யார் சொல்றது நியாயம்ங்க?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2020
பார்வையிட்டோர்: 4,357 
 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை.

ஆறு வருடங்களாக வேலைக்குப் போகும் மகனும்,மூனு வருடங்களாக வேலைக்குப் போகும் மகளும் காலை வேளையிலே தான் வீட்டில் ‘ப்ரீ’யாக இருப்பார்கள்.
நானும்,என் மணைவியும் மற்ற நாட்களில் பேசி வந்த பிள்ளைகளின் ‘கல்யாணப் பேச்சை ஆரம்பித்தோம்.

“சுந்தர்,உனக்கு இருபத்தி எட்டு வயசாவுது.அம்மா சுதா உனக்கு இருபத்தி நாலு வயசாவுது நானும் அம்மாவும் வார நாட்களிலே உங்க கல்யாணத்தை பத்தித் தான் தினமும் பேசி வரோம். நாங்க ரெண்டு பேரும் நாங்க நிறைய பொண்ணு,பையன் ஜாதகத்தை பாத்து வந்து சொல்றேம்.சுந்தர் என்ண்டான்னா ‘பொண்ணு பாத்துட்டு’ போன பிறவு ஏதோ காரணம் சொல்லி எனக்கு அந்தப் பொண்ணே பிடிக்கலே சொல்றான்.சுதாவும் ‘பொண்ணு’ப் பாத்து விட்டுப் போன பிறவு,சுதா ஏதோ ஒரு காரணத்தே சொல்லி எனக்கு இந்த பையன் பிடிக்கலேன்னு சொல்லிக் கிட்டு வறா.இப்படி நீங்க ரெண்டு பேரும் சொல்லிக் கிட்டு இருந்தா உங்க ரெண்டு பேருக்கும் நாங்க அப்போ கல்யாணத்தே செஞ்சு முடிக்கறது” என்று நானும் என் மணைவியும் எங்க பக்க வாதத்தை சொல்லி வந்தோம்.

சுந்தரும்,சுதாவும் அவர்கள் பக்க வாதத்தை சொல்லி வந்தார்கள்.

நாலு பேர் இடையிலும் நிறைய வாதாடல்கள் இருந்ததே ஒழிய, ‘ஆரம்பித்த பிரச்சினை’க்கு ஒரு சரியான முடிவும் யாரும் சொல்லவில்லை.

என் குடும்பத்தில் இது ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழக்கமாக நடந்து வரும் வாதாடல்கள் நடந்து வந்துக் கொண்டே தான் இருந்தது. முடிவு தான் கிடைக்கலே!!
சாயங்காலம் நாலடித்ததும் மகனும்,மகளும் வெளியே போய் விடுவார்கள்.

மணி ஐந்தடித்ததும் என்னை கல்யாணம் பண்ணிக் கொண்ட தோஷத்திற்காக என் மணைவி எனக்கு தேநீர் போட்டுக் கொடுத்து விட்டு,பக்கத்தில் இருந்த வயதான பெண்களுடன் கோவிலுக்குப் போய் விடுவதை வழக்கமாக வைத்து வந்தாள்.

தேநீர் என் ‘டேபிளின்’ முன் வைத்து விட்ட பிறகு என் மணைவி வீட்டை விட்டு கிளம்பி விடுவாள்.

அப்புறமாக நான் தனிமையிலே தான் இருந்து வர வேண்டும்.

இந்த தனிமையை போக்க நினைத்து,நான் வீட்டில் தேநீர் அருந்தி விட்டு,குடும்ப பிரச்சினை களையும், நால்வா¢ன் வாதாடல்களையும் மறந்து விட்டு,என் அலுவலக நண்பர் ராஜுவிடம் மனம் விட்டு கொஞ்ச நேரம் பேசலாம் என்று நினைத்து, அவா¢டம் தொலைப் பேசி,அவர் வீட்டுக்கு வரு வதாக சொன்னேன்.

அவர் ஒத்துக் கொள்ளவே, நான் ‘பஸ்ஸை’ப் பிடித்து அவர் வீட்டிற்குப் போனேன்.

என்னைப் பார்த்ததும் ராமு”வா,ராஜு” என்று வரவேற்று அவர்கள் வீட்டு சோபாலில் உட்காரச் சொன்னான்.நானும் உட்கார்ந்துக் கொண்டேன்.அது வரை கூட உட்கார்ந்துக் கொண்டு இருந்த அவரது மகன் சேகர் தன் அம்மா அப்பாவைப் பார்த்து “நீங்க ரெண்டு பேரும் ‘அங்கிள்’ கூட பேசிக் கிட்டு இருங்க.நாம ரெண்டு மணி நேரமா நிறைய பேசி ஆச்சு.நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வறேன்” என்று எழுந்தான்.

எனக்கு என்னவோ போல இருந்தது.

நான் தயக்கத்துடன் என் நண்பனைப் பார்த்து “என்ன ராஜு,நான் வந்தது உங்களுக்கு தொந்த ரவா இருக்கு போல இருக்கே.நான் போயிட்டு இன்னொரு நாளைக்கு வறேன்”என்று சொல்லி எழுந்து க் கொண்டேன்.

உடனே ராஜு என் கையைப் பிடித்து “நீ உக்கார் ராமு.நீ என் வீட்டுக்கு வந்தது ஒரு தொந்தர வே இல்லே” என்று சொல்லி விட்டு தன் மகன் சேகரைப் பார்த்து “சேகர்,நீயும் கொஞ்சம் உக்காரு. இன்னிக்கு நீ வெளியே போக வேணாம்.இவன் என் ஆப்த நண்பன் ராமசாமி.என்னோடு ஒன்னா வேலை செஞ்சு வறான்.நாம கொஞ்ச நேரம் முன்னாடி இவன் எதிரில் பேசுவோம்.இவன் நாங்க சொல் றது நியாயமா,இல்லே நீ சொல்றது நியாயமான்னு சொல்லட்டும்” என்று சொல்லி உட்கார வைத்தான்.
எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது.

உடனே சேகரும் “சரிப்பா, நான் இன்னிக்கு வெளியே போகலே” என்று சொல்லி உட்கார்ந்துக் கொண்டான்.

ராஜுவின் மணைவி எனக்கு ‘கா·பி’ போட்டுக் கொடுத்தாள்.

ராஜு அப்படி சொன்னவுடன் எனக்கு ‘என்னடா நம்ம வீட்லே தான் பிரச்சினை இருக்குன்னு இங்கே வந்தா,இவங்க வீட்டு பிரச்சினை சொல்லி நம்ம கிட்ட சொல்லி எந்த பக்கம் நியாயம் இருக்கு ன்னு சொல்லச் சொல்றாங்களே.இவங்க ரொம்ப நேரம் பேசினா, நாம திரும்ப ‘பஸ்ஸே’ப் பிடிச்சி வீட்டுக்குப் போக ரொம்ப நேரம் ஆயிடுமே’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தேன்.

ராஜு ஆரம்பித்தார்.”ராமு,நாங்க ரெண்டு பேரும் சேகரைப் பாத்து ‘சேகர் உனக்கு வயசாகிக் கிட்டே இருக்கு.சீக்கிரமா ஒரு கல்யாணத்தே பண்ணி கிட்டு,இந்த ‘வம்சம் அழிஞ்சு’ப் போவாம இரு க்க ஒரு பிள்ளைக் குழந்தையே பெத்துக்க.நீயோ எங்களுக்கு ஒரே பையன்.என் கூட பொறந்த அண் ணனுக்கும்,தம்பிக்கும் ஆண் குழந்தைகளே பொறக்கலே.ரெண்டு பேருக்கும் பெண் குழந்தைங்க தான் பொறந்த்து இருக்கு’ன்னு சொல்றோம்.ஆனா சேகர் கேக்க மாட்டேங்கறான்.நாங்க சொல்றது நியாயமா இல்லையா சொல்லு” என்று கேட்டு முடிக்கவில்லை சேகர் ஆரம்பித்தான்.

“அங்கிள்,ஒவ்வொரு வார ஞாயித்துக் கிழமையும் இதே ‘பேச்சு’த் தான்.என் அப்பாவும் அம்மா வும் அவங்க பக்க நியாயத்தே சொன்னாங்க.நான் என் பக்க நியாத்தே சொல்றேன்.இவங்க ‘வம்சம் அழிஞ்சு’ப் போவாம இருக்க என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்றாங்க.அப்படி நான் பண்ணா இவங்க ஆசை நிறைவேறலாம்.நிறைவேறாம போனாலும் போவலாம்.

முதாலவதாக நான் கல்யாணம் பண்ணிக் கிட்டா எனக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பொறக்கும்ன்னு எப்படி நிச்சியமா சொல்ல முடியும்.எனக்கும் அடுத்து அடுத்து பெண் குழந்தைங்க பொறக்கலா மே.பிள்ளை குழந்தை பொறக்காமலே போயிடலாமே.இல்லே எனக்கு குழந்தைகளே பொறக்காமப் போயிடலாமே.

ரெண்டாவதாக இன்றைய கால கட்டத்லே பெண்களை பெத்த எல்லா அம்மா அப்பாவும், அவ ங்க பெண்ணை,அவங்க கால்லே நிக்கக் கூடிய அளவுக்கு நல்லா படிக்க வச்சி இருக்காங்க. 95% பொண்ணுங்க வேலைக்குப் போய் கிட்டு,நல்லா சம்பாத்சிச்சுக் கிட்டு இருக்காங்க.இப்ப எல்லாம் ‘நெட்’லே ‘மாட்ரிமோனியல் சைட்லே ‘அவங்களே கல்யாணம் பண்ணிக்க,ஒரு நல்ல படிச்ச,ஒரு நல்ல வேலையிலே இருக்கிற பையன் வேணும்ன்னு சொல்லி,கூடவே பையனுக்கு எந்த ‘லக்கேஜும்’ இல் லாம இருக்கணும்’ன்னு விளம்பரம் தறாங்க.நீங்க அதே படிச்சு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதுக்கு ‘அர்த்தமும்’ உங்களுக்கு நல்லாத் தொ¢யும்ன்னு நினைக்கிறேன்.

மூணாவதா நான் ‘அவங்க கண்டிஷன் எனக்கு இருக்குன்னு’ ஒரு பொய்யே சொல்லிட்டு கல் யாணம் பண்ணி கிட்டா,அந்த பொண்ணு கல்யாணம் ஆன ரெண்டாவது மாசமே என்னை தனிக் குடித்தனம் போயே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிச்சு வந்தா நான் என்ன பண்றது.கல்யாணம் பண் ணிக் கிட்டவ பேச்சைக் கேட்டு,நான் தனிக் குடித்தனம் போய்,இத்தனை வருஷமா என்னை கஷ்டப் பட்டு படிக்க வச்சு வளத்த,என் அம்மா அப்பாவை தனியா தவிக்க விட்டுட்டு போறது தப்பு இல்லை யா சொல்லுங்க.
என் அம்மா,அப்பா அவங்க கடமையை செஞ்சுட்டாங்க.அவங்க சுக துக்கங்களிலேங்க நான் அவங்க கூட இருந்து வர வேணாமா.நான் என் அம்மா அப்பாவை விட்டு பிரிஞ்சிப் போய் அவங்களே தனியா தவிக்க விட்டுட்டு,என் ‘கடமை’யை மறந்து வருவது எந்த விதத்திலே சரி ‘அன்கிள்’.ஒரு பொண்ணுக்கு நான் ‘தாலி’ கட்டினதுக்கு இது தானா எனக்குக் கிடைக்கும் ‘பா¢சு’.

‘அப்பா அம்மாவை விட்டு வரமாட்டேன்’னு சொன்னா,கல்யாணம் கட்டிக் கிட்டவ என்னேப் பாத்து ‘நீங்க ஒரு “சீட்”. ஒரு பொய்யே சொல்லி என்னை கல்யாணம் கட்டி கிட்டு இருக்கீங்க.உங்க வாழ்கைலே இன்னும் என்ன என்ன பொய் எல்லாம் இருக்குமோன்னு சொல்லி என்னை விவாகரத்து தானே பண்ணிடுவா நான் தாலி கட்டினவ.அப்புறமா நான் ‘கல்யாணம் பண்ணியும் ஒரு பிரம்ம்சாரியா’த் தானே வாழ்ந்துக் கிட்டு வரணும்.இல்லையா சொல்லுங்க.

நாலாவதாக எனக்கு இந்த கஷ்டம் எல்லாம் இல்லாம இருக்க நான் ஒரு படிக்காத பொண்ணை தான் கல்யாணம் கட்டிக்கிடணும்.உங்களுக்குத் தொ¢யாதது ஒன்னும் இல்லே அங்கிள்.அந்த மாதிரி ஒரு பொண்ணு இப்ப கிடைக்கறது ரொம்ப கஷ்டம் இல்லையா சொல்லுங்க.இந்த காலத்லே எல்லா பெண்ணுங்களும் நல்லா படிச்சுட்டு,ஒரு நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சு வரத் தானே ஆசைப் படறாங்க.வெறுமனே குழந்தைங்களே பெத்துக் கிட்டு வீட்லே குந்திக் கிட்டு இருக்க ஆசைப் படறது இல்லையே.என் அம்மா அப்பாவுக்கும் அந்த மாதிரி ஒரு பட்டிக் காட்டு பொண்ணே அவங்க “மருமக” ன்னு சொல்லிக்க ஆசைப் பட மாட்டாங்களே.எங்க குடும்பத்லே எல்லா பையங்களும் பொண்ணுங்க ளும் நல்ல படிச்சு இருக்காங்களே.நல்லா படிச்சு இருக்கிற நான் எப்படி அந்த படிக்காத பொண்ணு கூட ‘குடித்தனம்’ பண்ணீ வறது.சொல்லுங்க அன்கிள்.இந்த வழியும் இல்லேன்னு ஆயிடுச்சி.

இன்றைய கால கட்டத்லே எந்த பொண்ணும் கல்யாணம் ஆன பிறவு வயசான மாமியாரையோ மாமனாரையோ கூட வச்சுக் கிட்டு வந்து,கஷ்டப் பட்டு வர விரும்பறது இல்லையே.அவங்க வேலை, புருஷன்,குழந்தைங்க தானே தாங்க அவங்களுக்கு முக்கியமா படுது.அவங்க என் அம்மா அப்பாவுக்கு முக்கியத்துவம் குடுக்கலேன்னா,நான் முக்கியத்துவம் குடுக்கச் சொல்லி என் மணைவியை வற்பு ருத்த முடியாதே!

அங்கிள்,உங்க காலத்லே வாழ்ந்து வந்த பெண்கள் கதையே வேறே.இப்போ வாழ்ந்து வரும் பெண்கள் கதையே வேறே.அந்த காலத்லே பொண்ணே பெத்த அப்பா தன் பொண்ணை ஒரு கை நிறைய சம்பாதிக்கும் ஒரு பையனுக்குக் கல்யாணம் கல்யாணம் கட்டி வச்சு,கல்யாணம் ஆனவுடன் அவ கிட்ட “அம்மா நீ புகுந்த வீட்டுக்கும்,பொறந்த வீட்டுக்கும் நல்ல பேரை வாங்கித் தரணும். பதி னாறும் பெற்று பெரு வாழ்வு வாழணும்” என்று சொல்லி வாழ்த்தி அனுப்புவாங்க.

இப்போ அந்த பழமொழி எல்லாம் நடை முறையிலேயே இல்லே.மண்ணோடு மண்ணா மறை ஞ்சி,அந்த “பழமொழி” இப்போ ஒரு மறந்துப் போன ஒரு “பழைய மொழியா “ஆயிடுச்சி.

இப்போ நடை முறைலே இருக்கிற பழமொழி ‘உன் புருஷனோடு சந்தோஷமா இருந்து வா. ’காரியர்லே’ நல்லா முன்னுக்கு வந்து ஒரு பொ¢ய ‘போஸ்ட்’லே வேலை செஞ்சு வரணும்’ என்கிறது தான்.

இந்த காலத்லே பொண்ணேப் பெத்த நிறைய அம்மா அப்பாங்க கல்யாணம் பண்ணும் போதே பொண்ணுக்கு அவங்க ‘·ப்லாட்’டுக்கு பக்கத்லேயே ஒரு ‘·ப்லாட்’ வாங்கி விட்டு,அவ கிட்டே ரகசிய மா ‘சீக்கிரமா உன் புருஷன் குழந்தைங்க கூட இங்கே வந்துடு’ன்னும் சொல்லி அனுப்பறாங்க. அந்த ப் பொண்ணும் ‘நீங்க கவலை படாதீங்க நீங்க சொன்னா மாதிரியே நான் பண்றேன்’ ன்னு சொல்லிட் டு வறா.இந்த மாதிரி சொல்ற பொண்ணே கல்யாணம் கட்டி கிட்டு நான் எப்படி அங்கிள் என் அம்மா அப்பாவை சந்தோஷமா வச்சிக்கறது சொல்லுங்க.கல்யாணம் ஆன பிற்பாடு அவ அம்மா அப்பா சொ ன்னதே தானே அவ பண்ணுவா.நான் சொன்னதே பண்ண மாட்டாளே.

அங்கிள் இன்னொரு விஷயம் உங்க கிட்டச் சொல்லணும்….” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது,அந்த நேரம் பார்த்து ‘கரண்ட்’ போய் விட்டது.
வீடு பூராவும் இருட்டில் மிதந்தது.

சேகர் மெல்ல அவன் ரூமுக்குப் போய் ஒரு ‘டார்ச்’ லைட்டை எடுத்துக் கொண்டு வந்தான்.

நான் உடனே அவனைப் பார்த்து “சேகர் இப்போ மணி என்ன” என்று கேட்டதும் அவன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்து “மணி எட்டடிக்க இன்னும் ஐஞ்சு நிமிஷம் இருக்கு” என்று சொன்னதும் நான் ‘இது தான் சாக்கு.நான் யார் பக்கம் நியாயம் சொல்றது.அவங்க வீட்டு கதையை அவங்க பாத்து க்கட்டும்ன்னு நினைச்சி “ராஜு,மணி ரொம்ப ஆயிடுச்சி.நான் இன்னும் ஒரு ‘பஸ்ஸே’ப் பிடிச்சி அந்தக் கோடிக்கு போயாகணும்” என்று சொல்லி எழுந்தேன்.

சேகர் உடனே “இருங்க அங்கிள்,இப்போ போன ‘கரண்ட்’ எப்போ திரும்பி வருமோ.எல்லா இட த்லேயும் ‘கரண்ட்’ இல்லே.நான் இந்த ‘டார்ச்’ வெளிச்சத்லே ‘பஸ் ஸ்டாண்ட்’ வரை வந்து உங்களே ‘பஸ்’ ஏத்தி விடறேன்” என்று சொன்னவுடன்,என் நண்பன் ராஜகோபால் சேகரைப் பார்த்து “அது தண்டா சரி சேகர்.நீ ராமுவை ‘பஸ் ஸ்டாண்டுக்கு’ப் போய் பஸ் ஏத்தி விட்டுட்டு வா.இந்த ‘கரண்ட்’ போனா சீக்கிரமா வரவே வறாது.இன்னிக்கு நாத்திக் கிழமே வேறே” என்று சொல்லி ஆமோதித்தார்.

சேகர் என்னை ‘டார்ச்’ வெளிச்சத்லே ‘பஸ் ஸ்டாண்டு’ வரை அழைத்துக் கொண்டு போகும் போது “அங்கிள்,நீங்க அடுத்த நாத்தி கிழமை வாங்க.நான் சொல்ல வேண்டிய மீதி சமாசாரங்களே சொல்றேன்…..”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது நான் போக வேண்டிய ‘பஸ்’ வரவே சேகர் என்னை அதிலே ஏற்றினான்.

பஸ்ஸில் ஏறிய நான் கடவுளுக்கு என் நன்றியை சொல்லிக் கொண்டேன்.

இன்னைக்கு அவங்க வீட்லே ‘கரண்ட்’ போனதாலே சேகர் முழுக்க சொல்ல முடியலே. ஒரு வேளே ‘கரண்ட்’ போவாம இருந்து சேகர் எல்லா சொல்லி முடிச்ச பிறகு, அவங்க ரெண்டு பேரும் என்னேப் பாத்து ‘யார் சொல்றது நியாயம்’ன்னு கேட்டா,என்னாலே பதில் சொல்ல முடியாத ஒரு “தர்ம சங்கடத்லே’ இருந்து, என்னே காப்பாத்தின ‘EB’ காரங்களே,நான்,இன்னைக்கு முதல் முறையா வாழ்த்து சொன்னேன்.சாதாரணமா ‘கரண்ட்’ போனா,நான ‘EB’ கா¡ரங்களே,நல்லாத் திட்டுவேன்.

எங்க வீட்டிலே இருக்கிற எங்க ‘பிரச்சினைகளுக்கு’ வழி தொ¢யாமே திண்டாடி வந்த எனக்கு, என் நண்பன் ராஜு வீட்டு பிரச்சினைக்கு ‘யார் பக்கம் நியாயம் இருக்குனு எப்படிங்க சொல்றது.

இந்த “உண்மை நிகழ்விலே” யார் சொல்றது “நியாயம்’ன்னு நீங்க சொல்லுவீங்க!!!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *