வாழ்வா? சாவா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2021
பார்வையிட்டோர்: 3,702 
 

கீதா இந்த டீவி ரிமோட்டை எங்க வைச்ச.எதுவும் வச்சா வச்ச இடத்துல இருக்குறது இல்ல என்று புலம்பியபடி சிவா இருந்தார்.உடனே கீதா,அப்பா ரிமோட் சோபா மேல தான் இருக்கு என்றாள்.உடனே சிவா சரி அம்மா,அண்ணன், தாத்தா,பாட்டி எல்லாரையும் கூப்பிடு டீவில விவாதமேடை போட போறாங்க என்றார்.அனைவரும் டீவி முன் அமர்ந்தனர்.

தொலைகாட்சியில் அப்பொழுது தான் விவாத மேடை தொடங்கியது. அதில்

ஆங்கர் முருகன் பேச தொடங்கினார்.அவர் இப்ப நம்ம பேச போறது வாழ்வது சிறந்ததா?இல்லை சாவது சிறந்ததா?என்றார்.ஒரு பக்கம் நா நூறு வருஷம் வாழ்வேன்.எனக்கு வாழ்க்கை மேல அவ்வளவு விருப்பம்னு சொல்றவங்க, மறுபக்கம் இல்லைங்க எனக்கு வாழவே பிடிக்கல அப்பிடினு சொல்றவங்க, பாப்போம் ரெண்டு பேரும் என்ன சொல்ராங்கன்னு என்றார் முருகன்.

உடனே ஒருவர் ஏங்க சாகுறது தாங்கா சிறந்தது,ஏன்னா இந்த வாழ்க்கை என்னை அவ்வளவு பாடு பாடுத்தி இருக்கு,நான் ஆசைபட்ட எதுவும் எனக்கு கிடைக்கல,நான் எதுக்கு உயிரோட இருக்கணும் என்றார்.

எதிரி அணியினரோ ஏங்க ஆசைபட்டது எல்லாமே கிடைச்சுட்டா வாழ்க்கையில சுவாரசஸ்யம் இருக்காது.இதுக்கு எல்லாம் போயா சாவங்க,நமக்கானது நம்மல விட்டு போகாது நம்மல விட்டு போறது நமக்கானது கிடையாது என்றார்.

உடனே மற்றொருவர் இத எல்லாம் சொல்ல நல்லா தான் இருக்கும். அனுபவிச்சவங்களுக்கு

தான் வலி தெரியும்.இப்ப தீ சுட்டும்னு எல்லாருக்கும் தெரியும்,தீயில கைய வச்சவனுக்குவனுக்கு தான் அந்த வலி தெரியும் என்றார்.

எதிரி அணியினரோ,வலிய தாங்கனுங்க,வலி இல்லாம யாராலும் முன்னேற முடியாது,இப்ப கல்லுல உறுதியான கல்லு தான் சாமி சிலையா கோவில் உள்ள இருக்கும்,உளியால அடிச்ச உடனே உடைந்த கல்லு கோவில் வாசலில் தான் இருக்கும் என்றார்.

மற்றொரு அணியினர் எவ்லோ தாங்க, தாங்க முடியும்,உளிய வச்சு உயிர் போற அளவுக்கு அடிக்குது இந்த சமூகம்,நான் ஏன் வாழனும்னு யோசிக்க வக்கிது,நானா என் வாழ்க்கையில முன்னேற ஒரு ஒரு வழியா தேடுறேன்,எல்லாமே நோ என்ட்ரி தான்,அப்பிடியே என்ட்ரி கண்டுபிடுச்சு வெற்றி நோக்கி போனாலும் அத தட்டிவிட ஒரு கூட்டமே இருக்கு,நா ஒரு படி முன்னேற நூறு வழி யோசிச்சா என்ன கீழ தள்ளி விட ஆயிரம் வழி யோசிறங்க நிறைய பேரு,வாழ்க்கையே வெறுமையா இருக்கு என்றார்.எதிரி அணியினரோ நமக்கு ஆயிரம் கஷ்டம்,தோல்வி வரலாம்,அது எல்லாம் உங்களுக்கு மட்டும் இல்ல மனிதர்களாகிய எல்லாருக்கும் இருக்கு,நம்ம நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறவங்க முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டனும், வாழ்க்கையை வெறுமையா நினைக்க வச்சவங்க உங்களபத்தி பெருமையா பேசும்படி வாழனும்,இறப்பு எதற்கு தீர்வு கிடையாது,உங்க பிறப்பு சிறப்பா அமைவது உங்க கையில தான் இருக்கு,வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என்றார்.

உடனே ஆங்கர் நடுவில் வந்து, காரசாரமான பேச்சுகள் இரு பக்கமும்,இதுக்கு தீர்ப்பு சொல்ல நாங்க பேராசிரியர் செல்வம் அவர்களை வர வச்சு இருக்கோம், சார் நீங்க இரண்டு பக்கமும் பேசினதா கேட்டிங்க உங்க கருத்துக்களை சொல்லுங்க சார் என்றார்.

பேராசிரியர் செல்வமோ,ரெண்டு பக்கமும் அணல் தெறிக்கும் பேச்சு இருந்துச்சு, இதுல என்னோட கருத்து வந்து,சாவு எதற்கும் தீர்வு இல்ல,வாழ்வு தன் தீர்வு,நம்ம ஆசைப்பட்டது கிடைக்கல,கனவு நிறைவேறல,அப்பிடி இப்பிடினு ஆயிரம் கஷ்டம் வரலாம்,ஆனா ஒன்னு மட்டும் நியாபகம் வச்சுகோங்க எத்தணை கஸ்டம்,தோல்வி வந்தாலும் ஒன்னே ஒன்னு தான் பாக்கணும், உடம்புல உயிர் இருக்கா? இல்லையான்னு?உயிர் இருந்தா நமக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கு,அத விட்டுட்டு நம்ம செத்துட்டா நம்ம கனவை யாரு நிறைவேத்துவா?ஒரு மரம் ஒன்னு இருக்கு அது பேரு எனக்கு சரியா தெரியல அது வரல ரெண்டு, மூணு, வருஷம் ஆகுமா,ஆனா அதுக்கு தண்ணி ஊத்தி கிட்டே இருக்குனும், அப்ப தான் அது கொஞ்சமா பூமி மேல வளருமா,இது என்னடா வளர இவ்ளோ லேட் ஆகுது,இதுக்கு ஏன் தண்ணி ஊத்தி நம்ம டைம்ம வேஸ்ட் பண்ணனும்னு நினைக்க கூடாது.அது பூமிகுள்ள தன்னோட வேர பலப்படுத்தி பின் தான் பூமி மேல வளரும், வச்ச உடனே வரருற மரம் காத்து அதுச்சா சாயும், ஆனா தன்னோட வேர பலப்படுத்தி கொஞ்ச வருஷம் கழிச்சு வளரும் மரம் புயல் காத்தே அட்டிச்சாலும்,உறுதியா நிக்கும்,நீங்க ஆசை பட்ட விஷயம் கிடைக்க அந்த மரம் மாரி உங்க திறமையை பலப்படுத்துங்க,இந்த கஷ்டம்,தோல்வி,தான் உங்களுக்கான தண்ணீர், அத உறிஞ்சு உள்ள வச்சுகோங்க,பின் நீங்க இந்த பூமி மேல வளருரத யார்லையும் தடுக்க முடியாது.வாய்ப்புகல்ல இருக்குற கஷ்டத்தை

பாக்குறவங்க தோக்குறாங்க,ஆனா கஷ்டத்துலையும் தனக்கான வாய்ப்ப தேடுறவங்க வாழ்க்கையில ஜெயிக்கிறாங்க,சோ வாழ்வு தான் சிறந்தது என்றார்.

அனைவரும் கை தட்டினர்.தொலைகாட்சி பார்த்து கொண்டு இருந்தவர்களும் கை தட்டினர்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *