ஒரு ‘டீ’ போதும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 4,518 
 

மானேஜர் மாணிக்கம் ரொம்ப கோவமாய் உட்கார்ந்திருந்தார்.

அவர் சிவப்பு முகம் இன்னும் சிவந்து கோவை பழம் போல் இருந்தது.அவர் ஒரு ஆபீஸ் ‘பைலை’ கையில் பிரித்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார்.அவர் கோபம் இன்னும் அதிகமானது. பியூன் ரவியை கூப்பிட்டு “அந்த இஞ்சினியர் ராமை, என் ரூமுக்கு உடனே வரச் சொல்’’என்று கத்தினார் மேனேஜர் மாணிக்கம்.“சரி சார்.இதோ வரச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு பியூன் வெளியே வந்தான்.

இஞ்சினியர் ராம் உட்கார்ந்து இருக்கும் சீட்டுக்கு போய் “சார், உங்களே மானேஜர் ‘அர்ஜென்ட்டா’ கூப்பிடறார்.சார் அவர் ரொம்ப கோவமா வேறே இருக்காரு.நீங்க ரொம்ப ஜாக்கிறதையா அவர் கிட்டே பேசுங்க” என்று உசுப்பு ஏத்தி சொன்னான் பியூன் ரவி.‘என்ன தப்பு நாம பண்ணியிருப் போம்’ என்று நினைச்ச ராமுக்கு கவலை அதிகமானது.

மெல்ல மானேஜர் கதவை தட்டி விட்டு “சார், மே ஐ கம் இன்” என்று பவ்யமாய் குரல் கொடுத்தான் ராம்.அவனை பார்த்த மானேஜர் அவர் பாத்துகிட்டு இருந்த ‘பைலை’ கோவமாக கிழே விட்டெறிந்தார்.

”என்ன ‘இன்ஸ்பெக்ஷன்’ பண்ணி இந்த சாமான்களே நீ ‘பாஸ்’ பண்ணி இருக்கே.நீ ‘இன்ஸ்பெக்ஷன்’ பண்ணவே லாயக்கில்லாதவன்.உன்னை யார் இந்த ‘இன்ஸ்பெக்ஷன்’ வேலைக்கு ‘செல க்ட் பண்ணாங்க. இவ்வளவு சாமான்களும் ‘ரிஜெக்ட்’ பண்ணியே ஆவனும். ‘நத்திங் இஸ் குட்” என்று கத்தினார் மானேஜர் மாணிக்கம். கொஞ்ச நேரம் கழித்து “உன்னால் ஆயிரக்கணக்கான ரூபாய் இந்த கம்பனிக்கு நஷ்டம்.உன் மேல் நான் ‘ஆக்ஷன்’ எடுக்க வேண்டி இருக்கும்” என்று கத்தினார்.

ராம் ரொம்ப பயந்துப்போனான்.

”சார் நான் வந்து….”என்று சமாதானம் சொல்ல ஆரம்பிக்கும் முன் ”யு ஆர் ‘அன்பிட் பார் திஸ் ஜாப்’ ” என்று கத்தினார் மானேஜர்.

அந்த நேரம் பார்த்து இண்டியன் காப்பி ஹவுஸ் காப்பி பையன் உள்ளே நுழைந்தான்.”சார் ‘காபியா’, ‘டீயா’,” என்று குரல் கொடுத்தான்.“ஒரு’ டீ’ குடு போதும்” என்று கோவமாய் சொன்னார் மானேஜர். ’காபி’க் குடுக்கற பையன் ஒரு ‘டீயை’ மானேஜர் ‘டேபிள்’ மேலே வைத்து விட்டுப் போய் விட்டான்.

’இவர் ரூமுக்கு நாம எவ்வளவு தடவை வந்திருக்கோம். ஒவ்வொரு தடவை நாம வரும் போதும் இவர் நமக்கும் கூட இல்லே ‘டீ’ சொல்லுவார்.இன்னைக்கு இவர் கோவமா இருக்கிறதாலே தனக்கு மட்டும் ‘டீ’ ஆர்டர் பண்ணி இருக்கிறாரே. நாம தப்பு பண்ணி இருந்தா என்ன. ஒரு ’டீ’ எனக்கும் சேத்து சொன்னா என்ன குறைஞ்சா போயிடுவார். சுத்த மோசமான மானேஜரா இருக்காறே” என்று மனதுக்குள் மானேஜரை மட்டமாய் எடை போட்டான் ராம்.

சற்று நேரம் கழித்து “இந்தா இந்த ‘டீ’யை நீ குடீ. இந்த ‘டீ’யை நான் உனக்குத் தான் ஆர்டர் பண்ணேன். எனக்கு இன்னிக்கு வயிறு சரியில்லே” என்று சொல்லி ‘டீ கப்பை’ ராம் முன்னே தள்ளினார் மானேஜர். “நான் வேலை தான் கண்டிப்பானன். ஆனா மனித நேயம் தெரிஞ்சவன் ராம்” என்று சொல்லி விட்டு அமைதியாய் அடுத்த ‘பைலை’ எடுத்துப் பார்க்க ஆரம்பித்தார்.

’பைலை’ பாத்து கிட்டே “ராம் இன்ஸ்பெஷன் பண்ணும் போது ரொம்ப கவனமா இருக்கணும்.நீ இன்னும் சின்னப் பையன். நல்ல சாமான்களே முதலில் காட்டிட்டு, அப்புறமா மட்டமான சாமான்களே கலந்து தள்ளி விடுவாங்க இந்த கம்பனிக்காரங்க.நல்ல வேளை நான் இந்த சாமான்களே பாத்தேன். உடனே நான் எல்லா சாமான்களையும் ‘ரிஜெக்ட்’ பண்ணிட்டு ‘பேமண்ட்டை நிறுத்திட்டேன்” என்று சொன்னார் மேனேஜர் மாணிக்கம்.

உடனே ராம் ‘நாம் இவ்வளவு நல்ல மனேஜரை தப்பு கணக்கு போட்டுடோமே. நாம பண்ண தப்பான ‘இன்ஸ்பெக்ஷனை’ இவர் எப்படியோ கண்டுபிடிச்சு,அத்தனை சாமான்களையும் ‘ரிஜெக்ட்’ பண்ணி நம்மைக் காப்பாத்தி இருக்காரே. எல்லாவத்துக்கும் மேலா நமக்கு ‘டீ’யும் வாங்கி குடுத்து இருக்காறே” என்று வியந்துப் போனான் ராம்.

தன் தவறை நினைச்சு மிகவும் வருத்தப் பட்டான்.

‘மானேஜர் ரூமில் பட்டாசு வெடிச்சுட்டு இருக்கும்.ராமை கொத்திக் குதறிக் கிட்டு இருப்பபாரு மானேஜர்’ என்று எண்ணிக் கொண்டு ரூமுக்குள் நுழைந்த பியூன் ரவி,இஞ்சினியர் ராம் நிதானமாக ‘டீ’ குடித்துக் கொண்டு இருப்பதையும்,மானேஜர் அவனிடம் ஏதோ சொல்லி பலமாக சிரித்து கொண்டிருப்பதையும் பார்த்து அசந்து போனான்.

அவன் முகத்தில் அசடு வழிந்த்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *