மனமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 5,084 
 

ரித்திக்காவிற்கு ஆறு வயது,பார்ப்பதற்கு அழகாகவும்,குண்டாகவும் இருப்பாள்,அம்மா மாதவி,ஏண்டி உனக்கு இப்படி உடம்பு குண்டாகுது என்று செல்லமாக அணைத்துக் கொள்வாள்,அப்பா சந்தனகுமார் நீ குழந்தையை பார்த்து கண்ணு வைக்காதே அவள் என் செல்லக் குட்டி அப்படி தான் இருப்பாள் என்று அவனும் ரித்திக்காவை அணைத்துக் கொள்வான்,ஒரே மகள் கொஞ்சம் செல்லமாக வளர்ந்தாள்,என்னுடன் விளையாட யாரும் இல்லை என்று எந்த நாளும் சண்டை பிடிப்பாள் ரித்திக்கா,மாதவி பாவம் ரித்திக்கா பிறந்தவுடன்,அவளின் கர்ப்பப்பையை எடுத்து விட்டார்கள் மருத்துவ மனையில் சில காரணத்தால்,ரித்திக்காவையே பெரும் பாடு பட்டு தான் பெற்றெடுத்தாள்,ஒரு குழந்தையாவது வேண்டும் என்பதற்காக,அதை கூற முடியுமா குழந்தையிடம்,ஏதாவது கூறி சமாளிப்பாள்,பக்கத்தில் மைதிலி வீடு இருந்தது,அவளின் இரண்டாவது குழந்தை மீனாவிற்கும் ரித்திக்காவிற்கும் ஒரே வயது,அவளின் கணவன் கதிரேஷன் வெளியூரில் வேலை,மைதிலியின் தம்பி மையூரனும் அங்கு இருந்தான்

பக்கத்து வீட்டு மீனா இவர்கள் வீட்டில் வந்து ரித்திக்காவுடன் விளையாடுவாள்,சில வேலை ரித்திக்கா மீனா வீட்டில் போய் விளையாடுவாள்,இப்படி ஒரு தடவை ஒளிந்து கண்டுப் பிடித்து விளையாடும் போது,ரித்திக்கா ஒளிவதற்கு இடம் தேடினாள்,மையூரன் என்னுடன் வந்து படுத்து ஒளிந்துக் கொள் என்று அவன் படித்திருந்த கட்டிலில் அவளை ஒளிய வைத்து பெட்ஷீட்டை இழுத்து போர்த்தி விட்டு அவனும் படுத்துக் கொண்டான்,மெதுவாக அவளின் மார்பை அணைத்து கட்டிப் பிடித்தான்,அவளுக்கு எதுவும் புரியாத வயது,அவன் கை அவளின் மேல் தடவ அதற்கிடையில் மீனா ரித்திக்காவை கண்டுப் பிடித்து விட்டாள்,அதன் பிறகு சிறிது நேரம் விளையாடி விட்டு ரித்திக்கா வீட்டுக்கு போய்விட்டாள்,ரித்திக்கா விளையாட போகும் போது எல்லாம்,அவளை மடியில் தூக்கி வைத்துக் கொள்வது,அவளை ஆசைக்காக கட்டிப் பிடிப்பதுப் போல்,வேண்டும் என்றே அழுத்தமாக பிடிப்பது,என்று மையூரன் சிறு சிறு தப்புகளை பன்னிக் கொண்டு தான் இருந்தான்,ரித்திக்கா காரணம் தெரியாமலே மீனா வீட்டுக்கு போவதற்கு தயங்கி போவதை நிறுத்திக் கொண்டாள்.

அக்கா மாதவியை பார்ப்பதற்கு அவளுடைய தம்பி நரேந்திரன் அடிக்கடி வீட்டிக்கு வருவான்,அவனை கண்டால் ரித்திக்காவுக்கு ஆசை,அவன் வெளியில் கூட்டிக் கொண்டுப் போவான்,இவள் கேட்பது எல்லாம் வாங்கி தருவான்,சந்தனகுமாருக்கு அதற்கு எல்லாம் நேரம் இல்லை,அவன் சுயமாக தொழில் செய்பவன்,அதில் வருமானம் அதிகம் குடும்பத்தினருடன் இருப்பதற்கு நேரம் இல்லை,மாதவிக்கு வெளியில் போவதற்கு அவ்வளவாகப் பிடிக்காது,அவளின் உடலும் ஒத்துழைப்பது இல்லை,நரேந்திரன் வரும் போது ரித்திக்காவை வெளியில் அழைத்துப் போவான்,வெளியில் சாப்பிடுவார்கள்,மாமா வந்தால் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்பது அவளுக்கு தெரியும்,வீட்டில் அவளுடன் விளையாடிக் கொண்டே இருப்பான்,அவன் தோளில் ஏறிக் கொள்வாள் ரித்திக்கா,அவன் மடியில் படுத்து தூங்கியும் விடுவாள்,என்னுடன் படுத்துக்கட்டும் என்று ரித்திக்காவை அவன் படுக்க வைத்துக் கொள்வான்,அவள் தூங்கும் போது இவனை கட்டிப் பிடித்துக் கொள்வாள்,நரேந்திரன் சலனப்பட்டு அவள் மேல் கை வைக்க ஆரம்பித்தான்,தாய்மாமன் தகப்பனுக்கு சமன் என்பார்கள் இப்படி ஒரு சில தாய்மாமன்களும் இருக்கவே செய்கின்றார்கள்.ரித்திகாவின் தோற்றம்,மாதவியின் கவனக் குறைவு நரேந்திரனுக்கு வசதியாக அமைந்தவிட்டது

அவனும் அடிக்கடி வருவதற்கு ஆரம்பித்தான்,வரும் போது பொம்மைகள்,சாக்லைட்டுகள் என்று அதிகமாகவே வாங்கி வருவான்,ரித்திக்கா அவன் வாங்கி வரும் பொருட்களையே எதிர் பார்த்தாள்,இதையெல்லாம் வாங்கி கொடுத்து,தன்னை அவன்வசப் படுத்திக் வைத்துக் கொள்கிறான் என்பது அந்த குழந்தைக்கு புரியவில்லை,அவனுக்கு உள்ளுக்குள் பயம்மும் இருந்தது அக்காவிடம் மாட்டி கொடுத்து விடுவாள் என்று,ரித்திக்கா பாவம் அத்து மீறி போகாவிட்டாலும் நரேந்திரன் சில தப்பான செய்கையில் அவன் ஆசைகளை தீர்த்துக் கொள்கிறான் என்பது தான் உண்மை,ரித்திக்கா பருவம் அடையும் மட்டும்,தம்பி மீது உள்ள நம்பிக்கையில்,மாதவி அவன் பக்கத்தில் படுக்க வைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்று அவள் யோசிக்கவில்லை,ரித்திக்கா பெரியவள் ஆனாள்,நரேந்திரனுக்கு திருமணமும் ஆகிவிட்டது,அந்த தொல்லையில் இருந்து தப்பித்தாள் என்றே சொல்ல வேண்டும்,நாட்கள் ஓடியது,விபரம் தெரிந்தப் பிறகு நரேந்திரனை காணும் போது ரித்திக்காவிற்கு அவன் மீது வெறுப்பாக இருக்கும்,என்ன மனுஷன் எப்படியெல்லாம் நடந்துக் கொண்டான்,அவள் மீது தான் அவளுக்கு ஆத்திரமாக வரும்,நான் ஏன் இதை வீட்டில் சொல்லாமல் விட்டேன்,ஒரு வார்த்தை அம்மா அப்பாவிடம் சொல்லாததை நினைத்து தான் கவலைப் படுவாள் ரித்திக்கா

அவளும் படித்து முடித்தாள்,மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவாகியது,அஷோகன் பார்க்க அழகாகவே இருந்தான்,பொது நிறம்,உயரம்,சிறிய தாடி,சிரிக்கும் போது கண்ணத்தில் குழி விழும் போது மேலும் எடுப்பாக தெரிந்தான் அவன்,ரித்திக்காவிற்கு அவனை பிடித்திருந்தது,அஷோகன் பல் டாக்டராக இருந்தான்,படித்த குடும்பம் அக்கா சஜ்ஞலா கணக்காளராக வேலை செய்கிறாள் திருமணம் முடித்து இரண்டு வயது குழந்தையும் இருக்கின்றது,அப்பா கணகசுந்தரம் பாடசாலை அதிபர்,அம்மா சீத்தாதேவி ஆசிரியர் என்று சிறிய குடும்பம் அவனுடையது,அஷோகன் ரித்திக்கா திருமணம் சிறப்பாக நடைப் பெற்றது,ஓரே மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்திவிட்டார்கள் சந்தனகுமாரும் மாதவியும்

சந்தோஷமாக இருந்தது ரித்திக்காவிற்கு,நரேந்திரன் தாய்மாமன் முறைகளை வந்து செய்தான்,அவனுக்கு தற்போது இரண்டு மகள்கள் ஒரு மகன் என்று குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தான்,அஷோகன் ரித்திக்காவின் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்,அழகான அறை,அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது,ஊது பத்தியின் மணமும்,பூக்களின் மணமும் மூக்கை துளைத்தது,பழங்கள்,இனிப்புகள் ஒரு தட்டில் இருந்தது,மெதுவாக ரித்திக்கா கையில் பாலுடன் அறைக்குள் வந்தாள்,அஷோகன் வேட்டியுடன் கட்டிலில் உட்கார்ந்து இருந்தான்,பாலை அவனிடம் கொடுத்து விட்டு,அவனின் காலை தொட்டு கும்பிட்டாள்,சாதாரண காட்டன் புடவையில்,தலை நிறைய மல்லிகை பூவுடன் பார்க்க அழகாகவே இருந்தாள்,அஷோகன் உட்கார் என்றான்,தயக்கத்துடன் கட்டிலில் உட்கார்ந்தாள் ரித்திக்கா,ஏன் இவ்வளவு நேர்வஸாக இருக்க என்றான் அஷோகன்,அவள் மௌனமாக இருந்தாள்,நான் ஒன்னும் பேய் கிடையாது,முதல் சகஜமாக உட்கார் என்றான் அவன்,அவள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தாள்

பாலை நீ குடி என்று அவளிடம் நீட்டினான் அஷோகன்,எனக்கு வேண்டாம் என்றாள் ரித்திக்கா,முதல் பாலை குடி பிறகு மனம் அமைதியாக இருக்கும் என்றான் அவன்,அவள் பாலை குடித்து முடித்தாள்,மெதுவாக அவள் கையை பிடித்தான்,அவள் கை நடங்குவதை அப்போது உணர்தான் அஷோகன் டாக்டர் ஆச்சே,தலை ஏதும் வலிக்குதா என்றான் அவன்,இல்லை என்றாள் ரித்திக்கா,சரி படுத்து தூங்கு என்றான்,அவளும் படுத்துக் கொண்டாள் சற்று நேரத்தில் தூங்கி போனாள்,விடியற் காலை நான்கு மணியளவில் விழித்தவளுக்கு அஷோகன் கை அவளை அணைத்திருந்தது,சட்டென்று அவன் கைகளை எடுத்து விட்டாள் அவள்,அவனுக்கு தூக்கம் களைந்துவிட்டது,மெதுவாக அவளை அணைத்து இதழில் முத்தம் கொடுத்து மேலும் முன்னேற அவள் வேண்டாம் என்று ஒதுங்கி கொண்டாள்

அதன் பிறகு அவளை வற்புருத்த வில்லை அவன்,மறுப் பக்கம் திரும்பி படுத்தவளின் கண்களில் கண்ணீர்,அவளுக்கு அவனுடன் இணைய முடியவில்லை,பழைய நினைவுகள் அவளை காயப் படுத்தியது,ஆண்களே ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்று தோன்றியது,நான் அஷோகனை கட்டியிருக்க கூடாதோ என்று நினைவு வந்தது,வெளியில் எதுவும் சொல்ல முடியாது,அஷோகன் அதை பெரிது படுத்தவில்லை,முதல் நாள் தானே,அவளே பயந்து போய் இருக்காள்,அவளிடம் நான் போய் என்று,அவனை தன்னையே நொந்துக் கொண்டான்,காலையில் எழுந்து குளித்து விட்டு இருவரும் இருந்தார்கள்,அதற்கிடையில் அஷோகனுக்கு நண்பர்களிடம் இருந்து போன்,அவர்களுக்கு அஷோகன் தட்டு தடுமாதிரி பதில் சொல்வது ரித்திக்காவிற்கு புரிந்தது,அவள் தெரியாததுப் போல் இருந்து விட்டாள்,அன்று நாள் வேகமாக ஓடியது,அஷோகன் அக்கா சஜ்ஞலா மெதுவாக ரித்திக்காவிடம் எல்லாம் நல்ல படியாக முடிந்ததா என்றாள்,அவளும் தலையை மட்டும் ஆட்டினாள்,ஒரு வாரம் விட்டு பிடிப்போம் என்று அஷோகன் நினைத்தான்,அதற்கிடையில் ரித்திக்கா வழமைக்கு திரும்பி விடுவாள் என்று நம்பினான்,தற்போது திருமண அலைச்சல்,மறுவீடு அது இது என்று ஓடிக் கொண்டே இருந்தார்கள்,அதனால் புது மனைவி பக்கத்தில் படுத்திருந்தாலும் அமைதியாக இருந்தான் அஷோகன்

நாட்கள் ஓடியது,ரித்திக்கா குளித்திருப்பதாக அதில் ஐந்து ஆறு நாட்கள் போய் விட்டது,இவர்கள் தனியாக இருக்க வேண்டும் என்பதற்காக அஷோகன் பெற்றோர்கள் மகள் வீட்டுக்கு போய் விட்டார்கள்,அன்று வீட்டில் யாரும் இல்லை,அஷோகனிடம் நன்றாக கதைப்பதற்கும் ஆரம்பித்து விட்டாள் ரித்திக்கா,அன்று மழை குளிர் இருவரும் சாப்பிட்டு அறைக்கு சென்று படுத்தார்கள்,படுக்கும் போது சந்தோஷமாக படுத்த ரித்திக்கா அஷோகனின் அத்து மீறல்களை அவளாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,வேண்டாம் என்றாள்,நீ என்ன எந்த நாளும் வேண்டாம் என்கிறாய் என்னை கொஞ்சம் யோசித்துப் பார் என்றான் அஷோகன் பாவமாக,அவளின் முழு ஈடு பாடும் இல்லாம் எல்லாம் நடந்து முடிந்தது,அஷோகனும் பாவம் தான்,எத்தனை நாள் புது மனைவியை பக்கத்தில் வைத்து அழகு பார்ப்பான்

ஒவ்வொரு நாளும் அவன் தொடுகையில் ரித்திக்காவின் குழந்தை வயதில் நடந்தது தான் ஞாபகத்திற்கு வரும் அவளுக்கு,அப்போது மனம் எதற்கும் இடம் கொடுக்காது,உடலில் ஓர் இருக்கம் இருக்கும்,அதனால் அவளுக்கு வலிகளும் அதிகமாக இருக்கும்,என்றும் அவளுக்கு அஷோகனின் செய்கை சந்தோஷத்தை அளித்தது இல்லை அதற்கு மாறாக அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது இந்த மாதிரியான விடயங்களில் மட்டும்,ஏன் எதற்கும் நீ ஒத்துழைக்க மாட்டேன்கிற என்று அஷோகன் கேட்டும் விடுவான் சில சமயங்களில்,அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சாமாளித்து விடுவாள் அவள்,அதன் பிறகு அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஏதோ கடமைக்காக ஈடுப் படுவாள்,குழந்தையும் பெற்று விட்டாள்,இன்னும் அவளால் மனதை மாற்றிக் கொள்ள முடியவில்லை,சிறு வயதில் இப்படி பட்ட சில விடயங்கள் நடை பெறுவதால்,அதன் பாதிப்பு வாழ் நாள் முழுவதும் என்று ஆண்களுக்கு புரிவதில்லை,தயவு செய்து சிறு குழந்தைகளிடம் தப்பாக நடப்பதற்கு முயற்ச்சி செய்யாதீர்கள் ஒரு போதும்,அவர்களால் அதை மறக்கவும் முடியாமல்,வெளியில் சொல்லவும் முடியாமல்,மனதை மாற்றிக் கொள்ளவும் முடியாமல் மனநோயில் பாதிக்கப் படுகிறார்கள் என்பது உங்கள் யாருக்கும் தெரிவதற்கு வாய்பில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *