ஒரு கம்ப்யூட்டரின் கதை

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,210 
 
 

( இன்று உலகம் முழுக்க கணினியின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். பல மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்த நிலையில் ஒரு கணினியின் புலம்பலே இந்த கதை.)

” நம்மல இப்படி அஸ்ஸம்பில் பண்ணுறத பார்த்தா… யாரோ புது டெவலபர் வாறான் போலிருக்கு….. இவனாவது நல்ல கோடிங் அடிக்கிறானா பார்ப்போம்….”

அந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த டெவலபரை அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொருவரின் அறிமுகங்கள் முடிந்தவுடன் கம்ப்யூட்டர் முன் அமர்கிறான்.

“வந்துடாய்யா…. வந்துடான்… இவ்வளவு நாள நம்பல ஜாலியா விட்டாங்க… இப்போ ஒரு டெவலபர போட்டு நம்மல வேல செய்ய வைக்கிறாங்க போலிருக்கு… இவன பார்த்தா அஞ்சு வருஷமாவது எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்… முதல்ல என்ன செய்ய போறானு பார்ப்போம்”

புது டெவலபர் தன் மெயில் பாக்சை திறந்தான்.

“அடபாவி நீயுமாட… இதுக்கு முன்னாடி இருந்தவன் தான் மத்தவங்களுக்கு பார்வட் மெயில் அனுப்புசிக்கிட்டு இருந்தான்… இவனும் மெயில் பாக்சை திறக்குறான்… சரி முதல் நாள்ல வேல இருக்காது போலிருக்கு… என்ன தான் மெயில் அடிக்கிறான்னு பார்ப்போம்..

டியர் செல்லம்,

இன்னைக்கு ஆபிச்ல ஜாயின் பண்ணிட்டேன். இது தான் என் அபிசியல் மெயில் ஐ.டி. : ABC@COMPANY.com

ஐ லவ் யூ செல்லம்..

வித் லவ்,
ABC

“இவரு தமிழ இங்கிலீஷ்ல தான் டைப் பண்ணுவாரு போலிருக்கு… தமிழ் பான்ட் நெட்டுல டௌன் லோட் பண்ணி தமிழ டைப் பண்ணு… இல்ல இங்கிலீஷ்ல டைப் பண்ணு… ஏன்ட ரெண்டும் சேர்த்து என்ன கொழப்புறீங்க…. பாரு ரெட் லைன் போட்டு ஸ்பெல்ச்செக் மிஸ்டேக்னு (Spell check) காட்ட வேண்டியதா இருக்கு….”

அந்த மெயிலில் சப்ஜெக்ட் (Subject) போட்டு பி.சி.சியில் ஐந்து பெண்களின் மெயில் ஐ.டி. போட்டு அனுப்பினான்.

“கொய்யால… ஒரே நேரத்தில அஞ்சு பொண்ணுங்ககிட்ட ஐ லவ் யூ சொல்லுறானே… அஞ்சு வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும் பார்த்தா… அஞ்சு பொண்ணுங்கல மடக்குன எக்ஸ்பிரியன்ஸ் இருக்குறவன இருக்கானே..”

“என்னடா எதோ ரிப்லை மெயில் வர மாதிரி இருக்கு…. அ ஆ… அஞ்சு பொண்ணுங்களும் ரிப்லை அடிச்சிருக்காங்க… எப்போ இவன் மெயில் அடிப்பான்… எப்பொ ரிப்லை அனுப்பனும் இருந்திருக்காங்கையா…”

ரிப்லை மெயிலில்

ஐ லவ் யூ ட செல்லம்
ஆல் தி பெஸ்ட் செல்லம்
பெஸ்ட் ஆப் லக் செல்லம்

” அடப்பாவிகளா….. அந்த பொண்ணுங்களும் செல்லம் போட்டு அனுப்பிச்சிருக்காங்க்டா…. அவ எத்தனை பேருக்கு பி.சி.சி(BCC) போட்டு அனுப்புச்சிருக்காளோ யாருக்கு தெரியும்”

“சரி விடு… மெயில் பாக்ஸ் க்ளோஸ் பண்ணிட்டான்… இனிமே வேல பார்ப்பானு நினைக்கிறேன்”

“இன்டர்நெட் எக்ஸ்போலர் ஓபன் பண்ணி ஏதோ வெப் சைட் அடிக்கிற மாதிரி தெரியுது…”

“அட நாதாரிபயலே…. யாஹூ மெசேஜர் டௌன்லோட் பண்ணுறான்யா… ஆபிஸ் விட்டு போற வரைக்கும் யாஹூ மெசேஜர்ல கடலைய போடுவானே…”

“டேய்… நாலு வின்டோ ஓபன் பண்ணி கடலைய போடுரான்னே… யாரும்மே இவன கேட்க மாட்டிங்களா… ஒரு மெசேஜ் டைப் பண்ணி… நாலு வின்டோவிலும் காபி அன்ட் பேஸ்ட் ( copy & paste ) பண்ணுறானே…. கொஞ்சமாவது வேலைய பாருங்கடா… ஐய்யோ என்னால வாய திறந்து சொல்லக்கூட முடியலியே…”

“எனக்கு மட்டும் வாய் இருந்தா உங்க ப்ராஜக்ட் மேனேஜர் கிட்ட போட்டு கொடுத்திருப்பேன்.. நீங்க வேலையா பண்ணுறீங்க…”

அந்த டெவலபர் எழுந்து சென்று மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தான்.

“எங்கடா போய்ட்டு வர… காபி மிஷின்ல காபி எடுத்திட்டு வருயாடா… ஓசி காபினா ஒரு நாளைக்கு நாலு வாட்டி குடிப்பிங்களே…

காபிக்கு, லன்சுக்கு, ரெஸ்ட்ரூமுக்கு தவிர வேற எதுக்கும் எழுந்திருக்க மாட்டான் போலிருக்கு..”

மீண்டும் எழுந்து பக்கத்து க்யூப் (cube) யில் தலையை விட்டு பேசிக்கொண்டு இருந்தான்.

“டேய் கடவுளுக்கே அடுக்காதுடா… பக்கத்து க்யூபில இருக்குறவ வேற ப்ராஜக்ட்டுட…உன் ப்ராஜக்ட பத்தி அவளுக்கு எப்படி தெரியும்… சந்தேகம் கேக்குற சாக்குல கடலைய போடுறானே… டாய்.. உன் ப்ராஜக்ட் டீம்ல இருக்குறவங்க கிட்ட சந்தேகம் கேளுடா….”
” நல்ல வேளை… உன் டீம்ல பொண்ணுங்க இல்ல…. வேலை சமயத்துலக் கூட கடலை போட்டிருப்பான்…”

மாலை 6 மணியானதும்.. அவன் செல்போனில் அலாரம் ஒலித்தது.

“எதுக்குடா… அலாரம் வச்சிருக்க.. ஆறு மணிக்கு மேல தான் வேல செய்வியா?…”

“அடப்பாவி… என்ன CTTL+ALT+DEL போட்டு எங்கட போறே…”

“ஆ…வீட்டுக்கு போய்டான்யா.. என்ன ஷட் டௌன் (shut down) பண்ணிட்டு போக கூடாதா… அது என்ன லாக் பண்ணிட்டு போறது… கரன்ட் பில் உங்க அப்பன் வந்து கட்டுவானா… கரன்ட ஏன்டா வேஸ்ட் பண்ணுறீங்க…”

” இவங்க மட்டும் ராத்திரியானா நல்லா தூங்குறாங்க… என்ன லாக் பண்ணி ராத்திரி தூங்க விடாம வேலை செய்ய வைக்கறாங்க… எத்தன வைரஸ் வந்து என்ன அட்டாக் (attack) பண்ணப்போதோ தெரியலையே…”

“அட… இது வேற.. எனக்கு சைடுல வந்து தொல்ல கொடுக்குது… இந்த வைரஸ் பேரு கூட எனக்கு தெரியுல… உன் பேரு என்ன…?”

“என் பேரு தெரிஞ்சு என்ன பண்ண போற.. ஸ்கேன் பண்ணப்போறியா…”

“அது இல்லப்பா…. சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்”

“உன் நெட்வோர்க் ஆளுவந்து கண்டு பிடிப்பான்… அப்ப தெரிஞ்சுக்கோ…”

“இந்த வைரஸ்…யாருக்கோ சிக்னல் கொடுக்குற மாதிரி தெரியுது…”

” மச்சி… நான் பி2 வைரஸ் பேசுறேன்… இங்க அன்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர் இருக்கு.. நீ ப்ரியா இருந்தா அவன ஆட்டாக் பண்ணிட்டு போ…”

” க்யூல… வந்து அட்டாக் பண்ணுறாங்களே… ஒன்னு, இரண்டு, மூன்னு…”

” என்ன எவ்வளவு வைரஸ் வந்து அட்டாக் பண்ணாளும் அடிவாங்குற மாதிரி அப்படியே எண்ணிக்கிட்டு இருக்குற…”

“போறவன் வந்தவன் எல்லாம் வைரஸ் ப்ரொகிராமுல ரூம் போட்டு அட்டாக் பண்ணுறீங்க… ஒரு கணக்கு வச்சிக்க வேண்டாமா…”

“எத்தனை வைரஸ் வந்து அட்டாக் பண்ணாளும் தாங்குதே… ரொம்ப நல்ல கம்ப்யூட்டர்டா..” என்று ஒரு வைரஸ் சொன்னது.

அடுத்த நாள் காலையில்….

கடவுச்சொல் ( Password) அடித்து புது டெவலபர் தன் வேலையை தொடங்குகிறான்.

“வந்துட்டான்யா… வந்துட்டான்… அது என்னடா பாஸ்வாட் செல்லம் வச்சிருக்க…. மனசுல பிரகாஷ் ராஜ் நினைப்பு… எனக்கு மட்டும் கை கால் இருந்துச்சு உன்ன கில்லி மாதிரி அடிச்சிருப்பேன்…”

“மறு படியும் மெயில் பாக்ஸ் ஓபன் பண்ணுறானே… யாருய்யா இவனோட ப்ராஜக்ட் மேனேஜர் இவன கேள்வியே கேட்க மாட்டீங்களா…”

“ஒருத்தன் வந்து அவன் கிட்ட பேசுறான்.. என்ன தான் பேசுறானு கேட்போம்…”

இந்த இருவரும் பேசி முடிந்ததும் கணினி தன் புலம்பலை தொடர்ந்தது.

“அடபாவி… நீ தான் ப்ராஜக்ட் மேனேஜரா… அது தான் உன் கிட்ட வந்து ஸ்டேடஸ் ரிப்போட் சொல்லுறாங்களா… ஐய்யோ.. இவன் எக்ஸல் ஷீட் தவிர எதையும் ஓபன் பண்ணி வேல செய்ய மாட்டானே… தினமும் இப்படி தான் வேலை செய்யாம கடலை போடுறத நான் பார்க்கணுமே… அந்த கடவுள் தான் என்ன காப்பாத்தணும்…”

“என்னால முடியாது… நான் ஹாங் ஆக போரேன்… யாரு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க…”

அந்த ப்ராஜக்ட் மேனேஜர் கம்ப்யூட்டரை ரிஸ்டார்ட் செய்கிறான்.

“அப்பா… ஒரு நிமிஷம் நமக்கு ரெஸ்ட் கொடுத்திட்டான்…. சந்தோஷம்….”

தன் புலம்பலை ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டது. மீண்டும் தன் புலம்பலை தொடரும்……..

– குகன் [tmguhan@yahoo.co.in] (ஏப்ரல் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *