அற்புதம்மாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 7,115 
 
 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் திரு அண்ணாமலையார் கோயில் இராஜாகோபுரம் எதிர் தெருவே பூ கடைகளிலும் தேங்காய் கடைகளிலும் கூட்டம் எப்பொழுதுமே இருக்கும். அண்ணாமலையாருக்கு பூஜை செய்ய தேவையானவற்றை வாங்க வேண்டுமல்லவா. அதில் சுரேஷ் தினமும் அண்ணாமலையாரை காலையில் தரிசனம் செய்வதை தனது அன்றாட பணிகளில் ஒன்றாக வைத்திருந்தார்

அன்று சனிக்கிழமை பிரதோஷ நாளாக இருந்தது. சனி பிரதோஷம் என்பதால் வழக்கத்தை காட்டிலும் சற்று கூடுதலான மக்கள் அண்ணாமலையாரை வணங்க வருவார்கள் என்பதால் அவர்களுக்கு அண்ணதானத்தை வழங்க முடிவு செய்தார்.

சுரேஷ் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் தாய் தந்தை கிடையாது. ஆனாலும் ஒரு தாய் தந்தையாக அவரது மனைவி காவேரி தான் அவரை பார்த்துக்கொள்வாள். இவர்களுக்கு “வள்ளி, தமிழிசை” என இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். வள்ளி ஆறாம் வகுப்பும் தமிழிசை நான்காம் வகுப்பும் அரசு பள்ளியில் பயன்று வருகிறார்கள்.

இவர்களுக்கென எந்த சொந்த பந்தங்களும் கிடையாது. தனி குடும்பமாகவே வாழ்கிறார்கள். அவரது சொந்த உழைப்பாலும் முயற்சியாலும் நல்ல நிலைக்கு வந்தவர். சொந்தமாக ஐந்து ஹாட்டல் வைத்து நடத்தி வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் மற்றும் கடை செலவிற்கு போக மீதம் வரும் பணத்தை வைத்து ஏழை குடும்ப மாணவ மாணவிகளை படிக்க வைப்பது தனது சேவையாகவே வைத்துக் கொண்டார்.

சனி பிரதோஷம் தொடங்கியதும் சுரேஷ் அண்ணதானத்தை வழங்க தயாராக இருந்தார் அண்ணாமலையாரை தரித்துவிட்டு வரும் பக்தர்களுக்கு அண்ணம் வழங்க தொடங்கினார். அதில் 75வயதுடை மூதாட்டி ஒருவர் வந்து அண்ணத்தை வாங்கிக் கொண்டு சுரேஷை வாழ்த்தினார். அந்த வாழ்த்தை பெற்றுக் கொண்ட சுரேஷ் அடுத்து வருபவர்களை உபசரிக்க தொடங்கிவிட்டார்.

பிரதோஷமும் முடிந்தது கோயில் ராஜகோப்புரத்தின் கதவுகளும் தாழ்ழிடப்பட்டது. சுரேஷம் அண்ணதானத்தை வழங்கி முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

சுரேஷ் மறுநாள் காலை வழக்கம் போல கோவிலுக்கு வந்தார். அவர் அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு வெளியே வரும் போது ஒரு மூதாட்டி அவரை இடைமறித்து இன்று இரவும் ஏதேனும் உணவு தருவீர்களா ஐய்யா? என்று கேட்டாள்
அதற்கு சுரேஷ் இல்லை அம்மா நேற்று பிரதோஷம் என்பதாலும் யாரும் பசியோடு இங்கிருந்து போகக்கூடாது என்பதற்காகவும் உணவு வழங்கினேன் அம்மா.

உங்களுக்கு உணவு வேண்டுமானால் சொல்லுங்கள் ஏற்பாடு செய்கிறேன்..

இல்லை ஐய்யா வேணாம் என் ஒருத்திக்கு எதுக்கு வேணாம் நீ சொன்னதே போதும் நீங்கள் செல்லுங்கள் ஐய்யா.

சரி அம்மா… உங்கள் பெயர் என்ன..? எந்த ஊர் நீங்கள்?

என் பெயர்லாம் எதற்கு சாமி நீ போ நான் பார்த்துக் கொள்கிறேன்.

இல்லை அம்மா உங்கள் முகத்தில் ஏதையோ பறிக்கொடுத்துவிட்டு அதை தேடி வந்ததைப் போன்றே எனக்கு தெரிகிறது.! உங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்களா? அல்லது உங்களை கவனித்துக்கொள்ள யாருமில்லையா எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் அம்மா என்னால் முடிந்த உதவிகளை நான் செய்கிறேன்.

எனக்கு எந்த உதவியும் வேணாம் சாமி உன்னிடம் கேட்டது என் தவறு. நான் என்னை பார்த்துக் கொள்கிறேன் உன் உதவிக்கு நன்றி.

அம்மா நான் சொல்வதை கேளுங்கள்?

இல்லை ஒன்றும் வேணாம். என அந்த மூதாட்டி சென்றுவிட்டாள்.

அவரும் சரியன வீட்டிற்கு சென்றார் அனாலும் அவரின் மனதில் அந்த மூதாட்டியை பற்றின கவலையே அதிகளவில் இருந்தது..

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் கோவில் அருகே இருக்கும் தேங்காய் கடை அருகில் படுத்திருந்தாள் அந்த மூதாட்டி.

பார்த்ததும் பார்க்காததைப் போன்று முக பாவனைகளை செய்தாள்.

சுரேஷும் அந்த தேங்காய் கடையில் அண்ணாமலையார் பூஜைக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டிருந்தார். அந்த தேங்காய் கடைக்கார் பெயர் நாகராஜ். சுரேஷிற்கு தெரிந்தவரும் கூட.

தானும் அந்த மூதாட்டியை பார்க்காததைப் போன்றே அங்கிருந்து கோயிலுக்குள் சென்றுவிட்டார். தரிசனம் முடித்த பிறகு மீண்டும் அந்த மூதாட்டியை பார்க்க வந்தார். ஆனால் மூதாட்டி அந்த இடத்தில் இல்லை.

தேங்காய் கடைக்காரர் நாகராஜிடம் சென்று அந்த மூதாட்டியை பற்றிக் கேட்டார்.

இங்க ஒரு மூதாட்டி இருந்தார்களே எங்க சென்றார்கள் அவர்களை நீங்கள் கவனித்திர்களா..?

இல்லை ஐய்யா நான் பார்க்கவில்லை.!!!

சரி நாகராஜ். நான் சென்ற பிறகு மூதாட்டி ஒருவர் உன் கடை பக்கத்தில் தான் படுத்துக் கொள்கிறது என நினைக்கிறேன்.
அப்படி ஒரு வேலை அவர்கள் வந்தாள். உன்னிடம் உணவு கேட்டால் நீ தயங்காமல் அவர்களுக்கு தேவையானதை செய் அதற்கு நான் பணத்தை உனக்கு தருகிறேன்.

சரி ஐய்யா நான் பார்த்துக்கொள்கிறேன்.

முடிந்தாள் அந்த மூதாட்டியின் விபரங்களை கேட்டு தெரிந்துக்கொள் சரியா!

சரிங்க ஐய்யா……!

சரி நாகராஜ் நான் வருகிறேன் என அங்கிருந்து சென்றுவிட்டார்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் அந்த மூதாட்டியை அதே தேங்காய் கடை நாகராஜ் கடையின் அருகே படுத்திருந்தாள் அவளின் அருகாமை ஒரு பிச்சை பாத்திரம் இருந்தது அதில் ஒரு ரூபாய் நாணயம் இரண்டும், ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றும் இருந்தது.. ஆனால்
மூதாட்டிக்கும் அந்த பாத்திரத்திற்கும் எவ்வித சம்மதமே இல்லாததைப் போன்று தனியாக வைக்கப்பட்டிருந்தது.

சுரேஷ் அந்த மூதாட்டியை பார்த்ததும் பார்க்காத மாதிரியே சென்று விடுவார். தேங்காய் கடை நாகராஜிடம் கேட்டாலும் சரியான பதில் கிடைக்காது. ஆனாலும் அந்த மூதாட்டியை அவர் ஒரு மாதமாகவே கண்காணித்தப்படியே இருந்தார். அந்த மூதாட்டியின் தன்மான குணத்தை பார்த்து வியந்தும் அவளை பற்றின தகவனை எப்படியாவது தெரிந்துக்கொள்ள வேண்டும் என சுரேஷ் துடித்தார்.

சரியாக இரண்டு மாதம் கழித்து தேங்காய் கடை நாகராஜிடம் மீண்டும் சுரேஷ் கேட்டார் அந்த மூதாட்டி பற்றிய தகவல் எனக்கு வேணும் நீ எப்படியாவது எனக்கு உதவி செய் என்றார்.

தேங்காய் கடை நாகராஜ். சுரேஷ் ஐய்யா இந்தம்மா பெயர் அற்புதம்மாளாம் எதோ வெளி ஊராம் மற்ற விவரங்கள் எதுவும் எனக்கு அந்த அம்மா சொல்லவில்லை கேட்டாளும் அந்த கெழவி வாய்யை திருக்கமாட்டேன்கிறது நானும் எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன் ஆனாலும் மற்ற விபரங்களை பெற முடியவில்லை ஐய்யா..

அவ்வளவு அழுத்தம் கொண்டவர்களா ம்ம்ம்ம்…..

ஆமாம் ஐய்யா சரியான நெஞ்சழத்தக்காரி..

உங்களிடம் கூட எந்த வார்த்தையும் சொல்லக்கூடாது என்றே பிறகே அவளின் பெயரை சொன்னாள் என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

சரி பார்க்க பாவமாக இருக்கேனு நான் தான் அந்தம்மாக்கு மூன்று வேலையும் சாப்பாடு வாங்கித்தருகிறேன். அதுமட்டுமில்லாமல் என் கடை பக்கத்திலேயே தங்க வைக்கிறேன் இரவிலுல் என் கடையில் படுத்துக் கொள்ளும் சில நேரம் அந்த அம்மாவே பிச்சை எடுக்கிற பணத்தை வைத்து சாப்பாட்டை வாங்கி சாப்பிடும் அதுவும் மத்தவங்க மனம் நோகமா நடந்துக்கிறாங்க அதற்காகவே நான் இந்த மூதாட்டியை பார்த்துக்கொள்கிறேன்.

நல்ல குடும்பத்தை சார்ந்தவர்கள் போல தெரிகிறது ஐய்யா..

ஆம் நீ சொல்வதும் சரி தான் நாகராஜ் அந்த மூதாட்டியை பார்க்கும் போதே தெரிகிறது. என்ன பண்ண பெத்தவங்களோட அருமை தெரியாதவர்கள் செய்கின்ற வேலை தான் இது. நாளை அவர்களுக்கும் இதே நிலைமை திரும்ப இவர்களுக்கே வரும் என்று தெரியாமல் சற்றும் யோசிக்காமல் செய்கிறார்கள் சரி நீ உன் வியாபாரத்த பாரு.

சரிங்க ஐய்யா…

நாகராஜ் நான் இரண்டு நாட்களுக்கு வர முடியாது வேலை விஷயமாக வெளிமாநிலத்திற்கு செல்கிறேன். இந்த அம்மாவை நான் வரும் வரையிலும் நீ பார்த்துக்கொள். நான் திரும்ப வந்து அற்புதம்மாவை என் வீட்டிற்கு கூட்டிச் செல்கிறேன் அது வரை உன் பொறுப்பில் இருக்கட்டும் சரியா.?

சரிங்க சுரேஷ் ஐய்யா ஆனால் அந்த கிழடை நீங்க ஏன் கூட்டிச் செல்ல போகிறீர்கள் ? அது என் கடையில் ஒரு பக்கமாக கிடக்கட்டும் உங்களுக்கு தேவையில்லாத சிரமம் தானே ஐய்யா

நான் சொல்வதை மட்டும் நீ கேள் நாகராஜ்?

சரிங்க ஐய்யா நீங்கள் சொன்ன சொன்னது தானே நான் பார்த்துக் கொள்கிறேன்..

நன்றி நாகராஜ் நான் வருகிறேன்.

நன்றி எல்லாம் வேண்டாம் ஐய்யா நான் பார்த்து கொள்கிறேன். நீங்கள் சென்று வாருங்கள் ஐய்யா.

ம்ம்ம்…. நல்லது நாகராஜ்.

இருவரும் பேசியதை அனைத்தையும் அற்புதம்மாள் அமைதியாக கேட்டுக்கொண்டே படுத்திருந்தாள்.

சுரேஷ் சொன்னதைப் போன்றே இரண்டு நாட்கள் கழித்து நேரக நாகராஜ் வைத்திருக்கும் தேங்காய் கடையின் அருகில் வந்து பார்த்தார் அங்கே அற்புதம்மாள் காணவில்லை சரி கிரிவலம் செல்லும் வழியில் இருப்பார்களோ என தேடினார் ஆனாலும் அற்புதம்மாள் சுரேஷ் கண்களுக்கு புலப்படவில்லை..

சரி நாகராஜை கேக்களாம் என்றாலும் அவன் கடையும் பூட்டிருந்தது நாகராஜ் வாடகை இருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கே நாகராஜ் வீட்டின் முன் சமைத்துக் கொண்டிருந்தான் அவனிடம் அற்புதம்மாள் எங்கே இருக்கிறாள் உன் கடையின் அருகே இல்லையே என்றார்.

அப்படிங்களா? இப்போதான் நான் அந்த அற்புதம்மாளுக்கு சாப்பாட்டை வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன் ஐய்யா

ஆனால் அந்த மூதாட்டி அங்கே இல்லையே நாகராஜ்

அதான் எனக்கும் தெரியவில்லை ஐய்யா?

சரி பார்ப்போம் நாகராஜ் அந்த பாட்டி இங்கே தான் எங்கையோ இருக்கிறது என்றே தோன்றுகிறது..

சும்மா விடுங்க ஐய்யா அந்த கெழவிய பற்றிய பேசிக்கிட்டு போகட்டும் விடுங்க என வெடுக்கேன பேசினான்.

அற்புதம்மாள் தேடிக் கிடைக்கவில்லை என்ற கவலையில் அவரது வீட்டிற்கு சென்றார்.

அங்கே அவருக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அந்த மூதாட்டி சுரேஷ் வீட்டின் முன் அமர்ந்திருத்தாள்..

சுரேஷ்க்கு எதுவும் புரியவில்லை பாட்டி கிடைத்தது விட்டதை நினைத்து எதுவும் பேசாமல் வீட்டிற்குல் சென்று மனைவியிடம் சொல்லி மூதாட்டியை அழைத்து வர சொன்னார்.

அவரின் மனைவி காவேரியும் வீட்டிற்கு வெளியே இருந்த மூதாட்டியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார் வந்ததும். மூதாட்டிக்கு மனைவி மற்றும் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்தார். அற்புதம்மாள் தங்குவதற்கு என தனி அறை ஒதுக்கிக் கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டார்.

இரண்டு வாரம் அற்புதம்மாளை நன்றாக சுரேஷ்பார்த்துக் கொண்டார் வீட்டை விட்டு வெளியே எங்கும் அழைத்துப் போகவில்லை அவரும் காலை மாலையும்
அற்புதம்மாளுடன் நேரத்தை செலவு செய்தார். அவர் தினமும் தரிசிக்கும் அண்ணாமலையாரையும் பார்க்க செல்லவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..

அற்புதம்மாளிடம் எந்த கேள்வியும் கேட்க்காமல் இருந்தார்கள் காவேரிக்கும் சுரேஷூக்கும் அம்மா கிடைத்த சந்தோஷம் அவர்களின் முகத்திலும் மனதிலும் தெரிந்ததை உணர்ந்தாள் அற்புதம்.

குழந்தைகளுக்கும் பாட்டி இல்லாத குறையை தீர்த்து வைத்தாள். சிறுவயதில் கிடைக்காத
அம்மாவின் பாசம் இப்போது தான் கிடைத்துள்ளது என நம்பினார் சுரேஷ்.

ஒரு மாதம் கழிந்தோடின சுரேஷ் குடும்பத்தில் நீங்க இடம் பெற்றாள் அற்புதம்மாள். அவர்களின் பாசத்தில் தினமும் கண்கலங்குவாள் ஆனால் அவளின் மனதில் இருப்பதை மட்டும் வெளியே சொல்ல மறுத்துவிடும்.

அன்று வெள்ளிக்கிழமை சுரேஷ் குடும்பத்துடன் அண்ணாமலையாரை தரிசிக்க வந்தார்கள்.

தேங்காய் கடை நாகராஜிடம் பூஜைக்கான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது நாகராஜ் ஐய்யா அந்த கெழவி இங்கு எங்குமே இல்லை நானும் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.

சரி விடு நாகராஜ் அந்தம்மா எங்க போனா நமக்கேன்ன இருக்கு நீ வியாபாரத்த பாரு..!

ம்ம்ம்… இப்போ சொன்னிங்கள இது சான் சரியான பதில் ஐய்யா..

சரி நாகராஜ் நாங்க அண்ணாமலையாரை பார்த்துவிட்டு வருகிறோம் என்றார்.

நாகராஜ் சுரேஷ் குடும்பத்தை பார்த்துக் கொண்டே இருந்தார் அதில் ஒரு நபராக அற்புதம்மாளும் இருந்தாள். நல்ல சிகை ஆலங்காரம் செய்துக் கொண்டும் பட்டு புடவை கழுத்தில் தங்க சங்கிலி என பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தாள்.

இந்த 75வயது கெழவிக்கு கிடைத்த வாழ்வ பாறேன் என்பதை போன்ற தோற்றத்தில் இருந்தாள் அற்புதம்மாள்.

தனது கடையின் பக்கத்தில் பிச்சையெடுத்த கெழிவிய பாரு என நாகராஜிக்கும் கோபம் தலைக்கெரியது.

சுரேஷ் கோவிலை விட்டு வெளியே எப்போது வருவார்கள் என்று நாகராஜ் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

குடும்பத்துடன் கோவிலை விட்டு வெளியே வந்தார் சுரேஷ் வந்ததும் என்னய்யா இந்த கெழவிய போய் உங்க வீட்ல வச்சிருக்கிங்க வெளிய துறத்திவிடுங்க ஐய்யா..

ம்ம்ம்… அதலாம் முடியாது நாகராஜ் இப்போது அவர்கள் எனக்கு “தாய்,” என் பிள்ளைகளுக்கு “பாட்டி” நீ சொல்வதை என்னால் கேட்க்க முடியாது.

சரிங்க ஐய்யா உங்கள் விருப்பம்.!!

ம்ம்ம்ம்ம்… என சொல்லி நகர்ந்தார் சுரேஷ்.

அற்புதம்மாளை ராணி போல் வைத்து பார்த்துக் கொண்டார் சுரேஷ்.

அற்புதம்மாளை தங்களது சொந்த அம்மாவை போன்று கவனித்துக் கொண்டார்கள் அப்போது…

தீடிர் என நாகராஜ் சுரேஷ் வீட்டிற்கு வந்து

என் அம்மாவை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் ஐய்யா என கேட்டான்

உன் அம்மாவை ஏன் என்னிடம் கேட்கிறாய் நாகராஜ்?

அது வந்து ஐய்யா உங்களுடன் இருக்கும் அற்புதம்மாள் தான் என் அம்மா.

அப்படியா நாகராஜ் எனக்கு வேடிக்கையாக உள்ளது நீ சொல்வது?

உண்மை தான் சுரேஷ்ஐய்யா நீங்கள் வேண்டுமானால் என் அம்மாவிடமே கேளுங்கள்.

சுரேஷ் அற்புதம்மாளை அழைத்து கேட்டார். அதற்கு அவளோ இவனா என் மகன் இல்லை இவன் இல்லை.?

நாகராஜ்க்கு கண்கள் கலங்கியது.

அற்புதம்மாள் சொன்னாள் என் மகன் இறந்து இன்றோடு ஒரு ஆண்டு முடிந்துவிட்டது எனக்கேன யாருமில்லை.

இப்போது எனக்கு மகன் மகள் பெத்திகள் இருப்பது இவர்கள் மட்டுமே இவன் சொல்தை நம்பாதே வெளியே அனுப்பு சுரேஷ்

சரிம்மா… நீங்க சொன்னதே நாகராஜ்க்கு கேட்டிருக்கும் பிறகு நான் வேற சொல்ல வேண்டுமா என்ன?

உண்மை எதுவென நான்சொல்கிறேன் சுரேஷ் ஐய்யா என்று சென்னான் நாகராஜ்.

சரி சொல் எது உண்மை என பார்ப்போம் என்றார் சுரேஷ்.

எங்கள் குடும்பத்தில் நான் ஒரே மகன் என் பெயர் யாகேஷ் வசதியான குடும்பம் தான் தந்தை குமாரசாமி அம்மா அற்புதம்மாள் மிகுந்த ஒழுக்கம் கொண்டவர்கள். யாரையும் தவறிக்கூட மனம் நோகும்படி வார்த்தைகளை விடமாட்டார்கள் அப்படிப்பட்டவர்களை இன்று ரோட்டில் யாரும் இல்லாமல் படுக்க வைத்துவிட்டேன்.

நான் பத்தாம் வகுப்பு வரையில் தான் படித்தேன் அப்பாவின் சுயதொழிலை நான் செய்ய ஆரம்பித்தேன் அதன் மூலம் மாபெரும் வளர்ச்சியில் உயர வளர்ந்துவிட்டேன்.

என் அம்மாவின் வழி சொந்தத்திலேயே லட்சுமி என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

இன்றோடு எங்களுக்கு திருமணம் நடந்து 10த்தாண்டுகள் முடிந்துவிட்டது. எங்களுக்கு மோனிக்கா ரம்யா பிரியா என மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும் என் சொத்தை ஆள்வதற்கும் என் பெண்களை கவனித்துக்ரி கொள்ளவும் ஒரு ஆண் குழந்தை வேண்டும் என நினைத்தேன்.

என் மனைவிக்கு முதல் குழந்தை தான் பெண்ணாக பெற்றுவிட்டாம் இரண்டாவதாவது ஆண் வாரிசு வேண்டும் என்றே எண்ணம் அதிகமாக எங்கள் இருவருக்கும் இருந்தது. என் மனைவி லட்சுமி இரண்டாவதாக கர்ப்பம் ஆகும் போதே அது ஆண் குழந்தையாக தான் இருக்கும் என என் அம்மா அற்புதம்மாள் எனக்கு நம்பிக்கை ககொடுத்தாள் சொன்னாள். நானும் அதை முழு மனதோடு நம்பி சந்தோஷத்தில் இருந்தேன் ஆனால் பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்ததும் மனமுடைந்துவிட்டேன்.

அப்போது இந்த அற்புதம்மாள் தான் எந்த குழந்தையாக இருந்தால் என்னப்பா உன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்வாள் இப்போது எல்லாம் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் தான் அம்மா அப்பா என்று கவனித்துக் கொள்கிறது என்று எனக்கூ ஆறுதல் சொன்னாள்..

பிறகு ஒரு வருடம் சென்றது மூன்றாவது குழந்தை ஆண் வாரிசாக தான் வர வேண்டும் என்ற எண்ணத்தில் ஜோதிடர்களை சந்தித்து ஆலோசனையும் பெற்றேன்.

ஜோதிடர்கள் குறித்துக்கொடுத்த நாட்களில் தான் எல்லாவற்றையும் செய்தேன். தனக்கு ஆண் பிள்ளை பெற்றுத்தரவில்லை என்றால் மனைவியையும் விட்டு இரண்டாவது திருணம் செய்துக் கொள்ளவும் நான் தயாராகவே இருந்தேன்..

மூன்றாவது முறையும் லட்சுமி கர்பமானாள் ஐந்தாவது மாதத்தில் மருத்துவமனையில் மருத்துவரின் ஆலோசனை படி என்ன குழந்தை என்று ஸ்கேன் செய்தும் பார்த்தேன்.

அந்த ஸ்கேனிலும் பிறக்கப் போவது ஆண் குழந்தை தான் என மருந்தவரும் என சந்தேகிக்காதபடி சொல்லிட்டார்..

இப்போது பிறப்பது ஆண் குழந்தையாக தான் இருக்கும் என முழு நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பில் இருந்தேன்.

ஆனால் என் அம்மா அற்புதம்மாளும் என் மனைவி லட்சுமியும் மனக் கலகத்திலேயே இருந்தார்கள் ஒரு வேலை மீண்டும் பெண் பிள்ளையாக பிறந்துவிட்டாள் என்ன செய்வது என்று குழப்பத்தில் நாட்களை கடத்தினார்கள்..

மூன்றாவது பிரசவத்திற்கு லட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தேன்.

பிறக்கப் போவது ஆண் குழந்தை தான் என்ற நம்பிக்கையில் எங்களது வீட்டை திருவிழாவில் தேர் ஜோடிப்புகளை போன்று அலங்கரிக்க உத்தரவிட்டு மருத்துவமனை வெளியே காத்திருந்தான்..

குழந்தையும் பிறந்தது என் முகத்தில் பயமும் பதட்டமும் தோற்றிக்கொண்டிருந்தது என்ன குழந்தை பிறக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் காத்திருத்தான்.
ஆனால் மூன்றாவதும் பெண் குழந்தை தான் பிறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

எனக்கு கோபம் அதிகரித்தது ஆண் குழந்தைதான் என்று நம்பிக்கையாக சொன்ன மருத்துவரை கேட்டு அடித்துவிட்டு வெளியே சென்றுவிட்ன்டேன். மீண்டும் என் மனதை தேற்றிக் கொண்டு சரியாக ஒரு மாதம் கழித்தே வந்து என் பெண் குழந்தையை பார்த்தேன் பெயரையும் வைத்தேன்.

இரண்டு மாதம் எங்கும் போகாமல் வீட்டிலேயே முடங்கிவிட்டேன். ஊர் மக்கள் என்னை பற்றி என்ன நினைக்கிறார்களோ என்ன அச்ச உணர்வே அதிகமாக போனது.

என் அம்மாவின் மரபுவழி சொந்தங்கங்களுக்கு எல்லோருக்குமே பெண் குழந்தைகள் தான் பிறந்திருக்கு. அந்த மரபு வழியில் தான் என் மனைவியும் ஆகையால் ஆண் குழந்தை பிறக்காது என ஊர் மக்கள் சொல்வதாய் எனக்கு சிலர் சொன்னார்கள்.

என் மனம் மேலும் உடைந்து போனது நான் நேராக என் மனைவியிடம் சென்று மனதில் இருப்பதை வெளிப்படையாக சொன்னான். அவளும் பதில் பேசாமல் அழுதாள்.

சற்று அமைதியானால் எனக்கும் வேதனை தாங்க முடியவில்லை சரியன ஒரு முடிவெடுத்தேன்.

நான் இதற்கு முன் பார்த்த ஜோதிடரிடமே சென்று முறையீட்டேன் நீங்கள் சொன்னதைப் போன்றே தானே இருவரும் செய்தோம் ஆனால் எப்படி எங்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது என கேட்டேன்.

அதற்கு அந்த ஜோதிடர் மீண்டும் எதை எதையோ எடுத்தார் கைவிரல்களை எண்ணி நாட்களை போட்டு பார்த்துவிட்டு சொன்னார்.

இப்போது உங்களின் அம்மாவின் ஜாதகம் படி பார்த்தால் ஏழரை சனி நடக்கிறது அதுவும் வக்கர சனி என்பாலும் உங்களுக்கு நடக்க வேண்விடிய நல்லது யாவும் இப்படியே தான் தட்டி பறித்துக்கொள்ளும். நீங்கள் விருப்பும் குழந்தை உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் தனியாக இருக்க வேண்டும் அதுவும் உங்கள் அம்மாவிற்கு ஏழரை சனி முடியும் வரையில் என்றார்.

இதை கேட்டதில் இருந்து மனம் மேலும் உடைந்து போனது அம்மாவை எப்படி தனியாக விட முடியும் என யோசித்தேன்.

பிறகு என் மனதை கல்லாக்கிக் கொண்டு அம்மாவை தனியாக தங்க வைக்க முடிவு எடுத்துவிட்டேன் இதை என் மனைவிக்கும் மற்றும் அம்மாவிற்கும் சொல்லினேன் அம்மா உடனே நான் சொன்னதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நான் வெளியே போகிறேன் என்றாள். என் மனைவிக்கோ என்னிடம் என்ன சொல்வது என்றே தெரியாமல் மயங்கினாள்.

ஏனென்றால் நான் அவர்களுக்கு திருமணமாகி 16 வருடங்கள் கழித்தே பிறந்தேன் என் மீது பாசம் கொண்டவள் தந்தை இல்லாத கவலையை சிறிதும் எனக்கு கொடுக்காத அம்மாவை விட்டு இருக்க மனம் எப்படி தான் ஒற்றுக்கொள்ளும் ஆனாலும் எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக அம்மாவை பிரித்தேன்.

தனியாக வீடு வாடைக்கு எடுத்து அதில் அவர்களை தங்க வைத்தேன் ஆனால் என் அம்மா ரோசம் கொண்டவள் என்னை அவர்களின் செலவுக்கும் வீட்டின் வாடகைகக்கும் பணம் நீ தரக்கூடது நீ யாரோ நான் யாரோ என சொல்லி முடித்துவிட்டாள்.

சரி எல்லாம் நமக்கு ஆண் குழந்தை பிறக்கும் வரையில் தானே என நினைத்துக் கொண்டு அமைதியாக வீட்டிற்கு வந்துவிட்டேன்.

நான்கு மாதம் கழித்து மீண்டும் என் மனைவி லட்சுமி கர்ப்பவதியானால். ஆனால் அதை என்னால் சந்தோஷமாக எற்றுக் கொள்ள முடியவில்லை. என் அம்மாவையும் பிரிந்த துயரம் வேறு என்னை கொன்று தீர்க்க ஆரம்பித்தது. என் மனைவிக்கு ஐந்தாவது மாதம் ஆனாது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியில் என் அம்மா ரோட்டில் காய்கறி விற்பனை செய்வதை பார்த்து வேதனையடைந்தேன் 74வயதிலும் தானே சம்பாதித்து சாப்பிடுவது என்பது இயாலும் இயலாத காரியம் ஆனால் கோடி கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும் எனக்காக ரோட்டில் இப்படி வாழ்கிறாலே என்ற குற்ற உணர்வு அதிகமானது.

மருத்துவரிடம் லட்சியை காண்பித்த கையோடு எனக்கு வெளி ஊரில் சிறிது காலம் தங்க வேண்டியதாக உள்ளது வியாபார விஷயமாக பலரை பார்க்க வேண்டும் அம்மாவை உனக்கு பாதுகாப்பாக இருக்க சொல் நீயே நேராக சென்று அவர்களை வீட்டீற்கு அழைத்து செல் என்று சொல்லிவிட்டு வந்தவதான் ஐய்யா. ஆனால்

நான் செய்த தவறுக்காக என் சொத்துக்களில் பாதி அம்மா பெயரிலும் என் குழந்தை மற்றும் மனைவி பெயரில் எழுதி வைத்துவிட்டேன் வியாபாரம் செய்து வரும் பணத்தை எல்லாமே அவர்களின் கைகளுக்கு செலும்படியாக செய்துவிட்டே இங்கு வந்தேன்.

நான் செய்த பாவங்களை போக்கவும் என் தவறுக்கான தண்டனையை நானே கொடுத்துக் கொண்டேன் ஐய்யா.

அம்மா இப்போதாவது உண்மையை சொல்லுங்கள் அம்மா நான் உங்கள் மகன் என்று ழுதான் நாகராஜ்.

சரி இவ்வளவு நாள் இல்லாத அறிவு இப்போது மட்டும் எப்படி வந்தது நாகராஜ் நான் கேக்கும் போதெல்லாம் நீ என்னிடம் சொல்லாமல் மறைத்த போதே எனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது நாகராஜ் மன்னிகவும் யாகேஷ் சார்.

இவர்கள் தான் உங்களின் தாய் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் நீயே என்னிடம் வந்து கேட்ன்க்கவேண்டும் உண்மை என் தாய் முன்பே உன் தவறை நீ உணர வேண்டும் என்பதற்காகவே தான் நான் இப்படி செய்தேன்.

உன் தாய் உன்னோடு வர விரும்பினால். நீ தாராளமாக அழைத்துச் செல்லலாம் யாகேஷ் சார்.

அம்மாவின் அருமை அவர் பக்கத்தில் இருக்கும் போது தெரியாது அவர்கள் நம்மை விட்டு இல்லாத போது தான் அவர்களின் அருமை புரியும்.

யாகேஷ் சார் நீங்க பெண் குழந்தையே வேண்டாம் என நினைத்திர்கள் ஆனால் உன் தாயும் ஒரு பெண். இந்த வயதிலும் உன்னை தேடி கண்டுபிடித்து இந்த ஊரைவிட்டு போனால் உன்னோடு தான் போக வேண்டும் என்பதற்காகவே உன் கண் எதிரே பிச்சையெடுத்தும் தங்க இடம் இல்லாமலும் அலைந்தாளே இதே போல் நீங்கள் செய்வீர்களா?

இல்லை தானே இப்போதாவது புரிந்துக் கொள்ளுங்கள்.

பெற்ற மகனையோ அல்லது மகளை காணவில்லை என்றால் தாய் தந்தை யும் இப்படிதான் தேடி அலைவார்கள் ஆனால் அதுவே தாய் தந்தை காணவில்லை என்றால் தொலைந்தது சனியன் என்ற மன நிலையில் இருப்பது தான் பிள்ளைகள்.

தாய் தந்தை வழி காட்டுதல் இல்லாதவர்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் தாய் தந்தைக்கான பாசமும் ஏக்கமும் என்னவென்று.

உடனே யாகேஷ் அடக்கமுடியாத துயரத்திற்கு சென்று ஓ… என கத்தி அழதுவிட்டார்கர் அப்போது தான் பெண் பிள்ளைகளின் அருமை முழுமையாக உணர்ந்தார் யாகேஷ்.

அற்புதம்மாளும் மகனின் தவறை மன்னித்தாள்.

யாகேஷ்க்கு நான்காவது என்ன குழைந்தை பிறந்துள்ளது என அற்புதம்மாளை கேட்டார் சுரேஷ்.?

அதற்கு யாகேஷ் எந்த குழந்தையாக இருந்தாலும் சரி அவர்கள்ளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு இனி மற்றவர்களை நம்பிக்கைக் கொள்ளமாட்டான் என வாக்குறுதியை கொடுத்தார்.

யாருக்கு எது நடக்க வேண்டுமோ அவை தான் நடக்குமே தவிற இயற்கையின் நீதியில் என்றுமே பிழை இருக்காது என்பதே உண்மை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *