பிழைப்போட்டி…..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 7,109 
 
 

போய் விட்டு வருகிறேன் எனச்சொன்னவரிடம் என்ன சொல்ல…?சரி நல்லது என்கிறான்.

பொதுவாகவேஇவனதுபழக்கம்இதுநாள்வரைஇப்படியாய்த்தான்இருந்திருக்கிறது.இந்தப்பழக்கம்இவனில்எப்படிகுடிகொண்டது. எப்பொழுது குடி கொண்டது என சரியாகஞாபகமில்லை.என்ற போதிலும் கூட இவன் வேலை செய்கிற அலுவலகத்திற்கு வந்து போகிற வாடிக்கையாளர்களிடம் கற்றதும் பழகிய தும் தான் என அறுதியிட்டுச்சொல்லிவிடலாம்.

பரஸ்பரம்கற்றலும்கற்பித்தலுமானநல்லனுபவம்அது/அலுவலகத்திற்குஅடிக்கடிவந்துபோகிறசங்கரசுந்தரம்தான்அடிக்கடிசொல்வார்.என்னசெய்யிறது அண்ணாச்சி.முன்னமாதிரிஇல்லவயசாகிப்போச்சி.ஓடியாடிதொழில்செய்யமுடியல. முன்னபிராயத்துல ஆளுவித்தியாசம் பாக்காமபழகுனபழக்கம். இப்பகைகுடுக்குது அண்ணாச்சி.

அவன்சொன்னான்நேத்துகையிலகொஞ்சம்தான் பணம் இருக்கு.மிச்ச ரூவாய எங்கபோயிசம்பாரிச்சி எப்பிடி ஆடுகள வாங்கி இந்த ஞாயித்துக் கெழம கடைக ளுக்கு கறிக்கு அனுப்புப்போறேனோன்னு தெரியலன்னு தெகைச்சி நின்னான். தெகைச்ச படியே சொன்னான் கூட. அப்புறம் என்ன செய்ய நாந்தான் கொஞ்சம் மனஆறுதல்படுத்திசொல்லீட்டுவந்தேன்.நான் தரேண்டா ஒனக்கு பணம்ன்னு/ அதான் அண்ணாச்சி கணக்குல இருந்து பணம் எடுத்துட்டுப்போறேன்.

அதெல்லாம்வாங்குனதடம்தெரியாது.குடுக்குறதடம்அப்பிடிநடந்துக்குவான். நானும்அவன் கிட்ட பணம் குடுத்துட்டேன்னு எந்த அதிகாரமும் பண்றதில்ல. அவன் எப்பிடி ஏங்கிட்ட மரியாதையா நடந்துக்கிறானோ அது போல அவன் கிட்ட அவன் மரியாதைக்கு கொறை வைக்காம நடந்துக்குவேன் அண்ணாச்சி என்பார்……………………….வீட்டு பையந்தான். அப்பா. தாத்தான்னு எல்லாரும் ஆடு மேச்சி பொழச்சவுங்கதான்.இப்ப இவன் பையன எங்கிட்டாவது வெளியேத் தணுன்னு பாக்குறான்.

அவன் பொண்ணுஒன்னு கண்ணுக்கு லட்சணமா வளந்து நிக்குது.பாத்தா நம்ப மாட்டீங்க.அவுங்க வீட்டுப்புள்ளதானான்னுஆச்சரியமா இருக்கும். அப்படி ஒரு லட்சணம்.அவளும்இப்பகல்யாணவயசுலநிக்குறா.இவனுக்குசொந்தத்துக்குள்ள பண்ணனுன்னுவிருப்பம் இருந்துச்சி.பொண்ணுக்கு அந்நியமாபோயிபாக்கலாம் ன்னுஒருவிருப்பம் இருக்கும் போலத்தெரியுது.ஒரு நா நான் வீட்டுக்கு போயி ருந்தப்ப சொன்னா.இந்தப்பயக்கிட்டக்கூட அரசல் புரசல் சொன்னேன்.சரிசரின்னான்.ஆனாஅவன் மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு தெரியல/ அப்பிடி ஏதாவது ஒரு முடிவு இருந்துச்சின்னா ஏங்கிட்ட சொல்லாம் செய்ய மாட்டான். அப்பிடியான பையன்.

அந்தப்பையனோடதாத்தாவுக்குக்கூடஎனக்குத்தெரியாது.எனதுஅப்பாவத்தான் எனக்கு நல்லாத்தெரியும்.ஆடு குட்டிகளோடத் தான் அவரோட வாழ்க்கையும் தொவங்கிச்சி/

சொந்த உருப்படி ஒரு இருபதுக்கும் மேல இருக்கும்.இது போக வாரத்துக்கு மாசத்துக்குன்னு குடுத்தவுங்க உருப்படின்னு ஒரு இருபது தேரும்ன்னு வச்சிக்கங்களேன். அதுகள மேய்க்க.வளக்க.அடைக்க.ஈனுன குட்டிகள தூக்கி தோள்லயும் மார்லயும்போட்டு வளக்க கறிக்கடைக்கு கெடாய்கள விக்கச் செய்யன்னு அவரு பொழப்பு ஓடிச்சி/

அந்த வருமானத்துலதான் ஊருக்குள்ள சொந்தமா ஒரு குடிச போட்டாரு. குடிசை இவருக்கும் புள்ள குட்டிகளுக்கும். அவரு வளக்குற ஆடுகள அடைக்க ஒரு யெடம் வேணுமே.குடிசைக்குப் பக்கத்துலதான் ஆடு அடைக்க தொழுவம் கட்டுனாரு/அதுதான் அவருக்கு வெனையாகிப்போச்சா இல்ல தற்செயலா நடந்த சம்பவமான்னு தெரியல….ஊரே நல்லா அசந்து ஒறங்கீட்டுக் கெடந்த நடுச்சாமம்தாண்டுனநேரத்துலகுடிசைப்பக்கத்துல இருந்த ஊரோர மொளகாத் தோட்டத்துல ஆடுகப் புகுந்துருச்சி. ஆடுகளுக்கு தண்ணி வைக்குறதுக்காக தொழு வக்கதவ தெறந்தவரு எப்பிடியோ சரியா மூட மறந்துட்டாரு. மூங்கி தப்பக்கதவு தான.அதுவும்பூட்டுஎல்லாம்கெடையாது.கயிறவச்சிகட்டி வச்சிருப்பாரு.லூசா அவுந்து கெடந்த கயிறு.லேசா தெறந்து கெடந்த கதவு ன்னு இருக்கவும் யெட வழிவழியா கழுத்த நொழச்ச ஆடுக முண்டி முண்டி கதவத்தொறந்து ஒண்ணு வெளிய வரவும் மத்ததுக பின்னாடியே போயிருச்சி.

மூங்கித்தப்பக்கதவு சுத்தி அடைக்கப்பட்டிருந்த பருத்தி மாருதப்பன்னு இருந்த தொழுவத்துல மொத்தமா புகுந்து கெளம்பவும் வழிவிட்ட கதவு அதுகள மொத்தமாப் போயிநிறுத்துனயெடம்அந்தமொளகாத்தோட்டமாத்தான்இருந்துச்சி. காலையிலவிடிஞ்செந்திரிச்சிதொழுவத்தப்பாத்தவருக்கு உயிரே போயிருச்சி. ஒருவாரத்துக்கு முன்னாடிபெறந்தகுட்டிகளத்தவிர்த்துஒண்ணையும் காணோம்.பதறிப்போனாருஇவன் அப்பா.வெறி புடிச்சவரா இங்கிட்டு அங்கிட்டுமா ஓடித் திரிஞ்சி ஆடுக மொளகாத்தோட்டத்துல இருக்குறதப்பாத்தவரு கொல பதறிப் போனாரு. அத்தன ஆடுகளும் தோட்டத்துல புகுந்தா உருப்படுமா தோட்டம். ஒரு செடி கூட உருப்படியா மிஞ்சல.எல்லாச்செடிகளும் பூத்து பூவும் பிஞ்சுமா நெற மாத கர்ப்பிணி போல நின்னுக்கிட்டு இருந்ததுக/

இவன் அப்பா மொதக் காரியமா ஆடுகள பத்திக்கொண்டோயி தொழுவத்துல அடைச்சிட்டுநேரா எங்க வீட்டுக்குத்தான் வந்தாரு மனசு பதறிப்போயி. அவர வீட்டுல இருக்கச்சொல்லீட்டுதோட்டத்துக்காரர போயி பாத்துட்டு வந்தாரு எங்கஅப்பா.அவருசரிபேசிக்கிருவோம் பஞ்சாயத்துக் கூட்டுன்னு ட்டாரு. அவரு பஞ்சாயத்தகூட்டிட்டாரேதவிரஅவருக்குஇவன்அப்பா கிட்டஅபராதமெல்லாம் வாங்கனும்ன்னு ஆசையெல்லாம் கெடையாது.

அவருன்னாபரம்பரபரம்பரையாஆட்டுக்காரரு.அவுகமுப்பாட்டனார்காலத்துலயிருந்துஆடுமேய்ச்சிவளந்தகுடும்பம்.அவுகபாட்டனாருக்குன்னாஆறுபுள்ளைங்க.நல்லா திங்குற வயசுல நண்டுஞ் சிண்டுமா இருந்துச்சிங்க.முக்காவாசி நேரம் அவுக எதுத்த வீட்டுலதான் இருந்துவளந்துச்சிகஅதுக. அவரு ஒண்ணும் பெரிய செல்வந்தரெல்லாம் கெடையாது. வீடுநெறஞ்ச புள்ளைகளோட இருந்த விவசாயக் குடும்பம்தான் அவருதும். என்ன அவருக்குன்னு கையளவு நெலம் கெடந்துச்சி. இவருக்கு கொஞ்சம் ஆடுக இருந்துச்சி.

அப்பம்ஏதுஅவசியமான படிப்பு அது இதுன்னுல்லாம். விருப்பட்ட புள்ளைங்க பள்ளிக்கூடம் போனாங்க விருப்படாதவங்க வீட்டுலஇருந்தாங்க. இதுல ரெண்டு வீட்டுப்புள்ளைங்க மட்டும் என்ன விதி விலக்கா. நெனைச்சா பள்ளிக் கூடம்போவாங்கஇல்லன்னாஇருந்துக்குருவாங்கஊருலஉள்ள புள்ளைங்கெல்லாம் இப்பிடி இருக்கையில அதுக மட்டும் விதி விலக்கா என்ன.படிப்பு பாதி. வீட்டு வீட்டுவேலையும்ஆடுகமேய்க்கிறது மீதின்னும் இருந்தாங்க…. என்னத்தை யோ இருக்குறதத்தின்னு உருண்டு பெறண்டு புள்ளைங்கஆளாகி வளந்து நிக்கும்போதுபாக்க ரெண்டுவீட்டுபெரியாள்களும் இல்லாமப்போனாங்க. ஆட்டுக்காரரும்இல்ல.தோட்டம்வச்சிருந்தவரும்இல்ல.புள்ளைங்கபாறையில படர்ந்த கொடியாட்டம் படர்ந்து பாவி இன்னைக்கி புள்ளகுட்டிக ளோட நிலைச்சிக் கெடக்குதுக.அதுல ஒருத்தராத்தான் பஞ்சாயத்துக்கூட்டுனவரு இருக்காரு/

அவருஏங்பஞ்சாயத்துக் கூட்டுனாருன்னு சொன்னத கேட்டா பெறந்தகொழந்த கூட ஆச்சரியப்படும். எப்பா நான் ஒன்னும் ஏங்காட்டுல ஆட்ட விட்டுட்டாரு ஆட்டுக்காரகாரருன்னு கோவத்துல பஞ்சாயத்தக்கூட்டலப்பா.அவருக்குத் தெரிய வேண்டியவிஷயமா இதுல என்ன இருக்குன்னா ஆட்டுக்காரக கஷ்டம் எனக்கு தெரியும்தான்னாலும் கூட இவன கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொல்லனுங்குறதுக்காகத்தான் இந்தசபைய கூட்டுனேன்.ஏற்கனவேஅவங்கிட்ட சொல்லீருக்கேன்கூட/.ஆட்டுக்கொட்டகையஒட்டிதோட்டங்காடுக வெளஞ்சி கெடக்குடாபாத்துக்கன்னு சொன்னேன். அதகாதுலபோட்டானாஎன்னன்னுதெரி யல. மத்தபடி அவன்கிட்ட எனக்கு அபராதம் வாங்கணும்ங்குற ஆசையெல்லாம் ஒன்னும் கெடையாது பாத்துக்கங்க. விடுங்கபொழச்சிட்டு போறான்னு எந்திரிச்சி போயிட்டா ராருஅண்ணாச்சி.அப்படியாக்கொந்த ஆள்கக்களோட பழகுன பழக்கம் அவுகளப்பாத்துவளந்தவிதமெல்லாந்தான்இன்னிக்கிநம்மளகொஞ்சமாவது மனுசனா வச்சிரு க்குது. எனச்சொல்வார் சங்கரசுந்தரம். இப்படி யான மனிதர்களிடம்கற்றுக்கொண்டுமனதில்குடிகொண்டபழக்கம்விருப்பம் கொண்டு ஓட ஆரம்பித்த காலத்தில் பேசிய பேச்சாக இருந்திருக்கலாம். நல்லது……..உடன் வேலை பார்ப்ப்பவர்களிடமும் நண்பர்களிடமும் தோழர்க ளிடமும்இப்படியாய்பேசிவிடமுடியாது. பேசினாலும் அவர்கள் ஏற்பதற் கில்லை. குட் மார்னிங்.குட் ஈவினிங் தவிர்த்து அலுவலக வார்த்தைகளை இவன் கேட்டதில்லை.நண்பர்களும் தோழர்களும் நலம். குடும்பம் .இயக்கம். வேலை எனமட்டுமே பூத்திருக்கிறார்கள்.ஒரே ஒருதடவை மட்டுமாய் தோழர் மூனா….. தனது மனைவியோடு இவன் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கிடக்கும் போது வந்து பார்த்தார்.ஒரு ஆறுதல்தானே.அந்நேரம் அவருக்கான் இயக்க வேலையைதூக்க நேரம்தவிர்த்து தலைச் சுமையாய் சுந்து கொண்டு அலைந்த வேளை.அதற்குமத்தியிலுமாய்வீட்டோடுஅவர்வந்துபார்த்ததுமிகவும்சந்தோஷமாய் இருந்தது.

அவர்வந்திருந்தநேரம்ஆப்பிள்ஜீஸைக்குடித்துக்கொண்டிருந்தான்.திறக்கப்படுகிறகதவின்ஓசை.தொடர்ந்துவந்த காலடிகள் நான்கின் நிழல். மென் திரையிட லான மருந்துவாசனை.என்கிறகலவையினூடாக வாயில் வைத்த கிளாஸை எடுக்கி றான் முதல் மடக்கு குடித்து விட்டு.

இந்நேரம் பொதுவாக டாக்டர்கள்தானே வருவார்கள்.வரும் பொழுது ஏதாவது சொல்லியே ஆகவேண்டும் என்கிற நினைவுடனாய் அசைவுற்று வந்து கொண்டிருந்தவனுக்கு கதவைத்திறந்து வந்தவர்கள் தோழரும் அவரது துணைவியாருமாய் இருந்தது எதிர்பாராத மகிழ்ச்சியாயும் ப்ளஸ் ஆகவும் ஆகிப்போனது.

ஓடிக்கொண்டிருந்தமின் விசிறியின் சுழற்சி.எறிந்து கொண்டிருந்தட்யூப் லைட் டின் வெளிச்சம்.அறைச்சுவரில் பூசப்பட்டிருந்தக்கண்ணைஉறுத்தாத வர்ணம் கட்டிலின் நிறம்.அதில் விரிக்கப்பட்டிருந்த போர்வை. தலையணை இவன் உடுத்தியிருந்த லுங்கி. கட்டிலின் அருகே நின்றவளாய் பேசிக் கொண்டிருந்த மனைவியின்பேச்சு என எல்லாவற்றையுமாய் உள்வாங்கியவராய் வந்தவர் சிறிது நேரம் ஆற்றுப்படுத்தி பேசியும் சிறிது நேரம் மௌனம் காத்து அமர்ந்தி ருந்துவிட்டுமாய்போய்விட்டார்கொண்டுவந்திருந்தவைகளைகொடுத்துவிட்டு.

தோழராய்வந்துகவிஞராய்திரும்பியவரின்வார்த்தைகளைஇவன்மனம் தாங்கி யிருந்த வேளை அவர் இயக்கம் சம்பந்தமான வார்த்தைகளையும். பணிகளையும்மனம்சுமந்துபோய்க்கொண்டிருப்பார்என்றேநினைத்தான்.ஒருவருடம் முன்பாய்ஆபரேஷன் செய்து ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்த போது/

மாப்பிள்ளைகஜேந்திரந்தான் சொன்னார்.அவர் அங்குதான்வேலைபார்க்கிறார் நைட் வாட்ச் மேனாக.வசந்தி அக்காவின் மகன் .ஊரிலிருந்த காலங் களில் பக்கத்து டவுனில் மில் வேலைக்கு வந்து திரும்புவார். அவருக்கு பக்கத்து வீட்டு வசந்தி மீது ஒரு கண்.அம்மாவின் பெயரே அவளுக்கும் இருந்தததாலோ என்னவோ அம்மாவைப்போலவே இருக்கும் அவளது குணமும் என நினைத்து விட்டார்.

அரசல் புரசலாக ஊர் பேருக்கும். நாலாம் பேருக்கும் தெரியாமல் நடந்து வந்த அவர்களது சந்திப்பும் பேச்சும் ஒரு நாள் வெட்ட வெளிச்சத்துக்கு வர பெரும் பிரளயமாகிப் போனது இரண்டு வீட்டிலும்.விளைவு அவள் எங்கு போனாலும் கூடவே ஒரு துணையாள் இருந்தாள்.அவன் எங்கு போனாலும் ஒருஆள் கண்காணித்துக்கொண்டே இருந்தான்.கண்காணிப்புகளும் பிடிமானங்களும் இறுக இறுக இரண்டுபேரின் இறுக்கமும் இறுகி இறுகி தெறித்து ஓடி வந்து விட்டார்கள்.

சுபமுகூர்த்தமல்லாதஒருநாளின்நல்பொழுதில்ரங்கசாமிவாத்தியாரின்மிளகாய் தோட்டத்திற்கு பழம் பெறக்கப்போனவள் வீடு திரும்பவில்லை. விசாரித்துப் பார்த்ததில்மில்வேலைக்குப்போனவர் மிளகாய்ப்பழம் பெறக்கிக் கொண்டி ருந்தவளை வேலை முடிந்து அய்யனார் கோவிலுக்கு வரச்சொல்லி தாலி கட்டி கூட்டி வந்து விட்டார் டவுனுக்கு என்றார்கள்.

அங்கே அவரது அத்தை வீடு இருக்கிறது.அங்கு சில நாட்கள் இருந்து விட்டு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி விட்டார்.அத்தை கூட எவ்வ ளவோ சொல்லிப்பார்த்தாள்.கேட்கவில்லைஅவர்.நீபாக்குறவேலைக்குவீட்டுவாடகை குடுக்கவே கட்டுபடியாகாதுடா.இதுலஎங்கிட்டுப்போயி பொண்டாட்டிய வச்சி காப்பாத்துவன்னு…..ம்ஹீம்.கேக்கலஅவன்.அத்தையின்பையந்தான்சொன்னான். விடும்மா தண்ணியில தள்ளி விட்டாத்தான் நீச்சல் வரும்.அத விட்டுட்டு இப்பிடி பொத்துப்பொத்தி வச்சிக்கிட்டு இருந்த கதையாகாது ஆமாம் என/ வேணுமின்னா யெடயெடையில நீ போயி எங்களுக்குத்தெரியாம அவுங்களு க்கு ஏதாவது குடுத்துக்க என்கிற வார்த்தையையும் சேர்த்துக் கொண்டான்.

அத்தையின்பையன்காலேஜ்முடித்திருக்கிறான்.இன்னும் வேலை என எதிலும் நிலையாய் காலூன்றவில்லை. அவ்வப்பொழுது கிடைக்கிற வேலைகளே அவனின் பொழுதைஓட்டியதுஎனலாம்.

பொதுநலச்சிந்தனைகொண்டவன்.வீட்டில்மட்டும்எனஇல்லை.யாய்பேசக்கூடியவன்தான்போகிறஇடங்களில்குடிகொண்டிருக்கிறவர்களின் முன்னமதியுடன்/

”அடர்ந்துகெடக்குறஆலமரத்துலகூடுகட்டி வாழ்றஎத்தனையோ பறவைகளப் போல அவுங்களும் வாழ்ந்துட்டுத்தான் போகட்டுமே இந்த ஜன சமுத்துர த்துல உன்னில் பாதி நான்.என்னில் பாதி நீன்னு…..அதுதானே சரி அத விட்டுட்டு இழுத்து இழுத்து எத்தனை நாளைக்கு ஒங்களாலவச்சிக்கிற முடியும் சொல்லுங்க/விடுங்க முட்டிப்பாத்து வரட்டும்.மாப்புள வாங்க ஒங்க மொதமாச பலசரக்கு.அரிசி பருப்பு செலவு என்னுது.அந்த செல் போன் கடையில வேலை பாத்த ரெண்டு மாச சம்பளத்த அப்பிடியே வச்சிருக்கேன். இப்பிடியான ஒரு நல்ல காரியத்துக்காவாவது அது ஒதவட்டும்.என்ன சொல்றீங்க…/” எனஅத்தை பையனும் மற்றவர்களுமாய் ஆளாளுக்கு அன்று பேசி தனியாய்க்குடித்தனம் வைத்த பிறகு இன்று வரை வேர் விட்ட ஆலமரமாய் பிள்ளைகுட்டிகளுடன் வளர்ந்துஅவர்களை தகுந்த இடங்களில் அமர்த்தி விட்டுஇந்தஆஸ்பத்திரியில் நைட்வாட்ச் மேனாய் நிற்கிறார். கஜேந்திரன் என்கிற பெயர்தாங்கி/

அவரேதான்சொல்கிறார்.ஒடம்பப்பாத்துங்கங்கஅண்ணாச்சி.சொவரவச்சுத்தான சித்திரம். மொதல்லஅதப்பாத்துக்கங்க.மத்ததெல்லாம் அப்புறம்தான் என்றார். வாஸ்தவம் தான் போலும் அவர் சொன்னது/

சென்ற வாரத்தின் பிஸியான ஒரு நாளில் அலுவலகத்திற்கு பணம் எடுக்க வந்திருந்த கணவனும்.மனைவியுமாய் கேஷ் கவுண்டர் முன்பு வந்து நின்ற போது வழக்கம் போல் பெயரில் ஆரம்பித்து யார்என்னஎனக்கேட்கும் போது கணவர் மனைவியை மெல்லதிரும்பப்பார்த்து விட்டு பணம் போடுறது மட்டும்தான் சார் ஏங் வேல.பணம் எடுக்குறது பூராம் அவுங்கதான் சார் என்றார்இரண்டுபேருக்கும்கூட்டுக்கணக்காகஇருக்கும்புத்தகத்தைகாண்பித்து.

இருக்கட்டும் அந்த கண்காணிப்பும் கண்டிஷனும் இல்லைன்னா நல்லாயிருக்காது எனச்சொன்னவாறே இவன் பணம் கொடுத்து அனுப்பிய போது போய் வருகிறேன் என அவர்கள் சொன்ன வார்த்தைக்கு இவனது பதில் சந்தோஷம் என்பதாகவே இருந்திருக்கிறது.

அப்படியாய் இவன் சொல்வித்த பேச்சை அருகிலிருந்த அலுவலர் மனம் தாங்கிப்போய் மறுநாள் அலுவலகம்வந்து சொல்லி மகிழ்ந்தார்.என்கிறவைக ளில் நல்லது .சந்தோஷம். போயிட்டு வாங்க நல்லபடியா………….என்கிற சொல் இவனது வார்த்தை வரம்புகளில் பதிவாகிறது.

-பாகம் 2-

வளர்ந்து நின்ற வேப்ப மரத்தின் பெருங்கிளைகளில் ஒன்று தன் சின்னசிறு கிளைகளை தன்னில் காத்துக்கொண்டு இடதுபக்கமாய் தரைநோக்கி வளைந்து நிற்கிறது இலைகள் சுமந்து/

இப்படியே விட்டால் மரம் லட்சணமில்லாமல் உடல் கெட்டுப்போய் நிற்கும். ஆகவேதான்இந்தமுடிவு.நேரம்பார்த்துக்கொண்டே இருந்தான். இவனாய் போன வாரம் ஞாயிறன்று காலை மொட்டை மாடியில் நின்று கொண்டு கைக்கு எட்டுகிற தூரத்தில் இருந்த கிளைகளை வெட்டினான்.ஆனால் அது முழுமை பெற்றதாய்த்தெரியவில்லை.தொரட்டி வாங்கி வந்து கம்பி கட்டி முடிந்தவரை மாடியிலிருந்தவாறே கொப்புகளை வெட்டிவிடவேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தான்.

அதற்காய்பஜார்ப்போய்தொரட்டிவிற்கிறஇடம்பற்றிகேட்டுவைத்துவிட்டெல்லாம்வந்தான்.விசாரித்ததில் மூன்று இடங்கள் சொன்னார்ள் மூன்றுஇடங் களிலும்இரண்டுஇரண்டுரகங்களில்தொரட்டியை எடுத்துக் காட்டினார்கள். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே இவனுக்கு மனம் ஒப்பவில்லை.

லேசாய் இருந்தது.அதை வாங்கிக்கொண்டு போனால் கம்பில் கட்டிமுருங்கைக்காய் ஒடிக்கலாம் போலிருக்கிறது.அல்லது ஏதாவது லேசான மரத்தின் கொப்பை ஒடித்துக்கொள்ளலாம்.அவ்வளவேஓங்கிஎதிலாவதுபோய்இடித்தால்தொரட்டி வளைந்து விடும் போலிருக்கிறதே/இதை வாங்கிக் கொண்டு போய் ……..

கடைசியாககருப்பட்டிப்பேட்டையருகேயாரும்சொல்லாமல்இவனாய்போய்ப் பார்த்த இடம் கடையில் ஒரே ரகம்தான் வைத்திருந்தார்கள். காட்டினா ர்கள். ஆனால் நன்றாக இருந்தது.பனை அரிவாளின் மினியேச்சர் போல…/ கேட்டத ற்கு இது பட்டறையில் அடித்தது என்றார்கள்.

முறுக்கிய மீசை வைத்திருந்தவரும் அந்தப்பெண்ணும்தான் கடையில் நின்றி ருந்தார்கள்.பெண் அவரது மனைவியாக இருக்க வேண்டும்.பூஞ்சை உடம்பில் முரட்டுத்தனம் காட்டித்தெரிந்தாள்.

பூஞ்சைஏற்பட்டது போலும். முரட்டுத்தனம் அவளாய் வலிய அணிந்து கொண் டதுபோலும்.

நேற்றைக்குமுன்தினம்காய்கறிவாங்கபோனபோதுஒருபெண்தான் இருந்தாள் கடையில். வழக்கமாக ஒரு ஆண் தான் நிற்பார்.ஆனால் இந்த இரவின் ஏழு மணிக்கு ஒரு பெண் நின்றிருப்பது அதுவும் ஞாயிற்றுக்கிழமை போலான நாட்களில்…… ஆச்சரியமேஎன்கிறநினைப்புடனும் ஆய்வுடனுமாய் நூறுக்குப் பதில் இருநூறைக்கொடுத்து விட்டான்.வீட்டில் வந்து மனைவியிடம் சொன்ன போது தலையில் அடித்துக்கொண்டு சிரித்தாள்.ஹீம் கர்மம்.கர்மம்…..காய்கறி வாங்கப்போன யெடத்துல என்ன வெட்டி ஆராய்ச்சி….?போனா போன வேலைய மட்டும் பாத்துக்கிட்டு வர்றதில்ல. நல்லா…. ..எனபல்லைக்கடித்த போது இவன் செய்த தவறின் பரிணாமம் வேறொன்றாய் புரிந்து கொள்ளப் பட்டஆபத்தை உணர்ந்தவனாய் தலை குனிந்தான்.உடன் தலையில் குட்டியும் கொள்கிறான்.

ஆனால் இரும்புக்கடைக்காரி அப்படியாய் இருக்கவில்லை.தனது பூஞ்சை உடலை ஏதோ ஒன்றுக்கு கட்டுப்படுத்தி முகத்தில் கடுமையையும்முரட்டுத் தனத்தையும் ஒட்டவைத்துக்கொண்டாள்.

இவனுக்குத்தெரிந்து பெரிய மேடு அக்கா கடையில் இருக்கிறவளைச் சொல் லலாம்.அவள் கடைக்காரரின் வீட்டிற்கு வாழவந்த மருமகள். ஊர் நாகர் கோவில்பக்கம்ஒருகிராமம்என்றார்கள்.விவசாயக்குடும்பத்திலிருந்துவந்தவள். இந்த வீட்டுக்கு வாழ்க்கைப் பட்டு வரும்பொழுது கிளி போல இருப்பாள். இவனும் கூட ஓரிருமுறை பார்த்திருக்கிறான்.ஆள்பார்க்க கண்ணு க்கு லட்சணமாக இருப்பாள்.அவளது மாமியார் கடையில் நிற்கும் போது இவளை சாப்பாட்டு இடை வேளைக்கு அனுப்பவும். மற்ற.மற்ற இடைவேளை களுக்கு அனுப்பவும் கடையில் போய் நிற்பாள்.

முதலில் கடையில் போய் நிற்கிற பொழுது சும்மா நின்றவள் பின் புகையி லை போட்டும் வெற்றிலை போட்டும் தன் பற்களை கறையாக்கிக் கொண்டும் வாய் நிரம்ப வெற்றிலை குதப்பிக்கொண்டுமாய் தன் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டாள்.என்பது இவன் கண்ணாரக்கண்டது. பார்க்கும் போது முகத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தால்தானே அருகில் வருவார்கள்அல்லது சுற்றித் திரிவா ர்கள்.இதற்கென நேர்ந்து விடப்பட்டவர்கள்.ஒரு அப்பீலிங் இல்லாத பொழுது…….அதையும் மீறி ஜொல் விட்டவாறும் அடாவடித்தனமாய் வருகிற தொந்தரவுகளை சமாளித்தவாறும்அவள்கடையில் நின்றுவியாபாரம்செய்திருக்கிறாள்.

ஆனால்இரும்புக்கடைக்காரியின்தோற்றம்அப்படியெல்லாம்இருந்திருக்கவில்லை.

தொரட்டியை எடுத்துக்கொடுக்கும்போது மரம் வெட்டுக்குப்போகிறமாணிக்கம் அண்ணன் தன்னைப்போல் நினைவுக்கு வருகிறார் இவனில்/

எந்தஅவசரத்திலும்அவரதுஅரிவாளையாருக்கும்தரமாட்டார்.அதுதான்அவரது தெய்வம் என்பார். வேண்டுமானால் சின்ன அரிவாள் ஒன்று வைத்தி ருப்பார். அதைத்தான்தருவார்கேட்பவர்களுக்கு/அதுவும்எல்லோருக்கும்தந்து விடமாட் டார்.ஆளைப்பொறுத்துதான் எல்லாமும் என்பது போல நடந்துகொள்வார். கேட் டால் சோறு போடுற சாமிய பங்கு வைக்கக்கூடாது என்பார்.

மரம்வெட்டுக்குப்போகிறசமயங்களில்அரிவாளைதுணியில்சுற்றித்தான்எடுத்துக்கொண்டுபோவார்.சோத்துச்சட்டிக்குப்பக்கத்தில் அரிவாளும் இருக்கும். அதை ஒருசைக்கிளில்வைத்துக்கொண்டுகிளம்பிவிட்டார்என்றால்மரம்வெட்டுக்குப் போகிறார் என்று அர்த்தம். வருடம் முழுவதுமாய் இல்லாத வேலையை சமாளிக்கவிறகுக் கடைகளுக்கு வேலைக்குப்போவார்.ரோமக்கட்டை தட்டாத ஷேவிங்கும். பளிச்சென்ற வெள்ளை வேஷ்டி வெள்ளைச்சட்டையும்தான் அவரது அடையாளம். அந்த ஊரில் கூலி வேலைக்கு போகிறவர்களுக்கு என இல்லாத ஒரு தனி அடையாளமாய் இருந்தது அது.

கிழக்குத்தோட்டத்தில் புழுவறித்து ஒன்றுக்கும் ஆகாமல் போன முருங்கை மரத்தை இவன் வெட்டிக்கொண்டு வந்து பிளந்து கொண்டிருந்த நாட்களிலும் வேலையற்ற பொழுதுகளில் ஒரு வேப்பமரத்தூரோடு மல்லுக்கட்டிக்கட்டிக் கொண்டிருந்த நாட்களில் மாணிக்கம் அண்ணன் அவரது அரிவாளையும்.கோடாரியையும் கொண்டு வந்து கொடுத்தது இன்னும் ஞாபகத்தில் இருப்பதாக/

பார்றா மொதல் போட்டவனே மொதலக்கொண்டு வந்து குடுத்தது மாதிரி….. என்கிற பிறரின் சொல்லை காதில் வாங்கிக்கொண்டு கைதொட்டுக் கும்பிட்டு அரிவாளையும் கோடாரியையும் தந்த மாணிக்கம் அண்ணனை இப்பொழுதும் கூட நினைத்துப்பார்க்க முடிகிறது.

அவருக்கு கோடாரியும் .அரிவாளும் பதப் படுத்தித்தரும் கந்தசாமி ஊருக்கு ஒதுக்குப்புறமானஒருஇடத்தில்பட்டறை போட்டிருந்தார்.நண்டும் சிண்டுமாய் அறு பிள்ளைகளை வைத்து எப்படி சமாளித்தார் எனத்தெரியவில்லை. பட்ட றையில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது எப்படித்தான் பிள்ளைகளுக்கு எப்படிமூக்கு வேர்க்கும் எனத்தெரியவில்லை.யப்பா எனக்கு மிட்டாய் வாங்கக் காசு குடு.இவன் என்னை அடிக்கிறான் என கோரிக்கைகள் வைத்த வாறே வருகிற பிள்ளைகளுக்குஅவர்களுக்கெனவைத்திருக்கிற ஐந்து பைசா சில்லறைகளைக் கொடுத்து சமாளிப்பார். பெத்த புளைகளை சமாளிப்பது எப்படி ன்னு அவர்கிட்ட தான் கத்துக்கணும்.என்பார்கள் ஊர்க்கார்கள்.

வண்டிப் பைதாவின் இரும்புப் பட்டையும் கோடாரியும் அரிவாளும் இன்னும்ஏதாவதுஒருசாமானுமாய் அவரது பட்டறை நெருப்பில் பதப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.எரிந்துகொண்டிருக்கிறநெருப்பும்ஊதப்பட்டுக்கொண்டிருக்கிற துருத்தி யுமே அவருக்கு பக்கபலமாயும் வாழ்வாதாரத்திற் கான ஆதார சுருதியுமாய் இருந்தது. அந்த ஆராத சுருதியே அவரது பிழைப்போட்டிய சாரதி யாய் இறுதி வரை கைபிடித்து வந்திருக்கிறது.

வாசல்முழுவதுமாய்சிதறிக்கிடக்கிறஇலைகளும்வெட்டப்பட்டுக்குச்சிகளாய் ஓரமாய் குவிக்கப்பட்டிருக்கிற மரக்குச்சிகளும் சற்றுமுன் உயிர் பெற்றதாய் மரத்தின் உயரே இருந்தது.

மெயினாகப்போனகிளையின்பக்கவாட்டுகிளையாகவிளங்கிதுளிர்த்தும்வளர்ந் தும் முளைவிட்டுமாய் காணப்பட்ட இலைகள் காற்றின் திசைக்கும் லயத்திற் குமாய் ஆடிக்கொண்டிருந்ததாய் இருந்தது வெட்டப்படுகிற சிறிது நேரத்திற்கு முன்பு வரை/

சென்ற வாரமே சொல்லியிருந்தாள் மனைவி/அப்பொழுதான் ஆபீஸிலிருந்து வந்திருந்த இவன் சைக்கிளை நிறுத்துகிற போது கவனித்தான்.இவனது வீட்டி ற்கு அடுத்ததாய் இருந்த வெளியில் கரம் விரித்து நின்றிருந்த சீமைக் கருவேலை மரம் வெட்டப்பட்டிருப்பதை/

இவனுக்கானால் அந்த மரத்தின் மீது ஒரு கண் இருந்தது.கொஞ்சம் உருட்டுக் காட்டி கட்டைகளாய் வளந்திருந்த ம்ரம் வெட்டிப்போட்டால் விறகுக்கு ஆகிக் கொள்ளும்.தவிரவீட்டிலிருக்கிறமண்வெட்டிக்குகணைபோட்டுக்கொள்ளலாம். என நினைத்து கண்ட கனவு மனைவியின் ஒற்றைச்சொல்லில் காலியானது.

வேண்டாம் விடுங்கள் மரம் வெட்டுபவர்கள் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள்சொல்லிவிட்டும்போயிருக்கிறார்கள் நான்வந்து வெட்டிக் கொள்கி றேன். அது வரை கொஞ்சம் பார்த்துகொள்ளுங்கள் என/அவரது சொல்லைமீற வேண் டாம் என்கிற தர்மத்தில் இல்லை என்றாலும் கூட அவருக்கென ரெண்டு காசை தரப்போகிறஒன்றில்போய்எதற்குகைவைத்துபாழாகுவானேன்என்கிறஅவளது சொல்லைமீறமாட்டாதவனாய்சரி என்கிறான். போகவும் தர்மமும்அப்படியாய்த் தான் ஆகிப் பட்டது மனதில் சரி எனத்தோண விட்டு விட்டான்.

சென்ற ஆறு மாதங்களுக்கு முன்பாய் இதே இடத்தில் ஒருத்தி வந்து முள் வெட்டிக்கொண்டிருந்த போது வீட்டுக்காரர் சப்தம் போட்டார்.என்னிடம் கேட்காமல்எப்படி முள் வெட்டலாம் என/இம்முறை அப்பிரச்சனைக்கெல்லாம் இடமே இல்லை.இதோ நான் வீட்டுக்காரரைப்பார்த்து சொல்லிவிட்டுச் சென்று விடுகிறேன்.ஆகவே நான் வரும் வரை இங்கேயே இருக்கட்டும் முள்மரம் அப்படியே/ஏதும்இடம் நகர்ந்து விடாமலும் மொட்டையாகி விடாமலும் பார்த்து எனது கையில் கொடுத்தீர்களானால் உங்களுக்கு உண்டு கோடிப்புண்ணியம்எனச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறவரின்சொல்லுக்கு பங்கம் வராமலும் அந்த முள்மரத்தைவெட்டவும் தகர்க்கவும் வேண்டாம். அதுநமக்கு அழகல்ல. கொடு த்துப்பழக்கப்பட்டவர்கள்எடுத்துக்கொள்ள ஆசைப் படக்கூடாது.என்கிற மனை வியின் சொல்தாங்கி ஏற்று கட்டுப்பட்டவனாய் வீட்டிற்குள் நுழைந்த போதுதான் ஞாபகம் வந்தது.மரம் வெட்டுபவரை ரோட்டில் வைத்துப்பார்த்தது. வெள்ளை வேஷ்டியும்.வெள்ளைச்சட்டையுமாய் அவர் நடந்து வரும்போது ஏதோ ஒரு தேடல் அவரது கண்களில்அமான்ஷ்யம் சுமந்தாய் காட்சிப்படும்.

சுருட்டி விடப்பட்ட அரைக்கைசட்டையும் நாலு முழ வேஷ்டியுமாய் வருகி றவரின் நடை தெரு ஓரமாய் எந்த அலட்டலுமற்று வருகிறவராய் இருப்பார். நீள்கிறகைமுழங்காலுக்குக்கீழே தொட்டால் ஆதிர்ஷ்டமாமே.அவருக்கு மரம் வெட்டிப்பிழைக்கிற அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது.

போனவாரம் ரோட்டில் வைத்துப்பார்த்த இடம் ரத்னராதா டீக்கடையாக இருந் தது. டீ சாப்பிட்டுகொண்டே பேசிக்கொண்டிருக்கும் போதே சொன்னார். வீடோ ரமா நிக்குற மரத்த கவாத்துப்பண்ணுனா நல்லா வளரும் .வீட்டோரமாபோற ஈ.பி வயர்லயும் தட்டாம இருக்கும் என.சொல்லின் ஈரம் காயும் முன்னாகவே வீட்டோரமாய் இருந்த முள்மரத்தை வெட்டி விறகாக்கிக் கொண்டிருந்தவ ரிடம் வெட்டவேண்டும் எனச்சொன்னதும் இதோ குறை முள்ளை வெட்டி விட்டு வந்து விடுகிறேன் எனச்சொல்லிவிட்டு வந்தவர் வாடகைக்கு ஏணிமரம் எடுத்துவந்துவேப்பமரத்தின் கிளைகளை வெட்டிப் போட்டு விட்டு வீட்டிற்குள்ளாய் இருந்த இவனைக் கூப்பிட்டு போய்விட்டு வருகிறேன் எனச்சொல்லியவாறே செல்கிறார்.

போய் விட்டு வருகிறேன் எனச்சொன்னவரிடம் என்ன சொல்ல…? சரி நல்லது என்கிறான்.பொதுவாகவே இவனது பழக்கம் இதுநாள் வரை இப்படியாய்த் தான் இருந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *