புரியாத விளையாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,520 
 
 

“பெங்களுர்ல இருந்து நேரா வந்துட்டீங்களா?”

“ஆமாங்க”

“நேரத்திலேயேவா?”

“வந்து ஒரு மணி நேரம் இருக்கும்”

“ம்ம்ம்”

“ரவி அண்ணனோட ஆபிஸ் எங்க இருக்கு?”

“ஈரோடு கலெக்டர் ஆபிஸ்க்குள்ளங்க”

“பி.டபிள்யூ.டியில்தானே இருக்காரு”

“ம்ம்…ட்ராஃப்ட்ஸ்மேன்”

“கோயமுத்தூர்ல இருந்து தினமும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் போய்ட்டு வந்துடுவார்ன்னு சொன்னாங்க”

“ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து பைக்ல வீட்டுக்கு வந்துடுவாரு”

“அவிநாசியில் இருந்தாங்களே”

“ஆமாங்க…கோயமுத்தூரில் புது வீடு வாங்கி பதினஞ்சு நாள் ஆச்சு”

“நான் இன்னும் புது வீட்டை பார்க்கலை…குழந்தைகளை ஸ்கூல்ல சேர்த்தியாச்சா?”

“பையன் ஒண்ணாவது பொண்ணு எல்.கே.ஜி”

“வீட்டுக்கு பக்கத்துலேயே இருக்கிற ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க”

“இருங்க மாமாகிட்ட பேசிட்டு வர்றேன்”

“எத்தனை மணிக்கு கிளம்புனீங்க”

“மாமா…பெங்களூர்ல கார் எடுக்கும் போது மணி மூணு”

“அப்பா போன் பண்ணியிருந்தாரா”

“ஆமாங்க மாமா”

“ம்ம்ம்ம்”
****
“பிரியா…எந்திரி ஊருக்கு கிளம்பலாம்”

“எதுக்குங்க”

“அப்பா ஃபோன் பண்ணினாங்க”

‘”என்னவாம்?”

“என்னால இப்போ சொல்ல முடியாது..எந்திரி ப்ளீஸ்”
****

“ஏம்ம்ப்பா ஃபோன்ல அழுகுறீங்க..என்னாச்சு”

“அதுவும் இந்த நேரத்துல”

“ரவி அண்ணனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு”

“அண்ணன் கூட ஏழரை மணிக்குத்தானே போன்ல பேசினேன்”

“….எப்படியாச்சு?”

“நைட் பத்தரை மணிக்கு ஃஆபிஸ்ல இருந்து வரும்போது லாரிக்காரன் அடிச்சுட்டு போய்ட்டானாம்”

“எப்படி இருக்காரு”

“போய்ட்டான்”

“கடவுளே”

“எங்க இருக்கீங்க?”

“கோயமுத்தூர் ஜி.ஹெச் வந்துட்டோம்”

“டாக்டர் வந்த பின்னாடி போஸ்ட்மார்ட்டம் செஞ்சுட்டுத்தான் தருவாங்க”

“நேரா இங்க வந்துடுங்க”

“ம்ம்ம்ம்ம்”

[இந்தக் கதையின் வடிவம் ஒரு பரிசோதனை முயற்சி. இறுதியிலிருந்து கதையை வாசித்தால் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது என நம்புகிறேன்]

– ஜூலை 4, 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *