருகின்றனர். இளை ஞர்கள் ஆதரவு வழங்கும் போது மூத்தவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதல்ல. அவர்களுக்கு எதிலும் அக்கறை இல்லை. தாம் உண்டு தமது வயல்கள் உண்டு என்று ஒரு போக்கு.
‘எப்படியும் நல்லது நடந்தால் போதும்’ எங்கட பிள்ளைகள் படித்தவர்கள், நாச காரியங்கள் செய்ய மாட்டார்கள் என்று ஒரு புதிய கோணத்திலிருந்து சிந்திக்கிறார்கள். ஹொந்தக் சித்த வெனவானம் ஹொந்தய்… ஜயவேவா….” என்று அவர்கள் வயதுக்கேற்ற அனுபவமும் தெளிவும் இருப்பதால் கருத்துக் களை நிதானமாகத் தெரிவித்தார்கள். ஒரு சின்ன குக்கிராமத்தில் நடக்கிறது பரந்த வெளியுலகத்திற்குத் தெரியவா போகிறது. பல்லின மக்கள் மத்தியில் ஓர் ஒருமைப்பாடு முகிழ்ந்து விட் டால் அதனால் எல்லாருக்கும் நன்மைதானே. ஆனால் ஒரு முட்டுக்கட்டை விழுந்து விட்டால் யாருக்கு என்ன லாபம்….?’ காட்டவத் கிசிம ப்ரயோஜனயக் நே…’
முஸ்லிம் கிராமவாசிகளின் நாடியைப் பிடித்துப் பார்க்கத் தான் நாளைய பொதுக்கூட்டம். இது வெற்றியென்றால் ஆர்ப் பாட்டம் மிகப் பெரிய வெற்றி.
ஹலீம்தீன் நண்பர்கள் கிராமத்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
குளக்காட்டு மாய்மை விடயமாக அவர்கள் சிந்தித்து, திட்ட மிட்டு செயற்படுகின்றனர்.
இருண்ட காட்டுப் பிரதேசத்தில் அவர்கள் செல்லும் திசை சரியானதா.
பி.வி.மு.ச.மூலம் பிரச்சினைகளை முன் வைப்பது சரியானதா…?
செல்லும் வழி ஒளிமயமானதுதான் என்பதை திட்டவட்ட மாக நிரூபிக்கப் போவது இந்தப் பொதுக்கூட்டம் தான். மாறு பட்ட அபிப்பிராயங்களைத்தான் அவர்கள் கூர்ந்து செவிமடுப் பாார்கள். அவர்கள் முதிர்ந்த அனுபவமுடைய தொழிற்சங்க வாதிகள் அல்ல. பஹார்டீன் மாஸ்டர் போன்றோரின் வழிகாட் டல்கள் அவர்களுக்கு துணை நிற்கும். ஒரு முன்னணி தொழிற் சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆய்வு செய்யத்தானே அவர் போயிருக்கிறார். நிச்சயம் அவர் எங்களுக்கு சமர்ப்பிக்கப் போகும் ஆய்வு அறிக்கை பி.வி.மு.ச.வுக்கு வழிகாட்டும் என்ப தில் ஐயமில்லை.
பொதுக்கூட்டம் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகியது. கிராமவாசிகள் அனைவருமே மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறை யுடனும் வருகை தந்திருந்தனர்.
இது ஹலீம்தீன் நண்பர்களுக்கு சொல்லப் போனால் கிராமத் தின் புதிய இளம் நிர்வாகிகளுக்கு மிகவும் தெம்பாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தமது வேலைத்திட்டங் களுக்கு இந்தப் பொதுக்கூட்டம் முழு அங்கீகாரம் வழங்கி யிருப்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியது.
கூட்டத்திற்கு மூத்த தலைமுறையைச் சார்ந்த அப்துல் மஜீத் தலைமை வகித்தார். அவரது தலைமையுரையின் ஆரம்பமே பெரும் ஆரவாரமாக இருந்தது.
“சகோதர சகோதரிகளே……
பி.வி.மு.ச. மூலம் நாங்கள் சமர்ப்பித்த கோரிக்கைகளில் அரைவாசிக்கு மேல் நிறைவேற்றப்படும் என்று நம்பகமாகத் தெரிய வருகிறது…..” என்று சொன்னதுதான். அல்லாஹு அக்பர்’ ஆரவாரம் வானைப் பிளந்தது.
அதற்குப் பின் அவரது உரை சுருக்கமாக இருந்தது.
“ஆதிகாலந் தொடக்கம்…. எங்கட கிராம மக்களுடைய பிரச்சினைகளுக்கு பரிகாரம் இல்லாம, கட்டுப்பாடு இல்லாம, அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் போல் இருந்தோம். அதுக்குக் காரணம் எங்களுக்கிடையே கிராம ஒத்துமை, வழிகாட்டல் இல்லாம, கல்வி இல்லாம போனதே…. நாங்க எப்பொழுதும் ஏழை விவசாயிகளாக பிரச்சினைகளைச் சுமந்து வாழ்நாட் களைக் கழிச்சிட்டம். எங்களுக்கு ஏன் இந்த இழி நிலை? என்று யோசித்துப் பாத்தீங்களா? வறுமையின் சுமைதாங்கிகளாகத் தானே வாழ்ந்திருக்கிறம்.
ஒரு சந்தோஷம் என்னென்டா கிராமந்தோறும் பள்ளிக் கூடங்கள் வந்தன. கல்விக்குத் தடைபோடும் முயற்சிகள் நிண்டு போயின…. இப்ப எங்கட பிள்ளைகளும் கல்வியில் முன்னேறி யிருக்கிறாங்க…. அதனாலதானே இன்டு இப்படியொரு பிரதேச விவசாயிகள் சங்கத்தைப் பாக்க முடீது.
இந்தக் கட்டத்தில நான் ஒன்ட பகிரங்கமா சொல்லிவைக்க விரும்புறன்…. கல்வி கற்கத் தவறினவங்க வேலை வசதிகள் இல்லாத வங்க தயவு செஞ்சி முதலாளிமாருக்கு கள்ள மாடு ஏத்தவோ…. வேறு கள்ள யாபாரம் செய்யவோ போகாதீங்க. குறிப்பாக கொழும்புக்கு கள்ள மாடுகள் ஏத்தி அந்த யாபாரத்தை வெற்றிகரமா செய்றதுக்கு, உங்களுக்கு வேண்டிய உடுபுடவை, சாரன்சட்டை பணம் மற்றும் வேண்டிய தெல்லாம் செஞ் சி கொடுத்து உங்களை தீய வழியில வளர்த்து அவங்க வழிகெடுக் கிறாங்க, உங்கள நரகக் குழியில தள்ளிபோட்டத பிற்காலத்தில் தான் அறிந்து கைசேதப்படுவீங்க.
இதற்கு மேல் நான் கருத்துக்கள நீட்ட விரும்பல்ல. இளை ஞர்களின் ஒத்துமையால இப்படி ஒரு சங்கத்தை ஆரம்பிச்சி வெற்றிநடை போட முனைந்திருப்பது, விவசாயிகளின்ட வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுறதுக்கான அறிகுறிகளே. இந்த விதத்தில சகலரினதும் ஒத்துழைப்புடன் இயங்கிக் கொண்டு போனா நல்ல எதிர்காலம் உண்டு என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்ல. பி.வி.மு.ச. வின் செயல் திட்டங் களுக்கு தொடர்ந்து ஒங்க ஒங்கடை ஆதரவத் தரும்படிக்கு கேட்டுக் கொள்கிறன்…..
இவ்வாறு மூத்த தலைவர் தமது மனக் கிடக்கையை வெளிப் படையாகக் காட்டி, தம் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
சேகுவின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஹலீம்தீனின் உருக்கமான உரை ‘ஆப்பு’ வைத்தாற்போல் இருந்தது.
“உலகில் மிக உயர்ந்த தொழில் உழவுத் தொழில்தான். எனக்கு ஒரு பழைய செய்யுள் ஞாபகத்திற்கு வருகிறது.
“ஆற்றங்கரையின் மரமுமரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு”
இவ்வரிகளுக்கு விளக்கம் கூறிய போது அனைத்து விவசாய உள்ளங்களும் மெய் மறந்து ரசித்தன இரசித்து…. பெருமை கொண்டனர் அவர்கள்.
