கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,737 
 
 

“ஹலோ”

“சேஷாத்ரி இருக்காருங்களா?”

“ஆமா…பேசறேன்..நீங்க?”

“ஸ்டேஷன்ல இருந்து பேசறோம். உங்க பையன் பாலாஜியை இங்க வெச்சிருக்கோம் வந்து கூட்டிட்டு போங்க”

“எந்த ஸ்டேஷன்? எதுக்கு சார்”

“எஸ்.ஐ நேர்ல பேசணும்ன்னு சொல்லுறாரு வாங்க சார்”

“சார் நாங்க நல்ல ஃபேமிலி”

“அதை இங்க வந்து சொல்லுங்க சார்”

“ஹலோ…சார்…சார்”

***

“என்னங்க ஆச்சு?”

”உம்பையனை போலீஸ் ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு போய்ட்டாங்களாம்”

“என்ன சொல்லுறீங்க? என்ன ஆச்சு”

“ஒப்பாரி வைக்காத…அக்கம்பக்கத்துல இது தெரிஞ்சா நான் தொங்கிடுவேன்”

***

“சார் பாலாஜி”

“உங்க பையனா? உக்காருங்க எஸ்.ஐ வருவாரு”

“என்ன சார் ஜட்டியோட உக்கார வெச்சிருக்கீங்க”

“வேற எப்படி உக்கார வைப்பாங்க”

“சார் அவன் +2 படிக்கிறான்…டென்த்ல டிஸ்ட்ரிக்ட் ரேங்க்”

“ம்ம்ம்”

“என்ன பிரச்சினை பண்ணினான் சார்”

”எஸ்.ஐ. கிட்ட பேசுங்க”

“ஐயா… அந்தப் பையனோட அப்பா”

“நீங்கதானா? உக்காருங்க”

“சார் நான் ரெவின்யூ டிபார்ட்மெண்ட்ல இருக்கேன். தாசில்தார் ஆபிஸ்ல க்ளார்க்”

“ம்ம்ம்”

”அவன் ஸ்கூல்ல படிச்சுட்டு இருக்கான்..டென்த் மேத்ஸ் செண்டம் சார்”

“தெரியும். அதான் ஃஎப்.ஐ.ஆர் கூட போடலை”

“என்ன பிரச்சினை சார்”

“ப்ராத்தல்”

“என்ன சார் சொல்லுறீங்க”

“பொய்யா சொல்லுறேன் அவனையே கேளுங்க”

“308…பையனை கூப்பிடுய்யா”

“இப்படிப்பட்ட பையன் எனக்கு வேண்டாம் நீங்களே கொன்னு போடுங்க”

“சார்..இங்க அடிக்காதீங்க வீட்ல போய் என்னமோ பண்ணுங்க”

“இல்லப்பா…நான் அந்த ரோட்ல போயிட்டு இருந்தேன்..ஜீப்ல வந்தவங்க என்னை பிடிச்சுட்டு வந்துட்டாங்க”

“டேய் பொய் சொன்னேன்னா நடக்கறதே வேற. பொண்னு கூட ரூம்ல இருந்தான்…தூக்கிட்டு வந்துட்டோம்..படிக்கிற பையன்னு சும்மா வார்ன் பண்ணி விட்டுடலாம்ன்னு கேஸ் கூட போடலை”

“எந்தப் பொண்ணு சார்?”

“ஏன்? நீங்க அவளை பார்க்கணுமா கெளம்புங்க சார்”

“ஒழுங்கா படிக்கிற வேலையை பார்க்கச் சொல்லுங்க”

***

”ஏண்டா இந்த வயசுல”

“சத்தியமா இல்லப்பா…நம்புங்க”

“திரும்பத் திரும்ப பொய் சொல்லாத…உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா மனசு ஒடிஞ்சு போயிடுவா”

“ப்ளீஸ்ப்பா சொல்லிடாதீங்க”

”எம்பையன் பதினேழு வயசுல யாரோ ஒரு பொம்பளைய தேடிப்போனான்னு யோசிக்கக் கூட சங்கடமா இருக்கு”

”எப்படி இனி உம் முகத்தை பார்க்கிறதுன்னே தெரியல…”

…..

”பாலாஜீ…டேய் டேய்”

***

”சேஷாத்ரி பையன் பைக்ல இருந்து கீழே விழுந்துட்டானாம்”

“எப்படி இருக்கானாம்”

“கொஞ்சம் சீரியஸ்..கேகேஎஸ் ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க”

“என்னாச்சாம்?”

“சேஷாத்ரி கூடத்தான் பைக்ல வந்திருக்கான். யூனிட் டெஸ்ட்ல மார்க் குறைஞ்சுடுச்சுன்னு பேசிட்டு வந்திருக்காங்க எட்டிக் குதிச்சுட்டானாம்..அப்படித்தான் சேஷூ சொன்னாரு”

”ப்ச்ச்”
***

“சப்பை மேட்டருடா மாமூ. இதுக்கு போய் பைக்ல இருந்து குதிச்சயாடா?”

“இல்ல மச்சி…அப்பா ரொம்ப ஃபீல் பண்ணிட்டாரு…அவருகிட்ட நான் திருந்திட்டேன்னு எப்படி நம்ப வைக்கிறது”

“திருந்திட்டியாடா?”

“ம்ம்ம்ம்….இனிமே சிக்காம சேட்டை செய்யணும்”

– ஆகஸ்ட் 6, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *