மீண்டும் வருவேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 7,031 
 

என்னைச் சுற்றிலும் கூட்டமாக உட்கார்ந்திருப்பது எனக்கு தெரிகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை, என் மூச்சு மட்டும் மேலும் கீழும் ஏறி இறங்கி கொண்டிருக்கிறது. பக்கத்தில் இடது புறம் என் மனைவி உட்கார்ந்திருப்பதை உணர முடிகிறது, அருகே நிறைய பெண்கள் உட்கார்ந்திருப்பதும் தெரிகிறது. அவர்கள் ஒரு நிமிடம் அழுவதும் பின் தனக்குள் இரகசியமாய் பேசிக் கொள்வதும், எழுந்து செல்வதும், பின் வந்து அமர்வது இவைகள் அனைத்தும் என்னால் உணர முடிகிறது. இவர்கள் அனைவரும் என் முடிவுக்காக காத்திருப்பதும் எனக்கு தெரிகிற்து. எனக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனக்காக இத்தனை பேர் அழுகிறார்கள் அல்லவா! ஆனால் உண்மையான அன்பில் அழுகிறார்களா?

ஆயிற்று எழுபத்தைந்து வருடங்கள் ஓடிவிட்டது என் வாழ்க்கையில் இப்பொழுதல்லாம் என் மகன்களுக்கு நான் ‘பெரிசுதான்” அண்ணன் தம்பி பேசிக்கொள்ளும்போது கூடபெரிசினால் பெரிய தொல்லை என்றுதான் பேசிக்கொள்கிறார்கள். சலித்துக் கொள்ளவும் செய்கிறார்கள், அவர்களை சொல்லி குற்றமில்லை பாசத்தை காட்டாமல் பணத்தை காட்டி வளர்த்துவிட்டேன், பணம்,பணம், இது ஒன்றுதான் என் வாழ்க்கையில் நான் கண்ட இலட்சியம். எனக்கு வியாபாரம் மட்டுமே முதல் சொந்தம், மனைவி மக்களை பற்றி கவலைப்பட்டதே இல்லை. பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவன் நான். எதைப் போட்டால் எது வரும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். பையன்களை படிக்க வைப்பதற்கு கூட நிறைய பண்ம் கொட்டியிருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு படிப்பு சுட்டு போட்டும் வரவில்லை, இருவரும் ஒருவர் பின் ஒருவராக படிப்பதை விட்டு விட்டனர். நானும் இவர்களை படிக்க வைக்கும் செலவையும் நிறுத்திவிட்டேன். இருவரையும் வியாபாரத்தில் இழுத்துவிட்டேன் பெரியவன் ஓரளவு பிழைத்துக்கொண்டான். சின்னவன் பாடுதான் திண்டாட்டம் ஏதோ சமூக சேவை என்று சுற்றிக்கொண்டிருக்கிறான். கூப்பிட்டு கேட்டால் காசு என்னப்பா காசு என்று பேசுகிறான்பொ¢ய வேதாந்தம் எல்லாம் பேசுகிறான். எனக்கு கோபமாக வருகிறது, இவன் அம்மா வேறு இவனுக்கு ஒத்து ஊதுகிறாள். அவளுக்காக இவனை என் கடையிலேயே சேர்த்துக்கொண்டேன், இருந்தாலும் இவனை நான் நம்புவதில்லை.

சமூக சேவை அப்படி, இப்படி, என்று காசை கா¢யாக்கிவிட்டால் என்ன செய்வது. பொறுப்பில்லாத பையன் எப்பொழுது திருந்துவானோ?

இவர்களை சொல்லி என்ன பயன் என்னைப்போல் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருந்தால் தெரியும் இவர்கள் பிறக்கும்பொழுதே வசதியானவர்களாக பிறந்துவிட்டார்கள், பணத்தின் அருமை இவர்களுக்கு எங்கே தெர்யும்? இதோ பக்கத்தில் இருக்கிறாளே என் மனைவி இவளை கல்யாணம் பன்னும்போது நான் ஜவுளிக்கடையிலே, ஒரு சேல்ஸ்மேன், ஆனால் என் கூட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் உண்மையில் இவள் மட்டும் இல்லை என்றால் நான் இந்த அளவு வந்திருக்கமாட்டேன்.இருந்தாலும் இவளுக்காக நான் எதையும் செய்ததில்லை. எத்தனை பேர் வயிரெறிந்திருப்பார்கள்? நான் ஏதோ கள்ள நோட்டு அடிக்கறதாயும், கடத்தல் செய்யறதாயும் பேசியிருக்கானுங்க? நான் நிறைய பேரை ஏமாத்தியிருக்கேன்! பல பேர் வயித்துல அடிச்சிருக்கேன், இல்லேங்களேயே, இதெல்லாம் வியாபாரத்துல சகஜகம். இதெல்லாம் செய்யலேன்னா இந்த அளவு வரமுடியுமா? யார் யார
ஏமாத்தலே? ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தறதுதான் உலகம் அப்படியில்லயின்னா எப்படி இந்த உலகத்துல வாழ முடியும்?

“சகாயம்னு” ஒருத்தன் இப்படித்தான் சாபம் விட்டான் “கர்த்தர் உன்னை மன்னிக்கவே மாட்டார்” அப்படீன்னு நான் நல்லாத்தானே இருந்தேன். அவன்தான் நொடிச்சுட்டான், கூட்டு வியாபாரம்னா அப்படித்தான் ஒருத்தனை ஒருத்தன் அழிக்கனும், அப்பத்தான் பிழைக்க முடியும், என் கூட்டாளிங்க எல்லோரும் பொறாமை புடிச்சவங்க’

நான் நல்லா இருக்கறது எவனுக்கும் பொறுக்கல அதுக்காக இவனுகளுக்கு பயந்துகிட்டு நேர்மையா நடந்திருந்தா இந்நேரம் தலையில துண்டைத்தான் போட்டுக்கணும்.

எத்தனைபேரு என் கிட்ட நன் கொடை கேட்டு வருவானுக, அனாதை ஆசிரமம்,குழந்தைகள்,வயசானவங்க அப்படீன்னு வந்தானுங்க’ ஒருத்தனுக்கும் கொடுக்கலையே, ஏன் கொடுக்கனும்? எதுக்கு கொடுக்கனும்? கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்சாங்களாம்’ இந்த கதைதான் நம்ம கிட்ட நடக்காது, நம்ம பணத்துல இவனுக என்ன சமூகசேவை பண்றது, அதெல்லாம் நம்மகிட்ட ஆகாது அப்படீன்னுட்டேன்.எல்லாம் திட்டினாங்க திட்டிட்டு போறாங்க, ஆனா கட்சி நிதின்னு வந்தா கரெக்டா கொடுத்திடுவேன், ஏன்னா கட்சிகாரங்களாலதான் இரண்டு மூணு முறை போலிஸ் கேசுல இருந்து தப்பிச்சுருக்கேன்.

என் கடையில கணக்கு புள்ள ஒருத்தன் இருந்தான், அவன் ரொம்ப நாணயமானவன், ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் கணக்குல காணாம போச்சு, அவனை கூப்பிட்டு நாளைக்கு சாயங்காலத்துக்குள்ளே இநத பத்தாயிரம் ரூபாய் வந்தாகனும் இல்ல உன்ன போலீசுல புடிச்சு கொடுத்திடுவேன்னு மிரட்டினேன், ஆனா பத்தாயிரம் அன்னைக்கே கிடைச்சுருச்சு, அதை எடுத்து யாரோ பாங்க் அக்கவுண்ட் மாத்தி போட்டுருக்காங்க, இதை நான் அவங்கிட்ட சொல்லாம் விட்டுட்டேன், அவன் அன்னைக்கு இராத்திரியே கிணத்துல விழுந்து இறந்துட்டான், எனக்கு வருத்தமாத்தன் இருந்துச்சு, அவங்கிட்ட சொல்லியிருந்தா பிழைச்சுருப்பான்’ ஆனா அவன் சம்சாரம் என் மேலே கேசு போட்டுட்டா, நாந்தான் கொலை பண்ணிட்டேன்னு, எனக்கு கோபம் வந்துடுச்சு, காசை தண்ணியா செலவு பண்ணி இந்த கட்சிக்காரனுங்களை புடிச்சுத்தான் வெளியே வந்தேன், இந்த மாதிரி சகாயம் என் மேலே கேசு போட்டப்ப கூட பணத்தாலே சரி கட்டினேன்.

அவந்தான் “கர்த்தர் உன்னை மன்னிக்க மாட்டார்னு சாபம் விட்டான். நான் அதையெல்லாம் பொருட்டாவே நினைக்கலே! எனக்கு பணம்தான் முக்கியம். அதுக்கப்புறம்தான் பொண்டாட்டி புள்ளைங்க”

இப்ப மூச்சு எனக்கு அதிகமா வாங்குது, ஞாபகம் வேற தவறிக்கிட்டே இருக்கு. நான் எங்கிருக்கேன்னு தெரியல! ஆகாசத்துல மிதக்கற மாதிரி இருக்குது. யாரே என் கையை பிடிக்கற மாதிரி தெரியுது. டாக்டரா இருக்கனும் இப்ப இருக்கற கூட்டமே டாக்டரைத்தான் பார்ப்பாங்க’ அவர் என்ன சொல்லப்போறார்னு. பெரியவன் பேச்சு குரல் கேட்குது என்னாச்சு டாக்டர், சீக்கிரம் சொன்னீங்கன்ன மேற்கொண்டு ஆகற வேலையப்பாக்கலாம். என்ன சார் நீங்க உங்க அப்பா இநத நிலையிலே இருக்கறாரு, நீங்க உங்க வேலையிலே குறியா இருக்கறீங்க என்று என் பெரிய மகனிடம் சத்தம் போடுவது எனக்கு கேட்கிறது.

டாக்டர் என்ன மன்னிச்சுக்கங்க இவர் எப்பவும் எங்களுக்கு அப்பாவா இருந்ததேதில்லை. ஒரு முதலாளியாகத்தான் வீட்டிலயும், வெளியலயும் இருந்திருக்கறாரு எங்களுக்காக எப்பவும் கவலைப்பட்டதே கிடையாது, இப்படிப்பட்டவங்க கிட்ட நாங்க எப்படி பாசத்தை காட்டமுடியும். இப்ப இங்க வந்திருக்கற்வங்க முக்கால்வாசிப்பேர் மனசுக்குள்ள இவர் மறுபடி பொழச்சுக்ககூடாது அப்படின்னு வேண்டிக்கறவங்களாகத்தான் இருப்பாங்க, நீங்க என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை, இநத ஊர் உலகத்துக்கு
அவ்வளவு பாவம் பண்ணியிருக்காரு.

அனைத்தும் என் காதில் விழுந்தன, என் மனைவி இவனை எதிர்த்து ஏதாவது சொல்வாள் என எதிர்பார்த்தேன். என்னுடன் நாற்பது வருடங்களுக்கு மேல் குடும்பம் நடத்தியவள். ஆனால் அவள் ஒன்றுமே பேசாமல் சின்னவனைக்கூப்பிட்டு டேய் கடைசி நேரத்துல் எங்கயும் போயிடாதே, காரியமெல்லாம் செய்யணும் இதைக்கேட்ட எனக்கு நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. அவ்வளவுதானா?

இவ்வளவு வசதிகளை செய்து கொடுத்தவனக்கே மரணத்தை விரைவில் தர என் குடும்பம் விரும்புகிறதா? என் வாழ்க்கை முடிந்ததா கடவுளே, நான் மரணம் அடைய வேண்டும் என்று என் குடும்பத்தாரும், சுற்றத்தாரும் ஆசைப்படும் அளவுக்கு நான்
இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறேன். கூடாது! என் ஆத்மா இத்தனை பேர் சாபத்தில் அலைய வேண்டுமா? நிச்சயம் நான் பிழைக்கவேண்டும், இவர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் சரி, நான் பிழைத்து எழுந்தவுடன் என்னால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவர்களின் வாரிசுகளுக்காவது என்னால் முடிந்ததை செய்யவேண்டும், சகாயமும் சரி என் கடையில் வேலை பார்த்தவனும் சரி இதோ என் மனைவி குழந்தகளுக்கும் சரி இதோ உங்களுக்கு விருப்பமில்லாமலேயே உயிரோடு வருகிறேன் இந்த முறை உங்களுக்கு உதவுவதற்காகவே!

டாக்டரி ன் முடிவுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *