மணியை ஒரு ‘பலி ஆடு’ ஆக்கிட்டேன்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 3,344 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

மணி ஒரு பிரபல ‘எஞ்சினியரிங்க்’ காலேஜில் மூன்றாவது வருட BE பா¢க்ஷயிலே ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ ‘கோர்ஸிலே’ வகுப்பிலே முதாலவது ‘ராங்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணீனான்.

அதே காலேஜ்லே, அதே ‘கம்ப்யூட்டர் சயன்ஸ் கோர்ஸிலே’ படித்து வந்தார்கள் நளினியும், அவள் இணை பிரியா தோழி மஞ்சுளாவும்.இருவரும் நகமும் சதையும் போல பழகி வந்தார்கள்.

“நள்,எனக்கு நாளைக்கு பர்த்டே,நான் எண்ணைத் தேய்ச்சுக் குளிச்சிட்டு கோவிலுக்குப் போய் விட்டு வந்து,பட்டுப் பாவாடை தாவணிப் போட்டுக் கிட்டு வரப் போறேன்.நீயும் பாவாடை தாவணியில் வந்து எனக்கு கொஞ்சம் ‘கம்பனி’ குடுக்க முடியுமா” என்று கேட்டாள் மஞ்சுளா.

“நான்அந்த மாதிரி கட்டுப் பெட்டி ‘டிரஸ்’ எல்லாம் போட்டுக்கிட்டு வர மாட்டேன் மஞ்ச். இந்த ‘ஜீன்ஸ் ஷர்ட்டில்’ இருக்கும் ‘கம்பர்ட்’ நீ சொல்ற ‘டிரஸ்லே’ இல்லே.சாரி.அதேத் தவிர என் கிட்டே பாவாடை தாவணி ‘டிரஸ்’ஸே கிடைடாது” என்று சொல்லி சிரித்தாள் நளினி.

நளினி சொன்னதைக் கேட்ட மஞ்சுளாவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.அவள் பதில் ஒன்னும் சொல்லாமல்,தன் பாடத்திலே ஏதோ ஒரு சந்தேகத்தைக் கேட்டாள்.உடனே மஞ்சுளா நளினி கேட்ட சந்தேகத்துக்கு பதில் சொன்னாள்.

சொன்னால் போல் அடுத்த நாள் மஞ்சுளா நன்றாகக் குளித்து விட்டு, கோவிலுக்குப் போய் விட்டு,தழைய தழைய பட்டுப் பாவாடை தாவணி யில் கல்லூரிக்கு வந்தாள்.
மணி ஒரு ஏழைக் குடும்பத்தை சேர்ந்ததவன்அவன் ஏழ்மையைப் புரிந்துக் கொண்டு,அவனுக் கு அடிக்கடி பண உதவி பண்ணீ வந்து பாட சந்தேகங்களை எல்லாம் கேட்டு படித்து வந்தார்கள், குருவும் சேகரும்.

குரு ஆளும் கட்சி மந்திரியின் பையன்.ஒரு ரவுடி கூட.சேகா¢ன் அப்பா ஒரு போலீஸீல் DIG யாக வேலை செய்து வந்தவா¢ன் பையன்.மணி காலேஜ்க்கு வந்த போது எப்பவும் குரு கூடவும்,சேகர் கூடவும் தான் இருந்து வந்துக் கொண்டு இருந்தான்.

“மச்சி,பாருடா, உன் ‘பிகர்’ இன்னைக்கு பாவாடை தாவணிலே வருது” என்று உசுப்பு ஏத்தினான் சேகர்.

கூட இருந்த மணி “ஆமாம் குரு .இந்த ‘டிரஸ்ஸிலே’ அவ இன்னும் வயசு கம்மியாத் தெரியாற டா” என்று சொன்னான்.

மஞ்சுளாவும்,நளினியும் காலேஜ் வாசலைத் தாண்டி வந்துக் கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் பின்னால் வந்த குரு திடீரென்று மஞ்சுளா தாவணியைப் பிடித்து இழுத்து விட்டு அதை தன் கையில் சுத்திக் கொண்டு சிரித்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான்.
மஞ்சுளா வெறும் ஜாக்கெட்டு பாவாடையுடன் நின்றுக் கொண்டு இருந்தாள்.உடனே மஞ்சு ளா,தன் கையிலே இருந்த காலேஜ் ‘பாக்கை’ தன் மார்பு மீது வைத்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.

சேகர், மணி, குரு மூன்று பேரும் கையைத் தட்டி சிரித்துக் கொண்டு இருந்தார்கள். மஞ்சுளாவுக்கு தாங்க முடியாத அவமானமாய் இருந்தது.

அந்த நேரம் பார்த்து ‘ப்ரின்ஸிபால்’ கார் உள்ளே நுழைவதைப் பார்த்த மூவரும் வெளியில் ஓடி விட்டார்கள்.வெறும் ஜாக்கெட்டு,தாவணியுடன் நின்றுக் கொண்டு,தன் காலேஜ் ‘பாக்கை’ மார்பு மீது மறைத்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்த மஞ்சுளாவை அவர் பார்த்து விட்டார்.

அவருக்கு கோவம் வந்தது. ‘நம்ம காலேஜிலே நான் இந்த ‘ராகிங்கை’ முழுக்க ஒழிச்சிட்டேன்னு தானே இது வரைக்கும் நினைச்சுக் கிட்டு இருந்தேன்.ஆனா இன்னைக்கு எவனோ ஒரு ‘ஸ்டுடண்ட்,’ இந்தப் பெண்ணின் தாவணியை இழுத்து விட்டுப் போய் இருக்கானே.பாவம் அந்த பொண்ணு அவமானம் தாங்காம அழுதுக் கிட்டு, நின்னுக் கிட்டு இருக்காளே.அந்தப் பொண்ணே இந்த மாதிரி அவமான படுத்தி இருக்கும் ‘ஸ்டூடன்ட் யாரா இருக்கும்.நாம உடனே அந்த ‘ஸ்டூடண்டை பிடிச்சி, இவன் யார் என்று தெரிஞ்சுகிட்டு அவன் இனிமே எந்த ‘எஞ்சினியரிங்க்’ காலேஜி லும் சேர முடியாதபடி,ஒரு TC யேக் குடுத்து,அவனை இந்த ‘காலேஜில்’ இருந்து வெளியே அனுப்பி விடப் போறேன்” என்று கறுவிக் கொண்டே தன் காரை ‘பார்க்’ பண்ணி விட்டு தன் ‘ரூமு’க்குள் போனார் ‘பிரின்சிபால்’ கோபால்.’

‘பிரின்சிபால்’ தன்னை கவனித்ததைப் பார்த்தாள் மஞ்சுளா.உடனே மஞ்சுளா ‘பிரின்சிபால்’ நிச்சியமாக தன்னைக் கூப்பிட்டு விசாரிப்பார்’ என்று யூகித்துக் கொண்டாள்.

‘பிரின்சிபால்’ தன் ரூம்முக்குப் போக நினைத்த போது,எதிரே வந்த ‘அஸ்ஸிஸ்டெண்ட் புரபஸர்’ ஜெயந்தி கண்ணில் படவே ‘பிரின்ஸிபால்’ ஜெயந்தியை கூப்பிட்டு “ஜெயந்தி மேடம்,‘கேட்’ கிட்டே யாரோ ஒரு ‘ஸ்கவுண்ட்ரல்’ நம்ம காலேஜ் பெண்ணின் தாவணியை இழுத்துக் கிட்டு ஓடிப் போய் இருக்கான் போல் இருக்கு.அந்தப் பொண்ணு,வெறும் ஜாகெட்டு தாவணியுடன் நம்ப காலேஜ் வாசல் கிட்டே நின்னுக் கிட்டு அழுதுக் கிட்டு இருக்கா.நீங்க உடனே போய் அந்தப் பெண்ணை என் ரூமுக்கு அழைச்சுக் கிட்டு வாங்க” என்று கத்தினார் கோபால்.

உடனே ஜெயந்தி மேடமும்” இதோ நான் உடனே போய் அந்தப் பெண்னை உங்க ரூமுக்கு அழைச்சுகிட்டு வரேன் சார்” என்று சொல்லி விட்டு வேகமாக காலேஜ் வாசலுக்கு வந்தாள்.

மஞ்சுளா தன் காலேஜ் பையால் தன் மார்ப்பை மறைத்துக் கொண்டு எதிரே இருந்த ஒரு மரத் தின் பின்னால் ஒளிந்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.
ரெண்டு நிமிஷத்துக்கு எல்லாம் அவள் ‘செல்’ போனில்’ ஒரு SMS வந்து இருந்தது.

‘செல் போனை’ ஆன் பண்ணி அந்த ‘மெஸ்ஸேஜை’ படித்தாள் மஞ்ஜுளா.

“பிரின்ஸிபால் கிட்டே என் பேரை நீ சொன்னா,இப்போ,உன் கிட்டே வெறும் தாவணி மட்டும் தான் இல்லே.ஆனா, நீ சாயங்காலம் நீ வீட்டுக்குப் போக உனக்கு ரெண்டு காலும் இருக்காது. என்னைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்.அப்புறம் உன் இஷ்டம்”.இந்த ’மெஸ்ஸேஜை’ப் படித்ததும் மஞ்சுளாவுக்கு அடி வயித்தைக் கலக்கியது.

‘இந்த குரு ஒரு ஆளும் கட்சி மந்திரியின் மகன்,ஒரு பொ¢ய ரவுடி என்றும் மஞ்சுளாவுக்குத் நன்றாகத் தெரியும்.அதனால் அவன் பேரை நாம யார் கிட்டேயும் சொல்லக் கூடாது என்று பயந்துக் கொண்டே ‘செல்’ போனை ‘ஆப்’ பண்ணினாள் மஞ்சுளா..

அடுத்த நிமிஷமே மறுபடியும் மஞ்சுளாவுக்கு இன்னொரு SMS வந்தது.

அவள் தன் ‘செல் போனை’ ‘ஆன்’ பண்ணீப் படித்தாள் மஞ்சுளா.

’என்னை உனக்கு நல்லாத் தெரியும்.என் பேரை நீ ‘பிரின்சிபால்’ கிட்டே போட்டுக் கொடுத்தே ன்னு வச்சுக்க,உன் அப்பா அம்மா ரெண்டு பேருடைய மூட்டியை நல்லாத் தட்டி அவங்க ரெண்டு பேரையும் கம்பி எனன வச்சிடுவேன்.நீ வீட்டுக்கு வந்து பாக்கும் போது, உன் அம்மா அப்பா வீட்லெ இருக்க மாட்டாங்க.அவங்க ரெண்டு பேரும் போலீஸ் ‘லாக் அப்லே’ இருந்துக் கிட்டு,அழுதுக் கிட்டு இருப்பாங்க.அப்புறம் உன் இஷ்டம்”.இந்த ‘மெஸ்ஸேஜை’ப் படித்ததும் மஞ்சுளாவுக்கு இந்த ‘மெஸ்ஸேஜை’ சேகர் இந்த SMS குடுத்து இருக்கான்னு என்று நன்றாகத் தெரியும் மஞ்சுளாவுக்கு.

சேகா¢ன் அப்பா ஒரு போலீஸ் DIG.எல்லா போலீஸ் அதிகாரமும் அவர் கையிலே தான் இருந் தது என்று மஞ்சுளாவுக்கு நன்றாகத் தெரியும்.மஞ்சுளா தன் வயதான அப்பா அம்மாவை ஒரு நிமிஷ ம் நினைத்துப் பார்த்தாள்.அவளுக்கு பயம் வந்தது.’இந்த வயசான காலத்லே நம்மாலே அவங்க ரெ ண்டு பேருக்கும் போலீஸ் துன்புருத்தலா’ என்று நினைக்கும் போது அவளுக்கு தலையே சுத்தியது.

‘சா¢,இவன் பேரையும்,நாம ‘பிரின்சிபால்’ கிட்டேயும் சொல்லக் கூடாது என்று நினைத்து பயந்துக் கொண்டே ‘செல் போனை’’ஆப் பண்ணீனாள் மஞ்சுளா.
ஜெயந்தி மேடம் வாசலுக்கு வந்தாள்.

இதற்குள் மஞ்சுளாவின் தோழி நளினி வெளியே ஓடிப் போய் காலேஜின் எதிர் பக்கம் ப்ருந்த ஒரு துணிக் கடைக்குப் போய்,ஒரு தாவணியை வாங்கிக் கொண்டு வந்து மஞ்சுளாவிடம் கொடுத்தாள். உடனே மஞ்சுளா அந்த தாவணியைக் கட்டிக் கொண்டாள்.

அந்த சமயம் பார்த்து ஜெயந்தி மேடம் மஞ்சுளா இடம் வந்து “உங்களை ‘ப்ரின்ஸிபால்’ உடனே ரூமுக்கு வரச் சொன்னாரு” என்று சொல்லி மஞ்சுளவின் கையைப் பிடித்து அழைத்தாள்.மஞ்சுளா தன் தாவணியை சா¢ செய்துக் கொண்டு “நீங்க போங்க.நான் என் தோழி நளினியே ‘தாங்க்’ பண்ணி விட்டு,அவளுக்குப் பணத்தை குடுத்து விட்டு,ஒரு நிமிஷத்திலே நான் ‘பிரின்சிபால்’ ரூமுக்கு வறேன்” என்று சொன்னாள்.

நளினியை ‘தாங்க்’ பண்ணி விட்டு,அவளுக்கு தாவணிக்கு “என்ன பணம் ஆச்சு” என்று கேட்டாள்.நளினி சொன்ன பணத்தை அவளுக்குக் கொடுத்து விட்டு,யோஜனைப் பண்ணிக் கொண்டே ‘பிரின்ஸிபால்’ ரூமுக்கு பயந்துக் கொண்டே நுழைந்தாள் மஞ்சுளா.

“உன் பேர் மஞ்சுளா தானே.நீ ‘கம்ப்யூடர் சயன்ஸ் கோஸ்லே தானே படிச்சுண்டு வறே’ என்று கோவமாகக் கேட்டார் ‘பிரின்சிபால்’.

“ஆமாம் சார்” என்றாள் மஞ்சுளா பயந்துக் கொண்டே “உன்னை காலேஜ் வாசலில் தாவணியைப் பிடிச்சு இழுத்து ‘ராகிங்க்’ பண்ணவன் பேர் என்ன. அவனே நீ பாத்து இருப்பியே” என்று மறுபடியும் கோவமாகக் கேட்டார் ‘பிரின்சிபால்’.

குரு,சேகர் ரெண்டு பேரும் கொடுத்த SMS ‘மெஸ்ஸேஜும்’ மஞ்சுளா காதில் ¡£ங்காரம் பண்ணிக் கொண்டு இருந்தது. ‘பிரின்ஸிபால்’ மறுபடியும் கத்திக் கேட்டது அவள் காதில் விழுந்தது.

மஞ்சுளா பதில் சொல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தாள்.

“நீ அந்த அயோக்கியன் பேரேச் சொல்லப் போறயா இல்லையா” மறுபடியும் கத்தினார் ‘பிரின்ஸிபால்’.

‘பிரின்சிபால்’ ரெண்டு தடவை கோவமாக கேட்டும் மஞ்சுளா பதில் சொல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தாள்.

“நான் இந்த காலேஜிலே ‘ராகிங்க்கை’ ‘டோடலா எலிமினேட்’ பண்ணனும் என்பதிலே ரொம்ப குறியா இருக்கேன்.நீ இப்படி அவன் பேரைச் சொல்லாம,மௌனமா இருந்து வந்து,அவனே நீ ‘ஷீல்ட்’ பண்ணியானா,நான் உனக்கு TC குடுத்து,உன்னை இந்த காலேஜில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டு,உன் கூட இருந்த பெண்களைக் கூப்பிட்டு விசாரிச்சு,அந்த ‘ஸ்கவுண்டரலுக்கு’ அவன் வேறே எந்த காலேஜிலும் சேர முடியாத படி ஒரு TC குடுத்து அனுப்பி விடப் போகிறேன்” என்று மறுபடியும் கத்தவே மஞ்சுளா பயந்துப் போனாள்.

அவளுக்கு இன்னும் பயம் அதிகமாகியது. அவள் சட்டென்று “சார்,நீங்க எனக்குக் TC குடுத் திடாதீங்க.நான் அவன் பேரேச் சொல்றேன் சார்.அவன் பேர் மணீ” என்று குரு,சேகர் கூட நின்றுக் கொண்டு இருந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மணியின் பேரை சொல்லி விட்டாள் மஞ்சுளா.

உடனே பிரின்ஸிபால்” ‘த்ர்ட் யியர் ‘கம்யூட்டர் சயன்ஸ் கோர்ஸிலே’ ‘பஸ்ட் ராங்க்’ வாங்கின மணி இந்த மாதிரி ஒரு கேவலமான வேலையை பண்ணான்.என்னால் நமபவே முடியலையே. மணி ‘இண்டெலிஜெண்டா இருக்காலாம்.ஆனா இந்த மாதிரி கூடப் படிக்கற ஒரு பெண்ணே காலேஜ் வாச ல்லே அவமானப் படுத்தினத்தைப் பாத்துக் கிட்டு நான் சும்மா இருக்கப் போவது இல்லே.நீ போக லாம்” என்று சொல்லி விட்டு பியூனைக் கூப்பிட்டார்.

மஞ்சுளாவுக்கு ஒரு பக்கம் ‘நாம பிழைச்சோம்’என்று சந்தோஷமாக இருந்தாலும்,இன்னொரு பக்கம் ‘ஒன்னும் செய்யாத அப்பாவியான மணியின் பேரை ‘பிரின்சிபால்’ கிட்டேச் சொல்லி அவனுக் கு TC குடுக்க வச்சுட்டோமே’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள்.’இந்த இக்கட்டில் இருந்து நாம வெளியே வர நமக்கு வேறே எந்த வழியும் தெரியலையே.நாம தான் பண்ணினது ரொம்ப தப்பு தான்’ என்று நினைத்து மனம் வருந்தினாள் மஞ்சுளா.

‘பிரின்ஸிபால்’ ரூமில் இருந்து வெளி யே வந்த மஞ்சுளா உடனே தன் வீட்டுக்குப் ‘போன்’ பண்ணினாள்.மஞ்சுளா அப்பா தான் போனை எடுத்துப் பேச ஆரம்பித்தார்.

உடனே மஞ்சுளா “அப்பா நான் மஞ்சுளா பேசறேன்.நான் இப்போ வீட்டுக்கு அவசரமா வந்துக் கிட்டு இருக்கேன்.நீங்க கடைக்குப் போகாதீங்கப்பா.நான் ஒரு முக்கியமான சமாசாரம் பேசணும்ப்பா. ரொம்ப முக்கிய அவசரமான சமாசாரம்ப்பா” என்று சொல்லி விட்டு தன் அப்பாவின் பதிலுக்குக் கூட காத்து இருக்காம ‘செல்’ தன் ‘போனை‘’ஆப்’ பண்ணி விட்டாள்.

‘என்ன அவசரமான சமாசாரம்’ என்று புரியாமல் கேசவன் தன் மணைவி பார்வதியைக் கூப்பி ட்டு மஞ்சுளா சொன்ன விஷயத்தை சொன்னார்.
பார்வதி கவலைப் பட்டுக் கொண்டு “என்னங்க இது.நம்ப மஞ்சு இப்பத் தானேங்க காலேஜ் போனா.அதுக்குள்ளாறே என்னங்க முக்கிய,அவசர சமாசாரம் அவளுக்கு.நீங்க அவளைக் கேக்கவே இல்லீங்களா.ஏங்க அவளைக் ஒன்னும் கேக்காம போனை ‘ஆப்’ பண்ணிடீங்க” என்று கவலையுடன் கேட்டாள்.
“பார்வதி,அவ வீட்டுக்கு வரதா சொல்லி விட்டு ‘செல்’ ‘போனை’ ‘ஆப்’ பண்ணிட்டா. அவ வரட்டும் நாம நிதானமா அவளைக் கேக்கலாம்” என்று சொல்லி விட்டு கடைக்குப் போக ரெடியாக இருந்த கேசவன் தன் செருப்புகளைக் கழட்டி வைத்து விட்டு சோபாவில் உட்கார்ந்தார்.

இருபது நிமிஷத்துக்கு எல்லாம் மஞ்சுளா ஒரு ஆட்டோவில் இருந்து கீழே இறங்கி,ஆட்டோ டிரைவா¢டம் பணத்தைக் கொடுத்து விட்டு வேகமாக வீட்டுக்குள் வந்தாள்.
பார்வதி மஞ்சுளாவைப் பார்த்து “எங்கேடி உன் தாவணி.நீ இந்த கலர் தாவணியைப் போட்டுக் கிட்டு காலேஜ்ஜுக்குப் போகலையே.என்ன ஆச்சு உனக்கு சொல்லும்மா” என்று கத்தினாள்.

மஞ்சுளா தன் காலேஜ் பையை சோபாவில் வீசி எறிந்து விட்டு விக்கி விக்கி அழுதுக் கொண்டு இருந்தாள்.

கேசவனும் பார்வதியும் ரொம்ப பயந்துப் போய் விட்டார்கள். “என்ன மஞ்சு, என்ன விஷயம்.ஏன் நீ இப்படி விக்கி விக்கி அழறே.விஷயத்தை சொல்லி விட்டு அழும்மா” என்று சொல்லி அழுதுக் கொண்டு இருக்கும் மஞ்சுளாவின் தோளைத் தொட்டு கேட்டார்கள் பார்வதியும் கேசவனும்.மஞ்சுளா நடந்த எல்லா விஷயத்தையும் விவரமாகச் சொன்னாள்.
கொஞ்ச நேரம் ஆனதும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே “அம்மா,அப்பா நான் ஒரு அப்பாவியான மணியை ‘பலி ஆடு’ ஆக்கிட்டேன்.பாவம் மணி.அவன் குருவும், சேகரும் தனக்கு அடிக்கடி குடுக்கும் பணத்துக்காக அவங்க கூட பழகி வந்தான்.அவன் ரொம்ப நல்லவன்.எனக்கு வேறே வழி ஒன்னும் அப்போ தெரியலே.நான் நடந்த ‘உண்மையை’ ‘பிரின்ஸிபாலி’டம் சொன்னா குருவாலேயோ,சேகராலேயோ என் உயிருக்கோ,இல்லை உங்க உயிருக்கோ தானே ஆபத்து வந்து இருக்குமே” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.

“தவிர நான் ஒன்னும் சொல்லாம இருந்தா ‘பிரின்சிபால்’ எனக்கு ஒரு TCக் குடுத்து அனுப்பி ட்டு,என்னுடன் கூட இருந்த பெண்களை விசாரிச்சா அவங்க அந்த கெட்ட பையன் குரு பேரைச் சொல்லிடுவாங்களே.அந்த மாதிரி ஆவக் கூடாதுன்னா தான்,நான் பயந்துப் போய் மணி பேரைச் சொ ல்லிட்டேன்”என்று சொல்லி விட்டு, அவர்கள் ரெண்டு பேரும் கொடுத்த SMS ‘மெஸ்ஸேஜை’ தன் ‘செல் போனில்’ இருந்துப் படித்துக் காட்டி விட்டு அழுதுக் கொண்டு இருந்தாள் மஞ்சுளா.

மஞ்சுளா அம்மாவும் அப்பாவும் மஞ்சுளாவைப் பார்த்து “ மஞ்சுளா,இனிமே நீ காலேஜுக்குப் பாவாடை தாவணியே போட்டுக் கிட்டு போகவே வேணாம்.நீ ‘ஜீன்ஸ் பாண்ட்டும்’, ‘’டாப்பும் போட்டுக் கிட்டுப் போ” என்று கோரஸாகச் சொன்னார்கள்.உடனே மஞ்சுளா” சா¢,நீங்க சொன்னபடி யே, நான் டிரஸ் பண்னிக் கிட்டுப் போறேன்.நீங்க ரெண்டு பேரும் கவலைப் படாம இருந்து வாங்க” என்று சொன்னாள்.

பிரின்சிபால் மணியை தன் ரூமுக்குக் கூப்பிட்டு அவனைப் பார்த்து “மணி,நீ ரொம்ப ‘இண் டெலிஜெண்ட்’ பையன்ன்னு எனக்கு நல்லாத் தெரியும்.ஆனா அந்தப் பொண்ணு மஞ்சுளாவை காலேஜ் வாசல்லே, தாவணியே இழுத்து அவளை அவமானப் படுத்தி ‘ராகிங்க்’ பண்ணி இருக்கே. உன்னே நான் ‘பனிஷ்’ பண்ணாம விட்டாம,மத்த ‘ஸ்டூடன்ட்ஸ்’ உன்னே மாதிரி தினமும் ‘ராகிங்க்’ பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.நான் இந்த காலேஜ்லே ‘ராகிங்க்கை டோடலா எலிமினேட்’ பண்ணி ஆகணும்ன்னு முடிவு பண்ணி இருக்கேன்” என்று சொல்லி விட்டு மணி வேறே எந்த காலேஜிலும் சேர முடியாதபடி ஒரு TC எழுதிக் கொடுத்து விட்டு,மணியை காலேஜை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

‘பிரின்சிபால்’ ரூமை விட்டு வெளியே வந்த மணி குருவையும் சேகரையும் பார்த்து “நீங்க ரெண்டு பெரும் பொ¢ய இடந்து பையங்க.நீனக் ரெண்டு பேரும் மஞ்சுளாவை SMS ‘மெஸ்ஸேஜ்’க் குடுத்து பயமுறுத்தி விட்டு இருக்கீங்க.என் கிட்டே அவளே பயமுறுத்த ஒன்னும் இல்லே.அவ என் பேரே ‘பிரின்சிபால்’ கிட்டேப் போட்டுக் குடுத்திட்டா.இனிமே நான் எந்த காலேஜிலும் சேந்து படிக்க வே முடியாது.இனிமே நான் என் படிப்புக்கு முழுக்கு போட வேண்டியது தான்” என்று தன் கண்களில் கண்ணீர் முட்டச் சொன்னான்.
மணி சொன்னத்தைக் கேட்ட குருவும்,சேகரும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

திருவண்ணாமலையில் கேசவன் பார்வதியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்து இருபத்தி ஐஞ்சு வருஷம் ஆகி விட்டு இருந்தது.

கல்யாணத்தின் போது கேசவனுக்கும்,மச்சான் முத்துக்குமாருக்கும் நகை போடுவதில் ஏதோ வாக்கு வாதம் வந்து,பேச்சு வார்த்தை முத்திப் போகவே,கேசவனுக்கு கோவம் வந்தது.உடனே கேசவன் ஒன்னும் சொல்லாமல் பார்வதியை சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.

அன்றில் இருந்து கேசவனுக்கும், முத்துக்குமாருக்கும் இடையே பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்து வந்தது.ஆனால் தங்கை போ¢ல் வளர்த்த பாசம் அதிகமாக இருந்ததினால்,முத்துக்குமார் மட்டும் மாசம் ஒரு தடவை மச்சானுக்குத் தெரியாம தங்கை பார்வதியை ‘செல் ‘போனி’ல் கூப்பிட்டு, ‘மச்சான் அவளை சந்தோஷமாக வச்சுக் கிட்டு வறாரா.ஒன்னும் கொடுமைப் படுத்த வில்லையே’ என்று மட்டும் கேட்டுக் கொண்டு இருந்தார். பார்வதியும் தன் அண்ணனிடம் ’போனில் ‘அவர் என்னே சந்தோஷமா வச்சுக் கிட்டு வறார்.நீங்க கவலைப் படாம் இருந்து வாங்க அண்ணே’ என்று சொல்லி வந்தாள்.தங்கை சொன்னதைக் கேட்டு முத்துக்குமார் சந்தோஷப் பட்டார்.

மஞ்சுளா நாலாவது வருஷ பீ.ஈ படிப்புப் படித்து முடித்தாள்.கேசவனும் ,பார்வதியும் ரொம்ப சந்தோஷப் பட்டார்கள்.

மஞ்சுளாவுக்கு ஒரு நல்ல ITகம்பனியில் நல்ல சம்பளத்திற்கு ஒரு வேலை கிடைத்து விட்டது மஞ்சுளா சந்தோஷமாக அந்த வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.மாச சம்பளம் வந்த தும், கொஞ்ச பணத்தைத் தன் செலவுக்கு வைத்துக் கொண்டு,மீதி சம்பளத்தை அப்பாவிடம் கொடு த்து வந்தாள் மஞ்சுளா.

அன்று ‘ஆபீஸ்’ முடிந்ததும் மஞ்சுளா தன் ‘ப்ரென்ட்ஸ்களுடன்’ ‘காபி டே’க்குப் போய் காபி சாப்பிடப் போனாள்.

அவர்கள் உட்கார்ந்துக் கொண்டு இருந்த ‘டேபிளின்’ முன்னால் ‘மெனு கார்ட்டை’ வைத்து விட்டுப் நின்றுக் கொண்டு இருந்தான் ஒரு ‘பேரர்’.’மெனு கார்ட்டை’ப் பார்த்து விட்டு நிமிர்ந்து ‘பேரரை’ப் பார்த்த மஞ்சுளாவுக்கு ‘ஷாக்கா’ இருந்தது.

அந்த ‘பேரரும்’ மஞ்சுளாவைப் பார்த்ததும் விருட்டென்று ‘டேபிளை’ விட்டு வேகமாகப் போய் மானேஜா¢டம் ஏதோ சொல்லி விட்டு வெளியே போய் விட்டான்.

மஞ்சுளா தன் ‘ஷாக்கில்’ இருந்து வெளியே வந்து,தன் ‘ப்ரென்ட்ஸ்களை’ப் பார்த்து “ஒரு நிமிஷம் இருங்க நான் இதோ வறேன்”என்று சொல்லி விட்டு எழுந்துப் போய் மானேஜர் இடம் போய் அவரைப் பார்த்து “சார்,எங்க ‘டேபிலுக்கு’ வந்த ‘பேரர்’ பேர் மணி தானே.அவர் எங்க ‘டேபிளில்’ ‘மெனு கார்ர்டை’க் குடுத்தார். நான் .மெனு கார்ட்டை’ப் படிச்சுட்டு ‘ஆரடர்’ பண்ண பாத்த போது, அவர் எங்க ‘டேபிளை’ விட்டுட்டு வேகமாக வெளியே போய் விட்டார்.அவரே எனக்கு நலலாத் தெரி யும்.நான் அவர் கூட கொஞ்சம் பேசணும்நீங்க அவர் வீட்டு ‘அடரஸ்ஸை’ எனக்குக் கொஞ்சம் தர முடியுமா” என்று கேட்டாள்.

மஞ்சுளா கேட்டுக் கொண்டு இருக்கும் போது மனேஜர் ‘செல் போன்’ அடித்தது.

அந்த மானேஜர் அவர் ‘செல் போன்’அடிக்கவே அவர் செல் போன ‘ஆன்’ பண்ணிப் பேச ஆரம்பித்தார்.

மஞ்சுளா அவர் பேசி முடிக்கும் வரை காத்து இருந்தாள்.அவர் ‘செல் ‘போனி’ல் பேசி விட்டு ‘போனை’ ‘ஆப்’ பண்ணி விட்டு “சாரி மாடம்.இப்பத் தான் மணி ‘செல் போனி’லே உங்க கீட்டே ‘என்னை பத்தி ஒரு ‘டீடேல்ஸூம்’ சொல்லாதீங்க’ன்னு ‘ஸ்ட்ரிக்டா’ சொல்லிட்டான்” என்று சொல்லி விட்டு இன்னொரு ‘பேரர்’ கொடுத்த பில்லுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு, அவருக்கு சில்லறை யைக் கொடுக்க ஆரம்பித்தார்.

வாயடைத்துப் போன் நின்றுக் கொண்டு இருந்தாள் மஞ்சுளா.

மஞ்சுளா தன்னை சமாளித்துக் கொண்டு ‘டேபிளு’க்குப் போய் ஒன்னும் ஆகாதது போல உட்கார்ந்துக் கொண்டு ‘ப்ரெண்ட்ஸ்கள்’ இன்னொரு பேரரிடம் ‘ஆர்டர்’ கொடுத்தாள்.ஆர்டர் பண்ணினதை சாப்பிட ஆரம்பித்தாள் எல்லோரும்.

அது வரைக்கும் தங்கள் சந்தேகத்தை அடக்கி வைத்துக் கொண்டு வந்து இருந்த மஞ்சுளா வின் ‘ப்ரெண்ட்ஸ்’ மஞ்சுளாவைப் பார்த்து “என்ன மஞ்சு,நீ ஏன் அந்த மானேஜரை அப்படி அவசரமா பாக்கப் போனே” என்று கேட்டதற்கு சா¢யான காரணத்தை சொல்லாமல்,ஏதோ ஒரு இல்லாத கார ணத்தை சொல்லி சமாளித்தாள் மஞ்சுளா.

வீட்டுக்கு வரும் வழியில் மஞ்சுளா மணியைப் பற்றியே கவலைப் பட்டு கொண்டு வந்தாள். இரவு பூராவும் அவள் தூக்கம் வராமல் முழித்துப் படுத்துக் கொண்டு இருந்தாள்.
காலை மணி ஆறடித்ததும் மெல்ல எழுந்து தன் பல்லைத் தேய்த்து கொண்டு, முகத்தை கழுவ கண்ணாடியை பார்த்தாள் மஞ்சுளா.கண்கள் ரெண்டும் கோவைப் பழம் போல் சிவந்து இருந்தது.

‘காபி’க் கொடுக்க வந்த போது மஞ்சுளாவின் அம்மா மஞ்சுளா கண்களைப் பார்த்து “ஏம்மா மஞ்சு,ராத்திரி பூரா நீ தூங்கலையாம்மா.உன் கண் ரெண்டும் இப்படி கோவைப் பழம் போல சிவந்து இருக்கே” என்று சொல்லி விட்டு மகள் மஞ்சுளாவின் நெத்தியைத் தொட்டுப் பார்த்தாள்.நல்ல வேளையாக மஞ்சுளாவுக்கு ஜுரம் இல்லை.

ரொம்ப நேரம் யோஜனைப் பண்ணி விட்டு மஞ்சுள நிதானமாக “அம்மா,நேத்து சாயங்காலம் நான் ‘காபி டே’யில்,என் ‘ப்ரெண்ட்ஸ்’களுடன் ‘டிபன்’ சாப்பிட போன் போது, என்னோடு பீ.ஈ. படிச்சுக் கிட்டு இருந்த மணீயே பாத்தேம்மா.மணீ அந்த ‘காபி டே’யில் ஒரு சர்வரா வேலை செஞ்சி வராம்மா.என்னேப் பாத்தாதும் மணி ‘காபி டே’வை விட்டுட்டு வேகமா வெளியே போயிட்டான்.மணி வெளிலே இருந்து அவன் மானேஜருக்குப் ‘போன்’ பண்ணி ‘அவனே பத்தின ஒரு ‘டீடேல்ஸூம்’ எனக்குக் குடுக்க வேணாம்ன்னு சொல்லிட்டான்மா.அவனை நினைச்சுத் தான் நான் ரொம்ப நேரம் தூங்காம இருந்தேம்மா” என்று சொல்லும் போது அவள் கண்கள் துளித்தது.

மஞ்சுளா கண்களில் கண்ணீட் துளித்ததைப் பார்த்த பார்வதி மிகவும் வருத்தப்பட்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் “அவன் மட்டும் என்கிட்டே பேசி இருந்தா,நான் அவன் கிட்டே மன்னிப்புக் கேட்டு விட்டு,மறுபடியும் அண்ணா ‘எஞ்சினியரிங்க்’ கல்லூரி ‘பிரின்ஸிபாலை’ப் பார்த்து நடந்த உண்மையை முழுக்கச் சொல்லி விட்டு,மணிக்கு மறுபடியும் ‘பீ.ஈ’ படிக்க ‘அட்மிஷன்’ குடுக்கச் சொல்லி அவரை கெஞ்சிக் கேட்டு,மணியை என் செலவிலே பீ.ஈ. படிச்சு முடிக்க உதவி செஞ்சி வரலாம்ன்னு நினைச்சேம்மா” என்று அம்மாவிடம் சொல்லி விட்டு அழுதாள் மஞ்சுளா.

‘பாத் ரூமில்’ இருந்து வெளியே வந்த கேசவன் மஞ்சுளா அழுதுக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும் பதறிப் போய் ”என்ன பார்வதி மஞ்சு அழறா” என்று கவலையுடன் விசாரித்தார்.

“காலேஜ்லே மஞ்சுளா மணி என்கிற பையன் பேரை ‘பிரின்ஸிபால்’ கிட்டே சொல்லி,அவனை TC க் குடுத்து காலேஜ் விட்டு வெளியே அனுப்பினா இல்லையா,அந்தப் பையன் மணீ இப்போ ‘காபி டே’லே ஒரு பேரரா வேலை செஞ்சு வரதைப் பார்த்து இருக்கா.அந்த மணி மஞ்சுளாவைப் பாத்ததும் ‘காபீ டே’வை விட்டு வேகமா வெளியே போயிட்டானாம்.வெளியே போன மணி அவன் மானேஜர் கிட்டே ‘போன்’ பண்ணி அவன் ‘டீடேல்ஸ்’ஒன்னும் மஞ்சுளாவுக்கு சொல்ல வேணம்ன்னு சொல்லிட்டானாம்.மஞ்சுளா அவன் கிட்டே மன்னிப்புக் கேட்டு விட்டு,மறுபடியும் அண்ணா ‘எஞ்சினியரிங்க்’ கல்லூரி ‘பிரின்ஸிபாலை’ப் பார்த்து நடந்த உண்மையைச் சொல்லி மணிக்கு மறுபடியும் ‘பீ.ஈ’ படிக்க ‘அட்மிஷன்’ குடுக்கச் சொல்லி அவரை கெஞ்சிக் கேட்டு,மணியை அவ செலவிலே பீ.ஈ. படிச்சு முடிக்க உதவி செஞ்சி வரலாம்ன்னு நினைச்சாளாம்.ஆனா அப்படி பண்ண முடியலையேன்னு நினைச்சு வருத்தப்பட்டு கிட்டு ராத்திரி பூரா தூங்காம இருந்து வந்து இருக்கா” என்று எல்லா விவரத்தையும் சொன்னாள் பார்வதி.

உடனே கேசவன் “அந்த மணி தன்னாலே தான் BE படிக்க முடியாமப் போய், இப்போ ‘காபி டே’லே ஒரு பேரரா வேலை செஞ்சுக் கிட்டு வறான்ன்னு நினைச்சு ,மஞ்சுளா படற கஷ்டம் எனக்கு நல்லா புரிது பார்வதி.இப்போ அதே நினைச்சு என்ன பிரயோஜனம் மஞ்சுளா.அது எப்போவோ நடந் துப் போன ஒரு கெட்ட சம்பவம்.அந்த கெட்ட சம்பவத்தே மஞ்சுளா கொஞ்ச கொஞ்சமா மறந்து வந்து வாழப் பழகிக் கிட்டு வரணும்”என்று சொன்னார்.

அப்பா சொன்னதைக் கேட்ட மஞ்சுளாவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது,

அப்பா சொன்னாப் போல ‘நாம கொஞ்ச கொஞ்சமா அந்த கெட்ட சம்பவத்தே மறந்துட்டு வாழந்து வர பழகிக் கிட்டு வரணும்’ என்று முடிவு பண்ணீனாள் மஞ்சுளா.

திருவண்ணாமலையில் முத்துக்குமார் பண்ணி வந்த ஜவுளி வியாபாரம் மிகவும் நஷ்டத்தில் போகவே அதற்கு ‘பாங்கி’ல் கடன் வாங்கி கடையை நடத்தி வந்தார்.ஆனால் கடையில் வேலை செஞ்சு வந்த ‘சேல்ஸ்மன்’ நிறைய ஜவுளிகளைத் திருடி வந்ததால் கடையில் வியாபாரம் நல்லா நடக் காமல் லாபமே வரவில்லை.நாளுக்கு நாள் கடை நஷ்டத்தில் போகவே முத்துக்குமார் கடையை மூடி விட்டு,அந்தத் துணிக் கடையை விற்று விட்டு அவருக்கு இருந்த கடன்களை அடைத்தார். .

கணவரின் துணிக் கடை நஷ்டத்தில் போய்,அவர் துணிக் கடையை விற்று விட்ட சமாசாரம் கமாலாவை வெகுவாகப் பாதித்து விட்டது.அவள் உடம்பு படுத்த ஆரம்பித்தது.

முத்துக்குமார் கமலா வைத்தியத்திற்காகவும், பெண்களின் படிப்புக்காகவும் நிறைய செலவு பண்ண வேண்டி இருந்தது.அவர் பணத்திற்கு ரொம்ப கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தார்.

வீட்டு செலவுக்கு பணம் போதாமல் போகவே முத்துக்குமார் தன்னிடம் இருந்த ரெண்டு ஏகரா புஞ்சை நிலத்தை நஷ்டத்துக்கு விற்றார்.அந்த பணத்தை வைத்துக் கொண்டு,வீட்டு செலவையும், கமலாவின் வைத்திய செலவையும்,பெண்களின் படிப்பு செலவையும் செய்து வந்து குடும்பத்தை கவனித்து வந்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *