கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 4,576 
 

கிருபாஷினி புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள்,யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது எழுந்துப் போய் கதவை திறந்தாள்,அவளின் மாமியார் அபிராமி நின்று கொண்டு இருந்தாள்,வாங்கள் அத்தை எப்படி இருக்கீங்கள் ஒரு போன் கூட பன்னவில்லை வருவதாக என்றாள் கிருபாஷினி,மகன் வீட்டுக்கு வருவதற்கு எதற்கு தகவல் சொல்லனும்,நினைத்தேன் கிழம்பி வந்துட்டேன் என்றாள் அபிராமி,உங்கள் மகன் வீட்டுக்கு வருவதற்கு தகவல் சொல்ல தேவையில்லை தான்,நான் வீட்டை பூட்டி விட்டு வெளியில் போய் இருந்தால் நீங்கள் வந்து வெளியில் நிற்கனுமே அதனால் கேட்டேன் என்றாள் கிருபாஷினி,நீ என்னா பட்டணத்திற்கா போய்விடுவ,பக்கத்தில் இருக்கும் கடைக்கு போய் இருப்ப,இல்லை என்றால் கோயில் போய் இருப்ப,அது மட்டும் நான் வெளியில் நிற்க மாட்டேனா?என்றாள் அபிராமி நாதியற்றவள் என்று குத்தி காட்டுவது புரிந்தது கிருபாஷினிக்கு,அமைதியாக இருந்தாள் அவள்.

எங்கு மூர்த்தி வேலைக்கு போய் விட்டானா என்றாள் அபிராமி,ஆமாம் அத்தை போய்விட்டார்,காப்பி போடவா என்றாள் கிருபாஷினி,இன்னும் நான் சாப்பிடவில்லை,ஏதாவது செய்து இருக்கியா என்றாள் அபிராமி,தோசை மாவு இருக்கு,சாம்பார் இருக்கு அத்தை என்றாள் கிருபாஷினி,தோசை தானா இருக்கு,எனக்கு வேண்டாம் காப்பி மட்டும் போடு குடிக்கிறேன் என்றாள் அபிராமி,ஏன் அத்தை வேறு ஏதாவது பன்னி தரவா என்றாள் கிருபாஷினி,இனி என்னத்தை பன்னி நான் சாப்பிட்டு அது கிடக்கு வேண்டாம் என்றாள்அபிராமி,காப்பி போட்டு கொடுத்தாள் கிருபாஷினி,எந்த காப்பி தூள் வாங்கின கசப்பாக இருக்கு,அவனுக்கும் இதை தான் ஊத்தி கொடுக்கிறாயா,அவன் குடிக்க மாட்டானே இப்படி காப்பி என்றாள் அபிராமி,மூர்த்தி இது நாள் மட்டும் எதுவும் சொன்னது கிடையாது,கிருபாஷினி வாய்திறக்கவில்லை எது சொன்னாலும் பிரச்சினையாகி விடும் என்று வாயை மூடிக் கொண்டாள் அவள்,மூர்த்தி பகல் சாப்பிட வருவானா இல்லை என்றால் கட்டி அனுப்பிட்டியா என்றாள் அபிராமி,இன்னைக்கு ஆபிஸில் ஏதோ மீட்டிங் இருப்பதாக சொன்னார் அதனால் கையோடு சாப்பாட்டை கட்டி அனுப்பி விட்டேன் என்றாள் கிருபாஷினி,அப்ப வேலையை முடித்துவிட்ட என்றாள் கிண்டலாக அபிராமி,அதற்கும் மௌனமாக இருப்பது நல்லது என்று மனதிற்கு பட்டது அவளுக்கு.

கிருபாஷினியும் மூர்த்தியும் திருமணம் முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது,அதுவே பெரிய எதிர்ப்பில் நடந்த திருமணம்,காரணம் கிருபாஷினிக்கு எந்த சொந்தங்களும் இல்லை,ஒரு அநாதை ஆச்சிரமத்தில் வளர்ந்தவள் அவள்,மூர்த்தியும் கிருபாஷினியும் ஒரே பாடசாலையில் படித்தார்கள்,யாரிடமும் அதிகமாக பழகுவது இல்லை கிருபாஷினி,எப்போதும் அமைதியாக இருப்பாள்,எல்லோரும் அவர்களின் வீட்டில் நடக்கும் விடயங்களை சந்தோஷமாக பகிர்ந்து கொள்வார்கள்,அவளிடம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு எந்த விடயமும் இல்லை என்பதால்,அதிகளவு பேச்சி கொடுக்க மாட்டாள் யாரிடமும் அவள்,மூன்று வயது இருக்கும் போது,உன்னை இங்கு கொண்டு வந்து விட்டார்கள்,உன் பெற்றோர்கள் ஏதோ விபத்தில் இறந்து விட்டார்களாம் என்பதை மட்டும் அந்த ஆச்சிரமத்தில் தெரியப் படுத்தினார்கள்,மூன்று வயதாக இருக்கும் போது எதுவும் பெரிதாக தெரியவில்லை,பெரியவளாக ஆனப் பின்,எனக்கு யாரும் இல்லை என்ற ஏக்கம் மனதில் இருந்தது,அந்த ஆச்சிரமத்தில் நன்றாக பார்த்துக் கொண்டார்கள்,பல பிள்ளைகள் அங்கு இருந்தார்கள்,கொஞ்சம் கண்டிப்பான ஆச்சிரமம் அது,வெளியில் உள்ளவர்கள் அநாவசியமாக உள்ளே வரமுடியாது,எல்லோருக்கும் பல கட்டுப் பாடுகள் அங்கே,அதனால் எப்போதும் அமைதியாக இருப்பாள் கிருபாஷினி.

மூர்த்தி வகுப்பில் குறும்புகாரன்,அரட்டை அடித்து கொண்டும்,மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டும் இருப்பான் எப்போதும்,அவனை வகுப்பே எதிர் பார்க்கும்,அவன் பின்னாடி ஒரு பட்டாளமே இருக்கும்,கிருபாஷினி அவனிடம் கதைக்கவே மாட்டாள் எப்போதும்,அதனால் மூர்த்தியும் அவளைக் கண்டுக் கொள்வது இல்லை,ஒரு நாள் கிருபாஷினி தனது நோட்டு புத்தகத்தை வகுப்பறையில் மறந்து வைத்து விட்டுப் போய்விட்டாள்,அது மூர்த்தி கையில் கிடைத்தது,நாளைக்கு வரும் போது கொடுத்து விடுவோம் என்று வீட்டுக்கு எடுத்து சென்று விட்டான் அவன்,இரவில் புத்தகப் பையை திறக்கும் போது கிருபாஷினியின் நோட்டு புத்தகம் கண்ணில் பட்டது,எடுத்துப் பார்த்தான் கையெழுத்து அழகாக இருந்தது,நடு பகுதியில் சில கவிதைகள் எழுதி வைத்திருந்தாள் பெற்றோர்களின் இழப்பு,எதிர்பார்ப்பு,கனவு,ஏக்கம் என்று சிறு சிறு கவிதைகள் அழகாக இருந்தது,அப்போது தான் அவளின் மனம் புரிந்தது மூர்த்திக்கு,அடுத்த நாள் அந்த நோட்டு புத்தகத்தை கிருபாஷினியிடம் போய் கொடுத்தான்,ரொம்ப தேங்ஸ் நான் போய் தேடினேன் என்றாள் அவள்,உன் கவிதைகள் நன்றாக இருந்தது என்றான் மூர்த்தி,அது நேரம் போகவில்லை என்றால் கிறுக்குவது என்றாள் அவள்,அதன் பிறகு குட்மோனிங் சொல்லிக் கொள்வார்கள்,காணும் போது இருவரும் சிரித்துக் கொள்வார்கள்,ஒரு நாள் மூர்த்தி பாடசாலை வரவில்லை என்றாலும் கிருபாஷினிக்கு என்னமோ போல் இருக்கும்,

நாட்கள் ஓடியது,மூர்த்தி மெதுவாக கிருபாஷினியிடம் கதைக்க ஆரம்பித்தான்,கேட்டதிற்கு மட்டும் பதில் சொல்லும் கிருபாஷினி நாளடைவில் தன்னை அறியாமல் அவனிடம் நன்றாக கதைக்க ஆரம்பித்து விட்டாள்,எதுவென்றாலும் மூர்த்தியிடம் மட்டும் தெரியப் படுத்துவாள்,யாரும் இல்லாத அநாதை என்ற எண்ணம் அவளிடம் அறவே இல்லாமல் போய் விட்டது,உலகமே மூர்த்திப் போல் தோன்றியது அவளுக்கு,மூர்த்திக்கும் கிருபாஷினியை நன்றாக பிடித்தது,இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள்,யாருக்கும் தெரியாது இவர்கள் காதலிப்பது,கிருபாஷினியின் ஆச்சிரமத்தில் இதுக்கெல்லாம் அனுமதி இல்லை,இருவரின் காதலும் அமைதியாக போனது,காலேஜ் போயும் எச்சரிக்கையாகவே நடந்துக் கொண்டார்கள் இருவரும்,படிப்பை முடித்து வெளியாகும் மட்டும் கவனமாக இருந்தார்கள்,அதன் பிறகு மூர்த்தி வேலைக்கு போக ஆரம்பித்தான்,ஆனால் கிருபாஷினிக்கு இலகுவில் வேலை கிடைக்கவில்லை.போகும் இடங்களில் ஆச்சிரமத்தில் வளர்ந்ததை காரணம் காட்டி யாரும் கிருபாஷினிக்கு வேலை கொடுக்க தயங்கினார்கள்,அதே சமயம் மூர்த்தி அவனின் காதலை வீட்டில் தெரிவிக்க,வேலையே கொடுக்க தயங்கும் போது,எப்படி மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள்,அபிராமி ஆர்பாட்டம் பன்னி முடித்தாள்,மூர்த்தி பிடிவாதமாக இருந்தான்,அண்ணன் பன்னீர்செல்வம் மட்டும் மூர்த்தியின் காதலுக்கு பச்சை கொடி காட்டினான்,அப்பா இல்லாத குறையை அவன் மட்டும் நிவர்த்தி செய்தான்.

அப்பா இளங்கோ ஓர் கம்பனியில் வேலை செய்தார்,எதிர்பாரா விதமாக அங்கே தீ பற்றி எரிந்து அந்த விபத்தில் உயிர் இழந்தார் இளங்கோ,அதனால் அந்த வேலையை காலேஜ் போய்கொண்டிருந்த பன்னீர்செல்வத்திற்கு கொடுத்தது அந்த கம்பனி,அவனும் செய்ய ஆரம்பித்தான்,விரைவில் உயர் பதவியை எட்டிப் பிடித்தான்,சங்கீத்தாவை பேசி முடித்தார்கள்,வசதியான குடும்பம்,அண்ணன் அப்படி கட்டி இருக்கும் போது,நீ மட்டும் எதுவும் இல்லாத அநாதையை கட்டிக்க நான் சம்மதிக்க மாட்டேன் என்று அபிராமி ஒற்றை காலில் நின்றாள்,அவளை சமாளித்து கிருபாஷினியை கட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது மூர்த்திக்கு,திருமணம் முடித்து கூட்டு குடும்பமாக இருந்தார்கள் அனைவரும்,அபிராமி சங்கீத்தாவை ஒரு விதமாகவும்,கிருபாஷினியை ஒரு விதமாகவும் பார்க்க ஆரம்பித்தாள்,அவளின் குத்தலான பேச்சி கிருபாஷினியை காயப் படுத்தும்,ஆச்சிரம்மத்தில் யாரும் இப்படி கதைப்பது இல்லை என்பதால்,இதை எல்லாம் கேட்ட அனுபவங்களும் அவளுக்கு இல்லை,ஆச்சிரமம் பரவாயில்லை என்று தோன்றும் கிருபாஷினிக்கு,இதையெல்லாம் கவனித்த மூர்த்தி தனிகுடித்தனத்திற்கு ஏற்பாடு செய்து விட்டான்,அதுவும் அபிராமிக்கு பிடிக்கவில்லை,மகனை பிரித்து கூட்டிக் கொண்டு போகிறாள் என்ற கிருபாஷினியிடம் சண்டை பிடித்தாள் அபிராமி.

தனியாக வந்தப் பிறகும்,மாதம் ஒரு முறை மகன் வீட்டுக்கு வரும் அபிராமி,வாயை வைத்துக் கொண்டு பேசாமல் இருக்க மாட்டாள்,ஏதாவது குறை கண்டுப் பிடிப்பதுவே வேலையாக வைத்திருந்தாள் அவள்,அம்மாவின் குணம் அறிந்த மூர்த்தி,சண்டை ஏற்படாமல் பார்த்துக் கொள்வான்,கிருபாஷினி கோபம் படக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருப்பான்,அவளும் முடிந்தளவு பொறுத்துப் போவாள்,முடியாத நேரம் எதிர்த்து கதைத்து விடுவாள் அபிராமியிடம்,அந்த கோபத்தில் இரண்டு மூன்று மாதம் வராமல் இருப்பாள் அபிராமி,பிறகு மகனை பார்க்காமல் இருக்க முடியாது என்று கூறிக் கொண்டு வருவாள்,இது வழமையாக நடப்பவை தான்,வரவேண்டாம் என்று சொல்ல முடியாது பத்து மாதம் சுமந்து பெற்றவள் ஆச்சே,தற்போதும் சண்டை பிடித்துக் கொண்டுப் போய்,நான்கு மாதங்களுக்குப் பிறகு வந்திருக்கும் அபிராமியிடம் எதுவும் கூறாமல் இருப்பது மேல் என்று நினைத்த கிருபாஷினி அமைதியாக இருந்தாள்,காப்பியை குடித்து முடித்த அபிராமி உனக்கு தனியாக வீட்டில் இருப்பதற்கு பயமாக இல்லை என்றாள் கிருபாஷினியிடம்,இல்லை அத்தை என்ன பயம் பக்கத்தில் நிறைய வீடுகள் இருக்கும் போது என்றாள் அவள்,இல்லை ஏதாவது வேலைக்கு போனால்,உனக்கு பொழுது போன மாதிரி இருக்கும்,பணம் கிடைத்த மாதிரியும் இருக்கும்,குழந்தை குட்டியா இருக்கு வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள என்றாள் அபிராமி கிருபாஷினிக்கு சுருக்கென்றது,அவருக்கு விருப்பம் இல்லை அத்தை நான் வேலைக்கு போவது என்று ஒரு வார்த்தையில் முடித்தாள் அவள்.

அவன் இன்னும் முட்டாளாக தான் இருக்கான்,அவனுக்கு தெரியுமா பணத்தின் அருமை,அது தெரிந்திருந்தால் உன்னை கட்டி இருப்பானா என்றாள் அபிராமி,அதற்கு எதுவும் வாய் திறக்கவில்லை கிருபாஷினி,சற்று நேரத்தில் சாப்பாட்டை போடு பசிக்குது என்றாள் அபிராமி,என்னுடைய தட்டில் போடு,மாத்தி வேறு எதிலும் போட்டு விடாதே என்றாள் கண்டிப்புடன்,அவர்கள் வீட்டிலும் அபிராமிக்கு தனியாக தட்டு வைத்திருந்தவள் தான் அபிராமி,உங்கள் தட்டு தனியாக தான் இருக்கு அத்தை என்று அதில் சாதத்தை போட்டு சாம்பார்,பொறியல்,கூட்டு என்று வைத்தாள்,ஏன் இரண்டு பேருக்கு இத்தனை செய்து இருக்க,அவன் பணம் பார்த்து செலவு பன்னு என்றாள் அபிராமி,சாம்பாரில் புளி அதிகம் என்றாள்,எதையாவது சொல்லாமல் சாப்பிட்டாள்,வயிற்குள் போகாதே வேண்டாத மருமகள் சமைத்த சாப்பாட்டை என்று மனதில் நினைத்துக் கொண்டாள் கிருபாஷினி,சாப்பிட்டு முடித்தவுடன் போய் படுத்து விட்டாள் அபிராமி,அதன் பிறகு கிருபாஷினி சாப்பிட்டாள் தனியாக அமர்ந்து சாப்பிடும் போது ஆச்சிரமம் நினைவு வந்தது,எத்தனை பேர் இருந்தாலும்,அமைதியாக உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும்,எந்த சத்தமும் வரக் கூடாது,மூர்த்தி வீட்டில் இருந்தால்,இருவரும் சேர்ந்து சாப்பிடும் போது எதையாவது பேசிக் கொண்டே இருப்பான்,பார்த்து பார்த்து போடுவான்,ஒழுங்காக சாப்பிடு நிறைய காய்கள் வைத்துக்கொள் என்று அதட்டுவான்,அபிராமி வீட்டில் இருக்கும் போது,அபிராமி சாப்பிட்டியா என்று கேட்க்க கூட மாட்டாள் கிருபாஷினியை,மூர்த்தி அபிராமியிடம் கிருபாஷினி சாப்பிட்டாளா என்று கேட்டால் மணி அடித்தா கூப்பிடுவார்கள் பசித்தால் வந்து சாப்பிடுவாள் என்று பதில் வரும்,அம்மாவின் குத்தலான பேச்சி மூர்த்திக்கு பிடிக்காது.

சண்டை போடக் கூடாது என்று நினைத்து அமைதியாக இருப்பான் மூர்த்தியும்.

கிருபாஷினி பாவம் பெற்றோர்களின் அன்பு என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தவள்,அபிராமி அதை சிறிதும் யோசிக்க மாட்டாள்,எப்போதும் அவளின் வார்த்தைகள் வாள் கொண்டு வெட்டும் அளவிற்கு இருக்கும்,கிருபாஷினி வேலைக்கு போகவில்லை என்பது அதைவிட குற்றமாகப் பட்டது அபிராமிக்கு,தான் வேலைக்கு போகவில்லை,மருமகள் மட்டும் வேலைக்கு போகவேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை,கிருபாஷினிக்கு இன்னும் பிள்ளை இல்லை என்பதை குத்தி காட்டுவாள்,தனியாக வளர்ந்தவள் அதனால் தான் இவளுக்கு இன்னும் பிள்ளை இல்லை என்பாள் அபிராமி,மூர்த்தி அதட்டி விடுவான்,நீங்கள் பேசாமல் இருங்கள் அம்மா,இன்னும் இந்த மூட நம்பிக்கையெல்லாம் வைத்துக் கொண்டு உளராதீங்கள் என்பான்,நீ விட்டு கொடுக்க மாட்டியே உன் பெண்டாட்டியை என்பாள் அபிராமி

கிருபாஷினி கர்ப்பம் ஆனாள்,மூர்த்திக்கு அளவில்லாத ஆனந்தம்,திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது,ஒவ்வொரு தடவையும் எதிர் பார்த்த விடயம் தற்போது நிஜமாகி உள்ளது,கிருபாஷினிக்கு மனதளவில் பயம்,புது அனுபவம்,தற்போது அம்மா இல்லை என்பது அதிகளவு அவள் மனதை பாதித்தது,வழமையான தலை சுற்று வாந்தி என்று கஷ்டப் பட்டாள் அவள்,மூர்த்தி பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டான்,அபிராமி வந்துப் போவாள்,அப்போதும் ஆறுதலாக எதுவும் பேச மாட்டாள்,மேலும் பயம் காட்டுவது போல் தான் இருக்கும் அவளின் பேச்சி,சங்கீத்தா குழந்தை பெற இருக்கும் போது பார்த்து பார்து கவனித்தாள் அபிராமி,எந்த வேலையும் பன்னாதே,அது தான் கிருபாஷினி இருக்காளே,அவள் பார்த்துக் கொள்வாள்,நீ தற்போது நன்றாக சாப்பிட்டு உடம்பை கவனித்துக் கொள்ளனும் சங்கீத்தா என்பாள் அபிராமி,கிருபாஷினியை மட்டும் நன்றாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்யனும்,எந்த நேரமும் படுத்து தூங்காதே,என்று அதட்டி விட்டு போவாள் அபிராமி,இவர்கள் நம் வீட்டுக்கு வருவதை விட வராமல் இருந்தாலே நான் நிம்மதியாக இருப்பேன் என்று மனதில் நினைத்துக் கொள்வாள் கிருபாஷினி,நாட்கள் நெருங்க நெருங்க பயம் அதிகமாகி கொண்டே இருந்தது கிருபாஷினிக்கு,வளைகாப்பு வேண்டாம் என்று சொன்னாள் கிருபாஷினி,ஆனால் மூர்த்தி அதை கேட்க்கவில்லை,அவனின் நண்பர்களின் மனைவிமார்கள்,அக்கம் பக்கத்வர்கள் என்று ஒரு கூட்டத்தையே கூட்டி விட்டான் மூர்த்தி கிருபாஷினியின் வளைகாப்புக்கு,அபிராமி பணம் செலவாகின்றது என்று முணுமுணுத்தாள்

கிருபாஷினி அழகான பெண் குழந்தையை பெற்று எடுத்தாள்,ஏற்கெனவே அபிராமி எனக்கு குழந்தையெல்லாம் குளுப்பாட்ட முடியாது,இடுப்பு கை கால் வலி இருப்பதாக காரணம் சொன்னதால்,மூர்த்தியின் நண்பன் குழந்தையை பார்த்துக் கொள்ளும் அளவிற்கு அனுபவம் உள்ள ஓர் வயதான பெண்மணியை ஏற்பாடு செய்து விட்டான்,அவள் பெயர் மணியம்மா அவள் நன்றாக பார்த்துக் கொண்டாள் இருவரையும்,கிருபாஷினிக்கு அவளை பார்க்கும் போது அம்மாவை பார்ப்பது போல் இருக்கும்,குழந்தையை நன்றாக கை கால்களை பிடித்து விட்டு குளுப்பாட்டும் போது இவளுக்கு பயமாக இருக்கும்,பயப்பிடாத அம்மா இப்படியெல்லாம் செய்து குளுப்பாட்டனும்,மூக்கை நீவிவிடனும் குப்பரை போட்டு தலையை தட்டி தண்ணி ஊத்தனும் அப்போது தான் உருண்டை தலையாக இருக்கும் மூக்கு கூராக இருக்கும் அம்மா,பார்த்துக்க அடுத்த பிள்ளைக்கு உதவும் என்றாள் மணியம்மா,கிருபாஷினி சிரித்து விட்டு அமைதியாக இருந்தாள்,ஓரளவிற்கு குழந்தையை குளுப்பாட்ட பழகி கொண்டாள் கிருபாஷினியும்,மணியம்மா ஒருவருடம் மட்டும் இருந்தாள் அதன் பிறகு அவள் சென்று விட்டாள்,காலம் வேகமாக ஓடியது,இரண்டாவது ஓர்ஆண் குழந்தையும் பெற்றெடுத்தாள் கிருபாஷினி,அப்போது அவளுக்கு யாரும் தேவை படவில்லை,அனுபவம் இருந்தப் படியால் தைரியமா பெற்றெடுத்து வளர்க்கவும் ஆரம்பித்து விட்டாள்.இரண்டு பிள்ளைகளை பெற்று வளர்த்த அபிராமிக்கு நிறைய அனுபவங்கள் இருந்தும் அதை கிருபாஷினியிடம் பகிர்ந்து கொள்ள மனம் இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *