அஞ்சுமாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 5,059 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘வாங்க’ என்றார் கோபிராவ்.

நான்கு படிகளும் ஏறுவதற்குள் சடசடவென்று கொட்ட ஆரம்பித்துவிட்டது. கோடை மழை பெரும் துளிகள். எதிரில் லாரி புக்கிங் ஆபீஸ் மேல்கரை தகரம். தடதடவென்று அதிர்கிறது தகரம்.

“ஐயய்யோ ம்ஸ! நல்லா நனைஞ்சிட்டீங்களே சார்!”

“என்ன பண்றது கீழவீதி முனைக்கி வந்துட்டேன். ஆனாக்க எங்கியும் ஒதுங்க முடியல்ல. கோடெ மழல்ல பெரிசு பெரிசா உளுவுது”

“அட மேலே வாங்க சார் இன்னும் இஞ்சியே நின்னுக்கிட்டு” கோபிராவ் மேலே நின்று கத்தியது அரைகுறையாகத்தான் காதில் விழுகிறது. நிமிர்ந்து பார்க்கிறேன் ஐந்துமாடிக் கட்டடம் மழை மங்கலில் சித்திரம் போலத் தெரிகிறது. கோட்டையின் கவர் பிரும்மாண்டமாக நீண்டு போகிறது. ஒரு காலத்தில் நாயக்கரும் மராட்டி ராஜாக்களும் கட்டி ஆண்ட அரண்மனைக் கட்டடங்கள். பெட்டி அடுக்கியது போல மேலே வானளாவ நிற்பது பூசியது போல மழையில் தெரிகிறது. தினமும் பார்க்கிற கட்டடம்தான். ஏன் சின்ன வயசிலிருந்து பார்த்த கட்டடம்தான். பாதி கட்டடம் நனையவே இல்லை.

பிரும்மாண்டமான வாயில் வழியே உள்ளே இருட்டில் நுழைகிறேன். கோபிராவ் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

தீக்குச்சி உரசும் ஓசை மேலே இருபதடி தூரத்தில் ஒரு தீக்குச்சி எரிகிறது. கோபிரால் குரல் கேட்கிறது.

“என்னா சார் இது! சீக்கிரம் மேலே வாங்க இந்த எடத்துக்கு லைட் போடுங்கடா போடுங்கடான்னு மூப்பனார் சேர்மனார்ந்த காலத்லேர்ந்து எழுதி எழுதிப் போட்டாச்சு… ம்ஹ்ம் அவனுகளுக்கென்னா.. என்னைக்காவது… விசிட் வர்றது. நல்லா திங்கவேண்டிது… பாட்ல கொண்டா கறியக் கொண்டா மீளக் கொண்டான்னு… போட்டுக்க வேண்டது வலாம் நல்லாருக்குன்னு எழுதி வெச்சுப்ட்டுப் போயிட்றது. ராத்ரீவ முட்டிக்கிறதும் மோதிகிட்றதும் அவனுங்களா என்ன?”

“ராவ் ராவா… திட்டாதீங்க யாரையும்”

மேலே வந்தபடி கூறினேன். மேலே முதல்மாடிக்கு வந்து சேர்ந்தோம். ஏறத்தாழ இருபத்தைந்து படிகளாவது இருக்கும். திறந்தவெளி, நூறு நூற்றைம்பதடி அகலம் முன்னறு முன்னூற்றைம்பதடி நீளம் உள்ள திறந்த மாடி அதில் நடுவில் வளைவு வளைவாக கமான் வளைவுகள் வைத்துக் கட்டி பெரிய கட்டடம். சுவரில் ஒரு பல்பு எரிந்துகொண்டிருக்கிறது. கதவைத் திறந்தார் ராவ். பெரிய பெரிய அறைகள்

“பின்ன என்ன சார்!? நானும் இந்தக் கட்டடத்ல வாட்ச்மேனா ரெண்டு மாமாங்கத்துக்கு மேலே இருக்குறேன் .என்னா பாருங்க… இவ்வளவு பெரிய கட்டடத்ல நானும் –தாவீதுப் புள்ளையும்தான் இருந்தோம்… போனவாரம்…. நீங்க இஞ்ச மாத்தலாயி இந்த ஆபீஸ்க்கு வர்றதுக்கு சரிய்யா மூணு நாள் முந்தி செத்துப் போய்ட்டாரு… அவரு போனதுக்கப்பறம் இஞ்ச பாரு வர்றா? ராத்திரி எட்டு மணியாச்சுள்ளா அல்லு அசய் எல்லாம் ஜாடா அடங்கிபோயிடுது டம்ஹ்? எனக்கும் வயசார்சில்ல சார்… கண்ணு சரிய்யா தெரிய மாட்டேங்கிது… இருட்ல… எதாவுது தெரியாம எசகேடா எங்கியாவுது கால வெச்சா ….என்னா ஆகும் சார்… மொத்தம் அஞ்சு மாடி இருக்கு… மூணுமாலை ஆபீஸ் வெச்சிட்டாங்க… மேலே மஹாராஜா குடும்பத்ல பஆளுங்க இருக்கராங்க.. ராத்திரியில் கீழே நான் வாச்சுமேன், மேல தாவீதுப்புள்ள இப்ப அவரும் இல்ல… நானே பாத்துக்க வேண்டிருக்கு… தினம் எரவாகு எரணத்தம்பது படி ஏறி இறங்க வேண்வருக்கு லைட்டு இல்லாம்…. அந்தக் காலத்துல மஹாராஜா பாய் சாஹப்கிட்ட இந்த படமெல்லாம் இருந்தப்போ எப்டி இருக்கும் தெரியுமா சார்! ட்டேயப்பா! எங்கப் பாத்தாலும் வௌக்குதான்! வௌக்குள்னா எப்படி வௌக்குங்கிறீங்க வெங்கலத்துல கொத்துக்கொத்தா பண்ணியிருக்கும். கண்ணாடி ஜாடி வெச்சு பிட்டப் பண்ணியிருப்பாங்க. அதுக்குள்ள காண்டல் எரியும். ஒரு ஒரு கொத்லயும் சும்மா அம்பது காண்டம் எரியும் சார்… அரமனைக்குள்ளாற வௌக்கு ஒண்ணு ஒண்ணமே எவ்வளவு அளகா இருக்கும்ங்கிறீங்க… ம்ஹ்! எல்லாம் போச்சு…”

வெளியில் ஜோவென்று மழை இரைச்சல். சுவரில் மாட்டியிருந்தது கடிகாரம், எட்டே முக்கால் மணி. சாப்பிட்டாயிற்று என்ன செய்வது. பதினொரு மணிக்கு மேல்தான் படுக்கிற வழக்கம். படுத்தால் தூக்கம் வராது. நீண்ட நீண்ட மேஜைகளை இழுத்துப்போட்டு படுக்கை தயாரித்திருந்தார். கோபிரால் வந்து இந்த ஆபீசில் வேலை ஒப்புக்கொண்டு ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. மிஞ்சிப் போனால் கூட இரண்டு நான்கு நாட்கள் ஆகியிருக்கலாம். அதற்குள் அப்படி ஓட்டி ஓட்டிப் பழகினார் வாட்ச்மேன் கோபிராவ். அவருக்குச் சொந்த ஊர் தப்பாவூரேதான். எனக்கும் சொந்த ஊர் இதே ஊர்தான் என்று கேட்டதும் ராவ் கட்டித்தழுவாத குறைதான். பேச்சு பேச்சு ஓயாத பேச்சு பேசாவிட்டால் ராவ் உயிரோடு இருக்கமாட்டார் என்றே தோன்றும். சாரல் மின்னல்கள் வழியே சாடியது. ராவ் போய் ஜன்னல்களை இழுத்து அடைத்துக் கொண்டிருந்தார். கதவு வழியே சில்லென்று மழைக்காற்று ஜன்னலோரமாகச் சென்று வெளியே எட்டிப்பார்த்தேன், திருவையாறு செல்லும் பஸ் ஒன்று ஒளியை வீசியபடி மழையில் சர்ரென்ற வீச்சோடு ஓடி மறைந்தது. தெரு விளக்குகள் மழைத்துளிகளால் சரங்கட்டி தின்றன. வானம் இருண்டு கிடக்கிறது. தார்ரோடு விளக்கொளியால் பளபளக்கின்றன. மழையில் களுவிவிட்ட ரோட்டில் ஒளிப் புள்ளிகள் விளையாடுகின்றன.

“என்ன சார் மழையையே பாத்திகிட்டு இருக்கீங்க? ஊதக்காத்து ஒடம்புக்காகாது சார் வாங்க இப்டி!”

“ஆமா ராவ்ந்த தாவீது புள்ளேன்னிங்களே… அவரும் இங்கேயே வேலை பார்த்தாரா என்ன?”

“ந்தா வந்துட்டேன் சார்.. கொஞ்சம் ஊற்றி சாப்ட்டு வந்திட்றேன்… அப்பத்தான்… பேச முடியும்… என்னமோ ஒடம்புக்குள்ள ஜில்லுனு வருது” – பைல்கள் அடுக்கியிருந்த ஆபீம் அலமாரியைத் திறந்து பிளாஸ்க் ஒன்றை எடுத்தார். பெரிய பிளாஸ்க். இரவு முழுவதும் அடிக்கடி எழுந்து வென்னீர் சாப்பிடும் பழக்கம் ராவிடம் இருந்தது. தூங்கமாட்டார் ரால், எப்போது கூப்பிட்டாலும் உடனே குரல் கொடுப்பார். படுத்துப் புரண்டு கொண்டிருப்பதாகத்தான் தோன்றும். எழுபது வயசு இருக்கலாம் தலையெல்லாம் சுத்தமான பஞ்சுநரை இருந்தும் அயர்ந்து உட்காரமாட்டார். பகல் முழுதும் ஆபீசில் ப்பூன் வேலை ஓயாது பைல்களை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு டேபிளாக கொடுப்பதும் வாங்குவதும் காபி வாங்கப்போவதும் பாங்கு தபாலாபீஸ் பி. டபுள்யு.டி. -ஆபிஸ் போவதும் ஹெட் கிளார்க்குக்கு சுறிகாய் வாங்கப் போவதும் எனக்கு சீருடை செய்வது உள்பட கோபிராவ் அயர்வதில்லை.

“என்னா கேட்டங்க? தாவிதுப்புள்ளையா? ம்ஹும்! என்னத்தைச் சொல்றது சார். சாவுற வரைக்கும் மன்ஷனுக்கு அவனோட மதிப்பு தெரியறதில்ல. செத்த பின்னாடி ரொம்ப தெரியுது. என்னா பண்றது.”

“என்ன சொல்றீங்க கோபிராவ்?”

“ஆமா சார், நீங்க சின்ன புள்ளெ! இந்த வயசுலேயே ஆபீசராயிட்டீங்க இந்த கட்டடத்தோடயே கெடந்தாரு தாவிதுப்புள்ளெ. என்னடாது இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்ன்னுட்டு யோசிக்காதீங்க சார். தாவீது பிபாளைக்கி என்னா வயகன்னே எனக்கே தெரியாது. சார் கேட்டாக்கூட வயசா… மஹ்ன்னு நீட்டிக்கேட்டுப்ட்டு சிரிச்சிக்கிட்டே போய்விடுவாரு. சுறுப்பா குள்ளமா மிஞ்சிப்போனா அஞ்சடிக்கி மேல இருக்கமாட்டாரு சார்? ஆனா இந்த அஞ்சுமாடிக் கட்டடம் முழுசுக்கும் அவர் ஓர்த்தர்தான் வாச்சுமேன், நான் கீழ படுத்துக்கெடப்பேன், ராத்திரி ரெண்டு மணிக்கு டாண்னுட்டு கீழ வந்து என்னெ எழுப்புவாரு சார். ரெண்டுபேருமா ஒருக்காமேல வரைக்கும் போயி எல்லா ரூம்புலையும் சுத்தி சர்ச் பண்ணிப்ட்டு கீழ வந்து படுப்போம். உச்சிமாடில நெறய ஆந்தையும் கோட்டானும் கூடுகட்டிகிட்டு இருக்கு சார். ராத்திரியெல்லாம் கோட்டான் போடற சத்தம் பயங்கரமாயிருக்கும். உஷ் உஷ் உஷ் உஷ்ன்னுட்டு கூகெவேற பேசிகிட்டே இருக்கும். நீங்க கூட கவனிச்சிருப்பீங்க சார், உச்சிமால யாருமே போறது கிடையாது. உச்சில ஒரே ஒரு ரூம் தான் சார் இருக்கு. பாக்கி இடமெல்லாம் மொட்ட மாடிதான், பெரிய்ய மண்ணு குமியல் கெடக்கு சார் அங்க எப்டி அவ்வளவு ஓபரத்துக்கு மண்ணு அவ்வளவு போச்சுன்னுட்டு தெரியல்ல சார்”

“என்ன ராவ் தாலீதுப்பள்ளையெப் பத்திக் கேட்டா, ”

“ஸ்ஸ்… ஆமா சார்… ஏங்கிட்ட இது ஒரு தொல்ல… சார். எதையோ கேட்டா…. எதையோ பத்தி ஒளரிக்கிட்டுருக்கேன்ல? என்னா பன்றது… இப்டீ…. பேசிப்பேசி பழக்கமாப் போச்சு… தாவிதுப்புள்ள இந்த கட்டடத்துல வாட்ச்மேனா வந்தது… யாரு ஆபிசராருந்தப்போ … ம்ம்… ரெங்கசாமி அப்பிங்காரு காலத்துலதான்… ஆமா அவரு ஆபிசராருந்தப்போதான் சார்.அப்ப அருளானந்தசாமி நாடார்தான் நம்ப முனிலிபாடிடீல சேர்மனா இருந்தாரு. அவரு சிபாரிசுலதான் தாலிதுப்புள்ள வேலைல சேர்ந்தது. மொதல் நாளே என்னமோ என்னெ அவருக்குப் புடிச்சுப்போச்சு. நானும் வேலைக்கி சேர்ந்த புதுசு… நீங்கள்ளாம்…. அப்ப சின்னப்புள்ளையா இருந்திருப்பீங்க… மஸ்ஹும். பொறந்திருக்கக்கூட மாட்டீங்க.. எனக்கு புதுசா கல்யாணம் ஆயிருந்தது. அஞ்சுநாள் கல்யாணம்… ஏகதடபுடல் பண்ணாங்க… ராத்திரி ட்யூட்டி எனக்கு… என்னா பன்றது… கல்யாணம் ஆகி ஒண்ணறமாசம்தான் ஆயிருக்கு… பகல்ல வீட்டுக்குப் போனாக்கூட பொண்ணு கண்ணெக் காக்குச்சு . ஆனா கரைக்கட்டா ஏழற மணிக்கெல்லாம் ஆயிலாக்கு ராத்திரி படுக்கவந்துடணும்ன்னுட்டு ரெங்கசாமி அய்யிங்காரு சொல்லிப்ட்டாரு. தட்ட முடியுமா… பகல்ல ஒண்ணும் பண்ண முடியாது… ஊட்ல எல்லாரும் இருப்பாங்க… ஒண்ணும் பேசக்கூட முடியாது… நீங்க சின்னப்புள்ள ஓங்க கிட்ட போயி… இதல்லாம் சொல்லப்படாது…

“ஆளா சார் ரொம்பப் படிக்கறீங்க… ரொம்ப தெரிஞ்சுக்கிறீங்க…. இப்படியெல்லாம்… இப்ப யாரு இருக்காங்க… ஒண்ணு ஒண்ணும் குறிப்பா விசாரிக்க வெச்சுக்கறீங்க… ப்யூனுன்னுட்டு நெனைக்காமெ வயசெப் பாத்து மரியாத தர்றீங்க…. இப்பல்லாம் பாரு… அப்புடி நடக்கறாங்க நெனைக்கிறாங்க… சொல்லணும்ன்னு ஆரமிச்சாச்சு… சொல்லீட்றேன் —தாவிதுப்புள்ளைக்கிந்த விஷயம் தெரிஞ்சிதுன்னுதான் நெனைக்கிறேன்… ஒருநாளு வீட்டுக்குப் போனேன் சார்… – எல்லாரும் கொல்லையிலே இருந்தாங்க இவ… … ஏம் பொன்ஜாதி… உள்ளறையிலே இருந்திருக்கா.. எனக்குத் தெரியாது… உள்ளற போய்ட்டேன்… அவ்வளவுதான் அவளாவே கதவர் சாத்தி தாப்பா போட்டுட்டா…”

“அப்பறம்?”.

“அப்பறம் என்ன சார் நெஞ்சில் உருத்து ஒரே அழுக ஒரே புடிவாதம்… நசநசன்னுட்டு… பெரிய்ய தொல்லையாப் போச்சு! ஜன்னலோட சேத்து ஒக்காரவெச்சு என்னெ… பெரிய்ய கஷ்டம் சார்… என்னா சார் சிரிக்கிறீங்க… என்னடா கெழவன் இதப்பத்தியெல்லாம் ஞாபகம் வெச்சிட்டு இருக்கானேன்னுட்டா? எனக்கு கொஞ்சம் இது ஜாஸ்திதான் சார்…. அதனாலதான் சார் கெழவிக்கி புள்ளையே இல்ல… என்னோட வாழ்க்கையிலியே பெரிய கஷ்டம் அதுதான் சார்… பத்து பதனஞ்சு வருஷமா… அவளும் உடல்ல… நானும் உடல்ல.. என்னா பன்றது சார்… எல்லா டாக்டர்ட்டியும் போயாச்சு… அவ தொந்தரவுக்காகத்தான் சார் வீட்டுக்கே போறது! இல்லேன்னாக்க போகவே மாட்டேன். தாவீதுப்புள்ளெதான் தானே எல்லாத்தையும் பார்த்துக்குவேன்னு சொல்லி கல்யானம் ஆன புதுசுல விட்டுக்கு என்ன அனுப்புச்சுடுவாரு. போகல்லேன்னாக்கூட ஆனாப் புள்ளமட்டும் உண்டாகவேயில்லை. என்ன செய்யிறதுன்னு எனக்கும் தெரியல்ல அவளுக்கும் தெரியல்ல சார். –

தாவீதுப்புள்ள சொன்னாரு புண்ணிய கோத்திரத்துக்கெல்லாம் போய்ட்டு வந்தா புள்ள உண்டாகும்ன்னு. சரின்னுட்டு நானும் அவளுமா பொறப்ட்டோம். ஒரு மாசம் வீவு எடுத்துக்கிட்டு நெறைய்ய செலவு பண்ணி காசிக்கெல்லாம் கூடப் போனோம். கோலாப்பூர் பூனா பூரியெல்லாம் சுத்துனோம். காசு எதுடாங்கறீங்களா? அப்படிக் கேளுங்க… தாவீது புள்லே இருந்தாரே அவருதாங் குடுத்தாரு. நாங்களெல்லாம் ராஜா குடும்பத்தெச் சேர்ந்தவுங்க சார் பான்ஸ்லே ராஜா சாஹெப்சிவாஜி தென்னிந்தியாவுக்கு வந்தப்போ அவரோட வந்தவங்க நம்ப முன்னோருங்க ஆனா இப்பொ எல்லாம் போச்சு சார்.. என்னா பண்றது?…. சார்… தாவீது புள்ள இருந்தாரே… அவருக்கு குடும்பமா மண்ணா ஒண்ணும் கெடயாது… தனி ஆளு! இஞ்ச வர்றத்துக்கு முன்னாலே எங்கே இருந்தாரோ தெரியாது. இங்க வந்தப்புறம் இங்கயேதான் இருந்தாரு… மாடி ஆபீசுவதான் அவர் பெட்டி இன்னமும் கெடக்கு. ஒரு வீட்ல பதனஞ்சு ரூபா குடுத்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு. வேற செலவு ஒண்ணும் கெடயாது. குடிப்பாரு, அதுவும் ஒரு எடத்துல பத்துவரவு வெச்சுக்கிட்டு இருந்தாரு. ஆச்சார் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் முழிச்சுக்குவாரு. பைப்படில ஆபீசுக்குள்ளறயே குளிச்சுப்புட்டு எண்ண தேச்சு நல்லா மினுங்கமினுங்க தலைசீவிக்குவாரு. பெட்டிகுள்ற ஒரு சிகப்பு அட்டெபோட்ட மொத்தி புஸ்தகம் ஒண்ணு வெச்சு இருந்தாரு. அது பைபிள்… நாங்கூட படிச்சிருக்கேன் சார் மிஷன் ஸ்கூல்லதான் நானும் படிச்சேன். காலைய மொதல் வேல அதுதான். அப்புறம் டேபிள் எல்லாம் தொடச்சு கூட்ற பொண்ணு வர்றவரைக்கும் இருந்து கூட்டச்சொல்லி துப்புறவா அள்ளி எறியச் சொல்வீட்டு பானைக்கெல்லாம் தண்ணி ஊத்திப்புட்டு ரெடியா ஆபிஸைத் தெரந்துவெச்சுகிட்டு இருப்பாரு.

மணி எட்டரை ஆகீடும் நாள் அப்பதான் ஆபீசுக்கு போவேன் ஒண்ணுமே சொல்லமாட்டாரு. என்னைக்காவது ஒருநாள் என்ன கோபிராவ் இன்னைக்கி தங்கச்சி இப்பதான் உட்டுதாக்கும். அப்புடிம்பார். பாருங்க சார்…. மனுஷன்னா அப்படி இருக்கணும். உத்யோகம் பண்ணிப்புட்டா ஆச்சா? மத்தியானம் தாவிதுப்புள்ளை சாப்பிடப் போறப்போ நான் ஆபீஸில் இருக்கணும்… ஆன அவ… உடமாட்டா… அப்படி இப்புடின்னு வந்து சேந்துடுவேன் அப்பறம் சாப்பிடப் போவார் தாவிதுப்புள்ளெ..

…ஒருநாளு அவருடைய கல்யாணத்தெப்பத்திக் கேட்டுட்டேன் தெரியாமெ… அபாரமா கோபம் வந்துடுச்சி அவருக்கு. அவருக்கு கோபம் வரும்ன்னுட்டு எனக்குத் தெரியாது. கண்ணு கிண்ணு எல்லாம் செவந்து போயி ஆளே மாறிப்போயிட்டாரு. கொஞ்ச நேரம் கழிச்சு.. அழுதாரு… நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதுன்னாடு .. பரவால்லேன்ளேன் நான்.. இல்ல கோபிராவு நான் அப்படிக் கத்திருக்கப்படாதுன்னாரு. அப்பறம் அள்ளைக்கி ராத்திரி நாங்க ரெண்டுபேரும் மூணாவது மாடில படுத்து ராத்திரி பூராவும் பேசுபேசுன்னுட்டு பேசினோம். அன்னைக்கித்தான் சார்… தாவீதுப் புள்ள யாருன்னு தெரிஞ்சுது பட்டேயப்பா! என்னா மனுஷன் சார் மழை இன்னும் உடல்ல பாருங்க சார்… ஜோன்னுட்டு ஒரே எரச்சலா இருக்கு… எங்க வீட்ல அவரப்பந்த போட்டுருக்கேன். பின் சொவுரு மழைல உளாமெ இருக்கணும்…

தாவீதுப் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்களாம். அவரு பொள்ஜாதி பேரு ஆலீஸுன்னு சொன்னாரு. அவ பெரிய்ய பஜாரியாம் சார். ஒழுங்காயிருக்கவே மாட்டாளாம். மார்கட்டுல கடத்தெருவுல தெருமொளைய இன்னும் அங்க இங்க எங்கப் பாத்தாலும் எவனோடயாவது பேசிகிட்டு இருப்பாளாம். கல்யாணம் ஆன புதுசுல ஒண்ணும் கேக்கவே தோணல்லியாம் அவருக்கு… எப்பப் பாத்தாலும் அவளோடவே இருக்கணும்ன்னுட்டு தோணுமாம்.. எது செஞ்சாலும் சரின்னு தோணுமாம்.. என்ன பண்ணாலும் கோபமே வராதாம்… என்ன செஞ்சு வெச்சாலும் நல்லாயிருக்குன்னுட்டே சாப்பிடுவாராம்… தாவீதுப் புள்ளையொட அம்மா ரொம்ப நல்லவங்களாம்… சும்மா சொல்லக் கூடாது. அவுங்க நல்லவங்களாத்தான் இருந்திருக்கனும். இப்புடி ஒரு புள்ளைய பெத்திருந்தாங்கன்னா அவுங்க நல்லவங்களாகத்தான் இருந்திருக்கனும் ஆவீக இப்படிச் சுத்தறதையும் அலையறதையும் தாவீதுப்புள்ள கொஞ்சநாள் ஆனப்பறம் கண்டிச்சிருக்காரு… அவ சொல்லிருக்கா பாருங்க… எங்க ஜாதீவ அப்படி ஒருத்தி சொன்னா அவளே அங்கியே வெட்டிப் போட்டுடுவோம்… ”வேணும்ன்னா நீயும் யாரையாவுது புடுச்சுக்கையேன். நான் அப்படித்தான் சுத்துவேன்” னாளாம்.

தாவிதுப் புள்ளைக்கும் கொழந்தை பெறக்கவேயில்ல… ஆமா.. ஒரு வருஷத்துக்கெல்லாம்… ஆவி சிலோனுக்கு எவனோடேயோ ஓடிப்போய்ட்டாளாம்… அதுக்கு கொஞ்ச நாளைக்கி முந்தி அவரோட ராத்திரி படுக்கும்போது சொன்னாளாம் சார்! ”ஒனக்கு மானம் ரோசம் சூடு சொரணை இருந்தா ஏங்கிட்ட படுக்க வராதே”ன்னுட்டு! என்னா தியிர் பாருங்க. அதோட சொல்லியிருக்கா… ”என்னெ அங்க போகாதே இங்க போகாதேன்னு சொல்றியே நீ நான் அப்புடியே வேற ஒருத்தனோடெ ஓடிப்போய்ட்டாத்தான் என்ன செய்வோ? என்னையே நினைச்சுகிட்டா இருக்கப் போறே! வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்குவே. இல்லேன்னா சேத்துவெச்சிக்குவோ அத இப்ப செய்யேன் நான் இல்லேன்னா தீ அப்படியே சும்மாவா இருக்கப் போறே”ன்னாளாம் சார் எப்பேர்ப்பட்ட செருக்கியா இருந்திருக்கணும்…! தானாயிருந்தா அங்கியே தூக்குப்போட்டுகிட்டு செத்துடுவேன் சார்!

ஆனா தாவீதுப்புள்ள தூக்குப்போட்டாக் கூட லேசில உயிர் போகாது. அப்பேர்ப்பட்ட ஒடம்பு சார் குளிக்கும் போது பாத்திருந்தேன் கோயில்லல்லாம் துவாரபாலகர் செல இருக்கே பாத்திருக்கிங்களா சார்? கொஞ்சம் சின்னதா கிதாப் வெச்சிட்டா அதேதான் சார் தாவீதுப்புள்ள! கரணை கரணையா கண்டு கண்டா ஓடம்பு அழகா எப்படி இருப்பாரு பயில்வான் மாதிரி என்னா பண்றது. அவரையும் ஒருத்திக்கி புடிக்கல்ல! அவங்கம்மா அவரெ கல்யானாம் பண்ணிக்கச் சொல்லி ரெண்டாவது தடவெ தொந்தரவு பண்ணியிருக்காங்க… என்னால பொம்பள இல்லாம இருக்க முடியும்ன்னு சொல்லி அவசொன்னத்தையும் சொல்லி முடியாதுன்னுருக்காரு அந்தம்மாவுக்கு மகனெப் பாக்க சகிக்கல்ல. தனியா சமைச்சு மகனுக்குப் போட்றதும் வர்றதும்…. சன்யாசி மாதிரி மகன் இருக்கறதும் அந்தம்மானால் பாக்க முடியாம்… ஒருநாள் அந்தம்மாளும் போய்ச் சேந்தாங்க… ஞாயித்துக்கெழம தவறாமல் சர்ச்சுக்குப் போவாரு தாவீதுப்புள்னை.. அவுங்க கோயிலுக்கு நாங்கூடப் போயிருந்தேன் சார்… என்னா சுத்தமா அழகா வெச்சிருப்பாங்க தெரியுமா சார்!

கோயில்ல ஒரு சத்தம் இருக்காது… =அவ்வளவு அமைதி…நடுவுல சிலுவை ஒண்ணுதான் வெச்சிருப்பாங்க வேற ஒண்ணுமே இருக்காது…மெழுகுவர்த்தி வரிசயா எரியறதும் வெள்ளைவெளேர்ன்னுட்டு உடுப்பு எல்லாம் போட்டுகிட்டு தேவதங்க மாதிரி நீட்ட அங்கியெல்லாம் போட்டுகிட்டு அவங்க பாடறதக் கேட்டாலே கஷ்டம் எல்லாம் தீர்ந்தமாதிரி ஒரு சௌக்கியமா இருக்கும் சார்.

ஆனா தாவீதுப்புள்ளெ சொல்லுவாரு இதுக்கெல்லாம் அர்த்தமே இல்ல கோபிராவ்ன்னுட்டு ஒரு நாள் நாங்கூட ஆவீசப் பாத்தேன் சார்… அதாவது அவ எவனோடையோ ஓட்றதுக்கு ஒரு மாசத்துக்கு மிந்தி! அவளெப் பார்க்கவே பயமாயிருந்தது சார், எவ்வளவு பெரிய கண்ணு தெரியுமா சார். ரொம்ப அழகுன்னு சொல்ல முடியாது. ஆனா ஒரு பொண்ணு இவ்வளவு தெளிவா அழகா வெளியில் சுத்தினாக்க யாராலையும் சும்மா இருக்க முடியாதுதான்னு அவளைப் பார்த்தப்போ தோணிகிட்டே இருந்தது சார்! நிறையவே அவளுக்குத் தலைமுடிசார் கருள் சுருளா! அதுக்குப் பின்னால அவளெ மாதிரிப் பொண்ணு எவளையும் நான் பார்க்கவேயில்ல சார்!

அன்னைக்கி ராத்திரி தாவீதுப்புள்ளெ சொன்னாரு சார்! எனக்கு அதைக் கேட்ட ஒடனே மெய் சிலுத்துப் போச்சு சார், நானும் கெழவனாய்ட்டேன்…. இன்னும் என்னால மறக்க முடியல்ல சார்! அவரால் மட்டும்தான் சார் அப்படிப் பேச முடியும்.

“கோபிராவ்! ஆலீசு அப்டி ஓடிப்போனத்துக்கு அவ காரணமில்ல! நான்தான் காரணம்! ஆலீசு கேட்ட தெக் குடுக்க என்னால முடியல அவ என்ன கேட்டா? தெரியல்ல எதையோ அவ கேட்டா நான் குடுக்க முடியல்ல! எனக்குத் திராணியில்லை! அதனால்தான் அவ அப்டி ஆயிட்டா மஹ்ம்! எல்லா இடத்திலயும் இதான் விஷயமே! இங்க மட்டுமில்ல எங்கியும் இதேதான்”.

“என்ன இப்டிச் சொல்றீங்க’ன்னேன். அதுக்கு அவரு சொன்னாரு….”

“ஆமா! எதையோ கேக்குறோம்! அதுவா கெடக்கிறது. எல்லா இடத்திலேயும் இதான் எதையோ கேக்குறோம் எதுவோ கெடக்கிறது! ஓரிஜனலைப் பார் உட முடி புதா? ஓட முடியுதா? ஒழிக்க முடியுதா?”

கோபிராவு! எனக்கு இன்னமும் ஏன் அவமேல கோபம் வருது? இன்னமும் அவளெ வெச்சுகணும்ங்கற ஆசதானே காரணம். அவ சொன்னதுல என்ன தப்பு? இன்னமும் இதெல்லாத்தையும் என்னால் உட முடியல்லியே’ன்னு புலம்பினாரு. நீ கேட்ட உடனே ஒம்மேல கோபம் வருது பாத்தியா கோபிராவு!

எதுக்கு கோபம் வரணும்ன்னு ஏதேதோ பேசிகிட்டே இருந்தாரு. பாதி துக்கம் வர ஆரமிச்சிட்டது. அன்னிக்கு அதுக்கு அர்த்தம் எல்லாம் எனக்குப் பின்னாலதான் சார் வௌங்குச்சு. ஏராளமா பாங்கியே சேத்துவெச்ச அவர் சம்பளப் பணத்துலதான் எங்களுக்கு புண்ணிய கோத்திரத்துக்கெல்லாம் போய்ட்டுவரச் சொல்லிக் குடுத்தனுப்பிச்சாரு. காசி, பூரி, பம்பாய், பூனா எல்லாம் போனோம்.

திரும்பி பூனாவிலிருந்து வந்து சேர்ந்த ரெண்டு மூன்று மாசத்துக்கெல்லாம் நம்ம ஊட்ல கொழந்த உண்டாயிருக்குன்னு தெரிஞ்சுபோச்சு, பேயாயிருந்தாள்ள சார்!? மனுஷியா மாறிப் போனா சார்! மந்தரம் பண்ண மாதிரியிருந்துது சார் எனக்கு கொழந்த உண்டாயிருக்குள்ள ஒடனே எங்க சொந்தக்காரங்களுக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம் சார்! எனக்கு மட்டும் புரியவே இல்ல சார்! ரொம்பக் கொழம்பிப்போனேன்”

“என் அப்படி ஆச்சு ராவ்?” – நீண்ட நேரத்துக்குப் பின்னால் நான் கோபிராவைப் பார்த்துப் பெருமூச்சுடன் கேட்டேன்.

“ஏன் அப்டின்னு கேக்கறீங்களா?” – மீண்டும் அதே கேள்வியைத் திருப்பி என்னிடமே கேட்டார் கோபிராவ். மேலே முகட்டைப் பார்த்தபடி ஏதோ யோசித்தார். நிச்சயமாக மேலே பார்த்தார். வெளியே இன்னும் மழை விடவில்லை. கோடையில் இப்படி மழை பெய்வது ஆகாது என்பார்கள். மழையில் இந்த பெரிய பழைய கட்டடம் குளித்துக்கொண்டிருந்தது. இன்னமும் மௌனமாய் இருந்தார் ராவ், நான் தொடங்கிவிட்டேன்.

“நீங்க மட்டும் ஏன் ஓங்க கொழந்தையை…”

“ஆமா சார்! எதையோ கேட்டீங்க இப்டி சொல்லிக் கிட்டே வந்துட்டேனா… இப்ப சொல்ல முடியல்லா நானு பதினைஞ்சு வயக வரும்போதெல்லாம் எங்க குடும்பம் பெரிசாத்தான் இருந்துது. கீழவீதி கடைசீல இருக்கு பாருங்க ஒரு வீடு பெரிசா மாளிக மாதிரி அது, அப்புறம் தெற்கு வீதில நடுவுல பெரிய மாளிகையா மூணு இருக்கே அதுல நடுவில் உள்ள வீடு எல்லாம் எங்குளுது சார். நிறைய குதிரை, ஆடு, மாடு, வண்டி கோச்சு, சாரட்டு, எல்லாம் வெச்சிருந்தோம். அண்ணந்தம்பி நாலுபேரு நாங்க. மூத்தவரு திருவாரூருக்கும் திருவிடைமருதுருக்கும் போய்ட்டு வந்துகிட்டு இருந்தாரு. அங்கேயெல்லாம் அவருக்கு வைப்பு. நெறயா அழிச்சாரு. அடுத்து அடுத்து நாங்களும் அதேமாதிரி சுத்தி கொட்டினோம்… நான்தான் கடைசி நான் தலையெடுக்கும் போது குடும்பமே படுத்துப் போச்சு! எல்லாத்தையும் வித்து கட்டு தின்ன வேண்டி ஆச்சு. கடைசில பொழப்புக்கே வழியில்லாமத் தானே மானம் மரியாதைக்கஞ்ரி இந்த வாட்சுமேன் உத்தியோகத்துக்கு வந்தேன்…”

“இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் ராவ்!” – என்றேன் புரியாமல் வெளியில் மழை நின்றிருந்தது. எங்கோ இலைகளிலிருந்து உதிரும் நீர்த்துளிகளின், தண்ணீரில் சொட்டும் ஒலிகள் விட்டுவிட்டுக் கேட்கின்றன.

“எனக்கே இன்னக்கி வரைக்கும் சந்தேகம்தான் சார். எனக்கும் புரியத்தான் இல்லை. புரிஞ்சமாதிரியும் இருக்கு ஆனா என்ன செய்யிறதுன்னு தெரியாததுனாலியே நான் ஒன்னும் செய்யவே!”

“என்னது?”

“ஆமாம் சார்! கொழந்த பெத்துக்க முடியவியேன்னுட்டு ஆத்திரமா அவஞ்சாள்ள சார் நம்ப வீட்டுக்காரி? அப்பவெல்லாம் வீட்ல ஓயாத சண்ட தான் சார் இப்ப சாதுவா சொன்னத்துக்கு மறுபேச்சு பேசமாட்டேங்கிற கெழவி… அன்னைக்கி எப்படி அப்டி பத்ரகாளியா இருந்தான்னே என்னால சொல்ல முடியல சார். அப்டி அடிக்கடி நாங்க ரெண்டு பேரும் சண்டெ போட்டுகிட்டா நாலஞ்சு நாளைக்கு வீட்டுக்கே போக மாட்டேன் சார்! நம்ப வீட்டுக்காரி பொறப்பட்டு நேரா ஆறு ஏழு மணிக்கி தனியா நம்ப தாவீதுப்புள்ளைகிட்ட வந்து எல்லாத்தியும் சொல்லி ஒரு மொரை வெச்சு ஒரு அழுக கூப்பாடு திட்டு எல்லாம் வப்பா அவரும் கொஞ்சம் கொஞ்சமா புத்தி சொல்லுவாரு அப்ப நான் அங்க போகவே மாட்டேன் போனா பெரிய கூச்சல் ரப்சர்தான் போங்க. நம்ம ஊட்டுக்காரி இருக்காளே அவ சரியான லண்டியா இருந்தா அந்தக் காலத்துல. அசாத்தியமான தைரியம்… தனியா அவ ஆபீசுக்கு என்னத் தேடிகிட்டு வர்ரது எங்க வீட்ல யாருக்கும் பிடிக்கல்ல… ஆனா சண்டெ போட்டுகிட்டா மத்திசம் பண்ண அவ தாவீதுப்புள்ளெகிட்டெ வராம இருக்க மாட்டா, எங்க ஜாதி பொண்ணுங்க அப்பல்லாம் கும்டா போட்டுகிட்டுதான் வெளியே போவாங்க. கும்டான்னா தெரியுமா சார் பட்டுத்துண்டெ நாலாரெண்டா மடிச்சு முக்காடுள்னு சொல்றோம்ல அது மாதிரி போத்திகிட்டுத் தாம் போவாங்க. நம்ப மாட்டுக்காரிக்கி கோபம் வந்தா அது கூடப் போட்டுக்காமலே இருட்டி ஏழுமணி வரைக்கும் நான் வர்றேனான்னு பாத்துகிட்டு இருந்துட்டு… நான் வரல்லேன்ளா நேரா தாவீதுபுள்ளையைத் தேடிக்கிட்டு வந்துடுவா. சொல்லி ஒரு மூச்சு அழ.”

தாவீதுப்புள்ளை கூட சொல்வாரு. பாவம் ஏந்தான் இந்த பச்சப்புள்ளையெப் போயி அடிக்கிறயோ? முதுகுல அப்படியே சப்புன்னி பதியிற மாதிரியா அடிக்கிறது? அடிச்சது அப்புடியே செவசெவன்னு கன்னிப்போயிருக்கேம் பாரு…. –

நான் ஒண்ணுமே சொல்லமாட்டேன். வேற யாராயிருந்தாலும் ஒனக்கென்னாடான்னு களீர்ன்னு குடுத்துடுவேன். ஆனா தாவிதுப்புள்ளை கிட்ட மட்டும் என்னமோ ஒரு பயம் பாசம் எல்லாம் வந்துடும். அவளையும் வெச்சுகிட்டே என்னெ மொட்டுவாரு. இனிமே இதுமாதிரியெல்லாம் செய்வியான்னு எங்கிட்ட கேப்பாரு. இனிமே இல்லம்பேன். அவ சிரிப்பா நானும் சிரிப்பேன். தாவீதுப்புள்ளையும் சிரிப்பாரு. தாவீதுப்புள்ளைன்னா எங்க வீட்ல எல்லாருக்கும் மரியாத ஜாஸ்தி. எல்லா விசேஷத்துக்கும் எங்க வீட்டுக்கு சாப்டக் கூப்பிடுவோம். நம்ப ஊட்டுக்காரி அவருக்குன்னு எல்லாம் தனியா எடுத்து வெச்சிருப்பா எங்க சித்தப்பா வயசானவர்கூட தாவீதுப்புள்ளை கிட்ட ரொம்ப மரியாதையா பேசிகிட்டு இருப்பாரு. எங்களுக்கு கொழந்த இல்லா குறையைப் போக்க டாக்டர்கிட்ட கொண்டுபோயி அவளையும் என்னையும் டெஸ்ட் பண்ணிக்கச் சொல்லி கூட்டிகிட்டுப் போயி எல்லாம் பாத்ததுகூட தாவிதுப்புள்ளைதான். டாக்டர் எனக்குப் பிள்ளை பெறக்காதுன்னு சொன்னதும் தாவீது புள்ளைக்கித்தான் தெரியும். வேற என்னைத்தவிர எங்க வீட்டுலியோ அவளுக்கோ தெரியாது. அவளுக்கு கர்ப்பம் உண்டாயிருக்குன்னு கேட்ட உடனே குழப்பமாயிருந்தது. வேற ஒரு லேடி டாக்டர் கிட்ட அவளைக் கொண்டு போயி காட்டினேன் அவங்களும் அதே ‘வி இஸ் கேரியிங்’ன்னுதான் சொன்னாங்க….”

“அப்பறம்!?” – நான் பரபரத்தேன் அமைதியான குரலில் லேசாக சொன்னார் கோபிராவ் என்னவோ போல இருந்தது.

“அப்புறம் என்ன சார் நான் தனியா யாருக்கும் தெரியாமெ ஒரு டாக்டர்ட்டெ போயி என்னையே டெஸ்ட் பண்ணிகிட்டா என்னன்னு படபடன்னு வந்தது. நான் வாலிபத்தில் போட்ட ஆட்டம் எங்க பரம்பரை சொத்து. எனக்குப் பிள்ளை பிறக்காதுங்கறது எனக்கே உறுதியா நல்லாவே தெரியும். இருந்தாலும் பெறக்கப்போறது என் குழந்ததான். எனக்கு குழந்தையே பெறக்காதுன்னு உறுதிப்படுத்திக்க எனக்கே பயம்மாயிருந்தது. சே! என்ன இது? என்னோட கொழந்தைதான் என்று தட்டிக்கொடுத்து கிட்டேன் அவ கழுத்தெ நெறிச்சுக் கொன்னா என்னன்னுட்டு வந்தது அடுத்தாப்ல… எனக்கே இன்னைக்கி நெனச்சாலும் வெக்கமா இருக்கு சார் – ஆனா தாவீதுப்புள்ள என்னா அருமையா நடந்துகிட்டாரு சார். அந்த நேரத்துல வேற ஏதோ சண்டையர் சாக்கா வெச்சிகிட்டு வாயும் வயிறுமா இருக்கிறப்போ ஒருநாள் அவளெ அடிச்சிருக்கேம் பாருங்க என்னா அடிங்கிறீங்க கீழ போட்டு அந்த வயித்துலேயே மிதிச்சேன்! ஒடம்பு பூரா குங்குமமா செவந்து போச்சு அவளுக்கு. ஆனா யாருன்னு நானும் கேக்கல சார்! அவளும் சொல்லை ரெண்டு பேருக்குமே தெரியும்!! ரெண்டு பேருக்குமே பயம்! நான் ஏன் சார் கேக்கணும்? அவதான் என் சொல்லணும்?

அடுத்த ரெண்டுநாள்ள அவளுக்கு கொழந்த பெறந்துடுக்க, குழந்தையைக் கையிலே வாங்கினேன். மருத்துவச்சி சொன்னான்: குழந்தை தாயெ உரிச்சுகிட்டு பொறந்திருக்குன்னு.

சார் சும்மா சொல்லப்படாது. இப்ப ஏம்பையன் மாயவரம் தாலுகா ஆபீஸில் வேலை பார்க்கிறான். மாசாமாசம் நூறு ரூபா வீட்டுக்கு அனுப்புறான். கல்யாணம் நம்ப ஜாதியிலேயே பெரிய எடம் பொண்ணு. ஒருநாள் கல்யாணம்தான். நம்ப தாவீதுப்புள்ளெ கூட இருந்து நடத்துனாரு. அவரு இருந்த வரைக்கும். தாயும்புள்ளையும் என்னேத் தங்கமாத் தாங்குனாங்கன்னு சொல்வாரு சார். எனக்கு என்னா சார் கவலை, ஒரே ஒரு கவலைதான்… தாவீதுப்புள்ளை நம்பகூட இல்லியேங்கறது ஒண்ணுதான் போங்க”

நான் வைத்த கண் வாங்காமல் கோபிராவையும் அவர் பளபளக்கும் விழிகளையும் பார்த்துக்கொண்டே இருந்தேன். அந்த முகத்திலேதான் என்ன மிளிர்ச்சி…

“ரொம்ப நேரம் என்னெனமோ பொலம்பியிருக்கேன் சார்! இந்தப் பேச்சு ஒண்ணுதான் சார் என்னால் அடக்க முடியல மன்னிச்சுக்குங்க சார்! இதல்லாம் பொல்லமாட்டேன் சொல்லீட்டேன்…. என்ன பண்றது?. சாகும் போது தாவீது புள்ளெயிட்ட யாருமே இல்ல சார், செந்தபின்னால் கூட அவரச் சேர்ந்தவுங்கன்னு யாருமே வரவேயில்ல.

“யாருமே வரல்லியா?”

“யாரு வந்தா என்ன வராட்டி என்ன சார்…நானே போயி மிஷின் தெருவுல சொல்லி பாதிரியாரெக் கூட்டிக்கிட்டு வந்து நானே சவப்பெட்டி செய்து செலவெல்லாம் செய்து ஜாம் ஜாம்னு சடங்க ஒண்ணும் தவறாமே செஞ்சேன் சார்!…

குழிக்குள்ள அவரெ வெச்சப்ப நானும் ஏம்மகன் ராஜாராமுந்தான் நின்னோம் – ரொம்பநேரம்…

இந்த அஞ்சுமாடிக் கட்டடத்துல நானும் அவரும் மாத்திமாத்தி சுத்தினப்போ எங்களுக்கு ஒரு ஆறுதல். இப்ப கூட ராத்திரி ரெண்டுமணி அடிச்சா எனக்கு அடிவயத்தையெல்லாம் கலக்குது சார்! முப்பது வருஷம் சார் இந்த பாழடஞ்ச கட்டெடத்தெ பூதங் காக்கிறமாதிரி நான் கீழ அவர் மேல காத்திட்டு இருந்தோம். இப்ப நான் மட்டும்! தனியா சுத்துறேன்!”….

நான் என்னை அறியாமல் அவர் தோள்களில் பார்வை செலுத்தினேன் அது குலுங்கிக்கொண்டிருந்தது…

சிறிதுநேரம் மௌனமாய் கழிந்தது.

நான் அதிகாரியானேன் கோபிராவ் வாட்ச்மேன் ஆனார்!

“மழை விட்டுப்போச்சா பாருங்க ராவ்!”

“விட்டுப்போச்சு சார்! நாம போயி எல்லாம் சரியா இருக்கான்னுட்டு ஒரு தடவை பாத்துட்டு வந்துட்றேன் சார். மணி ரெண்டு ஆச்சு நீங்களும் படுங்க”

லாந்தர்விளக்கை கொளுத்தியபடி கண்களைத்துடைத்து கொண்டு அந்த மனிதன் ஆடி ஆடி படிகளில் மூன்றாவது மாடிக்குப் போவதை பார்த்துக்கொண்டே நின்றேன்.

வெளியே மொட்டை வராந்தாவுக்கு வந்தேன். மழை சுத்தமாக நின்றிருந்தது. மேலே நிமிர்ந்து கட்டிடத்தைப் பார்த்தேன். இருளில் வானளால் தின்றது அந்தப் பழைய கட்டிடம்.

ஐந்தாவது மாடியில் லாந்தர் வெளிச்சம். குச்சியால் டக் டக் டக் என்று தட்டும் ஓசை தொடர்ந்தது.

(அங்கிள் – 1971)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *