வாடகை வீடு! – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 18,739 
 
 

சென்னையிலிருந்து என்னை தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள்.

இன்னும் மனைவி சுமதி குழந்தைகளை அழைத்து வரவில்லை. ஒரு நல்ல வீடு பார்த்து அழைத்து வர வேண்டும்.

சில வீடுகள் பார்த்ததில் இரண்டு வீடு எனக்கு பிடித்திருக்கிறது.ஒரே மாதிரியான வசதிகள் கொண்ட அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒரு வீட்டின் வாடகை ஐயாயிரமும் மற்றது ஆறாயிரமும் சொல்கிறார்கள்.

இந்த ஐயாயிரம் சொல்லும் ஹவுஸ் ஓனர் மாடியில் அவர் குடும்பத்துடன் இருந்து கொண்டு கீழ்ப் போர்ஷனை வாடகைக்கு விடுகிறார்.

ஆறாயிரம் சொல்பவர் பெங்களூரில் இருக்கிறார்.இங்கே எப்போதாவதுதான் வருவார்.வாடகையை பேங்க் அக்கவுன்ட்டில் போட வேண்டுமாம்.

ஐயாயிரம் சொல்லும் வீட்டைப் பிடித்தால் மாதம் ஆயிரம் மிச்சப் படுத்தலாம். எதற்கும் சுமதியிடம் கேட்டு அட்வான்ஸ் கொடுக்கலாம் என்று போன் செய்தேன்.

அவள் எல்லா விபரங்களையும் கேட்டுவிட்டு ஆறாயிரம் சொல்லும் வீட்டிற்கே அட்வான்ஸ் கொடுத்திடுங்க என்றாள். நான் ஆச்சர்யமாக ஏன்? என்றேன்.

” ஹவுஸ் ஓனர் மாடியில இருந்தா ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க.மோட்டார் ரொம்ப நேரம் ஓடுது.துணி இங்கே காயப் போடாதீங்க.உங்க வீட்டுக்கு என்ன அடிக்கடி கெஸ்ட் வராங்க.இப்படி ஏதாவது சொல்லி கிட்டே இருப்பாங்க.அது மட்டுமில்லை நம்மை அவங்க அடிமை மாதிரி நடத்துவாங்க. அதான் அந்த வீடு வேண்டாங்கிறேன்” என்றாள்.

பரவாயில்லையே சுமதி இப்படி எல்லாம் யோசிப்பாளா? என்று ஆச்சரியப் பட்டுப்போனேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *