“ஆஹா, யாரு கண்ணுலயும் படாம நம்ம கண்ணுல படுதே, அதிர்ஷ்டம் இன்னக்கி நமக்கு தான் “
பஸ்ல ஏறன உடனே சீட் எங்க இருக்குனு தேடறதுக்குள்ள என் கண்ணுல அது பட்டுடுச்சு. யாரோட ஆதரவும் இல்லாம அனாதையா காந்தி இருபது ரூபா நோட்டுல கீழ கிடக்குறாரு. அப்டியே அங்கேயே சீட்டு போட்டாச்சு. எப்படி அத எடுக்கறதுனு ஆழ்ந்த யோசனை. அப்ப தான் நண்டு சிண்டு வேல செய்ய ஆரமிச்சது.
“ யாரும் நம்மள நோட் பண்றாங்களா? “
“ நம்மள எவன் நோட் பண்ண போறான். எல்லாம் மனபிராந்தி. பேசாம அமுக்கிடு
“ வேணாம், இருபது ரூபா இனாமா கிடைச்சா, இருநூறுக்கு வேல வச்சிடும் “
“ ஒரு பாக்கெட் சிகரட் வாங்குனா பாவம் பத்து பேருக்கு ஷேர் ஆயிடும். அவ்ளோ தான் “
“ சரி, யாரும் கவனிக்காத மாதிரி எப்புடி எடுக்கறது? எடுக்கும் போது எவனாவது பாத்தாலும் ரிஸ்க் தான “
“ இப்போதைக்கு அது மேல ஒரு செருப்ப கழட்டி விடு. எல்லா பயலும் தூங்கனதும் தூக்கிட வேண்டியதான் “
கடைசியா சிண்டு ஜெயிச்சிட்டாப்ல. என்ன ஒன்னு, எல்லா பயலும் டிக்கட் எடுத்ததும் தூங்கிடுவானுங்க. நம்ம மட்டும் கொஞ்சம் முழிச்சிகிட்டு வரனும். இருபது ரூபா இனாமா கிடைக்கும் போது எவ்ளோ நேரம் வேணா முழிக்கலாம். ஆனா இப்ப மணி காலைல ரெண்டர. இந்நேரத்துக்கு கண்ட்ரோல் பண்றது கொஞ்சம் கஷ்டம் தான். காந்திக்காக இத கூட செய்யலைனா அப்றம் என்ன குடிமகன்? ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்து இருந்த போது ஒரு குரல்
“ தம்பி டைம் என்ன ஆகுது?”
யப்பா! ஒரிஜினல் குடிமகன். கடை தான் பத்து மணிக்கே குளோஸ் ஆச்சே. இன்னுமா ஸ்மெல் வரும். இல்ல பிளாகா இருக்குமோ
“ ரெண்டர “
“ வண்டி எப்ப எடுப்பான்?”
“ இப்ப தான வந்தாங்க. டீ சாப்டு எடுத்துடுவாங்க “
“ இதுக்கப்பறம் வண்டி இருக்கா?”
ஏன்? இன்னும் ஒரு ரவுண்டு போட்டு வருவனோ, “ காலைல அஞ்சு மணிக்கு திருப்பதி வண்டி தான்”
நா இன்னும் ப்ளாக் குடிமகன் ஆகல. அதுக்கு இன்னும் நாள் ஆகும். நா ஏன் இந்த வண்டில வரேன்னா, எனக்கு இந்த ரெண்டர வண்டில ஏறினா தான் காலையில ஆறர மணிக்கு வேலூர் போயி சேர முடியும். முன்னாடி பஸ்ல போனா காலையில மூணு மணிக்கே போயி நண்பன்(போலீஸ்)கிட்ட மாட்டனும். (அதிகாரம் இல்லா காவலர்கள்னு யாருங்க சொன்னது. வந்து பாருங்க, தெரியும்) திருப்பதி வண்டில வந்தா காலேஜ்க்கு லேட் ஆயிடும்.
“ மூங்கில் துறை பட்டு எத்தன மணிக்கு வரும்? “ இப்போ பாக்கும் சேந்தாச்சு. பாக்கும் பானமும் சேந்த மணம், ஆஹா! அருமை, அவரை பேச விட்டு கேட்டு கொண்டே இருக்கலாம். ஆனா இருபது ரூபா இவன் குடுப்பானா?
“ காலைல நாலு மணிக்கு “
“ தூங்கிட்டா கொஞ்சம் எழுப்பி விடுறீங்களா? , சிதம்பரத்துல இருந்து வரேன். அசதியா இருக்கு”
“ நா வேலூர் போறேன். இங்க படுத்தா திருவண்ணாமலை தான் “
“ அப்டியா? வேலூர்ல எங்க? நானும் வேலூர் தான். 96 ல இருந்து 99 வரைக்கும் அங்க தான் இருந்தேன். பெய்ண்டிங், ப்ளம்பிங், எலக்ட்ரிசியனு எல்லா வேலையும் அத்துபுடி”
“ சரிங்க, காலைல காலேஜ்க்கு போகணும். நா தூங்க போறேன். “
“ ஓ காலேஜ் படிக்கீரிங்களா? விஸ்வநாதன் தெரியுமா? சண்முகம் தெரியுமா? எல்லாம் நம்ம கட்சிகாரங்க தான். அவுங்க வீடு தெரியும்ல. நாளைக்கே நேரா அவங்க வீட்டுக்கு போயி என் பேர சொல்லி பாரு. அப்ப தெரியும் நம்பல பத்தி “
நா ஏன்டா பன்னண்டு மணிக்கு சுடுகாட்டுக்கு போகணும். கன்ன தொறந்தா தான. பாக்கலாம். கண்ணு தான் தொரக்கலையே தவிர, தூங்கவும் இல்ல, அந்த வாசனையும் மிஸ் பன்னல. எல்லாரையும் திட்டிகிட்டே இருந்தான். இப்ப படிக்கறவங்க எல்லாம் பெத்தவங்கள ஏமாத்தராங்கலாம். அவன மாதிரி அடி மட்டத்துல இருந்து எல்லா வேலையும் தெரிஞ்சிகிட்டு வரலையாம். குடிச்சா உண்மை தான் வரும் போல.நமக்கு எல்லா வேலையும் அத்துபடிங்கிறத மட்டும் மூச்சுக்கு முந்நூறு தடவ சொல்லிட்டான்.