“ஆகவேதான் இத்தகைய உன்னதமான தொழிலை செய்யும் நாம் வாழ்க்கைப் பிரச்சினைகளை வென்று தலை நிமிர்ந்து வாழ வேண்டும்….. தலைவர் குறிப்பிட்டது போல் கிராம ஒற்றுமை இருந்தால், எமது சங்கத்தின் திட்டமிட்ட வழிகாட்டல் மூலம் படிப்படியாக முன்னேற முடியும்… முதலில் எங்களது குளக்காட்டுப் பிரச்சினை தீர்ந்து விட்டால், அடுத்து சகலருக்கும் காணிப் பகிர்வு விடயமாக போராட முடியும். எமது பிரதேசத்தின் எல்லாக் கிராமங்களிலும் இப்பிரச்சினை உழைப்பாளிகளைச் சுரண்டி பஞ்சைகளாகவே நிற்க வைக்கின்றன. சில விடயங்களை வெளிப்படையாகக் கூறி பரிகாரம் காணலாம். சில விடயங் களுக்கு மறைமுகமான முயற்சிகள் மூலம் தான் பலன் கிடைக் கும். தன்னலமற்ற செயற்றிறன்மிக்கவர்களின் ஒத்துழைப்புதான் எங்களது கிராமங்களின் வெற்றிக்கு மூலதனம். சிங்கள முஸ்லிம் கிராமங்களின் ஒருமைப்பாடு புதுமையாக இருந்தாலும் அது மிகவும் முக்கியமான ஒரு திருப்புமுனை. மன்னர்கள் காலத்தில் சிங்கள முஸ்லிம் ஒற்றுமை மேலோங்கியிருந்ததை நிரூபிக்க வரலாற்றுப் பக்கங்களை புரட்டிக் காட்டினோம்.
தனிப்பட்ட முறையில் எமது கிராமத்தை எடுத்துக் கொண் டால்,எமக்கு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியிருப்பது இந்தக் குளக்காட்டுப் பிரச்சினைதான். அது சுமுகமாகத் தீர பண்டார கிராம சேவகரின் உதவியுடன் முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சாதாரண பெட்டிசன் வந்து எமது முயற்சியை குழப்பி விட்டது என்று நீங்கள் மனம் தளரத் தேவையில்லை. பொதுச் சேவையில் இறங்கும் போதும் அதில் வெற்றியின் அறிகுறிகள் தென்படும் போதும் இப்படியான பெட்டிசன்களும், கெட்ட பெயர்களும் வந்து தடைக்கற்களாய் நிற்பது ஒன்றும் புதிதல்ல. இவை இயற்கை. அந்தப் பெட்டி சனுக்குப் பின்னால் ஒரு பின்னணி இருக்கின்றதா என்று திட்ட வட்டமாக ஆய்ந்து கொண்டிருக்கிறோம். பகைவர்கள் அந்நியர் கள் அல்ல. நாளாந்தம் எமது முயற்சிகளைக் கூர்ந்து அவதானித் துக் கொண்டிருப்பவர்களாகவும் இருக்கலாம். குளக்காட்டில், வறுமையைப் போக்குவதற்காக அல்ல…. தமது செல்வத்தைப் பெருக்குவதற்காக இரண்டு ஏக்கர் நிலம் கிடைக்க வாய்ப்பு கிடைக்காது என்று அறிந்தால் அவரும் பகைவராக, பழிவாங்குபவராக மாறலாம். தனக்குக் கிடைக்காவிட்டால் மற்றவனுக் கும் கிடைக்கக்கூடாது என்ற சுயநலக் கொள்கை. ஆனால் நிச்சயமாக இந்த மாய்மை பிரச்சினை வெகுவிரைவில் ஒரு நல்ல முடிவைக் கொண்டு வரும் என்று மாத்திரம் முன்கூட்டியே சொல்லிவைக்க விரும்புகிறோம்…. என்று கூறிய ஹலீம் பின் பி.வி.மு.ச.வின் நோக்கங்கள் பற்றி விளக்கம் கூறினான்.
“இதற்கு மேல் நான் குறிப்பாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இனி சபையோர் அபிப்பிராயம் தெரிவித்து பேச லாம்… கேள்விகள் எழுப்பி சந்தேகங்கள் இருந்தால் தெளிவு படுத்திக் கொள்ளலாம்…..”
சபையில் பலரும் பி.வி.மு.ச.வையும் நிர்வாகக் குழுவையும், சிங்கள முஸ்லிம் ஒற்றுமையையும் பாராட்டிப் பேசினர். தலைவர்கள் இளைஞர்களாய் இருந்தாலும் பெரிய சிந்தனை யாளர்கள், பக்குவப்பட்டவர்கள். அவர்களது முயற்சிகள் பூரண வெற்றியடைய எமது வாழ்த்துக்கள் என்றும் வாழ்த்தினர்.
முழு ஒத்துழைப்பையும் தருவதாக ஒர பிரேரணையை நிறை வேற்றிக் கொண்டனர்.
“எங்கட பரம்பர ஆக்கள் அனுராதபுர மாவட்டத்துக்கு வந்த சரித்திரத்தை மாதத்துக்கு ஒருமுறை சொல்ல பொருந்தி இரண்டு மாசந்தான் நடந்தது. இரண்டாம் முறை வெளியிலிருந்து ஹுசைன் சேர் வந்து அருமையான தகவல்கள் கொடுத்தார். அதற்குப் பிறகு தொடரவில்லை. ஏனோ……?” என்று பாட சாலை செல்லும் மாணவன் அஷ்ரப் ஆவலுடன் கேட்டான்.
“உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. உங்களுக்கு தெரியும், நானும் ந ண்பர்களும் கிராமம் எதிர் நோக்கும் முக்கிய வேலைகள் காரணமாக…. ஓடித்திரிகிறோம்…. அப்படியும் நாங்கள் நேரம் இல்லை என்று சொல்லவில்லை. எங்கள் இக்கிரிகொல்லாவ பிரதிநிதி வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
கிராமம் கிராமமாகச் சென்று வாய்மொழி மூலம் தகவல்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்…. பின்னால் அவை நூல் வடிவ மாக வெளியாகும்….. ‘கெசற் பீஸ்களாக’வும் பதிவாகும்…. முடிந்தால் நீங்களும் அவருக்கு உதவியாக இருங்கள்.
வேறு சில கேள்விகளுக்குப் பதில் இறுக்கினான் ஹலீம்தீன். அனைவரது முகங்களிலும் திருப்தி நிலவியது.
“உங்கள் ஆலோசனைகளைப் பெறுவதற்காகவும், நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சகல கிராம வாசிகளுக்கும் தெரிவிப்பதற்காகவும் தான் நாங்கள் இப்படி யான கூட்டங்களைக் கூட்டுகிறோம்.
ஒவ்வொருவரும் சமுகம் தந்து நாங்கள் நடைமுறைப்படுத் தும் திட்டங்களை ஆழ்ந்து அவதானித்து, உங்கள் அபிப்பிராயங் களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினான் ஹலீம்தீன்.
அஹ்மதுலெப்பை ஒரு முக்கியமான அபிப்பிராயத்தை வெளியிட்டார்.
“குளக்காட்டுப் பிரச்சினய நான் ஆழமாக யோசித்துப் பார்த் தன். அதை சுமுகமாக தீர்க்கலாம் என்டு சொல்றீங்க….. அதுபற்றி நான் பேசல்ல. கிராமவாசிகள் எல்லாரையும் பங்குதாரராக சேக்காம…. பரம்பரையாக ஒரு துண்டு விவசாயக் காணி கூட இல்லாதவங்களுக்கு மட்டும் பிரிச்சிக்குடுத்துட்டா… என்ன…?”
இதுவரைக்கும் அமைதியாக இருந்த கூட்டத்தில்.. கச்சான் காற்றின் வீச்சைப்போல “ஆ…… அப்படிச் செய்ய ஏலாது…” என்ற சத்தமும், கசமுசாவும் கிளம்பத் தொடங்கியது. அமைதியாக இருக்கும்படி கூறி விட்டு ஹலீம்தீன் நிதான மாகக் கூறினான்…..
“முன்பு ஒரு கூட்டத்தில் நாம் எடுத்த தீர்மானத்தின் படி ஊரிலுள்ள எல்லா பிரதான குடியிருப்பாளர்களும் பங்குதாரராகச் சேர வேண்டும் என்று விரும்பியதால் எண்பத்தைந்து வீதமானோர் பங்குதாரராகச் சேர்ந்தது மட்டுமல்ல, காட்டையும் வெட்டி முடித்துவிட்டோம். அதற்குரிய கணக்கு வழக்கு, சட்டதிட்டங்கள் வங்கிக் கணக்கு எல்லாமே அந்த அடிப்படை யில்தான் அமைத்து விட்டோம். காணியும் பொது….. ஆக அஹ்மது லெப்பை அவர்களின் யோசனை நல்லதாயிருந்தாலும் நடைமுறைச் சிக்கல் ஏராளம்… இது பொதுக்காணி. எல்லா ருக்கும் பயன்படட்டுமே. குளக்காட்டுப் பிரச்சினை முடிந் ததும், ஆண்டாண்டு காலமாக நிலம் இல்லாமல் இருக்கிற வங்களுக்கு பிரிச்சிக் கொடுப்பதற்காகதலா ரெண்டேக்கர் நிலம் கேட்டு எமது கோரிக்கையை முன்வைப்போம்……
பொதுக் காணியில் வரும் வருமானத்தில் ஊர்ப் பள்ளி வாச லுக்கு ஐந்து வீதத்தை நன்கொடையாக கொடுக்க வேண்டும். என்று தீர்மானிக்கப்பட்டது.
ஊர்மக்கள் அதனை மனப்பூர்வமாக ஏற்றனர்.
யாசீன் முக்கியமான ஒரு கருத்தை முன்வைத்தான்.
“என்ன காரணத்தைக் கொண்டும் பொதுக்காணியை விற் கவோ, ஈடுவைக்கவோ முடியாது…”
“அந்தக் காணிக்கு உறுதி…?”
“முஸ்லிம் கிராமத்து விவசாயிகளுக்கு உரியது…”
“இந்த சந்தர்ப்பத்தில, நான் அவதானித்த ஒன்ற சொல்லத் தான் வேணும்…”
நிர்வாகத்துக்காக கிராமவாசிகள் என்று இல்லாம்… கிராம வாசிகளின் நலனுக்காக நிர்வாகத்தை அமைத்திருக்கிறீங்க… கிராமவாசிகளின் அபிவிருத்திக்காக நிர்வாகம் வளஞ்சி கொடுக்குது.
பாராட்டுக்கள்…. ” இப்படிக் கருத்துச் சொன்னவர் ஒரு சாதாரண விவசாயி ஆதம்பாவா வீட்டுக்கு ஒரு பிரதிநிதியாய் வந்த ஒவ்வொருவரிடமிருந்தும் கையொப்பத்தை வரவுப் புத்தகத்தில் பதிவு செய்வதில் சேகுவும் யாசீனும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். செயலாளருக்காக அன்சார்டீன் அதிமுக்கியமான தகவல்கள், தீர்மானங்கள் நிறை வேறிய பிரேரணைகள் முதலியவை காற்றோடு காற்றாய் பறந்து விடாமல் அறிக்கைப் புத்தகத்தில் பதித்துக் கொண்டிருந்தான்.
அன்றைய நிகழ்ச்சி நிரல் எதிர்பார்த்ததைவிட பெரு வெற்றி யாக முடிந்ததில் கிராமத்து நிர்வாகக் குழுவினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அனைவரது உள்ளங்களிலும் ஒரு பூரிப்பு இழையோடி யது. புதிய இளம் நிர்வாகிகள் மீது எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதையும், கூர்மையான அவதானத்தை யுமே இது படம் பிடித்துக் காட்டியது.
கூட்டம் கலைந்து அவரவர் இல்லங்களுக்குச் செல்லும் போதும் மணிமணியான கருத்து முத்துக்கள் சிந்திய வண்ண மிருந்தன.
“தொண்டு செய்றதென்பது எல்லாராலும் முடியாத காரியம்…” என்றார் ஒருவர்.
“அதற்கு நல்ல மனம் வேணும்” என்றார் மற்றொருவர்.
“உண்மைதான் பணம் தேவையில்ல மனந்தான்”
“…அத்துடன் தியாக உணர்வும் செயல்திறனும் ஒன்று சேர வேணும்…..” என்றார் ஓர் அனுபவசாலி.
“சரியாகச் சொன்னீங்க….” எல்லாரும் பாராட்டினர்.
– தொடரும்…
– கருக்கொண்ட மேகங்கள் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 1999, பேசும் பேனா வெளியீடு, பேருவளை.