மணியை ஒரு ‘பலி ஆடு’ ஆக்கிட்டேன்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 4,378 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார் முத்துகுமார்.

அவர் தன் மணைவியை அருகில் அழைத்து “கமலா,என் துணிக் கடை நஷ்டத்லே போய், நான் அதே வித்துட்டேன்.வந்த பணத்லே பாதிப் பணம் கடன் அடைக்கவே சரியா போயிடுசுச்சி. எல்லா செலவுக்கும் பணம் பத்தாம இருந்ததால்,நான் என் கிட்டே இருந்த ரெண்டு ஏகரா புஞ்சை நிலத்தையும் நஷ்டத்லே வித்த சமாசாரம் உனக்கு நல்லாத் தொ¢யும்.இப்படியேப் போன நாம எப்படி நமப விமலாவை ஒரு நல்ல பையனுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுக்கப் போறோம். சின்னவ சாந்தாவை எப்படிப் படிக்க வக்கப் போறோம்……” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவர் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சோபாவில் சாய்ந்து விட்டார்.

பயந்துப் போய் கமலா தன் கணவனை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஹாஸ்பிடலுக்குப் போய் டாக்டா¢டம் காட்டினாள்.

டாக்டர் முத்துக்குமாரை நன்றாக பா¢சோதனைப் பண்ணி விட்டு அவரை உடனே ICUவில் ‘அட்மிட்’ பண்ணி விட்டு “அம்மா அவருக்கு பலமான ‘ஹார்ட் அட்டாக்’ வந்து இருக்கு.அவர் ஹார்ட்டிலே ஏதாவது அடைப்பு இருந்தா உடனே அவருக்கு ‘பை பாஸ் சர்ஜரி’ பண்ண வேண்டி இருக்கும். எல்லா வைத்யத்துக்கும் ரெண்டு லக்ஷ ரூபாய் வேண்டி இருக்கும்மா நீங்க பணத்தை ரெடி பண்ணிக் குங்க.ரொம்ப ‘டிலே’ பண்ணாதீங்க. அவருக்கு உடனே வைத்தியம் பண்ணீயே ஆகணும்” என்று சொல்லி விட்டு ICUக்குள் போய் விட்டார்.

உடனே கமலா ‘டாகடர் கேக்கற ரெண்டு லக்ஷ ரூபா நம்ம கையிலே இல்லையே.அவ்வளவு பணத்துக்கு நாம என்னப் பண்ணப் போறோம்.ஆனா இந்த செலவே நாம உடனே பண்ணி ஆகணு மே.அவ்வளவு பணம் நமக்கு இந்த சமயத்லே யார் உதவி பண்ணுவாங்க நம்ம புருஷன் உயிர் பிரச்சி னையாச்சே இந்த ரெண்டு லக்ஷ ரூபாய்’ என்று தீவிரமாக யோஜனைப் பண்ணீனாள்.

விமலாவும்,சாந்தாவும் அப்பாவின் உடமபைப் பற்றீ மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு வந்தார் கள்.கூடவே அம்மா படும் வேதனையை நினைத்து இருவரும் கவலைப் பட்டார்கள்.

“அம்மா,டாக்டர் கேக்கற ரெண்டு லக்ஷ ரூபாய்க்கு இப்போ நாம என்ன பண்ணப் போறோம்மா யார் நமக்கு இவ்வளவு பணம் குடுத்து உதவப் போறாங்கம்மா. என்று கேட்ட இருவர் கண்களிலும் கண்ணீர் துளித்தது.

‘யோஜனைப் பண்ணி கமலா ஒரு முடிவுக்கு வந்தாள்.

‘இந்த மாதிரி அவசர சமயத்திலே நாம் பழைய விரோதம் எல்லாம் பாக்கக்கூடாது, நம்ம அண்ணனுக்கு ‘·போன்’ பண்ணி,அவர் கிட்ட மச்சான் உடமேப் பத்தி எல்லா விவரமும் சொல்லி, டாக்டர் சொன்ன பண சமாசாரத்தையும் விவரமா சொல்லி,அவரை பண உதவி கேக்கலாம்’ என்று நினைத்து அண்ணன் கேசவனுக்கு போன் பண்ணினாள் கமலா.
அண்ணன் ‘·போனிலே’ வந்ததும் கமலா “அண்ணே,மச்சானுக்கு திடீர்ன்னு ‘ஹார்ட் அட்டாக’ வந்து இருக்கு.நாங்க அவரே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுக் கிட்டுப் போனோம்.டாக்டர் என் கிட்டே அவருக்கு வைத்தியம் பாக்கா ரெண்டு லக்ஷ ரூபா ஆவும்ன்னு சொன்னாரு.மச்சான் வச்சு இருந்த துணி கடை ரொம்ப நஷ்டத்லே போனதாலே,அந்த துணிக் கடையே வந்த விலைக்கு வித்துட்டு, அவருக்கு இருந்த கடனை எல்லாம் அடைச்சாரு.வீட்டு செலவுக்கு பணம் போதாம இருந்ததாலே மச்சான் எங்க கிட்ட இருந்த ரெண்டு ஏக்கர் புஞ்சை நிலத்தேயும் வந்த விலைக்கு வித்துட்டாரு.நீங்க தயவு செஞ்சி பழைய விரோதத்தை மனசிலே வச்சுக்காம உடனே ரெண்டு லக்ஷ ரூபா எடுத்துக் கிட்டு திருவண்ணாமலைக்கு வாங்க.டாக்டர் என்னேப் பாத்து ‘ரொம்ப டிலே பண்ணாதீங்க.அவருக்கு உடனே வைத்தியம் பண்ணீயே ஆவணும்ன்னு சொன்னாரு.நீங்க எவ்வளவு சிக்கிரமா வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமா பணத்தோட வாங்க” என்று சொல்லி அழுதாள் கமலா.

கமலா அழுதுக் கொண்டு சொன்ன சமாசாரத்தை கேசவன் பார்வதிக்கு விவரமாகச் சொன்னார்.

கணவன் சொன்ன சமாசாரத்தைக் கேட்ட பார்வதிக்கு அழுகை வந்து விட்டது.உடனே அவள் “நீங்க பழைய விரோதத்தை தயவு செஞ்சி மனசிலே வச்சுக்காதீங்க.இந்த மாதிரி சமயத்லே நாம அவங்களுக்கு நிச்சியமா உதவி பண்ணீயே ஆவணுங்க.’பாங்க்’ குப் போய் உடனே ஒரு மூனு லக்ஷ ரூபாயா எடுத்துக் கிட்டு வாங்க.என் அண்ணன் உயிரே தயவு செஞ்சிக் காப்பாத்துங்க” என்று சொல்லி கணவன் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள் பார்வதி.

பார்வதி அப்படி அழுதுக் கொண்டு சொல்லவே உடனே கேசவன்” பார்வதி, நானும் ஒரு மனுஷன் தான்.எனக்கும் இதயம் இருக்கு.சண்டே வேறே.மனித நேயம் வேறே.நான் ‘பாங்கு’’க்ப் போய்,நீ சொன்னா மாதிரி பனத்தே எடுத்து கிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு,தன் ‘பாங்க்’’செக்’ புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு மூனு லக்ஷ ரூபாயை வாங்கிக் கொண்டு வந்தார்.

மஞ்சுளாவை ‘ஆ·பீஸ்’ வேலையை விட்டு வீட்டுக்கு வந்ததும் அவளைப் பார்த்து பார்வதியும் கேசவனும்” அம்மா, மஞ்சுளா நீ ஜாக்கிரதையா வேலைக்கு போய் வா.நாங்க திருவண்னாமலைக்குப் போய் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா திரும்பி வந்துடறோம்”என்று சொல்லி விட்டு,பார்வதியை அழைத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு இரவு கிளம்பின ஒரு பஸ்ஸைப் பிடித்து, அதிகாலையிலே மச்சான் வீட்டுக்கு வந்தார் கேசவன்.

கேசவனும் பார்வதியும் வீட்டுக்குள்ளே நுழைந்ததும் கமலா இருவரையும் பார்த்து “எனக்குத் தாலி பிச்சை போடுங்க.எப்படியாவது அவரே கொஞ்சம் காப்பாதுங்க.அவருக்கு உடனே வைத்தியம் பாத்து ஆவணுங்க” என்று சொல்லி கதறி அழுதாள்.

உடனே கேசவன் “அழாதே கமலா,இதுவா பழைய விரோதம் பாக்கிற நேரம்.வாங்க உடனே ஹாஸ்பிடலுக்கு போய் மச்சான் உடம்பைக் கவனிக்கலாம்.வாங்க” என்று சொல்லி விட்டு வாசலுக்கு வந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து பார்வதியையும், கமலாவையும் அழைத்துக் கொண்டு,முத்துக்குமார் ‘அட்மிட்’ ஆகி இருந்த ஹாஸ்பிடலுக்கு ஓடினார்.
ஹாஸ்பிடலுக்கு வந்த் கேசவன் ICUவில் இருந்த டாக்டரைப் பார்த்து முத்துக்குமார் உடம்பு ‘கண்டிஷனை’ விசாரித்தார்.”நீங்க வெறுமனே ஒரு நிமிஷம் அவரைப் பார்த்து, மெதுவாக பேசி விட்டு,சீக்கிரமா வெளியே வந்து விடுங்க” என்று சொன்னார் டாக்டர்.

உடனே கமலா “சரி டாக்டர்” என்று சொல்லி விட்டு ICUக்குள் போய் தன் கணவனைப் பார்த்து “நீங்க கவலை படாம இருந்து வாங்க.உங்க மாமா சென்னையில் இருந்து பணத்தோட, உங்க தங்கச்சி யையும் அழைச்சுக் கிட்டு வந்து இருக்காரு இப்போ அவங்க ரெண்டு பேரும் I.C.Uக்கு விட்டு வெளி யிலே காத்துக் கிட்டு இருக்காருங்க” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு டாக்டர் சொன்னது போல சீக்கிரமா வெளீயே வந்து விட்டாள்.

கேசவன் உடனே டாக்டர் சொன்ன பணத்தை ‘ஹாஸ்பிடலி’ல் கட்டினார்.

அழுதுக் கொண்டு இருந்த கமலா பக்கத்தில் ‘ஹாஸ்பிடலி’ல் இருந்த அவளுடைய பையனும், ரெண்டு பெண்களும் உட்கார்ந்துக் கொண்டு அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்கள்.

கமலா கேசவனுக்கும் பார்வதிக்கும் தன் மகனையும், ரெண்டு பெண்களையும் அறிமுகம் பண்ணினாள்.

டாக்டர் முத்துக்குமாருக்கு ‘ஆஞ்சியோ’ பண்ணி அவருக்கு எங்கே எல்லாம் ‘ப்ளாக்’ இருக்கு என்று கண்டுப் பிடித்து,பிறகு அவருக்கு ‘பை பாஸ் சர்ஜரி’ பண்ணி விட்டு,ஆறு மணி நேரம் ICU வில் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

முத்துகுமாருக்கு மயக்கம் தெளிந்ததும்,அங்கு இருந்த ‘நர்ஸ்’ அவருக்குக் குடிக்க கொஞ்சம் ஜூஸ் கொடுத்தாள்.முத்துகுமார் அந்த ஜூஸைக் குடித்தார்.மூன்று மணி கழித்து நேரம் முத்துக் குமார் உடமபை டாக்டர் ‘செக் அப்’ பண்ணி விட்டு அவர் ‘நார்மலா’க இருந்ததால், டாக்டர் அவரை ஒரு ‘ரூமி’ல் கொண்டு வந்து விட்டார்கள்.

‘ரூமுக்கு’ வந்த டாக்டர் முத்துக்குமாரின் ‘ஹார்ட் பீட்’’பல்ஸ்’ இவற்றை ஒரு மூனு மணி நேரம் கவனித்தார்.முத்துக்குமார் உடல் நிலை ‘நார்மலா’க இருக்கவே டாக்டர் அங்கு இருந்த ‘நர்ஸை’க் கூப்பிட்டு “’நர்ஸ்’ இவருடைய உறவுகாரங்களே இப்போ ‘ரூமு’க்கு வந்து பாக்கச் சொல்லுங்க”என்று சொல்லி விட்டு வெளியே போனார்.

டாக்டர் ரூமை விட்டு வெளியே போனதும், கமலாவும்,பார்வதியும்,கேசவனும் ‘ரூமு’க்கு உள்ளே போய் முத்துக்குமாரைப் பார்த்தார்கள்.

கேசவனைப் பார்த்ததும் முத்துக்குமார் தன் கைகளைக் கூப்பி “என்னை மன்னிச்சிடுங்க மச்சான்.நான் கல்யாணத்தின் போது அப்படி உங்க கிட்டே சண்டைப் போட்டு இருக்கக் கூடாது.அது என் தப்பு தான் மச்சான்” என்று தன் கண்களில் கண்ணீர் தளும்ப சொன்னார்.

உடனே கேசவன் “மச்சான் நீங்க இப்ப அழக் கூடாது.உங்க உடம்பு இப்ப ஆபரேஷன் பண்ண உடம்பு.நீங்க இப்போ ‘எமொஷனல்’ ஆவக் கூடாது.நீங்க உடம்பு நல்லாத் தேறி,சீக்கிரமா,சௌக்கிய மா வீட்டுக்கு வரணும்.அது தான் இப்போ முக்கியம் ” என்று சொல்லி விட்டு தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் கேசவன்.

உடனே முத்துக்குமார் கேசவனைப் பார்த்து “நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஒரு நாலு நாளை க்கு எங்க வீட்லெ தயவு செஞ்சி தங்கி இருங்க.நான் ‘ஹாஸ்பிடலில்’ இருந்து, இன்னும் மூனு நாள்ளே ‘டிஸ்சார்ச்’ ஆயி வீட்டுக்கு வந்துடுவேன்.அப்புறமா நாம எல்லாரும் ஒரு வேளையையாவது ஒன்னா குந்திக் கிட்டு சாப்பிடணும்.என் ஆசையே கொஞ்சம் நிறைவேத்துங்க. முடியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க மச்சான்” என்று தன் கண்களில் நன்றி பொங்க கேட்டார் முத்துக்குமார்.

“சரிங்க,நான் நீங்க சொன்னா மாதிரி இருந்துட்டு, அப்புறமா நாங்க சென்னைக்குப் போறோம் மச்சான்” என்று சொன்னார் கேசவன்.

உடனே முத்துகுமார் “நான் வீட்டுக்கு வந்ததும்,உங்க கால்லே விழுந்து மன்னிப்புக் கேக்கணும் மச்சான்.நீங்க மட்டும் சமயத்லே எங்களுக்கு இந்த பண உதவியே பண்ணாம இருந்தா….” என்று சொல்லி அழுதார்.உடனே அங்கு இருந்த ‘நர்ஸ்’ முத்துக்குமாரைப் பார்த்து “உங்க உடம்பு இப்ப ஒரு ஆபரேஷன் பண்ண உடம்பு.நீங்க இப்போ ‘எமொஷனல்’ ஆவக் கூடாது.அழவும் கூடாது” என்று கண்டிப்பாகச் சொன்னாள்.

உடனே முத்துக்குமார் தன் அழுகையை அடக்கிக் கொண்டார்.

பிறகு எல்லோரும் முத்துகுமார் கிட்டே சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டில் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு விட்டு தானும் சாப்பிட்டு விட்டு கமலா கேசவ னிடம் “விமலாவுக்கு இப்போ வயசு இருபத்தி மூனு ஆவுது.அவளுக்குக் கல்யாணம் பண்ணனும். சின்னவ சாந்தா ஆறாம் ‘க்லாஸிலே’ படிக்கிறா.மச்சான் மணியே அண்ணா கல்லூரியில் சேத்து நிறைய பணம் செலவு செஞ்சி படிக்க வச்சாருங்க.மணி நாலாவது வருஷம் BE படிச்சுக் கிட்டு இருந் தப்ப யாரோ ஒரு ‘சிறுக்கி’ எவனோ ஒருத்தன் பண்ண தப்புக்கு மணியை ‘பிரின்சிபால்’ கிட்டே மாட்டி வச்சுட்டா.அந்த ‘பிரின்சிபாலும்’ தீர விசாரிக்காம மணியை வேறே எந்த காலேஜிலேயும் சேர முடியாத படி ஒரு TC கொடுத்து வெளியே அனுப்பிட்டாரு” என்று சொல்லி அழுதாள்.

கமலா மணியைப் பத்தி சொல்லும் போது ‘யாரோ ஒரு சிறுக்கி’ என்று சொன்ன போது கேசவ னுக்கும் பார்வதிக்கும் ‘ஷாக்’ அடித்தது போல இருந்தது.

தங்களை மெல்ல சமாளித்துக் கொண்டார்கள்.‘தன் பெண் மஞ்சுளா ‘பிரின்சிபால்’ கிட்டே சொன்னது இவங்க பையன் மணியையா’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டார்கள் கேசவனும் பார்வதியும்.

இருவரும் ‘ஐயையோ நம்ம பொண்ணு மஞ்சுளா தான் காலேஜ் ‘பிரின்சிபால்’ கிட்டே சொல்லி மணியே வெளியே அனுப்பி இருக்காங்கற சமாசாரத்தே எப்படி சொல்லப் போறோம்’ என்று மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் பார்வதி “அந்த மாதிரி ஆனதும் மணி மனசு ரொம்ப ஒடிஞ்சுப் போயி ட்டான்.எங்களாலே மறுபடியும் பணம் கட்டி மணீயே மேலே படிக்க வக்க முடியலே.எங்க குடும்ப பணக் கஷ்டத்தை நல்லா புரிஞ்சுக் கிட்டு மணி இப்போ ஏதோ ஒரு ‘கா·பி’ ‘ஷாப்பிலே’ சொற்ப சம்ப ளத்துக்கு வேலை செஞ்சி கிட்டு வறான்” என்று சொல்லி கண்ணீர் விட்டாள்.

மூன்று நாடகள் கழித்து முத்துகுமாரை ‘டிச்சார்ஜ்’ பண்ணி வீட்டுக்கு அழைத்து வந்தாள் கமலா.முத்துக்குமார் முடியாமல் மெல்ல கேசவன் காலைத் தொட்டு “என்னே மன்னிசிடுங்க மாமா. நீங்களும்,என் தங்கச்சி பார்வதியும் தான் சமயத்லே பணத்தோடு வந்து என்னே காப்பாதீனிங்க” என்று அழுதுக் கொண்டேசொன்னான்.

“மச்சான்,ஒரு அவசரம்ன்னு வந்தா,நாம பழசே எல்லாம் மனசிலே வச்சுக்க கூடாது.நாம போட்ட சண்டேயே நான் எப்பவோ மறந்துட்டேன்.இப்போ நாம எல்லாரும் ஒன்னுக்குள்ளே ஆயிட் டோம்.நீயும் அந்த பழைய சமாசாரத்தே மறந்து வாழப் பழகி வா”என்று சொல்லி மச்சான் முத்துக் குமார் தோலைத் தொட்டு எழுப்பினார்.

கணவர் ஆசைப் பட்டது போல கமலா எல்லோருக்கும் சமையல் பண்ணீனாள்.எல்லோரும் ஒன்றாக உடகார்ந்துக் கொண்டு சாப்பிட்டார்கள்.

கேசவன் பார்வதியுடன் ரெண்டு நாள் முத்துக்குமார் வீட்டில் தங்கி இருந்தார்.

சென்னைக்குக் கிளம்புவதற்கு கேசவன் முத்துக்குமாரிடம் “மச்சான்,நேத்து ராத்திரி உங்க சம்சாரம் கமலா உங்க குடும்ப நிலைமையை எங்க கிட்டே விவரமா சொன்னா.நானும் உங்க தங்கச்சி கமலாவும் நல்லா யோஜனைப் பண்ணினோம்ங்க.என் கிட்டே இப்போ ஒரு ‘மெடிக்கல் ஷாப்பும்’,ஒரு ‘டிபார்ட்மென்டல் ஷாப்பும்’ இருக்கு.நீங்க அதிலே ஒன்னை கவனிச்சுக் கிட்டு வாங்க.எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கிட்டு இருந்துக்கிட்டு, நாம சென்னையிலே ஒன்னா இருந்து வரலாமே” என்று சொன்னார்.

பார்வதியும்”ஆமாண்ணே.நீங்க அவர் சொன்னா மாதிரி செஞ்சா,நாம எல்லாரும் ஒரு நாள் கிழமைன்னா ஒன்னா இருந்துக் கிட்டு,ஒன்னா சாப்பிட்டுக் கிட்டு சந்தோஷமா இருந்து வரலாம்” என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.

கமலாவுக்கும் முத்துக்குமாருக்கும் கேசவனும்,பார்வதியும் சொன்ன ‘ஐடியா’ ரொம்ப பிடித்து இருந்தது.

உடனே முத்துகிகுமார் மிகவும் சந்தோஷப் பட்டு “மாமா, நீங்க சொல்ற ஐடியா ரொம்ப நல்லா இருக்கு.எனக்கும் இப்போ இந்த திருவண்ணாமைலே ஒன்னும் இல்லே.என் உடம்பு இன்னும் ஒரு மாசத்லே ரொம்ப நார்மலா ஆயிடும். நீங்க சொன்னா மாதிரி நாங்க எல்லோரும் சென்னைக்கு வந்து, உங்க வீட்டுக்குப் பக்கத்தி லேயே ஒரு வீட்லெ இருந்து வரோம்.நீங்க பாத்து என்னே எந்த கடயே கவனிச்சுக் கிட்டு வரச் சொல்றீங்ககளோ,அந்தக் கடையை நான் கவனிச்சுக் கிட்டு வறேன்” என்று நன்றி உணர்ச்சியுடன் சொன்னார்.

கமலாவும் சந்தோஷப் பட்டாள்.உடனே “நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு பொ¢ய மனசு பண்ணி,எங்க குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வரேன்னு சொன்னதுக்கு நாங்க என்ன கைம்மாறு பண்ணப் போறோமுங்க” என்று சொல்லி தன் கைகளைக் கூப்பி கேசவனுக்கும் பார்வதிக்கும் நன்றி சொன்னாள் கமலா.

கொஞ்ச நேரம் கழித்து கேசவன் “நானும், பார்வதியும் ஒன்னு சொல்லப் போறோம் மணி.நீ நிதானமாக் கேட்டு விட்டு எங்க பொண்ணை மன்னிக்கணும்.தயவு செஞ்சி மன்னிப்பாயா மணீ” என்று மணியின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.அவர் கணகளில் நீர் துளித்தது.

மணிக்கு ஒன்னும் புரியவில்லை.

உடனே கேசவனும் பார்வதியும் அன்று காலேஜிலே நடந்த முழு சமாசரத்தையும் விவரமாக மணி இடம் சொன்னார்.

“மணி,மஞ்சுளா பண்ணது தப்பு தான்.ரொம்ப பொ¢ய தப்பு தான்.நான் ஊருக்கு வரதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி உன்னை மஞ்சுளா ‘கா·பி டேயில்’ பாத்தாளாம். அப்பவே உன் கிட்டே மன்னிப்புக் கேக்க வந்தா.ஆனா அதுக்குள்ளே,நீ வெளியே போயிட்டே” என்று மணியின் கையைப் பிடித்து கேட்கும் போது கேசவன் கண்களிலும், பார்வதி கண்களிலும் நீர் துளித்தது.

“நீங்க வயசிலே ரொம்ப பொ¢யவங்க.எங்க குடும்பத்துக்கு சரியான சமயத்லே இவ்வளவு பண உதவி பண்ணி இருக்கீங்க.நான் தகாத நண்பர்கள் சகவாசம் வச்ச்சுண்டதாலே தான் எனக்கு இந்த தண்டனை கிடைச்சுது” சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் மணி.

முத்துக்குமாரும்,கமலாவும் கேசவனும், பார்வதியும்சொன்னதையும், அதற்கு மணி சொன்ன பதிலையும் கேட்டு ஆச்சரியப் பட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள். இருவரும் ‘இது தான் மணி காலேஜ்லே நடந்த உண்மை சேதியா.நம்ம பையன் தகாத நண்பர்ங்க சகவாசத்தே வச்சுக் கிட்டு இருந்தானா’ என்று நினைத்து வருந்தினார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் கேசவன் நானும் பார்வதியும் “ மச்சான்.நீங்க ரெண்டு பேரும் இனிமே கவலைப் படாம இருந்து வாங்க.நாங்க ரெண்டு பேரும் விமலாவுக்கு ஒரு நல்ல பையனாப் பார்த்து எங்க செலவிலேயே கல்யாணம் கட்டிக் கொடுக்கிறோமுங்க.சாந்தாவை சென்னையிலே ஒரு நல்ல பள்ளிக்கூடத்திலே சேத்து படிக்க வைக்கலாமுங்க” என்று சொன்னார்கள்.

உடனே முத்துக்குமாரும் கமலாவும் தங்கள கைகளைக் கூப்பி “உங்க ரெண்டு பேருக்கும், நா னும்,கமலாவும் என்ன கைம்மாறு பண்ணப் போறோம்ன்னே தொ¢யலே” என்று கண்களில் கண்ணிர் மல்க சொன்னார்கள்.

“அது மட்டும் இல்லே மச்சான்,நானும், மஞ்சுளாவும் மணியே அழைச்சுக் கிட்டு அண்ணா ‘எஞ்சினியா¢ங்க்’ காலேஜுக்குப் போய் ‘பிரின்சிபால்’ கிட்டேமன்னிப்புக் கேட்டு விட்டு, மணியே மறுபடியும் நாலாவது வருஷ BE ‘கோர்ஸ்’எங்க செலவிலேயே படிக்க வக்கலாம்ன்னு இருக்கோம்” என்று கேசவன் சொன்னதும் உடனே மணி இருவர் கால்களீல் விழுந்து “ நான் மறுபடியும் அந்த அண்ணா ‘எஞ்சினியா¢ங்க்’ காலேஜ்லே சேந்து நாலாவது வருஷ BE ‘கோர்ஸ்’ படிப்பேன்னு நினை க்கவே இல்லே.உங்க ரெண்டு பேருக்கும் நான் எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்குத் தொ¢யலே” என்று கண்களில் கண்ணிர் மல்க சொன்னான்.

முத்துக்குமாரும் கமலாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

பிறகு கேசவனும் பார்வதியும் எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு சென்னைகு வந்தார்கள்.

சென்னைக்கு வந்த கேசவனும் பார்வதியும் மஞ்சுளாவிடம் திருவண்ணாமையில் நடந்த எல்லா விஷயங்களையும் விவரமாக சொன்னார்கள்.

மஞ்சுளாவுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.

உடனே அவள் “அப்பா, எனக்கு அண்ணா ‘எஞ்சினியா¢ங்க்’ காலேஜ் ‘பிரின்சிபாலை’ நல்லாத் தொ¢யும்.நீங்களும், நானும்,மணீயை அழைச்சுக் கிட்டு அவர் கிட்டே மன்னிப்புக் கேட்டு விட்டி மணியை மறுபடியும் நாலாவது BE ‘கோர்ஸ்’நம்ம செலவிலேயே படிக்க வக்கலாம்” என்று சந்தோ ஷமாகச் சொன்னாள்.

கேசவன் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன வீட்டை வாடகைக்குப் பார்த்து, அந்த வீட்டுக்கு ஆறு மாச ‘அட்வான்ஸை’க் கொடுத்தார்.

மூனு வாரம் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டு முத்துக்குமார் தன் வீட்டில் இருந்த சாமான்களை எல்லாம் விற்று விட்டு,எல்லோரையும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலையை விட்டு சென் னைக்கு வந்து சேர்ந்தார்..

வாடகைக்கு பார்த்து வைத்து இருந்த வீட்டில் எல்லோரும் பால் காய்ச்சிக் குடித்து விட்டு,ஒரு வாத்தியாரை அழைத்து வந்து ஒரு சின்ன பூஜையை பண்ணினார் கேசவன்.முத்துக்குமார் தன் குடும்பத்துடன் அந்த வீட்டில் குடித்தனம் செய்து வந்தார்.

கேசவன் முத்துக்குமாரைப் பார்த்து “மச்சான்,நீங்க நாளையிலே இருந்து என் ‘மெடிக்கல் ஷாப்பை’ கவனிச்சுக் கிட்டு வாங்க.அந்த ‘ஷாப்லே’ என்னுடைய ஒரு ‘பெஸ்ட் ·ப்ரெண்ட்’ தான் எல் லா மருந்துக்கும் ‘பில்’ போடறான்.நீங்க வெறுமனே அந்த ‘பில்’லுக்கு சரியான பணத்தே வாங்கிக் கிட்டு வரணும்.அவ்வளவு தான்” என்று சொன்னதும் முத்துக்குமார் சந்தோஷப் பட்டு “நான் நாளை யிலே இருந்து அந்த மெடிக்கல் ஷாப்புக்குப் போய் வறேன் மாமா”என்று சொன்னார்.

சாந்தாவை பக்கத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தார் கேசவன்.

அந்த வருடம் வருடாந்திர விடுமுறைக்குப் பிறகு அண்ணா ‘எஞ்சனியா¢ங்க்’ காலேஜ் திறந்ததும் கேசவனும்,மஞ்சுளாவும் மணீயை அழைத்துக் கொண்டு காலேஜ் ‘பிரின்சிபாலை’ப் பார்க்க போனார்கள்.

‘பிரின்சிபால்’ ரூம் வாசலில் இருந்து ‘போர்ட்டை’ப் பார்த்து சந்தோஷப் பட்டாள் மஞ்சுளா. அவள் படிக்கும் போது இருந்த அதே ‘பிரின்சிபால்’ தான் இன்னும் வேலையிலே இருந்து வந்தார்.

உடனே மஞ்சுளா “அப்பா,அப்பா, நாங்க படிக்கும் போது இருந்த ‘பிரின்சிபாலே’இன்னும் வேலேலே இருக்கார்”என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.
மஞ்சுளா செகரட்ரியை சந்தித்து ‘பிரின்சிபாலை’ சந்திக்க ‘பர்மிஷன்’ கேட்டார்கள்.

‘செகரட்ரி’ பர்மிஷன் கொடுத்ததும் மூவரும் ‘பிரின்சிபால்’ ரூமுக்குள் போய் வணக்கம் சொன்னார்கள்.கேசவன் மட்டும் ஒரு சோ¢ல் உட்காந்துக் கொண்டார்.மஞ்சுளாவும் மணியும் உட் காராமல் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

தன் மூக்குக் கண்னாடியை கழட்டி வைத்து விட்டு ஏதோ யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்த ‘பிரின்சிபால்’, மறுபடியும் தன் மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எல்லோரையும் பார்த்தார்.

‘பிரின்சிபால்’ மஞ்சுளாவையும் மணியையும் ஒன்றாகப் பார்த்ததும் மஞ்சுளாவைப் பார்த்து “என்ன மஞ்சுளா,உன் தாவணீயே பிடிச்சி இழுத்து ‘ராகிங்க்’ பண்ணின மணியை அழைச்சுக் கிட்டு என் ரூமுக்கு வந்து இருக்கே.என்ன சமாச்சாரம்” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.

உடனே மஞ்சுளா கண்களில் கண்ணீர் தளும்ப “சார்,நீங்க என்னே மன்னிக்கனும்.அன்னைக்கு நான் உங்க கிட்டே ஒரு பொய்யே சொல்லி என்னே காப்பாத்திக்கிட்டு, அப்பாவியான மணியே மாட்டி விட்டேன்.ஆனா அன்னைக்கு என் தாவணியை பிடிச்சு இழுத்தவன் மணி இல்லே.குரு தான் அப்படி செஞ்சான்.நீங்க என்னே உங்க ரூமுக்கு கூபிடறதுக்குக்கு முன்னாடி அவன் எனக்கு ஒரு SMS ‘மெச்செஜ்’குடுத்து இருந்தான்.அந்த ‘மெச்சேஜிலே’ அவன் ‘என் பேரே நீ ’பிரின்சிபால்’ கிட்டே சொன்னா, ‘சாயங்காலம் எனக்கு வீட்டுக்குப் போக ரெண்டு காலும் இருக்காது’ன்னு சொல்லி பயமுறுத்தி இருந்தான்.அதனால் நான் பயந்துப் போய் என்னைக் காப்பாத்திக் கொள்ள நினைச்சி மணி பேரை சொல்லிட்டேன் சார்” என்று சொல்லி விட்டு விக்கி விக்கி அழுதாள்.

“ஓ இது தானா அன்னைக்கு நடந்த உண்மை சமாச்சாரம்” என்று ‘பிரின்சிபால்’ சொல்லிக் கொண்டு இருக்கும் போது கேசவன் “சார்,நான் மஞ்சுளாவின் அப்பா.மஞ்சுளா பண்ண தப்புக்காக, நானும் உங்க கிட்டே மன்னிப்புக் கேக்கறேன்.நானும் மஞ்சுளாவும் எங்க செலவிலேயே மணியை நாலாவது வருஷம் BE படிக்க வக்க ரொம்ப ஆசைப் படறோம்.நீங்க பொ¢ய மனசு பண்ணி மணிக்கு நாலாவது வருஷ BE படிக்க ‘அலவ்’ பண்னுவீங்களா” என்று கையைக் கூப்பிக் கேட்டார்.

உடனே அந்த ‘பிரின்சிபால்’ “மணி ரொம்ப ‘ப்ரைட் ஸ்டூடண்ட்’.எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.அவன் மூனாவது வருஷ BE ‘கம்யூட்டர் சயன்ஸ் கோர்ஸ்’ பா¢¨க்ஷயிலே வகுப்பிலே முதல் மாணவனா பாஸ் பண்ணதே,நான் இன்னும் மறக்கலே.நடந்த உண்மை எனக்கு இப்போ தொ¢ஞ்ச பிறகு,நான் மணிக்கு ‘பனிஷ்மெண்ட்’ குடுத்ததை நினைத்து ரொம்ப மனசு வருத்தப் படறேன்.நீங்க கேட்டுக் கிட்டா மாதிரி நான் மணிக்கு நாலாவது வருஷ BE ‘கம்யூட்டர் சயன்ஸ் கோர்ஸ்லெ’ ஒரு ‘சீட்’ தறேன்.நீங்க வெளியே போய் ‘ஆ·பீஸ்’லே மணிக்கு இந்த வருஷம் கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு,மணியை நாளையிலே காலேஜ்ஜுக்கு வர சொல்லுங்க” என்று சொன்னார்.

உடனே மூவரும் ‘பிரின்சிபாலுக்கு’ தங்கள் நன்றியைச் சொல்லி விட்டு, ‘ஆ·பீஸி’ல் மணிக்கு அந்த வருஷ பணத்தை கட்டி விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

கேசவனும், மஞ்சுளாவும், மணியும் சொன்ன சந்தோஷ சமாசாரத்தைக் கேட்டு முத்துக்குமா ரும், கமலவும் கேசவனைப் பார்த்து “மாமா,என் பையன் மறுபடியும் ஒரு காலேஜிலே சேந்து BE படிப்பான்னு நாங்க நினைக்கவே இல்லே.நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு ரொம்ப கடமைப் பட்டு இருக்கோம்” என்று கண்களில் கண்ணீர் மலகச் சொன்னார்கள்.
மணி அடுத்த நாள் முதல் காலேஜ் போய் படித்து வந்தான்.

கேசவனும் பார்வதியும் ஒரு நல்ல பையனாகப் பார்த்தர்கள்.அந்தப் பையனை முத்துக்குமாரு க்கும்,கமலாவுக்கும்,விமலாவுக்கும் ரொம்ப பிடித்து இருக்கவே விமலா கல்யாணத்தை ‘ஜாம்’’ ஜாம்’ என்று நடத்தி முடித்தார்கள் கேசவன் பார்வதி தம்பதிகள்.

ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு மணி காலேஜ் போய் படித்து வந்ததால், அவன் பாடங்களை எல்லாம் மிகவும் கஷ்டப் பட்டு படித்து வந்தான்.

மஞ்சுளா மணிக்கு ஏற்பட்ட பாட நிறைய சந்தேகங்களை எல்லாம் தினமும் சொல்லிக் கொடுத் துக் கொண்டு வந்தாள்.நாளடைவில் மணிக்கும் மஞ்சுளாவுக்கும் காதல் மலர்ந்தது.மஞ்சுளாவும் மணியும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதை ரெண்டு பெற்றோர்களும் கவனித்து வந்தார்கள்.

மணி பீ.ஈ. ‘பஸ்ட் க்லாஸில்’’ பாஸ்’ பண்ணினவுடன் அவனுக்கு ஒரு நல்ல கம்பனியில் நல்ல வேலை கிடைத்தது.

கேசவனும்,பார்வதியும் முத்துக்குமாரையும் கமலாவையும் பார்த்து “ நீங்க ரெண்டு பேரும் தயவு செஞ்சி என் பொண்ணு மஞ்சுளாவை உங்க பையன் மணிக்கு கல்யாணம் கட்டிக் குடுக்க முடியுமா. இல்லே உங்க மணிக்கு,நீங்க ரெண்டு பேரும் வேறே ஒரு பணக்கார பொண்ணாப் பாத்துக் கிட்டு வா£ங்களா” என்று கேட்டதும் முத்துக்குமாரும் கமலாவும் “நாம இப்போ ஒன்னா சேந்து ஒரு குடும்பமா வாழ்ந்து கிட்டு வறோம்.அதே தவிர எங்களுக்கு இந்த வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்து நீங்க ரெண்டு பேரும் தானே.அப்படி இருக்கும் போது மணீக்கு நாங்க ஒரு ‘பணக்காரர்’ பொண்ணேத் தேடிப் போவோமா என்ன.எங்களே கிண்டல் பண்ணாதீங்க.நாங்க தான் உங்க ரெண்டு பேரையும் பாத்து கொஞ்சம் பொ¢ய மனசு பண்ணீ ‘எங்க மணீயே உங்க மாப்பிள்ளையாக்கிடுங்க’ன்னு கெஞ்சிக் கேக்கணும்.நம்ம ரெண்டு பேருடைய குடும்பமும் பிரிஞ்சுப் போகாம,இன்னும் மேலும் மேலும் வளந்து தழைச்சு வரணும்.அது தான் எங்க ரெண்டு பேர் ஆசை” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னார்கள்.

ரெண்டு பெற்றோர்களும் மணி மஞ்சுளா காதலை வாழ வைக்க ஆசைப் பட்டு ஒரு நல்ல முகூர்த்ததில் அவர்கள் கல்யாணத்தை விமா¢சையாக செய்து முடித்தார்கள்.
மஞ்சுளாவும் மணியும் ரொம்ப வருடங்கள் சந்தோஷமா வாழ்ந்து வந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *