ஆண்டவனின் படைப்பில் சில நேரங்களில் சில முடிவுகள்
ஈஸ்வரன் கோயில் மணி அடித்து ஒய்ந்தது மணி சத்தத்தை கேட்டு விழித்துக்கொண்டான் ஜெயராமன். தன்னை சுற்றி நோக்கியவன் வேட்டியை சரி செய்தவாரே டீ கடையில் நுழைந்து ஒரு டீ என்றான். டீக்கடைக்காரன் தேநீரை அவன் முன் நீட்டினான். டீ குடித்தவன் மீண்டும் குளக்கரையை அடைந்தான். யாருமற்றவனாக இருந்தான் ஜெயராமன். வீடு அற்று தொழில் அற்று தோன்றிய வாறு தொழில் செய்வது காசு கிடைத்தால் தேவையானவற்றை உண்பது கிடைக்காத போது பட்டினியாக இருப்பது இப்படிதான் நடந்தது கொண்டிருந்தது அவனது வாழ்க்கை.
குளக்கரை சுற்றி உள்ள வணிகர்கள் ஜெயராமனை பார்த்து ஒரிருவர் சில நேரங்களில் உணவு பொட்டலங்களை கடைகளிலிருந்து வாங்கியும் தருவார்கள்.; எதுவும் மறுப்பற்று எற்பான்.; ஜாதிமதம் அற்று எல்லா வியாபாரிகளும் தன்னால் ஆன உதவியை செய்வர் அதையும் ஏற்பான் ஜெயராமன் இந்நிலையில் தான் அன்வர் என்ற பரிசு சீட்டு வியாபாரி இவனுக்கு உதவி செய்ய தோன்ற “ஜெயராமா இன்னிக்கு நான் விற்ற பரிசீட்டில் கடைசி சீட்டு இருக்க நீ எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடு போதும்” என்றான். ஜெயராமன கையில் இருக்கும் 5ரூபாய் தாளையும் 2ரூபாய் காசையும் அவனிடம் கொடுத்தான். பரிசு சீட்டை ஜெயராமனிடம் கொடுத்த அன்வர் இதை எங்கே வைக்கப்போறே என்ற கேள்வியை எழுப்ப “எல்லாம் என் துணிப்பையிலே வை ” என்றான் அன்வரும் அவன் கூறிய துணிமூட்டையிலே வைத்தான்.
நாட்கள் நகர்ந்தன மாலை முடிவுகள் செய்தித்தாளில் வர அன்வர் அதை பார்க்க ஜெயராமனின் எண் கொண்ட பரிசு சீட்டுக்குத்தான் முதல் பரிசு என்பதை தெரிந்து கொண்டான். பரிசுத்தொகை ஒரு கோடி என்றும் இருந்தது தரையில் கால் பாவாமல் அன்வர் பறந்து வந்தான் என்றே கூறவேண்டும்.
ஜெயராமா! ஜெயராமா! என்று கூவிக்கொண்டே குளக்கரை முழுவதும் சுற்றினான் கடைசியில் டீக்கடையில் அவனை கண்டு கொண்டான் ஜெயராமனை இறுக அணைத்தான் உனக்கு தான் முதல் பரிசு ஒரு கோடி என்றான் பரிசு சீட்டு எங்கே என்றான்.
நீ தானேடா துணிமூட்டைக்குள்ளே வைச்சே என்றான் ஜெயராமன்.
துணிப்பையை அவசரமாக பிரிக்க அதிலிருந்து துணிகள் ஈரத்துடன் வந்து விழுந்தன அத்துடன் பரிசு சீட்டும் நயந்து கிழிந்து சுக்கு நூறாக வந்து தரையை தொட்டது. தலையில் கையை வைத்த அமர்ந்த அன்வர் எழவேயில்லை.
ஜெயராமன் எழுந்து சென்று தான் குளக்கரையை அடைந்து தூங்கவும் தொடங்கினான்.
ஆண்டவனின் அசட்டையான நேரத்தில் இவனது பிறப்பு நிகழ்ந்ததோ?.