வாழ்க்கை என்னும் என் ஊஞ்சல்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 13, 2020
பார்வையிட்டோர்: 3,327 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

ஏழு மணி நேரம் ஆனதும் ’லேபர் வார்ட்டில்’ இருந்து ஒரு நர்ஸ் வெளியே வந்து எங்களைப் பார்த்து “அவங்களுக்கு ரெட்டை குழந்தைங்க பொறந்து இருக்கு.ஒரு ஆண் குழந்தேயும்,ஒரு பெண் குழந்தையும் பொறந்து இருக்கு.இன்னும் அரை மணி நேரம் ஆனதும் நான் வந்து சொன்ன பிறகு நீங்க உள்ளே போய் அவங்களேயும், குழந்தேங்களேயும் பாக்கலாம்” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘வார்ட்டு’க்குள் போய் விட்டாள்.

நான் சந்தோஷப் பட்டு நான் வேண்டிக் கொண்டு வந்து இருந்த சுவாமியிடம் என் நன்றியை சொல்லிக் கொண்டு இருந்தேன்.

என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சந்தோஷம் தலை கால் புரியவில்லை.இருவரும் என்னைப் பார்த்து “ ராமு,சாரதாவுக்கு சுகப் பிரசவம் ஆயி,அவ எங்களுக்கு ஒரு பேரனையோ,இல்லே ஒரு பேத்தியையோ பெத்துக் குடுக்கணும்ன்னு அந்த பகவானை விடாம வேண்டிண்டு வந்தோம்.அந்த பகவான் எங்க பிரார்த்தணையை ஏத்துண்டு உங்களுக்கு ஒரு பேரனையும் ஒரு பேத்தியையும் இந்த பிரசவத்திலேயே குடுத்து இருக்கார்.எங்க பிரார்த்தணை வீண் போகலே” என்று சந்தோஷமாகச் சொன்னார்கள்.நானும் என் சந்தோஷதை என் பெற்றோர்களிடம் சொன்னேன்.

என்னைப் பெற்ற என் அம்மாவும் அப்பாவும் இப்படி சந்தோஷப் படுவதைப் பார்த்து நானும் மிகவும் சந்தோஷப் பட்டேன்.

ஒரு முக்கால் மணி நேரம் ஆனதும் அந்த நர்ஸ் எங்களிடம் வந்து “இப்போ நீங்க உள்ளே போய் அவங்களேப் பாக்கலாம்” என்று சொன்னதும், நான் அம்மா அப்பாவை அழைத்துக் கொண்டு சாரதா இருந்த ‘பெட்’க்குப் போய் சாரதாவையும் குழந்தைகளையும் பாத்தோம்.இரண்டு குழந்தைகளும் நல்ல கலரா அழாக இருந்தார்கள்.

ரெண்டு நிமிஷம் கூட ஆகவில்லை.என் அம்மா சாரதாவைப் பார்த்து ”சாரதா,எங்க மூனு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.ரெண்டு குழந்தைகளும் நல்ல கலரா அழகாப் பொறந்து.நீ ஒரே பிரசவத்லே எங்களுக்கு ஒரு பேரனையும்,பேத்தியை பெத்துக் குடுப்பேன்னு நாங்க கனவிலே கூட நினைக்கலே.நீ ஒன்பது கஜ மடிசார் புடவையை கட்டிண்டு,என் கூட உக்காந்துண்டு எல்லா வெள்ளிக் கிழமையிலேயும் லலிதா சஹஸ்ரனாம பூஜையை சிரத்தையா பண்ணீனது வீண் போகலே. அந்த அம்பாள் தான் உனக்கு ஒரே பிரசவத்லே லட்டு மாதிரி ஒரு ஆண் குழந்தையையும், ஒரு பெண் குழந்தையையும் அனுக்கிரஹம் பண்ணீ இருக்கா” என்று சந்தோஷமாக சொன்னாள்.
என் அம்மா சொன்னதுக்கு சாரதா ஒரு பதிலும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.

எனக்குத் தொ¢யும் சாரதாவுக்கு இந்த குழந்தைகள் இவ்வளவு சீக்கிரமாகப் பிறந்தது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்று.அவள் தான் ‘அபார்ஷன்’ பண்ணீக் கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்டாளே.என் அம்மா சொன்னதுக்கு சாரதா பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்ததைப் பார்த்து நான் கொஞ்சம் வருத்தப் பட்டேன்.

விஷயம் கேள்விப் பட்டு சாரதாவின் பெற்றோர்கள் அந்த ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு வந்து, சாரதாவையும் குழந்தைகளையும் பார்த்தார்கள்.இருவருக்கும் மிகவும் சந்தோப் பட்டார்கள். சாரதா வின் அம்மா சாரதாவைப் பார்த்து ”சாரு,எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரெண்டு குழந்தைகளும் நல்ல கலரா அழகா உனக்குப் பொறந்து இருக்கு.எல்லாம் அந்த அம்பாள் அனுக்கிரஹம் தான்” என்று சொல்லி விட்டு என் அம்மாவைப் பார்த்து “என்ன மாமி உங்களுக்கும் சந்தோஷம் தானே.என் பொண்ணூ உங்களுக்கு முதல் பிரசவத்திலேயே ஒரு பேரனையும்,ஒரு பேத்தியையும் பெத்துக் குடுத்து இருக்கா” என்று சொன்னதும் “எங்க மூனு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்க பொண்ணு இந்த மாதிரி முதல் பிரசவத்திலேயே ஒரு பேரனையும்,ஒரு பேத்தியையும் பெத்துக் குடுப்பன்னு நாங்க கனவிலே கூட நினைக்கலே.நீங்கோ சொன்னா மாதிரி எல்லாம் அந்த அம்பாள் அனுக்கிரஹம் தான்” என்று சொல்லி தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தி னாள்.

பிரசவம் பார்த்த டாக்டர் சொன்னதும் நான் சாரதாவையும் குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.நானும் அப்பாவும் வேலைக்குப் போய்க் கொண்டு இருந்தோம்.சாரதா ரெண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு வந்தாள்.அன்று இரவு படுத்துக் கொண்டதும் சாரதா என்னிடம்” ‘ஹை பஸ்ட் க்லாஸிலே B.Com.பாஸ்’ பண்ணீன நான்,இப்போ இந்த ரெண்டு குழந் தைகளுக்கும்,பாலைக் குடுத்துண்டு,’டைபரே’ மாத்திண்டு, குளிப்பாட்டி ‘ட்ரஸ்ஸை’ப் போட்டுக் கொண்டும்,தூங்க வச்சுக் கொண்டும் ஒரு ஆயாவாட்டம் இருந்துண்டு வறேன்.இந்த குழந்தைகளே ‘அபார்ஷன் பண்ணீட்டுலாம்ன்னு நான் உங்க கிட்டே முட்டிண்டேன்.நீங்க கேட்டேளா உங்க அம்மா எப்போது மடி ஆசாரம்.உங்க அம்மாவாலே எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லே.எல்லாம் என் தலை எழுத்து.நான் பட்டுண்டு வறேன்” என்று கத்தினாள்.

நான் ”சாரதா,எனக்கும் நீ இப்படி கஷ்டப் பட்டுண்டு வறதே பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.நான் என்ன பண்ணட்டும் சொல்லு.நான் வேணுமானால் இன்னும் ஒரு பத்து நாள் லீவு போட்டுட்டு,உன் கூட ஆத்லே இருக்கட்டுமா” என்று கேட்டவுடன் உடனே சாரதா” நீங்கோ அதே எல்லாம் தவயு செஞ்சி பண்ணாதீங்கோ.உடனே உங்க அம்மா வந்து ‘ராமு நீ ஏண்டா லீவு போட்டு ஆத்லே வெறுமனே இருக்கே.அவ குழந்தேகளே பாத்துண்டு வறப் போறா.சாரதா உன்னே லீவு போட்டுட்டு கூட இருக்க சொன்னாளா’ன்னு கேட்டுண்டு வந்து என்னே பிடுங்குவா.இன்னும் அந்த வேதனையே நான் தாங்கிண்டு வரணும்”என்று வெறி வந்தவள் கத்தினாள்.

எங்க அம்மாவும் அப்பாவும் பத்தாவது நாள் ரெண்டு குழந்தைகளுக்கும் ‘தொட்டில் போடும் விழாவை’க் கொண்டாடி விட்டு அடுத்த நான் வாத்தியாரைக் கூப்பிட்டு குழந்தைகளுக்கு ‘நாம கரணம்’ செய்தார்கள்.வாத்தியார் என் அம்மா அப்பா சொன்ன பேர்களை குழந்தைகளுக்கு வைத்தார். ஆண் குழந்தைக்கு ‘விஷ்ணு’ என்று பெண் குழந்தைக்கு ‘லக்ஷ்மி’ என்று வைத்த பேர் ‘நாமகரண விழாவுக்கு வந்து இருந்த சாரதாவின் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது.

மதிய சாப்பாடை முடித்து விட்டு,சாரதாவுடனும்,குழந்தைகளுடனும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு அவர்கள் வீட்டுக்குக் கிளபிப் போனார்கள் சாரதாவின் பெற்றோர்கள்.

ஒரு வருடம் ஓடி விட்டது.

என் பெற்றோகள் வாத்தியாரை வீட்டுக்கு வர வழைத்து ரெண்டு குழந்தைகளுக்கும் ‘கிரமமாக’ ‘ஆயுஷ்ஹோமம்’ விழாவைக் கொண்டாடினார்கள்.அந்த விழாவுக்கு சரதாவின் பெற்றோர்கள் வந்து இருந்து குழந்தைகளுக்கும்,எனக்கும்,சாரதாவுக்கும் புது துணி மணிகள் வாங்கிக் கொண்டு கொடு த்து விட்டு,விழாவில் கலந்துக் கொண்டு மதியம் சாப்பிட்டு விட்டு,சாரதாவுடனும் குழந்தைகளுடன் சாயங்காலம் வரைக்கும் சந்தோஷமாக இருந்து விட்டு,இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு,என் அம்மா விடமும் அப்பாவிடமும் சொல்லிக் கொண்டு அவரகள் வீட்டுக்குப் போனார்கள்.

எப்போதும் சாரதா முகத்திலே கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை.அவள் எல்லா நேரமும் ஏதோ முணு முணுத்துக் கொண்டே தன் வேலைகளை செய்துக் கொண்டு வந்தாள்.நான் பல தடவை அவளுக்கு சந்தோஷம் வர சமாசாரங்களை எல்லாம் பேசி வந்தும்,என்னால் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியவில்லை.

ரெண்டு வருடங்கள் ஓடி விட்டது.

என் அம்மா அப்பாவிடம் சொல்லி விட்டு நான் சாரதாவையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ‘பீச்சு’க்குப் போனேன்.நாங்கள் எல்லோரும் ‘பீச் மணலில் உட்கார்ந்துக் கொண்டேம்.நான் குழந்தைகளை கவனித்துக் கொண்டு இருந்தேன்.கொஞ்சம் தூரத்தில் சாரதாவின் கண்ணீல் அவள் ‘ஆபீஸ் ப்ரெண்ட்’ ஒருவள் அவள் கணவனுடன் உட்கார்ந்துக் கொண்டு இருந்தது தொ¢ந்தது. உடனே சாரதா என்னைப் பார்த்து “நீங்கோ குழந்தைகளே ஜாக்கிறதையா பாத்துண்டு வாங்கோ.என் ‘ஆபீஸ் ப்ரெண்ட்’ ஒத்தி அவ ஆத்துக்காரரோடு அங்கே உக்காந்துண்டு இருக்கா.நான் அவளோட ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு என் பதிலுக்குக் கூட காத்து இல்லாமல் தன் ‘ஆபீஸ் ப்ரெண்டை’ப் பார்க்கப் போனாள்.

நான் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன்.ஒரு மணி நேரம் சாரதா அவள் ‘ஆபீஸ் ப்ரெண்டுடன்’ பேசிக் கொண்டு இருந்து விட்டு சாரதா சிரித்த முகத்தோடு வந்தாள்.

’ரொம்ப நாளைக்கு அப்புறமா அவ பழைய ‘ஆபீஸ் ப்ரெண்டை’ பாத்து பேசி விட்டு வந்த சந்தோஷம் போல இருக்கு சாரதாவுக்கு.அவ ரொம்ப நாளுக்கு அப்புறமா இப்போ சந்தோஷமா இருந்து வறாளே’ என்று நினைத்து நான் சந்தோஷப் பட்டேன்.

மணி எட்டடித்து விட்டதால் நான் சாரதாவையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு வீட்டு வந்துக் கொண்டு இருந்தேன்.வரும் வழியில் நான் சாரதாவைப் பார்த்து “என்ன சாரு, உன் பழைய ‘ஆபீஸ் ப்ரெண்டோடு’ நீ ஒரு மணி நேரம் பேசிட்டு வந்தப்பறம்,ரொம்ப நாள் கழிச்சு உன் மூஞ்சியிலே நான் ஒரு சந்தோஷத்தேப் பாத்தேன். உன் பழைய ‘ஆபீஸ் ப்ரெண்ட்’ அப்படி நீ சந்தோஷப் படறா மாதிரி என்ன சொன்னா”என்று ஒரு சின்ன குழந்தையைப் போல கேட்டேன்.அவள் சிரித்துக் கொண்டே” நீங்கோ ஆத்துக்கு வாங்கோ நான் எல்லா விவரமா சொல்றேன்”என்று சொன்னதும் நான் “சரி சாரு,நீ ஆத்துக்கு வந்தே எனக்கு சொல்லு.நீ இப்போ சந்தோஷமா இருக்கிறதே எனக்குப் போறும்“ என்று சொன்னேன்

நான் வீட்டுக்கு வந்ததும் வராததமும் என் அம்மா என்னைப் பார்த்து “ராமு,இந்த சின்ன குழந்தைகளை வச்சுண்டு நீங்கோ இருட்டினப்புறமா வெளியிலே இருக்கக் கூடாதுடா.குழந்தகளே காத்து கருப்புத் தாக்கும்.எங்கே போனாலும் இருட்டறதுக்குள்ளே ஆத்துக்கு வந்திடுங்கோ”என்று கொஞ்சம் மிரட்டும் குரலில் சொன்னாள்.நான் உடனே “சரிம்மா,நாங்க எங்கே போனாலும் இருட்டறது க்கு முன்னாடி ஆத்துக்கு வந்துடறோம்” என்று சொன்னேன்.

சாப்பிட்டு விட்டு நானும்,சாரதாவும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்கள் ‘பெட் ரூமு’க்குப் போனோம்.சாரதா ரெண்டு குழந்தைகளையும் தூங்கப் பண்ணி விட்டு,படுக்க வைத்து விட்டு என்னுடன் பேச வந்தாள்.பேச ஆரம்பிக்கும் முன்னாலேயே சாரதா என்னைப் பார்த்து” நான் சொல்லப் போற சமாசாரத்தே கேட்டு அதிர்ச்சி எல்லாம் அடையாதீங்கோ.நான் சொல்றதே முழுக்கக் கேளுங்கோ.நான் சொல்றது ரொம்ப முக்கியமான சமாச்சாரம்.நம்ப ரெண்டு பேர் சமந்தப் பட்டது. அப்புறமா உங்களுக்கு என்ன தோன்றதோ அதே சொல்லுங்கோ” என்று சொல்லி நிறுத்தினாள்.

நான் உடனே “சரி சாரு.நீ சொன்னப்புறமா நான் நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்றேன்.நீ விஷயத்தே முதல்லே சொல்லு” என்று கேட்டதும் சாரதா தன் தொண்டையை கனைத்துக் கொண்டு “இதோ பாருங்கோ,குழந்தைகளுக்கு விவரம் தொ¢ய ஆரம்பிச்சுடுத்து.நானும் ‘ஹை பஸ்ட் க்லாஸிலே B.Com.பாஸ்’ பண்ணிட்டு,ஆத்லே சும்மா உக்காந்துண்டு இருக்கேன்.நீங்கோ ஒருத்தர் தான் சம்பாதிச்சுண்டு வறேள்.உங்க அப்பா சம்பாதிக்கறது அவருக்கும் உங்க அம்மாவுக்கும்.

எனக்கும்,உங்களுக்கும்,குழந்தைகளுக்கும் நல்ல ‘டிரஸ்கள்’ எல்லாம் வாங்கணும்.இன்னும் ஒரு வருஷம் போனா,நாம ரெண்டு குழந்தைகளையும் ஒரு நல்ல பள்ளீ கூடத்லே ‘டொனேஷன்’ குடுத்து, Pre KG ‘க்லாஸ்லே’ சேக்கணும்.இதுக்கு எல்லாம் நிறைய செலவு ஆகும்.அதனால்லே நான் என்ன சொல்றேன்னா,நாம இப்போ ‘தனி குடித்தனம்’ போயிடலாம்.நானும் பழையபடி வேலைக்குப் போயி ண்டு வறேன்.எங்க அம்மா அப்பா இப்போ ‘ப்¡£யா’ தான் இருந்துண்டு இருக்கா.அவா நம்ம கூட இருந்துண்டு குழந்தைகளே கவனிசிச்சுண்டு வருவா.இந்த ‘ஐடியா’வுக்கு நீங்கோ என்ன சொல்றேள்” என்று ஒரு ‘பூகம்பத்தை’ப் போட்டு விட்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
நான் ரெண்டு நிமிஷம் சும்மா இருந்தேன்.

பொறுமையை இழந்த சாரதா “நீங்கோ வேணாம்ன்னு சொன்னாக் கூட நான் கேக்கப் போறது இல்லே.நான் நாளைக்குக் காத்தாலே எழுந்தவுடன் நான் எடுத்து இருக்கு முடிவை உங்க அம்மா அப்பா கிட்டே சொல்லிட்டு பண்ணப் போறேன்.நான் இனிமே இந்த ஆத்லே இருந்துண்டு மக்கப் போறது இல்லே.நான் தீர்மானமா சொல்லிட்டேன்.உங்களுக்கு உங்க அம்மா அப்பா தான் முக்கியம் ன்னு பட்டா நீங்கோ இந்த ஆத்லேயே இருந்துண்டு வாங்கோ.இல்லே நானும் குழந்தைகளும் முக்கியம்ன்னு பட்டதுன்னா,நீங்கோ என் கூட ‘தனிக் குடித்தனத்துக்கு’ வாங்கோ.முடிவு உங்க கையிலே தான் இருக்கு ” என்று சொல்லி விட்டு போர்வையை போர்த்திக் கொண்டு என் பதிலுக்கு காத்திராமல் தூங்கப் போய் விட்டாள்.

நான் இரவு பூராவும் சாரதா எனக்குக் கொடுத்து இருக்கும் ‘தர்ம சங்கடத்தை’ நினைத்து படுத்துக் கொண்டு இருந்தேன்.எனக்கு எப்படி தூக்கம் வரும்.சாரதா தான் என்னைப் பார்த்து ‘எது முக்கியம்’ன்னு முடிவு பண்றது என் கையிலே தான் இருக்கு என்று சொல்லி விட்டாளே.நான் இரவு பூராவும் தூங்காமல் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தேன்.

காலையில் எழுத்ததும் என் அம்மா கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு சாரதா “அம்மா, அப்பா நான் குழந்தகளோட ‘தனிக் குடித்தனம்’ போகலாம்ன்னு முடிவு பண்ணீ இருக்கேன்.இந்த சின்ன குழந்தேகளே எங்க ஆத்லே ‘ப்¡£யா’ இருக்கற என் அம்மாவும் அப்பாவும் பாத்துப்பா.நான் அவர் கிட்டே தீர்மானமா சொல்லிட்டேன். ’உங்களுக்கு உங்க அம்மா அப்பா தான் முக்கியம்ன்னு பட்டா நீங்கோ இந்த ஆத்லேயே இருந்துண்டு வாங்கோ.இல்லே நானும் குழந்தைகளும் முக்கியம் ன்னு பட்டதுன்னா,நீங்கோ என் கூட ‘தனிக் குடித்தனத்துக்கு’ வாங்கோ.முடிவு உங்க கையிலே தான் இருக்கு’ ன்னு சொன்னேன்.அவர் எனக்கு பதில் ஒன்னும் சொல்லலே” என்று சொல்லி விட்டு குழந்தைகளைக் கவனிக்கப் போய் விட்டாள்.

என் அம்மா என்னைப் பாத்து “ராமு,என்ன ஆச்சுடா சாரதாவுக்கு.நாங்க அவ கிட்டே அன்பா ஆசையாத் தானே இருந்துண்டு வரோம்.அவ இப்போ ஏண்டா திடீர்ன்னு தனி குடித்தனம் போகணும் ன்னு சொல்றா.எங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் புரியலையே” என்று கேட்டாள்.

நான் நிதானமாக” நேத்து ராத்திரி தான் சாரதாவும் திடீர்ன்னு தான் என் கிட்டே இந்த ‘ப்லாணை’ சொன்னா.எனக்கு அவ சொன்னது கொஞ்சம் ஆச்சரியமா தான் இருந்தது” என்று சொல்லி முடிக்கவில்லை உடனே சாரதா ரூமை விட்டு வெளியே வந்து “நான் உங்களுக்கு காரணத்தே சொன்னேனே.அப்புறமா நான் சொன்னதிலே உங்களுக்கு என்ன ஆச்சரியம் இருக்க முடியும்..நான் சொன்ன காரணத்தை உங்க அம்மா அப்பா கிட்டே விவரமா சொல்லுங்கோ.நான் குழந்தைகளுக்கு ‘டைப்பரே’ மாத்திட்டு வறேன்” என்று சொல்லி விட்டு மறுபடியும் ரூமுக்குள் போய் விட்டாள்.

சாரதா ரூமுக்குள் போன பிறகு நான் என் அம்மா அப்பாவிடம் அவள் ராத்திரி சொன்ன எல்லா விவரங்களையும் முழுக்கச் சொன்னேன்.என் அம்மா உடனே “ஏண்டா ராமு,அப்பா சம்பாத்யம் எனக்கு மட்டும் தானாடா.அவ சொன்னா.நீ அதே கேட்டுண்டு சும்மா இருந்தயடா.அவ கிட்டே நீ ‘நான் எங்க அம்மா அப்பாவுக்கு ஒரே பிள்ளை.அவா காலத்துக்கு அப்புறமா அவா விட்டுட்டுப் போற சொத்து பூராவும்,உனக்கும், எனக்கும்,இந்த குழந்தைளுக்கும் தான்.அவாளுக்கு இருந்த ஒரே பொண்ணு கல்யாணம் பண்ணீண்டு அவ புக்ககம் போயீட்டா’ நறுக்குன்னு சொல்ல மாட்டியோ” என்று கத்தினாள்.

அம்மா சொன்னதை ‘ரூமில்’ கேட்ட சாரதா விட்டு உடனே வெளியே வந்து “எனக்கு அந்த விவரம் எல்லாம் எல்லாம் ரொம்ப நன்னாத் தொ¢யும்.அவ எனக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லே.இங்கே நான் இருந்து வந்தா வேலேக்குப் போக நீங்கோ அனுப்ப மாட்டேள்.நான் ‘தனிக் குடித்தனம்’ போனா மறுபடியும் வேலைக்கு போவேன்.என் குழந்தைகளுக்கும் எனக்கும் அவருக்கும் நல்ல டிரஸ் வாங்க முடியும்….” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது என் அம்மா” ராமு அந்த கதையை எல்லாம் விவரமா எங்க கிட்டே சொல்லிட்டான்.நீ மறுபடியும் ஒன்னும் சொல்ல வேணாம்” என்று கோவமாக சொல்லி விட்டு என் அம்மா சமையல் ரூமுக்குப் போய் விட்டாள்.

நான் சாரதாவுடன் பெட் ரூமிக்குப் போனேன்.சாரதா அவ அம்மா அப்பாவை ‘போன்லே’ கூப்பிட்டு, அவ ராத்திரி என் கிட்டே சொன்னது,காலையிலே ‘ஹாலில்’ அம்மாவிடம் சொன்னது, அதற்கு என் அம்மா சொன்னது,அத்ற்கு தான் சொன்ன பதில் எல்லாவற்றையும் விவரமாக் சொன் னாள்.அவள் பெற்றோர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று எனக்குத் தொ¢யாது.ஆனால் சாரதா “நான் ‘டிஸைட்’ பண்ணிட்டேன்.இன்னும் ஒரு வாரத்தில் நான் ‘தனிக் குடித்தனம்’ நிச்சியமா போகப் போறேன்.உங்களால் முடிஞ்சா நீங்கோ ரெண்டு குழந்தைகளை அவ கொஞ்சம் பொ¢யவாளா ஆகற வரைக்கும் வந்து பாத்துக்கோங்கோ.உங்களால் முடியாட்டா எனக்கு சொல்லுங்கோ.நான் குழந்தை களே என் ஆத்துக்கு பக்கத்லே இருக்கிற ஒரு ‘க்ரெச்ஸ்லே’ வீட்டுட்டு வேலைக்குப் போறேன்” என்று கோவமாகச் சொல்லி விட்டு ‘போனைக் கட்’ பண்ணனாள்.

மணி ஒன்பது அடித்ததும் சாரதா எல்லோர் காதிலும் விழும்படி “நான் ஒரு ‘ப்ரோக்கரே’ப் பாத்து ஒரு ‘டூ பெட் ரூம்’ ப்லாட் வாடகைக்குக் கிடைக்குமான்னு கேட்டுண்டு வறேன்” என்று சொல்லி விட்டு காலில் செருப்பைப் போட்டுக் கொண்டு கிளம்பிப் போனாள்.

அவள் கிளம்பிப் போனதும் என் அம்மா என்னைப் பார்த்து “அவ இப்படி ஒரு முடிவு பண்ணி னான்னா என்னாலேயோ, உன்னாலேயோ,அப்பாவாலேயோ ஒன்னும் பண்ண முடியாது.இந்த மாதிரி பணறது தப்புண்ணு அவ அம்மா அப்பா தான் அவளுக்கு நல்ல புத்தி சொல்லித் திருத்தணும்…” என்று என் அம்மா சொல்லிக் கொண்டு இருக்கும் போது நான் என் அம்மாவிடம்” அம்மா சாரதா அவ அம்மா அப்பா கிட்டே இந்த சமாசாரத்தே ‘போன்’ பண்ணிச் சொன்னா.அவா சாரதாவுக்கு என்ன புத்திமதி சொன்னான்னு எனக்குத் தொ¢யாது.சாரதா மட்டும் கோவமாக அவா கிட்டே’உங்களால் முடியாட்டா எனக்கு சொல்லுங்கோ.நான் குழந்தைகளே என் ஆத்துக்கு பக்கத்லே இருக்கிற ஒரு ‘க்ரெச்ஸ்லே’ வீட்டுட்டு வேலைக்குப் போறேன்’ ன்னு சொல்லிட்டு ‘போனை’ கட் பண்ணீனாள்” என்று சொன்னேன்.

கொஞ்ச நேரம் ஆனதும் “ராமு,எனக்கு என்னவோ யாரோ அவ மனசே இந்த ‘தனி குடித்தன’ சமசாரத்தே சொல்லிக் கெடுத்து இருக்கணும்…” என்று சொல்லி முடிக்கவில்லை, நான் உடனே ஞாபகம் வந்தவனாக” நீங்கோ சொல்றது ரொம்ப ‘கரெக்ட்ம்மா’. நேத்தி சாயங்காலம் ‘பீச்லே’ சாரதா அவ பழைய ‘ஆபீஸ் ப்ரெண்டோடு’ ஒரு மணி நேரம் பேசிட்டு வந்தா.அவ கிட்டே பேசிட்டு வந்ததும் சாரதா சந்தோஷமா இருந்தா.நான் சாரதா கிட்டே கேட்டேன்.அதுக்கு அவ ‘நீங்கோ ஆத்துக்கு வாங்கோ நான் எல்லாம் விவரமா சொல்றேன்’ன்னு சொன்னா.அந்த ‘ப்ரெண்ட்’ தான் சாரதா கிட்டே இந்த ஐடியாவை சொல்லி இருக்கணும்” என்று சொன்னேன்.

வெளியே போன மூன்று மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பி வந்தாள்.காலில் பொட்டுக் கொண்டு இருந்த செருப்பை கழட்டி வைத்து விட்டு “’ப்ரோக்கர்’ எனக்கு ஒரு நல்ல ‘டூ பெட் ரூம்’ ப்லாட’ காட்டினான்.அந்த ‘ப்லாட்’ ரொம்ப நன்னா இருந்தது.னான் உடனே அந்த ‘பலாட்’ ஓனரைப் பார்த்து பேசி அந்த ‘ப்லாட்’டே ஏற்பாடு பண்ணீட்டு வந்து இருக்கேன்” என்று சந்தோ ஷமாகச் சொன்னாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் தன் மாமனாரும் மாமியாரும் ‘அந்த ப்லாட்டே நமக்கு காட்டலயே இவ.சுத்த கர்வியா இருப்பாப் போல இருக்கே’ என்று நினைத்துக் கொள்ளுவார்களோ என்று பயந்து “நீங்க ரெண்டு பேரும் அந்த ‘ப்லாட்டே’பாக்கணும்ன்னு ஆசைப் பட்டா சொல்லுங்கோ. நான் சாயங்காலமா அவரே அழைச்ச்சுண்டு போய் அந்த ‘ப்லாட்டே’காட்டும் போது உங்களையும் கூட அழைச்சுண்டு போறேன்” என்று சொன்னாள்.

உடனே என் அப்பா “நாங்களா அந்த ‘ப்லாட்லே’ குடி இருந்து வறப் போறோம், அந்த ‘ப்லாட்டே’ பாக்கறதுக்கு.நீ ராமுவே அழைச்சுண்டு போய் காட்டு.நாங்க உன் கூட வறலே” என்று கோவமாக் ச் சொன்னார்.

சாரதா அவள் அம்மா அப்பாவிடம் தான் பார்த்து இருக்கும் ‘டூ பெட் ரூம் ப்லாட்’ விஷயத்தைச் சொன்னாள்.பிறகு என்னைப் பார்த்து “நான் சொல்றேன்னு என்னே தப்பா எடுத்துக் காதீங்கோ.நான் உங்களே கல்யாணம் பண்ணீண்டு வந்த நாள்ளே இருந்தே உங்க கிட்டே நான் வேலைக்குப் போக ரொம்ப ஆசைபடறேன்னு சொல்லிண்டு வந்து இருக்கேன்.ஆனா உங்க அம்மா வும் அப்பாவும் என் ஆசையிலே மண்ணேப் போட்டுட்டா.என் போறாத காலம் நான் மூனு மாசத் திலேயே ‘ப்ரெக்னண்ட்’ ஆயிட்டேன்.எனக்கு அந்த பிரசவத்லே ரெண்டு குழந்தையும் பொறந்து டுத்து.நமக்கு இந்த ரெண்டு குழந்தகளே போதும்.இனிமே குழந்தைகளே வேணம்.நீங்கோ மனப் பூர்வமா என் கூட இந்த ‘தனி குடித்தனத்துக்கு’ என் கூட வாங்கோ” என்று என் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்டாள்.

அப்படி கேட்டு விட்டு என்னை ‘தர்ம சங்கடத்தில்’ ஆழ்த்தினாள் சாரதா.நான் பதில் ஒன்று சொல்லாமல் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தேன்.

‘எனக்கு என் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு முக்கியமோ, அதே ஆளவுக்கு சாரதாவும்,என் குழந்தைகளும் முக்கியம்.நாம அம்மா அம்மா கிட்டே சொல்லிட்டு சாரதா கூட தனிக் குடித்தனம் போகலாம்.கூடவே வாரம் ஒரு தடவையாவது அப்பா அம்மாவை வந்து பாத்துண்டு வந்து,அவா காலம் முடியற வரைக்கும் அவாளுக்கு உபயயோகமா இருந்துண்டு வரணும்’ என்று முடிவு பண்ணீ னேன்.

நான் சாரதாவைப் பார்த்து “நான் உன் கூடவும்,குழந்தைகள் கூடவும் நிச்சியமா அந்த ப்லா ட்டிலே இருக்கேன்.நீ கவலைப் படாம இருந்து வா” என்று சொன்னதும் சாரதா என் கையைப் பிடித்துக் கொண்டு தன் சந்தோஷத்தைத் தொ¢வித்தாள்.

சாரதா ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு,குழந்தைகளுக்கும்’ டிரஸ் பண்ணி விட்டு என் அம்மா அப்பாவைப் பார்த்து “நான் அவருக்கு நான் பாத்து இருக்கற ப்லாட்டைக் காட்டி விட்டு வறேன்.என் அம்மாவும், அப்பாவும் அந்த ‘ப்லாட்டு’க்கு வறதா சொல்லி இருக்கா” என்று சொல்லி விட்டு என்னையும் அழைத்துக் கொண்டு அவள் பார்த்து இருக்கும் ‘ப்லாட்டை’ காட்டினாள்.அந்த ‘ப்லாட்டுக்கு’ சாரதாவின் அம்மாவும் அப்பாவும் வந்து இருந்தார்கள்.எல்லோருக்கும் சாரரதா பார்த்து இருந்த ‘ப்லாட்’ ரொம்ப பிடித்து இருந்தது.

அடுத்த நாள் காலையிலே நானும் என் அப்பாவும் வேலைக்குக் கிளம்பும் போது என் அம்மா வைப் பார்த்து “அம்மா,நீங்கோ கொஞ்ச நேரம் குழந்தகளே பாத்துண்டு வாங்கோ.நான் என் பழைய ‘ஆபீஸ்’க்குப் போய் என் பழைய மானேஜரைப் பாத்து,எனக்கு மறுபடியும் நான் பாத்துண்டு வந்த வேலையை எனக்கு மறுபடியும் தர முடியுமான்னு கேட்டுண்டு வறேன்.அவர் என்னேப் பத்தி என் ‘ப்ரெண்ட்’ கிட்டே ரொம்ப கேட்டார்ன்னு என் ‘ப்ரெண்ட்’ என்னே ‘பீச்லே’ பாத்தப்ப சொன்னாரம்” என்று சந்தோஷமாகச் சொல்லி விட்டு என் கூட கிளம்பினாள்

என் அம்மா சாரதா சொன்னதுக்கு பதில் ஒன்னும் சொல்ல வில்லை.சாரதா கவலைப் படவில்லை.சாரதா தன் பழைய ஆபீஸ்க்குப் போய் எங்க குடும்ப நிலவரத்தை சொல்லி விவரமாகச் சொல்லி அவள் செய்து வந்த வேலையை மறுபடியும் வாங்கிக் கொண்டாள்.

அவள் ‘ஆபீஸ்’லே சாயங்காலம் வரை இருந்து விட்டு,இந்த சந்தோஷ சமாசாரத்தே நான் வீட்டுக்கு வரும் நேரம் வந்தவுடன் வீட்டுக்கு வந்து எல்லோரையும் பார்த்து “என் பழைய மானேஜர் எனக்கு நான் செஞ்சு வந்த வேலையை மறுபடியும் குடுத்து இருக்கா.நான் வர மாசம் ஒன்னாம் தேதியிலே இருந்து ‘ஆபீஸ்’க்கு வறதா சொல்லி விட்டு வந்து இருக்கேன்” என்று சந்தோஷமாச் சொன்னாள்.

சாரதா அப்பாவும் அப்பாவும் ஏற்பாடு பண்ணி இருந்த ஒரு நல்ல நாளில் சாரதா எங்க எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் ‘பால்’ காய்ச்சிக் குடித்து விட்டு,வாத்தியாரை வைத்துக் கொண்டு ‘கிரஹபிரவேசம் பன்ஷனை’ பண்ணி முடித்தாள்.’பன்ஷன்’ முடிந்ததும், அந்த ‘ப்லாட்டில்’ ‘காடா¢ங்க் காரர்’ பண்ணி இருந்த சாப்பாட்டை சாப்பிட பிடிக்காமல்,வெறும் தயிர் சாத்தை மட்டும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளமபி வந்தார்கள்.சாரதாவின் பெற்றோர்கள் அந்த ‘ப்லாட்டில்’ தங்கி இருந்து வந்து,குழந்தைகளை கவனித்துக் கொண்டு வருவதாகச் சொன்னார்கள். சாரதா மிகவும் சந்தோஷப் பட்டாள்.

அடுத்த நாளே சாரதா குழ்ந்தைகளை ‘ப்லாட்டில்’ அவள் அம்மா அப்பாவிடம் விட்டு விட்டு, கடைக்குப் போய் வீட்டுக்கு வேண்டிய எல்லா பாத்திரங்கள்,ரெண்டு கட்டில் மெத்தை,போர்வைகள், ஹாலில் போட ஒரு ‘சோபா செட்’ ‘காஸ்’ கனெக்ஷன் எல்லாம் வாங்கி வந்து வீட்டை ரெடி பண்ணீ விட்டாள்.

அந்த வார ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் சாரதா அவள் துணிமணிகள், குழந்தைகள் துணி மணீகள் என் துணிமணிகள் எல்லாவற்றையும் மூன்று ‘சூட் கேஸில்’ ‘பாக்’பண்ணி எடுத்து வைத்துக் கொண்டாள். இரவு சாப்பாடு முடிந்ததும் சாரதா என் அம்மா அப்பாவைப் பார்த்து “நாங்க எல்லோரும் நாளையிலே இருந்து அந்த ‘ப்லாட்டில்’ இருந்து வறப் போறோம்.உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்கறதோ,அப்போ எங்களே பாக்க வேணும்ன்னு நீங்கோ ஆசைப் பட்டா,நீங்கோ ரெண்டு பேரும் அந்த ‘ப்லாட்’டுக்கு வந்து எங்களே பாக்க வாங்கோ.நானும் அவரும் முடிஞ்சப்ப இநே வந்து உங்க ரெண்டு பேரையும் பாக்க வறோம்” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

உடனே என் அம்மாவும்,அப்பாவும் “எங்கே இருந்தாலும் நீங்கோ எல்லோரும் சந்தோஷமா சௌக்கியமா இருந்துண்டு வாங்கோ.இனிமே இதேத் தான் நானும், மரகதமும் அந்த பகவானை தினமும் வேண்டிண்டு வறப் போறோம்”என்று சொல்லும் போது அவர் கண்களில் நீர் துளித்தது. அவர் தன் தோளின் மேலே போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டார்.

எனக்கு பொங்கிக் கொண்டு வந்த துக்கத்தை மெல்ல நான் கட்டுப் படுத்திக் கொண்டு அன்று இரவு சாரதாவுடனும்,குழந்தைகளுடனும்,’பெட் ரூமு’க்குத் தூங்கப் போனேன்.அடுத்த நாள் காலையிலே, நானும் சாரதாவும் என் அப்பா அம்மாவுடன் சொல்லிக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சாரதா பார்த்து இருக்கும் ‘ப்லாட்டுக்கு’ தனி குடித்தனம் போனோம்.

அந்த மாசம் முடிந்ததும் சாரதா குழந்தைகளை அவள் அப்பா அம்மாவிடம் விட்டு விட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.

‘ஆபீஸி’ல் நான் அடிக்கடி என் அப்பாவை சந்தித்து,மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்து விட்டு,என்னால் அவர்கள் கூட என் குடும்பத்தோடு இருந்து அவர்கள் முடியாத இருந்து வர முடியாத கஷ்டத்தை சொல்லி வந்தேன்.என் அப்பாவும் என் கஷ்டத்தே புரிந்துக் கொண்டு என்ன பண்றது ராமு.உன் தர்ம சங்கடம் நேக்கு நன்னாவே புரியறது,நாம இந்த மாதிரி கஷ்டங்களே அனுபவிச்சு வரணும்ன்னு அந்த பகவான் நம்ம மூனு பேர் தலையிலேயும் எழுதி இருக்கானே.நாம ஒன்னும் பண்ண முடியாது.நாம அதே அனுபவிச்சுண்டு தான் வறணும்” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

எங்க ‘ஆபீஸ்’ வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்து வந்தது.ஆனால் சாரதாவின் ஆபீஸ் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்து வந்தது,சாரதாவுக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான் லீவு.

நான் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலே ‘காபி’யைக் குடித்து விட்டு,குழந்தைகளுக்கு பாலைக் குடிக்க கொடுத்து விட்டு,அவர்களை அழைத்துக் கொண்டு என் அம்மா,அப்பா வீட்டுக்கு வந்து என் அம்மா அப்பாவை பேரன் பேத்தியோடு சந்தோஷமாக இருந்து வரச் சொன்னேன்.ஆசைப் பட்ட கோவில்களுக்கு அவர்களை ஒவ்வொரு சனிக் கிழமையும் அழைத்துக் கொண்டு போனேன். அன்று இரவு சாப்பாடு முடிந்ததும் நான் என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ‘ப்லாட்டு’க்கு வந்துக் கொண்டு இருந்தேன்.ஞாயிற்றுக் கிழமைகளில் நான் என் மாமனார் மாமியார் சாரதா ஆசைப் பட்ட இடங்களுக்கு கூடப் போய், அவர்களுடன் சந்தோஷமாகப் பொழுதை கழித்து வந்தேன்.

என் அப்பாவுக்கு என் அம்மாவை தனியாக வீட்டிலே விட்டு விட்டு பத்து மணி நேரம்‘ஆபீஸ்’ ’க்கு வருவது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.என் ‘துரதிர்ஷ்டம்’ அடுத்த ஆறாவது மாசமே என் அப்பா ‘வாலியண்டர் ரிடையர்மென்ட்’ வாங்கிக் கொண்டு ‘ஆபீஸ்’ அவருக்கு சேர வேண்டிய மொத்த பணத்தையும் வாங்கிக் கொண்டு,வீட்டில் தனியாக இருந்து வந்த என் அம்மாவுவோடு தன் காலத்தை கழித்து வந்தார்.

பரம சாதுவான என்னை ஒரு ஆசாரம் நிறைந்த குடும்பத்தில் பிறக்க வைத்து,எனக்கு ஒரு படித்த பிடிவாதக்கார ஒரேப் பெண்ணை திருமணம் செய்ய வைத்து,திருமணம் ஆன வருஷமே ரெட்டை குழந்தைகளையும் கொடுத்து,என் மணைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ‘தனி குடித்தனம் போக வைத்த அந்த பகவான் என் வாழ்க்கையை ஒரு “ஊஞ்சலாக” ஆக்கி இருக்கிறார்.

‘சர்க்கஸீல்’ ஒரு கை தேர்ந்த கலைஞர் எப்படி கீழே விழாமல் பல பீங்கான் தட்டுகளை மேலே போட்டு,போட்டுப் பிடித்து வந்து வித்தை காட்டுகிறாரோ,அதைப் போல வாரத்தின் ஏழு நாட்களிலும் நான் செய்து வருகிறேன். வாரத்தில் ஐந்து நாட்களை எனக்கு சம்பளம் கொடுக்கும் கம்பனிக்கு செலவு பண்ணுகிறேன்.சனிக் கிழமை ஒரு நாளை என்னைப் “பெற்ற தெய்வங்களின்” சந்தோஷத் திற்காக செலவு பண்ணுகிறேன்.மீதி ஒரு நாளை நான் என் மணைவி,குழந்தைகளின் சந்தோஷத்திற் காக செலவு பண்ணுகிறேன்.

வாழ்க்கை என்னும் என் “ஊஞ்சல்” வாரத்தில் இப்படி மூன்று இடங்களுக்கும் மாறி மாறிப் போய் வந்து “ஆடி”க் கொண்டு இருந்தது.

என் அம்மா,அப்பா காலத்திற்குப் பிறகு இந்த “ஊஞ்சல்’ அந்த மாதிரி ஆடுவதை நிறுத்திக் கொண்டு,வெறுமனே இரண்டு இடங்களில் மட்டும் தான் “ஆடி’க் கொண்டு இருக்கும்.

நான் ‘ரிடையர்’ ஆனவுடன் இந்த “ஊஞ்சல்” ஒரு இடத்திலேயே “ஆடாமல்” இருந்து வரும்.!!!!

– முற்றும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *