பிராயச்சித்தம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 5,285 
 

இப்போது சித்திரைத் திருவிழாவும் இல்லை, ஆடிப்பூச்சொரிதலும் இல்லை. ஆனால் உள்ளூர் மக்களின் சிறப்பு ஆராதனைகளால் பாகம்பிரியாள் கோவில் களைகட்டியிருந்த து. அர்ச்சனைத் தட்டுக்களோடு வந்த எல்லோரும் ஒரே ஒரு பெயருக்குத்தான் அர்ச்சனை செய்தார்கள். அந்த ஊரில் வசித்து வரும் அர்ச்சகர்களும் , அன்றுதான் மந்திரங்களைப் பிசகாமல் சொல்லி ஆராதனை செய்தனர். “…மந்திரத்தில் இவ்வளவு உண்டா..?” என்பது பாகம்பிரியாளுக்கே அன்றுதான் தெரிந்திருக்கும் போல. நாள்தோறும் அவ்வளவு அலங்காரத்தில் காட்சி தந்து கொண்டிருந்தார்.

கோவிலுக்குப் போன எல்லோரும் பெரிய அம்பலம் வீட்டுக்குத்தான் சென்று வந்தார்கள். ஏனென்றால் அவர்கள் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டதெல்லாம் பவானி என்ற பெயருக்குத்தான். திடீரென்று உடம்புக்குச் சரியில்லாமல் போன அவர் , மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன ஆகப்போகிறதோ என்ற பயம்தான் அந்த ஊர்க்காரர்களுக்கு இருந்திருக்க கூடும் போல….

பெரிய அம்பலாரன் வீடுதான் அந்த ஊரின் பெரிய தலைக்கட்டு. வெற்றியூர் பஞ்சாயத்தில் தலைமுறை தலைமுறையாக அந்தக்குடும்பத்தைச் சேர்ந்த முத்தண்ணாபிள்ளை, மருதுபாண்டியன், சுப்பிரமணியன்தான் பஞ்சாயத்து தலைவர்கள். அவர்களுடைய பல ஏக்கர் நிலங்களை, அங்குள்ள ஏழை மக்கள்தான் குத்தகைக்குப் போட்டுச் சாப்பிடுகிறார்கள். இதனால்தான் அவர்கள் அர்ச்சனை செய்தார்கள் என்றால் இல்லை… அந்த வீட்டு வாசல்படி ஏறியவர்களுக்கெல்லாம், குடிக்க காபியும் சாப்பாடும் போட்டு அனுப்புபவர் பவானி.

நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன. பவானி பற்றிய விசாரிப்புதான் அத்தனை பேருக்கும். அந்த ஊருக்கு எப்போதாவது வரும் பாரதி என்ற தனியார் பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சுந்தர், “…பவானிக்கு உடம்பு தேவலையாயிடுச்சு. டிஸசார்ஜ் பண்ணிக்கச் சொல்லிட்டாங்க..” என்றார்.

இதைக்கேட்ட செவத்தியம்மாள் ஊரில் எல்லோரிடமும் சொலுலி விட்டார். ஒரே குதூகலம்தான். “…பாகம்பிரியா எப்டி கைவிடுவா எனக்குத் தெரியும்ல..” என்று கேட்டவர்கள் நம்பிக்கையோடு சொன்னார்கள்.

டிஸசார்ஜ ஆவதற்குள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குன்றக்குடி, கொல்லங்குடி, கண்ணாரேந்தல் என மக்கள் பஸ் ஏறி விட்டார்கள். மருத்துவமனையிலிருந்து அழைத்து வரப்பட்டார் பவானி. இப்போதுதான் அவருடைய அம்மா செல்வி. அம்மாச்சி எல்லோரும் சந்தோசப் பெருமூச்சு விட்டார்கள். இதைவிட அந்த ஊர்க்கார ர்களுக்கு இரண்டு மடங்கு அதிக சந்தோசம்.

ஏனென்றால், அந்தக் கிராமத்தில் இருந்த முக்கால்வாசி தலைகள் மொட்டை மண்டைகளாக இருந்தன. பல பெண்களுடைய சடைகள் பூமுடி இறக்கியதால் குட்டையாகி இருந்தன.

தை மாதம் பிறந்து விட்டதால் இதில் இன்னொரு சந்தோசம். பாகம்பிரியாள் கோவிலுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு விட்டதாகவும் அதன் வெள்ளோட்டம் தை மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என்று கோவில் கௌரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் அறிவித்து விட்டார்.

தேரோட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தென்னவன் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு தேரைப் பிடித்து இழுத்தனர். அப்போது சிறுமி ஒருவரும் வடம் பிடித்தார், பாகம்பிரியாள் தேரை பவானி இழுக்க நிலைக்கு வந்து சேர்ந்தது.

இதேபோல் பவானி வீட்டில் சந்தோசமும் மீண்டும் குடிபுகுந்தது.

Print Friendly, PDF & Email

2 thoughts on “பிராயச்சித்தம்

  1. ஒரு கிராமத்தையும் நல்ல மனிதர்களுக்கு கிடைக்கும் ளஆசீர்வாத த்தையும் கண்முன் நிறுத்துவதாக உள்ளது இந்தக் கதை. இதுபோன்ற கதைகள் இறுக்கமான மனங்களைக் கூடக் கரைக்க கூடியது

  2. உங்கள் கதைகளில் பெரும்பாலானவை கிராமங்களையும் ஒவ்வொரு மனித மனங்களையும் பிரதிகலிப்பதாக உள்ளது. கதை பிடித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *