கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 6,007 
 
 

தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த விக்னேஷ் அப்போது திரையில் ஓடிய பிளாஷ் நியூஸ் ஐ பார்த்து அதிர்ச்சியில் அம்மா,அம்மா என குரல்கொடுத்தான், அவசரமாக ஓடிவந்த அம்மா, என்னடா, என்ன ஆச்சு என கேட்டாள்?

T. V. யை பாரும்மா என்றான் அழுகையுடன்,

அப்போது T.V. யில்

“லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது ‘ 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி ராமலிங்கம் கையும், களவுமாக பிடிபட்டார் என scrolling ல் செய்தி ஓடியது.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, ஐயையோ, இப்படி மாட்டிவிட்டுட்டாங்களே என அழுது புலம்பியபடி, தலையில் கைவைத்தபடி உட்கார்ந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் ஜீப் ஒன்று வீட்டு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து ராமலிங்கம் மற்றும் சில லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இறங்கி வந்தனர்.

கணவரை பார்த்தவுடன் மகேஸ்வரி கதறி அழுதாள். மகன் விக்னேஷ் அப்பாவிடம் என்னப்பா ஆச்சு? என கேட்டான், என்னய வேணுமின்னு மாட்டிவிட்டுட்டாங்க, என வருத்தத்துடன் கூறினார். அதற்குள் அருகில் இருந்த அதிகாரி நீங்க யாரிடமும், எதுவும் பேசக்கூடாது என்றார்.

வந்திருந்த அதிகாரிகள் வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, அனைவரது செல் போன்களையும் வாங்கி வைத்துக்கொண்டனர். அனைவரையும் வீட்டின் நடுவில் உள்ள சோஃபாவில் அமர செய்தனர்.

பிறகு வீடு முழுவதும் சோதனை போட ஆரம்பித்தனர்.

இறுதியாக, பீரோவில் இருந்த அம்மாவின் நகைகள் மற்றும் வீட்டு செலவுக்கு வைத்திருந்த ரூபாய் 7000ஐ யும் எடுத்துக்கொண்டு ராமலிங்கத்தை மீண்டும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள்.

திடீரென்று, ராமலிங்கம் தனது கைகளை அவர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு, நான் எந்த தப்பும் செய்யல, நான் எந்த தப்பும் செய்யல, என்ன விட்டுடுங்க, என்ன விட்டுடுங்க, என கத்திக்கொண்டே வீட்டின் உள்ளே ஓடினார்.,

ராமலிங்கம் கூச்சல் போடுவதை கேட்டு, அருகில் படுத்திருந்த மகேஸ்வரி, அவரை பிடித்து உலுக்கி எழுப்பினாள், என்னங்க, என்னங்க,, எழுந்திரிங்க என்னாச்சு, ஏன் கூச்சல் போட்டிங்க? என கேட்டாள், திடுக்கிட்டு எழுந்த ராமலிங்கத்துக்கு ஏ.சி. அறையிலும் வியர்த்துக் கொட்டியது., தனக்கு நடந்தது அனைத்தும் கனவு என்று தெரிந்ததும் பெருமூச்சு விட்டார், மனைவியிடம் ஒன்றுமில்லை ஏதோ, கெட்ட கனவு என்று கூறினார்.

வேறு ஒன்றுமில்லை, நேற்று அவரது உயர் அதிகாரி அவரைக் கூப்பிட்டு “நீங்க நிறைய லஞ்சம் வாங்கிறீங்கன்னு புகார் வந்திருக்கு, லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் போயிருக்கு, லஞ்சம் வாங்கறத உடனே நிப்பாட்டுங்க, பொறிவைத்து புடிச்சாங்கன்னா, பெரிய அவமானம் மட்டும் இல்லை, உங்க வேலையும் போயி, குடும்பமும் நாசமாயிடும் அதை உணர்ந்து நடந்துகிடுங்க என அறிவுரை வழங்கினார்.

அதைமனதில் நினைத்துக்கொண்டே உறங்கச்சென்றதால் ஏற்பட்ட கனவு அது.

தாம் இனிமேல் லஞ்சம் வாங்குவதில்லை என தீர்மானம் செய்துகொண்டார் ராமலிங்கம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *