கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 5,786 
 

‘நாளையுடன் 14 நாட்கள் முடியுது, நாங்கள் இங்கேயே வாடகை வாகனம் எடுத்து காலையில ஊருக்கு புறப்பிட்டு வாறம்’ மருமகன் தொலைபேசியில் சொன்னார்

முன்பெல்லாம் வெ்ளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வந்தால் ஊரில் இருந்து விமானநிலையதுக்கு வாகணம் எடுத்துச்சென்று கூட்டிக்கொண்டு வரும் காலம் இந்த கொறோனாவால் தொலைந்து விட்டது

”இதோ நாங்கள் வாகணத்தில் ஏறிவிட்டோம் ஊருநோக்கி வந்துகொண்டிருக்கிறோம்” இது மூத்தபேரனின் கைபேசிஅறிவிப்பு இனியென்ன இப்போ நாங்கள்…கண்டியை கடந்துவந்துவிட்டோம் ..ஹசலக்க…பதியதலாவ…உகன…இப்படி கடந்து செல்லும் ஊராக நேரஞ்சல் செய்துகொண்டே இருப்பான்

மருமகன்,மகள்,இரண்டுபேரன் இரண்டு பேத்திகள் கொண்ட ஒரு சிறிய குடும்பம் லண்டனில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்

மருமகன் கண்டி ஆஸ்பத்திரியில் வைத்தியராக கடமையாற்றிய போது மூத்தபேரனும், கல்முனையில் கடமையாற்றியபோது இரண்டாவது பேத்தியும் ஓமான் நாட்டில் கடமையற்றியபோது அடுத்த பேத்தியும் கடைசியாக பேரனும் குடும்ப அங்கத்தவர்களாக பெருகிக்கொண்டார்கள்,மூத்த பேரன் நன்றாக தமிழில் கதைப்பான் வயது பதின்மூண்று என்றாலும் பார்வையில் பதினாறா என்பார்கள் இரண்டாவது. பேத்தியுடன் பேசும்போது வசனங்களை மெதுவாக பேசுங்கள் விழங்கிதல்ல என்பாள் அடுத்தவள் நன்றாக தமிழ் கதைத்தவள்தான் அடிக்கடி ஆங்கிலத்தையும் கலந்திக்கிறாள் கடைசிப்பேரன் உம்மா வாப்பா உம்மம்மா என்றவன் ஹாய்.. என்று சொல்லிக்கொண்டு இப்போதுதான் நடை பயில்கிறான் ,ஊருக்கு வந்து கிட்டப்போனால் நோ..நோ என்று சொன்னாலும் சொல்லக்கூடும்

’இப்போது அம்பாரை பஸ்தரிப்பிடத்தில் நெல்லிக்காய் வாங்கிக்கொண்டிருக்கிறோம் நாந்தான் வாங்கசொன்னேன் பஸ்தரிப்பிடம் என்ன அழகாக இருக்கிறது இங்கேயே கொஞ்சநேரம் நிற்கலாம்போல இருக்கிறது’ பேரந்தான் தொலைபேசியின் மறுமுனையில்

அடிக்கடி உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் சுகர் மருந்துகளை ஒழுங்காகபாவியுங்கள் நெல்லிக்காய் நல்லமாமே அங்கு ஊரில் கிடைக்காட்டி அம்பாரையில் எடுக்கலாமாம் வாப்பாவை அனுப்பி வாங்கிவரச்சொலுன்கள் ’ மகள் உம்மாவிடம் தொலைபேசியில் சொல்வதை பேரன் கேட்டிருக்கக்கூடும்

இதோ வந்துவிட்டோம் பேரன் என்னிடமும் பேத்திகள் உம்மம்மாவிடமும் அண்டிக்கொண்டார்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் விமானநிலையத்தில் வைத்தே பேரன் ஓடிவடு ஒட்டிக்கொள்வான் அதே பொழுதில் அவனை தூக்கி முத்தம் கொடுப்பேன் என்னை அறியாமலே கண்கள் கலங்கிவிடும் ஏன் அழுகிறீர்கள் என்பான் தூசு பட்டு விட்டதாக பொய்சொல்வேன் ஆனந்தக்கண்ணீ என்றால் அவனுக்கு விழங்கவாபோகிறது

கடைசிப்பேரன் என்னை முறைத்து பார்த்துக்கொண்டு உம்மாவின் தோழில் முகம் புதைத்துக்கொள்கிறான்,

“அம்பாரை பஸ்நிலையம் என்ன அழகாக இருக்கிறது நம்மட ஊரில எப்படி அதைவிட அழகாக இருக்குமா”

முதல்ல சாப்பிடுங்க நாளைக்கே எமது ஊர்மார்கட்,மாநகரமண்டபம்,பஸ்நிலையம் எல்லாவற்றுக்கும் போய்காட்டுகிறேன் ஓகே

அடுத்த நாள்…. பஸ்நிலையம் வெறிச்சோடிக்கிடந்தது ஆங்காங்கு ஒரு சில பிரயானிகளும் பார்க்கின்ற இடமெல்லாம் கட்டாக்காலி மாடுகள் ஆர்பரித்துக்கொண்டு நின்றன

இது என்ன மாட்டுத்தொழுவமா என்று கேட்க ஆரம்பித்துவிட்டான்

இது என்ன ஒல்லாந்தர் கால கட்டடமாக இருக்கிறது மாநகரசபை கட்டிடத்தை பார்த்ததும் கேட்கத்துவங்கிவிட்டான்

இது என்ன குகை மாதிரி அங்கும் இங்கும் ஆக்கள் நடமாடுகிறார்கள் ஊரின் முகவெத்திலை என்று சொல்லும் மார்க்கட்டை பார்த்ததும் என்னை குழைந்தெடுக்க துவங்கிவிட்டான்

இங்கே மீன்,இறைச்சி,மரக்கறி எல்லாம் வாங்கலாம் உள்ளே போய் ஏதாவது வாங்குவோமே என்றதற்கு

சீ..ஜராவ அசிங்கம் வருத்தம் வரும் என்று உள்ளே போக மறுத்து விட்டான்

எமது ஊருக்கு அப்பால் உள்ள மார்க்கட்டை நோக்கி செல்லவேண்டியதாயிற்று

பஸ்நிலைய அபிவிருத்திக்காக வந்த பணம் வேறு ஊருக்கு கைமாறிப்போனது பற்றி ,நாம் ஒரு காலத்தில் இங்குதான் அரசாண்டோம் என்று வருகின்ற சந்ததிகளுக்கு காட்டுவதற்காக மாநகர சபை கட்டடத்தை உடைக்காமலும் அவ்வப்போது தேர்தல் வரும்போது புதிய கட்டிடத்துக்காக அடிக்கல் நடுவதும் பின்னர்மறந்து விடுவது பற்றி

அரை நூற்றாண்டுகாலமாக மாநகர சபைக்கு இரண்டு பூச்சிய வாடகையுடன் தமது சொந்தசொத்தாகவும் ஒரு சிலர் மகளின் திருமண சீதனமாகவும் கைமாறுவது பற்றி காவல் காக்கும் அரசனின் இயலாமைய் பற்றி அல்லது அரசனின் அசமந்தம் பற்றி பேரனுக்கு விழக்கமாக சொன்னால் புரியவாபோகிறது இன்னும் இரண்டு வருடன்கள் கழிந்து ஊருக்கு வரும்போது விழக்கமாக சொன்னால் ஒருவேளை புரியக்கூடும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *