தனிக்குடித்தனம் போய்விடுவது என்று முடிவெடுத்து விட்டேன்.
அதைக் கணவரிடம் சொன்னதும், முதலில் கடிந்து கொண்டார்.
”நாம தனியாப்போயிடறதுதாங்க நல்லது!”
தீர்க்மான என்னுடைய வார்த்தைக்குக் கணவர் கட்டுப்பட்டார்.
ஓரிரு நாட்களில் லாரியில் சாமான்களை ஏற்றியதும் மருமகளிட்ம் சொன்னேன்.
”நாங்க தனியாப் போயிடறோம் ஷர்மிளா! அப்பத்தான் உனக்குக் குடும்ப பொறுப்பு வரும். கரண்ட் பில் கட்டறது, ரேசன்ல போய் சர்க்கரை வாங்கறது, வீட்டை சுத்தமா வச்சுக்கறது,
குழந்தையை ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போறதுனு… பொறுப்பு வரும்.
கூட இருந்து எல்லாத்துக்கும் நாங்க உதவி செய்துட்டிருந்தா … உனக்குக் குடும்ப பொறுப்பு வராது! இனி நீ ஆச்சு… உன் குடும்பம் ஆச்சு! வந்துட்டு இருக்கிற பத்தாயிரம் ரூபாய் பென்ஷன் உனக்கும் உன் மாமவுக்கும் போதும். வரட்டுமா…?
மகனும் மருமகளும் அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள் புறப்பட்டு விட்டோம்.
– திருப்பூர் அலோ (5-8-09)