பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக மகள் வர்ஷிணியுடன் போலீஸ் ஸ்டேஷன் கிளம்பினான் சூரியா. ஸ்டேஷனில் ஐநூறு ரூபாயும் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு
அனுப்பினார் எஸ்.ஐ.
எஸ்.ஐ. அங்கிள் என் பிரெண்டோட அப்பா தான் ஏம்ப்பா அவருக்கு பணம் கொடுத்தீங்க ?
அதை கொடுத்தா தான் அவங்க நமக்கு பாஸ்போர்ட் தருவாங்க.
இது தான் லஞ்சமாப்பா. கண்கள் விரிய கேட்டாள்.
அடுத்த நாள் பள்ளிக்கூடத்திலிருந்து அழுது கொண்டே வரும் தன் மகள் ஸ்வேதாவை ஆதரவாக தூக்கிய எஸ்.ஐ. காரணம் கேட்க.
நேத்து நீங்க என் பிரெண்டு வர்ஷினியோட அப்பாகிட்ட லஞ்சம் வாங்கினீங்களாம் பேட் அங்கிளோட பொண்ணும் பேட் பொண்ணுதான்னு சொல்லி என் கூட பேசமாட்டேன்னு சொல்லிட்டா என்றாள் அழுதபடி.
ஒரு கணம் திடுக்கிட்டு போன எஸ்.ஐ. மனதுக்குள் நினைத்து கொண்டார். இனிமேல் எது வாங்கினாலும் யாருக்கும் தெரியாமல் தான் வாங்க வேண்டும் என.
– ப.உமாமகேஸ்வரி (ஜூலை 2012)