“ சார், டிக்கட் ப்ளீஸ் “
“ திருவண்ணாமலை ஒன்னு “
“ சார், பின்னாடி ஒன்னு அவுட்டு “
என்னது! அவுட்டா? பேசிக்கிட்டே போயிட்டானா?னு கண்ண தொறந்தா கண்டக்டர சேத்து நாலு காக்கி நிக்குது. தூக்க கலக்கத்துல கண்டக்டர் யாரு செக்கர் யாருன்னு கண்டுபுடிக்கவே அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு.
“ சார், சாரி சார், தூங்கிட்டேன் போல, இப்ப எடுத்துடறேன் சார்”
“ எங்க ஏறுநீங்க? “
“ கள்ளகுறிச்சி ”
“ சார், பஸ் மூங்கில்துறைபட்டு வர போகுது, அஞ்சு ஸ்டேஜ் குளோஸ் பண்ணியாச்சு. இப்ப வந்து தூங்கிட்டேன்னு சொல்றீங்க? “
“ ஏம்பா! தூக்கம் வந்தா பஸ் ஸ்டாண்ட்ல படுத்து தூங்க வேண்டி தான? எதையாவது குடிச்சிட்டு வந்து படுத்துகிட்டு எங்க உயிர எடுக்க வேண்டியது. அங்க இருந்து அவ்ளோ கத்து கத்தறேன் யாரு சீட்டு வாங்கனும்னு” கண்டெக்டர் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார்.
“ சார், தேவையில்லாம பேசாதீங்க. எவ்ளோ பைன்னோ நா கட்டிறேன்.” குடிக்காமலே குடிகாரன்னு பேரு எடுத்தா எவ்ளோ வலி இருக்கும். அவ்ளோ பேருக்கு நடுவுல நமக்குன்னு சுயகௌரவம் இருக்குல்ல.
“ ஐநூறு பைன். இந்தா இதுல கையெழுத்து போடு. வித் அவுட், வீம்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல “
கண்ணீரோட பர்ஸ்ல இருந்து அஞ்சு நூறு ரூபா நோட்ட எடுத்தேன். கொஞ்சம் அவசரபட்டுட்டமோ, பேசி பாத்ருக்கலாம். அத எடுக்கும் போதே இருபது, பஸ் டிக்கட்லாம் போக எவ்ளோ நஷ்டம், அத எப்படி பட்ஜெட்ல சரி கட்ட்லாம்னு ஒரு ரிவியூ ஓடிடுச்சு. எல்லா சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்சுது. இனி எவனுக்கு பயம். குனிஞ்சு இருபது ரூபா நோட்ட எடுத்துட்டு பாத்தா.
“ தூங்கும் போது விழுந்துடுச்சு. என்னதுங்க “ன்னான் குடிமகன்.
அவனோடது இல்லன்னு அவனுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். சொன்னா எவன் நம்புவான். ஏற்கனவே குடிகாரன், வித் அவுட்டு. இதுல இவன் வேற. வாங்கிட்டு போயிட்டான். நஷ்டத்துல இருபது ரூபாவ பிளஸ் பண்ணிட வேண்டியது தான். புல் டென்சன். யாரு மேல கோபப்படுறது. அப்டியே கம்முனு உக்காந்து கண்ண மூடிகிட்டேன். கண்ண மூடுனா தாரை தாரையா ஊத்துது. ஒரு வழியா பஸ் ஸ்டாண்ட் வந்துடுச்சு. நா முன்னாடியே டர்னிங்ல இறங்கிட்டேன். மணி விடியற்காலை நாலரை.
ஒரு சிகரட்ட வாங்கி பத்த வச்சி, நீண்ட இழுப்பு ரெண்டு தான். கடைகாரன்கிட்ட போனேன்.“ அரை பாக்கெட் பில்டர். இங்க பிளாக்ல எங்க கிடைக்கும்? “ னு சொல்லி கைய தூக்கி ஒரு முழம் காமிச்சேன்.
“ சப்ப மேட்டர் சார், ரம் ஓகே வா, பின்னாடி பக்கமா வா சார், நம்ம கிட்ட எல்லாத்துக்கும் ஆளு இருக்கு” ன்னான்.
என் காதுல ‘எல்லாம் வேலையும் நமக்கு அத்துபுடி’யும் ‘நம்ம கிட்ட எல்லாத்துக்கும் ஆளு இருக்கு’ ஒரே மாதிரி தான் கேட்குது
—————————————————————————————————————————————-
இருபது ரூபா நோட்டு