அத்தியாயம்-1 | அத்தியாயம்-2
நளினிக்கும் அப்பா சொல்றது ரொம்ப சா¢ என்று பட்டது.
அவள் மனசும் அழுதுக் கொண்டு இருந்தது. அப்பாவிடம் “என் வாழ்க்கை இப்படி ஆயிடுத்தே. நான் பண்ணது ரொம்ப தப்புப்பா.முதல் தடவை எனக்கு ‘விஸா’ கிடைக்காத போதே,நான் ‘அவர் கிட் டே ‘போன்’லே பண்ணி மன்னிப்பு கேட்டு இருக்கணும்”என்று சொல்லி மனம் வருந்தினாள் நளினி.
கொஞ்ச நேரம் ஆனதும் கிருஷ்ணன “நீ மட்டும் தப்பு பண்ணலேம்மா.நீ அமொ¢க்காவிலே இருந்து எங்க கிட்டே பேசினப்ப,நானும் நம்ம உறவுக்காரரா எல்லாம் உனக்கு தப்பான ‘அட்வைஸை’ குடுத்தோம்.ஆனா அம்மா மட்டும் ‘நளினி TOFEL,GRE,ரெண்டிலேயும் நல்ல மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணிட்டு ஒரு நல்ல படிப்பு படிச்சுட்டு,ஒரு நல்ல வேலை கிடைச்சு,அப்புறமா அவ ஆத்துக்காரர் கிட்டே போய் சேந்து இருக்கணும்.அது வரை நளினி ஆத்துக்காரர் வேறே யாரையும் கல்யாணம் பண்ணிக்கம இருக்கணும்.எனக்கு என்ன்வோ நளினி அமொ¢க்காவை விட்டுட்டு சென்னைக்கு வந் தது ரொம்ப தப்புன்னு படறது’ன்னு சொல்லி ரொம்ப வேதனைப் பட்டா.என் கிட்டே சொல்லிண்டா. ஆனா நான் அவ கிட்டே அப்படி எல்லாம் ஆகாது ராதா.நீ வீணா கவலைப் பட்டுண்டு வறே.எல்லாம் சா¢யாப் போகும்ன்னு சொன்னேன்.ஆனா ஒன்னும் சா¢யாப் போகலையேம்மா” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
கடன் தொல்லை,வீட்டு செலவு,எல்லாம் ஒன்றாய் சேர்ந்து கிருஷ்ணனை பணக் கஷ்டத்தில் அழுத்தியது.இருவரும் வீட்டு செலவை சமாளீக்க மிகவும் சிரமப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.நளினி அப்பாவிடம் “அப்பா,வீட்டு செலவை சமாளிச்சு வறது ரொம்ப சிரமமா இருக்கு.அதனால்லே நான் ஒரு வேலைக்குப் போய் சம்பாதிச்சுண்டு வரலாம்ன்னு இருக்கேன்” என்று சொன்னாள்.
வேலையில் சேர முனைந்த நளினி தினமும் வரும் தினசா¢ப் பத்திரிக்கைகளை எல்லாம் பார்த் து ஒரு நல்ல வேலைக்கு ‘அப்ளை’ பண்ணிக் கொண்டு இருந்தாள்.அவளுக்கு எங்கேயும் அவளுக்கு பிடித்த வேலை கிடைக்க வில்லை.
இதே கவலையில் ஒரு நாள் கிருஷ்ணன் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார்.
உடனே நளினி அப்பாவை அருகில் இருந்த ‘ஹாஸ்பிடலில்’ சேர்த்தாள்.கிருஷ்ணனை நன்றா க ப் பா¢சோதித்த டாக்டரகள் நளினியிடம்” உங்க அப்பாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கு. அவரை உடனே ‘ஹாஸ்பிடலில் அட்மிட்’ பண்ணணும்” என்று சொல்லவே நளினி வேறே வழி இல்லா மல் அப்பாவை ‘ஹாஸ்பிடலில் அட்மிட்’ பண்ணினாள்.ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் கிருஷ்ணன் படுத்த படுக்கையானார்.
அவருக்கு துக்கம் வறாததால் டாக்டர் அவருக்கு துக்கம் வர தூக்க மாத்திரை எழுதிக் கொடுத் தார்.நளினி ‘ஹார்ட்’ மாத்திரைகளுடன்,துக்க மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு வந்து அப்பாவு க்குக் கொடுத்து வந்தாள்.கிருஷ்ணனும் ‘ஹார்ட்’ மாத்திரைகளுடன்,தூக்க மாத்திரைகளையும் போட்டு வந்துக் கொண்டு இருந்தார்.அவர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டாதால் ரெண்டு மணி நேரம் தூங்கினார்.
ஒரு நாள் படுக்கையில் கிருஷ்ணன் நளினியைப் பார்த்து “அம்மா நளினி,நான் இன்னும் ரொம் ப நாள் உயிரோடு இருப்பேன்னு எனக்குப் படலே.ஏற்கெனவே அம்மா நம்மே விட்டுப் போயிட்டா. நானும் போயிட்டா,நீ ஒரு தனி மரம் ஆயிடுவியேம்மா.நாம எல்லாம் கட்டின மனக் கோட்டை என்ன. அந்த பகவான் நமக்கு ஒன்னையும் குடுக்கலையேம்மா” என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதார்.
உடனே நளினி “இல்லேப்பா,உங்களுக்கு சீக்கிரமா உடம்பு தேவலை ஆயி,ஆத்துக்கு வந்து, நீங்கோ என்னோட ரொம்ப வருஷம் இருந்து வருவீங்கோப்பா.அழதீங்கோப்பா.எனக்கு ரொம்ப கஷ்ட மா இருக்கு.நீங்கோ என்னோட ரொம்ப வருஷம் இருக்கணும்ப்பா”என்று சொல்லி அப்பாவைத் தேத்த றவு பண்ணீனாள்.
நளினி ஆசைப் பட்டதற்கு நேர் எதிராக அந்த கடவுள் செய்து விட்டார்.
ரெண்டு நாளைக்கு எல்லாம் தூக்கத்திலேயே கிருஷ்ணன தன் கண்ணை மூடி விட்டார்.
“அப்பா இப்படி திடீர்ன்னு நம்மை விட்டுப் போயிடுவார்ன்னு நான் கனவிலும் நினைக்கலையே. அவர் உடம்பு நன்னா ஆயி,ஆத்துக்கு வந்துடுவார்ன்னு தானே நான் நினைச்சுண்டு இருந்தேனே. இப்போ அவர் என்னை விட்டுட்டுப் போயிட்டாரே.அவர் சொன்னா மாதிரி நான் இப்போ ஒரு தனி மரம் ஆயிட்டேனே” என்று சொல்லி கதறி அழுதாள் நளினி.
‘ஹாஸ்பிடலில்’ இருந்து அப்பாவின் ‘பாடியை’ வீட்டு கொண்டு வந்து,அவருக்கு எல்லா ‘ஈமக் காரயங்களையும்’ பன்ணீனாள் நளினி.
கிருஷ்ணன் சொன்னது போலவே நளினி இப்போது ஒரு தனி மரம் ஆனாள்.
‘நாம பிடிவாதம் பிடிச்சப்ப அவர் என்னைப் பாத்து ‘நீ கல்யாணம் ஆனவ.நீ சென்னைக்கு போ யிட்டா திரும்ப அமொ¢க்கா வருவது ரொம்ப கஷ்டமா இருக்கும்.நீ அவசரப் படாம நன்னா யோஜனை னைப் பண்ணு.நீ இங்கே இருக்கிறது தான் நல்லது’ன்னு சொன்னாரே.நாம அவர் சொல்றதே கேக்காம பிடிவாதம் பிடிச்சு சென்னைக்கு வந்தோமே.இன்னேக்கு நம்ப நிலமை இப்படி ஆயிடுத்தே’ என்று கோபால் சொன்னதை நினைத்து கதறி அழுதாள் நளினி.
எங்கேயும் தன் படிப்புக்கு தகுந்தார் ஒரு நல்ல வேளைக் கிடைக்காததால் நளினி மனம் உடை ந்துப் போனாள்.சில சமயம் நளினி தன் வாழக்கையை மாய்த்துக் கொள்ளனும் என்று கூட எண்ணி வந்தாள்.
வீட்டில் செலவுக்கு பணம் இல்லாததால் நளீனி,கடைசியில் மனம் பிடிக்காமல் ஒரு பள்ளி கூட த்தில் இரண்டம் வகுப்பு வாத்தியார் வேலையில் சேர்ந்தாள்.நளினி அந்த பள்ளிக்கூட வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.
‘அமொ¢க்காவில் பொ¢ய கம்பனியில் வேலைக்கு சேர ஆசைப் பட்ட தனக்கு’ கடைசியில் இந்த இரண்டாம் வகுப்பு வாத்தியார் வேலை கிடைத்ததை எண்ணி மிகவும் மனம் வருந்தினாள் நளினி. மனதுக்கு பிடிக்காமல் அந்த ரெண்டாம் வகுப்பு வாத்தியார் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இரு ந்தாள் அவள்.யாரும் இல்லாத நமக்கு வாழக்கையிலே ஒரு உண்மையான ‘ப்ரெண்ட்’ இருக்க வேண் டும் என்று நினைத்து,நளினி அந்த பள்ளீ கூடத்திலேயே வேலை செய்து வந்த மூன்றாம் வகுப்பு வாத்தியார் கமலாவிடம் நெருக்கமாக பழகினாள் நளினி.கமலா திருமணம் ஆனவள்.
ஆறு மாசம் கமலாவிடம் பழகி வந்தாள் நளினி.கமலா ஒளிவு மறைவு இல்லாமல் தன் வாழ்க் கையைப் பற்றி நளினி இடம் எல்லா சமாசாரங்களை சொன்னத்தைக் கேட்ட நளினியும்,தன் வாழ்க் கையில் நடந்த எல்லா ‘உண்மைகளை’யும் அவளிடத்தில் பகிர்ந்துக் கொண்டாள் நளினி.
உடனே கமலா “போனது போகட்டும் நளினி டீச்சர்.இனிமே உங்க எதிர் காலத்தை நினைச்சி ண்டு நீங்கோ வாழ்ந்துண்டு வற பழகணும்.மெல்ல மெல்ல பழசே எல்லாம் நீங்கோ மறக்க ‘ட்ரை’ பண்ணனும்.நீங்கோ என் கிட்டே சகஜமா வழகி வாங்கோ.நானும் உங்க கிட்டே சகஜமா பழகிண்டு வறேன்.நீங்கோ அவசரப் பட்டு எந்த தப்பான முடிவுக்கும் போகக் கூடாது நளினி டீச்சர்” என்று சொ ல்லி நளினிக்கு ¨தா¢யம் சொல்லி வந்தாள்.கமலா கொடுத்த ¨தா¢யம் நளினியை கேட்டு நிம்மதி அடைந்தாள்.
இவர்கள் நெருக்கம் நாளடைவில் ‘உயிர் தோழிகள்’ நிலைக்கு வளர்ந்து விட்டது.நளினி தன் ‘செல் போனி’ல் கமலா டீச்சா¢ன் போட்டோவையும்,கமலா தன் ‘செல் போனில்’ நளினி டீச்சா¢ன் போட்டோவையும் போட்டுக் கொண்டார்கள்.
ஒரு வாரம் ஆகி இருக்கும்.அன்று வெள்ளிக் கிழமை.மதியம் நேரம்.
கமலா டீச்சர் நளினியிடம் வந்து ஒரு கல்யாணப் பத்திரிக்கையை நீட்டி ”நளினி டீச்சர்,அடுத்த வாரம் வியாழக்கிழமை என் தங்கைக்கு கல்யாணம்.நீங்கோ நிச்சியமா வரணும் என்ன.நான் கல்யாண மேடையிலே உங்களுக்காக காத்துண்டு இருப்பேன்.அன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுட்டு,நீங் கோ காத்தாலேயே வந்துடுங்கோ.ரெண்டு பேரும் காத்தாலே ஒன்னா ‘டிபன்’ சாப்பிடறதலே இருந்து, ராத்திரி டின்னர் வரைக்கும் ஒன்னா இருந்துண்டு வரணும் என்ன” என்று சொல்லி விட்டு,தங்கையின் கல்யாண பத்திரிக்கையை நளினி கையிலே கொடுத்து விட்டு,அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.
”நான் ஒரு நாள் லீவுப் போட்டுட்டு,நிச்சியமா உங்க தங்கைக் கல்யாணத்துக்கு, நீங்கோ சொன் னா மாதிரியே காத்தாலேயே வந்துடறேன் கமலா டீச்சர்” என்று சொல்லி விட்டு பத்திரிக்கையை வாங் கிக் கொண்டாள் நளினி.
கொஞ்ச நேரம் ஆனதும் கமலா டீச்சர் “நான் அடுத்த வாரம் பூரா லீவ்லே இருப்பேன்.நான் உங்க கிட்டே முன்னமே சொல்லி இருந்தேனே.என் தங்கை அமொ¢க்காப் போய் படிச்சுட்டு ஒரு நல்ல வேலைலே இருக்கான்னு.அவ இத்தனை வருஷமா கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிண்டு இருந் தா.என் அம்மா,அப்பா,நான், என் தம்பி,தம்பி பொண்டாட்டி எல்லாரும் அவளே ‘நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ’,’கல்யாணம் பண்ணீக்கோ’ன்னு சொல்லி வாய் வலிச்சுப் போயிடுத்து.அவ கேக்கலே. ஆனா அவ இப்போ அவ கூட வேலே பண்ற ஒரு பையனை காதலிச்சு வந்துண்டு இருக்கா.ரெண்டு பேரும் கல்யாணமும் பண்ணிக்க முடிவு பண்ணீ இருக்காளாம்.நம்ம மாதிரி ஒரு ‘அரெஞ்ச்ட் மாரேஜ்’ இல்லே,இந்த மாரேஜ்.இது ஒரு ‘லவ் மாரேஜ்’ நளினி டீச்சர்” என்று கண்ணைச் சிமிட்டி சொல்லி விட்டுப் போனாள்.
கமலா கொடுத்து விட்டுப் போன கல்யாணப் பத்திரிக்கையை கையில் வைத்துக் கொண்டு நளினி ‘டீச்ச்ர்ஸ் ரூமுக்கு’ வந்து தன் சீட்டில் உட்கார்ந்தாள்.கமலா டீச்சர் ‘இது நம்ம மாதிரி ஒரு ‘அரெஞ்ச்ட் மாரேஜ்’ இல்லே நளினி டீச்சர்.இது ஒரு ‘லவ் மாரேஜ்’”என்று சொன்னதை நினைத்து ஆச்சா¢யப் பட்டாள் நளினி.
நளினி மணியைப் பார்த்தாள்.அவ வகுப்புக்குப் போக இன்னும் பத்து நிமிஷம் பாக்கி இருந்தது நளினி பத்திரிக்கையைப் பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.முதலில் மாப்பிள்ளையின் பேரைப் படித்தாள்.சிரஞ்சிவி GOPAL M.S.Group Manager, Bank of America, New York, U.S.A. என்று போட்டு இருந்தது.ஒரு நிமிஷம் அவளால் தான் என்ன படிச்சோம் என்று எண்ணிப் பார்க்கவே பிடிக்கலே.
அவளுக்கு பூமியே பிளந்து தான் அதள பாதாளத்தில் விழுவது போல் இருந்தது.மெல்ல தன் னை சுதாரித்துக் கொண்டு பத்திரிக்கையை மீண்டும் படித்தாள்.
‘அதே பேர் தான்.Bank of America தான்.New York தான்.நான் அவரை விட்டுட்டு வந்தப்ப அவர் Manager ஆகத் தானே இருந்தார்.இப்போ ஏழு வருஷம் முடியப் போவுதே.அவருக்கு Group manager ஆக ‘பிரமோஷன்’ ஆகி இருக்கும் போல் இருக்கு.யார் தன்னை விட்டுட்டுப் போன மணை விக்காக ஏழு வருஷம் வரைக்கும் கல்யாணம் பண்ணிக்காம காத்துண்டு இருப்பா.இத்தனை வருஷம் பொறுத்துப் பார்த்த ‘அவர்’ இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கம இருப்பாரா என்ன. அவரை காதலிச்சா அந்தப் பொண்ணு.அவரும் அந்தப் பொண்ணே காதலிச்சு இருப்பார்.இப்போ அவா ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறா.அவர் தனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சு க்க வேணாமா.அவர் அமைச்சுண்டுட்டார்’ என்று நினைக்கும் போது நளினிக்கு அழுகைப் பொத்துக் கொண்டு வந்தது.
‘எப்படி அந்த கல்யாணப் படிலே போய் நான் கோபாலை சந்திக்கறது.அந்த கல்யாண மேடை என் உயிர் தோழி கமலா ‘டீச்சா¢ன்’ தங்கையின் கல்யாண மேடை ஆச்சே.அந்த மேடைக்குப் போயா நான் அவர் கிட்டே ‘நீங்கோ அவளுக்குத் தாலி கட்டிடாதேள்.நான் இருக்கேன்னு எப்படி சொல்றது. அப்படி சொன்னா உடனே அவர் கமலா டீச்சா¢ன் தங்கையை விட்டுட்டு,மேடையை விட்டு கீழே இற ங்கி வந்து, என்னை அமொ¢க்காவுக்கு அழைச்சுண்டு போயிடப் போறாரா என்ன.நாம அப்பா கிட்டே முன்னே ஒரு தடவை சொன்னாப் போல,முதல் தடவை நமக்கு ‘விஸா’ கிடைக்காத போதே,அவர் கிட்டே ‘போன்’லே பேசி மன்னிப்புக் கேட்டு இருக்கணும்.தப்புப் பண்ணிட்டேம்’ என்று நினைக்கும் போது நளினியின் அழுகை இன்னும் அதிகம் ஆகியது.
‘க்ளாஸ்’ மணி அடித்தது.தன் மனதை கல்லாக்கிக் கொண்டு தன் ‘க்ளாஸ்‘ க்குப் போனாள் நளினி.’க்ளாஸ்’ முடிஞ்சதும் வழி ஒன்றும் தெரியாமல் யோஜனைப் பண்ணிக் கொண்டே கொண்டே கமலா டீச்சர் ‘க்லாஸ்’க்கு ஓடினாள் நளினி.கமலா ‘க்லாஸ்’ நுழைவாயிலுக்குப் போன நளினிக்கு, அங்கு இருந்த’ டீச்சா¢ன் சீ£ட்’ காலியாக இருந்ததைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள்.
அவளுக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை.
வாசலில் நின்றுக் கொண்டிருந்த நளினி டீச்சரைப் பார்த்த அந்த ‘க்லாஸ்’ பெண் ஒருத்தி ஓடி வந்து “டீச்சர்,இன்னைக்கு மத்தியானம் எங்க ‘டீச்சர் லீவு’.அவங்க அடுத்த வாரமும் லீவ்லே இருப்பா ங்க.அவங்க தங்கைக்கு கல்யாணமாம்” என்று சொன்ன போது தன் நினைவுக்கே வந்தாள் நளினி.
தன் சீட்டுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டாள் நளினி.அவள் யோஜனைப் பண்ண ஆரம்பித் தாள்.’நாம கமலா டீச்சர் கிட்டே உங்க தங்கைக் கல்யாணத்துக்கு நான் நிச்சியமா கல்யாண அன்னை க்கு காத்தாலேயே வறோம்ன்னு சொல்லி இருக்கோமே.இப்ப கமலா ‘டீச்சா¢ன்’ தங்கையை கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் ஊரறிய நான் கல்யாணம் பண்ணிக் கொண்ட கோபால் ஆச்சே.என்ன பண்ணலாம்.நாம என்ன காரணம் சொல்லி நாம அந்தக் கல்யாணத்துக்கு போகாம இருக்கறது’ என்று எண்ணி வேதனைப் பட்டாள் நளினி.
பள்ளிக் கூட கடைசி மணி அடிக்கவே,நளினி தன் ‘சீட்டில்’ இருந்து மெல்ல எழுத்து, தன் ‘ஹாண்ட் பாக்கை’ எடுத்துக் கொண்டு ‘டீச்சர்ஸ்’ ரூமை விட்டு,வெளியே வந்து ஒரு வழியும் தெரியாமல் தன் வீட்டுக்கு வந்தாள்.
அந்த நிமிஷம் வரைக்கும் கோபாலை மறந்து வந்துக் கொண்டு இருந்த நளினிக்கு,மறுபடியும் கோபாலை பற்றின செய்தி கிடைத்ததும்,அவள் சலனம் அடைந்தாள்.வீடு வந்து சேருவதற்குள் நளி னிக்கு யோஜனையின் தாக்கம் அதிகம் ஆகி அவளுக்கு மன அழுத்தம் அதிகம் ஆகியது.‘ஹாண்ட் பாக்கை வீசி’ ஏறிந்து விட்டு,’ஹாலில்’ இருந்த ‘பேனை புல் ஸ்பீடில்’ வைத்து விட்டு ‘தொப்’ என்று உட்கார்ந்தாள்.
வழக்கமாக வீட்டுக்கு வந்தால் நளினி உடனே சூடாக ‘காபி’ப் போட்டு கையிலே எடுத்துக் கொண்டு,‘பிஸ்கெட்’ டப்பாவை எடுத்து தன் பக்கத்தில் வைத்துக் கொ ண்டு,‘பிஸ்கெட்டை’ ரசித்து சாப்பிட்டுக் கொண்டே ‘காபி’யைக் குடிப்பாள்.ஆனால் இன்று நளினி ‘கிச்சனு’க்குப் போய் ‘காபி’ யையும் போட்டுக் கொள்ளவில்லை,’பிஸ்கெட்டை’டப்பாவையும் தொடவில்லை.அப்படியே உட்கார்ந் துக் கொண்டு இருந்தாள்.
மனி ஒன்பது அடித்தது.’நாம இந்த ஆத்லே இருந்துண்டு கமலா டீச்சர் தங்கை கல்யாணத் துக்குப் போகாம இருந்தா காத்தாலே கமலா டீச்சர்,இங்கே வந்துப் பாத்தா,நாம இருப்போமே நம்மை வலுக் கட்டாயமா,அவ தங்கை கல்யாணத்துக்கு அழைச்சுண்டு போவாளே.நாம மறுக்க முடியாதே. அப்படி கமலா டீச்சர் கூடப் நாமப் போனா அந்த கல்யாண மேடையிலே,கோபாலை பாக்க வேண்டி இருக்குமே.ரெண்டு பேருக்கும் ரொம்ப தர்ம சங்கடமா இருக்குமே.என்ன பண்ணலாம்’ என்று யோஜ னைப் பண்ணினாள்.
திடீர் என்று நளினிக்கு ‘இனி நாம உயிர் வாழறதிலே ஒரு அர்த்தமும் இல்லே.பழையபடி நாம தற்கொலை பண்ணிக் கொள்ளலாம்’ போல இருந்தது நளினிக்கு.உடனே அவள் தன்னுடைய அப்பா வுக்கு வாங்கி வைத்து இருந்த தூக்க மாத்திரைகள் இருந்த பாட்டிலை எடுத்து தன் ‘ஹாண்ட் பாக்கில் வைத்துக் கொண்டாள்.
‘தனக்கு இருக்கும் மனக் குழப்பத்தில் படுத்தால் தூக்கம் வருமோ வராதோ என்று நினைத்து, நளினி நாலு தூக்க மாத்திரைகளைப் கையிலே எடுத்துக் கொண்டு,‘ப்ரிட்ஜில்’இருந்த ‘ஐஸ் வாட்டர் பாட்டிலில்’ இருந்து நிறைய தண்ணீரைக் குடித்தாள்.ஒன்றும் சாப்பிடாமல் நளினி படுக்கையில் படுத்துக் கொண்டது தான் அவளுக்குத் தெரியும்.தூக்க மாத்திரைப் போட்டுக் கொள்ளவே படுத்தவு டன் அசந்து தூங்கி விட்டாள் நளினி.
விடியற்காலை அவள் கண் முழித்துப் பார்த்த போது அவள் உடம்பு அனலாய் கொதித்தது. அவளால் எழுந்திருக்கக் கூட முடியவில்லை.மெல்ல எழுந்து பல் துலக்கி ‘டீ’ போட்டு குடித்தாள் நளி னி. அவளால் நிற்கக் கூட முடியவில்லை.மறுபடியும் நளினி பெட்டில் படுத்துக் கொண்டாள்.மதியம் எழுந்து சமைத்து சாப்பிட்டாள்.அவளுக்கு சாப்பாடே பிடிக்கவில்லை.அவள் வாய் கசந்துக் கொண்டு இருந்தது.
திங்கட் கிழமை நளினி பள்ளிக் கூடம் போக வில்லை.வீட்டிலேயே இருந்து வந்தாள்.ரெண்டு நாள் ஆகியும் நளினியின் ஜுரம் குறையவே இல்லை.
‘இனிமேல் இந்த ஜுரத்துடன் வீட்டில் இருக்கக் கூடாது’ என்று நினைத்து நளினி மெல்ல நடந் து,தன் ‘ஹாண்ட் பாக்கையும்’ எடுத்துக் கொண்டு.வீட்டை விட்டு வெளியே வந்து,வீட்டைப் பூட்டிக் கொண்டு பக்கத்து வீட்டிலிருந்த அம்மாவைக் கூப்பிட்டு “எனக்கு ரொம்ப ஜுரமா இருக்குங்க.நான் ‘நர்மதா நர்ஸிங்க் ஹோமு’க்குப் போறேங்க.யாராவது வந்து கேட்ட கொஞ்சம் சொல்லுங்க” என்று சொ ல்லி விட்டு,ஒரு ஆட்டோவை பிடித்து பக்கத்தில் இருந்த ‘நர்மதா நர்ஸிங்க் ஹோமில்’ போய் டாக்டா¢ டம் காட்டினாள்.
நளினியை பா¢சோதித்த டாக்டர் அவளுக்கு 105 டிகி¡£ ஜுரம் இருப்பதாயும்,உடனே ‘ஹாஸ்பி டலில் ‘அட்மிட்’ ஆகும் படியும் சொன்னார்.உடனே நளினியும் அந்த ‘ஹாஸ்பிடலில்’ ‘அட்மிட்’ ஆனாள் டாக்டர் நளினிக்கு ஜுரத்துக்கு ஊசிப் போட்டு விட்டு சில மாத்திரைகளையும் கொடுத்தார்.
மூன்று நாட்கள் ஆகி நளினி பள்ளிக்குடம் வராததால்,நளினியுடன் வேலை செய்து வந்த மேரி ‘டீச்சர்’,நளினி வீட்டுக்கு வந்து பார்த்தாள்.வீடு பூட்டி இருந்தது.மேரி டீச்சர் பக்கத்து வீட்டுக்கார அம்மாவிடம் நளினியை பற்றி கேட்டதும் அந்த அம்மா “அவங்களுக்கு ரொம்ப ஜுரம் வந்திடிச்சாம். அவங்க ‘நர்மதா நர்ஸிங்க் ஹோமு’க்கு போறதா சொன்னாங்க” என்று சொன்னதும் மேரி ‘டீச்சர்’ நர்ம தா ‘நர்சிங்க் ஹோமு’க்கு வந்து நளினியைப் பார்த்தாள்.
மேரி ‘டீச்சரை’ பார்த்ததும் நளினி முடியாம “எனக்கு105 டிகிரி ஜுரம் அடிக்குது மேரி ‘டீச்சர்’. டாகடர் எனக்கு ஜுரத்துக்கு ஊசியேப் போட்டு மாத்திரையையும் குடுத்து இருக்கார்” என்று சொன் னதும்,மேரி டீச்சர் “நளினி டீச்சர்,உங்க ஜுரம் நல்லா தேவலை ஆன பிற்பாடு,ரெண்டு நாள் நல்லா ‘ரெஸ்ட்’ எடுத்துக் கிட்டு,நீங்க அப்புறமா பள்ளிகூடத்துக்கு வாங்க.நான் ‘ஹெட்’ மாஸ்டர் கிட்டே உங்க ஜுரத்தைப் பத்தி சொல்றேன்” என்று சொன்னதும் நளினி மேரி ‘டீச்சரை’ தாங்க் பண்ணீனாள். மேரி ‘டீச்சர்’ கொஞ்ச நேரம் இருந்து விட்டுக் கிளம்பிப் போனாள்.
‘மேரி டீச்சர்’ இந்த ‘நர்ஸ¤ங்க் ஹோமுக்கு வந்து’ பாத்துட்டுப் போய் இருக்காளே.கமலா டீச்சர் அவளேப் பாத்து ’நளினி ‘டீச்சர்’ ஏன் கல்யணத்துக்கு வறலேன்னு,மேரி ‘டீச்சர்’ நம்மைப் பத்தி சொல் லிடுவாளே.அப்போ கமலா ‘டீச்சர்’,கல்யாணம் ஆனவுடனே,அவ தங்கையையும், தங்கை ஆத்துக்கார ரையும் இங்கே அழைச்சுண்டு வந்துட்டா…..’அத்ற்கு மேலே நளினியால் யோஜனை பண்ணீப் பார்க்க முடியவில்லை.தன் ‘ஹாண்ட் பாக்கை’த் திறந்து பத்து தூக்க மாத்திரைகளை வாயில் போட்டுக் கொ ண்டு தண்ணீர் குடித்தாள்.
அன்று வியாழக் கிழமை.நளினி ஜுர வேகத்தில் விடாமல் வாந்தி எடுத்தாள்.அவள் வாந்தியில் தூக்க மாத்திரை துண்டுகளைக் கவனித்த ‘நர்ஸ்’ ஓடிப் போய் டாக்டா¢டம் விஷயத்தை சொன்னாள். இருவரும் நளினி ரூமுக்கு வந்தார்கள்.நளினி தன் கண்களைத் திறக்காமல் படுத்து இருந்தாள். நளினி வாந்தி எடுத்ததில் இருந்த தூக்க மாத்திரைத் துண்டுகளைக் டாக்டருக்குக் காட்டினாள் நர்ஸ்.
நளினி ஜுர வேகத்தில் “கோபால் நான் தப்பு பண்ணிட்டேன்.நான் தப்பு பண்ணிட்டேன்.உங்க பேச்சை நான் கேக்காதது ரொம்ப தப்பு.என்னை கை விட்டு விடாதீங்க.கோபால்”என்று வாய் பினாத் திக் கொண்டு இருந்தாள்.டாக்டர் நளினி வாய் பினாத்துவதைக் கேட்டதும் அந்த நர்ஸிடம் “சிஸ்டர், இது ஒரு காதல் தோல்வி ‘கேஸ்’ போல இருக்கு.இவங்க தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்காங்கபோல இருக்கு.இவங்க ‘ஹாண்ட் பாக்கை’’ செக் அப்’ பண்ணுங்க”என்று சொன்னார்.
அந்த ‘நர்ஸ்’ நளினியின் ஹாண்ட் பாக்கை’ ‘செக் அப்’ பண்ணி விட்டு,அதிலே இருந்த தூக்க மாத்திரை பாட்டிலைக் காட்டினாள்.டாக்டர் அந்த தூக்க மாத்திரை பாட்டிலை தன் கையிலே வாங்கிக் கொண்டு தன் ரூமுக்கு போனார்.
கல்யாண மேடையில் மாப்பிள்ளையுடன் அமொ¢க்காவில் இருந்து வந்த அவன் தோழன் எல் லோரையும் கலாட்டா பண்ணிக் கொண்டு இருந்தான்.தங்கையின் பக்கத்தில் நின்றுக் கொண்டு பதி லுக்கு கமலா பெண் வீட்டு சார்பாக பதில் கலாட்டா பண்ணிக் கொண்டு இருந்தாள்.ஒரே சிரிப்பு தான்,கலாட்டா தான்,கல்யாண மேடையில்.முகூர்த்த வேளை நெருங்கிக் கொண்டு இருந்தது.’செல் போன்’ அடிக்கவே கமலா தன் ‘செல் போனை’ ‘ஆன்’ பண்ணினாள்.
கமலா செல் போனில் பளிச்சென்று நளினியின் படம் தெரிந்தது.பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த கல்யாணப் பையன் தோழன் இதைக் கவனித்தான் உடனே அவன் சட்டென்று “இந்தப் பொண்ணே உங்களுக்கு தெரியுமா.நான் இந்தப் பொண்ணே உடனே பார்க்கணுமே”என்று சொன்னதும் கமலா ”இவ என் கூடத் தான் ஒரு டீச்சரா வேலை பண்றா.உங்களுக்கு இவளைத் தெரியுமா” என்று கேட்டாள்.”எனக்கு இவளை ரொம்ப நன்னாத் தெரியும்.இப்ப இவ எங்கே இருக்கா” என்று ஆவலுடன் கேட்டான் அந்த கல்யாணப் பையனின் தோழன்.
உடனே கமலா ”கொஞ்சம் இருங்க.இவோ இப்போ கல்யாணத்துக்கு நிச்சியமா வருவா” என்று சொல்லி விட்டு ‘செல் போனில்’ பேச வேண்டாம் என்று நினைத்து மேடையை விட்டு கீழே இறங்கிப் போனாள்.மாப்பிள்ளை தோழனும் கமலா கூடவே போனான்.’போனில்’ பேசி முடித்ததும்,கமலா அங் கே உட்கார்ந்து கொண்டிருந்த மேரி ‘டீச்சரை’ப் பார்த்து “மேரி ‘டீச்சர்’,ஏன் இன்னும் நளினி ‘டீச்சர்’ கல்யாணத்துக்கு வரலை,உங்களுக்குத் தெரியுமா” என்று கேட்டாள்.
மேரி ‘டீச்சர்’”உங்களுக்கு விஷயமே தெரியாதா கமலா டீச்சர்.நளினி டீச்சருக்கு காய்ச்சல் வந்து இருக்கு.அவங்க ‘நர்மதா நர்ஸிங்க் ஹோமில் ‘அட்மிட்’ ஆகி இருக்காங்க.நான் ரெண்டு நாள் முன் னாடி நளினி ‘டீச்சரை’ப் பாத்து பேசிட்டு வந்தேன்”என்று சொன்னதும் கமலா பதறிப் போனாள்.
வாத்தியார் வேத மந்திரம் சொல்லி கமலாவின் தங்கையின் குழுத்தில் தாலி கட்டினான் கல் யாண மாப்பிள்ளை.கல்யாணம் முடிந்ததும் கமலா பூ அட்சதையைப் போட்டு விட்டு,அங்கே ஒருந்த வாடகைக் காரில் ஏறப் போனாள்.உடனே அந்த கல்யாண பையனின் தோழன் “நானும் அவளை அவசியமா பாக்கணும்.என்னையும் தயவு செஞ்சி உங்க கூட அழைச்சுண்டு போங்க ப்ளீஸ்”என்று பிடிவாதம் பிடித்தான். ‘இவன் மாப்பிள்ளை தோழன் ஆச்சே.இவனை அழைச்சுண்டு போகாட்டா, இவன் நம்ம தங்கை ஆத்துக்காரர் கிட்டே நம்ம கிட்டே நம்மைப் பத்தி ‘கம்ப்லெயிண்’ பண்ணா என்ன பதில் சொல்றது’ என்று ஒரு நிமிஷம் புரியாமல் தவித்தாள் கமலா.வேறு வழி ஒன்றும் தெரியாததால் கமலா அவனையும் காரில் அழைத்து கொண்டு ‘நர்மதா நர்ஸிங்க் ஹோமிற்கு பறந்தாள்.
’ரிஷப்ஷனில்’ விசாரித்துக் கொண்டு நளினி படுத்து இருந்த ரூமிற்கு ஓடினார்கள் இருவரும் .ரூமின் வாசலில் டாக்டர் நின்றுக் கொண்டு,டியூட்டி ‘நர்ஸ¤’டன் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்.
”டாக்டர்,நான் நளினி ‘டீச்சரு’டன் வேலை பண்ற ‘டீச்சர்’.இப்போ நளினி எப்படி இருக்காங்க” என்று கவலையோடு கேட்டாள் கமலா.டாக்டர் நிதானமாக கமலாவையும் மாப்பிள்ளை தோழனையும் பார்த்தார்.மாப்பிள்ளைத் தோழனைப் பார்த்து “நீங்க யாருங்க” என்று கேட்டார்.அதற்கு அவன் “ ‘மை நேம் இஸ் கோபால்’…”என்று சொல்லி முடிக்கும் முன் “நீங்க தான் அந்த கோபாலா.என் ரூமுக்கு வாங்க” என்று சொல்லி அவர்களை தன் ரூமுக்கு அழைத்து போனார் டாக்டர்.
கமலாவுக்கு ஒன்றும் புரியவில்லை.எப்படி ‘இவர் பேரை சொன்னதும் ‘வாங்க என் ரூமுக்கு’ன் னு சொல்லி டாகடர் அழைச்சுண்டு போறாரே.இவர் அமொ¢க்காலே வசிப்பாவராச்சே.இவருக்கும் நளி னிக்கும் என்ன சமமந்தம்.இந்த கதை வேறே இருக்கா நளினி வாழ்கையிலே’ என்று எண்ணிய வாறே ஒன்னும் புரியாமல் டாக்டரை பின் தொடர்ந்தாள் கமலா.
“உக்காருங்க உங்களைப் பார்த்தா படிச்சவர் மாதிரி தெரியுது.‘லவ்வர்ஸ்’ கிட்ட கருத்து வேறு பாடு இருந்து வருவது சகஜம்.ஆனா உங்க கருத்து வேறுபாடு இப்படியா முடியறது.இந்தப் பெண் தற் கொலை பண்ணி கொள்ற நிலமைக்கு போய் இருக்காங்க மிஸ்டர் கோபால்.‘ஷீ£ ஹாஸ் டேகன் ஸ்லீ பிங்க் பில்ஸ்,மிஸ்டர் கோபால்.’நவ் பாலோ மீ” என்று கடுமையாகச் சொல்லி விட்டு நளினி இருந்த ரூமிற்கு அழைத்துப் போனார் டாக்டர்.’இது என்னடா இன்னும் புதிரா இருக்கு.’லவ்வர்ஸ்’,கருத்து வேறுபாடு, ‘ஸ்லீபிங்க் பில்ஸ்’ன்னு எல்லாம் இந்த டாக்டர் சொல்றாரே.நளினி வாழ்க்கைலே இந்த மர்மம் வேறு இருக்கா.அவ நம்ம கிட்ட சொன்ன அமொ¢க்கா வாழ்க்கை கதை தான் நிஜம்ன்னு நம்பி, நாம அவ கிட்ட பழகிண்டு வந்தோமே,என்று எண்ணிய படியே டாக்டருடன் நளினி ரூமுக்குப் போனாள் கமலா.
நளினி படுத்து இருக்கும் ரூமில் நுழைந்தார் டாக்டர்.
நளினி முறுக்கி விட்ட கயிறு போல் உடலை முறுக்கி கொண்டு கண்ணை மூடிக் கொண்டு படுத்து இருந்தாள்.ஐஞ்சு நாள் அடித்த விஷ ஜுரத்தின் பாதிப்பு, ’ஹெவி டோஸ் ஆண்டி பயாடிக்ஸ்’ சாப்பிட்ட அசதி,ஆகாரம் இல்லாமல் இரண்டு வேளையும் கஞ்சி சாப்பிட்ட சோர்வு,மனதில் சுமை, இவ்வளவும் சேர்ந்து நளினியை உறக்கமாகவே படுக்க வைத்து இருந்தது.
டாக்டர் நளினி தோளை மெல்லத் தொட்டு “நளினி,கண்ணை முழிச்சிப் பார்.உன் காதலன் கோபால் வந்து இருக்கார்.கண்ணைத் தொற” என்று சொல்லி உலுக்கி எழுப்பினார்.நளினிக்கு டாக்டர் பேசுவது எங்கோ ஆழ கிணற்றில் இருந்து பேசுவது போல் கேட்டது.மெல்ல கண்களை திறந்து பார்த் தாள்.அவளுக்கு தான் காண்பது கனவா நிஜமா என்று புரியலே.ஒரு நிமிஷம் அவள் ஆடிப் போனாள் எதிரே அவள் கணவன் கோபால் நின்றுக் கொண்டு இருந்தான்.
”கோபால்,நீயா கோபால்.என்னால் நம்பவே முடியலே.என்னை பார்க்க எப்போ நீ£அமொ¢க்காலே இருந்து இந்தியா வந்தே.நான் ரொம்ப பொ¢ய தப்பு பண்ணிட்டேன்.உன் பேச்சை கேக்காம நான் இந்தியா திரும்பி வந்தது பொ¢ய தப்பு கோபால்.என்னை மன்னிச்சுடு.கோபால்” என்று ஒரு அணை திறந்தால் அடித்து வரும் நீரை போல் வேகமாக கதறினாள் நளினி.மன்னிப்பு கேட்டு அவனிடம் தன் கைகளை நீட்டி கண்களில் கண்ணீர் மல்க நளினி கெஞ்சினாள்.அவள் மனம் சந்தோஷத்தால் துள் ளியது.கமலாவுக்கு இப்போது எல்லாம் தெள்ளத் தெளிவாக புரிந்தது.
நளினி உடலில் எங்கு இருந்து தான் அத்தனை தெம்பு வந்ததோ தெரியவில்லை.அவள் எழுந் து உட்கார்ந்து கொண்டாள்.”இவங்க தான் என்னை இங்கு அழைச்சுண்டு வந்தா” என்று கமலா ‘டீச்சரை’க் கை காட்டினான் கோபால்.“கமலா ‘டீச்சர்’,ரொம்ப ரொம்ப சாரி.நீங்க நிப்பதைக் கூட நான் கவனிக்கலே.கோபால் முகத்தே பார்த்த சந்தோஷத்திலே எனக்கு ஒன்னுமே புரியலே ‘டீச்சர்’.நீங்களா கோபாலை இங்கு அழைச்சுண்டு வந்தேள்” என்று ஆச்சா¢யத்தில் கேட்டாள் நளினி.”ஆமாம் நளினி ‘டீச்சர்’.நீங்கோ பிடிவாதம் பிடிச்சுண்டு அமொ¢க்காவை விட்டு சென்னைக்கு வந்தேள்.ஆனா இவர் இப்போ சென்னைக்கே வந்து உங்களே அழைச்சுண்டு போக வந்து இருக்கார்”என்று சொல்லி சிரித்தா ள் கமலா.நளினி முடியாமல் “உண்மைத் தான்…..கமலா டீச்சர்..” என்று முனகிச் சொன்னாள். கோபாலும் நளினியும் கமலா டீச்சருக்குன் தன் நன்றியைத் தெரிவித்தார்கள்.
கோபால் நளினியுடன் ஹாஸ்பிடலில் இருந்து வந்து அவள் உடம்பு பூரண குணம் ஆனதும் அவளை ஹாஸ்பிடலில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ பண்ணி கொண்டு நளினி வீட்டுக்குப் அழைத்துக் கொ ண்டு வந்தான்.நளினி கோபாலைப் பார்த்து “கோபால்,நான் உங்க பேரை கல்யாணைப் பத்திரிக்கையி லே பாத்ததும் ’ஐயோ நாம எடுத்த அவசர முடிவாலே கோபாலை இழத்துட்டோமே’ன்னு ரொம்ப அழு தேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ”நளினி கல்யாணப் பையன் பேர் கூட கோபால் தான்.அவன் பணற ‘ஜாபும்’,நான் பண்ற ‘ஜாபும்’ ஒன்னு தான்.What a coincidence.Uninmagin able ”என்று சொல்லிச் சிரித்தான்.
பிறகு கோபால் நளினியை அழைத்துக் கொண்டு பம்பாய்க்குப் போனான்.இருவரும் கோபால் அம்மா அப்பா ஆசீர் வாதத்தை பெற்றுக் கொண்டார்கள்.ஒரு நல்ல நாளாக பார்த்து, Air india விமானத்தில் கோபால் நளினியை அழைத்துக் கொண்டு New York க்கு பறந்துப் போய்க் கொண்டு இருந்தான்.நளினி கோபால் கைகளை கெட்டியாகப் பிடித்து கொண்டு இருந்தால் சந்தோஷத்தால்.
‘புயலுக்குப் பின் அமைதி’ என்று பெரியவர்கள் தெரியாமலா சொல்லி இருப்பார்கள்!.